Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை ஏற்றாமல் புலிகளின் கொடியையா ஏற்றுவது? : ரணில் கேள்வி!

Featured Replies

1 hour ago, Sasi_varnam said:

அர்ஜுன் அண்ணா,

ஆனால் பாருங்கோ நாங்கள் புலிகளின்ட பிழை பிடிச்சு புளிச்சுப்போன வாதங்களை மட்டுமே தொடர்ந்தும் வைப்போம்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

கீழே உள்ள கருத்து பொதுவாக இணைக்கப்பட்ட செய்திக்கு எழுதப்பட்டது.

இவ்வளவு அழிவுக்கும் பிறகும்  தமிழர்கள் உன் தேசிய கீதத்தையாவது நான் பாடிவிட்டு போகிறேன் என்று கேட்கும் நிலையில் கூட சிங்கள அரசியல்வாதிகள் சல்லி காசுக்கும் தமிழனை மதித்ததாக தெரியவில்லை.

அட சிங்கத்துக்கு பிறந்த அசிங்கக் கூட்டமே....உன் இத்துப் போன வேசியகீத பாட்டை  படிக்கவே நீ பாராளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேணும், விளக்கக் கூட்டம் வைக்கணும்னா நீ யாரு..நான் யாரு...  உன்னோட சேர்ந்து நமக்கென்ன டுபாகூர் அரசியல் ....

மிகத்தெளிவான கருத்து. 


இது விளங்காமல் கொஞ்சம் கொஞ்சமாக தமிழீழம் பெறப்போயினமாம். 

 

சிங்களவன் தெளிவாய்தான் இருக்கிறான். மகிந்தவின் ஆதரவாளர்கள் நேரடியாகவே கூறுகின்றார்கள் "மகிந்த களவெடுத்தது தங்களுக்கு தெரியும் என்றும், அரசியலில் களவு சகஜம் என்றும், மகிந்தவே தேசத்தின் அரசனென்றும்" ஆனால் எங்கட தமிழர் கூட்டம் நமக்காக போராடியவர்களை எள்ளிநகையாடிக்கொண்டு புதுப்புது அரசியல் கதைவேறை விடுகினம்.  

ஒருபுறம் இருக்க ஜீவன் அண்ணாக்கு எல்லைப்பாதுக்காப்பு ஒரு பெரிய பிரச்சனையாய் போட்டுது.....சாய் தலைவர் இருக்கேக்க சொல்லியிருந்திருந்தால் அந்தாள் பெடியளை சாகவிடாமல் தோட்டம் தன்னும் செய்விச்சு இலங்கையின் பொருளாதாரத்தை உயர்த்திவிட்டிருப்பார். இடைவெளி ஒண்டு கிடைச்சா சும்மா சும்மாவெல்லாம் கதைப்பது. 

அண்ணை பஞ்சியை பாராமல் நிலத்தை வெட்டி ஒரு நீர்நிலையை போட்டுவிட்டால் எல்லையும் வந்திடும், குளிர்மையாகவும் இருக்கும். அப்புகாமியின்ட ஆக்கள் குளிக்கிறதுக்கு வரேக்க ரம்புட்டான் கொண்டுவருவினம் நாங்கள் நல்ல மாம்பழம் கொண்டுபோய் குடுத்து இதையத்தோடோ இல்லை வேண்டியமாதிரி ஒன்றிக்கலாம்.

கி கி.....நாங்களும் சும்மா எழுதுவமெல்லே

Edited by Surveyor

  • Replies 55
  • Views 3.2k
  • Created
  • Last Reply

அர்ஜுன் அண்ணா,

ஆனால் பாருங்கோ நாங்கள் புலிகளின்ட பிழை பிடிச்சு புளிச்சுப்போன வாதங்களை மட்டுமே தொடர்ந்தும் வைப்போம்.-சசி 

ஊரில வயசு போன கிழவிகளுக்கு வேலை ஊரார் விட்டு வம்புகள் உழவாரங்கள் எல்லாம் இல்லாது பொல்லாததுகளும் சேர்த்து வாய்வலிக்க பேசுவது ஆனால் சொந்த வீட்டிற்குள் ஆயிரம் கிலிசு கேடுகள் இருக்கும் அதை பற்றி வாயே திறக்கமாட்டார்கள் .அதை சொன்னால் அவர்களுக்கு இல்லாத பொல்லாத கோவம் வந்து திட்டி தீர்த்துவிடுவார்கள் .

