Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பருத்தித்துறையில் பள்ளிவாசல் திறப்பு.

Featured Replies

பருத்தித்துறையில் பள்ளிவாசல் திறப்பு.

 
பருத்தித்துறையில் பள்ளிவாசல் திறப்பு.



பருத்தித்துறை ஜும் ஆ மஸ்ஜித்   தற்போது'அவ்னுல் ஹைரில் இஸ்லாமி சிறீலங்கி' என்னும் அமைப்பு நிதஉல் ஹைர் நிறுவனத்துடன் இணைந்து மஸ் அத் குலைப் என்பவரின் சதகதுல் ஜாரியா நிதிப்பங்களிப்போடு தற்போது புனர் நிர்மானம் செய்யப்பட்டுள்ளது.

 மேற்படி புனர் நிர்மானம் செய்யப்பட்ட பள்ளிவாயலை இன்று (26-02-2016) வெள்ளிக்கிழமை ஜும் ஆத் தொழுகையினைத் தொடர்ந்து பொதுமக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.
 
 நீண்டகால வரலாற்றைக் கொண்ட இப்பள்ளிவாசல் 1990ல் வடக்கில் இருந்து  முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதன் பின்னர் சுமார் 25 வருடங்களின் பின்னர்  தற்போது புனர் நிர்மானம் செய்யப்பட்டுள்ளது. இதனை குறித்த பங்காளர்களுடன் இணைந்து யாழ் கிளிநொச்சி உலமா சபை கிளை தலைவர் அஸீஷ் காசிமி திறந்து வைத்தார்.

 
 இதன் போது அஸ்-ஷெய்க் நௌபர் (கபூரி) அவர்கள் விஷேட குத்பா பிரசங்கமொன்றினை நிகழ்த்தினார்கள்இ அல்லாஹ்வின் மாளிகளைகளின் மீது மக்களுக்கு இருக்கின்ற அமானிதங்கள் குறித்தும் சிறுபான்மையாக வாழும் பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கு இருக்க வேண்டிய பொறுப்புகள் குறித்தும்இ மீள்குடியேறுகின்ற மக்களுக்கு இருக்கின்ற தேவைகளை எவ்வாறு நிறைவு செய்துகொள்வது என்பது குறித்தும் இவரது விஷேட குத்பா பிரசங்கத்தில் கருத்துகள் வலியுறுத்தப்பட்டன.
 


 
அதனைத் தொடர்ந்து டிதபழுகையின் பின்னர்  பள்ளிவாயலின் பேஷ் இமாம் அஜ்மல் நிதா உல் ஹைர் நிறுவனத்தின் வடக்கு மாகாண பொறுப்பாளர் மௌலவி இப்றாஹிம்  அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமாசபையில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டக் கிளையின் தலைவர் அஸ்-ஷெய்க் அப்துல் அஸீஸ்  விஷேட உரைகளை நிகழ்த்தினார்கள்.


 
மேற்படி பள்ளிவாயல் திறப்பு நிகழ்வில் அரசியல்வாதிகள் வர்த்தகர்கள் உட்பட பலரும்  கலந்து சிறப்பித்தனர்.  தொடர்ந்து மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வைத்  அடுத்து பங்குபற்றிய அனைவருக்கும் பள்ளிவாயல் நிர்வாகத்தினர் சார்பாக  மதியபோசனம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/129401/language/ta-IN/article.aspx

தமிழார் விடுதலை போராட்டத்துக்காக பல வீரப் புதல்வர்களை கொடுத்த மண்.

இன்று இஸ்லாமிய மயமாக்கலுக்கு பலியாகி விட்டது.

என் இந்த அத்து மீறலை எந்த தமிழனும் தடுக்கவில்லை!!

தமிழரின் தற்போதைய தலைவரான சம்பந்தனும் வருங்கால தலைவரசன சுமந்திரனும் எங்கே ??????????

