Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பு எம்.பிக்களும் மாவட்ட இணைத் தலைவர்கள் : நியமனம் வழங்கினார் ஜனாதிபதி

Featured Replies

கூட்டமைப்பு எம்.பிக்களும் மாவட்ட இணைத் தலைவர்கள் : நியமனம் வழங்கினார் ஜனாதிபதி
 
கூட்டமைப்பு எம்.பிக்களும் மாவட்ட இணைத் தலைவர்கள் : நியமனம் வழங்கினார் ஜனாதிபதி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வடக்கின் ஒவ்வொரு மாவட்டங்களுக்கு இணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டு ஜனாதிபதியினால் கடிதம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 
 
யாழ். மாவட்டத்துக்கு, மாவை.சேனாதிராஜாவும், கிளிநொச்சி மாவட்டத்துக்கு சி.சிறீதரனும், முல்லைத்தீவு மாவட்டத்துக்கு க.சிவமோகனும், மன்னார் மாவட்டத்துக்கு சாள்ஸ் நிர்மலநாதனும், வவுனியா மாவட்டத்துக்கு செல்வம் அடைக்கலநாதனும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்துக்கு க.சிறீநேசன் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 
 
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களுக்கான இணைத் தலைவர்கள் கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டனர்.
 
மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னித் தேர்தல் தொகுதிக்கு இணைத்தலைவராக அமைச்சர் ரிசாத் பதியுதீன் நியமிக்கப்பட்டிருந்தார். 
 
இதன் பின்னர், யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கிய யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதிக்கு இணைத் தலைவராக இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் நியமிக்கப்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, யாழ்.மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்து, தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராகிய அங்கஜன் இராமநாதனும் யாழ்.மாவட்டத்துக்கான இணைத் தலைவராக நியமிக்கப்படுவதாக ஜனாதிபதியினால் கடிதம் வழங்கப்பட்டிருந்தது. 
 
இவ்வாறானதொரு நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைத்தலைமைப் பதவி வழங்கப்பட்டுள்ளது. இணைத் தலைமைப் பதவி வழங்கப்பட்டதை உறுதிப்படுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராஜா, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களுக்கான இணைத் தலைமைப் பதவி தொடர்பில் ஜனாதிபதியுடன் பேசவுள்ளோம் என்றும் தெரிவித்தார். 
  • தொடங்கியவர்

ததேகூ எம்.பி.க்களும் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவர்களாக நியமனம் கடந்த காலங்களில் மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் இணைத் தலைவர் பதவி ஆளுங்கட்சி மற்றும் அதன் பங்காளிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே வழங்கப்பட்டது

இலங்கையில் முதற் தடவையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் இணைத் தலைவர்களாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

வடக்கு - கிழக்கு மாகாணங்களிலுள்ள 5 மாவட்டங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவர்களாக இம்முறை நியமனம் பெற்றுள்ளனர்.

யாழ் மாவட்டம் - மாவை சேனாதிராஜா

வவுனியா மாவட்டம் - செல்வம் அடைக்கலநாதன்

கிளிநொச்சி மாவட்டம் - எஸ்.சிறீதரன்

மன்னார் மாவட்டம் - சார்ள்ஸ் நிர்மலநாதன்

முல்லைத்தீவு மாவட்டம் - டாக்டர் எஸ். சிவமோகன்

மட்டக்களப்பு மாவட்டம் ஜி.சிறீநேசன்

திருகோணமலை,அம்பாறை மாவட்டங்களிலும் தமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இணைத் தலைமை பதவி வழங்கப்பட வேண்டும் என்ற எதிர்பாரப்பு தம்மிடம் இருப்பதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கூறினார்.

தற்போது வெளிநாட்டில் தங்கியிருக்கும் ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் இது பற்றி பேசப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் இணைத் தலைவர் பதவி ஆளுங்கட்சி மற்றும் அதன் பங்காளிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே வழங்கப்பட்டு வந்தன.

