Jump to content

EPRLF வராலாற்றின் அவமானச் சின்னமாக மாறிவிட்டது :வியாசன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அது மற்றொரு இருண்ட காலம்! இலங்கை இராணுவத்திற்குப் பதிலாக இந்திய இராணுவம் வடக்கையையும் கிழக்கையும் ஆக்கிரமித்துக்கொண்ட அச்சம் தரும் இரவுகள்!! சந்திகளிலும், சாலைத் திருப்பங்களிலும் மக்கள் இந்திய ஆக்கிரமிப்புப் படைகளின் சோதனைச் சாவடிகளைக் கடந்தே நடந்து போகமுடியும். அவர்கள் கண்களுக்கு எதிரி என்று தெரிகின்ற ஒவ்வொரு மனிதனும், கைது செய்யப்படலாம். விசாரணையின் பின் விடுவிக்கப்படலாம், சித்திரவதையின் பின் கொல்லப்படலாம்…

இவை அனைத்திற்கும் மேலாக தனது பெயரில் புரட்சி என்ற சுமையை சுமந்துகொண்ட அருவருப்பில் உலா வந்துகொண்டிருந்தது ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்ற ஈ.பி.ஆர்.எல்.எப்.

1987 இல் இருந்து 1990 ஆம் ஆண்டு வரை அன்னிய ஆக்கிரமிப்புப் படையான இந்திய இராணுவம் தனது ஊழிக்கால தர்ப்பாரை நடத்திக்கொண்டிருந்தது. அது நாட்டைவிட்டு வெளியேறுவதற்கு முன்னர் தமிழ்த் தேசிய இராணுவம் என்ற கூலிப்படையை அழிப்பதற்காகவே உருவாக்கியது, அதன் நிறுவன வேலையை ஈ.பி.ஆர்.எல்.எப் தலைமை தாங்கியது.

சாலையில் ஒரு இளைஞன் தனியாக நடமாடுவதைக் கண்டால் ஈ.பி.ஆர்.எல்.எப் கடத்திச் சென்றுவிடும்.

அழுகுரலோடும், அச்சம் படர்ந்த முகங்களோடும் கடத்திச் செல்லப்பட்ட இளைஞர்களைக்கொண்டு தமிழ்த் தேசிய இராணுவம் என்ற துணைப்படையை உருவாக்குவதே இந்திய இராணுவத்தினதும், ஈ.பி.ஆர்.எல்.எப் இனது,ம் நோக்கம்.

எட்டாம் வகுப்பு மாணவர்களிலிருந்து பல்கலைக் கழக மாணவர்கள் வரை எந்த நேரத்திலும் எந்தப் பகுதியிலும் வைத்துக் கடத்திச் செல்லப்படலாம் என்பதை யாழ்ப்பாண மக்கள் அறிந்து வைத்திருந்தனர். பலர் வீடுகளுக்குள் முடங்கிக் கிடந்தனர்.

பள்ளிகளுக்கு தந்தையர் தாயாருடன் செல்லும் நிலை காணப்பட்டது. யாழ்ப்பாணம் செத்துப் போயிருந்தது. தெருக்கள் வெறிச்சோடியிருந்தன.

கடத்திச் செல்லப்பட்டவர்கள் யாழ்ப்பாண நகரத்தின் கொல்லைப் புறத்தில் அமைந்திருந்த அசோக் ஹொட்டேலில் அருசி மூட்டைகள் போல அடைத்து வைக்கபட்டனர்.

sureshபயிற்சிக்குக் கொண்டு செல்வதற்கு முன்னர் அங்கு தான் ‘அரசியல்’ விளக்கம் வழங்கப்பட்டது. அப்போது இந்திய இராணுவத்தின் நம்பிக்கைக்குரிய துணைப்படையாகச் செயற்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப் இன் மத்திய குழு உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அரசியல் விளக்கத்தை வழங்குவார்.

புலிகளை அழிப்பதும், சுயாட்சியை ஏற்படுத்துவதும் எமது நோக்கம்; அதற்கு நீங்கள் தான் பாதுகாப்புப் படை என பிடித்துவரப்பட்டவர்களிடம் சுரேஷ் பிரேமச்சந்திரன் தனது குற்றுரையை ஆரம்பிப்பார். நீண்ட அகலமான சந்திப்புக் கூடத்தில் கடத்திச் செல்லப்பட்டவர்களுக்கான கூட்டம் நடைபெறும்.

ஒரு மூலையில் சிம்மாசனம் போன்ற இருக்கையில் அமர்ந்துகொண்டிருக்கும் சுரேஷ் பிரேமச்சந்திரன், நெருக்கமாக தரையில் மாற்ற உடையின்றி அமர்ந்திருக்கும் கடத்திவரப்பட்ட இளைஞர்களுக்கு சுரேஷ் உரையாற்றுவார்.

யாராவது மறு பேச்சுப் பேசினால், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். புலிகள் அல்லது புலிகளின் ஆதரவாளர்கள் என அடையாளம் காணப்படுபவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு அழைத்துச் செல்லப்படுவார்கள்.

அவர்கள் மீதான விசாரணையை சுரேஷ் பிரேமச்சந்திரனின் ‘மண்டையன் குழு’ கவனித்துக்கொள்ளும்.

மண்டையன் குழு என்றால், மண்டைய பிழந்து கொலை செய்வது என்பதே பொருள் படும் என பலர் தெரிந்து வைத்திருந்தனர்.

இவை அனைத்தும் நடந்துகொண்டிருந்த போது ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவர் பத்மநாபா யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருந்தார்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எவ்)இன் செயலாளர் நாயகம் பத்மநாபா  64ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் தோழமை தினம் இரண்டு நாட்களின் முன்னர் கொண்டாடப்பட்டது. இன்று வரை இந்திய அரசின் தோழர்களகவே தொடரும் ஈ.பி.ஆர்.எல் எப் இன் தோழமை இன் இலக்கணம் இரத்தக்கறைகளால் நிரப்பப்பட்டுள்ளது.

இவை நடந்துகொண்டிருக்கும் போது ரூபவாகினி தொலைக்காட்சியில் தோன்றிய வரதராஜப்பெருமாள் ‘இது பழைய ஈ.பி.ஆர்.எல்.எப்’ இல்லை; புதியது என வில்லத்தனமாக உரையாற்றினார்.

