Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்லாட்சியிலும் கோரமான இராணுவ ஆட்சியே நடைபெறுகிறது!

Featured Replies

நல்லாட்சியிலும் கோரமான இராணுவ ஆட்சியே நடைபெறுகிறது!
 
நல்லாட்சியிலும் கோரமான இராணுவ ஆட்சியே நடைபெறுகிறது!
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ள போதிலும் வடமாகாணத்தில் சிவில் நிர்வாகம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று தெரிவித்த வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு ஒப்பான கோரமான இராணுவ ஆட்சியே நடைபெற்று வருகின்றது என்றும் குறிப்பிட்டார்.
 
வடமாகாணத்தில் இடம்பெறும் காணி சுவீகரிப்பு, சட்டவிரோத நில அளவீடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை எதிர்வரும் 18ஆம் திகதி சந்தித்து முறையிடவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
 
வடமாகாண சபையின் 49ஆவது அமர்வு கைதடியிலுள்ள மாகாண சபை கட்டடத் தொகுதியில் இன்று நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே முதலமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
 
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் வடக்கில் சிங்கள பெளத்த மயமாக்கலுக்கே முப்படையினரும் இங்கே தங்கவைக்கப்பட்டிருக்கின்றார்களே தவிர தேசிய பாதுகாப்புக்கு இங்கே படையினர் இல்லை.
 
கொக்குத்தொடுவாய் பகுதியில் கிராமசேவகர் தாக்கப்பட்ட சம்பவத்தில் இராணுவம் சிங்கள மீனவர்களுக்கு ஒத்துழைப்பை வழங்கியிருக்கின்றது.
 
இந்த நிலையில் வடமாகாணத்தில் தேசிய பாதுகாப்பின் பெயரால் முப்படையினர் நிறுத்திவைக்கப்படுகின்றார்கள். ஆனால் தேசிய பாதுகாப்பிற்காக அவர்கள் இங்கே இல்லை. அவர்கள் சிங்கள பெளத்த மயமாக்கலை பாதுகாப்பான முறையில் மேற்கொள்ளவே படையினர் இங்கே இருக்கின்றார்கள்.
 
முல்லைத்தீவு மாவட்டத்தில் மகிந்த ஆட்சியில் கடற்றொழில் அமைச்சராக இருந்த ராஜித சேனாரத்ன மற்றும் தற்போதைய கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீர ஆகியோர் குறித்த சிங்கள மீனவர்களை வெளியேற்றுவோம் என கூறியும் அவர்கள் வெளியேற்றப்படவில்லை. அவர்களுக்கு படையினர் பாதுகாப்பு வழங்குகிறார்கள் என்றால் இங்கே நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சியிலும் சிவில் நிர்வாகம் நடைமுறைக்கு வரவில்லை. மாறாக மகிந்த ஆட்சிக்கு ஒப்பான கோரமான ஆட்சியே நடக்கின்றது
 
  • கருத்துக்கள உறவுகள்

விக்கி ஐயா  நீங்கள் இப்படி அறிக்கை விடுகின்றீங்கள்.
ஆனால் ஊரில் நிலைமை வேறு என்றும்  ......வட மாகாணம் சொர்க்க பூமியாக மாறி விட்டதாகவும்   சிலர்  இங்கு களத்தில்  கும்மி அடிக்கின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாட்சியில்.. பாலும் தேனும் ஓடவில்லையே தவிர.. ஆசுவாசமா வாழ முடியுதுன்னு சிலர் ஆசுவாசப்படுகிறார்கள். ஆனால் கொழும்பில் வாழ்ந்து பழகிய விக்கி ஐயாவுக்கு வடக்கில் வாழும் போது இந்த ஆசுவாசம் உணரப்பட முடியவில்லயே...!!

அவரும் சம் சும் கும்பல் போல வடக்குக் கிழக்கில் தேர்தலில் நின்றுவிட்டு கொழும்பில் குடித்தனம் நடத்தினால்.. நல்லாட்சியின் ஆசுவாசத்தை உணரலாமோ என்னமோ..??! tw_blush:tw_angry:

பாவம் விக்கியர் புலம்பெயர்ந்தவர்கள் விரித்த வலையில் விழுந்து நாட்டு அரசியலை தொலைத்துவிட்டார் ,

இனி மெல்ல குமாரின் சயிக்கில் கரியரில் ஏறிக்குந்தவேண்டியத்துதான் 

குமாரிண்ட சைக்கிளுக்கு காத்துபோய் நிக்குது. பக்கிள் அடிச்சு துருப்பிடிச்சு கொக்குவில்லை விட்டுக்கிடக்கு  

  • கருத்துக்கள உறவுகள்

அதைப்பற்றி தெரியாது, நாங்கள் சைக்கிளில் ஏற்றியே தீருவம்

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் விக்கியர் நாட்டு அரசியலை ............ புரிஞ்சுக்கவே மாட்டார் போல இருக்கு.