எங்களில் பலரும் அவர்களின் வழி தோன்றல்கள் தானே .

 

நான் எழுதாவிட்டாலும் சொல்லாவிட்டாலும் சர்வதேசத்திற்கு அனைத்தும் தெரியும் சசி .

  • கருத்துக்கள உறவுகள்

"போராளிகள் இறப்பதில்லை"  என்று பொதுவாகவே ஒரு கருத்து உலகளாவிய ரீதியாக இருப்பதால்தான் 
முடிவு மரணம் என்று முழுதாக தெரிந்தும் லட்சம்பேர் உலகில் உரிமைகளுக்காக போராடுகிறார்கள்.

போராட்டம் என்பது இல்லாது போயிருந்தால் ...
இப்போதும் பரம்பரையாக ஒரு அரசன் இருந்திருப்பான் பிரதேச ரீதியாக. அவனுக்கு எறும்பாக நாம் உழைத்துக்கொண்டு திரிவோம் அடிமைகளாக.
எறும்பு 3-4 அறிவு ஜீவன் வேறு வழியில்லை.ஆறு அறிவு மனிதனும் ....?  எனும்போது மன்னர் ஆட்சிகள் தூக்கி வீசபட்டன. 

மனித நாகரீக வளர்ச்சியில்  பல வளர்சிகள் உள்ளடக்க படுகொன்றன 
கிட்லர் கொலை செய்தபோது முகநூல் இல்லை ..... இருந்திருந்தால் ஒருவேளை அழிவு குறைவாக இருந்திருக்கலாம். இதில் இன்னொரு பக்கம் உண்டு இப்போது முகநூல் இருக்கிறது என்பது அது.

அழிவு குறைவதும் .... அழித்தவன் நடிப்பதும் அவன் திருந்திவிட்டான் என்று பொருள் இல்லை.
மனிதன் முன்னேறிக்கொண்டு இருக்கிறான் என்பதும் இன்னொரு பொருள்.
இதில் நன்மை தீமை இரண்டு பக்கமும் உண்டு.

இலங்கை பிரதமர் ரணில் சொல்கிறார் "தேசிய கொடியை ஏற்றாமல் புலிகளின் கொடியையா ஏற்றுவது ?"
இலங்கையில் சிங்கக்கொடி போனால் புலிக்கொடிதான் உண்டு. என்பது இன்னொரு பொருள்.
போராளிகள் இறப்பது இல்லை என்பதன் பொருள் இதுதான்.

கிட்லர் போட்டு வங்கினதால்தான் 1948இல் இந்தியாவிற்கு  சுதந்திரம் கிடைத்தது  
பிரிடிஸ்காரனிடம் பீரங்கி இருக்கிறது என்றுவிட்டு இந்தியர்கள் விட்டுகொடுப்பு அரசியல் செய்துகொண்டு இருந்திருப்பின்  இன்று ஒருவேளை பக்கிங்கம் அரண்மனையில் சிங்களத்திலும் கிந்தியிலும் பாடியிருப்பார்கள் ....... இந்தியா இலங்கை அவர்களின் அடிமை நாடுகளாக இருந்திருக்கும்.
சுபாஸ் சந்திரபோசின் இராணுவம் ஒரு அச்சுறுத்தலாக இருந்ததன் விளைவு விடுதலையாக மாறியது. 

உலகில் ஒரு தாக்கம் இன்னொரு இடத்தை வேறு ரீதியாக பாதிக்கிறது 
சிங்களவன் செய்த கொடுமைகளை நாம் எவளவு தூரம் பிரச்சாரம் செய்கிறோமோ 
அதற்கான பலன் ஒருநாள் கிட்டும். விட்டுகொடுப்பு விபச்சாரம் புல்லுருவிகள் ஐந்தறிவு பூனைகளுக்கு உரியது. தனித்துவமான காட்டுப்புலி சோறு கிடைக்கும் என்று இன்னொருவனுக்கு அடிமையாக ஒருபோதும் எண்ணாது. 

ஒருவேளை மானமுள்ள ஒரு மனிதன் ஒருநாள் ஐ நா பிரதிநிதி ஆனாலே போதும் ....
ஒரு உண்மையுள்ள இந்தியன் இந்திய பிரதமர் ஆனாலே போதும் .... ஒரு உண்மையான பௌத்தன் இலங்கை சேனாதிபதி  ஆனாலே போதும். எமக்கு வலிக்கிறது என்றும் வலித்தது என்றும் எமது போராட்டம் தொடரும்போதுதான்  அது அப்போது கூட உணரப்படும். 

