Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சென்னை வெள்ளத்தில் பலியானவர்கள் எத்தனை பேர்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, வாலி said:

வாத்தியார், யாழ்கள முகப்பில் இருக்கும் கருத்து யாழ்கள உறுப்பினர் எல்லோரினதும் ஒரே கருத்தாக இருக்கவேண்டுமென்பதில்லைத் தானே! இந்த நிமிடம் வரையாழ் களத்தில் இருக்கும் தமிழக உறவுகள் ஈழத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆற்றிய உதவி என்ன? அதே போன்று யாழ்கள உறவுகள் தமிழகத்தில் உள்ள மக்களுக்கு ஆற்றிய உதவி என்ன? சும்மா இரத்தம் சதை எலும்பு எண்டு மாய்மாலம் காட்டுவதில் என்ன பிரயோசனம் இருக்கின்றது? http://www.yarl.com/forum3/topic/164144-தமிழினிக்கு-உதவுங்கள்-உறவுகளே/?do=findComment&comment=1150436 இந்தத் திரியில் உடையார் கேட்ட கேள்வி 17 மணி நேரமாக இருக்கின்றது எவராவது பதிலளித்தார்களா?உலகத்தில் எங்கோ ஒரு மூலையில் வெள்ளம் வந்து கொஞ்ச மக்கள் செத்துப் போனார்கள். அதற்காக ஒரு சின்ன அனுதாபப் பட்டு விட்டுப் போகலாம். அதற்காக பெரிசா அலட்டிக்கவேண்டியது இல்லை. முடிஞ்சால் உடையாரின் வேண்டுதலுக்கு யாரவது பதிலளிக்கலாம்!

உடையார் கேட்ட கேள்விக்குப் பதில் அளிக்கும் உரிமை எனக்கு இல்லை.
அந்தப் பங்களிப்பில் நான் கலந்து கொள்ள முடியாமல்  போய்விட்டது.

இங்கே பங்களிப்பை யாரும் வற்புறுத்தவுமில்லை. தமிழக உறவுகள் இந்த அவலத்தில் இருந்து மீழ வருவார்கள்.அதற்கான பணமும் அதைக் கையாளும் தன்மையும் அவர்களிடம் இருக்கின்றது.

ஆனால் இந்த அவலத்திலும்  அவர்களின் மனம் புண்படாதவாறு கருத்துக்களை வைக்க முடியாதா?
அவலங்கள் தீர்ந்து அவர்கள் ஆறுதலாக இருக்கும் நேரத்தில் ஈழத்தமிழர்களின் அவலங்களுக்கு அவர்கள் கை கொடுத்த முறை சரியா பிழையா என்று ஆராய முடியாதா?

ஒரு சிலர் தமிழகத்தில் இருந்து யாழுக்கு வரும் உறவுகளை வேண்டுமென்றே சீண்டுவதில் கவனமாக இருப்பதை இங்கே அடிக்கடி காணகூடியதாக இருக்கின்றது வாலி  


 

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார் நான் உங்களைப்பங்களிக்குமாறு கேட்கவில்லை. ஆனாலும் வரும் கிறிஸ்மஸ், புதுவருடம், பொங்கல் கொண்டாட்டங்களை கொண்டாடாமல் விட்டு விடுவார்களா? சதையும் இரத்தமும் துடித்தால் செய்யலாமே! சொல் என்பதை விட செயல் என்பதே முக்கியம். தமிழக உறவுகள் மீண்டு வருவார்கள் என்பது திறமையான சமாளிப்பு. துடிக்கும் நல்ல இல்லங்களின் பங்களிப்பு என்ன? இங்கு எவரையும் தமிழகத்தில் இருந்து வரவேண்டாமென எவரும் சொல்லவில்லை. ஆனால் தமிழகம் ஏதோ ஈழத்தமிழருக்காக துடிக்கிறது என புலுடா விட்டால் பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. ஈழத்து அரசியலைப் பொறுத்தவரை தமிழகம் ஒரு முடமான வயோதிப மாது. இதை சொல்வதிலோ எழுதுவதிலோ எந்தவொரு தயக்கமும் எனக்குக் கிடையாது. மற்றும் படி எவரையும் தூக்கிப் பிடிக்கவேண்டிதது இல்லை!