புதிய அரசாங்கத்தினாலும் ஆளுங்கட்சி மற்றும் அதன் பங்காளிக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வடக்கு கிழக்கு பகுதிகளிலும் சில நாட்களிற்கு முன்னர் வழங்கப்பட்ட இந்த இணைத் தலைவர் பதவிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்டிருக்கவில்லை.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்ட ஆட்சேபனை காரணமாகவே எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்தப் பதவிகள் தற்போது வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

http://www.bbc.com/tamil/sri_lanka/2015/12/151215_tna_ddc

37 minutes ago, நவீனன் said:

கடந்த காலங்களில் மாவட்ட அபிவிருத்திக் குழுக்களின் இணைத் தலைவர் பதவி ஆளுங்கட்சி மற்றும் அதன் பங்காளிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே வழங்கப்பட்டு வந்தன.

புதிய அரசாங்கத்தினாலும் ஆளுங்கட்சி மற்றும் அதன் பங்காளிக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வடக்கு கிழக்கு பகுதிகளிலும் சில நாட்களிற்கு முன்னர் வழங்கப்பட்ட இந்த இணைத் தலைவர் பதவிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்கப்பட்டிருக்கவில்லை.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்ட ஆட்சேபனை காரணமாகவே எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்தப் பதவிகள் தற்போது வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இது நல்ல விடயம், நல்ல ஆரம்பம் என்று சொன்னால் - ஆளாளுக்கு பொல்லோட வாறாங்கள். நமக்கேன் வம்பு.

இது ஒரு கெட்ட விடயம், இதை இலங்கை அரசு செய்திருக்கவே கூடாது. என்னைப் போன்ற பயத்தில புலம் பெயர்ந்தவர்களிற்கு இது மனத்தாங்கலைத் (Depression) தரும். தயவு செய்து இப்படி ஏதாவது செய்யாதேங்கோ பிளீஸ். 

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஜீவன் சிவா said:

எப்படி எழுதினாலும்

குத்த தெரிந்திருக்கிறது உங்களுக்கு...

வாழ்த்துக்கள்

தொடருங்கள்...

இந்த பதவி தானே முக்கியம் இல்லை எண்டும் , தீர்வு தான் முக்கியம் எண்டு சம்பந்தர் எங்கையோ சொன்னதாக அர்சுண் சொன்னவர்.. ?

எப்படி எண்டாலும் போகட்டும்...

இப்பதான் அத்திவாரம் போடுகிற ஒரு பொறுப்பு கிடைச்சு இருக்கு.. சிறப்பாக செய்வினம் எண்டு எதிர்ப்பாக்கிறன்...   

4 minutes ago, காத்து said:

இப்பதான் அத்திவாரம் போடுகிற ஒரு பொறுப்பு கிடைச்சு இருக்கு.. சிறப்பாக செய்வினம் எண்டு எதிர்ப்பாக்கிறன்...  

நிச்சயமாக செய்வார்கள். இப்பதான் மக்களுக்கேற்ற, மக்கள் தெரிந்த ஒரு தலைமை கிடைத்திருக்கு - சிலர் விரும்பாவிட்டாலும் நன்மை எமது மக்களுக்கு நிச்சயமாக கிடைக்கும்.

1 minute ago, ஜீவன் சிவா said:

நிச்சயமாக செய்வார்கள். இப்பதான் மக்களுக்கேற்ற, மக்கள் தெரிந்த ஒரு தலைமை கிடைத்திருக்கு - சிலர் விரும்பாவிட்டாலும் நன்மை எமது மக்களுக்கு நிச்சயமாக கிடைக்கும்.

உங்களுக்கு இலவசமாய் ஒரு அறிவுரை சொல்லட்டே...  ?   கேக்கிறது  எண்டால் கேளுங்கோ இல்லாட்டால் விடுங்கோ...

உந்த அரசியல் வாதிகளுக்கு குடுக்கிற ஆதரவோடை நிப்பாட்டுங்கோ...   அவர்களை நம்பி மற்றவர்களுக்கு நம்பிக்கை எல்லாம் குடுக்காதேங்கோ...   நல்லதாக நடந்தால் சந்தோசம்...   அவ்வளவுதான்... 

இலங்கை முஸ்லீம்களிட்டை இருந்து எங்கட ஆக்கள் நிறைய படிக்க கிடக்கு....

21 minutes ago, விசுகு said:

எப்படி எழுதினாலும்

குத்த தெரிந்திருக்கிறது உங்களுக்கு...

வாழ்த்துக்கள்

தொடருங்கள்...

