Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விரைவில் விக்கியுடன் பேசி பேரவையில் இணைவேன்!- கருணா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
விரைவில் விக்கியுடன் பேசி பேரவையில் இணைவேன்!- கருணா
[ ஞாயிற்றுக்கிழமை, 03 சனவரி 2016, 02:05.11 AM GMT ]
karuna0001.jpg
தமிழ் மக்கள் பேரவையின் நோக்கங்கள் சிறந்ததாக இருப்பதனால், வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமான சீ.வி.விக்னேஸ்வரனை விரைவில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி அப்பேரவையில் உத்தியோகபூர்வமாக இணைந்து செயற்படவுள்ளேன் என கருணா தெரிவித்துள்ளார்.

புதிதாகத் தோற்றுவிக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் பேரவை தொடர்பில் கேட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

யுத்தத்தின் பின்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை முறையாக கையாள்வதற்கு சகல தமிழ் மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பு கடந்த மாதம் உருவாக்கப்பட்டது.

யுத்தத்தின் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்குரிய தலைமைததுவத்தை வழங்கத் தவறிவிட்டது. தற்போது அக்கட்சி உறுதியற்ற நிலையில் தனது நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது. அக்கட்சிக்குள் ஒருமித்த கருத்தை காணமுடியாதுள்ளது.

மேலும் போர்க்குற்ற விசாரணை தொடர்பில் உள்நாட்டில் ஒரு கருத்தையும் வெளிநாடுகளில் மற்றுமொரு கருத்தையும் வெளிக்காட்டியது.

அத்துடன் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக இருந்து அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப செயற்படுவதனால் எதிர்காலத்தில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுக்க முடியாத நிலை ஏற்படும்.

எனவே தமிழ் மக்களின் பிரச்சினைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு முறையாகக் கையாளத் தவறியமையினாலேயே தமிழ் மக்கள் பேரவை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இவ்வமைப்பு ஒட்டுமொத்த தமிழ் மக்களின் குரலாக திகழும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சிலர் விமர்சிப்பது போல இப்பேரவையினால் தமிழ் மக்களுக்கு பாதகத்தன்மை ஏதும் இல்லை. மாறாக மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான உபாயமாகவே இதனை நோக்கவேண்டியுள்ளது.

குறித்த அமைப்பில் அங்கம் வகிப்பவர்களில் ஏராளமானோர் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் என்றும் சிலர் விமர்சிக்கின்றனர். எனினும் தேர்தல்களில் தோல்வியடைந்தவர்கள் இனிவரும் தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

அதுமாத்திரமல்லாமல் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பலரும் விரைவில் தமிழ் மக்கள் பேரவையில் இணைந்து கொள்ளவுள்ளனர் என்றார்.

http://www.tamilwin.com/show-RUmuyBTXSWjr0F.html

  • கருத்துக்கள உறவுகள்

கட்டாயம் கருணாம்மான் விக்கி குறூப்பில் இணைந்து தனது பங்களிப்பினையும் வழங்கவேண்டும்.

நீங்கள் இணைந்தால் சுரேஷ் பிரேமா சந்திரனுக்கு உதவியாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

கருணா சேரலாம் சும்மா எடுபிடியாக!!!!அரசியல் தீர்வு சம்பந்மான சட்ட ஆலோசனை அது இது என்று கனவு காணக் கூடாது.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, வாலி said:

கட்டாயம் கருணாம்மான் விக்கி குறூப்பில் இணைந்து தனது பங்களிப்பினையும் வழங்கவேண்டும்.

இதை சொல்லுபவர் யாருடனும் இணைந்ததில்லை:cool:

வட மாகாணத்தை ஒழுங்காக நிர்வகிக்க தெரியாத விக்கி தற்போது கிழக்கையும் கெடுக்க முடிவெடுத்து விட்டார் ,கிழக்கு மக்கள் துரோகிகளில் மிகவும் கேடு கேட்டவர்களான பிள்ளையான் ,கருணா போன்றவர்களை அரசியலில் இருந்து ஒதுக்கி வைத்ததை விக்கியின் அழைப்பினால்  இவர்களை புத்துயிர் பெறவைக்க முடியாது .இவர்கள் வட -கிழக்கு இணைப்பிற்கு எதிரானவர்கள் அதனால் தான் பிள்ளையான் வலிந்து சம்பந்தன் ஐயாவை சந்திக்க துடித்தபோது சம்பந்தன் ஐயா சந்திக்க மறுத்தவர் .