வெள்ளத்தால் பாதிக்கபட்ட இலங்கை அகதிகளை இதுவரை எவரும் எட்டியே பார்க்கவில்லை என்று அறிகின்றேன் .குறிப்பாக கரூர் முகாம்களில் இருப்பவர்கள் பெரும் அவலத்திற்குள் இருப்பதாகவும் ஒரு சிறு உதவி கூட இதுவரை எட்டவில்லை என்கின்றார்கள் .

இது இன்னொரு பழைய விடயம் -தமிழக சிறப்புமுகாம்கள் நிலை பற்றிய தோழர் பாலனின் புத்தகம் வாசித்தேன் சொல்ல வார்த்தையில்லை .தமிழக அரசியலவாதிகளை போல எம்மவரும் மிக நன்றாக ஊடகங்களில் நடிக்க பழகிவிட்டார்கள் என்றே தோன்றுகின்றது .

8 hours ago, கிருபன் said:

அல்லல்படும் மக்களுக்கு உதவி புரியாவிட்டாலும், ஆறுதல் வார்த்தைகள்கூட சொல்லாவிட்டாலும் பரவாயில்லை. தமிழர்களாக மதிக்காவிட்டாலும் சக மனிதர்களாகவாவது மதிக்கவேண்டும். அதுகூட இல்லாத கல்மனம் கொண்டு, காயப்படுத்துவதன் மூலம் வெறும் வன்மத்தைத்தான் சிலர் காட்டுகின்றார்கள். இவர்கள் முள்ளிவாய்க்காலில் மக்கள் அவலப்பட்டபோதும், அழிந்தபோதும் அவற்றையும் வெறும் செய்திகளாகத்தான் பார்திருப்பார்கள்.

நியாயமான கருத்து கிருபன் ,ஆனால் இதற்கு முதல் வேறு சிலநாடுகளில் இயற்கை அனர்த்தத்தால் பலர் உயிர் இழக்க இங்கு பலர் சந்தோஷப்பட்டார்கள் .அப்போ கிருபன் எங்கிருந்தார் என்று தெரியவில்லை .கவனிக்கவில்லை என்று இலகுவாக கடந்து போகலாம் .

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப தேவை சாவு எண்ணிக்கையல்ல.. நோய் நொடி.. பட்டினியால்... பாதிப்புக்களின் மன விரக்தியால் இன்னும் மரணங்கள் ஏற்படாமல் தவிர்ப்பதே ஆகும்..!

முள்ளிவாய்க்கால் பேரவல காலத்தில் தமிழகம் போராடவில்லை என்று சொல்வர்கள் குருடர்கள். இந்த உலகம் அறியாதவர்கள் என்பது பொருள். முள்ளிவாய்க்கால் பேரவலத்தை அமெரிக்க வல்லரசே தடுத்து நிறுத்த முடியல்ல..அந்தளவுக்கு சோனியா சர்க்கார் கொலைவெறியில் இருந்தது.. நடந்து கொண்டது. அந்த அம்மையாரும் அவரின் தமிழக அடிவருடிகளும் செய்த குற்றத்துக்கு தமிழக மக்கள் ஒருபோதும் காரணமாக முடியாது.

சோனியா தன் புருசனுக்காக புலிகளை தண்டித்திருக்கலாம்.. தமிழ் மக்களை தன் புருசன் பாணியில் கொலை செய்ய எந்தத் தகுதியும் அற்றவர்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, arjun said:

வெள்ளத்தால் பாதிக்கபட்ட இலங்கை அகதிகளை இதுவரை எவரும் எட்டியே பார்க்கவில்லை என்று அறிகின்றேன் .குறிப்பாக கரூர் முகாம்களில் இருப்பவர்கள் பெரும் அவலத்திற்குள் இருப்பதாகவும் ஒரு சிறு உதவி கூட இதுவரை எட்டவில்லை என்கின்றார்கள் .

