Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனவாதத்தை தூண்டுவோருக்கு சிறைத்தண்டனை;புதிய சட்டமூலம் விரைவில்

Featured Replies

கொஞ்சம் அரசியல் படியுங்க சார் ,

தமிழர்களுக்கு என்று தீர்வு கேட்பவர்கள் சிறிலங்கன் என்ற அடையாளத்தை மறுதலித்தவர்கள் அல்ல .

தமிழர்களுக்கு அதிகார பரவலுடன் கூடிய சுயாட்சி அது சிறி லங்காவிற்குல்தான் .

உதாரணத்திற்கு ஆயிரம் நாடுகள் இருக்கு -இந்தியா ,கனடா 

  • கருத்துக்கள உறவுகள்

சட்டங்கள் இயற்றப்படலாம். நடைமுறையில் பாகுபாடு இருக்கும் அதிலும் சிறுபான்மையினர் ஒடுக்கப்படுவார்கள். இதுவும் ஒரு இராஜதந்திரம்.  

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, arjun said:

கொஞ்சம் அரசியல் படியுங்க சார் ,

தமிழர்களுக்கு என்று தீர்வு கேட்பவர்கள் சிறிலங்கன் என்ற அடையாளத்தை மறுதலித்தவர்கள் அல்ல .

தமிழர்களுக்கு அதிகார பரவலுடன் கூடிய சுயாட்சி அது சிறி லங்காவிற்குல்தான் .

உதாரணத்திற்கு ஆயிரம் நாடுகள் இருக்கு -இந்தியா ,கனடா 

தமிழருக்கான நியாயமான

காத்திரமான தீர்வு என்பது சிறீலங்கா என்ற தேசத்துக்குள் சாத்தியமில்லை

எப்பொழுது இலங்கை என்பது சிறீலங்கா ஆகியதோ

அன்றிலிருந்து தமிழர்கள் சிறீலங்காவை ஏற்காமலேயே வாக்களித்து  வருகின்றார்கள்

போராடி வருகின்றார்கள்.

இலங்கையில் ஒரு தீர்வு வருவதாக இருந்தால்

அது ஒன்றில் சிறீலங்கா மற்றும் தமிழீழம் என்கின்ற நாடுகள் இல்லாத ஒரு மாற்று தேசமாக இருக்கவேண்டும்

அல்லது சிறீலங்கா மற்றும் தமிழீழம் என்கின்ற இரு நாடுகள் இருக்கும் ஒன்றிணைந்த வேறு ஒரு தேசமாக இருக்கணும்.

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, arjun said:

கொஞ்சம் அரசியல் படியுங்க சார் ,

தமிழர்களுக்கு என்று தீர்வு கேட்பவர்கள் சிறிலங்கன் என்ற அடையாளத்தை மறுதலித்தவர்கள் அல்ல .

தமிழர்களுக்கு அதிகார பரவலுடன் கூடிய சுயாட்சி அது சிறி லங்காவிற்குல்தான் .

உதாரணத்திற்கு ஆயிரம் நாடுகள் இருக்கு -இந்தியா ,கனடா 

கவனம் நீங்கள் ஒரு flow வில ஆயிரம் நாடுகள் இருக்கு எண்டு எழுத எங்க ஆயிரம் நாடுகள் இருக்கு அதை தூக்கிப்பிடிச்சுக்கொண்டு வந்திடுவார்கள். tw_blush::cool:

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல் படித்ததால்தான் அந்தக்கரு்து வந்தது. tw_blush: சில குறிப்புகள்.

1) ஒரு தனிமனிதன் ஒரு தேசியத்தினுள் மட்டுமே இடம்பெற முடியும். தமிழர் உரிமை என்று பேசிக்கொண்டு சிறீலங்கனாகவும் இருக்க முடியாது. ஏனெனில் சிறீலங்கன் என ஒரு தமிழர் தன்னை வரயறுக்கும் போதிலே அவருக்கான சட்ட உரிமைகள் அரசியல் சட்டத்தில் வகுத்தபடி கிடைக்கப்பெற வேண்டியவராகிறார்.