சம்மந்தன் சுமந்திரன் போன்ற எளியவர்களால் இனம் விற்கப்படும்.
குண்டு சும்மா சத்தம் காட்ட போட்டார்கள் ... சிலர் சத்த பயத்தால் இறந்துவிட்டார்கள் என்று தமது சுகபோக வாழ்விற்கு  அப்போதும் சொல்வார்கள். அதுக்கு விசில் அடிக்கவும் வியாக்கினம் எழுதவும் அடிமைக்கும் ஒரு அடிமை  அப்போதும் இருப்பான்.

இன்று எதிர்கட்சி தலைவர் தமிழரின் நிலையை சுட்டிகாட்டி விழாவை புறக்கணித்து இருந்தால் 
அதன் பலன் என்ன ?  தமிழ் பாட்டு கேட்டதால் தமிழன் கண்ட பலன் என்ன ???

"போராளிகள் இறப்பது இல்லை"

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

"போராளிகள் இறப்பதில்லை"  என்று பொதுவாகவே ஒரு கருத்து உலகளாவிய ரீதியாக இருப்பதால்தான் 
முடிவு மரணம் என்று முழுதாக தெரிந்தும் லட்சம்பேர் உலகில் உரிமைகளுக்காக போராடுகிறார்கள்.

இலங்கை பிரதமர் ரணில் சொல்கிறார் "தேசிய கொடியை ஏற்றாமல் புலிகளின் கொடியையா ஏற்றுவது ?"
இலங்கையில் சிங்கக்கொடி போனால் புலிக்கொடிதான் உண்டு. என்பது இன்னொரு பொருள்.
போராளிகள் இறப்பது இல்லை என்பதன் பொருள் இதுதான்.

ஒரு உண்மையுள்ள இந்தியன் இந்திய பிரதமர் ஆனாலே போதும் .... ஒரு உண்மையான பௌத்தன் இலங்கை சேனாதிபதி  ஆனாலே போதும். எமக்கு வலிக்கிறது என்றும் வலித்தது என்றும் எமது போராட்டம் தொடரும்போதுதான்  அது அப்போது கூட உணரப்படும். 

"போராளிகள் இறப்பது இல்லை"

எவர் எதைச் சொன்னாலும், செய்தாலும், தமிழீழம் மலர்ந்து மணம்வீசும் என்பதை, வாழ்க்கைத் தத்துவத்தினூடாக, உறுதியாக உரத்து ஒலிக்கும் கருத்துக்கள். இனி இங்கு எந்தக் கொம்பன் வந்து கொம்பு சீவினாலும் அது மழுங்கிவிடும்.  

போராளிகள் இறப்பது இல்லை"

அப்படியென்றால் எல்லோரும் தங்கள் பிள்ளைகளை போராட்டத்திற்கு அனுப்பியல்லோ இருப்பினம் ,பலாத்காரமாக பிடிக்கும் தேவையும் வந்திராது .

இப்பவும்  சொர்கம் போறம் ,அல்லாவிடமும் நேரடி டிக்கெட் என்று நம்பவைத்து ஏமாற்றி அனுப்பிக்கொண்டே இருக்கின்றார்கள் .

உரு ஏற்ருபவனுக்கு முழு உண்மையும் தெரியும் .தனது பிள்ளைகளை அந்த பக்கமே விடமாட்டான் .

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, arjun said:

போராளிகள் இறப்பது இல்லை"

அப்படியென்றால் எல்லோரும் தங்கள் பிள்ளைகளை போராட்டத்திற்கு அனுப்பியல்லோ இருப்பினம் ,பலாத்காரமாக பிடிக்கும் தேவையும் வந்திராது .

இப்பவும்  சொர்கம் போறம் ,அல்லாவிடமும் நேரடி டிக்கெட் என்று நம்பவைத்து ஏமாற்றி அனுப்பிக்கொண்டே இருக்கின்றார்கள் .

உரு ஏற்ருபவனுக்கு முழு உண்மையும் தெரியும் .தனது பிள்ளைகளை அந்த பக்கமே விடமாட்டான் .