இது இன்னொரு பழைய விடயம் -தமிழக சிறப்புமுகாம்கள் நிலை பற்றிய தோழர் பாலனின் புத்தகம் வாசித்தேன் சொல்ல வார்த்தையில்லை .தமிழக அரசியலவாதிகளை போல எம்மவரும் மிக நன்றாக ஊடகங்களில் நடிக்க பழகிவிட்டார்கள் என்றே தோன்றுகின்றது .

நியாயமான கருத்து கிருபன் ,ஆனால் இதற்கு முதல் வேறு சிலநாடுகளில் இயற்கை அனர்த்தத்தால் பலர் உயிர் இழக்க இங்கு பலர் சந்தோஷப்பட்டார்கள் .அப்போ கிருபன் எங்கிருந்தார் என்று தெரியவில்லை .கவனிக்கவில்லை என்று இலகுவாக கடந்து போகலாம் .

அர்ஜுன் அண்ணா,
தயவு செய்து தவறாக புரிந்து கொள்ளாதீர்கள்.
உங்கள் பெரும் பாலான கருத்துக்கள்  ஒரு தெளிவற்ற நிலையிலேயே இருக்கின்றன.
இது நீங்கள் கூறும் பொருளில் ஒரு தீர்க்கமில்லா தன்மையை சுட்டிக் காட்டுகிறது.
தமிழக மக்களின் இன்றைய நிலை குறித்து உங்கள் நிலைப்பாடு ~ மனிதாபிமானம் கூடிய, அனுதாபம் கலந்த நிலை என்பதை நான் அறிவேன். இதுவே உண்மை.
ஆனால் இதே நிலையில் அடுத்தவர் வந்து அனுதாபம் தெரிவிப்பதை அது பொய் , பித்தலாட்டம், "தமிழக அரசியலவாதிகளை போல எம்மவரும் மிக நன்றாக ஊடகங்களில் நடிக்க பழகிவிட்டார்கள் " என்றெல்லாம் கூறுகிறீர்கள்.

அதே நேரம்  தமிழக உறவுகளின் இன்றைய பரிதாப நிலை கண்டு பரிகாசிக்கும் சில கருத்துக்களை வரவேட்கிறீர்கள் அல்லது உடந்தை படுகிறீர்கள்.

இங்கே உண்மையான அர்ஜுன் அண்ணாவின் கருத்து எது.

பின்குறிப்பு:

அனுதாபப் படுவதையே எக்காளமாக பார்க்கும் ஒருவர், பரிகாசம் செய்யும் ஒருவர்  இன்னும் ஒரு திரியை சுட்டிக்காட்டி இதிலே நீங்கள் என்ன பங்களிப்பு செய்தீர்கள் என்று கேள்வி வேறு கேட்கிறார்.
இது இந்த திரியில் மட்டும் அல்ல மாவீரர் நாள் செலவு கணக்கிலும் கணக்கு வழக்கு நடாத்துகிறார்கள்

கவனிக்கவும்: இன்னும் ஒரு திரியில் தமிழக உறவோடு நாங்கள் உறவாடும் போது அவர்களுக்கு எதுவும் எங்களாலான  உதவிகள் தேவையா என்பதையும் நாங்கள் பேச்சளவிலாவது கேட்டும் உள்ளோம்.

வேறு சில நாடுகளின் அழிவில் சிலர் இன்பமடைந்து இருந்தார்கள் ஆயின் அது அவர்களின் வக்கிரம் மட்டுமே.
பொதுவாக அமெரிக்கா போன்ற சில ஏகாதிபத்திய நாடுகளின் அழிவில் சிலர் மாற்றுக்கருத்து வைத்திருப்பார்கள் நீங்கள் உட்பட.
அப்படி அவர்கள் இருந்ததினால் நாங்களும் வக்கிரமாகத்தான் இருப்போம் என்று நீங்கள் நினைப்பீர்கலேயானால், மேல் கொண்டு உறவாடுவதற்கு இந்த திரியில் ஒன்றும் இல்லை.