2) இந்தியாவில் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. மாநிலங்களுககென அதிகாரங்கள் வழங்கப்பட்டன. ஆனால் அவை இனக்குழுமங்களுக்கான அதிகாரங்கள் அல்ல. அவ்வாறு இந்திய அரசியல் அமைப்பில் வரையறை செய்யப்படவில்லை. நிர்வாக வசதிக்காகவே அங்கு மொழிவாரி மாநிலங்கள். மற்றும்படி அரசியல் அமைப்பின்படி அவர்கள் அனைவரும் இந்தியரே.. இதில் தமிநாட்டிற்கென சிறப்பான உரிமைகளைக் கேட்க முடியாது.

3) இதே அடிப்படையில், ஈழத்தமிழர் ஒருவர் கனேடியர் ஆகிவிட்டால் அவருக்கு கனேடிய அரசியல் அமைப்பு சட்டப்படியான உரிமைகள் மட்டுமே கிடைக்கும். வேறு பிரத்தியேக உரிமைகளைக் கேட்க முடியாது. அதுபோல சிறீலங்கராக இருந்துகொண்டு தமிழருக்கான தீர்வு என்கிற விடயத்தைக் கோரமுடியாது. அதிக மாகாண உரிமைகள் வேண்டும் என்று வேணடுமானால் கேட்கலாம். ஆனால் அதற்கும் தமிழர் என்கிற அடையாளத்தினால் கேட்பதற்கும் வேறுபாடுகள் உண்டு.

நல்ல  திட்டம்  வந்தால்  நல்லம்  :mellow:

1 hour ago, இசைக்கலைஞன் said:

இதைத்தானே எண்பதுகளில் இருந்து சிங்களம் சொல்லி வருகிறது..!? நீங்கள் சிங்களவரும் இல்லை; தமிழரும் இல்லை; முஸ்லிம்களும் இல்லை; பறங்கியரும் இல்லை. மாறாக, நீங்கள் எல்லோரும் சிறீலங்கர்கள். சிங்களம் இங்கே முதன்மையான மொழி; பௌத்தம் முதன்மை மார்க்கம். தேசியம்: சிறீலங்கன்

இதில் தமிழருக்கென்று ஒருதீர்வு எனக் கேட்பவர்கள் அனைவருமே தமிழ் தேசியவாதிகளே.. ஏனெனில் அவர்கள் தமிழரைத் தனிமைப்படுத்தி ஒரு தீர்வினைக் கேட்கும்போது சிறீலங்கன் அடையாளத்தை மறுதலிப்பவர்கள் ஆகின்றார்கள். ஆனால் ஒரு சிலர் குழம்பி நின்றபடி தமிழ் தேசியத்தை எதிர்த்தவாறே தமிழருக்கென்று ஒரு தீர்வையும் கேட்பதுதான் விந்தையிலும் விந்தை. tw_blush:

இதை நீங்களும் நானும் சொன்னால் ஏற்க மாட்டார்கள்...  சுமத்திரன் சொல்லும் போது ஏற்றுக்கொண்டு இன ஐக்கியத்தை காப்பாத்துவார்கள்..

கனடா இன்னும் பெரிய பிரித்தானியாவின் முடிக்குரிய காலணித்துவத்தில் இருந்தே முழுமையாக விடுதலை அடையாத ஒரு நாடு...  வந்தேறு குடிகளான ஆங்கிலேயர்களும் பிரஞ்சு காறரும் அந்த நாட்டை பங்கு போட்டு கொண்டது ஒண்டும் ஆச்சரியமான விடயம் இல்லை...   ஆனாலும் மண்ணின் மைந்தர்களான அமெரிக்க குடிகளுக்கு என்ன ஆச்சு...??  அவர்களின் அதிகாரத்தின் கீழ் எந்த மாகானம் இருக்கிறது...?

அரசியல் விற்பண்ண அண்ணை மார் தயவு செய்து விளங்கப்படுத்தவும்...  

  • கருத்துக்கள உறவுகள்

மொழிவாரியாக.. பூர்வீக ரீதியாக.. கனடா பிரிட்டன் போன்ற நாடுகள் மக்கள் பிரிந்து செல்வதற்கான விருப்பை ஜனநாயக வாக்களிப்பு முறையில் கேட்டார்கள். ஆனால் சொறீலங்கா அத்தகைய ஒரு வாக்களிப்புக்கே இடமில்லாத சன நாயகத்தைக் கொண்டது. அதனை இந்தியா தான் இன்னும் மும்மரமாக திணித்தும் வருகிறது. இந்தியா காஷ்மீரிலும் பஞ்சாப்பிலும் தமிழகத்திலும் அப்படி ஒரு வாக்களிப்பை நடத்தினால் தெரியும்.. மக்கள் பிரிந்து செல்ல விரும்பினமா.. இல்லா அடாத்தாக ஹிந்திய தேசியத்துக்குள் அடிமைப்பட்டிருக்க விரும்பினமா என்பது. அதே தான் சொறீலங்கா சிங்கள பெளத்த தேசியத்துக்குள் தமிழர்களுக்கும் இன்று அடிமைகளாக வைக்கப்பட்டுள்ளார்களே தவிர அவர்களுக்கு என்று ஒன்றும் இல்லை.

