Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மக்களின் முன்னால் இன்னொரு 'மண்குதிரை'

Featured Replies

ப. தெய்வீகன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மீது அதிருப்தி கொண்ட குழுவினர் வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் 'தமிழ் மக்கள் பேரவை' என்ற புதிய அமைப்பை தொடங்கியுள்ளனர்.

இந்த அமைப்பானது ஓர் அரசியல் கட்சி அல்ல என்றும் எந்தக் கட்சிக்கும் மாற்றீடானதோ போட்டியானதோ அல்ல என்று அறிவிக்கப்பட்டுள்ளபோதும் அந்த அமைப்பில் கலந்துகொண்டவர்களின் முன்னுக்கு பின் முரணான பேட்டிகளும் அவர்கள் கடந்த காலங்களில் வலியுறுத்திவந்த விடயங்களின் பின்னணிகளும் பேரவையின் எதிர்காலமும் நோக்கமும் எந்தத் திசையை நோக்கியவை என்பதை தெளிவாகவே வெளிக்காட்டி நிற்கின்றன.

இந்த முன்னணியின் உருவாக்கம் எனப்படுவது தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தவரை பல்வேறு வழிகளிலும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று என்பதைத்தான் இந்தப் பத்தி வலியுறுத்தவுள்ளது. அதற்கான தர்க்க பூர்வமான விடயங்களும் இங்கு முன்வைக்கப்படவுள்ளது.

தமிழ்த் தேசிய அரசியல் பரப்பினைப் பொறுத்தவரை, போர் முடிந்த காலம் முதல் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுவருகின்ற அரசியல் முன்னணி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகும். ஆனால், கடந்த ஆறு வருடங்களில் அந்த முன்னணி பயணம் செய்யும் பாதை, அதில் முடிவெடுக்கும் தரப்புக்கள் கடைப்பிடித்த அரசியல் செல்நெறி போன்றவை குறித்து பலத்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த விமர்சனங்களின் நீட்சியாக, கடந்த நாடாளுமன்றத் தேர்தலுடன் முதலமைச்சர் விக்னேஸ்வரனை முன்னிறுத்தி கூட்டமைப்புக்கு எதிரான அதிருப்தியாளர் குழு ஒன்று போர்க்கொடி தூக்கி கட்சியைப் பிளவுபடுத்துவதற்கு பகீரத பிரயத்தனம் செய்தது. இதற்காக கூட்டமைப்பின் உள்ளேயும் வெளியேயும் ஆட்களைச் சேகரித்து 'பெரும் புரட்சியை' ஏற்படுத்துவதற்கு முன்னேற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருந்தமை யாவரும் அறிந்ததே ஆகும். இந்தக் காலப்பகுதியில், முதலமைச்சர் விக்னேஸ்வரன் எவ்வளவு சிறுமைத்தனமாக நடந்துகொண்டார் என்பதையும் எவ்வளவுதூரம் நிர்வாக ரீதியாக பலமற்ற மனிதராக தன்னை விளம்பரப்படுத்திக்கொண்டார் என்பதையும் எல்லோரும் அறிவர்.

அரசியலில் அங்கம் வகிப்பவர்கள் அனைவரும் ஒரே கருத்தை கொண்டிருப்பவர்கள் அல்லர். ஒரே கட்சியில் அங்கம் வகிப்பவர்கள் என்பதற்காக கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை மனப்பாடம் செய்து பஜனை செய்துகொண்டிருக்க முடியாது. முரண்பாடுகள் நிச்சயமாக இருக்கும். இருக்கவேண்டும். அவற்றை கட்சி மட்டத்தில் வெளிப்படையாக தர்க்கிப்பதைத்தான்; மேலைநாடுகளில் ஜனநாயக பண்புகள் என்ற வகையறாவுக்குள் அடக்குவர்.

