Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருணா, டக்ளஸின் ஒத்துழைப்புக் கிடைத்தால் நல்லது: விக்னேஸ்வரன்

Featured Replies

தமிழ் மக்கள் அவைக்குள் அங்கத்துவம் பெற்றிருப்பவர்கள் எவரும் பின்கதவு வழியாக வந்தவர்கள் இல்லை. எல்லோரும் முன்கதவால் வந்தவர்களே என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பதிலடி கொடுத்துள்ளார்.

இன்றைய தினம் தமிழ் மக்கள் அவை 2ம் அமர்வின் நிறைவில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்,

தமிழ் மக்கள் அவைக்குள் மக்களால் அங்கீகரிக்கப்படாதவர்கள், அங்கீகரிக்கப்படாத கொள்கைகளுடன் நுழைந்து அவற்றை மீண்டும் முன்கொண்டுவர முயற்சிக்கிறார்கள் என கூறிய கருத்து தொடர்பாக ஊடகவியலாளர்கள் முதலமைச்சரும், மக்கள் அவை இணை தலைவருமான சீ.வி.விக்னேஸ்வரனிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடாபில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,

மக்கள் அவைக்குள் எவரும் பின் கதவு வழியாக நுழைந்திருக்கவில்லை. எல்லோரும் முன்கதவு வழியாகவே வந்திருக்கின்றார்கள்.

தமிழ் மக்கள் அவைக்கு ஒரு கொள்கை இருக்கின்றது. அந்த கொள்கைக்கு சுமந்திரன் உடன்பட்டால் அவரும் எமது அவையில் இடம்பெறாலம் என முதலமைச்சர் பதில் கூறியுள்ளார்.

இதேவேளை, தமிழ் மக்கள் அவையில் முன்னாள் அமைச்சர்கள் கருணா மற்றும் டக்ளஸ் தேவானந்தா இணைக்கப்படுவது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பதிலளித்துள்ளார்.

எமக்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியமானது. என்பதை நாங்கள் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வருகின்றோம்.

இந்நிலையில் எங்களுடைய கருத்துக்களுக்கு வித்தியாசமான கருத்துக்களை கொண்டிருக்கின்றார்கள் என்பதற்காக அவ்வாறான கருத்துக்களை கொண்டிருப்பவர்களை எதிரிகளாக பார்க்க முடியாதே?

எனவே நாங்கள் எங்களுடைய பணியை தொடர்ந்தும் செய்வோம். அவர்களுடைய ஒத்துழைப்பு கிடைத்தால் நல்லது. ஆனால் தமிழ் மக்கள் அவைக்கு ஒரு கொள்கை இருக்கின்றது. அந்த கொள்கை விடயத்தில் நாங்கள் சற்றும் நெகிழ்வு தன்மையை காட்டப்போவதில்லை என்றார்.

எதற்காக தமிழ் மக்கள் அவையில் அங்கம் பெற்றேன்: விக்கி விளக்கம்

தமிழ் மக்களுடைய நலன்களை பூர்த்தி செய்யும் வகையில், தமிழ் மக்களுடைய விருப்புக்களை நிறைவு செய்யும் வகையில் தமிழ் மக்கள் அவையின் செயற்றிட்டங்கள் மற்றும் கொள்கை அமைய பெற்றிருப்பதை உணர்ந்து  கொண்டதனாலேயே மக்கள் அவையில் அங்கம் பெற்றேன்.

இவ்வாறு வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் தமிழ் மக்கள் அவை 2ம் அமர்வு நடைபெற்றிருந்தது.

இதன் நிறைவில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போது முதலமைச்சர் தமிழ் மக்கள் அவையில் எதற்காக அங்கத்துவம் பெற்றார்?என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும்போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார்.

குறித்த விடயம் தொடர்பில் முதலமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,

வடமாகாணசபையில் எங்கள hல் முன்வைக்கப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டவிடயங்களை தமிழ் மக்களுடைய நலன்சார்ந்த விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்கான எண்ணப்பாடுகள் காணப்பட்டமையினால் மக்கள் அவையில் நான் பங்கெடுத்துள்ளேன்.