தங்கடை பிள்ளைகளை மட்டுமல்ல வெளிநாட்டுக்குப் போய் அசைலம் அடிக்காமல் தாங்களே போராடப்போயிருப்பினம். (இது அடுத்தவனை உருவேற்றி தாங்கள் பிழைப்பு நடத்துற கூட்டத்துக்கு, ஒரு குறுப் போராட்டத்தில என்னோட மாமா இருந்தார், மச்சான் இருந்தார், மருமகன் மாவீரரானார் எண்டு சொல்லிக்கொண்டு திரியுது, இதுவும் அடுதவன் காசிலை கொத்துரொட்டி அடிச்சு அவனுக்கே விக்கிற விளையாட்டுத்தான்

அது இருக்கட்டுக்கு நான் எழுத வந்ததையே மறந்து போனன். நல்லகாலம் ரணில் "சுதந்திர தினத்தன்று கொத்துரொட்டியா விற்பார்கள்" என்று கேட்கவில்லை!<_<

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, arjun said:

போராளிகள் இறப்பது இல்லை"

அப்படியென்றால் எல்லோரும் தங்கள் பிள்ளைகளை போராட்டத்திற்கு அனுப்பியல்லோ இருப்பினம் ,பலாத்காரமாக பிடிக்கும் தேவையும் வந்திராது .

இப்பவும்  சொர்கம் போறம் ,அல்லாவிடமும் நேரடி டிக்கெட் என்று நம்பவைத்து ஏமாற்றி அனுப்பிக்கொண்டே இருக்கின்றார்கள் .

உரு ஏற்ருபவனுக்கு முழு உண்மையும் தெரியும் .தனது பிள்ளைகளை அந்த பக்கமே விடமாட்டான் .

போராளிகள் எப்போதும் மக்கள் மனதில் என்றென்றும் வாழ்வார்கள் என்பதைத்தான் அந்த சொற்றொடர் குறிக்கிறது. இதுகள் விழங்க குறைந்தது ஐந்தாவது அறிவாவது வேண்டும்.

உங்களை மாதிரி 

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தவன் வீட்டில் என்ன செய்கின்றான் என்பதை முணப்பதே ஒரு கூட்டத்துக்கு வேலையாகக்கிடக்கு..

தூ....................

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, arjun said:

போராளிகள் இறப்பது இல்லை"

அப்படியென்றால் எல்லோரும் தங்கள் பிள்ளைகளை போராட்டத்திற்கு அனுப்பியல்லோ இருப்பினம் ,பலாத்காரமாக பிடிக்கும் தேவையும் வந்திராது .

இப்பவும்  சொர்கம் போறம் ,அல்லாவிடமும் நேரடி டிக்கெட் என்று நம்பவைத்து ஏமாற்றி அனுப்பிக்கொண்டே இருக்கின்றார்கள் .

உரு ஏற்ருபவனுக்கு முழு உண்மையும் தெரியும் .தனது பிள்ளைகளை அந்த பக்கமே விடமாட்டான் .

உங்கள்  அறிவுக்கு தமிழ் அப்பிடி இப்பிடித்தான் விளங்கும் என்பது உங்கள் எழுத்துக்கள் மூலம் ஏற்கனவே தெரிந்ததுதான் 
இந்தளவில் மட்டம் என்பதை இந்த கருத்தின் மூலம்தான் அறிய கூடியதாக இருக்கிறது.

"போராளிகள் இறப்பது இல்லை"

இதற்கும் 
யாரையும் யாரும் போராட அனுப்புவதற்கும் 

யாரும்போராட போவதற்கும் என்ன தொடர்பு ? 

இன்னுமா நம்புறாங்க .tw_cry:

 

  • கருத்துக்கள உறவுகள்

சாப்பாடே இல்லாமல் பிச்சை எடுத்து திரிந்ததுகளுக்கு கொத்து ரொட்டி கடையை கண்டால் ஒரு காண்டு 

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, arjun said:

இன்னுமா நம்புறாங்க .tw_cry:

 

நாங்கள் ஆறறிவு படைத்த மனிதர்கள் 
நிலவிலவுக்கு மனிதனால் போகமுடியும் என்று பிளேன் பறக்குமுன்பே நம்ப தொடங்கிவிட்டோம் 

இப்போ நிலவிலே மனிதனால் வாழ் கூட முடியும் என்றும் நம்புகிறோம் 

லட்சியம் 
நம்பிக்கை 
போராட்டம் 

இவை ஆறறிவு மனிதர்களின் அன்றாட செயற்பாடுகள்.

நுண்ணங்கிகள் ..... நாலறிவு ஜீவராசிகள் 
அவை எங்காவது ஒட்டுண்டு வாழ்ந்து கொள்ளும்.