கொக்குதொடுவாயில் சிறப்பு இராணு சிப்பாய்கள் கன்னத்தில் கிள்ளியதை 
தாக்கினார்கள் என்று அபாண்ட பழி சுமத்துகிறார். 

வீணாக இனவாத்தின் அடிவருடி  புல்லுருவிகளின் எதிர்ப்பை சம்பாரித்து 
அரசியலில் இருந்து ஓரம் கட்டிவிட பட போகிறார். 

எங்கள் இராணுவ சிப்பாய்களை பற்றி இப்படி பேசுகிறாரே?
அவர்கள் இரத்தம் எப்படி கொதிக்கும் .....?

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Surveyor said:

குமாரிண்ட சைக்கிளுக்கு காத்துபோய் நிக்குது. பக்கிள் அடிச்சு துருப்பிடிச்சு கொக்குவில்லை விட்டுக்கிடக்கு  

சைக்கிளை   கொக்குவிலில் கண்டு பிடித்தது போல்

எங்கள் வீட்டையும் ஒருக்கால் கண்டு பிடித்து சொல்லமுடியுமா??

அவ்வளவு இலேசான விசயமல்ல

காலம் எடுத்துக்கொள்ளவும்...:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஹி ...ஹி ...இப்போதும் நாங்கள் கூறுவது நிலைமை முன்பை விட பரவாயில்லை என்பதையே ...தப்பே நடக்கவில்லை என்று யாரும் கும்மியடிக்கவில்லை.....ஐயாவும் அறிக்கையை விட்டுவிட்டு படுத்து தூங்கவேண்டியது தான் .....ஒரு மண்ணும் நடக்காது ...இங்கே பிறந்தவர்கள் இங்கே தான் வாழவேண்டியவர்கள் ....வாழ்ந்து தான் ஆகவேண்டும் ...இரண்டு பேய்களில் நல்ல பேய் எது  என்று பார்த்து குடும்பம் நடத்தவேண்டியது தான் எங்களிடம் இருக்கும் ஒரே தெரிவு ....அதை விட்டு இது ஒரு உருப்படாத நாடு என்று கூவிக்கொண்டு கடலில் விழலாம்,கழுத்தை வெட்டி சாகலாம்  ...சிங்களவன் , முஸ்லிம்கள்  தவிர இதனால் வேறு ஒருவருக்கும் ஒரு பிரயோசனமும் இல்லை....சும்மா சப்பை கட்டு கட்டாமல் உங்களால் முடிந்தால் இங்கிருக்கும் எல்லா தமிழர்களையும் வெளி நாட்டிற்க்கு எடுத்துவிடுங்கள் ...புண்ணியமாக போகும்      

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, arjun said:

பாவம் விக்கியர் புலம்பெயர்ந்தவர்கள் விரித்த வலையில் விழுந்து நாட்டு அரசியலை தொலைத்துவிட்டார் ,

இனி மெல்ல குமாரின் சயிக்கில் கரியரில் ஏறிக்குந்தவேண்டியத்துதான் 

அட,  தமிழ்ப்பகுதிகளில் நிலை கொண்டுள்ள ராணுவம் சிங்கள பௌத்த மயமாக்கலுக்குத் துணைபோவதாகக் கூறிய விக்கி ஐயாவின் கருத்திற்கு
நீங்கள் ஏன் அண்ணை சைக்கிள்ளை போய் மோதுறீங்க
புலம்பெயர்ந்த கதை அளக்கிறீங்கள்

10 minutes ago, வாத்தியார் said:

அட,  தமிழ்ப்பகுதிகளில் நிலை கொண்டுள்ள ராணுவம் சிங்கள பௌத்த மயமாக்கலுக்குத் துணைபோவதாகக் கூறிய விக்கி ஐயாவின் கருத்திற்கு
நீங்கள் ஏன் அண்ணை சைக்கிள்ளை போய் மோதுறீங்க
புலம்பெயர்ந்த கதை அளக்கிறீங்கள்

நாட்டு அரசியல் நடப்புகள் தெரிந்தால் இந்த கேள்வி வராது .

