Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'பிரபாகரன் அஞ்சினார்'

Featured Replies

3 hours ago, MEERA said:

நீங்கள் ஊட்டினால் அவர் எழுதுவார். 

அப்படியானால் இப்போது ஜெயராஜ் எழுதுவது இல்லை என்று கூறுகின்றீர்கள்? நான் எனக்கே ஊட்டுவதற்கு திண்டாடிக்கொண்டு இருக்கின்றேன். :wub:

  • Replies 95
  • Views 10.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 3/26/2016 at 6:47 AM, goshan_che said:

புலியை துதிபாடிக்கொண்டு, புலியை இம்மியளவும் விமர்சிக்காமல் இனப்படுகொலை, போர்குற்றம் என்ன சொன்னாலும் அதை யாரும் சட்டை செய்யப்போவதில்லை.

09-16 வரையான அனுபவங்களில் இருந்து இது தானியக்கமாய் உணரப்படவேண்டும்.

எனவே புலியை பேசளவில் ஏனும் விமர்சிப்பது புதிய தலைமையாய் வரப்போகிறவர்களுக்கு அவசியமாகிறது. 

புதிய தலைமுறைத் தலைமையானது புலிகளின் பிழைகளுக்கு பொறுப்புக் கூற தேவையற்ற முறையில் ஒரு புலி-நீக்கத்தலைமையாக அமையும் போது புலியின் பாவங்களை அவர்கள்தலையில் கட்டி, அதன்மூலம் தமிழரை முடக்குவது சுலபமாயிராது.

உதாரணத்துக்கு சம்பந்தனை இன்று வரைக்கும் புலிப் புரொக்சி (proxy) என்று சொல்லி மட்டம் தட்டுவது போல்   சீவி சுமந்திரனை செய்ய முடிவதில்லை. காரணம் அவர்கள் புலிச்சாயம் குறைவானவர்கள்.

சீவி தானாகவே சில செயல், அறிக்கைகள் மூலம் தன்மேல் புலிச்சாயம் விழுமாறு பார்த்துக்கொள்கிறார். இதனாலேயே அவர் சொல்லும் பல காத்திரமான விடயங்கள் கவனத்தை ஈர்க்காமல் போகிறன. முன்பு இருந்தது போல் ராஜதந்திரிகள் கலந்து பேசும் அளவுக்கு சீவிக்கு இப்போ விரும்பபடுவராக இல்லை.

இந்த இன்புளுவன்சை அவர் இழந்ததால் தமிழர் உரிமைப் பயணம் பின்னடைவை சந்தித்ததா? நிச்சயமாகா ஆம்.

நீங்கள் திரும்பவும் சிங்கள இந்தியர்கள் வெற்றியை கொண்டாடுவோம் 
வாருங்கள் என்றுதான் என்னை அழைக்கிறீர்கள்.

நாங்கள் புலிகள் என்று கூறி சாதிக்க கூடிய நிலமை  இன்று இல்லை 
என்பதை 2005 பேச்சுவார்த்தை நடக்கும்போதே நான் உணர தொடங்கி விட்டேன்.

நாம் இன்படுகொலையால் பாதிக்கபட்ட மக்கள் என்ற ரீதியில் மட்டுமே 
நாம் சாதிக்க முடியும்.

மற்றைய படி புலியை தெரியாது 
அமேரிக்கா வந்து கை குலுக்குது 
இந்தியா விசா தந்து அழைக்குது எல்லாம் 
அவர்கள் வென்று  கொண்டு இருக்கிறார்கள் ............... நாம் இன்னமும் அடி பாதாளத்தில் போய்கொண்டு 
இருக்கிறோம் என்பதே பொருள்.

இன்றைய சிங்கள சமன்பாட்டில் நாம் எதுவும் பெற முடியாது 
ஆனால் இன்றைய எமது தளராத பரப்புரையால் 
நாளைய உலகை எமக்கு சாதகம் ஆக்க முடியும் என்றுதான் நான் சொல்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 24 March 2016 at 0:33 PM, பகலவன் said:

கிருபன், 

தலைவர் இந்த புலிகள் இயக்கத்தை தன்னுடன் இந்த போர் முடிவில் அழிக்கவே தீர்மானித்து இருந்தார். இதை வழிநடத்த கூடிய தளபதிகளையும் சேர்த்து. அதை அந்த தளபதிகளும் உணர்ந்து தான் கடைசிவரை சண்டை பிடித்து தங்களை மாய்த்தார்கள். 