நான் எனது மக்கள் நிம்மதியாக இப்போது வாழ்வதைப் பார்க்கின்றேன். சபேசன் 36 போல (சபேசன் 36 மன்னிக்கவும்) தாயகத்தில் இருந்தாலும் யாழில் உள்ள முரன்பாடுகளிற்காக ஓடி ஒளியமாட்டேன். எனது கருத்தை எனது மக்களிற்காக எந்த ரூபத்திலும் வெளிப்படுத்துவேன்.

அது குத்தலாக உங்களுக்கு தோன்றினாலும் கவலைப்படமாட்டேன்.

2 minutes ago, காத்து said:

இலங்கை முஸ்லீம்களிட்டை இருந்து எங்கட ஆக்கள் நிறைய படிக்க கிடக்கு....

இப்பதான் கொஞ்சம் யதார்த்தம் புரியுது - நன்றி

3 minutes ago, ஜீவன் சிவா said:

இப்பதான் கொஞ்சம் யதார்த்தம் புரியுது - நன்றி

யார் குத்தினாலும் அரிசியானால் சரி எண்று ஊரிலை ஒரு முது மொழி இருக்கு... 

மக்களின் நிலை அது தான்...  

போர் தந்த களைப்பு.. இதில் இருந்து மக்கள் விடுப்படுவது அவசியம்...    ஆனால் இந்த போருக்குள் இந்த மக்களை தங்கள் சுய நலத்துக்காக போக  தூண்டி விட்டதும் இதே அரசியல் வாதிகள் என்பதையும் மறப்பதுக்கு இல்லை... 

டட்லி , பண்டா எண்ரு ஒப்பந்த போட்டு அதை கிளிப்பதை வேடிக்கை பார்த்ததும் , இலங்கை அரசியல் சாசனத்தை எழுதும் போது வெறும் பார்வையாளனாக வேடிக்கை பார்க்க மட்டும் போனதும், இலங்கை கொடியில் தமிழனுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்காமல் கடைசியில்  இந்துக்களுக்கு ஒரு கோடு கொடுத்ததையும் ,  தரப்படுத்தல் ,  நில உச்சவரம்பு , இப்போ மீள் குடியேற்றம் எனும் பெயரின் தமிழர் நிலம் ஆக்கிரமிப்பு எண்று தொடர்வதை  எல்லாம் வேடிக்கை பார்த்து கொண்டு  இருந்த அரசியல் வாதிகளை நீங்கள்  தூக்கி தலையில் வைப்பதை ...  நிச்சயமாக நான் விமர்சிப்பன்.. 

அதை நீங்கள் விரும்பினாலும் இல்லாவிட்டாதும் கூட... 

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ஜீவன் சிவா said:

நான் எனது மக்கள் நிம்மதியாக இப்போது வாழ்வதைப் பார்க்கின்றேன்.

சிறிது சிறிதாக

எமது இனம்

தமது சொந்த பூமியையும்

தனது பண்பாட்டு இடங்களையும்

பொருளாதார சபீட்சங்களையும் 

சீங்களவரிடமும் இசுலாமியர்களிடமும் 

இழந்து வருவதாகவே அங்குள்ள நிலத்தை நேசிப்பவர்கள் சொல்கிறார்கள்.

புலத்தில் வசதியாக வாழும் நான்

வருடத்தில் ஒருமுறை ஊருக்கு சென்று வரும் எனது சுகங்களுக்காக

இந்தநிலையை ஆதரிக்கமுடியாது

எனவே எவர் எந்த குத்து கொண்டு குத்தினாலும்

அவர்களின் நிரந்தர நிம்தியான வாழ்வு சார்ந்து நானும் எழுதுவேன்.

8 minutes ago, விசுகு said:

இங்கு நான் விதண்டாவாதம் பண்ணுவதால் எனக்கு என்ன லாபம். இங்கு காண்பவை, பேசப்படுபவைகள் புலம் பெயர்ந்த சமூகத்திற்கு உண்மையாக கொண்டு செல்லப்படவில்லை என்பதுதான் எனது ஆதங்கம். சில வேளைகளில் ஆதங்கம் ஆத்திரமாக வெளிப்பட்டதுண்டு, சுட்டிக்காட்டும் போது உணரந்து மன்னிப்பும் கேட்டதுண்டு.