இந்த நிலையில்.. ஆட்சியில் உள்ளவர்கள் செய்யும் இப்படியான சட்டத்திருத்தங்கள்... பெரும்பான்மை இனத்தவரையே பலப்படுத்தும். சிறுபான்மை இனத்தவரின் இனத்துவமும் அடையாளமும் பேசப்படாததாக்கப்பட்டு அழிக்கப்பட்டு விடும். இதனை நோக்கிய நகர்வின் ஒரு கட்டம்தான்.. இது. மகிந்த போரினால் ஏற்படுத்தியதை மைத்திரி சட்டத்தால் பாதுக்காக்கிறார். அதாவது சொறீலங்கா ஒரு சிங்கள பெளத்த நாடு என்பதை. அவ்வளவே. இதற்கு அதே தன்மையுள்ள ஹிந்திய தேசியம் ஒத்தூதுகிறது.

வெளிநாடுகளில் இருந்து எவ்வளவு கத்தினாலும் நாம் பெற கூடிய அதிக பட்ச தீர்வு ஒன்றிணைந்த இலங்கைக்குள் சமஸ்டி.. அதற்கே நாம் அதிகம் போராட வேண்டும்.  தற்போதைய நிலமையில் தமிழீழம் ஒரு காலம் கடந்த ஒரு கனவு மாத்திரமே. 

1 hour ago, nedukkalapoovan said:

மொழிவாரியாக.. பூர்வீக ரீதியாக.. கனடா பிரிட்டன் போன்ற நாடுகள் மக்கள் பிரிந்து செல்வதற்கான விருப்பை ஜனநாயக வாக்களிப்பு முறையில் கேட்டார்கள். ஆனால் சொறீலங்கா அத்தகைய ஒரு வாக்களிப்புக்கே இடமில்லாத சன நாயகத்தைக் கொண்டது.

யார் கண்டது..பிரிட்டன் வில்லியம் வாலஸுடனான யுத்தம் முடிந்து 600 வருடம் கழிச்சு ஜனநாயக முறைப்படி வாக்களிப்பு வைத்த மாதிரி சிங்கள அரசும் 500 வருடம் கழிச்சு ஒரு ஜனநாயக முறைப்படியான வாக்களிப்பு வைத்தாலும் வைக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

500 வருடத்துக்கு முன்னம் இருந்த ஆட்சி முறைமைகளுக்கும் இன்று 21ம் நூற்றாண்டில் உள்ள முறைமைகளுக்கும் வித்தியாசம் புரியாதவர்களுக்கு சன நாயகம் என்ன தாயகம்.. விடுதலை.. தமிழீழம்.. ஏன் சொந்த வாழ்க்கையே ஜஸ்ட் ரீம் தான். கனவு கண்டிட்டு அப்படியே போய் சேர வேண்டியான். பேமன்டில கிடந்து செத்தாலும் பொலிஸ் கொண்டு போய் மோச்சரில போடும். அரசு நல்லடக்கும் செய்யும். எதுக்கு தமிழீழம்.. எதுக்கு நாடு.. வீடு. :rolleyes:tw_blush:

சொறீலங்கா தேசியக் கொடியே இனத்துவேசக் கொடி. முதலில் இந்த சட்டமூலம் வந்ததும் சிங்கக் கொடியை கிழிச்சுப் போட்டிட்டு.. மைத்திரி - ரணில் - சந்திரிக்கா... மகிந்த கும்பல் இந்த சட்டமூல அமுலாக்கத்தை செய்யட்டும் பார்க்கலாம். tw_blush:

இதே 5 வருடம் முன்பு ஆயுத போர் நடத்தி வெண்ட ஒரு அரசிட்ட பிரிஞ்சு போக வாக்களிப்பு வை என்டு கேக்கிற புத்திசாலிகளை என்ன சொல்லவது ? 