ஒருவேளை மீதம் இருக்கும் தமிழரின் மண்ணையும் விலை பேசிக்கொண்டு இருப்பர்களோ என்னவோ ??

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு இருந்த பள்ளிவாசல் அது ,மீண்டும்  புனர் நிர்மானம் செய்யப்பட்டுள்ளது.நாங்கள் லண்டனிலும்,சிட்னியில் ,டொரோன்டோவிலும் கோயில் கட்ட அவ‌ர்கள் தாயக மண்ணில் பள்ளிவாசல் கட்டுகிறார்கள்......

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் புத்த விகாரை
கொழும்பில் பொன்னம்பலவாணேஸ்வரர்
இருக்கும்பொழுது பருத்தித்துறையில் பள்ளிவாசல் இருப்பதில் என்ன பிரச்சனை?

கூட்டமைப்பின் இணக்க அரசியலின் விளைவு இதுதான்.
இலங்கை பூராகவும் பல்லினக்கலாச்சாரம் பரந்து விரிகின்றது

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, வாத்தியார் said:


இலங்கை பூராகவும் பல்லினக்கலாச்சாரம் பரந்து விரிகின்றது

உலகம் பூராவும் பல்லினகலாச்சாரம் பரந்து விரியுதுtw_tounge_wink:

ஒன்றே குலம் ஒருவனே தேவன் 

யாதும் ஊ ரே யாவரும் கேளிர் .

 

15 minutes ago, arjun said:

ஒன்றே குலம் ஒருவனே தேவன் 

யாதும் ஊ ரே யாவரும் கேளிர் .

 

அந்த தெய்வம் அல்லா என்பார்கள் விரைவில் ??????

9 hours ago, நவீனன் said:

நீண்டகால வரலாற்றைக் கொண்ட இப்பள்ளிவாசல் 1990ல் வடக்கில் இருந்து  முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதன் பின்னர் சுமார் 25 வருடங்களின் பின்னர்  தற்போது புனர் நிர்மானம் செய்யப்பட்டுள்ளது.

 

7 hours ago, Dash said:

தமிழார் விடுதலை போராட்டத்துக்காக பல வீரப் புதல்வர்களை கொடுத்த மண்.

இன்று இஸ்லாமிய மயமாக்கலுக்கு பலியாகி விட்டது.

என் இந்த அத்து மீறலை எந்த தமிழனும் தடுக்கவில்லை!!

 

4 hours ago, putthan said:

முன்பு இருந்த பள்ளிவாசல் அது ,மீண்டும்  புனர் நிர்மானம் செய்யப்பட்டுள்ளது.நாங்கள் லண்டனிலும்,சிட்னியில் ,டொரோன்டோவிலும் கோயில் கட்ட அவ‌ர்கள் தாயக மண்ணில் பள்ளிவாசல் கட்டுகிறார்கள்......

புத்தன் சின்ன திருத்தம் உங்களைக் கேட்காமலே.

முன்பு இருந்த பள்ளிவாசல் அது ,மீண்டும் புனர் நிர்மானம் செய்யப்பட்டுள்ளது.நாங்கள் லண்டனிலும்,சிட்னியில் ,டொரோன்டோவிலும் அத்து மீறி கோயில் கட்ட அவ‌ர்கள் தாயக மண்ணில் அழிக்கப்பட்ட பள்ளிவாசல் கட்டுகிறார்கள்......

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஜீவன் சிவா said:

 

 

புத்தன் சின்ன திருத்தம் உங்களைக் கேட்காமலே.

முன்பு இருந்த பள்ளிவாசல் அது ,மீண்டும் புனர் நிர்மானம் செய்யப்பட்டுள்ளது.நாங்கள் லண்டனிலும்,சிட்னியில் ,டொரோன்டோவிலும் அத்து மீறி கோயில் கட்ட அவ‌ர்கள் தாயக மண்ணில் அழிக்கப்பட்ட பள்ளிவாசல் கட்டுகிறார்கள்......