.........

கிருபன் நீங்களே சொல்லுங்கள், 

புலிகளிடம் கடைசியில் எஞ்சி இருந்த ஆயுதங்கள் தான் என்ன.? எறிகணைகள் அற்ற ஆட்டிலெறி பீரங்கிகள் (புட்டு அவிக்க கூட பயன்படுத்த முடியாதவை).

.......

அப்போ எந்த ஆயுததுக்ககாக மக்களை பணயம் வைத்தார் தலைவர். தலைவர் இந்த இறுதிப்போரில் ஒரு கட்டத்தில் தன்னையும் அழித்து தான் உருவாக்கிய  இந்த புலிகள் இயக்கத்தையும் அழிக்க தீர்மானித்தார்.

அதுவே அவரை நம்பி மாண்ட போராளிகளுக்கு அவர் செய்யும் நன்றி கடனாக நினைத்தார். இதை தவிர அவருக்கு செய்வதற்கு வேற வழியே இருக்கவில்லை.

பகலவன்,

நீங்கள் குறிப்பிட்டதுபோன்று புலிகள் இயக்கத்தையும் தன்னையும் அழிக்க எடுத்த முடிவு 2006 இல் மாவிலாற்றில் யுத்தத்தை ஆரம்பித்தபோது இல்லைத்தானே. அந்த நேரத்தில் ஆயுத பலம் மீதான அதீத நம்பிக்கைதானே பேச்சுவார்த்தை மூலம் ஒரு தீர்வை எட்டுவதை தட்டிக் கழிக்க வைத்தது.

யுத்தம் எதிர்பார்த்த வெற்றிகளைத் தராது என்ற நிலையில் தனிச் சமூகமாக உருவாகியிருந்த புலிகளை அழிக்க நினைத்த தலைவர், நம்பியிருந்த மக்களையாவது முள்ளிவாய்க்கால் வரை கூட்டிச் சென்றிருக்காமல் விட்டிருக்கலாம். 

இதைத் தவிர வேறு ஒன்றையும் சொல்லத் தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
On 22.3.2016 at 8:32 PM, பகலவன் said:

உண்மைகளும் அதை சுமப்பவர்களும் அமைதியாக பார்த்து கொண்டே தான் இருக்கிறார்கள்.

மேலே கோசான் கூறியது போல புலி, தலைவர் பிரபாகரனுடன் முடிந்துவிட்டது. இனிமேலும் நீங்கள் யாரவது மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்றால் புலி என்ற முத்திரை இல்லாமல் நல்லது செய்து காட்டி உங்களுக்கு ஒரு அடையாளத்தை பெற்று கொள்ளுங்கள். 

அது தான் நீங்கள் புலிகளுக்கும் தலைவருக்கும் செய்யும் மிகப்பெரிய நன்றிக்கடன்.

இந்தத் துணிவு யாருக்காவது உண்டா? 

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் உயிருடன் இல்லை என்பது எப்போது உறுதியாகின்றதோ...! அதன்பின்னர், 'நான் ஏன் தோற்றேன்..?  என்னுடைய தளபதிகள் என்னென்ன மனித உரிமை மீறல்களை சிங்கள மக்களுக்கு மட்டுமல்ல, தமிழ் மக்களுக்கும் எதிராகச் செய்தார்கள், என்று தன்னுடைய தளபதிகள்மேல் குற்றம்கூறி விமர்சிக்கும் புத்தகங்கள்...!! பிரபாகரனால் எழுதப்பட்டதாக சிறீலங்காவில் வெளிவரலாம்...1 வரலாம்மில்லை..!! வரும்..!!! இதற்குக் கட்டியம் கூறிநிற்கிறது; விடுதலைப் புலிகளின் மகளிர் அமைப்பு அரசியல் பிரிவுத் தலைவியாகச் செயற்பட்ட தமிழினி என்றழைக்கப்பட்ட சுப்ரமணியம் சிவகாமி எழுதி வெளிவந்த புத்தகம்.... :innocent:

தமிழினி என்ன எழுதினாரோ..? என்னென்ன அதற்குள் புகுத்தப்பட்டதோ...?? யாருக்கும் தெரியாது. ஆனாலும் அனைத்தும் பொய் என்று சொல்லமுடியாதபடி, தமிழினி எழுதப் பேனாவிற்கு மைபோட்டுக் கொடுத்தவர்கள்...! யாழ்களத்திலும் புகுந்து உண்மைதான் என்று அடித்துச் சொல்கிறார்களே...??? :shocked: :(

என்னம் ஒரு தீர்வும் வரேல்லையே. நான் நினைச்சேன் உண்மைகளை பேசி மனம்வருந்தி மன்னிப்புகேட்டு ஒரு நல்லிணக்கத்துடன்கூடிய சமாதானம் வந்திருக்கும் எண்டு. 