இது விடயத்தில் பரந்த அறிவும் விளக்கமும் உடைய முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களோ கடந்த நாடாளுமன்ற தேர்தல் ஆரம்பமாவதற்கு முன் ஆரம்பித்து, தொடர்ச்சியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கண்ணாமூச்சி அரசியல் செய்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தார். கட்சியின் தலைமைக்கு ஒளிந்திருந்து கல் எறிவதிலும் மாற்று அணியினருடன் மர்ம உறவுகளை பேணுவதிலும் தீவிரமாக காணப்பட்டார். கூட்டமைப்புடன் தனக்கிருந்த முரண்பாடுகளை வெளிப்படையாகப் பேசுவதற்கோ கட்சி மட்டத்தில் பேசி முடிவெடுப்பதற்கான திராணியோ அவருக்கு இருக்கவில்லை. தான் இயங்குவதற்கான துணிவை வளர்த்துக்கொள்வதிலும் பார்க்க தன்னை இயக்குபவர்களுக்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என்பதிலேயே அவர் அயராது தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

அவரை இயக்குபவர்களுக்கும் மக்கள் பிரச்சினைகள் மீதான கரிசனையைவிட கூட்டமைப்பின் தலைமைத்துவம் மீதான காழ்ப்புணர்ச்சியும் தமது பதவிகள் பறிபோன அங்கலாய்ப்பும்தான் அதிகம் இருந்தன.

உதாரணமாக, தமிழ்த் தேசியப் பேரவையின் முக்கிய தூண்களில் ஒன்றாக இன்று முண்டுகொடுத்துக்கொண்டிருக்கும் சுரேஷ் பிரேமச்சந்திரனை எடுத்துக்கொள்வோம். அவருக்குத் தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைக் கூட்டமைப்பு வழங்கவேண்டும் என்று அவரது கட்சியினர் எத்தனை சுற்றுப் பேச்சு நடத்தினார்கள் என்றும் திருகோணமலை சென்று எப்படியெல்லாம் சம்பந்தர் வீட்டு கதவைத் தட்டினார்கள் என்றும் தேர்தல் முடிந்த கையோடு இடம்பெற்ற களேபரத்தை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும். அன்று அவர் அந்தப் பதவியைப் பெற்றுக்கொண்டிருந்தால், இன்று இந்தப் பேரவை சிற்றவையாகத்தான் இருந்திருக்கும்.

விக்னேஸ்வரன் குழுவினரை இயக்கும் இன்னொரு தரப்பினரைப் பார்த்தால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி. கஜேந்திரகுமார் தலைமையிலான இந்த அரசியல் கட்சி நடந்துமுடிந்த தேர்தலில் மக்களால் - தெளிவாக - நிராகரிக்கப்பட்ட ஒன்றாகும்.

இந்தக் கட்சியை நோக்கியல்ல கூட்டமைப்பின் அரசியல் போக்கு மீது அறச்சீற்றம் கொண்டு புதிய புரட்சிகர முன்னணியாக உருவெடுத்துள்ள இந்த புதிய பேரவையில் தஞ்சம் புகுந்திருக்கும் அனைவரையும் கேட்கவேண்டிய ஒரே கேள்வி யாதெனில், கடந்த நாடாளுமன்ற தேர்தல் முடிந்து இவ்வளவு காலத்தில் இவர்கள் அனைவரும் செய்துகொண்ட அரசியல் செயற்பாடுகள் என்ன?

கூட்டமைப்பின் தலைமை மீதான சேறடிப்பை எவ்வளவுக்கு தீவிரமாக செய்ய முடியுமோ அதைச் செவ்வனே செய்தார்கள். செய்கிறார்கள். அதேவேளை, விக்னேஸ்வரன் தலைமையிலான ஒரு பேரவை உருவாகவேண்டும் என்பதற்காக முரசொலித்துக்கொண்டார்கள். அவ்வளவே.

மக்களுக்காகச் சேவை செய்யவேண்டும். மக்களுக்குத் தீர்வு பெற்றுக்கொடுப்பதற்காக அரசியலில் இணையவேண்டும் என்று அரிதாரம் பூசிக்கொண்ட இந்த மீட்பர்கள், மக்களை அநாதைகளை அந்தரிக்கவிட்டுவிட்டு தங்களுக்குள் போட்டி அரசியல் செய்வதிலும் ஆளுக்காள் கொம்பு சீவிக்கொண்டிருப்பதிலிருந்தும் இவர்களது அரசியல் சீத்துவக்கேடுகள் அம்பலமாகிவிட்டன.