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, arjun said:

நாட்டு அரசியல் நடப்புகள் தெரிந்தால் இந்த கேள்வி வராது .

நாட்டு  அரசியல் நடப்புக்கள் பற்றி  இலங்கையிலிருந்து கனடாவிற்கு நேரடி ஒளிபரப்பு நடக்கின்றதா?tw_blush:

'A complicated grief,' says aunt of Attawapiskat teen who took her own life

Eleven in one night.

That's how many people tried to take their own lives in the northern Ontario Attawapiskat First Nation this past Saturday.

இந்த செய்தியை இங்கு இணைக்க வேண்டிய தேவை வந்ததற்கு காரணம் நான் கனடா வந்த நாள் முதல் கனேடிய பழங்குடி மக்களின் பிரச்சனை  பற்றி மாறிமாறி வரும் கனேடிய அரசுகள் பேசிக்கொண்டே இருக்கின்றார்களே ஒழிய எந்த விதமான ஆக்கப்பூர்வமான தீர்வுகள் இதுவரை இல்லை .

இவ்வளவு நாகரீகம் அடைந்த வளமுள்ள மேற்கத்தைய நாடு ஒன்றில் அந்த நாட்டின் சொந்த மக்களுக்கு இந்த அவலநிலை இன்றும் தொடருது .வெளியில் இருந்து அழுத்தம் கொடுக்க கூடிய நிலையில் அவர்கள் இல்லை கனேடிய ஊடகங்கள் அவர்கள் செய்திகளுக்கு முன்னுரிமை கொடுப்பதில்லை .இளம் பெண்கள் காணாமல் செய்யும்  போலிஸ் துஸ்பிரயோகம் இன்றுவரை தொடர்கின்றது . 

இந்த செய்தியை போட்டு இலங்கையில் நடக்கும் பிரச்சனையை நியாயப்படுத்தவரவில்லை யுத்ததிற்கு பின்னால் வந்த மைத்திரி அரசு கூட நாட்டில் பலரும் நினைத்த அளவிற்கு மாற்றத்தை கொண்டுவரவில்லை ஆனால் பல மாற்றங்கள் வந்திருக்கு என்பதையும் மறுப்பதற்கில்லை .

ஓர் இரவில் தீர்வு வரப்போவதில்லை அதுவரை இருக்கும் அதிகாரத்தை வைத்து  முடிந்தவற்றை மக்களுக்கு மாகாணசபை செய்யவதுதான் நன்மை பயக்கும் அதை விட்டு கடந்த பொது தேர்தல் தொடங்கிய நேரம் தொட்டு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் வெறுமன எருமாறாக அறிக்கை விடுவதிலேயே காலத்தை செலவழிக்கின்றார் என்றுதான் பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள் .

யாழ்பாணத்தில் இருந்து பழைய நண்பர் ஒருவர் ஒருமாதம் நின்றுவிட்டு சென்றார் .அரசியலில் மிகவும் ஈடுபாடு உள்ளவர் .பாராளுமன்ற உறுப்பினர்களும் சரி .மாகாணசபை உறுப்பினர்களும் சரி ஒரு சிலரே மக்கள் பிரச்சனையில் உண்மையான அக்கறையுடன் செயல்படுவதாகவும் மற்றவர்கள் வெறும் அறிக்கையுடன் அரசியல் மட்டுமே செய்கின்றார்கள் என்றார் .விக்கியரையும் அவர் அந்த பட்டியலில் தான் இட்டார் .

20 minutes ago, வாத்தியார் said:

நாட்டு  அரசியல் நடப்புக்கள் பற்றி  இலங்கையிலிருந்து கனடாவிற்கு நேரடி ஒளிபரப்பு நடக்கின்றதா?tw_blush:

இவை எல்லாம் அவரவர் ஆர்வம் சம்பந்தப்பட்ட விடயங்கள்

ஆடிக்கு ஒருக்கா ஆவணிக்க்கு ஒருக்கா பேப்பரை பார்த்து  வாயில் வந்ததை பேசிவிட்டு போவதற்கும் ,

இதே தொழிலாக இருப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கு .

ஒரு மாகாண முதலமைச்சரா விக்கியருக்கு எவ்வளவோ கடமைகள் உண்டு. அவற்றை விட்டுவிட்டு இப்படி ஏதாவது பண்ணினாதான் பிழைப்பு நடக்கும். 