இந்த மக்கள் அவை தொடர்பாக அதன் ஒழுங்கமைப்பாளர்கள் என்னோடு பேசியபோது அவர்களிடம் தெளிவான நிலைப்பாடுகளை கண்டிருந்தேன்.

அதனால் இந்த அவையில் ங்கத்துவம் பெறவேண்டும் என்ற நிலைப்பாட்டை நான் எடுத்திருந்தேன்.

அந் தவகையிலேயே இந்த அவையில் பங்கெடுக்கும் தீர்மானத்தை எடுத்தேன். பங்கெடுத்திருக்கிறேன் என முதலமைச்சர் கூறினார்.

 

http://www.tamilwin.com/show-RUmtzCRbSWkv3B.html

பாவம் விக்கியர் ,விரைவில் பிரேமானந்தாவின் ஆச்சிரம் தான் அடைக்கலம் 

  • கருத்துக்கள உறவுகள்

உவருக்கு இறுக்கோ, இறுக்கு என்று  இறுக்கி, பப்பாவில ஏத்தி விட்டுக் கிடக்கு. 

முதலில, தமிழர் அரசியல் எண்டால் ஒரே ஒரு கட்சி தான், அந்த நாள் முதல் எண்டதை விளங்கினார் எண்டால் நல்லது. 

முன்னம் MP யாய் இருந்த, பிரேமேச்ந்திரனுக்கும் கஜேந்திர குமாருக்கும், கஜேந்திரனுக்கும் இல்லாத செல்வாக்கு தனக்கு மட்டும் இருக்கும் எண்டு எப்படி நினைக்கிறார் ?

Today 3:56 PM"Everything we hear is an opinion, not a fact. Everything we see is a perspective, not the truth".-Don't swallow everything you hear - arjun :grin:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இதில விக்கி ஐயா பேசுறது சிலருக்கு விளங்கல்ல.. அல்லது விளங்க விரும்பல்லைப் போல.

தமிழ் மக்கள் பேரவை மாற்று அரசியலுக்கான கட்சி அல்ல. மக்களின் கருத்தை உள்வாங்கி மக்கள் தேவை.. நலனை.. மக்களின் விருப்பை.. அதன் விம்பத்தை இனங்காட்டும் ஒரு அமைப்பு.. அவ்வளவும் தான். இதனை செயற்படுத்த..அதற்கு ஒரு கொள்கை இருக்குது. அந்தக் கொள்கையோடு இணங்கக் கூடிய எவரும்..அதில் வந்து இணையலாம். கொள்கைக்கு அப்பால் அவர்களோ எவருமோ செயற்பட முடியாது.

டக்கிளஸும் சொல்லுறார் தமிழ் மக்களுக்காக உழைக்கிறன் என்று.. முரளிதரனும் சொல்லுறார் அதைத்தான். ஏன் பிள்ளையானும் தான். ஏன் ஏன் சங்கரியும் தான்.

எல்லாரும் மக்களை வைச்சு தான் அடாவடி அரசியல் முதல் சர்வ நாச அரசியல்.. சோர அரசியல் வரை முன்னெடுக்கினம். இவைக்கு உண்மையான மக்கள் அக்கறை இருக்கா இல்லையா என்ற கேள்விக்கு அப்பால்.. தசாப்தங்களாக இவர்கள் ஒரு மக்களுக்காக உழைக்கிறம் என்ற போர்வைக்குள் பதுங்கி இருந்து இன நாசத்தையே செய்து முடித்திருக்கிறார்கள்.