இந்த பின்னணியில்தான், பல நாட்கள் எதிர்பார்த்த முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையிலான புதிய அரசியல் முன்னணி உதயமாகியிருக்கிறது. மக்கள் தரப்பிலிருந்து இது உண்மையிலேயே வரவேற்கப்படவேண்டிய முயற்சியாகும்.

தமிழ்த் தேசியப் பரப்பில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்டிருந்த அரசியல் வீக்கம் தற்போது காயமாகியிருக்கிறது. மக்களைப் பொறுத்தவரை வீக்கத்துக்கு மருத்துவம் செய்வதிலும் காயத்துக்கு மருத்துவம் செய்வது சுலபம்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் காலத்தின்போதுகூட முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் இரண்டு தோணிகளில் கால்வைத்தவாறு தனது அரசியல் நிலைப்பாட்டை அரைகுறையாக அறிவித்திருந்தார். மக்களுடன் இதய சுத்தியுடன் பேசுவதற்கான அரசியல் துணிவு அவருக்கு இருக்கவில்லை. இப்போதும்கூட அவரது தனிப்பட்ட நிலை அதுவாகத்தான் இருக்கிறது. ஊடகங்களுடனோ அல்லது அவரது சொந்தக் கருத்துக்களையோ வெளிப்படையாகப் பேசுவதற்கு தயாராகிறார் இல்லை.

ஆனால், அவர் சேர்ந்திருக்கும் கூட்டத்தினர் முதலமைச்சர் எங்கு நிற்கிறார் என்பதை உத்தியோகபூர்வமாக மக்களுக்கு எடுத்துக்கூறியுள்ளனர். இம்முறை மக்களுக்கு தெளிவான புரிதல்நிலை ஏற்பட்டிருக்கும். இந்தப் பேரவையின் உருவாக்கம் சரியானதா பிழையானதா என்பதற்கு அப்பால் இதற்கு அங்கிகாரம் கொடுப்பதா இல்லையா என்பதை அவர்கள் நிச்சயம் தீர்மானிப்பர்.

தற்போது, மக்களால் நிராகரிக்கப்பட்ட பிரதிநிதிகளைத் தனது வண்டியில் ஏற்றிக்கொண்டு மக்கள் முன்பாக போய் நிற்பதற்கு தலைப்பட்டுள்ள - கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு மக்கள் ஆதரவை வென்ற - முதலமைச்சர், மக்கள் தீர்வு தொடர்பில் என்ன பேசப்போகிறார் என்பதை மக்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

தனக்குக் கிடைத்த வட மாகாணசபை முதலமைச்சர் பதவியின் ஊடாக ஒரு மாகாணசபையின் நிர்வாகத்தையே ஒழுங்கமைக்க முடியாத முதலமைச்சர் அவர்கள், தமிழ்த் தேசிய அரசியற் பரப்பில் கூட்டமைப்புக்கு எதிரான ஒரு நிழல்மந்திரி சபையை எவ்வாறு செயற்படுத்தப்போகிறார் என்பதைக் காண மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

நான்கு மாதங்களுக்கு முன்னர்தான் தமது பிரதிநிதிகள் யார் என்று ஜனநாயக முறையில் தெரிவு செய்துவிட்டிருக்க, தற்போது புதிய அமைப்பொன்றின் ஊடாக தம்மால் நிராகரிக்கப்பட்டவர்கள், புதிய அரிதாரம் பூசிக்கொண்டு தம்மிடம் அங்கிகாரம் கேட்க விளைந்திருப்பதையும் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

 

http://www.tamilmirror.lk/162108

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

மக்களால் நிராகரிக்கப்பட்டவருக்கு உயர்பதவி கொடுத்து மக்களை அதிகாரம்செய்ய வைத்திருக்கும் அரச அதிபருக்கு எதிராக எதுவும் செய்யமுடியாதவர்கள், இளகிய இரும்பைக்கண்ட கொல்லனைப்போல் முதல்வரை சாடுவதில் எந்தக்குறையுமில்லை. :(  