என்ன பிரச்சனையென்றால் சிங்களவனை விட நம்மட ஆக்களுக்கு தான் நாட்டுப்பற்று அதிகம். ம்ம் எங்கே போய் முட்டுவது.  

  • கருத்துக்கள உறவுகள்

உலக தேசிய இனங்களின் நாடுகளின் நீண்ட வரலாற்றில்  பெரும்பாலும் எல்லா போராட்டங்களுமே பெருந்தோல்விகளைச் சந்தித்திருக்கின்றன.வியட்நாம் மக்களின் நீண்ட மாறி மாறி வெற்றி தோல்விகளைச் சந்தித்த தொடர் போராடங்கள் இதற்க்கு நல்ல உதாரணம்.  

சென்யாட்சன் போற்றபட்ட அதேசமயம் அவரது பாதையையின் சரிகளை தக்கவைத்து பிழைகளை  விமர்சித்து பொருத்த மான பாதையை தேடியதே சீனாவின் வெற்றியாகியது. அதேபோல கியூப புரட்சியாளர்கள் தங்கள் முன்னோடியாக யோசே மாட்டியையும் நிக்காரக்குவா புரட்ச்சியாளர்கள் சான்டிஸ்டாவையும் பேணிய அதேசமயம் விமர்சன ரீதியாக தவறுகளைத் திருத்தி தங்கள் பாதைகளைக் கண்டு கொண்டனர்.

இதுதான் உலக தேசிய இனங்களின் விடுதலை வரலாறு நமக்கு கற்பிக்கும் பாடம். நமக்கு வேறு பாதையிலை. 

கழிதலும் புகுதலும் வழுவில

  • கருத்துக்கள உறவுகள்

பொட்டம்மான் ஆவணங்களை எரிக்க உத்தரவிட்டமை பற்றி 

இறுதிப்போரில் போராளிகளின்  இராணுவ உத்திகள் பற்றிய  சரி பிழைகளூடு  இடம்பெற்ற 100% சரியான நடவடிக்கை. இறுதின் இறுதியில் ஆவணங்கள் அனைத்தையும் அழித்ததே ஆகும். பேரழிவு தருணத்திலும்கூட மரணத்துக்கு அஞ்சாது தங்கள் உயிரைவிட  போராட்டத்துக்கு தங்களுக்கு உதவியவர்களை நாளைய வரலாற்றுக்கு அவசியமானவர்களை பாதுகாக்கவேண்டும் பொறுப்புணர்வோடு செயல்பட்ட போராளிகளைத் தலை பணிந்து வணங்குகிறேன்.   இது இனகொலை தருணத்திலும் ஈழ மக்களின் விடுதலை நிச்சயம் ஒருநாள் நிதர்சனமாகுமென்ற போராளிகளின் நம்பிக்கையின் வெளிபாடாகும். 

இது மிக சரியான மிக மிக அடிபடையும் அவசியமுமான தரமான இராணுவ விஞான நடை முறையாகும். 

ஆவணங்களை எரிக்கும் கட்டளையை தம் மரண தருணத்திலும் முழுமையாக நிறைவேற்றிய  போராளிகளுக்கு, எவருக்கும்  பணியாத என் தலை பணிந்து அஞ்சலிக்கிறேன்.

இலங்கையில் பலர் - வெளியில் இருந்து இலங்கை சென்ற பலர் சென்று திரும்பிய பலர் இன்னமும் உயிருடன் இருப்பதற்க்கு அவர்களின் தியாகமே காரணம் என்பதை ஒருபோதும் மறக்க இயலாது 

தமிழ் பேசும் மக்களின் ஈழ தாய் மண்ணில் எனது தலைமுறையின் குறைந்த பட்ச்ச இலக்கு ஜனநாயக இணைபாட்ச்சி (DEMOCRATIC CONFEDERATION) என

 என் மிகுதி நாட்களை வாழ்வேன் தோழர்களே. 

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, poet said:

நன்றி  தோழர்.....