நட்புடன் தம்பி சசி 

நான் எவரையும் பரிகாசம் செய்யவில்லை ,

ஆனால் சென்னை வெள்ளத்திற்கு முதல் பல இயற்கை அனர்த்தங்கள் டெல்கியில் ,சீனாவில் ,பாகிஸ்தானில் நடந்தது அதற்கு யாழ் உறவுகள் இட்ட பின்னோட்டங்களை வேணுமென்றால் தேடி இணைகின்றேன் .

சசி உங்கள் போல பலருக்கு பல பின்னோட்டங்கள் கண்ணில் படாமலும் சில கண்ணோட்டங்கள் கண்ணை உறுத்துவதும் தான் எனக்கு புரியாமல் இருக்கு .ஏன் இந்த பாகுபாடு .

இங்கே பலருக்கு என்ன கருத்து என்பதை விட யார் எழுதினார்கள் என்பது தான் அதைவிட முக்கியம் .

ஆனால் எனக்கு எல்லாம் கண்ணில் படுகின்றது . 

இவற்றை எல்லாம் பார்க்கும்போது பலரின் பதிவுகள் ஒரு வித நடிப்பே என்று தோன்றுகின்றது.எப்படி மற்ற பொதுமக்கள்  இறப்பில் சுகம் கண்டு இன்னுமொரு இழப்பில்  கண்ணீர் வடிப்பது என்பது இன்னமும் புரியவில்லை .

புலிகள் ,மாவீரர்கள் ,தமிழக மக்கள் பற்றி விமர்சனம் வைக்க விடமாட்டோம்என்று ஒருவர் எழுதுகின்றார் ஆனால் மாற்று கருத்தாளர்களை இல்லாத பொல்லாத காது கொடுத்து கேட்க முடியாத வார்த்தைகளால் திட்டாலாம் ஆனால் அவர்களை பற்றி ஒரு விமர்சனம் கூட வைக்க கூடாது .

எந்த உலகத்தில் எந்த நாட்டில் எந்த காலத்தில் இருக்கின்றீர்கள் .பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருளாது தம்பி .

நீங்கள் மற்றவர்களை மதிக்க பழகினால் உங்களை மற்றவர்கள் தானாகாவே மதிப்பார்கள் .

Edited by arjun
எழுத்து பிழை திருத்தம் .

2 hours ago, arjun said:

நான் எவரையும் பரிகாசம் செய்யவில்லை ,

ஆனால் சென்னை வெள்ளத்திற்கு முதல் பல இயற்கை அனர்த்தங்கள் டெல்கியில் ,சீனாவில் ,பாகிஸ்தானில் நடந்தது அதற்கு யாழ் உறவுகள் இட்ட பின்னோட்டங்களை வேணுமென்றால் தேடி இணைகின்றேன் .

 .

விதண்டாவாதத்திற்கு நல்ல உதாரணம்

உலகில் இடம்பெறும் இயற்கை அழிவுகளுக்கு எல்லாம் நாம் கவலைப்பட வேண்டும் என்றால் 365 நாளும் கவலைப்பட வேண்டும்

ஆனால் எந்த மனிதரும், இனக்குழுமமும் தனக்கு நெருக்கமான மனசுக்கும் மனிதர்களுக்கும் துன்பம் நேரும் போதும் தான் துடிக்கும்

இதுக்காக டெல்கியில் இடம் பெற்ற இயற்கை துன்பத்துக்கு எல்லாம் ஏன் கவலைப்படவில்லை என்று கேட்பது வெற்று விதண்டாவிதம்

நான் / மற்றும் யாழ் இணையம் டெல்லியில் என்ன நடந்தாலும் கவலைப்படப் போவதில்லை. அதே இத்தாலி, மேற்கு ஆபிரிக்கா / கிழக்கு ஐரோப்பாவில் நடந்தாலும் கவலைப்படப் போவதில்லை.