கிழக்கு மக்களுக்கு நன்மை செய்யாவிட்டாலும் பறவாய் இல்லை தீமை செய்யாதிருங்கள் .

புலிகளில் இருந்த விபரமானவர்களில் கருணாவும் ஒருவர் .

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, arjun said:

புலிகளில் இருந்த விபரமானவர்களில் கருணாவும் ஒருவர் .

அது தான் விபரமான அமைப்பில் சேருகிறாரோ?

சுத்தம். நாளை மகிந்தவும் வந்து இணையலாம் போல இருக்கு. 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Gari said:

வட மாகாணத்தை ஒழுங்காக நிர்வகிக்க தெரியாத விக்கி தற்போது கிழக்கையும் கெடுக்க முடிவெடுத்து விட்டார் ,கிழக்கு மக்கள் துரோகிகளில் மிகவும் கேடு கேட்டவர்களான பிள்ளையான் ,கருணா போன்றவர்களை அரசியலில் இருந்து ஒதுக்கி வைத்ததை விக்கியின் அழைப்பினால்  இவர்களை புத்துயிர் பெறவைக்க முடியாது .இவர்கள் வட -கிழக்கு இணைப்பிற்கு எதிரானவர்கள் அதனால் தான் பிள்ளையான் வலிந்து சம்பந்தன் ஐயாவை சந்திக்க துடித்தபோது சம்பந்தன் ஐயா சந்திக்க மறுத்தவர் .

கிழக்கு மக்களுக்கு நன்மை செய்யாவிட்டாலும் பறவாய் இல்லை தீமை செய்யாதிருங்கள் .

கிழக்கு மாகாணத்தை நீங்கள் நிர்வகிக்கிற திறம்தான் நல்லா தெரியுதே. முஸ்லிம்களுக்கு நல்லா செம்பு தூக்கிக்கொண்டு. இதில வடக்கைப்பற்றி கதைக்க வந்திட்டார். போங்கடா நீங்களும் உங்கடை

2 hours ago, தெனாலி said:

சுத்தம். நாளை மகிந்தவும் வந்து இணையலாம் போல இருக்கு. 

தமிழ் மக்கள் பேரவை எண்டுதானே இருக்கு. இதைக்கூட வாசித்து விளங்கமுடியாத அளவிற்குத்தான் உங்கள் பொது அறிவு இருக்கு. ம் ம் இதுகளெல்லாம் கருத்தெழுதி நாங்கள் வாசிக்கவேண்டிய நிலைமை. கடவுளே!!!

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்து சிறையிலடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் கிழக்கு முதல்வர் பிள்ளையானையும் தனது குறூப்பில் சேர்த்துகொள்ள விக்கி முனைவார் என எதிர்பார்க்கின்றேன். விக்கியை விட  முன்னாள் குழந்தைப் போராளியான பிள்ளையான் நல்ல வினைத்திறனுடன் கிழக்கு மாகாணத்தை நிர்வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 hour ago, Eppothum Thamizhan said:

தமிழ் மக்கள் பேரவை எண்டுதானே இருக்கு. இதைக்கூட வாசித்து விளங்கமுடியாத அளவிற்குத்தான் உங்கள் பொது அறிவு இருக்கு. ம் ம் இதுகளெல்லாம் கருத்தெழுதி நாங்கள் வாசிக்கவேண்டிய நிலைமை. கடவுளே!!!