ஒருவர் மக்களின் சார்பாக பிரதிநிதியாக வந்தவுடன் மக்களிடம் இருந்து அவரை பிரித்து தனிமைப்படுத்திவிடுகின்றார்கள். அதேபோல் தலைவன் மக்களிடம் இருந்து பிரிந்துவிடுகின்றான். பிரிவு என்பது இங்கே இடைவெளியை குறிக்கின்றது. மக்களின் முன்னால் முந்தநாள் பல இயக்கங்கள் நேற்று நாடுகடந்த அரசு மற்றும் விக்கினேஸ்வரன் இன்று பேரவை நாளை இன்னுமொன்று வரும். இந்த இலங்கைத் தமிழ்ச் சமுதாயத்தில் ஒரு தலமை என்பது ஒப்புகானது மாறாக உண்மையான தலமைச் சக்தியானது வேறு ஒரு வடிவத்தில் அது ஒருவிதமான புறணிபாடி குழப்பியடிக்கும் வடிவத்தில் பல்வேறுவிதமான மாயங்களுடன் மக்களிடமே உள்ளது. அந்த சக்திக்கு எல்லாத்தலமைகளும் இறுதியில் பலியாகவேண்டும். எல்லா அமைப்பும் அது கடந்த காலங்களில் அசுர பலத்துடன் இருந்தாலும் சரி இனிவரும் காலங்களில் என்ன பலத்துடன் இருந்தாலும் சரி அவை இந்த சக்தியால் மண்குதிரையாக்கப்படும் தவிர அதை உயிருள்ள பலமுள்ள குதிரையாக ஆக்கப்படாமாட்டாது. நரிகளை பரிகளாக்கி புலியை பூனையாக்கி பழக்கப்பட்டவர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் பேரவை மண்குதிரையா அல்லது வெற்றிக்குதிரையா என்பது அது கொண்ட இலட்சியம் சார்ந்து உறுதியோடு மக்கள் மனங்களை வெல்லும் செயலோடு.. ஒற்றுமையோடு.. தம்மை இன்னும் இன்னும் ஒற்றுமையால் பலப்படுத்துவதோடு உள்ள ஒன்று.

விமர்சனம் என்ற போர்வையில்... நல்ல கருத்துருவாக்கங்களை.. கருக்கலைப்புச் செய்வது.. எதிரியையே பலப்படுத்தும். எதிரிக்கு இலகுவாக சோரம் போகக் கூடியவர்களை நம்பி மக்கள் காத்திருப்பு அரசியல் செய்வதையே தூண்டும். மக்களுக்கு அதனால் கால நீட்சிகளும்.. கவலைகளும் தான் கூடுமே தவிர விடிவு வராது..! :rolleyes:

14 minutes ago, nedukkalapoovan said:

தமிழ் மக்கள் பேரவை மண்குதிரையா அல்லது வெற்றிக்குதிரையா என்பது அது கொண்ட இலட்சியம் சார்ந்து உறுதியோடு மக்கள் மனங்களை வெல்லும் செயலோடு.. ஒற்றுமையோடு.. தம்மை இன்னும் இன்னும் ஒற்றுமையால் பலப்படுத்துவதோடு உள்ள ஒன்று.

விமர்சனம் என்ற போர்வையில்... நல்ல கருத்துருவாக்கங்களை.. கருக்கலைப்புச் செய்வது.. எதிரியையே பலப்படுத்தும். எதிரிக்கு இலகுவாக சோரம் போகக் கூடியவர்களை நம்பி மக்கள் காத்திருப்பு அரசியல் செய்வதையே தூண்டும். மக்களுக்கு அதனால் கால நீட்சிகளும்.. கவலைகளும் தான் கூடுமே தவிர விடிவு வராது..! :rolleyes:

மண் குதிரையும் இல்லை, இரும்புக் குதிரையும் இல்லை, பொய் கால் கிதிரையும் இல்லை இப்ப சிலருக்கு வயித்தை கலக்குது அது தான் இப்படி எல்லாம் தெரியுது.

சைக்கிளை உடைத்தால் அது கதி முடிந்து போகும் என எதிர்பார்த்தால், அது இப்ப 4-5 மோட்டார் சைக்கிளாக வந்து நிக்குது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Dash said:

மண் குதிரையும் இல்லை, இரும்புக் குதிரையும் இல்லை, பொய் கால் கிதிரையும் இல்லை இப்ப சிலருக்கு வயித்தை கலக்குது அது தான் இப்படி எல்லாம் தெரியுது.