இப்போது இன்னொரு புதிய முகத்தோடு தோழமை தினத்தில் அதே வரதராஜப்பெருமாள் உரையாற்றியுள்ளார். வக்கிரத்தனத்தின் மறு பெயர் தோழமை என்று நினைத்துக்கொண்ட்டார்களோ?
இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் துணைப்படையாகச் செயற்பட்ட ஈ.பி.ஆர்.எல்.எப் இன் கொலைகள், சித்திரவதைகள் எல்லாம் அந்த இயக்கத்தோடு ஒட்டிக்கொண்டிருந்த புரட்சி என்ற பெயரை அவமானப்படுத்திற்று. உயரிய தோழர் என்ற வார்த்தையை கொலையாளிகள் தங்களை அடையாளப்படுத்த பயன்படுத்திக்கொண்டார்கள்.

இடதுசாரிய இயக்கங்கள் மீது மக்கள் வெறுப்படைய ஈ.பி.ஆர்.எல்.எப் என்ற துணை இராணுவக் குழு காரணமாயிற்று,

வடக்குக் கிழக்கில் இடதுசாரி இயக்கங்களைத் துடைத்தெறிவதற்கு ஈ.பி.ஆர்.எல்.எப் இந்திய அரசிற்குத் துணை சென்றது. உலக மக்களின் போராட்டத் தத்துவமாகத் திகழ்ந்த இடதுசாரிப் புரட்சிகரக் கருத்துக்கள் மீது மக்கள் வெறுப்படைந்தமைக்கு ஈ.பி.ஆர்.எல்.எப் முக்கிய பங்காற்றியிருக்கிறது.

naba_douglas டக்ளஸ் தேவானந்தாவுடன் பத்மநாபா

இவ்வாறு அழிவுகளின் ஆதாரசக்தியாகவிருந்த ஈ.பி.ஆர்.எல் எப் இன்றும் தனது அதிகாரவர்க்க அரசியலைப் புரட்சியின் பெயரால் தொடர்கிறது. அதன் குற்றவாளிகள் சமூகத்தின் உயரடுக்குகளில் உலா வருகின்றனர்.

டெலோ மற்றும் புலிகள் இயக்கங்களைத் தவிர ஏனைய எல்லா இயக்கங்களின் மத்தியிலும் இடதுசாரிக் கருத்துக்களைக் கொண்ட முற்போக்கு சிந்தனை கொண்ட இளைஞர்கள் இணைந்து செயற்பட்டனர்.

ஈ.பி.ஆர்.எல்.எப் லண்டனிலிருந்து இலங்கை சென்ற பத்மநாபா ஈரோஸ் என்ற இயக்கத்திலிருந்து பிரிந்து ஆரம்பித்த அமைப்பாகும். ஆரம்பத்தில் ஈ.பி.ஆர்.எல்.எப் மட்டுமே மக்களை அமைப்புகளாக அணிதிரட்டியது.

ஈழப் பெண்கள் முன்னணி, கிராமியத் தொழிலாளர் சங்கம், ஈழ மாணவர் பொது மன்றம், ஈழ மக்கள் முன்னணி போன்ற துணை அமைப்புக்கள் ஊடாக வடக்குக் கிழக்கு முழுவதும் மக்களை அணிதிரட்டி பல வேறு போராட்டங்களை நடத்திற்று. இவ்வாறான போராட்டங்கள் ஊடாக பல்வேறு முற்போக்கு சிந்தனை கொண்ட இளைஞர்கள் உருவாகினர். போர்குணம் மிக்க தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியிலிருந்து எழுச்சி மிக்க இளைஞர் அணி இயக்கத்தின் பல்வேறு மட்டங்களில் செயற்பட்டது.

இயக்கத்தின் பிற்போக்குத் தலைமை இந்தியாவிலிருந்து செயற்பட அதன் முற்போக்கு ஜனநாயக அணி பொதுவாக ஈழத்தில் மக்கள் மத்தியில் அமைப்பு வேலைகளில் ஈடுபட்டனர். புலிகளால் ஈ.பி.ஆர்.எல்.எப் அழிக்கப்பட்ட போது களத்தில் மக்களோடு வாழ்ந்த முற்போக்கு அணியே அழிக்கப்பட அதன் பிற்போக்குத் தலைமை தப்பித்துக்கொண்டது.

எஞ்சிய சிலரை இணைத்துக்கொண்ட அதன் பிற்போக்குத் தலைமை, புலிகளைப் பழிவாங்குவதே தமது நோக்கம் என்ற முழக்கத்துடன் இந்திய இராணுவத்தின் துணைக் குழுவாக இலங்கையில் களமிறங்கிற்று.

புலிகளின் அழிப்பிலிருந்து தப்பி எஞ்சியிருந்த ஒரு சிலரையும், இந்திய இராணுவத்துடன் வந்திறங்கிய ஈ.பி.ஆர்.எல்.எப் தேட ஆரம்பித்த போது அவர்களுகு நாட்டைவிட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழிகள் இருந்திருக்கவில்லை.

ஆபத்தான முற்போக்கு அணியை அழித்து, பிற்போக்குப் பகுதியைத் தம்மோடு இணைத்துக்கொள்வது என்ற இந்திய அரசின் முதலாவது நோக்கம் ஈ.பி.ஆர்.எல்.எப் மீது புலிகளின் தாக்குதலால் நிறைவேற்றப்பட்டது.

கொலைகளுக்கும் அழிவுகளுக்கும் பொறுப்பான பிழைப்புவாதிகளின் கூட்டே இன்றைய ஈ.பி.ஆர்.எல்.எப் இன் இன்றைய இரண்டு அணிகளும்!

தமது கொலைகளை ஈ.பிஆர்.எல்.எப் ஏற்றுக்க்கொண்டு பொறுப்புக்கூற வேண்டும். இடதுசாரியத்தை அழிப்பதற்குத் தாமும் துணை சென்றோம் என மக்களிடம் பகிரங்கமாக ஒப்புக்கொள்ள வேண்டும். அதுவே இன்று ஈ.பி.ஆர்.எல்.எப் இன் அணிகள் சமூகத்திற்கு ஆற்றக் கூடிய முக்கிய பணி. இனிமேலும் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் இருப்பு அவசியமற்றது, அது நமது போராட்டத்தின் அவமானச் சின்னமாக மாறிய காலம் இந்திய இராணுவத்துடனேயே ஆரம்பித்துவிட்டது.