நான் கேட்பதேல்லாம் மாயையிலருந்து வெளியே வந்து யதார்த்தத்தை புரிந்து கொள்ளுஙகள் என்பது மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்

வெறும் பதவியால் ஒன்றும் பண்ணமுடியாது. ஏதாவது முடிகிறதாவென்று பார்ப்போம். அதன் பிறகு மெச்சுவோம். பிள்ளையானும் பதவியில இருந்தவர். அவரிட்டை கேளுங்கோ சொல்லுவார் வடிவாய் பதவியைப்பற்றி.

  • கருத்துக்கள உறவுகள்
Quote

மன்னார், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னித் தேர்தல் தொகுதிக்கு இணைத்தலைவராக அமைச்சர் ரிசாத் பதியுதீன் நியமிக்கப்பட்டிருந்தார். 

கிழக்கில் முழுக்க இவையட்ட. வடக்கில் 3 மாவட்டங்கள் பூரணமாக இங்க..! மொத்தத்தில் வடக்குக் கிழக்கும் முஸ்லீம்களிடம்.. தாரைவார்ப்பு. ஏனெனில் சிங்களம் என்ன செய்தாலும் பறுவாயில்லை.. தமிழன் முன்னேறக்கூடாது என்பதில் முஸ்லீம்களை விட வேறு யாரும் அவதானமாக இருக்கமாட்டினம் என்று சிங்களவன் நல்லா நம்புறான். tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, விசுகு said:

சிறிது சிறிதாக

எமது இனம்

தமது சொந்த பூமியையும்

தனது பண்பாட்டு இடங்களையும்

பொருளாதார சபீட்சங்களையும் 

சீங்களவரிடமும் இசுலாமியர்களிடமும் 

இழந்து வருவதாகவே அங்குள்ள நிலத்தை நேசிப்பவர்கள் சொல்கிறார்கள்.

புலத்தில் வசதியாக வாழும் நான்

வருடத்தில் ஒருமுறை ஊருக்கு சென்று வரும் எனது சுகங்களுக்காக

இந்தநிலையை ஆதரிக்கமுடியாது

எனவே எவர் எந்த குத்து கொண்டு குத்தினாலும்

அவர்களின் நிரந்தர நிம்தியான வாழ்வு சார்ந்து நானும் எழுதுவேன்.

இது சம்பந்தமாக எல்லாரும் கொஞ்சம் சிந்தியுங்கோ.தனிய அரசியல் என்டு சன்டை பிடிக்காமல்.இப்படியே போனால் அரசியல் செய்ய அங்கு நிலமோ மக்களோ இருக்க மாட்டார்கள்.:unsure:

முஸ்லீம்களுக்குதங்கள் இனத்தின் மேல்  உள்ள இனப்பற்றுப்போல் தமிழருக்கு தங்கள் இனத்தின் மேல் பற்றுகிடையாது (சிலர் விதி விதிவிலக்கு )புலம்பெயந்தவர்கள் தாயகத்திலுள்ள ஒவ்வொரு குடும்பங்களை  பராமரித்தாலே பல பிரச்சனைகளை தீர்க்கமுடியும் .அரசியல்ரீதியான கருத்து முரண்பாடுகள் இருந்தாலும்,அரசியலுக்கும் அப்பால்  தாயகத்தின் முன்னேற்றத்திற்காக எல்லோரும் இணைந்து பணிபுரிந்தால் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணமுடியும் .

பிரச்சனை என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்துவிட்டு சிங்களவன் நிலத்தை பிடிக்கின்றான் முஸ்லிம் அபகரிக்கின்றான் என்றால் என்ன நியாயம் ,

நாங்கள் புலம் பெயர்ந்தது மாத்திரம் அல்ல தமது உறவுகளையும் முடிந்தவரை வெளியில் இழுத்து எடுத்துவிட்டோம் இப்போதும் இழுத்துக்கொண்டு இருந்துகொண்டு 

உபதேசம் மாத்திரம் அந்த மாதிரி அள்ளி விடுகின்றோம் .

இனியாவது ஓடிவந்தவர்கள் மண் போகுது நிலம் போகுது என்று படம் காட்டாமல் முடிந்தவரை எதையாவது செய்யுங்கள் அல்லது செய்பவர்களை செய்யவிடுங்கள் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
45 minutes ago, arjun said:

பிரச்சனை என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்துவிட்டு..........