ஓ இப்ப கருணாவும் மறதமிழரோ? எனக்கு தெரியாமல் போய் விட்டது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, Gari said:

வட மாகாணத்தை ஒழுங்காக நிர்வகிக்க தெரியாத விக்கி தற்போது கிழக்கையும் கெடுக்க முடிவெடுத்து விட்டார் ,கிழக்கு மக்கள் துரோகிகளில் மிகவும் கேடு கேட்டவர்களான பிள்ளையான் ,கருணா போன்றவர்களை அரசியலில் இருந்து ஒதுக்கி வைத்ததை விக்கியின் அழைப்பினால்  இவர்களை புத்துயிர் பெறவைக்க முடியாது .இவர்கள் வட -கிழக்கு இணைப்பிற்கு எதிரானவர்கள் அதனால் தான் பிள்ளையான் வலிந்து சம்பந்தன் ஐயாவை சந்திக்க துடித்தபோது சம்பந்தன் ஐயா சந்திக்க மறுத்தவர் .

கிழக்கு மக்களுக்கு நன்மை செய்யாவிட்டாலும் பறவாய் இல்லை தீமை செய்யாதிருங்கள் .

எப்ப தொடக்கம் கூத்தமைப்பு கொம்பனிக்கு கருணாவும் பிள்ளையானும் துரோகியானார்கள்??????

  • கருத்துக்கள உறவுகள்

போறபோக்கில யார் வேண்டுமானாலும் யாருடனும் இணையலாம் என்றமாதிரி இருக்கிறது இவர்களின் போக்கு ..... எல்லோருக்கும் இருக்கவேண்டியவர் இருந்திருந்தால் தெரிந்திருக்கும்.

2 hours ago, வாலி said:

அடுத்து சிறையிலடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் கிழக்கு முதல்வர் பிள்ளையானையும் தனது குறூப்பில் சேர்த்துகொள்ள விக்கி முனைவார் என எதிர்பார்க்கின்றேன். விக்கியை விட  முன்னாள் குழந்தைப் போராளியான பிள்ளையான் நல்ல வினைத்திறனுடன் கிழக்கு மாகாணத்தை நிர்வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனால்  தான் என்னவோ  கூத்தமைப்பு  கிழக்கு மாகாணத்தை முஸ்லிமிடம் தாரைவார்த்தது ? பெரும்பான்மை பலம் இருத்தும் !!! 

கருணா இணைக்கப்படமாட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Dash said:

அதனால்  தான் என்னவோ  கூத்தமைப்பு  கிழக்கு மாகாணத்தை முஸ்லிமிடம் தாரைவார்த்தது ? பெரும்பான்மை பலம் இருத்தும் !!! 

கூட்டமைப்பு ஒரு பயங்கரவாத கட்சியல்ல. இனச்சுத்திகரிப்பையோ அல்லது இனவாதத்தையோ ஆதரிக்கும் கட்சியல்ல. முஸ்லிம்களுடன் இணைந்து சென்றுதான் கிழக்கு மாகாண தமிழர்களின் உரிமைகளை வெல்லவேண்டிய கட்டாயம் இருக்கின்றது. கிழக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் தமிழ் முஸ்லிம் உறவில் ஏற்பட்டிருந்த விரிசல்களை சீரமைத்து முஸ்லிம் மக்கள் மத்தியில் நம்பிகையை ஏற்படுத்த கூட்டமைப்பு முனைந்திருக்கின்றது!

1 hour ago, வாலி said:

அதே போல்  வடக்கிலும் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள், அப்படியானால் அடுத்த மாகான சபை தேர்தலின் பின்னர்  அரசியல் சாணக்கியரான தமிழர்கள்  வடக்கின் ஆட்சிப் பொறுப்பையும் முஸ்லிம்களிடம் கொடுக்க வேண்டும் !

அதே போல் அடுத்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் சுமந்திரன் அவர்கள் தான் அடுத்த ஜனாதிபதி , அவர் தோற்றாலும் சொங்க்கள்வன் நல்லிணக்கத்துக்காக அவரை நியமிப்பான்?
 
2 hours ago, Dash said:

அதனால்  தான் என்னவோ  கூத்தமைப்பு  கிழக்கு மாகாணத்தை முஸ்லிமிடம் தாரைவார்த்தது ? பெரும்பான்மை பலம் இருத்தும் !!! 