தமிழினியும்  தன்னை  வெள்ளை   அடிபதற்காக எழுதி உள்ளார் அல்லது எழுத வைக்கப்படுள்ளார் .

தமிழினி நீண்ட  ஒரு உளவியல் தயார்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுள்ளார்   என்பது அவர் எழுத்தில்  இருந்து தெரிகிறது.

இதில் எழுதாதவர்கள், எழுத முடியாதவர்கள்  பாவிகள் ஆக்கப்படுள்ளனர் .

 பதினாறு வயதில் வீட்டை விட்டுச் சென்ற ஒரு பாலகன் தன் சக்திக்கு அப்பாற்பட்ட சக்திகளோடு மோதி  தன் இனத்தின் விடுதலைக்காக எல்லாப் பாவங்களையும் இழப்புக்களையும் தாங்கிச் சிலுவையில் அறயப்படுகிறான்.

 இதில் எல்லாத் துயருக்கும் காரணமான பிரம்மாக்கள் இன்றும் நியாயவான்களாக உலா வருகின்றனர்.   இவர்களை அடையாளப்படுத்துவதை  விடுத்து,   நாம் போராட்டத்தைத்  தொடர்வதை விடுத்து,    இவ்வாறான உளவியல் போரை அடையாளாம் காண்பதை விடுத்து மீண்டும் மீண்டும் நம்மையே சிலுவையில் அறைகிறோம் .

 பிரபாகரனைத் தலைவன் ஆகியதில், முழுத் தமிழச் சமூகத்திற்கும் பொறுப்பு   இருக்கிறது. பிராபகரனின் செயற்திறன், நேர்மை, அர்ப்பணிப்பு ,தியாகம் இதற்கு நிகராக என்னால் இந்த உலகில் எவரையும் காணமுடியாது. அந்த மனிதனுக்கும் எல்லைகள் உண்டு என்பதை நாங்கள் மனிதர்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

எல்லாப் பாவங்களையும் அவரிடம் சேர்ப்பது நாம் எமது ஆன்மாவுக்குச் செய்யும்   வஞ்சகம் .   

5 minutes ago, narathar said:

சரியாக சொன்னீர்கள் நாரதர் 

இது விளங்கினாலே பாதி தமிழீழம் கிடைச்ச மாதிரித்தான்.

புதுப்புது விளக்கத்தோட கொஞ்சப்பேர் திரியினம். 

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, narathar said:

தமிழினியும்  தன்னை  வெள்ளை   அடிபதற்காக எழுதி உள்ளார் அல்லது எழுத வைக்கப்படுள்ளார் .

தமிழினி நீண்ட  ஒரு உளவியல் தயார்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுள்ளார்   என்பது அவர் எழுத்தில்  இருந்து தெரிகிறது.

இதில் எழுதாதவர்கள், எழுத முடியாதவர்கள்  பாவிகள் ஆக்கப்படுள்ளனர் .

 பதினாறு வயதில் வீட்டை விட்டுச் சென்ற ஒரு பாலகன் தன் சக்திக்கு அப்பாற்பட்ட சக்திகளோடு மோதி  தன் இனத்தின் விடுதலைக்காக எல்லாப் பாவங்களையும் இழப்புக்களையும் தாங்கிச் சிலுவையில் அறயப்படுகிறான்.

 இதில் எல்லாத் துயருக்கும் காரணமான பிரம்மாக்கள் இன்றும் நியாயவான்களாக உலா வருகின்றனர்.   இவர்களை அடையாளப்படுத்துவதை  விடுத்து,   நாம் போராட்டத்தைத்  தொடர்வதை விடுத்து,    இவ்வாறான உளவியல் போரை அடையாளாம் காண்பதை விடுத்து மீண்டும் மீண்டும் நம்மையே சிலுவையில் அறைகிறோம் .

 பிரபாகரனைத் தலைவன் ஆகியதில், முழுத் தமிழச் சமூகத்திற்கும் பொறுப்பு   இருக்கிறது. பிராபகரனின் செயற்திறன், நேர்மை, அர்ப்பணிப்பு ,தியாகம் இதற்கு நிகராக என்னால் இந்த உலகில் எவரையும் காணமுடியாது. அந்த மனிதனுக்கும் எல்லைகள் உண்டு என்பதை நாங்கள் மனிதர்களாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.

எல்லாப் பாவங்களையும் அவரிடம் சேர்ப்பது நாம் எமது ஆன்மாவுக்குச் செய்யும்   வஞ்சகம் .   