ஆனால் தமிழகத்தில் நடந்தால் கவலைப்படுவோம். அவர்களுக்காக துடிப்போம்.

வெற்று மனிதாபிமானத்தினை விட இனக் குழுமம் சார்ந்த மனிதாபிமானம் நேர்மையானது என்று நம்புகின்றோம்

கிருபன் எழுதிய வசனத்தைதான் நினைவு படுத்த விரும்புகின்றேன் ,

கவலைபடச்சொல்லி கேட்கவில்லை கடைசி அப்படியான இறப்புகளை பார்த்து சந்தோசப்படாமல் ஆவது இருக்கலாம் தானே 

2 hours ago, நிழலி said:

ஆனால் தமிழகத்தில் நடந்தால் கவலைப்படுவோம். அவர்களுக்காக துடிப்போம்.

வெற்று மனிதாபிமானத்தினை விட இனக் குழுமம் சார்ந்த மனிதாபிமானம் நேர்மையானது என்று நம்புகின்றோம்

துடிக்கவேண்டாம் கருத்து எழுதிறம் எண்டு மீனாவும்,வாலியும் எழுதியவைகளை யாழ் நிர்வாகம் அனுமதிக்கின்றதா ?

  • கருத்துக்கள உறவுகள்

இதில் சில ஆக்களின் காமடி தாங்க முடியவில்லை. பாரீசில் 130 பேருக்கு துடித்தவை கன்டகாரில் 80 மக்களுக்கு துடிக்கல்ல. பாரீசில 130 பேருக்கு துடித்தவை அங்கு இறந்து போன 9 ஐ எஸ் காரன்களுக்கு ஏன் துடிக்கல்ல. அவனும் மனிதன் தானே. இங்கு தத்துவார்த்தம் பேசும் கிருபண்ணாவும் ஐ எஸ் காரங்களை மனிதன் அல்ல.. பயங்கரவாதின்னு காட்டிற ஆக்கங்களை இணைச்சாரே. இன்னும் சிலர் அழிக்கனும் ஒழிக்கனும் என்று எதையோ மனசில வைச்சிட்டு சுற்றித் திரிஞ்சினம்.

ஏன் கனக்க.. இங்கு மனிதாந்தம் பேசும் சிலர் புலிகள் என்றதும்.. அதனை இழந்து சன்னந்தம் ஆடுகிறார்களே.. இப்படி சந்தர்ப்பம் பார்த்து வருவதல்ல. மனிதம். அதன் முன் எல்லா மனிதனும் அவன் செய்யும் குற்றங்கள் குறைகள்.. நிறம்.. நாடு.. இனம்... மொழி இதற்கு அப்பால் சமன். அப்படி இந்த உலகில் நினைக்கும் ஒரு மனிதனும் கிடையாது. மனிதம் என்பது 100% உபயோகிப்பில் இருப்பின்... மனிதனால் மனிதன் மீது ஏற்படும் அழிவுகளே இருக்காது.

தமிழனுக்கு ஒரு அழிவு என்றதும் எத்தனை விதண்டாவாதிகள்.. உருவாகிறார்கள். இதே அந்நியனுக்கு ஒரு அழிவு என்றால்.. கலங்கி நிற்கினமாம். கதை விடத்தான் முடியும்.. நம்ப வைக்க முடியாது. :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு தமிழக மக்கள் எல்லொரும் திரண்டு போராடவில்லை என்று குற்றம் சொல்ல.. கேள்வி கேட்க... சொந்தச் சனம் ஊரில் சாகச் சாக கனடாவுக்கும் லண்டனுக்கும் இதர மேற்கு நாடுகளுக்கும்  கொழும்புக்கும்.. வசதி வாய்ப்புத் தேடி.. பொருண்மிய மீட்சி தேடி.. தவிச்ச முயல் அடிக்க.. ஓடிய ஈழத்தமிழர்களில் ஒரு பகுதியினருக்கு என்ன அருகதை உள்ளது..??!