இந்த வாக்கியம் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது. இவருக்கு இந்த வசனத்தை விட்டால் வேறெதுவும் தெரியாது. யாழில் எந்தத்திரியாயினும் அந்த வசனத்தை பாவிக்காமல் விட மாட்டார்.tw_glasses:

19 hours ago, ஜீவன் சிவா said:

இது நல்ல விடயம், நல்ல ஆரம்பம் என்று சொன்னால் - ஆளாளுக்கு பொல்லோட வாறாங்கள். நமக்கேன் வம்பு.

இது ஒரு கெட்ட விடயம், இதை இலங்கை அரசு செய்திருக்கவே கூடாது. என்னைப் போன்ற பயத்தில புலம் பெயர்ந்தவர்களிற்கு இது மனத்தாங்கலைத் (Depression) தரும். தயவு செய்து இப்படி ஏதாவது செய்யாதேங்கோ பிளீஸ். 

ஜீவன் நீங்கள் தான் முதல்க் கருத்தை எழுதியது. யார் உங்ககிட்ட பொல்லோட வந்தத்து யார்? எனக்கென்றால் அப்படி யாராவது வரவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது போல் தெரிகிறது. அப்படி யாரும் வராமலே விடுபட்டுப் விடுவார்களோ என்ற கவலையில் அவர்களை வருந்தி அழைப்பது போல் இருக்கிறது உங்கள் முதல் கருத்து. இப்போது உங்களுக்கு சந்தோசம். வந்துவிட்டார்கள் எனவே அவர்களுக்கு எதிர்கருத்து எழுதி பொழுதை போக்கலாம். 

35 minutes ago, குமாரசாமி said:

இந்த வாக்கியம் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது. இவருக்கு இந்த வசனத்தை விட்டால் வேறெதுவும் தெரியாது. யாழில் எந்தத்திரியாயினும் அந்த வசனத்தை பாவிக்காமல் விட மாட்டார்.tw_glasses:

"போராட்டம் என்றவுடன் ஓடி வந்து "  இலங்கை தமிழர்களின் வரலாற்றில் பொன் எழுத்துகளில் பதிக்கபடவேண்டிய வசனம் உண்மையில் அதுதான் .

தமிழர்களின் குணம் அறிந்து சிங்களவன் செய்த மிகப்பெரிய சமார்த்தியமான செயல் அதுதான் .ஓடிப்போய் தொலையுங்கோ என்று விமானநிலையத்தை திறந்துவிட்டான் .அது விளங்காமல் நாம் ஓடிவந்ததில் பெருமை கொண்டு அந்த நிலைமையை உருவாக்கிய புலிகளுக்கு நன்றி செலுத்தினோம் .

இருபது  வருடங்கள் போர் நடக்கும்போது குடிசனபரம்பல் எப்படி மாறும் என்று எவரும் சிந்திக்கவில்லை ஏனெனில் தமிழ் ஈழம் கிடைக்க எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும் என்று நம்பினார்கள் ஆனால் தமிழ் ஈழம் சாத்தியம் இல்லாமால் போனால் நிலை என்னாகும் என்று எவரும் யோசிக்கவில்லை .

அதுதான் இன்றைய இந்த நிலை .போனது போனதுதான் திரும்பிவராது .

கடைசி இனியாவது நாலு விஷயம் தெரிந்தவர்கள் சொல்வதை கேட்க பழகுங்கள் . 

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, arjun said:

கர்ப்பிணி தாய்மாருக்கு கவுன்சலிங் போகலாம் ...
அப்பிடியே மெய் சிலிர்க்குது ...

இதுவரையில் பிறந்த பிள்ளைகள் எல்லாம் இறந்துபோவதால் ....
இனி பிள்ளை பிறக்காதீர்கள் என்று பாடம் எடுக்கலாம்.

வாழ்வு என்பது மனிதன் போராடி பெறுவதுதான்.
ஓய்வுதிய வாழ்விற்கு அர்பணிக்க படுவதுதான் இளமைகாலம்.

விட்டா நேர நேர சாப்பாடு
வேலை வெட்டி இல்லா வாழ்வு
என்று பூசாவிட்கு விளம்பரம் செய்வார்கள் போலிருக்கு.