 

www.inioru.com

 

Link to comment
Share on other sites

 

இன்று யாழ்பாணத்தில் நாபாவின் பிறந்த தினம் நடைபெர்ருக்கொண்டு இருக்கின்றது .

12241684_1691709137709895_20699739579852

12241311_1691709171043225_44580868612243

12274189_1691715401042602_82735847491727

 

... அஞ்சலிப்போம்,???? அர்சுன, உங்கடையை இணைத்திருக்கிறேன்!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவனாக இருந்தபோது எல்லா இயக்கத்தவர்களையும் "பொடியள்" என்றுதான் தெரியும். முதன்முதலாக இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரை வெறுத்தது என்றால் இந்த முன்னாள் புரட்சிகர விடுதலை இயக்கத்தின் வடகிழக்கு மாகாண சபைக்கு முதலமைச்சராக இருந்த வரதராஜப்பெருமாளைத்தான். அவரையும் அவரது புரட்சிகர தலைவர் நாபாவையும், போராளிகள் என்று பொதுமைப்படுத்தி போராளிகள் என்ற சொல்லை மலினப்படுத்தாமல் விட்டால் நல்லது.

Link to comment
Share on other sites

எமது விடுதலை இயக்கங்களில் இரத்த கறை படியாதவை எதுவுமில்லை .

எப்படித்தான் கூட்டி கழித்து பார்த்தாலும் அதில் ஆக குறைந்த கறை படிந்தது ஈ பி தான் அதிகம் எது என்று நான் எழுதி தெரியவேண்டியதில்லை . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்போது படித்துக் கொண்டிருந்த நானும்  இந்த பிள்ளை பிடி காரர்களிடம் பிடியில் இருந்து மயிரிழையில்  தப்பினனான்.  இந்த Elephant Pass ஐ மக்கள் விரும்பவில்லை. 

Link to comment
Share on other sites

இந்த செய்தி  இங்கு தூசி தட்டப்பட்டு  இணைக்கபட்டதே மாவீர்ர் வாரத்தில் எமக்கிடையே தேவையற்ற முரண்பாடுகளை தோற்றுவிக்கவே. எல்லா இயக்கத்திலும் தமிழ் மக்களுக்காக தமது இன்னுயிர்களை அரப்பணம் செய்த பிள்ளைகளுக்கு வணக்கம் செலுத்துவதை விட்டு இப்படியான உள் நோக்கங்களுடன் இணைக்கப்படும் செய்திகளுக்குப் பின்னூட்டம் இடுவதை தவிர்ககலாமே. 

Link to comment
Share on other sites

1 hour ago, arjun said:

எமது விடுதலை இயக்கங்களில் இரத்த கறை படியாதவை எதுவுமில்லை .

எப்படித்தான் கூட்டி கழித்து பார்த்தாலும் அதில் ஆக குறைந்த கறை படிந்தது ஈ பி தான் அதிகம் எது என்று நான் எழுதி தெரியவேண்டியதில்லை . 

ஆக குறைந்த கறை TELO வில் தான் இருந்தது..  அப்படி சொல்லுற ஆக்களும் இருக்கிறார்கள்.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

12241684_1691709137709895_20699739579852

கலியாணவீட்டுக்கு சோடிச்ச மாதிரி பிங்க் கலர் அந்தமாதிரி தூக்குது......:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உதுபோன்றதொரு கலியாணவீட்டுச் சோடினையை இந்தமாதம் 26 ஆம் நாள் டொரண்டோவிலும் காணலாம்!<_<

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டமுடியாவிட்டால் விட்டு விலகி நிற்பதே நல்லது.மாவீரர் நாள் பிடிக்காதவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்களை கொன்றவர்களுக்கும் மக்களை காத்தவர்களுக்கும் வித்தியாசம் தெரியாதவர்களுடன்  மல்லுகட்டுவது நேர விரயம் .அவர்களின் அடிப்படை புத்தியை மாற்றுவது கஷ்ட்டம் .

Link to comment
Share on other sites

எப்பவும் நாங்கள் கிட்ட போனதேயில்லை ஆனால் அவர்கள் தான் இப்ப ஒட்ட நினைக்கின்றார்கள் .

அந்த வித்தியாசம் பலருக்கு இப்பதான் விளங்குது 

இது அப்பவே நடந்துதான் .புளொட் ஈபி என்றால் தங்களை விட படித்தவர்கள் என்று அவர்கள் நினைத்த காலங்கள் அவை ,

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, வாலி said:

உதுபோன்றதொரு கலியாணவீட்டுச் சோடினையை இந்தமாதம் 26 ஆம் நாள் டொரண்டோவிலும் காணலாம்!<_<

அதில்லை......இஞ்சை ஹோல் எடுத்து மாவீரர் தினம் செய்தால் நக்கலடிக்கிற கூட்டம் யாழ்ப்பாணத்திலை குடிலுக்கை / வடலிப்பக்கம் ஏன் மாவீரர் தினம் செய்யேல்லை எண்டு கேக்காதவரைக்கும் சந்தோசம்.

Link to comment
Share on other sites

எந்த கருத்திலையும்  பிரபாகரனையும் புலியையும் கொண்டுவராமல் கருத்து எழுத சிலருக்கு வாறது இல்லை...    இது தான் யாழின் கருத்து வங்குரோத்து நிலைமை... 

எனது கருத்தையும் சொல்ல வேண்டும்.. 

போராடாமல் தோற்று போன PLOT போண்ற அமைப்புகளோடை ஒப்பிடும் போது  ஏதோ ஒரு வகையில் யாருடனாவது போராடி தோற்று போன EPRLF  ம் பத்மநாபாவும் உயர்ந்தவர்தான்... 

