Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கன்னியாவிற்கு நடந்த சோகம்!

Featured Replies

கன்னியாவிற்கு நடந்த சோகம்!

இது  திருகோணமலை கன்னியா வெண்ணீர் கிணற்றுக்கு செல்லும் நுழைவு சீட்டாகும். இது சிவ பூமி எனவும் இலங்கையை ஆண்ட இராவணன் தனது தாயின் கிரியைகளுக்காக உருவாக்கிய ஏழு கிணறுகளும் தற்போது இவ் நுழைவு சீட்டில் அனுராதபுர கால பெளத்தர்களுக்கு சொந்தமானது  என்று  உள்ளது .

எது உண்மை. தொல்லியல் தினைக்களத்தில் ஒரு தமிழர் கூடவா வேலை செய்யவில்லை.

http://tamilleader.com/

  • கருத்துக்கள உறவுகள்

மேலே திண்ணையிலை போய்ப் பாருங்கோ.....திண்ணையே..சிங்களமயமாகுது.....இந்த ரிக்கட்டைப் போய் அதிசயமாய் ஆராயிறியள்....

  • கருத்துக்கள உறவுகள்

இதை எங்கட சிங்ககொடி திலகம், திருகோணமலையை 39 வருசமா பிரதினிதித்துவபடுத்தும் சம்பந்தரிடம் எல்லோ கேட்கோணும். அந்தாளுக்குத்தான் நித்திரை கொள்ளவும், எழும்பி பேப்பர் பாக்கவும் தானே நேரம் இருக்கும்?

  • கருத்துக்கள உறவுகள்

ஓ...ஓ   இப்பவும் அவரை தமிழ் தலைவர் என்று நம்பிக்கிட்டுருக்கீங்களா...அண்ணை உங்களுக்கு கற்பனை அதிகம்...விட்டுங்க..

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பற்றுசீட்டு ஆங்கிலத்தில் மட்டும் இருப்பதால்...வெளிநாட்டவர்களுக்குச் சரித்திரம் படிப்பிக்கிறார்கள் போல உள்ளது!

உள்ளூர் வாசிகளும் பற்றுச்சீட்டு எடுக்க வேண்டுமா..என்று யாராவது அங்கு அண்மையில் சென்று வந்தவர்கள்  அறியத் தாருங்கள்!

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த வருட இறுதியில் தனிச்சிங்களத்தில் நுளைவுச்சீட்டு. 

2010 இல் திருகோணமலை நகரசபையின் பொறுப்பில் இருந்த கண்ணியா இப்போ தொல்பொருள் திணைக்களத்தின் கைகளில். 2010 அருகில் இருந்த சிவன் ஆலயத்தில் ஐயர் ஒருவர் பூசை செய்து அர்ச்சனை செய்து கொண்டிருந்தார் 2015 இல் வெறும் மண்டபம் தான் இருந்தது. 2010 இல் தற்காலிக கடைகள் கொட்டில்கள் போய் இப்போ நிரந்தர கடைகள் கட்டடங்கள். 

இதைவிட கொடுமை கிணறுகளுக்கு அப்பால் விகாரை கட்டப்பட்டு பிக்கு ஒருவரால் பிரித் ஓதப்பட்டுக் கொண்டிருந்தது.

***********

**********

*************

****************

Edited by நியானி
தணிக்கை

  • கருத்துக்கள உறவுகள்

கன்னியா.. அல்ல கிண்ணியா... என்பதே சரி. (தவறு திருத்தப்பட்டுள்ளது.)

திருமலை சிங்கள மயமாவது குறித்து அதன் பிரதிநிதி மிஸ்டர் சம் எப்பவாவது குரல் கொடுத்திருக்கிறாரா.. இல்லையே. அப்புறம் என்ன.. அவரின் ஒத்தாசைகளோடுதான் இவை திருமலையில் நடந்தேறி வருகின்றன.

கிழக்கை சிங்களவர்களிடமும்.. முஸ்லீம்களிடமும் தாரைவார்ப்பதுதான் சம் சும் கும்பலின் சோர அரசியல். tw_angry::rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வெந்நீர் கிணறு அமைந்த பகுதி கன்னியா,

திருமலையிருந்து மட்டக்களப்பு வீதியில் சைனாபே, வெள்ளைமணல், கிண்ணியா, உப்பாறு அமைந்துள்ளது. 

17 minutes ago, nedukkalapoovan said:

கன்னியா.. அல்ல கிண்ணியா... தமிழே இல்லாமல் போச்சுது.

திருமலை சிங்கள மயமாவது குறித்து அதன் பிரதிநிதி மிஸ்டர் சம் எப்பவாவது குரல் கொடுத்திருக்கிறாரா.. இல்லையே. அப்புறம் என்ன.. அவரின் ஒத்தாசைகளோடுதான் இவை திருமலையில் நடந்தேறி வருகின்றன.