அபிவிருத்தி, அபிவிருத்தி, அபிவிருத்தி -  இதையாவது பண்ணலாமே. 

முடிந்தால் சுவாமிநாதன் சென்னை விமான நிலையத்தில் கொடுத்த பேட்டிய ஒருக்கா கேளுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:நாட்டு  அரசியல் நடப்புக்கள் பற்றி  இலங்கையிலிருந்து கனடாவிற்கு நேரடி ஒளிபரப்பு நடக்கின்றதா?tw_blush:

Google street view இல் போய் நீங்கள் எல்லா இடங்களையும் மெய்நிகராகப் பார்க்கலாம்! நானும் 25 வருடங்கள் போகாத ஒழுங்கைகள் எல்லாம் போய்ப் பார்த்தேன். நன்றாகத்தான் இருக்கின்றார்கள்.

மக்கள் அரசியல் பேசுவது குறைவு. எங்களைப் போலவே நுகர்வோர் கலாச்சாரத்திற்குள் சிக்குப்பட்டுள்ளார்கள். அது நல்லதுதானே!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

சிக்க வைக்க படுகிறார்கள்  இது நல்லது அல்ல ....

ஆப்கானிஸ்தானில் இது 12 வருடம் முன்பே நடாத்தபட்ட ஒன்று 
இப்போ அந்த மக்கள் அல்லல் உறும் நிலைதான் இருக்கிறது.

வரி வாங்கும் நிலையில் மக்கள் இல்லை 
வருமானம் இல்லாத அரசு நிலைமை ?

சோசியல் சேர்விஸ் மட்டுமே இயக்கத்தில் இருக்கும் 
எம்மவர்கள் வெளிநாட்டு பணத்தில் கும்மி அடிப்பதால் 
வர்ணனையாக இருக்கிறது ........ சொந்த வருமானம் கிடையாது.

உள்ளூர் உடமைத்துவம் சுரண்டபட்டு கொண்டிருக்கிறது.
இவர்கள் நுகர்வு சந்தையின் அடிமைகள் ஆகி கொண்டு இருக்கிறார்கள்.

எமக்கான கட்டுமானம்தான் மிக முக்கியாமான ஒன்று 
அதை சிங்கள இனவாத அரசு ஒருபோதும் செய்யபோவதில்லை 
நாம் சம்மந்தனுக்கு வீரர் பட்டம் கொடுத்து கைதட்டி விட்டு இருக்க வேண்டியதுதான். 

  • கருத்துக்கள உறவுகள்

"அடி உதவுவதுபோல அண்ணன், தம்பி கூட உதவமாட்டார்கள்.." என்ற சொல்வழக்கு இங்கே உண்டு..

அதுபோல சிங்களன் ரவுண்டு கட்டி போட்ட போடுல "ஐயோ.. எங்களுக்கு எதுவும் வேண்டாம், நீ கொடுக்குறதை கொடு, இல்லை கொடுக்காட்டாலும் பரவாயில்லை.. நாங்கள் பொத்திக்கிட்டு வாழுறோம்"

இதுவே இலங்கையில் இன்றைய யதார்த்தம்..! தமிழர்களின் துயரமான கையறு நிலை!!

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Maruthankerny said:

அண்மையில் ஒரு செய்தி ஆய்வு இணைத்திருந்தேன். படித்துப் பாருங்கள்.

12 minutes ago, ராசவன்னியன் said:

"அடி உதவுவதுபோல அண்ணன், தம்பி கூட உதவமாட்டார்கள்.." என்ற சொல்வழக்கு இங்கே உண்டு..

அதுபோல சிங்களன் ரவுண்டு கட்டி போட்ட போடுல "ஐயோ.. எங்களுக்கு எதுவும் வேண்டாம், நீ கொடுக்குறதை கொடு, இல்லை கொடுக்காட்டாலும் பரவாயில்லை.. நாங்கள் பொத்திக்கிட்டு வாழுறோம்"

இதுவே இலங்கையில் இன்றைய யதார்த்தம்..! தமிழர்களின் துயரமான கையறு நிலை!!

மன்னிக்கவேண்டும்............சிங்களவன் ரவுண்டுகட்டி போடவும் இல்லை.....அப்படி போடவும் முடியாது.

யார் போட்டது, என்ன நடந்தது என்று கதைக்கவெளிக்கிட்டால் திரி திசைமாறி போய்விடும். 