தமிழகம் ஆட்சியாளர்களின் கடும் கெடுபிடிகள் மத்தியிலும் தன்னால் இயன்ற குரலை எழுப்பியது. உறவுகள் தீக்குளித்து தம்மை வருத்தி அழித்து உலகிடம் நீதி கேட்டார்கள். எல்லாம் குப்பையில் போடப்பட்டது ஆட்சியில் இருந்த.. ஆதிக்க வெறிபிடித்த மனிதர்களால். இன்று அவர்கள் தான் தமிழக மக்களின் துயரிலும் அரசியல் நடத்துகிறார்கள்.

தமிழக மக்கள் ஏழைகளாக இருந்த போதும் ஈழத்தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்து.. தமது குரலையும் காலத்துக்கு காலம் கொடுத்தே வந்துள்ளார்கள்.. அவர்களைப் பார்த்து கேள்வி கேட்க.. அவர்களின் துன்பத்தில் நியாயம் சொல்ல.. சொந்த மக்களின் போராட்டத்தில் பங்கெடுத்து அதனை வெற்றி பெற வைக்க முயலாமல் நாட்டை விட்டு ஓடியவர்கள் எப்படி கேள்வி கேட்கும் நியாயத்தைப் பெற்றார்கள் என்பது தான் வேடிக்கையாகவும் விநோதமாகவும்.. உள்ளது. இது அவர்கள் தங்களின் சுயத்தை பார்த்து இதுவரை கேள்வி கேட்டத்தில்லை என்பதைக் காட்டுகிறது.

நாட்டை விட்டு ஓடியவர்கள் என்பதில்.. தமிழர் தாயகத்தை விட்டு.. சிங்களவனிடம் போய் பதுங்கியவர்களும் இதில் அடக்கம். :rolleyes:tw_angry:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எதற்காக நான் எழுதிய கருத்தை நிர்வாகம் தூக்கியது?... உண்மையை எழுதினால் பலருக்கு கசக்குதோ?...தொப்பிள் கொடி உறவு பாதிக்கப்பட்டு விடுமோ என்ட பயமோ!...அப்படி ஒரு உறவு ஈழத்/தமிழக மக்களீடையே இருக்குதா?...ஊரில் போய் தமிழக மக்கள் தொப்பிள் கொடி உறவுகள் என சொல்லுங்கள் என்ன வரவேற்பு கிடைக்குது எனப் பார்ப்போம்.

நான் முதலில் எழுதியது 2009 யுத்தத்தின் போது தமிழக தமிழர்களது அமைதியைப் பற்றீ ஆனால் இதில் கருத்து எழுதிய ஒருவர் அவர் ஏதோ ஊரில் இருந்து கருத்து எழுதுகின்ற மாதிரி பாட தொடங்கிட்டார்...எதற்கெடுத்தாலும் இதே ஒப்பாரியை தொடர்ந்து வைப்பதே வாடிக்கையாய்ப் போயிட்டுது.

நிர்வாகத்தின் சார்பில் யார் எனது கருத்தை தூக்கி இருந்தாலும் அதற்கான சரியான காரணத்தை சொல்லவும்.

ஒரு சில அரசியல்வாதிகளின் தவறுகளுக்காக ஒட்டு மொத்த தமிழக மக்களை  அவர்கள் மழை வெள்ளத்தால் துன்புறும் இவ்வேளையில் விமர்சிப்பது பிளவுகளை ஏற்படுத்தக்கூடிய கருத்துக்களாகவே பார்க்கப்படுகின்றது. மேலும் எம்போராட்ட தோல்விக்கு தமிழக மக்களை ஒட்டுமொத்தமாக குற்றஞ்சாட்டுவது என்பது அறியாமையும் அபத்தமும் ஆகும்.

எனவே பிளவுகளை ஏற்படுத்தும் கருத்துக்களை பதிவதனைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.