கிழக்கை சிங்களவர்களிடமும்.. முஸ்லீம்களிடமும் தாரைவார்ப்பதுதான் சம் சும் கும்பலின் சோர அரசியல். tw_angry::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

திருமலை சிங்கள மயமாவது குறித்து அதன் பிரதிநிதி மிஸ்டர் சம் எப்பவாவது குரல் கொடுத்திருக்கிறாரா.. இல்லையே. அப்புறம் என்ன.. அவரின் ஒத்தாசைகளோடுதான் இவை திருமலையில் நடந்தேறி வருகின்றன.

கிழக்கை சிங்களவர்களிடமும்.. முஸ்லீம்களிடமும் தாரைவார்ப்பதுதான் சம் சும் கும்பலின் சோர அரசியல். tw_angry::rolleyes:

இவ்வளவும் நடந்து இருக்குது.... 
அந்தத் தொகுதியில் இருந்து தெரிவு செய்யப்பட்ட சம்பந்தன்.... tenerife-forum-reading-newspaper-smiley.  நியூஸ் பேப்பர் animated-smileys-reading-004.gif படிச்சு கிழிச்சுக் கொண்டு இருப்பது கேவலம். Smiley

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

வெந்நீர் கிணறு அமைந்த பகுதி கன்னியா,

திருமலையிருந்து மட்டக்களப்பு வீதியில் சைனாபே, வெள்ளைமணல், கிண்ணியா, உப்பாறு அமைந்துள்ளது. 

ஆம் நீங்கள் சொல்வது சரி தான்.

கன்னியா வெந்நீரூற்று என்று தான் உள்ளது. நாங்கள் இது கிண்ணியா என்று எண்ணி இருந்தோம். நன்றி தவறைத் திருத்தியமைக்கு. tw_blush:

1 hour ago, MEERA said:

திருமலையிருந்து மட்டக்களப்பு வீதியில் சைனாபே, வெள்ளைமணல், கிண்ணியாஉப்பாறு அமைந்துள்ளது. 

திருமலையில் வாழ்ந்த நீங்கள் சொல்லலாமா. தமிழில் அழகாக சீனன் குடா என்று சொல்லுங்கள். பெயர்களாவது அழியாமல் காப்போம்.

அங்கே தான் திருமலைக்கான பிராந்திய விமான நிலையம் இருக்கிறது. 

கூகிள் ரஷ்யாவில் இருக்கும் இடங்களை ஆங்கிலத்திலும் ரஷ்ய மொழியிலும் குறிப்பிடுவதை போல, சீன இடங்களை சீன மொழியில் காண்பிப்பது போல, தமிழ் பிரதேச இடங்களை தமிழில் காண்பிக்கவாவது  அத்துறைகளில் பணியாற்றும் தமிழர்கள் பரிந்துரைக்க வேண்டும்.

இது சில காலத்தால அழியாத தமிழ் பெயர்களையாவது நாங்கள் தொழில்நுட்பத்தினால் காப்பாற்ற முடியும்.

5 hours ago, பகலவன் said:

திருமலையில் வாழ்ந்த நீங்கள் சொல்லலாமா. தமிழில் அழகாக சீனன் குடா என்று சொல்லுங்கள். பெயர்களாவது அழியாமல் காப்போம்.

அங்கே தான் திருமலைக்கான பிராந்திய விமான நிலையம் இருக்கிறது. 

சீனன் குடா புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள வீதியில் பிள்ளையார் கோவில், தேவாலயம், மசூதி, புத்த கோவில் அடுத்தடுத்ததாக இருப்பதாக ஒரு நினைவு. 1973-1976 

பேச்சில் உள்ளது அப்படியே எழுத்திலும் வந்துவிட்டது.

10 minutes ago, ஜீவன் சிவா said:

சீனன் குடா புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள வீதியில் பிள்ளையார் கோவில், தேவாலயம், மசூதி, புத்த கோவில் அடுத்தடுத்ததாக இருப்பதாக ஒரு நினைவு. 1973-1976 

உண்மைதான் ஜீவன். இப்பவும் அப்படியே தான் இருக்கின்றன. கூகிள் வீதி பார்வையில் ஒருமுறை போய் வரலாமே.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

இவ்வளவும் நடந்து இருக்குது.... 
அந்தத் தொகுதியில் இருந்து தெரிவு செய்யப்பட்ட சம்பந்தன்.... tenerife-forum-reading-newspaper-smiley.  நியூஸ் பேப்பர் animated-smileys-reading-004.gif படிச்சு கிழிச்சுக் கொண்டு இருப்பது கேவலம். Smiley

கிழக்கு முழுவதையும் சிங்களவருக்குத் தாரை வார்த்துவிட்டுத்தான் சம்பந்தர் போவார்

திட்டமிட்டு சிங்கள மயமாக்கப்படும் கன்னியா வெந்நீரூற்று!