நாம் வாழ்வை வடிவமித்து கொண்டே செல்வோம் 
இது கடந்த 20 ஆயிரம் வருடமாக நடக்கும் சாதாரண நிகழ்வு. 

ஒவ்வொரு நாளும் சக்தி டிவியில் செய்தி முடிய ஒரு முன்னாள் போராளியின் பேட்டி போகும் .

நினைத்து பார்க்க முடியாத அளவு கஷ்டத்தில் வாய் திறந்து கேட்கவும் வெட்கம் இருந்தும் இயலாமையில் உதவி கேட்கின்றார்கள் .

இவை எல்லாம் அன்றாடம் புலம்பெயர் எம்மவர் பார்த்துவிட்டுத்தான் அனைத்து அலங்கோலங்களையும் அரங்கேற்றுகின்றார்கள் .

ஒரு சின்ன உதவி செய்யமுடியாமல் சும்மா வார்த்தயையால் போராளிகள் இறப்பதில்லை என்று வார்த்தை ஜாலம் பேச எனக்கு தெரியாது .

அதற்கு நாட்டில் போராட்டம் என்றவுடன் ஓடி வந்த பல வித்துவான்கள் இங்கு பலர் இருக்கினம் .

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Sasi_varnam said:

சாப்பாடே இல்லாமல் பிச்சை எடுத்து திரிந்ததுகளுக்கு கொத்து ரொட்டி கடையை கண்டால் ஒரு காண்டு 

எம்மை இந்தநிலைக்கு கொண்டு வந்துவிட்டவர்களுக்கு சமர்ப்பணம்..........

Edited by விசுகு

27 minutes ago, Maruthankerny said:

நாங்கள் ஆறறிவு படைத்த மனிதர்கள் 

:D:

 

28 minutes ago, Maruthankerny said:

நாங்கள் ஆறறிவு படைத்த மனிதர்கள் 
நிலவிலவுக்கு மனிதனால் போகமுடியும் என்று பிளேன் பறக்குமுன்பே நம்ப தொடங்கிவிட்டோம் 

இப்போ நிலவிலே மனிதனால் வாழ் கூட முடியும் என்றும் நம்புகிறோம் 

லட்சியம் 
நம்பிக்கை 
போராட்டம் 

இவை ஆறறிவு மனிதர்களின் அன்றாட செயற்பாடுகள்.

எப்படி வேணுமென்டாலும் கனவு காணுங்கள். அது உங்கள் உரிமை.

ஆனால் யதார்த்தம் எண்டு ஒண்டு இருக்கல்லோ

நான் கடவுளைக் கண்டே தீருவன் எண்ட மாதிரி.

35 minutes ago, Maruthankerny said:

நுண்ணங்கிகள் ..... நாலறிவு ஜீவராசிகள் 
அவை எங்காவது ஒட்டுண்டு வாழ்ந்து கொள்ளும்.

நாங்கள் இரண்டு காலுள்ளவர்கள் நிதானமாக ஒவ்வொரு அடியையும் வைக்க விரும்புபவர்கள், வைப்போம் வைத்துக்கொண்டே இருப்பம். இதுதான் மனிதர்கள்.  நாலு காலில் பாய்வதில்லை மனிதன்.

37 minutes ago, Maruthankerny said:

நாம் வாழ்வை வடிவமித்து கொண்டே செல்வோம் 
இது கடந்த 20 ஆயிரம் வருடமாக நடக்கும் சாதாரண நிகழ்வு. 

 

போராளிகள் இறப்பதில்லை என்றுதான் அடிச்ச காசையேல்லாம் தாங்களே அமுக்கிவிட்டார்களோ தெரியவில்லை . 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஜீவன் சிவா said:

:D:

 

எப்படி வேணுமென்டாலும் கனவு காணுங்கள். அது உங்கள் உரிமை.

ஆனால் யதார்த்தம் எண்டு ஒண்டு இருக்கல்லோ

நான் கடவுளைக் கண்டே தீருவன் எண்ட மாதிரி.

நாங்கள் இரண்டு காலுள்ளவர்கள் நிதானமாக ஒவ்வொரு அடியையும் வைக்க விரும்புபவர்கள், வைப்போம் வைத்துக்கொண்டே இருப்பம். இதுதான் மனிதர்கள்.  நாலு காலில் பாய்வதில்லை மனிதன்.

 

நான் எழுதியது என்னை பற்றிய தனிபட்ட குறிப்பு அல்ல ...
முதலில் எழுதியதை வாசிப்பதோடு நிற்காமல் கிரகித்து விளங்கிகொள்ளவும் 
கொஞ்சம் முயற்சி செய்யுங்கள்.