அத்துமீறி கட்ட அந்த நாட்டு அர‌சுகள் விடமாட்டார்கள் என நினைக்கிறேன்.ஆனால் கொமர்ஷல் சொனில்(commercial zone) அனேகமான கோவில்களுக்கு அனுமதி கொடுத்துள்ளார்கள் . கோவில்களுக்கு மட்டுமல்ல பள்ளிவாசல்களுக்கும்.... சில நேர கட்டுப்பாடுகளுடன்

  • கருத்துக்கள உறவுகள்

இருந்ததை..புனரமைக்கிறது பிரச்சனை இல்லை.. புனரமைச்சிட்டு.. ஒவ்வொரு வெள்ளியும் என்ன ஓதப்படுகிறது என்பது தான் முக்கியம்.

இவ்வளவு வசதி வாய்ப்புக்கள் அளிக்கப்பட்டும் கூட மேற்கு நாடுகளில் கடும் இஸ்லாமிய மதவாதத்தை பரப்பும் நிலையங்களாக பள்ளிகளும் இணையமும் விளங்குகின்ற நிலையில்....

அண்மையில் பிரான்சில் மட்டும் நூற்றுக்கு மேற்பட்ட பள்ளிவாசல்கள் இழுத்து மூடப்பட்டமை இங்கு சுட்டிக்காட்டத் தக்கது.

ஒரு பாரிய இன அழிப்பை.. நில ஆக்கிரமிப்பை சந்தித்து நிற்கும் தமிழ் சமூகத்துக்குள்.. அந்த இனத்தை காட்டிக்கொடுக்கத் தயங்காத இந்த இஸ்லாமியர்களின் ஊடுருவல் என்பது கண்காணிக்கப்பட வேண்டிய ஒன்று. கண்ணில் விளக்கெண்ணை ஊற்றி இருந்து அவதானிக்க வேண்டிய ஒன்று.

இன்றேல் கிழக்கு போல்.. அடாத்தான நிலப்பறிப்பும்.. கொழும்பில் தமிழரை அச்சுறுத்தி.. புலனாய்வு என்ற பெயரில்.. சிங்களவருக்கு காட்டிக்கொடுத்து காசுழைத்தது போல் பல துரோகங்கள் தமிழர் வீட்டு வாசல்படியை தட்டும் காலம் நெருங்குவது தவிர்க்க முடியாததாகும். :rolleyes:

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, putthan said:

முன்பு இருந்த பள்ளிவாசல் அது ,மீண்டும்  புனர் நிர்மானம் செய்யப்பட்டுள்ளது.நாங்கள் லண்டனிலும்,சிட்னியில் ,டொரோன்டோவிலும் கோயில் கட்ட அவ‌ர்கள் தாயக மண்ணில் பள்ளிவாசல் கட்டுகிறார்கள்......

இப்ப ஏலுமெண்டால் அனுராதபுரத்திலை ஒரு வைரவர் கோயில் தொடங்குங்கோ பாப்பம்...:cool:

  • கருத்துக்கள உறவுகள்

அவன் பெரிது 
இவர் சிறிது 

இவர் இன்ன சாதி வெளிவீதிக்க மட்டும் நிற்கலாம் 
இவர் கடவுளுக்கு அடுத்த பிரதிநிதி  
என்று அடாவடி செய்து மனிதர்களை 
வேதனையால் சிதறடிக்கும் இந்து கோவில்களை இடித்துவிட்டு 

எல்லா மனிதரும் சமம் என்று போதிக்கும் எந்த கோவிலை கட்டினாலும் 
அதை நான் வரவேற்பேன். 

ஆனால் இது கடவுளை போதிக்க கட்டப்படவில்லை 
ஒரு மனித கூட்டத்தையே அப்புற படுத்த கட்டப்டுகிறது.