இவர்களுக்கு இப்ப ஒரு சவால்.  சம் சும் கும்பலுக்கும் அதே சவால் தான். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் பதுங்கி இருந்து கொண்டு ஹிந்தியாவுக்கு அமெரிக்காவுக்கும் அரசியல் செய்வதல்ல.. தமிழ் மக்களின் பிரதிநிதிகளின் கடமை. தமிழ் மக்களுக்கு அவர்களின் வாக்குகளுக்கு என்னத்தைப் பண்ணித் தொலைத்தீர்கள் என்றால்... முள்ளிவாய்க்கால் பேரவலத்தை கண்மூடிப் பார்த்து மகிழ்ந்தது முதல்.. இன்று அரசியல் கைதிகள் விடுதலையில்.. உள்ள வைப்பதில் உள்ள நியாயம் பேசுவது வரை இவர்கள் தான்.

இவர்களை நம்பி.. சிறீலங்காச் சிங்களம்... கடந்த 30 வருட ஆயுதப் போராட்டத்தின் விளைவை கருத்தில் கொண்டு சிங்கள பெளத்த பெருந்தேசியத்தை இலங்கைத் தீவில் ஸ்திரப்படுத்த முன்னெடுக்கும் நடவடிக்கைகளை தமிழ் மக்கள் காத்திரமாகச் சந்தித்து இலங்கைத் தீவில் தம்மை.. தமது நில இருப்பை.. தமது கலை பண்பாட்டு.. விழுமிய இருப்பை.. வள இருப்பை.. தக்க வைப்பது என்பது சுலபம் அல்ல. சோரம் போதல் அரசியலுக்கு தயாராகிவிட்ட சம் சும் மாவை கும்பலை நம்பி..  தமிழ் மக்கள் மீண்டும் முள்ளிவாய்க்காலில் ஆயுதப் போராட்ட தோல்வியை சந்ததித்தது போல் இப்போது சர்வ நாசத் தோல்வியை சந்திக்க நேர்வதை விடுப்புப் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.

அந்த வகையில்... எந்த மக்களை நோக்கி சிங்களம் நாசகார காரியங்களை நாசூக்காக நகர்த்துகிறதோ.. அதை எதிர்கொள்ள அந்த மக்களிடம் இருந்து ஒரு அமைப்பு உருவாவது தவறு அல்ல. அது ஒரு தற்காப்பு என்று தான் சொல்ல வேண்டும். பல வேடதாரிகளின் வேடம் கலைக்கவும் அந்த அமைப்புக்கு அவசியம் இருக்குது. அந்த வகையில் விக்கி ஐயாவின் இந்த அழைப்புக்கள்.. மக்களுக்காக உழைக்கிறம் பேர்வழிகளின் உண்மைக் கோலத்தை மீண்டும் ஒரு முறை மக்கள் இனங்காண வகை செய்யும். அதே நேரம் சிங்கள பெளத்த பெருந்தேசியம் தான் நினைப்பது போல்.. சம் சும் கும்பலை தன் கைக்குள் வைச்சுக் கொண்டு தமிழர்கள் மீது தான் திணிக்க விரும்புவதை தன்னைப் பலப்படுத்த விரும்பும் அரசியல் யாப்பை திணிப்பதை சாதாரணமாகப் பார்த்துக் கொண்டிருந்தால்.. முள்ளிவாய்க்கால்.. 40,000 பேரை பலியெடுத்தது போக.. இது ஒட்டுமொத்த தமிழர்களையும் இலங்கைத் தீவில் இருந்து தமிழர்கள் என்ற அடையாள இழப்புக்கு இட்டுச் செல்லும்.. என்பது தான்.. யதார்த்தம்.

இந்த பலமுனை ஆபத்தில் இருந்து தமிழ் மக்களைப் பாதுக்காக்க பல முனை நகர்வுகள் அவசியம். அதில் ஒன்றாக தமிழ் மக்கள் பேரவை அமையின் அது வரவேற்கப்பட வேண்டியது கட்டாயம் ஆகும். tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

டக்கியின் ஆதரவு கிடைத்தால் அடுத்தமுறை டக்கியோட சேர்த்து இன்னொருவரும் பாராளுமன்றம் போகலாம் என கணக்குப் போடுகினம் போல கிடக்கு.:cool:tw_blush:  டக்கிளஸ் அங்கிளும், கருணாம்மானும் சேர்ந்தால் நல்ல கூட்டுத்தான் டணக்குனக்கா பாட்டுத்தான். <_<