  • கருத்துக்கள உறவுகள்

ஆயுதப் போராட்டம் வெற்றியடையாத போதும் பிரிந்த நாடுகள்.. வங்க தேசம்.. கிழக்குத் திமோர்.. கொசவோ.. தென்சூடான்.. என்று சமீபத்திய வரலாறுகள் தெரியாததுகள் எல்லாம் சிங்களவனுக்கு தூக்குச் சட்டி தூக்கத்தான் லாய்க்கு. :rolleyes:tw_blush:

32 minutes ago, nedukkalapoovan said:

ஆயுதப் போராட்டம் வெற்றியடையாத போதும் பிரிந்த நாடுகள்.. வங்க தேசம்.. கிழக்குத் திமோர்.. கொசவோ.. தென்சூடான்.. என்று சமீபத்திய வரலாறுகள் தெரியாததுகள் எல்லாம் சிங்களவனுக்கு தூக்குச் சட்டி தூக்கத்தான் லாய்க்கு. :rolleyes:tw_blush:

உங்களுக்கு தெரிந்தால் அந்த வரலாறுகளையும் கொஞ்சம் எழுதிறது ,

நல்ல பழக்கம் என்றுவிட்டு தம்பாவின் சாயல் கேட்க ஒருவர் ஓடி தொலைந்தார் 

பண்டாவை ஏன் பிக்கு சுட்டார் என்று தொடங்கியவர் ஏன் என்று கேட்டதற்கு இன்னமும் பதில் இல்லை 

சும்மா படம் காட்டாமல் உந்த நாடுகள் எல்லாம் எப்படி பிரிந்தது என்று ஒருக்கா எழுதுங்கோ .

84 களில் நாங்கள் காட்டிய படத்தை முப்பது வருடங்கள் தாண்டி எமக்கே காட்ட நினைக்கின்றார்கள் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 minutes ago, arjun said:

உங்களுக்கு தெரிந்தால் அந்த வரலாறுகளையும் கொஞ்சம் எழுதிறது ,

நல்ல பழக்கம் என்றுவிட்டு தம்பாவின் சாயல் கேட்க ஒருவர் ஓடி தொலைந்தார் 

பண்டாவை ஏன் பிக்கு சுட்டார் என்று தொடங்கியவர் ஏன் என்று கேட்டதற்கு இன்னமும் பதில் இல்லை 

சும்மா படம் காட்டாமல் உந்த நாடுகள் எல்லாம் எப்படி பிரிந்தது என்று ஒருக்கா எழுதுங்கோ .

84 களில் நாங்கள் காட்டிய படத்தை முப்பது வருடங்கள் தாண்டி எமக்கே காட்ட நினைக்கின்றார்கள் .

அண்ணை! கதை சொல்லுறவங்களின்ரை கதையை கேட்டு நானும் தெரியாத்தனமாய் உங்களோடை கொழுவிப்போட்டன். அண்ணை நீங்களே சொல்லுங்கோ பண்டார நாயக்காவை ஏன் புத்தபிக்கு சுட்டவன்?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

அண்ணை! கதை சொல்லுறவங்களின்ரை கதையை கேட்டு நானும் தெரியாத்தனமாய் உங்களோடை கொழுவிப்போட்டன். அண்ணை நீங்களே சொல்லுங்கோ பண்டார நாயக்காவை ஏன் புத்தபிக்கு சுட்டவன்?

ச‌கோதரயா வெடி திப்பா:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, காத்து said:

இதை நீங்களும் நானும் சொன்னால் ஏற்க மாட்டார்கள்...  சுமத்திரன் சொல்லும் போது ஏற்றுக்கொண்டு இன ஐக்கியத்தை காப்பாத்துவார்கள்..

கனடா இன்னும் பெரிய பிரித்தானியாவின் முடிக்குரிய காலணித்துவத்தில் இருந்தே முழுமையாக விடுதலை அடையாத ஒரு நாடு...  வந்தேறு குடிகளான ஆங்கிலேயர்களும் பிரஞ்சு காறரும் அந்த நாட்டை பங்கு போட்டு கொண்டது ஒண்டும் ஆச்சரியமான விடயம் இல்லை...   ஆனாலும் மண்ணின் மைந்தர்களான அமெரிக்க குடிகளுக்கு என்ன ஆச்சு...??  அவர்களின் அதிகாரத்தின் கீழ் எந்த மாகானம் இருக்கிறது...?