பழைய கோவில்தான் திருத்த படுகிறது 
ஏற்கனவே பளையதொன்று இருந்ததால்தான் தமிழனுக்கு இவளவு அழிவும் வந்தது. 

குழு வெறி,
மத வெறி,
மொழி வெறி,
இன வெறி,
சாதி வெறி ,
.....

இவற்றைவிட மனிதம் என்கிற வெறி மேலானது - அதைப்பற்றி பேசலாமே. 

தமிழ் பேசும் இன்னொரு மதத்தவனை இழிப்பவர்களுடன் நான் பேச விரும்பலில்லை. ஆனாலும் ஒரு விடயம், புலம் பெயர்ந்த நாடுகளில் தங்களை மதிக்கிறார்களில்லை என்று கூப்பாடு போடும் கும்பல், சக மனிதனை, ஒரே மொழி பேசுபவனை, கேவலமாகப் பேசும் மனப்பாங்கு ஏற்கத்தக்கதல்ல. இம் மனப்பாங்கு அழியும் வரை தமிழருக்கு என்றுமே உய்வில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
  • பலஸ்தீனத்தில் இழவு விழும் போது ஆர்ப்பரித்தவர்கள்.. கூட வாழும் தமிழ் பேசும் மக்கள் செத்த போது ஒரு மூச்சும் விட்டதில்லை. இவர்களை சக மனிதர்கள் என்பதா.. அல்லது எந்த வகையில் அடக்குவது என்று.. இங்கு இந்த மதவெறிக் கூட்டத்துக்கு வக்காளத்து வாங்குபவர்கள் விளக்கினால் நல்லது.
  • பள்ளி புனரமைக்கப்படுவதல்ல பிரச்சனை. தமிழரின் இத்தனை துன்பத்திலும் இன்பம் கண்டவர்கள் அந்தப் பள்ளிகளை என்ன தேவைக்காகப் பயன்படுத்தப் போகிறார்கள் என்பது தான் இன்று தமிழர் முன் உள்ள கேள்வியே..?! :rolleyes:tw_angry:
14 minutes ago, nedukkalapoovan said:
  • பலஸ்தீனத்தில் இழவு விழும் போது ஆர்ப்பரித்தவர்கள்.. கூட வாழும் தமிழ் பேசும் மக்கள் செத்த போது ஒரு மூச்சும் விட்டதில்லை. இவர்களை சக மனிதர்கள் என்பதா.. அல்லது எந்த வகையில் அடக்குவது என்று.. இங்கு இந்த மதவெறிக் கூட்டத்துக்கு வக்காளத்து வாங்குபவர்கள் விளக்கினால் நல்லது.
  • பள்ளி புனரமைக்கப்படுவதல்ல பிரச்சனை. தமிழரின் இத்தனை துன்பத்திலும் இன்பம் கண்டவர்கள் அந்தப் பள்ளிகளை என்ன தேவைக்காகப் பயன்படுத்தப் போகிறார்கள் என்பது தான் இன்று தமிழர் முன் உள்ள கேள்வியே..?! :rolleyes:tw_angry:

நெடுக்கு உங்களுடைய 2வது கேள்விக்கான பதில் இதோ!!

http://www.yarl.com/forum3/topic/171115-மட்டக்களப்பில்-இஸ்லாத்துக்கு-மாறும்-இளம்-தமிழ்-பெண்களின்-எண்ணிக்கை-அதிகரிக்கின்றது/

  • கருத்துக்கள உறவுகள்

பருத்தித்துறையில் இருந்து புலம்பெயர்ந்து வந்த நாங்கள் இருக்கும் இடமெல்லாம் கோயில் கட்டித் தேரும் இழுக்கின்றோம். உண்டைக்கட்டி வாங்கிச் சாப்பிட ஓடி ஓடிப் போகின்றோம்.