23 minutes ago, நியானி said:

ஒரு சில அரசியல்வாதிகளின் தவறுகளுக்காக ஒட்டு மொத்த தமிழக மக்களை  அவர்கள் மழை வெள்ளத்தால் துன்புறும் இவ்வேளையில் விமர்சிப்பது பிளவுகளை ஏற்படுத்தக்கூடிய கருத்துக்களாகவே பார்க்கப்படுகின்றது. மேலும் எம்போராட்ட தோல்விக்கு தமிழக மக்களை ஒட்டுமொத்தமாக குற்றஞ்சாட்டுவது என்பது அறியாமையும் அபத்தமும் ஆகும்.

எனவே பிளவுகளை ஏற்படுத்தும் கருத்துக்களை பதிவதனைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.

நன்றி நியானி 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, arjun said:

நியாயமான கருத்து கிருபன் ,ஆனால் இதற்கு முதல் வேறு சிலநாடுகளில் இயற்கை அனர்த்தத்தால் பலர் உயிர் இழக்க இங்கு பலர் சந்தோஷப்பட்டார்கள் .அப்போ கிருபன் எங்கிருந்தார் என்று தெரியவில்லை .கவனிக்கவில்லை என்று இலகுவாக கடந்து போகலாம் .

உலகில் நடக்கும் அனர்த்தங்களையும், அழிவுகளையும் கவனிக்காமல் இருப்பதில்லை. அலுவலகத்தில் இரண்டு தொலைக்காட்சிகளில் 24 மணிநேரமும் செய்திகள் போகும் BBC, Sky சனல்கள்தான் உள்ளன. அத்தோடு நெஞ்சில் கொஞ்சம் ஈரமும் இருக்கின்றது. ஆனால் உலகத் துயரங்களை எல்லாம் என் துயரம் என்று சொல்லி எந்த நேரமும் கவலையோடு இருக்கவா முடியும்? 

தமிழர்கள் என்று வரும்போது அவர்கள் நம்மவர்கள் என்ற உணர்வு வருகின்றது. ஆனால் அப்படியான உணர்வு எல்லாத் தமிழர்களுக்கும் இருக்கவேண்டும் என்று சொல்லவரவில்லை. ஆனால் ஒருவர் துன்பப்படும்போது "அவருக்கு நல்லா வேணும்" என்று பிறர் துயரில் சந்தோசப்படுமளவிற்கு இருக்கக்கூடாது என்ற அடிப்படையான விடயத்தை மனிதர்களாக இருப்பவர்கள் கொண்டிருக்கவேண்டும் என்று கருதுகின்றேன்.

10 hours ago, nedukkalapoovan said:

இதில் சில ஆக்களின் காமடி தாங்க முடியவில்லை. பாரீசில் 130 பேருக்கு துடித்தவை கன்டகாரில் 80 மக்களுக்கு துடிக்கல்ல. பாரீசில 130 பேருக்கு துடித்தவை அங்கு இறந்து போன 9 ஐ எஸ் காரன்களுக்கு ஏன் துடிக்கல்ல. அவனும் மனிதன் தானே. இங்கு தத்துவார்த்தம் பேசும் கிருபண்ணாவும் ஐ எஸ் காரங்களை மனிதன் அல்ல.. பயங்கரவாதின்னு காட்டிற ஆக்கங்களை இணைச்சாரே. இன்னும் சிலர் அழிக்கனும் ஒழிக்கனும் என்று எதையோ மனசில வைச்சிட்டு சுற்றித் திரிஞ்சினம்.

மனிதர்களாகப் பிறந்தவர்கள் எல்லோரும் மனிதர்களாக இருப்பதில்லை. சக மனிதர்களை குருட்டுத்தனமாகக் கொல்பவர்கள் காட்டுமிராண்டித்தனமான விலங்குகள். மனித குலத்தின் இருப்புக்கு ஆபத்தானவர்கள். இப்படியானவர்களை அழிப்பதும், இப்படியானவர்களை உருவாக்கும் கருத்தியலை இல்லாமல் செய்வதும் உலகிற்கு நன்மை பயக்கும்.

கண்டகாரில் மக்கள் கொல்லப்பட்டபோது தலிபான் இன்னமும் வலுவோடு இருக்க விட்டுவைத்திருக்கின்றார்களே என்ற உணர்வுதான் வந்தது. 