அரசியல் விற்பண்ண அண்ணை மார் தயவு செய்து விளங்கப்படுத்தவும்...  

 சும்மா மாடு சொன்னால் கேக்க மாட்டினம், மணி கட்டின மாடு சொன்னால்த்தான் கேப்பினம்.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, குமாரசாமி said:

அண்ணை! கதை சொல்லுறவங்களின்ரை கதையை கேட்டு நானும் தெரியாத்தனமாய் உங்களோடை கொழுவிப்போட்டன். அண்ணை நீங்களே சொல்லுங்கோ பண்டார நாயக்காவை ஏன் புத்தபிக்கு சுட்டவன்?

சபாசு... சரியான போட்டி.

  • கருத்துக்கள உறவுகள்

வங்கதேசம்: காந்தி ஹிந்தியாவுக்கு இங்காலும் அங்காலும் வைச்ச வினையை இந்திராகாந்தி தற்கொலை விமானிகளையும் பயன்படுத்தி பிரிவினை மூலம் ஒரு வினைக்கு தற்காலிக முடிவு தேடினது.

கிழக்குத்தீமோர்: எங்கட அதே பிரச்சனை. அமெரிக்க எடுபிடி அரசிடம் இருந்து.. விடுதலைக்காகப் போராடி ஆயுதப் போராட்டம் வெற்றியளிக்க வாய்ப்பே இல்லை என்ற நிலையில் ஐநா தலையீட்டில்.. தேர்தல் நிகழ்த்தப்பட்டு.. மக்கள் விருப்பு அறியப்பட்டு... பிரிக்கப்பட்ட தேசம்.

கொசவோ: இனப்படுகொலை நிரூபிக்கப்பட்ட நிலையில்.. ஐநா தலையீட்டில்.. நேட்டோ தலையீட்டில்... பின்னர் தேர்தல் என்று பிரிந்த தேசம்.

தென் சூடான்: எமது நிலையை ஒத்தது. ஆயுதப் போராட்டம் வெற்றியளிக்க முடியாது எனும் பட்சத்தில் ஐநா தலையீட்டில்.. தேர்தல் மூலம் மக்கள் விருப்பு அறியப்பட்டு.. பிரிக்கப்பட்டது.

எல்லாமே ஆயுதப் போராட்டம் வெற்றி அளிக்க வாய்ப்பில்லை.. என்ற நிலையில் மக்கள் விருப்புக்கு முதன்மை அளித்து பிரிக்கப்பட்ட தேசங்கள். இவை தான் சுருக்கமான வரலாறு.

நமக்கும் இவர்களோடு பல ஒற்றுமைகள் உள.

ஆனால்.. எம் நிலைப்பாட்டை ஐநாவில் நாமே உறுதியாக வலியுறுத்த வக்கற்று நிற்பதால்.. சுயலாப அரசியலுக்காக மாற்றி மாற்றி பேசுவதால்.. எம்மை எல்லோரும் எளிமையாக தமது விருப்பத்துக்குள் அடிமைப்படுத்தி விடலாம் என்று நினைக்கிறார்கள்.. 2009 மே க்குப் பின் இந்த நிலை மிக மோசமடைந்துள்ளது.

இதற்கும் மேல் வரலாறு தெரியாமல் கருத்தெழுதும் புண்னியவான்கள்.. பல ஆய்வுக்கட்டுரைகள் இணையத்தில் உள்ளன. அவற்றை படித்துவிட்டு வந்து எழுதலாம்.

================

பண்டாரநாயக்காவை சுட்டது அவரின் மனிசி தானே/?/. tw_blush:

அதேவழியில் குமார ரனத்துங்கவை போட்டது வேறு யாருமல்ல..அவரின் மனிசி. இத்தனை வழக்குகளை கிளறும் அணிலார் ஏன் உதுகளை கிளறமாட்டன் என்கிறார்..??! tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, nedukkalapoovan said:

பண்டாரநாயக்காவை சுட்டது அவரின் மனிசி தானே. tw_blush:

அதேவழியில் குமார ரனத்துங்கவை போட்டது வேறு யாருமல்ல..அவரின் மனிசி. இத்தனை வழக்குகளை கிளறும் அணிலார் ஏன் உதுகளை கிளறமாட்டன் என்கிறார்..??! tw_blush:

அதோடை உந்த ராசீவ் காந்தியைப் போட்டது........! அரசல் புரசலாய் சில செய்திகள் வாசித்த ஞாபகம்.:grin:

15 hours ago, nedukkalapoovan said:

ஏன் சொந்த வாழ்க்கையே ஜஸ்ட் ரீம் தான். கனவு கண்டிட்டு அப்படியே போய் சேர வேண்டியான். பேமன்டில கிடந்து செத்தாலும் பொலிஸ் கொண்டு போய் மோச்சரில போடும். அரசு நல்லடக்கும் செய்யும். எதுக்கு தமிழீழம்.. எதுக்கு நாடு.. வீடு. :rolleyes:tw_blush:

புலம்பெயர் வாலுகளுக்கு தெரிந்த ஒரே விடயம் இதுதான். கருத்தை கருத்தால் மோத வழியில்லை இப்படி ஏதாவது எழுதி அதுக்கு விசிலடிச்சிட்டு போர்த்துக்கொண்டு படுக்க வேண்டியது தான். 

14 hours ago, nedukkalapoovan said:

ஆயுதப் போராட்டம் வெற்றியடையாத போதும் பிரிந்த நாடுகள்.. வங்க தேசம்.. கிழக்குத் திமோர்.. கொசவோ.. தென்சூடான்.. என்று சமீபத்திய வரலாறுகள் தெரியாததுகள் எல்லாம் சிங்களவனுக்கு தூக்குச் சட்டி தூக்கத்தான் லாய்க்கு. :rolleyes:tw_blush:

வங்கதேசம் - முக்தி பாகினி இந்திய ராணுவத்துடன் சேர்ந்து இயங்கி விடுதலை பெற்றது. இயக்கம் முற்றுமுழுதாக தோற்கடிக்கப்பட்டு அதன் பின் விடுதலை பெறவில்லை

கிழக்கு தீமோர் - FRETILIN ஆயுத குழு 1999 வரை அமெரிக்காவுடன் ஆதரவுடன் போராடி அதன் பின் வாக்களிப்பு மூலம் விடுதலை அடைந்தது. இயக்கம் தோற்கடிக்கப்படவில்லை. மாறாக பல நாடுகளில் ஆதரவு பெருகியது. மக்கள் போராட்டமாக உருவெடுத்தது. 

கொசவோ - அதே கதை. 

தமிழ்நெட் வாசிச்சு அறிவை வளர்த்தா இந்த நிலமை தான். தங்கட இஷ்டத்துக்கு வரலாற்றை மாற்றி தனக்கு தானே அறிவாளி பட்டத்தை சூட்டிக்க வேண்டியது. 30 வருட ஆயுத போராட்டம் சுத்த அரசியல் அறிவிலிகளை உருவாக்குவதில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. 

  • கருத்துக்கள உறவுகள்

கொசவோவிலும் திமோரிலும் ஆயுதப் போராட்டம் மூலம் விடுதலை சாத்தியம் இல்லை என்ற நிலையில் ஆட்சியாளர்கள் முழுக்கட்டுப்பாட்டில் நிலங்கள் இருந்த போதே தலையீடுகள் நிகழ்ந்தன. கொசவோவில் நேட்டோ பிரச்சன்னத்திலும் கிழக்குத்திமோர் மற்றும் தென்சூடானில்.. தேர்தல்கள் ஐ.நா மேற்பார்வையில் வந்தன. எங்கும் ஆயுதக்குழுக்களின் பலம் மற்றும் அவற்றின் தோல்வி சார்ந்தல்ல விடயங்கள் தீர்மானிக்கப்பட்டன.

ஆட்சியாளர்கள் நிகழ்த்திய போர்குற்றங்களும் மனித உரிமை மீறல்களும் ஆக்கிரமிப்புமே ஐ நா தலையீட்டை மக்கள் விருப்பறியும் சூழலை தோற்றுவித்தது.

கொசவோவில் ஆயுதக்குழுக்கள் அரச படைகளிடம் தோற்ற போதே வெளியார் தலையீடு வந்தது.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

எமது போராட்டத்தில் புலிகள் மட்டுமல்ல பலரும் ஆயுதம் ஏந்தி போராடிச்சினம்.புலிகள் இராணுவ ரீதியில் நிலவிடுவிப்பு செய்தார்கள்.