முஸ்லிம்கள் மீண்டும் தமது இடங்களில் குடியேறினால் அவர்களுக்கும் பள்ளிவாசல் தேவைதானே. அவர்கள் பழையதைத்தானே புதுப்பித்துள்ளார்கள்.

அரசமரம் கண்ட இடமெல்லாம் விகாரையைக் கட்டிய சிங்களவர்கள அனுசரித்துப் போகப் பழகிய மக்கள் புலம்பெயர் நாடுகளில் இருந்து அறிவரை சொல்வதையெல்லாம் ஏற்கப்போவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சொல்லுக் கேக்கினமோ இல்லையோ...

கிழக்குப் போல் வடக்கிலும் குடிமுழுகும் மோது முழித்துக் கொள்வார்கள். அப்ப முழித்தும் பிரயோசனம் இருக்காது விழித்தும் பிரயோசனம் இருக்காது.

இன்று மேற்கு நாடுகள் படும் அவதியை விட மோசமானதாக அது இருக்கும். :rolleyes:tw_angry:

எச்சரிக்க வேண்டியது மக்கள்.. மண்ணின் நலனில் அக்கறை உள்ளவர்களின் கடமை. 

அவர்களது ஆன்மீகம் என்ற விடயத்தில் தாம் மீள் குடியேறும் இடத்தில் வழிபாட்டு இடங்களை அமைப்பது அவர்களது உரிமை. அது குறித்து எதுவும் சொல்ல முடியாது. முஸ்லீம்கள் வாழும் பிரதேசங்களில் அவர்களது மத ஆன்மீக கலாச்சாத்தை பேணுவது அவர்களது உரிமை.

அதேவேளை  மகிவும் அவதானமாக இருப்பது அவசியம். சுவிற்சர்லாந்தில்  கணிசமாக அளவில் முஸ்லீம்கள் இருப்பதால் அவர்களுக்காக வழிபாட்டு இடங்கள் பல இருந்த போதிலும் 2005 மசூதி(Minaret) ஒன்றை அவர்கள் கட்ட முற்பட்டவேளையில் வெடித்தது பிரச்சனை. வாத பிரதிவாதங்களின் உச்ச கட்டமாக  2009 ம் ஆண்டு நாடளாவிய ரீதியில் மக்கள் வாக்கெடுப்பு (Referundum) நடத்தப்பட்டு மக்களின் அமோக ஆதரவுடன் மசூதி கட்டும் தடை (Minarettverbot) சட்டபூர்வமாக கொண்டுவரப்பட்டது. இந்த சட்டவாக்கத்தில் பின்னர் சுவிற்சர்லாந்தில் மசூதித்தடை நிரந்தரமாக்கபட்டுவிட்டது. இதற்கு சுவிஸ்மக்கள் கூறிய காரணம் மசூதி(Minaret) என்பது மத ஆன்மீக அடையாளம் அல்ல. அது மத அதிகாரத்தின் அடையாளம் என்பதாகும். இன்று எமது தராளகுணத்தை பயன்படுத்தி மசூதி கட்டுபவர்கள் எமது எதிர்கால சந்ததி மீது அதிகாரம் செலுத்துவார்கள் என்பது மசூதி தடைச்சட்டத்தை ஆதரித்த சுவிஸ் மக்களின் கருத்தாகும். அவர்களது அதிகாரம் மசூதியின் சுற்றாடலில் இருந்து ஆரம்பிக்கும் என்ற கருத்து மக்கள் மத்தியில் காணபட்டது. அதனால் அதிகளாவாக திரண்டு வந்து மசூதி் தடைச்சட்ட மூலத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்கள்.

315218_1_xio-fcmsimage-20091014010033-00

http://www.bfs.admin.ch/bfs/portal/de/index/themen/17/03/blank/key/2009/05.parsys.85174.3.photo.Photogallery.gif

Edited by tulpen
எழுத்து பிழை திருத்தபட்டது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.