நான் எழுதியது ஆறு  அறிவு மனிதர்களின் அடிப்படை பற்றியது.

சாத்தியமானதை செய்வதை மனிதன் 2000ஆம் ஆண்டிலேயே நிறுத்திவிட்டான் 
இப்போ எது சாத்தியம் இல்லை என்று சொன்னார்களோ 
அதைதான் அறிவை பயன்படுத்தி போராடி செயற்படுத்தி கொண்டிருக்கிறோம்.


நீங்கள் தட்டிகொண்டிருக்கும் கொம்பியுட்டர் ராம் மெமோரி ஆகக்கூடியது 2கிக் தான் இருக்கமுடியும் என்று 
பிசிக் மூலம் நிருபித்தார்கள் காரணம் வெப்பம் பெற்று சூடு ஏறி செயல் இழந்துவிடும் என்றார்கள்.
மனிதர்கள் இப்போ 500 கிக் 1000கிக் மெமொரி ராம் கொம்புட்டர் பாவித்துக்கொண்டு இருக்கிறோம்.

மைக்ரோ மீட்டர் நாம் 2010இல் கை விட்டு விட்டோம் 
கண்ணுக்கே தெரியாதே என்று எதார்த்த வடை சுடுவது சோம்பேறிகள் மூளை நலன் குன்றியவர்களின் அறிவுக்கு  எட்டியது.
இப்போ கண்ணுக்கே தெரியாத நானோ மீட்டரில் வேலை செய்துகொண்டு இருக்கிறோம். 

மழை மேகத்தை விட  கொண்டல் மேகம் பெரிதாகி போகும் காலம் நோக்கி போராடிக்கொண்டு 
இருக்கிறோம்.
இது மனிதனுக்கு நேற்று இன்று வந்ததல்ல ....
கடந்த 20 ஆயிரம்வருடமாக  
கனவு காண்கிறோம் 
நம்புகிறோம் 
போராடுகிறோம் 
பெறுகிறோம்.

துரதிஸ்டவசமாக எமக்கு குழந்தைகளாக பிறந்தாலும் சிலர் பாவம் புத்தி சுவாதீனாமாக பிறந்து விடுகிறார்கள். அவர்களையும் நாம் அப்படியே விடுவதில்லை 
மந்திகை அங்கொடை போன்ற இடங்களில் மருத்துவமனைகள் அமைத்து 
புத்தியை நேர்த்தியாக்க போராடி வருகிறோம்  சிலர் மருத்துவ மனைகளில் இருந்து தப்பி ஓடி ஒழித்து வாழ்கிறார்கள். அவர்களையும் போராடி தேடி பிடுத்து உரிய மருத்துவம் செய்யலாம் என்று நம்புகிறோம். 

இது 20 ஆயிரம் வருட மனித அறிவின் வளர்ச்சி ....
ஒருவர் இருவருக்கு சொந்தமானது அல்ல ... 

ஆறறிவு மனிதன் இரண்டுகால்தானே இருக்கு என்று நின்று இருந்தால் ....?
மனிதன் இப்போதும் காட்டுக்குள்தான் வேட்டையாடிக்கொண்டு இருப்பான் 

கனவு கண்டான் 
நம்பிக்கை வைத்தான் 
போராடினான் 
விண்வெளியில்  பறந்து திரிகிறான்! 

14 minutes ago, Maruthankerny said:

கனவு கண்டான் 
நம்பிக்கை வைத்தான் 
போராடினான் 
விண்வெளியில்  பறந்து திரிகிறான்! 

மனதி லுறுதி வேண்டும்.
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்.
பெண் விடுதலை வேண்டும்.
பெரிய கடவுள் காக்க வேண்டும்;
மண்பயனுற வேண்டும்,
வாகனமிங்கு தென்பட வேண்டும்.
உண்மை நின்றிட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
On 2/4/2016 at 0:31 PM, Maruthankerny said:

தனித்துவமான காட்டுப்புலி சோறு கிடைக்கும் என்று இன்னொருவனுக்கு அடிமையாக ஒருபோதும் எண்ணாது. 