ஐயோ பாவம்..இவர் அநியாயத்திற்கு நல்லவரா இருக்கிறாரே....விக்கி முதலில் அரசியல் பாடம் எடுக்க வேண்டும் போல இருக்கு. விட்டால்  மகிந்தவையும் ஒத்துழைக்க சொல்லுவார் போல கிடக்கு. அதற்கும் இங்கு சிலர் பந்தி பந்தியா வியாக்கியாணம் எழுத கூடும். 

என்ன அரசியல் சாணக்யம். அமிர்தலிங்கம் காலத்தில் விக்கியர் அரசியலில் இருந்திருந்தால் ஈழம் கிடைத்திருக்கும். அடுத்த முறை கூட்டமைப்பு சார்பாகப் போட்டியிட்டால்தான் முதலமைச்சர். இவரை நம்பி கருணாவும் டக்ளசும் போவார்களா?

  • கருத்துக்கள உறவுகள்
On 28/12/2015 at 3:30 AM, Iraivan said:

என்ன அரசியல் சாணக்யம். அமிர்தலிங்கம் காலத்தில் விக்கியர் அரசியலில் இருந்திருந்தால் ஈழம் கிடைத்திருக்கும். அடுத்த முறை கூட்டமைப்பு சார்பாகப் போட்டியிட்டால்தான் முதலமைச்சர். இவரை நம்பி கருணாவும் டக்ளசும் போவார்களா?

புதிய அரசியல் அமைப்பில், மாகாண சபைகள் அனைத்துமே இல்லாமல் போகும். பிறகு இவர் என்னத்தை போட்டி போடுவது....

  • கருத்துக்கள உறவுகள்

சாதாரணமாக ஒரு கேள்வி

 

எல்லோரும் ஒன்றாக இருக்கணும் என்றால்...

யார் யார்??

இதை நிர்ணயம் செய்பவர் யார்?

எப்படி??

இதற்குள் வராதவர்கள்

அல்லது வரக்கூடாதவர்களுக்கு என்ன பெயர்??

யாராவது உலகம் தெரிந்தவர்கள் பதில் தந்தால் தெளிவாக பேச வசதியாக இருக்கும்..

22 minutes ago, விசுகு said:

எல்லோரும் ஒன்றாக இருக்கணும் என்றால்...

முக்கியமாக தமிழ் பேசும் இஸ்லாமிய சகோதரர்களுடன் ஒரு புரிந்துணர்வுக்கு வாங்கப்பா (இது பேரவைக்கு மட்டுமில்லை கூட்டமைப்பிற்கும்தான்). இது காலத்தின் கட்டாயம் மட்டுமில்லை மிகவும் அவசியமானதும் அவசரமானதும் கூட.

  • தொடங்கியவர்
4 minutes ago, ஜீவன் சிவா said:

முக்கியமாக தமிழ் பேசும் இஸ்லாமிய சகோதரர்களுடன் ஒரு புரிந்துணர்வுக்கு வாங்கப்பா (இது பேரவைக்கு மட்டுமில்லை கூட்டமைப்பிற்கும்தான்). இது காலத்தின் கட்டாயம் மட்டுமில்லை மிகவும் அவசியமானதும் அவசரமானதும் கூட.

த.தே.கூ., மு.கா ஒருமித்த கருத்துகளை முன்வைக்க தீர்மானம்
 
 

-அஸ்லம் மௌலானா

புதிய அரசியலமைப்பு சீர்திருத்தத்தில் சிறுபான்மைச் சமூகங்களின் உரிமைகள் மற்றும் நலன்களை உறுதிப்படுத்தும் வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் ஒருமித்த கருத்துகளை முன்வைப்பதற்கு இன்றைய சந்திபில் இணக்கம் காணப்பட்டதுடன், இது தொடர்பில் சில விடயங்கள் ஆராயப்பட்டதாகவும்  அச்சந்திப்பில் கலந்துகொண்ட ஒருவர் தெரிவித்தார்.