என்ன போரட்டம் தமிழ் மக்களுக்கு எதிராக மட்டுமே... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னொருவுக்கு ஈபி மட்டும் தான் பிரச்சனை போல. ஈ என் டி எல் எவ்.. ரெலோ.. புளொட் செய்தவை எல்லாம் நன்மையாமோ..?! ரெலோவும் புளொட்டும் வவுனியாவில் சிங்களப் படைகளில் முகாம்களில் பதுங்கிக் கிடந்து இரண்டு சதாப்தங்களாக செய்த அட்டகாசம்.. புளொட் 2009 க்குப் பின்னும் சிங்களப் படை ஏஜென்டுகளாக சொந்த இன மக்களை சித்திரவதை செய்த கொடுமைகள்.. அம்னாஸ்ரியால் கூட மிகக் கொடியது என்ற வர்ணிக்கப்பட்ட நிலையில்.. இன்னொருவுக்கு ஈபி யின் செயல்கள் மட்டும் தான்.. பிரச்சனையா..?! ஈபிக்கு சரி நிகராக.. புளொட்.. ரெலோவும் நடந்து கொண்டுள்ளது. ஈ என் டி எல் எவ் உம் அடங்கும். புளொட் வீரமக்கள் தினம் அனுஷ்டிப்பதை பற்றி ஏன் இன்னொரு கவலை வெளியிடுவதில்லை. tw_blush:

புளொட்டுக்கு வேண்டிய வியாபாரிகள்.. இன்னொருவில் இருக்கினம் போல. tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பத்மநாபாவின் நினைவுகள்

 

செம்மறிகள் கூட நல்ல மேய்பனை தேடுகின்றன. அதேபோல பல வருடங்களாக பத்மநாபாவின் தகுதியில் தமிழ் இனத்தில் ஒரு தலைவரை தேடும் ஆவலில் இந்த கட்டுரை மீண்டும்  ஜுன் 19 ம் திகதி மீண்டும் பிரசுரமாகிறது.
நடேசன்

என் எஸ் நடேசன்

நமது வாழ்க்கைப் பயணத்தில் ஏராளமானவர்களை சந்திக்கிறோம்.பழகுகிறோம் பிற்காலத்தில் ஒவ்வொருவரும் வேறு வழிகளில் தங்களது பயணத்தை தொடர்கிறார்கள். இவ்வாறு பழகியவர்களில் பலரது நினைவுகளை நினைவு கூருகிறோம். சிலரது நினைவுகளை நண்பர்களுடன் பரிமாறுகிறோம். சொற்பமானவர்களைப்பற்றி பலர் கூடும் நிகழ்வுகளில் பேசுகிறோம். ஒரு சிலரின் நினைவுகளை புத்தகங்களில் பதிப்பித்து பாதுகாக்கின்றோம். காரணம் வருங்கால சமூகத்திற்கும் இவர்களது எண்ணங்கள், சிந்தனைகள் தேவையானது என கருதிய காரணத்தால்.

சமீபத்தில் இப்படி ஒரு பணியை திறம்பட செய்தவர் நண்பர் புஸ்பராஜா. பிரான்ஸில் வசிக்கும் இவர் “ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம்” என்ற தனது நனைவோடை நினைவுகளைப் புத்தகமாக்கி இருக்கிறார். இவர் தனது நண்பன் பத்மநாபாவுடைய தொடர்புகளையும் செயல்களை 70ம் ஆண்டு காலத்திலிருந்து பதிவு செய்துள்ளார்.

சென்னையில் பத்மநாபாவுடன் பழகிய அந்த மூன்று வருடங்கள் மறக்க முடியாதவை. நான், நானாக இருப்பதற்கு அஸ்திவாரம் இட்ட காலங்கள். அந்தக் காலங்களில் பத்மநாபாவை ரஞ்சன் என்றே அழைப்பேன். மற்றைய EPRLF இனர் இருக்கும் போது ரஞசன் தோழர் என்பேன். தோழர் என்ற வார்த்தை சங்கடத்துடன்தான் வெளியே வரும். காரணம் நான் EPRLF அங்கத்வனல்ல. அதேவேளை இடதுசாரி இயக்கத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டவனோ இல்லை.

என்னைப்போல் இலங்கை, இந்தியாவில் ஏராளமானவர்கள் பதமநாபாவின் நண்பர்கள். சிங்களவர், மலையகத்தமிழர், தமிழ்நாட்டினர், இஸ்லாமியர் என இன, மத, மொழி வோறுபாட்டுகளுக்கு அப்பாற்பட்டவர்களுடன் நட்புறவு கொண்டவர். எனது பார்வை, வாசிப்புகளுக்கு உட்பட தமிழ்நாட்டில் இரண்டு பேர் LIVING LEGENDS என என்னால் பார்க்கப்படுவார்கள். பத்திக்கையாளர் சோ ராமசாமி, எழுத்தாளர் ஜெயகாந்தன். இவர்கள் இருவரும் கொள்கைகளிலும், வாழ்க்கைகளிலும் எதிரும், புதிருமானவர்கள் கடந்த ஜம்பது வருடத்தில் இவர்கள் இன்றி தமிழ்நாட்டு சரித்திரம் எழுதமுடியாது. இப்படியான இருவரும் பத்மநாபாவின் நண்பர்கள்.

தனிப்பட்ட முறையில் பத்மநாபாவுடனான பல சம்பவங்களை நான் நினைவு கூறமுடியும். இதில் முக்கியபாக நான் கருதும் சமபவம் ஒன்று பத்மநாபாவின் பலத்தையும் பலவீனத்தையும் காட்டுவது.

86ம் ஆண்டு மே மாதம் இருபத்தியாறாம் திகதி ரெலோ சிறிசபாரட்ணம் இறந்த நாளாகும். இதற்கு சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த சம்பவம் இது.

இரவு பத்து மணிக்கு கோடம்பாக்கத்தில் உள்ள EPIC தகவல் நிலையத்தருகே TVS 50 இல் சென்று கொண்டிருந்த போது பத்மநாபாவைக் கண்டதும் வண்டியை நிறுத்தினேன். தனிமனிதராக நடந்து வந்து கொண்டிருந்தார்.

“ரஞ்சன், ரெலோவிற்குள் பிரச்சனை போலிருக்கு, தாஸிற்கும் பொபிக்கும் நல்லா இல்லை போலிருக்கு(ரெலோவின் ராணுவ பொறுப்பாளர் இருவரும்).

“நானும் அப்படித்தான் நினைக்கிறேன்” வருகிறீர்களா சிறியிடம் போவோம்?