சிங்களவினிடம் கேட்டாலும் ஒத்துக்கொள்ளுவான்.....அதோட புலி ரவுண்டுகட்டி போட்டதயையும் சொல்லுவான். 

யுத்தம் தந்த வடுக்களில் மக்கள் அமைதி காக்கிறார்கள் என்பது உண்மை. ஆனால் சிங்களவன் பிடுங்கினவன் என்றால் அது கேள்விஞானம்.

சிங்களவனுக்கு செத்த பாம்படிக்கதான் தெரியும் 

Edited by Surveyor

  • கருத்துக்கள உறவுகள்

சொரிலன்காவில் பாலும் தேனும் ஓடுது எனும் கனவில் இருப்பவர்களுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Surveyor said:

யுத்தம் தந்த வடுக்களில் மக்கள் அமைதி காக்கிறார்கள் என்பது உண்மை. .

மன்னிக்கவும், அளவையர்..புண்படுத்தும் நோக்கில் அதை எழுதவில்லை..

ஆனால் மக்களின் மனநிலை, வேறுவழியின்றி "நமக்கு வாய்த்தது அவ்வளவுதான்" என வாழ பழகிவிட்டார்கள் அல்லது வாழ பழக்கபட்டுவருகிறார்கள் எனவும் கொள்ளலாமில்லையா?

7 minutes ago, ராசவன்னியன் said:

மன்னிக்கவும், அளவையர்..புண்படுத்தும் நோக்கில் அதை எழுதவில்லை..

ஆனால் மக்களின் மனநிலை, வேறுவழியின்றி "நமக்கு வாய்த்தது அவ்வளவுதான்" என வாழ பழகிவிட்டார்கள் அல்லது வாழ பழக்கபட்டுவருகிறார்கள் எனவும் கொள்ளலாமில்லையா?

நிச்சயமாக அதுதான் உண்மை. ஆனால் சிங்களவன் எங்களை அடிக்க கொணரந்த ஆக்களிடம் அடி வாங்கத்தொடங்கிவிட்டான். ரணிலின் சீனாப்பயணம் சிறந்த உதாரணம். மகிந்த செய்த மோட்டுவேலை சிங்களவனுக்கு புரியும் போது வெளிநாட்டவரை கலைக்க தமிழரிடம் கைகோர்ப்பான். எங்கடையள் சிலதுகள் கைகோர்க்கும். 
 
2 hours ago, ஜீவன் சிவா said:

ஒரு மாகாண முதலமைச்சரா விக்கியருக்கு எவ்வளவோ கடமைகள் உண்டு. அவற்றை விட்டுவிட்டு இப்படி ஏதாவது பண்ணினாதான் பிழைப்பு நடக்கும். 

அபிவிருத்தி, அபிவிருத்தி, அபிவிருத்தி -  இதையாவது பண்ணலாமே. 

முடிந்தால் சுவாமிநாதன் சென்னை விமான நிலையத்தில் கொடுத்த பேட்டிய ஒருக்கா கேளுங்கோ.

இந்தமுறையும் காசு திரும்பிடும். அவன் அவன் குண்டைகட்டிப்பாய்ஞ்சு நடக்காததை நடத்துவன் என்றார். அபிவிருத்தி தன்னும் செய்தால் மக்கள் வாழ்க்கைதரம் உயரும். 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Surveyor said:

...வெளிநாட்டவரை கலைக்க தமிழரிடம் கைகோர்ப்பான். எங்கடையள் சிலதுகள் கைகோர்க்கும்..

'அப்போதும் தமிழர்கள் ஒன்று சேர மாட்டார்கள்.' என சொல்ல வருகிறீர்கள்..? bouh.gif (சுதந்திரத்தின் போது ஆங்கிலேயர்களிடம் நாட்டை பிரித்து வாங்காமல், சிங்களனிடம் கைகோர்த்ததுபோல..!)

2 minutes ago, ராசவன்னியன் said:

'அப்போதும் தமிழர்கள் ஒன்று சேர மாட்டார்கள்.' என சொல்ல வருகிறீர்கள்..? bouh.gif (சுதந்திரத்தின் போது ஆங்கிலேயர்களிடம் நாட்டை பிரித்து வாங்காமல், சிங்களனிடம் கைகோர்த்ததுபோல..!)

எப்ப ஒன்று சேர்கிறோமோ அன்று விடுதலை 

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Surveyor said:

எப்ப ஒன்று சேர்கிறோமோ அன்று விடுதலை 

b91efef676508293ea0d75d32faa3a0f.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.