எப்படி பெரும்பான்மை இருந்து ,எவ்வாறு தாரை வார்த்தார்கள் என்று புள்ளி விபரங்களுடன் சொல்லுவீர்களா ?

3 hours ago, குமாரசாமி said:

எப்ப தொடக்கம் கூத்தமைப்பு கொம்பனிக்கு கருணாவும் பிள்ளையானும் துரோகியானார்கள்??????

ஏன் குமாரசாமியார் ,கூட்டமைப்புக்கு மாத்திரம் தான் துரோகியாகனுமா ?நாங்கள் இந்த இயக்கங்கள் ,கட்சிகள் ,தனிநபர்களை விட பிறந்த மண்ணைத்தான் நேசிக்கின்றனாங்கள் .

கிழக்கு மாகாண சபையில் தமிழர்கள் ஆட்சியை இழப்பதற்கு கருணாவும் ,பிள்ளையானும் தேர்தல் காலங்களில் செய்த அட்டகாசங்களும் காரணம் .

உங்களுக்கென்ன நாலு கூட்டமைப்புக்காரர்கள் இரண்டு மைத்திரி கட்சியை சார்ந்தவங்கள் ,ஒரு ரணில் கட்சியை சார்ந்தவங்க்களை வெல்ல வைத்தால் எல்லாப்பக்கத்தாலும் பெற்றுக்கொள்ளலாம் ,பிழைக்கத்தெரிந்தவர்கள் .:unsure:

On 1/3/2016 at 5:48 PM, Dash said:

அதனால்  தான் என்னவோ  கூத்தமைப்பு  கிழக்கு மாகாணத்தை முஸ்லிமிடம் தாரைவார்த்தது ? பெரும்பான்மை பலம் இருத்தும் !!! 

எப்படி பெரும்பான்மை இருந்து ,எவ்வாறு தாரை வார்த்தார்கள் என்று புள்ளி விபரங்களுடன் சொல்லுவீர்களா ?

  • 1 month later...
On 1/3/2016 at 2:45 PM, Eppothum Thamizhan said:

கிழக்கு மாகாணத்தை நீங்கள் நிர்வகிக்கிற திறம்தான் நல்லா தெரியுதே. முஸ்லிம்களுக்கு நல்லா செம்பு தூக்கிக்கொண்டு. இதில வடக்கைப்பற்றி கதைக்க வந்திட்டார். போங்கடா நீங்களும் உங்கடை

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கு கிடைத்த வளங்கள் வட மாகாணத்துடன் ஒப்பிடும்போது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் ,அப்படியிருந்தும் கிடைத்த சந்தர்ப்பங்களை நாங்கள் சரியாகத்தான் பயன்படுத்துகின்றோம் .உதாரணமாக சம்பூரில் மீள்குடியேறிய மக்களுக்கு எந்தெந்த அமைசுகளில் செலவழிக்கப்படாமல் நிதியிருக்கின்றதோ அவற்றையெல்லாம் பயன்படுத்துகின்றார்கள் இதுவரை 17 மில்லியன் ரூபா பெறுமதியான உதவிகள் அமைச்சர் திரு .சி .தண்டாயுதபாணி யின் முயற்சியால் வழங்கப்பட்டுள்ளது .

வலிகாமத்தில் விடுவிக்கப்பட்ட நிலங்களில் குடியேறிய மக்களுக்கு வட மாகாணசபை இதுவரை என்னசெய் துள்ளது ?சுன்னாகம் குடிநீர் பிரச்சனையில் விக்கி தலைமையில் உள்ள மாகாண சபை நடந்து கொண்டவிடயம் நீதிமன்றம் சென்று நாறுகின்றது இதற்கிடையில் எங்களைப்பற்றி கதைக்க வந்திட்டார் ?நிதி காணாது இன்று கத்திக்கொண்டு வந்த நிதியையே செலவழிக்காமல் திருப்பி அனுப்பும் வட மாகாண சபையை என்னவென்னு சொல்வது ?