“ஓம்” என தலையசைத்ததும் உடனே எனது TVS 50 இல் ஏறிவிட்டார் பத்மநாபா. எங்கள் TVS 50 மெதுவாக சென்றது. போகிற வழியில் கேட்டேன் பாதுகாப்புக்கு ஏதாவது ஆயுதம் உள்ளதா?

“இல்லை. தோழர் நாம் ஏன் பயப்பட வேண்டும்?

அப்பொழுது எனது இதயத்துடிப்பு இரு மடங்காகியது. ஏற்கனவே இயக்கங்கள் இந்திய மண்ணில் சகோதர கொலைகள் செய்து விட்டிருந்தார்கள். இந்த மனிதன் தனது பாதுகாப்பைப் பற்றி கவலைப்படவில்லை, இதில் நானும் மாட்டிக் கொண்டேனே என உள்ளே எண்ணிக் கொண்டு, ரெலோ அலுவலகம் இருந்த சாலிக்கிராமம் சென்றோம்.

இரவு பததரை மணியிலிருந்து விடியற்காலை நாலுமணிவரையும் பத்மநாபாவும் சிறிசபாரத்தினமும் பேசினார்கள். பேசியதில் முக்கியபாக பத்மநாபா சிறியிடம் “உங்கள் உட்பிரச்சனையை பேசி தீருங்கள்” என்பதுதான். அமைதியாக தலையாட்டியபடி கேட்ட சிறிசபாரத்தினம் அன்று விடியற்காலையில் வேதாரணியம் கரைக்கு சென்றார்.

யாழ்ப்பாணம் சென்ற சிறிசபாரத்தினம் தாசை யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரியில் கொலை செய்ததும் பின்பு சிறியுடன் இருநூறுக்கு மேற்பட்டவர்களை புலிகள் சுட்டுக் கொன்றதும் சரித்திரமான சம்பவங்களாகும்.

இதே போல இராணுவப் பொறுப்பாளராக இருந்த டக்ளஸ் தேவானந்தா பிரிந்து செல்லும் போது EPRLF அங்கத்தினருக்குள் கொதிப்பு உணர்வுகள் உருவாகியது. இரண்டு பகுதியிலும் ஏற்பட்ட மனக்கசப்புகளை நேரில் பார்த்தேன். எந்த ஒரு சிறிய வன்முறையும் ஏற்படாது பிரிவு ஏற்பட்டதை நான் பார்க்க முடிந்தது.

இப்படி மற்ற இயக்க பிரிவுகளில் மட்டும் அல்ல தனது இயக்கத்தில் பிரிவுகள் ஏற்பட்ட போது வன்முறை ஏற்க மறுத்தவர் பத்மநாபா.

சிட்னியில் நான் இருந்தபோது பதமநாபாவின் கொலை சம்பவம் தெரிந்து கண்ணீர் விட்டு அழுதேன். பத்மநாபாவோடு கொலை செய்யப்பட்ட கிருபாகரன், யோகசங்கரி என்பவர்கள் எனது கல்லூரித்தோழர்கள் என்பதும் காரணமானது.

கடந்த இருபதாம் நூற்றாணடில் உலக அரசியலில் நான் மதிக்கும் மூவர் இந்தியாவில் மோகனதாஸ்காந்தி, தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலா, கியூபாவில் (ஆஐன்ரீனாவில் பிறந்த) ஏனெஸ்ரோ சேகுவரா போன்றவர்கள் வேறு கொள்கைகளைக் கடைப்பிடித்தாலும் தங்களை அர்ப்பணித்து வாழ்ந்தவர்கள். இப்படியான இந்த மூவர் எமது மட்டக்களப்பிலோ, யாழ்ப்பாணத்திலோ பிறந்திருந்தால் என்று கற்பனை செய்து பார்த்தேன். நிட்சயமாக கொலை செய்யப்பட்டிருப்பார்கள்.வன்முறைக்கு பலியாகியிருப்பார்கள்.
இப்படியான சிந்தனையின் பின் என் மனம் ஆறுதலடைந்தது.

நான் பழகிய நாட்களில் அவதானித்த முக்கிய ஒரு விடயம் பத்மநாபா ஒரு தூய ஜனநாயகவாதி. நான் பல தமிழ் அரசியல்வாதிகள், இயக்கத்தை சேர்ந்தவர்கள் எழுத்தாளர்கள் மற்றும் சமூகத்தில் பலதரப்பட்டவர்களுடன் பழகி வந்துள்ளேன். ஜனநாயகத்தில் பத்மநாபா போல நம்பிக்கை கொண்ட ஈழத்தமிழர் ஒருவரைக் காணவில்லை இக்காரணங்களுடன் சமூகத்தின் சார்பாக பல வருட முன்னோக்கிய சிந்தனையும், முடிவெடுத்த தன்மையும் பத்மநாபாவின் தவறுகளாக அமைந்தது. கற்களும், முட்களும் நிறைந்த சதுப்பு நிலத்தில் ரோஜாவாக பூத்த காரணத்தால் அழிக்கப்பட்டிருக்கலாம் என ஆறுதலடைகிறேன்.

புத்மநாபா இறந்த பதினைந்து வருட நினைவுக்கூட்டம் மெல்பேணில் யூலை 25ம் திகதி நடைபெற்ற போது பேசிய உரையின் சாரம்.

நன்றி உதயம் அஸ்திரேலியா

July 2005

www.ilankainet.com

 

Link to comment
Share on other sites

49 minutes ago, colomban said:

கடந்த இருபதாம் நூற்றாணடில் உலக அரசியலில் நான் மதிக்கும் தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலா, கியூபாவில் (ஆஐன்ரீனாவில் பிறந்த) ஏனெஸ்ரோ சேகுவரா போன்றவர்கள் வேறு கொள்கைகளைக் கடைப்பிடித்தாலும் தங்களை அர்ப்பணித்து வாழ்ந்தவர்கள். இப்படியான இந்த மூவர் எமது மட்டக்களப்பிலோ, யாழ்ப்பாணத்திலோ பிறந்திருந்தால் என்று கற்பனை செய்து பார்த்தேன். நிட்சயமாக கொலை செய்யப்பட்டிருப்பார்கள்.வன்முறைக்கு பலியாகியிருப்பார்கள்.