3 hours ago, Gari said:

முஸ்லீம்களுக்குதங்கள் இனத்தின் மேல்  உள்ள இனப்பற்றுப்போல் தமிழருக்கு தங்கள் இனத்தின் மேல் பற்றுகிடையாது (சிலர் விதி விதிவிலக்கு )புலம்பெயந்தவர்கள் தாயகத்திலுள்ள ஒவ்வொரு குடும்பங்களை  பராமரித்தாலே பல பிரச்சனைகளை தீர்க்கமுடியும் .அரசியல்ரீதியான கருத்து முரண்பாடுகள் இருந்தாலும்,அரசியலுக்கும் அப்பால்  தாயகத்தின் முன்னேற்றத்திற்காக எல்லோரும் இணைந்து பணிபுரிந்தால் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காணமுடியும் .

இன்றைக்கு இப்படி கொட்டுவீங்கள்.....

நாளைக்கு வந்து ..
நாம் உருண்டு  பிரண்ட பூமி எமக்கு சொந்தமில்லை
புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் வேலையை பார்த்தால் போதும் என்பீர்கள்.

வாயாலே வண்டி ஓட்டுறது சுலபம்.
போருக்கு உள்ளாலே இனத்தை கொண்டு சேர்த்தவர்கள் நிலைமை எப்படி இருந்திருக்கும் ?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, arjun said:

பிரச்சனை என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்துவிட்டு சிங்களவன் நிலத்தை பிடிக்கின்றான் முஸ்லிம் அபகரிக்கின்றான் என்றால் என்ன நியாயம் ,

நாங்கள் புலம் பெயர்ந்தது மாத்திரம் அல்ல தமது உறவுகளையும் முடிந்தவரை வெளியில் இழுத்து எடுத்துவிட்டோம் இப்போதும் இழுத்துக்கொண்டு இருந்துகொண்டு 

உபதேசம் மாத்திரம் அந்த மாதிரி அள்ளி விடுகின்றோம் .

இனியாவது ஓடிவந்தவர்கள் மண் போகுது நிலம் போகுது என்று படம் காட்டாமல் முடிந்தவரை எதையாவது செய்யுங்கள் அல்லது செய்பவர்களை செய்யவிடுங்கள் 

உதைத்தான் நானும் சொல்ல வந்தனான்.அவசரத்தில் முழுமையாக எழுதாதது என்  பிழைதான்.ஓடி வந்தது தான் வந்து விட்டோம்.இனியாவது திரும்பிப் போய் நிலத்தை நிரப்புவோம்.முக்கியமாக வெளி நாட்டு வாழ்வின் அவஸ்தைகளை சொல்லி மக்களை அங்கு வாழ ஊக்குவிக்க வேணும்.இங்கிருந்து போய் இல்லாத பொல்லாதது எல்லாம் சொல்லி பிலிம் காட்டுவதால் பலர் இருக்கிற வீடு வழவையும் வித்துப்போட்டு எப்படா வெளி நாடு போகலாம் என்டு அலைகிறான்.இது ஒரு பொிய பிரச்சனை அதையும் ஒருக்கா அலசலாம் தானே என்ட நப்பாசைதான்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனுக்கும், முஸ்லீம்களுக்கும், தமிழர்கள் இங்கு திரும்பிவர மாட்டர்கள் என நன்கு தெரியும். தமிழர்கள் வெளிநாடுகளில் கொத்து ரொட்டி சாப்பிடுவதிலேயே பிஸியாக இருப்பார்கள் எனவும் தெரியும்.

இதனால்தான் அப்பாவி தமிழர்களின் காணிகளை இலகுவாக அபகரிக்க கூடியதாகவுள்ளது

12 minutes ago, colomban said:

சிங்களவனுக்கும், முஸ்லீம்களுக்கும், தமிழர்கள் இங்கு திரும்பிவர மாட்டர்கள் என நன்கு தெரியும். தமிழர்கள் வெளிநாடுகளில் கொத்து ரொட்டி சாப்பிடுவதிலேயே பிஸியாக இருப்பார்கள் எனவும் தெரியும்.

இதனால்தான் அப்பாவி தமிழர்களின் காணிகளை இலகுவாக அபகரிக்க கூடியதாகவுள்ளது

அப்படியா நாங்க பிற்சா, பிக்மக்,ஹம்பூர்கர் தான் சாப்பிடுவோம். கொத்து ரொட்டி இவங்க  ஏசியன் தமிழன்களின்ற சாப்பாடு. அதை  மனுசன் சாப்பிடுவானா.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.