சைக்கிளை உடைத்தால் அது கதி முடிந்து போகும் என எதிர்பார்த்தால், அது இப்ப 4-5 மோட்டார் சைக்கிளாக வந்து நிக்குது.

சைக்கிளும் தமிழரும்  பிரிக்கப்படமுடியாதவை

வீடில்லாத தமிழருண்டு

சைக்கிளில்லாதவருண்டா?

என்ன தமிழர் சைக்கிளை கணக்கே எடுப்பதில்லை

ஆனால் அவர்களுக்கு அது வேண்டும்...

Edited by விசுகு

மண்குதிர் பற்றி மக்களுக்கு நன்றாகத் தெரியும். விக்னேஸ்வரன் கரையேற வேண்டும்.
 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Iraivan said:

மண்குதிர் பற்றி மக்களுக்கு நன்றாகத் தெரியும். விக்னேஸ்வரன் கரையேற வேண்டும்.
 

விக்கினேசுவரன் மக்களையும் கரையேற்றி தானும் கரையேறிவிடுவார். நம்பிக்கை உள்ளது. ஆனால் கருநாய் ஒன்று அவர்பின்னே செல்ல வாலாட்டிக் குலைக்கின்றது. அதனை அவர் தடவிக்கொடுக்க முனைந்தால், அது எந்தநேரத்தில் அவர் காலைக் கவ்வி குதிருக்குள் புதைத்துவிடுமோ என்ற அச்சமும் உள்ளது.:shocked: 

மிகவும் சாதுரியமான தலைவர்கள் நிரந்தர வருமானம் அரச இயந்திரத்துடன் வேலைசெய்பவர்கள் இணைதலைவர்கள் முன்னால் தேசியம் பேசியதலைவர்கள் தமிழ்மக்களின் உதவியுடன் வருமானமற்ற தூய சிந்தனையாளர்கள்.இவர்கள் நோக்கம் கதிரை கதிரை.மண்குதிரை

சம்பந்தன் என்கின்ற செக்கு இழுக்கின்ற மாட்டினை நம்புவதிலும் பார்க்க இப்படியான புது முயற்சிகளை தான் தமிழர்கள் செய்வது நல்லது.... 

  • கருத்துக்கள உறவுகள்

வலம்புரி பத்திரிகை ஆசிரியரும் முன்னாள் வேலையில்லாத பட்டதாரிகளின் சங்கத் தலைவருமாகிய விஜயசுந்தரம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதையைச் சொல்லிக் கூட்டத்திற்கு வரவழைத்திருக்கின்றார் என்று செய்தி ஒன்று படித்தேன். ஆரம்பமே அசத்தலாக இருக்கு!

மண்குதிர் வெள்ளம் ஆற்றில் வரும்போது மறைவதும், வெள்ளம் வற்றும் போது வெளித் தோன்றுவதும் இயல்பானது. விக்கிக்கு இது தெரியவில்லைப்போல். தமிழர்கள் அரசியல் என்பது வெறும் குடாநாட்டை அதுவும் யாழ் நகரைச் சுற்றியது மட்டுமல்ல. அது பரந்தது. பெரவைத் தோற்றம் ஒரு செய்தியாகத்தான் ஏனைய இடங்களில் பார்க்கப்படும். தேர்தல் மட்டுமே இதற்கு முடிவு சொல்லும்.

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வர் கதிரைக்கு பாரமாக இருந்து காலத்தைக் கடத்தாமல், மக்களுக்கு ஏதாவது செய்யலாம் என்று முயற்சிக்கிறார். கூட்டமைப்பு மக்கள் தேவையை விட்டு ஊர் வம்பு  பேசிக்கொண்டு தனிவழியில் போய்க்கொண்டிருக்குது, வேறு வழியிலாவது முயற்சி பண்ணலாமே என்று நினைக்கிறார் போல. சேர்ந்தவர்கள் சேர்ந்து உழைப்பார்களா அல்லது அவரை பயன்படுத்தி தங்கள் லாபம் பார்ப்பார்களா, பொறுத்திருந்து பாப்போம். அதுக்குள்ளே சிலது குத்தி முறியுது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.