நன்றி பகிர்வுக்கு

காந்தியைப் பற்றி எனக்கு வேறு கருத்துகள் உண்டு. அதனால் அவர் பெயரை மட்டும் மேற்கோளில் நீக்கியுள்ளேன்.

Link to comment
Share on other sites

On 11/24/2015, 7:25:37, no fire zone said:

 

இன்று யாழ்பாணத்தில் நாபாவின் பிறந்த தினம் நடைபெர்ருக்கொண்டு இருக்கின்றது .

12241684_1691709137709895_20699739579852

12241311_1691709171043225_44580868612243

சரி ... ஹிந்திய இராணுவத்துக்கு மாமா வேலைபார்த்தவரின் நினைவோ? அதில் ஏறக்குறைய அதே நிறம், மணம், குணமுடைய  சித்தர் போகலாம்! ... 

... ஆமா ... உதற்குள் ஏன் மாவையார்????? ... ஏறக்குறைய அதே தொழிலை சிங்களவனுக்கு செய்கிறோம் என்று போனாரோ????????

23 hours ago, காத்து said:

ஆக குறைந்த கறை TELO வில் தான் இருந்தது..  அப்படி சொல்லுற ஆக்களும் இருக்கிறார்கள்.. 

...ம்ம்... பின்பொருநாள் விலாவாரியாக எழுதுகிறேன் ... எம்மக்களுக்கு எதிராக முதன் முதலில் தாம் தூக்கிய ஆயுதங்களை திருப்பியவர்கள் ... இந்த ரெலோஸ்டுகள்! .. 

Link to comment
Share on other sites

18 hours ago, arjun said:

எப்பவும் நாங்கள் கிட்ட போனதேயில்லை ஆனால் அவர்கள் தான் இப்ப ஒட்ட நினைக்கின்றார்கள் .

அந்த வித்தியாசம் பலருக்கு இப்பதான் விளங்குது 

இது அப்பவே நடந்துதான் .புளொட் ஈபி என்றால் தங்களை விட படித்தவர்கள் என்று அவர்கள் நினைத்த காலங்கள் அவை ,

ஓ ... அர்சுன அண்ணோய்! ... என்ன? நீங்கள் கிட்டப்போறதில்லை?   அவயள் வந்து உங்களை கட்டிப்பிடிக்கினமோ?? ஏனெனில் நீங்கள் படித்தவர்கள்??

... ம்ம்ம்... அதுதான் இங்கு யாழுக்குள் குந்தியயபடி இருக்கிறீர்களோ??? தெரியாமல் கேட்கிறேன், ஏன் ஈ, பீ, தேனிக்கள் கிடைக்கவில்லையா? இல்லை யாழ் என்ன மாகமாணிக்கங்கள் குந்தும் இடமென நினைத்தீர்களா???

புளொட், ஈபி படிச்சவையள்! .. முகங்களை காட்டுங்கோ பார்ப்பம்??? சங்கிலியோ, டம்மிங் கந்தசாமியோ, மாணிக்கதாசனோ ... இதில் எந்தப்படித்த முகத்துக்கு கிட்ட நிற்கிறீர்கள் என்று பார்ப்போம்????