 

மிக நியாயமான வரிகள் மருதர்! இதை சிறி லங்காவிலோ அல்லது தமிழீழத்திலோ போய் நின்று நீங்களே செய்து காட்டினால் தான் இதை இவ்வளவு ஆக்ரோஷத்துடன் சொல்ல நீங்கள் தகுதி உள்ளவர் என்பது என் தாழ்மையான கருத்து! இல்லையேல் பொத்திக் கொண்டு இருக்க வேண்டியான்! :cool:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, விசுகு said:

அடுத்தவன் வீட்டில் என்ன செய்கின்றான் என்பதை முணப்பதே ஒரு கூட்டத்துக்கு வேலையாகக்கிடக்கு..

தூ....................

புலத்தில் இருந்து கொண்டு தமிழினவிடுதலை மற்றும் புலிகளுக்கு சார்பாக கதைத்தால் ஓடிவந்தவர்கள்....வடலிகள் ஒன்றும் தெரியாதவர்கள் காசு அடித்தவர்கள்  என பட்டம் சூட்டுவார்கள்.

பட்டம் சூட்டுபவர்கள் அதே புலத்தில் இருந்து கொண்டு புலிகளுக்கு எதிராக எழுதினால் தூய்மையானவர்கள்...சுத்தமானவர்கள்.அப்பளுக்கற்றவர்களாம்.

"போராளிகள் இறப்பதில்லை "

ஓடி வந்தவன் உடுக்கு அடித்து உரு ஏற்றி இப்போ பாவங்கள் பிச்சை எடுக்கின்றார்கள் ,

இதற்குள் ஒருவர் மற்றவர் மனங்களில் வாழ்கின்றார்களாம் .

இங்கே பாருங்கள் செய்தி .

வவுனியாவில் கடைகள் தோறும் பிச்சை எடுக்கும் இரு கால்களையும் இழந்த முன்நாள் போராளி முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டிசுட்டான் பகுதியை சேர்ந்த இரத்தினம் புஸ்பரஜீவன் வவுனியாவில் கடைகள் தோறும் கடை ஒன்று கட்டவேண்டும் என காரணம்காட்டி பிச்சை எடுத்து வருகிறார். இச்செயற்பாடு குறித்து அவரிடம் கேட்டபோது இறுதி யுத்தத்தின்போது எனது இரண்டு கால்களையும் இழந்துவிட்டேன் எனக்கு இரண்டு குழந்தைகள் தடுப்பில் இருந்து புனர்வாழ்வு பெற்று விடுதலையாகி வந்தபோது எனது மனைவியும் என்னை பிரிந்து வேறு திருமணம் செய்து சென்றுவிட்டார்.

எனக்கு இருக்கும் ஒரு துண்டு காணியில் ஒரு கடை கட்டி எனது வாழ்க்கையை நடத்த நினைக்கிறேன் ஒரு சில நிறுவனங்களில் இருந்து உதவிகள் கிடைத்தபோதும் அவை எனது வாழ்வாதாரத்திற்கு போதுமானதாக இல்லை நிரந்தரமான ஒரு தொழில் அல்லது வாழ்வாதாரம் இருக்கும் பட்சத்தில் என்னால் வாழ்க்கையை கொண்டு நடத்த முடியும். எல்லாவற்றையும் இழந்து இழப்பதற்கு எதுவுமே இல்லாமல் இருக்கும் என்னை போன்றவர்கள் இலைமறை காயாக இன்னும் இருக்கிறார்கள். வடமாகாணசபையால் முன்நாள் போராளிகளுக்கு உதவி வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கிறார்கள் ஆனால் அவ்வாறான உதவிகள் எதுவும் எனக்கு வழங்கப்படவில்லை என்பதோடு எங்களை போன்றோரை இச்சமூகம் ஒதுக்கி வைப்பதாகவும் தெரிவித்தார்.


விடுதலைப்புலிகளின் போராட்டத்தின் பயனாக பெற்றுக்கொள்ளப்பட்ட வடமாகாணசபையால் இன்று முன்னாள் போராளிகள் ஒதுக்கப்படுவது வேதனைக்குரியது. அத்துடன் தேர்தல் காலங்களில் பிரபாகரன் படத்தையும் புலிகளின் போராட்டத்தையும் விலைபேசி ஓட்டுக்களை வாங்கும் அரசியல்வாதிகள் பின்பு அவர்களை மறந்து போவதும் புலம்பெயர் தமிழர்களிடம் அவர்களை காட்டி உதவிசெய்ய வேண்டும் என கூறி பணத்தை பெற்று போராளிகளுக்கு கிள்ளித் தெளிப்பதும் என தங்கள் வாழ்க்கையை; வழப்படுத்துகின்றனர்.Fotor0205161110