மேலும், இது  தொடர்பில் தொடர்ந்தும் சந்தித்து விரிவாகக் கலந்துரையாடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையிலான சந்திப்பு,  எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது.

மேலும், கல்முனை உட்பட கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் நிலவி வருகின்ற தமிழ், முஸ்லிம் முரண்பாடுகளை சுமூகமாக தீர்க்கும் பொருட்டு உள்ளூர்மட்டத் தலைமைகள் மத்தியில் பேச்சுகளை முன்னெடுப்பதற்கும் இச்சந்திப்பில் இணக்கம் காணப்பட்டதாகவும் அவர் கூறினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும்  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் அதன் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், பிரதிச் செயலாளர் நாயகம் எம்.நிஸாம் காரியப்பர், சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளர் ஏ.எம்.பாயிஸ் ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.  

 

- See more at: http://www.tamilmirror.lk/162716/%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%AE-%E0%AE%95-%E0%AE%92%E0%AE%B0-%E0%AE%AE-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%AE-%E0%AE%A9-%E0%AE%B5-%E0%AE%95-%E0%AE%95-%E0%AE%A4-%E0%AE%B0-%E0%AE%AE-%E0%AE%A9%E0%AE%AE-#sthash.rlBUwswc.dpuf

3 minutes ago, Sooravali said:

த.தே.கூ., மு.கா ஒருமித்த கருத்துகளை முன்வைக்க தீர்மானம்

இணைப்பிற்கு நன்றி சூறாவளி.

எதிர்காலம் சற்று பிரகாசமாகவே தெரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம் நல்ல பிரகாசமா இருக்கு!tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஜீவன் சிவா said:

இணைப்பிற்கு நன்றி சூறாவளி.

எதிர்காலம் சற்று பிரகாசமாகவே தெரிகின்றது.

ம் ம் எமது இஸ்லாமிய சகோதரர்களுக்கு இன்னொரு சந்தர்ப்பம் கொடுக்கலாம் எண்டுறியளோ ஜீவன் ???

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, Eppothum Thamizhan said:

ம் ம் எமது இஸ்லாமிய சகோதரர்களுக்கு இன்னொரு சந்தர்ப்பம் கொடுக்கலாம் எண்டுறியளோ ஜீவன் ???

எல்லோரும் எங்கேயோ நின்று விட்டு தற்பொழுது எழுந்து வந்திருக்கிறார்கள் என்பது மட்டும் புரியுது...

மீண்டும் மீண்டும் மீண்டும்

தமிழினம் ஏமாறப்போகிறது....

ஏமாற்றப்படப்போகிறது...

முப்பதுவருடமாக எதிர்பார்த்து ரொம்ப ஏமாந்து போனார்கள் போலிருக்கு .

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, arjun said:

முப்பதுவருடமாக எதிர்பார்த்து ரொம்ப ஏமாந்து போனார்கள் போலிருக்கு .

நீங்க இந்த 30 வருடத்தை தாண்டவே போறதில்லை...

வைத்திய உதவி ஏதாவது பெறுங்கள்...

உங்களுக்கு என்ன அந்த முப்பதை வைத்து எதையோ பார்த்துவிட்டீர்கள் போலிருக்கு ,

அந்த முப்பது வருடத்தில் நடந்த இழப்புகள் மறந்து கடந்து போக கூடியவையா என்ன ?

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, arjun said:

உங்களுக்கு என்ன அந்த முப்பதை வைத்து எதையோ பார்த்துவிட்டீர்கள் போலிருக்கு ,

அந்த முப்பது வருடத்தில் நடந்த இழப்புகள் மறந்து கடந்து போக கூடியவையா என்ன ?