தலைவரை  நோக்கி

தமிழினி கை நீட்டியிருக்கமாட்டார்

யாரோ தூக்கி நீட்டுகிறார்கள்

இதுவும் கடந்து போகும்.....

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, narathar said:

 உங்கள் நேரத்துக்கு நன்றி!

யேசுவின் தலையிலே முள் முடி சூடிப்பார்த்த உலகு, யேன் டீ ஆர்க்கிற்குத் தீவைத்த உலகு. இதில் தேசியத்தலைவரவர்கள் எம்மாத்திரம். 

தமிழினி எழுதியது பொய் ஆனால் அதில் இருந்து பொயட் ஒரு பந்தியை இணைத்தால் பச்சை ,

எங்கு போய் முட்டுவது ,

இப்படித்தான் யாழில் பலர் நிலை என்னவென்று வாசிக்காமலே யார் எழுதினார்கள் என்று பார்த்து பச்சையும் பின்னோட்டமும் வரும் .

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, arjun said:

தமிழினி எழுதியது பொய் ஆனால் அதில் இருந்து பொயட் ஒரு பந்தியை இணைத்தால் பச்சை ,

எங்கு போய் முட்டுவது ,

இப்படித்தான் யாழில் பலர் நிலை என்னவென்று வாசிக்காமலே யார் எழுதினார்கள் என்று பார்த்து பச்சையும் பின்னோட்டமும் வரும் .

புரியவில்லையே நண்பா......இங்கு அல்லது தனிமடலில் எனக்கு புரியும்ம் படி எழுதுங்க

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, arjun said:

தமிழினி எழுதியது பொய் ஆனால் அதில் இருந்து பொயட் ஒரு பந்தியை இணைத்தால் பச்சை ,

எங்கு போய் முட்டுவது ,

இப்படித்தான் யாழில் பலர் நிலை என்னவென்று வாசிக்காமலே யார் எழுதினார்கள் என்று பார்த்து பச்சையும் பின்னோட்டமும் வரும் .

முதலில் தமிழினி எழுதியதை வடிவாக வாசித்துப்பாருங்கள் பின் poet எழுதியிருப்பதை வாசியுங்கள். இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் விளங்கவில்லைஎன்றால்
 
முன்பு வைரவன் எழுதியதுதான் உங்களுக்கு சாலப்பொருந்தும்
  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜீன் அண்ணா,நீங்கள் இந்த புத்தகத்தை வாசித்தீங்களோ தெரியாது!...தமிழினி,பொட்டம்மான் ஆவணங்களை எரிக்க சொன்னது பற்றி எதிர் மறையாகவே எழுதி இருந்தார்.அதைத் தான் இங்கு எல்லோரும் பொயட் உட்பட விமர்சிக்கிறார்கள்.அதாவது தமிழினி எழுதியது பிழை.பொட்டர் செய்தது சரி தான் என எல்லோரும் சொல்கிறார்கள்

3 hours ago, poet said:

புரியவில்லையே நண்பா......இங்கு அல்லது தனிமடலில் எனக்கு புரியும்ம் படி எழுதுங்க

உங்கள் பதிவில் தவறு இல்லை ,

தமிழினி என்ற பெயரில் எவரோ எழுதிய குப்பை தான் அந்த புத்தகம் என்றல்லோ சண்டை நடக்கு .

3 hours ago, Eppothum Thamizhan said:
முதலில் தமிழினி எழுதியதை வடிவாக வாசித்துப்பாருங்கள் பின் poet எழுதியிருப்பதை வாசியுங்கள். இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் விளங்கவில்லைஎன்றால்
 
முன்பு வைரவன் எழுதியதுதான் உங்களுக்கு சாலப்பொருந்தும்

நான் கேட்ட கேள்விக்கு வைரவன் முதல் சண்டமாருதன் வரை பச்சை குத்திய எவருமே பதில் அழிக்கவில்லை .

போராட்டம் இப்படி முடிந்ததற்கு அவர் தந்த விளக்கம் அனைத்து இயக்கங்களையும் போராளிகளையும் கொச்சைபடுத்துவது போலாகும் .

**************

Edited by நியானி
சீண்டும் கருத்து நீக்கப்பட்டுள்ளது.

14 hours ago, விசுகு said:

தலைவரை  நோக்கி

தமிழினி கை நீட்டியிருக்கமாட்டார்

யாரோ தூக்கி நீட்டுகிறார்கள்

இதுவும் கடந்து போகும்.....