வடமாகாணசபை அமைச்சர்கள் கோடிஸ்வரர்களாகவும், உறுப்பினர்கள் இலட்சாதிபதியாகவும் மாறியிருக்கிறார்கள் ஆனால் வறுமையில் வாடும் மக்கள் தொடர்ந்து ஏழைகளாகவே…..
போராளியின் தோலைபேசி இலக்கம் -0094778964527

மனமுள்ளோர் தயவு செய்து உதவி செய்யுங்கள்…

என் மக்கள் என் நாடு என் இனம் என்று  போராடியவன் இன்று வாழ வழி இன்றி படும் வேதனை யாருக்கு தெரியும் ?
“உங்களால் முடிந்த வரை இதைப் பகிரவும்”

Fotor0205160944

 

  • கருத்துக்கள உறவுகள்

இதுவும் ஒரு அரசியல்

அவர்கள் அழிந்தது சந்தோசம்...

ஆனால் உயிர் பிழைத்து வாழத்துடிப்பது கவலை தருகிறது....

புலிகள் மீது வாந்தி எடுக்க எந்த ஆயுதத்தையும் பாவிப்போம்

வெட்கம் கெட்டதுகள்....

அவர்கள் போராட்டம் அழிந்தது சந்தோசம் ,

இன்னும் ஒரு பத்து வருடம் போர் நீண்டு இருந்தால் இறப்பவர்கள் தொகை இப்படி பிச்சை எடுப்பவர்கள் தொகை பத்து மடங்கு பெருகியிருக்கும் .

போராட்டம் என்றவுடன் நாட்டை விட்டு ஓடிவந்தவனுக்கு உண்டியல் பத்து மடங்கு நிறைந்திருக்கும் . 

36 minutes ago, விசுகு said:

இதுவும் ஒரு அரசியல்

அவர்கள் அழிந்தது சந்தோசம்...

ஆனால் உயிர் பிழைத்து வாழத்துடிப்பது கவலை தருகிறது....

புலிகள் மீது வாந்தி எடுக்க எந்த ஆயுதத்தையும் பாவிப்போம்

வெட்கம் கெட்டதுகள்....

புலிகள் அழிந்தது சந்தோசம் என்றால் புலிகள் என்ற அமைப்பு இல்லாமல் போனது சந்தோசம் என்பது தான் அதன் அர்த்தமே தவிர அமைப்பில் இருந்த அடிமட்ட போராளிகள் இறந்தது சந்தோசம் என்பதல்ல. போராட்ட காலத்தில் ஸ்கோர் கேட்டு திரிந்தவர்களுக்கு வேண்டுமானால் போராளிகளின் இறப்பும் அடிமட்ட ராணுவத்தினரின் இறப்பும் சந்தோசத்தை ஏற்படுத்தலாம். 
தற்போதைய சூழலில் இவ்வாறு கஷ்டப்படும் போராளிகளுக்கு எவ்வாறு உதவலாம் என்பதில் தான் எமது கவனம் இருக்க வேண்டும். வடமாகாண சபை இவர்கள் விடயத்தில் எவ்வளவோ செய்யலாம்..அவர்களும் செய்வதில்லை எவரும் அவர்களுக்கு அழுத்தமும் கொடுப்பதில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தெனாலி said:

புலிகள் அழிந்தது சந்தோசம் என்றால் புலிகள் என்ற அமைப்பு இல்லாமல் போனது சந்தோசம் என்பது தான் அதன் அர்த்தமே தவிர அமைப்பில் இருந்த அடிமட்ட போராளிகள் இறந்தது சந்தோசம் என்பதல்ல. போராட்ட காலத்தில் ஸ்கோர் கேட்டு திரிந்தவர்களுக்கு வேண்டுமானால் போராளிகளின் இறப்பும் அடிமட்ட ராணுவத்தினரின் இறப்பும் சந்தோசத்தை ஏற்படுத்தலாம். 
தற்போதைய சூழலில் இவ்வாறு கஷ்டப்படும் போராளிகளுக்கு எவ்வாறு உதவலாம் என்பதில் தான் எமது கவனம் இருக்க வேண்டும். வடமாகாண சபை இவர்கள் விடயத்தில் எவ்வளவோ செய்யலாம்..அவர்களும் செய்வதில்லை எவரும் அவர்களுக்கு அழுத்தமும் கொடுப்பதில்லை. 

இங்கு பதியப்பட்டதன் நோக்கம் கருணை இல்லை

ஒரு பகுதியை பழி வாங்குதல்....

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.