பாவம்

உங்களுக்கு  பிறர் சோற்றை வாங்கி சாப்பிட்டு பழகிவிட்டது

இப்படித்தான் சிந்தனை போகும்...

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் கொஞ்சம் பொறுங்கோ எல்லாரும்.அதுக்குப்பின் இங்கை கருத்து எழுதி மோத வேண்டி வராது ஒருத்தருக்கும்.

9 minutes ago, சுவைப்பிரியன் said:

இன்னும் கொஞ்சம் பொறுங்கோ எல்லாரும்.அதுக்குப்பின் இங்கை கருத்து எழுதி மோத வேண்டி வராது ஒருத்தருக்கும்.

அதற்கு ஒன்றில் தமிழீழம் கிடைக்கணும் அல்லது யாழ்.கொம்மை குளோஸ் பண்ணனும். தமிழீழம் கிடையாது. இப்பதான் நிழலிக்கு யாழ்.கொம் எப்படி 2016இல் இருக்க வேண்டும் என்ற கேள்விக்குப் பதிலளித்தேன். அதனால் யாழ்.கொம்மும் இருக்கும்.

அப்ப எப்படித்தான் இந்த சண்டை நிக்கும்.

ஆனந்தசங்கரி எப்ப கடிதம் எழுதுவார் விக்கியருக்கு  அல்லது  ஏன் சங்கரியரையும் சேர்க்க மறந்து போனார் விக்கியர்:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, arjun said:

முப்பதுவருடமாக எதிர்பார்த்து ரொம்ப ஏமாந்து போனார்கள் போலிருக்கு .

வந்திட்டார் வாந்தியெடுக்க. 30 வருடமல்ல 300 வருடமானாலும் இப்படி ஜென்மங்கள் இருக்கும்வரை தமிழ் மக்களுக்கு எந்த நல்ல முடிவும் கிடைக்கப்போவதில்லை.

முஸ்லீம்களால் எமக்கு இவ்வளவு காலத்தில் என்ன நன்மை ஏற்பட்டிருக்கிறது என்பதைகூட கிரகித்து அறியமுடியாத  **** ( மிகுதியை வாசகர்களின் எண்ணத்திற்கே விட்டு விடுகிறேன்)

1 hour ago, arjun said:

உங்களுக்கு என்ன அந்த முப்பதை வைத்து எதையோ பார்த்துவிட்டீர்கள் போலிருக்கு ,

அந்த முப்பது வருடத்தில் நடந்த இழப்புகள் மறந்து கடந்து போக கூடியவையா என்ன ?

 

கடந்து போக ஏலாமல்தான் நாளும் பொழுதும் போத்தலோட பொழுது போகிறது போல.

 

இழப்புகள்  இல்லாமல் .வாழ்க்கையுமில்லை, வெற்றியுமில்லை. . முள்ளி வாய்க்காலில் எமது இனத்திற்கு  ஏற்பட்ட அழிவை மையமாக வைத்தே அமரிக்காவும் மேற்கும் காய் நகர்த்துகிறது.. அதற்கு ஏற்றவாறுதான் மைத்திரி அரசும் ஆடுகிறது. சம்சும் எல்லாம் தொட்டுக்க சட்னி மாதிரித்தான்

1 hour ago, விசுகு said:

பாவம்

உங்களுக்கு  பிறர் சோற்றை வாங்கி சாப்பிட்டு பழகிவிட்டது

இப்படித்தான் சிந்தனை போகும்...

விடுங்கோ விசுகு சிலதுகள் சோற்றிலை உப்பு போட்டு சாப்பிடிறதில்லை போல  கிடக்கு..சூடுமில்லை  சுனையுமில்லை..

1 hour ago, நவீனன் said:

ஆனந்தசங்கரி எப்ப கடிதம் எழுதுவார் விக்கியருக்கு  அல்லது  ஏன் சங்கரியரையும் சேர்க்க மறந்து போனார் விக்கியர்:rolleyes:

சங்கரியற்ற அன்புத்தொல்லை தாங்க முடியாமல்தானாக்கும்!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.