மேற்சொன்ன போராட்டங்களில் நிலவிடுவிப்பு என்பது இருக்கவேயில்லை. ஆனாலும் ஆயுதப் போராட்டங்கள் ஒடுக்கப்படக் கூடிய பலமான சூழலில் தான் பிரச்சனையின் மூலம் முன்னிறுத்தப்பட்டு மக்கள் விருப்பு அறியப்பட்டு பிரிவினை  தீர்வுகள் கொண்டு வரப்பட்டன.

புலிகள் தவிர ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட மிச்சம் பேர் இன்னும் இருக்கினம்..தமிழ் தேசிய அரசியல் நிழலில் குளிர்காயினம்.

அவை புலிகளை கணக்குப் பண்ணுற நேரத்துக்கு தங்களின் ஆயுதப் போராட்ட நோக்கத்தை வேறு வடிவில் மக்களுக்காக நிவர்த்திக்க முனையலாம். புலிகள் தானே எதிரியோடு போரிட்டு.. தோற்றார்கள் (களத்தில் ஆயுத ரீதியில்) மற்றவர்கள் அப்படித் தோற்கல்லைத் தானே..அவர்கள் கூட எவ்வளவோ செய்யலாம்.

புலிகளை சரி பிழை பார்க்கிற நேரத்துக்கும்..எதிரிக்கு வக்காளத்து வாங்கிறதுக்குமா போராடினவை. !!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு திமோர் அமெரிக்க எதிர்ப்புக் கதையை நானும் கவனித்தேன். தீவிர புலி ஆதரவாளர்களிடம் அனேகமாக இருக்கும் குணவியல்பு தான் இது: ஒழுங்காக ஒரு நிபுணரால் எழுதப் பட்ட நூலை ஒரு விடயத்தில் கலந்தாலோசிக்காமல் விக்கிபீடியா, விக்கிபீடியாவில் இருந்து எங்கள் தமிழ் மீடியாக்கள் சுட்டுப் போடும் செய்திகளை வைத்துக் கொண்டு தங்கள் அறிவை வளர்க்க முயல்வார்கள். இப்படி செய்வதால் சில சமயம் புலிகளுக்கு புலிஎதிர்ப்பாளார்கள் தேடிக் கொடுக்கும் குற்றங்களை விட அதிக குற்றங்களை புலி ஆதரவாளர்கள் சுமத்திய நிகழ்வுகளும் யாழில் நடந்திருக்கு: உதாரணம், "கட்டாய ஆட்சேர்ப்பினால் தான் புலிகள் முப்பது வருடமாக படை வளர்த்திருக்க முடியும், வேறெப்படி இவ்வளவு பேர் சேர்ந்தார்கள்?" என்ற தொனிப்பட ஒருவர் யாழில் கேட்டார்!

  • கருத்துக்கள உறவுகள்
On 12/12/2015 at 4:16 PM, காத்து said:

கனடா இன்னும் பெரிய பிரித்தானியாவின் முடிக்குரிய காலணித்துவத்தில் இருந்தே முழுமையாக விடுதலை அடையாத ஒரு நாடு...  வந்தேறு குடிகளான ஆங்கிலேயர்களும் பிரஞ்சு காறரும் அந்த நாட்டை பங்கு போட்டு கொண்டது ஒண்டும் ஆச்சரியமான விடயம் இல்லை...   ஆனாலும் மண்ணின் மைந்தர்களான அமெரிக்க குடிகளுக்கு என்ன ஆச்சு...??  அவர்களின் அதிகாரத்தின் கீழ் எந்த மாகானம் இருக்கிறது...?

மண்ணின் மைந்தர்களை மனித இனம் வாழ முடியாத ( அம்புட்டு குளிர்)  நுனவுட்(nunavut) பக்கம்  ஓட்ட விட்டு கலைத்து விட்டது. இப்போ சிரிய அகதிகளை விமானத்தில் ஏத்தி வின்ரர் யக்கட்களும்(winter jacket) வாங்கி கொடுத்தெல்லோ வீட்டை அனுப்புகிறார்கள். வெள்ளையா கொக்காவா??

மண்ணின் மைந்தர்களை  அழிக்கும் ஒரு நடவடிக்கையில்  அவர்கள் உண்ணும் பவலோக்கலை (bafflo)புகையிரதத்தில் இருந்து கொண்டே சுட்டுக்கொண்டு சென்றவர்களும்  இதே வெள்ளை இனம் தான் என அவர்களது வரலாற்று புத்தகங்களில் சொல்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.