யாழ்ப்பாணத்தில் 99%தமிழர்கள் இருந்தும் சிங்கள இனவாத கட்சிகளான UNP ,SLFP போன்றவற்றிட்கு வாக்களித்தது மட்டுமில்லாம ,பாராளுமன்ற உறுப்பினர்களையும் அனுப்புகின்ற வகையில் பெருவாரியாக வாக்களிக்கிண்றீர்கள் ,சிங்கள இனவாதிகளுக்கு நல்லா கழுவி ஊத்திக்கொண்டு இதில் கிழக்கைப்பற்றி கதைக்க வெட்கமாக இல்லை .அம்மணமாக ஓடுகின்றவர்களுக்கு வெட்கம் கிடையாதுதானே ?

  • கருத்துக்கள உறவுகள்

கருணா தன்னுடைய கருத்தைச் சொல்லியிருக்கிறார். இதற்கு ஏன் வடமாகாணத்தையும், விக்கியரையும் கழுவி ஊத்துகிறீர்கள். இங்கு  சிலபேருக்கு விக்கியர் எண்டால்  பேதியாய் கிடக்குது. இதுக்குள்ள  பிரதேசவாதம் வேற. கருணா எந்த பிரதேசம்? 

  • 2 months later...
On 2/29/2016 at 3:30 AM, satan said:

கருணா தன்னுடைய கருத்தைச் சொல்லியிருக்கிறார். இதற்கு ஏன் வடமாகாணத்தையும், விக்கியரையும் கழுவி ஊத்துகிறீர்கள். இங்கு  சிலபேருக்கு விக்கியர் எண்டால்  பேதியாய் கிடக்குது. இதுக்குள்ள  பிரதேசவாதம் வேற. கருணா எந்த பிரதேசம்? 

கிழக்கு மக்கள் நிராகரித்த கருணாவை ஏன் விக்கி மீண்டும் அழைக்க வேண்டும் ,அதே நேரத்தில் யாழ் இணையத்தில் சிலர் கிழக்கை கேவலமாக விமர்சிக்கலாமா ?நான் அதற்கு பதில் தந்தால் இப்படியான குற்றச்சாட்டுகள் தான் சுமத்துவீங்கள் ,இதைப்பற்றி நான் கவலைப்படவோ மற்றவர்களுக்காக என் செயற்பாடுகளை மாற்றப்போவதுமில்லை . 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Gari said:

கிழக்கு மக்கள் நிராகரித்த கருணாவை ஏன் விக்கி மீண்டும் அழைக்க வேண்டும் ,அதே நேரத்தில் யாழ் இணையத்தில் சிலர் கிழக்கை கேவலமாக விமர்சிக்கலாமா ?நான் அதற்கு பதில் தந்தால் இப்படியான குற்றச்சாட்டுகள் தான் சுமத்துவீங்கள் ,இதைப்பற்றி நான் கவலைப்படவோ மற்றவர்களுக்காக என் செயற்பாடுகளை மாற்றப்போவதுமில்லை . 

வவுனியா மக்கள் நிராகரித்த சித்தரை ஏன் சம் மீண்டும் அழைத்தார்?

வடமாகாண சபையின் தவறுகளுக்கு காரணம் தமிழரசுக்கட்சியினரது செயற்பாடே,முக்கியமாக சிவஞானம். 

9 minutes ago, MEERA said:

வவுனியா மக்கள் நிராகரித்த சித்தரை ஏன் சம் மீண்டும் அழைத்தார்?

வடமாகாண சபையின் தவறுகளுக்கு காரணம் தமிழரசுக்கட்சியினரது செயற்பாடே,முக்கியமாக சிவஞானம். 

கருணாவை மட்டக்களப்பு மக்கள் என்றைக்கும் ஏற்றுக்கொள்ளவில்லையே ,வடமாகாண சபைக்கு விக்கியர் தான் முதலமைச்சர் ,இவருக்கு ஆளுமையில்லையா ?

சித்தர் TNA தோன்றிய பொது சேர்த்துக்கொள்ளப்பட இருந்தவர் சில காரணங்களுக்காக விலகியவர் ,அனால் வட பகுதி மக்கள் அவரை ஏற்றுள்ளார்களே ,மக்களுடைய தவறா அல்லது ?????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.