  • கருத்துக்கள உறவுகள்
On 11/12/2015 at 7:06 PM, கிருபன் said:

மனிதர்களாகப் பிறந்தவர்கள் எல்லோரும் மனிதர்களாக இருப்பதில்லை. சக மனிதர்களை குருட்டுத்தனமாகக் கொல்பவர்கள் காட்டுமிராண்டித்தனமான விலங்குகள். மனித குலத்தின் இருப்புக்கு ஆபத்தானவர்கள். இப்படியானவர்களை அழிப்பதும், இப்படியானவர்களை உருவாக்கும் கருத்தியலை இல்லாமல் செய்வதும் உலகிற்கு நன்மை பயக்கும்.

கண்டகாரில் மக்கள் கொல்லப்பட்டபோது தலிபான் இன்னமும் வலுவோடு இருக்க விட்டுவைத்திருக்கின்றார்களே என்ற உணர்வுதான் வந்தது. 

அதிகாரத்தில் உள்ள மனிதன் அதிகாரத்தில் குறைந்தவனை.. இல்லாதவனை கொலை செய்வது தர்மம் என்றும்.. அடிமை தனக்கும்.. அதிகாரம் வேண்டி செய்யும் கொலைகள் பயங்கரவாதம் என்பதும்.. மிருகக் குணமாகத் தெரியவில்லை. மனிதப் பழிவாங்கல்.. குணமாகவே படுகிறது.

ஒரு சில மனிதர்கள் தான் மரபுவழி தவறுகளால்.. மனிதப் புத்தி இல்லாமல் விலங்காக இருக்க முடியும். மிகுதி மனிதர்கள் செய்யும் கொலைகளுக்குள் காரணங்கள் உள்ளன. அவற்றை முன்னரே கண்டறியும் கேட்டறியும் பக்குவமின்மை சக மனிதர்கள் மீதான கொலைவெறியாகிறது என்றும் கொள்ளலாம்.

ஒரு கொலைக்கு கொலைகாரன் மட்டுமல்ல.. அந்தக் கொலையை தூண்டும் காரணிகளை வளர்க்கும் பிற மனிதனும் காரணம். கொலைகாரனுக்கு சமனான காரண கர்த்தாவாக அவனையும் கொள்ள வேண்டும்.

எந்த விடயத்திலும் ஆழமாக சிந்திக்க வெளிக்கிடும் நீங்கள் இந்த விடயத்தில் மட்டும் மேம்போக்காக சிந்திக்க விளைவது போலத்தான்.. கொலைக்காரர்களை உருவாக்கும் மனிதர்களும் தவறு செய்கிறார்கள்.

அந்த இடத்திலேயே மனிதம் சாகடிக்கப்படுகிறது.. கொலையில் அது முழுமையாக அழிக்கப்படுகிறது. இதனை மனிதன் விளங்கிக் கொண்டால்.. மனிதருள் தமக்குள்தாமே பகை.. எதிரி என்ற நிலைகள் வளரும் கருத்துருவாக்கங்களும் அதிகார ஆதிக்க எண்ணங்கள் தோன்றுவது சாகடிக்கப்பட்டால்.. மனிதருள் எங்கும் மனிதம் என்ற சக மனிதனை சகல விதத்திலும் கெளரவமாக நடத்தும் இயல்பு தானே இயற்கையில் உள்ள படி நிலைக்கும்.

ஆனால்.. அதை எது சாத்தியமாக்க விடுகுதில்லை... ஆசை.. அதிகாரம்.. ஆதிக்க எண்ணங்கள் மனிதரில் ஒரு குழுவினர் மற்றவர்கள் மீது பிரயோகிக்க விளையும் போது தான். இந்த மிருகத்தனம் கலைந்தால்.... மனிதர்கள் எல்லோருமே மனிதம் நிறைந்தவர்கள் ஆவார்கள். கொலைகளுக்கு பயங்கரவாதத்துக்கு காரணமே பிறக்காது. tw_blush:

Edited by nedukkalapoovan

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.