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவின் ......கழுவாத எல்லோரும் கழுவுபவர்களின் பார்வையில் அந்தகர்களே. 
    • இதைத் தான் எனக்கும் சொன்னார்கள்.
    • மலைப்பாம்பு, தான்  கவ்விய இரையை சுற்றி இறுக்கி எலும்புகளை ஒடித்து கொன்று இலகுவாக விழுங்குவதற்கு ஏற்ப வசதியாக தயார் செய்து விழுங்குமென அறிந்திருந்தேன். இறுக்கியதால் அவர் உடல் கண்டி நீலநிறமாக மாறியிருக்கு என நினைக்கிறன். ஆயினும் அவர் எவ்வளவு பதட்டமடைந்திருப்பார். அவரின் விதி வலியதாக இருந்திருக்கு. தாய்லாந்தில் இப்படி சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறுகின்றன.
    • ரஜீவின் சமாதான முன்னெடுப்புக்களை தனது இராணுவ முன்னெடுப்பினால் தோற்கடித்த ஜெயார் தலைவர் பிரபாகரன் தில்லியில் ரஜீவையும் பண்டாரியையும் சந்தித்தமை, முன்னாள் இரு பாராளுமன்ற உறுப்பினர்களின் கொலைகளுடன் தமக்குச் சம்பந்தமில்லை என்று வெளிப்படையாக தெளிவுபடுத்தியமை, தமிழர் தாயகத்தில் அரசின் ஆயுதப்படைகளும் ஊர்காவற்படையும் தமிழ் மக்கள் மீது நடத்திவரும் படுகொலைகள், தமிழ்நாட்டிற்கு வரத்தொடங்கியிருந்த ஈழத் தமிழர்களின் எண்ணிக்கை என்பன ரஜீவ் காந்தியின் இலங்கை அரசு சார்பான நிலைப்பாட்டை மாற்றி தமிழர் சார்பாக சாய்க்கத் தொடங்கியிருந்தன‌ .  ரஜீவின் இந்த மனமாற்றம் புரட்டாதி 27 ஆம் திகதி அவர் நடத்திய பத்திரிக்கையாளர் மாநாட்டில் தெரியத் தொடங்கியிருந்தது. அங்கு பேசிய ரஜீவ், "பஞ்சாப் பிரச்சினையில் இந்தியா எடுத்த நடவடிக்கைகளை இலங்கைத் தமிழர் விடயத்தில் இலங்கையரசு கைக்கொள்ள வேண்டும்.தமிழரின் பிரச்சினைக்கு குறுகிய அரசியல்த் தீர்வினை வழங்கமுடியாது. நீண்டகால, நிலைத்து நிற்கும் தீர்வு குறித்து இலங்கையரசு சிந்திக்க வேண்டும். இது ஒரு அரசியல்ப் பிரச்சினை. இப்பிரச்சினையினை இராணுவ ரீதியில் தீர்க்க முனைவது பிரச்சினையினை இன்னும் இன்னும் ஆளமாக்கவே வழிவகுக்கும்" என்று கூறினார். தமிழர் பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் தீர்வு காணலாம் என்று நம்பிய ரஜீவ் தொடர்ந்து அது தொடர்பாக இயங்கிக்கொண்டிருந்தார். பிரச்சினைக்கான தீர்வு குறித்து தமிழ்த் தரப்பு தனது ஆலோசனைகளை முன்வைக்க வேண்டும் என்று அவர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார். ஐப்பசி மாத நடுப்பகுதியில் தமிழ்நாட்டில் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசும்போது, "நான் உங்களிடம் கேட்ட அடிப்படை ஆலோசனைகள் எங்கே?" என்று ஈழத்தேசிய விடுதலை முன்னணியினை நோக்கி அவர் கேள்விகளை முன்வைத்தார். மேலும், தமிழ் மக்களின் அடிப்படை அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இலங்கையரசு தீர்வினை முன்வைக்கவேண்டும் என்று ஜெயார் மீதும் ரஜீவ் அழுத்தம் கொடுக்கத் தொடங்கினார். புரட்டாதி 30 ஆம் திகதி கொழும்பிற்குப் பயணமான பண்டாரி, ஜெயாரைச் சந்தித்து ரஜீவ் காந்தியும் தானும் ஈழத்தேசிய விடுதலை முன்னணியினருடன் தாம் நடத்திய பேச்சுக்கள் குறித்து விளக்கமளித்தார். ஜெயாருடன் பேசிய பண்டாரி, வடக்குக் கிழக்கில் தமிழர்களுக்கான தன்னாட்சிப் பிராந்தியம் ஒன்றினை வழங்க இலங்கையரசு ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் தனிநாட்டுக் கோரிக்கையினைக் கைவிட போராளிகள் தயாராக இருப்பதாகக் கூறினார்.  ஐப்பசி மாதத்தில் நடைபெறவிருந்த பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் கூட்டத்தில் அறிவிக்கப்படவிருந்த விடயம் ஒன்றிற்கான முன்னேற்பாட்டுப் பணிகளின் ஒரு பகுதியாகவே பண்டாரியின் கொழும்பு விஜயம் அமைந்திருந்தது. இந்த அறிவிப்புக் குறித்து ரஜீவ் காந்தி சற்றுப் பதட்டத்துடன் காணப்பட்டார். இந்த அறிவிப்பினூடாக உலக அளவில் இந்தியாவின் நிலையினை உயர்த்தலாம் என்று அவர் நம்பியிருந்தார். ஆனால், ஜெயார் தனது சொந்தத் திட்டத்தை ஏற்கனவே தீர்மானித்துவிட்டார் என்பதனை இந்தியர்கள் சிறிதும் அறிந்திருக்கவில்லை. இந்தியாவைப் பலவீனப்படுத்தி, போராளிகளுக்கும் இந்தியாவிற்குமிடையே பகைமையினை உருவாக்குவதே ஜெயாரின் திட்டம். அத்துடன், பகாமாசில் நடைபெறவிருந்த பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் தனது இராணுவத் தீர்விற்கான ஆயுத தளபாட உதவிகளை அங்கு வரும் அரசுத் தலைவர்களிடம் பெற்றுக்கொள்வதும் அவரது இன்னுமொரு நோக்கமாக இருந்தது. புரட்டாதி 30 ஆம் திகதி கொழும்பிற்கு பண்டாரி மேற்கொண்ட பயனம் எந்தப் பலனையும் இந்தியாவிற்கோ ஈழத்தமிழருக்கோ கொடுக்கவில்லை. பண்டாரியின் விஜயத்தைப் பாவித்து தனது புத்திரனான ரவியும் அவரது மனைவியும் இந்தியாவைச் சுற்றிப் பார்க்கும் சுற்றுலா வாய்ப்பொன்றை ஜெயார் ஏற்படுத்திக் கொடுத்தார். இந்த சுற்றுலாவின் போது ரஜீவ் காந்தியையும் சந்திக்க ரவி ஜெயவர்த்தன பணிக்கப்பட்டார். ரஜீவுடனான பிரத்தியேகச் சந்திப்பில் இந்தியாவில் தமிழ்ப் போராளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் பயிற்சிகள், முகாம்கள் குறித்த அனைத்துத் தகவல்களையும் ரஜீவிடம் காட்டுவதும் ரவி ஜெயவர்த்தனவின் நோக்கங்க‌ளில் ஒன்று. இவற்றிற்கு மேலாக, தனது மகனும் பாரியாரும் இந்தியாவிற்கு வருவதற்கு அனுமதி வழங்கி, விருந்தினராக கெளரவித்தமைக்காக ரஜீவிற்கு நன்றிகூறி கடிதம் ஒன்றையும் ஜெயார் அனுப்பினார். பகாமாசில் ரஜீவுடன் நடக்கவிருந்த பேச்சுக்களுக்கு உகந்த சூழ்நிலையினை உருவாக்கும் பொருட்டே ஜெயார் தனது கடிதத்தை வரைந்திருந்தார்.  ரஜீவிற்கு ஜெயார் அனுப்பிய கடிதத்தின் ஒரு பகுதி, "..................