விசுகு ,

 இதை தமிழனி எழுதினாரா இல்லையா என்னும் விவாதத்திற்குள் நான் இறங்கவில்லை , ஏனெனில்  அது  எனக்குத்  தெரியாத விடயம். ஆனால் அந்தப் புத்தகத்தை வாசித்ததில் இருந்து நான் புரிந்து  கொண்டது, அதை எழுதியவர் மிகவும் குழப்ப நிலையில் இருந்து அதை எழுதி உள்ளார் என்பதே. உதாரனத்திற்கு .

வரி விதிப்பின் மீது விமரிசனம் வைக்கிறார், அதே  நேரம்  போராளிக்களுக்கு   சாப்பாடு இல்லை வசதிகள் இல்லை என்றும் விமரிசனம் வைக்கிறார். அப்படியாயின் தலைவர் என்ன மரத்தில் இருந்தா காசை எடுப்பது?

முள்ளிவாய்க்கால் கடைசி நிமிடம் வரை ஆட்சேர்ப்பில்  ஈடுபட்ட தமிழனி அதனையும் விமர்சிக்கிறார். இதில் தமிழனிக்குப் பங்கு இல்லையோ ? பல இடங்களில் தான் மவுனமாக இருந்தேன்  என்கிறார் . ஏன் ? தலைமை செய்வது சரி என்பதை அமோதித்தால்  தானே ?  சரியான ஒன்று பின்னர் பிழையாகிப் போனது, தோல்வியின் பின்னர் தானே ? வென்று இருந்தால், இதனைப் பிழை என்று எழுதி இருப்பாரோ ?  ஆகவே இங்கு சரி பிழை என்பது வெற்றி தோல்வியில் இருந்து பார்க்கப்படுகிறது. இது வெறும் உணர்வு சார்ந்த பார்வை. அறிவு சார்ந்தது கிடையாது.

போராட்ட விமரிசனம் என்பது தன்னிலை சார்ந்த உணர்வின் அடிப்படையில் செய்யப்பட முடியாது. அது அறிவு சார்ந்தே முன் வைக்கப்பட வேண்டும் . அவ்வாறான விமர்சினத்தை தமிழனி செய்ய வில்லை. ஆகவே இதை தமிழினியின் ,  உணர்வு சார்ந்த ,   போராடப் போன ஒரு சாதாரணப் பெண்ணின்  , தோல்வி அடைந்த போராட்டத்தில் , தன்னைச் சரியென நிறுத்தும் உணர்வு சார்ந்த வெளிப்பாடாக மட்டுமே பார்க்க முடியும். இது அறிவு சார்ந்த விமரிசனமோ, போராட்டத்தில் தாக்கம் செலுத்திய பூகோள  நலன் சார் சக்திகளின், சிறிலங்கா அரசின் மனித விரோத செயற்பாடுகள் பற்றிய விமரிசனமோ கிடையாது. இதில் சொல்லப்பாடாத விடயங் களே இதன்  பின்னால் இருக்கும் அரசியலையும், உளவியலையும் அதன் பின்னால் இருக்கும் சக்திகளையும் இனம் காட்டுகின்றன .   
 
On 3/30/2016 at 3:40 AM, arjun said:

தமிழினி எழுதியது பொய் ஆனால் அதில் இருந்து பொயட் ஒரு பந்தியை இணைத்தால் பச்சை ,

எங்கு போய் முட்டுவது ,

இப்படித்தான் யாழில் பலர் நிலை என்னவென்று வாசிக்காமலே யார் எழுதினார்கள் என்று பார்த்து பச்சையும் பின்னோட்டமும் வரும் .

உண்மையில் புரியாது புரிந்த மாதிரி நன்றாகவே நடிக்க வருகின்றது .....

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்
On 3/31/2016 at 1:10 AM, arjun said:

தமிழினி எழுதியது பொய் ஆனால் அதில் இருந்து பொயட் ஒரு பந்தியை இணைத்தால் பச்சை ,

எங்கு போய் முட்டுவது ,

இப்படித்தான் யாழில் பலர் நிலை என்னவென்று வாசிக்காமலே யார் எழுதினார்கள் என்று பார்த்து பச்சையும் பின்னோட்டமும் வரும் .

புரியவில்லையே நண்பா......இங்கு அல்லது தனிமடலில் எனக்கு புரியும்ம் படி எழுதுங்க

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.