யுத்த நிறுத்தம் அமுலாக்கப்பட்டத்திலிருந்து தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு ஆட்களும், ஆயுதங்களும், வெடிபொருட்களும் தொடர்ச்சியாகக் கடத்தப்பட்டு வருவதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து நாம் அறிந்துகொண்டிருக்கிறோம். ராமேஸ்வரம், கலீமியர் முனை, நாகபட்டினம், வேதாரணியம் ஆகிய தமிழ்நாட்டின் கரைகளில் இருந்தே இக்கடத்தல்கள் இடம்பெற்று வருகின்றன”.  “உங்களின் கரையோர ரோந்து நடவடிக்கைகளை அதிகப்படுத்தி, இக்கடத்தல்களை உங்களால் தடுக்க முடிந்தால் அது எமது நாட்டிற்கு நீங்கள் செய்யும் அரிய சேவையாக நாங்கள் கருதுவோம். இன்று நாங்கள் முகங்கொடுத்துவரும் பயங்கரவாதத்தை முற்றாக அழிப்பதற்கு அது பெரும் உதவியாக இருக்கும். எமது இரு நாடுகளும் எமது பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பலப்படுத்துவதன் மூலமும், கண்காணிப்பை அதிகப்படுத்துவத‌ன் ஊடாகவும் இன்று நடந்துவரும் சட்டவிரோத ஆயுதக் கடத்தல்களை முற்றாகத் தடுத்துவிட முடியும். இப்பாதுகாப்புச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு பாரிய நிதிவளமும், காலமும் எமக்குத் தேவைப்படுகிறது. இச்செயற்பாடுகளை நீங்கள் ஆதரித்தால், இதுகுறித்து மேலும் பேசுவதற்கு எனது கடற்படைத் தளபதியையும் இன்னும் சில அதிகாரிகளையும் உங்கள் தளபதிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு என்னால் அனுப்பி வைக்க இயலும். பகாமாசில் சந்திக்கலாம் என்ற விருப்புடன் விடைபெறுகிறேன்...." என்று அக்கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. மிகவும் தந்திரமான முறையில் ஜெயாரினால் வரையப்பட்ட இக்கடிதத்தின் மூலம், இன்னும் இருவாரங்களில் நடக்கவிருந்த பொதுநலவாய நாடுகளின் தலைவர் மாநாட்டில் ரஜீவ் தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தார். ரஜீவ் காந்தியின் அரசியல்த் தீர்விற்கான முன்னெடுப்புக்களை தனது இராணுவத் தீர்விற்கான பேச்சின்மூலம் ஜெயார் ஒரேயடியாக அடித்துப் போட்டிருந்தார்.  பண்டாரியுடனான மூன்றாம் கட்டப் பேச்சுக்களுக்கான கார்த்திகையில் தில்லி வந்திருந்த பிரபாகரன் ஜென்டில்மேன் எனும் பத்திரிகைக்கு பேட்டியொன்றினை வழங்கியிருந்தார். அதன் ஒரு பகுதி கீழே. கேள்வி : இன்று இலங்கையில் நிலவிவரும் சூழ்நிலையினை நீங்கள் எவ்வாறு கணிப்பிடுகிறீர்கள்? பிரபாகரன் : இலங்கையில் இன்று நிலவும் அரசியல் சூழ்நிலை மிகவும் கொதிநிலையில் இருக்கிறது. தமிழர் தேசம் ஒரு திட்டமிட்ட இனக்கொலையினை முகம்கொடுத்து நிற்கிறது. தமிழ் மக்கள் மீதான படுகொலைகளை இலங்கை அரச படைகள் தொடர்ச்சியாக அரங்கேற்றியவண்ணம் இருக்கின்றார்கள். படுகொலைகள், சித்திரவதைகள், கைதுகள், பாலியல் வன்புணர்வுகள், உடமையெரிப்புக்கள் என்று முற்றான இனவழிப்பை நாள்தோறும் எதிர்கொண்டு வருகிறார்கள். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் தமது பூர்வீகத் தாயகத்திலிருந்து வேறோடு பிடுங்கி எறியப்பட்டு அகதிகளாக்கப்பட்டிருக்கிறார்கள். யுத்தநிறுத்தம் எனும் போர்வையினைப் பாவித்து கொடூரமான அடக்குமுறையினையும், இராணுவ அதிகாரத்தையும், அழிவுகளையும் எம் மக்கள் மீது இலங்கையரசு கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. இன்று ஆட்சியில் இருக்கும் அடிப்படைவாதச் சிங்கள இனவெறியர்களின் ஒற்றை நோக்கம் தமிழர்களை இராணுவ ரீதியில் அடக்கி அடிமை கொள்வதுதான். தமிழர்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு அமைதிவழியில் தீர்வினை வழங்கும் எந்த நோக்கமும் அவர்களிடத்தில் இல்லை. இலங்கையரசின் இந்த மனோநிலையே தற்போதைய சூழ்நிலையினை மிகவும் ஆபத்தான வழிக்குக் கொண்டு சென்றிருக்கிறது. கேள்வி : தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கும், இலங்கையரசாங்கத்திற்கும் இடையே தற்போது நடந்துவரும் பேச்சுக்கள் குறித்து உங்களின் கருத்து என்ன?  பிரபாகரன்: இந்தச் சமாதானப் பேச்சுக்கள் என்பதே ஒரு பயனுமற்ற காலத்தை விரயமாக்கும் செயற்பாடாகும். உலகத்தை ஏமாற்ற ஜெயவர்த்தன அரசினால் போடப்பட்டிருக்கும் நாடகமே இப்பேச்சுவார்த்தைகள். தான் சமாதானத்தில் விருப்புக்கொண்டவராக ஜெயார் தன்னைக் காட்டிக்கொண்டாலும், உண்மையில் அவர் சமாதானத்திற்கு எதிரானவர். எமது மக்களின் அரசியல் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யத்தக்க எந்தத் தீர்வினையும் அவர் இதுவரையில் முன்வைக்கவில்லை. சமாதானப் பேச்சுவர்த்தைகள் என்கிற போர்வையின் கீழ் எமது மக்கள் மீது திட்டமிட்ட இனக்கொலையொன்றினை தனது இராணுவத்தைக் கொண்டு அவர் நடத்தி வருகிறார் என்பதே உண்மை. கேள்வி : ஆகவே, யதார்த்தத்தில் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்திருக்கின்றன என்று கருதுகிறீர்களா?  பிரபாகரன்: பேச்சுக்கள் இதுவரையில் எந்தப் பலனையும் கொடுப்பதில் தோல்வியில் முடிவடைநிதிருக்கின்றன என்பதை என்னால் கூறமுடியும்.  கேள்வி : அப்படியானால் சமரசம் மூலம் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணும் சாத்தியம் இப்போது இல்லை என்று கூறுகிறீர்களா?  பிரபாகரன் : அது சில காரணிகளில் தங்கியிருக்கிறது என்று நான் நினைக்கிறேன்......  கேள்வி : அக்காரணி இந்தியாவின் நிலைப்பாடு என்று கூறுகிறீர்களா?  பிரபாகரன் : ஆம், ஒருவகையில்   1986 ஆம் ஆண்டு தை மாதமளவில், ஜெயாருடனான தொடர்பாடல்களில் தோல்வியடைந்தவராக ரஜீவ் தன்னை உணர்ந்துகொண்டார். 1985 ஆம் ஆண்டு மார்கழி ஆரம்பப்பகுதியில் நடைபெற்ற முதலாவது சார்க் உச்சி மாநாட்டில் ஜெயவர்த்தன ரஜீவை முற்றாகத் தோற்கடித்திருந்தார்.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.