கன்னியா வெந்நீரூற்று திட்டமிட்ட ரீதியில் சிங்கள மயமாக்கப்பட்டு வருவதாக அப்பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இராவணன் தனது தாய்க்கு இறுதிக்கிரியைகள் செய்வதற்காக தனது உடைவாளை உருவி ஏழு இடங்களில் குத்தியதாக வரலாறுச் சான்றுகள், ஐதீக, புராணக் கதைகள் மற்றும் செவி வழிக்கதைகளும் உள்ளன.

கன்னியா வெந்நீரூற்றுக்கருகாமையில் ஒரு பிள்ளையார் கோவிலும் சிவன் கோவிலும் காணப்பட்டது.

தற்போது பிள்ளையார் கோவில் உடைக்கப்பட்டும் சிவனாலயம் பராமரிப்பாரற்றும் காணப்படுகின்றன.

மறுமுனையில் திரிபுபடுத்தப்பட்ட பௌத்த வரலாறுகளை இதனுடன் தொடர்பு படுத்தி அரசியல் மயமாக்கல் இடம்பெற்று வருகின்றது.

இப்போது இந்து மத அடையாளங்கள் அருகி பௌத்த வழிபாட்டுக்குரிய அடையாளங்களே முன்னிலைப்படுத்தப்பட்டு வருகின்றன.

தற்போது இப்பிரதேசம் தொல்பொருளியல் திணைக்களத்தின் பராமரிப்பில் உள்ளது. தற்போது வழங்கப்படும் நுழைச்சீட்டிலே இவை அநுராதபுரகாலத்தில் பயன்படுத்தப்பட்டதாகவும் பௌத்த மதத்திற்குரிய பிரதேசத்தில் அமைந்திருப்பதாகவும் தொல்பொருளியல் சான்றுகளால் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி, கன்னியா வெந்நீரூற்று ஒரு சிங்கள மன்னனால் பௌத்த மதத்துக்குரியதாக அமைக்கப்பட்டதென்றும் அங்கே விகாரையொன்றும் கட்டப்பட்டதாகவும்,

போயா தினங்களில் குறிப்பாக வெசாக் பொசன் தினங்களில் நீராடினால் புண்ணிய பலன் கிட்டுவதாக அந்த சிட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது!

அடுத்த தலைமுறையில் வரலாற்று பாடநூல்களில் இந்த புதிய வரலாறு அச்சிடப்பட்டு இந்துக்களின் வரலாறு மறைக்கப்படக்கூடிய அபாயம் நிலவுவதாக அப்பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

"காதலனை பிரிந்தவளின் மனம் போல ஒன்று கவி பாடிப் பரிசு பெறான் மனம் போல

ஒன்று தீது பழி கேட்டவன் தன் மனம் போல ஒன்று செய்த பிழைக் கலங்குபவன் மனம் போல

ஒன்று நீதி பெறாவேளை துயர் மனம் போல ஒன்று நிறைபழித்த கற்புடையாள் மனம் போல

ஒன்று காது மழுக் காறுடையான் மனம் போல ஒன்று கனலேறு மெழு நீர்கள் உண்டு கன்னி

யாயில்"

நாவாலியூர் சோமசுந்தரப்புலவர் திருகோணமலை மாவட்டத்திலுள்ள கன்னியா வெந்நீரூற்று குறித்து எழுதிய பாடல் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது!

13015156_780388285394694_342705844803706

13015156_780388318728024_619335508608962

முக புத்தகத்தில் இருந்து

  • கருத்துக்கள உறவுகள்

சிறு சிறு செய்தி துணிக்கைகளை பார்த்து பலர் ஆதங்க பட்டு 
டென்ஷன் ஆகிறார்கள் என்று நினைக்கிறேன்.
இது வெறும் இரத்த அழுத்தத்தை மட்டுமே உங்களுக்கு கொண்டுவரும்.

நான் முள்ளிவாய்க்காலில் எல்லாவற்றுக்கும் இறுதி கிரிகை செய்துவிட்டேன்.
தமிழனை இனி நிமிர விட்டால் சிங்களவனை போல ஒரு அடிமுட்டாள் உலகில் இருக்க முடியாது.
சிங்களவன் எவளவோ புத்திசாலி அது நடக்க சாத்தியமே இல்லை.

புலிகளை(தமிழனை) அழிக்க துணை போனவர்கள் சந்தோசமாக இருக்க வேண்டிய 
காலம் இது. ஏன் குத்தி முரிகிறார்கள் என்பது ஒரே குழப்பமாக இருக்கிறது.

சுயதம்மப்ட்டம் அடிக்க தமிழனுக்கு யாரும் கற்றுத்தர தேவை இல்லை 
சுய விளம்பரம் செய்ய கொஞ்சபேர்  அங்கே இங்கே இனி எதையாவது சொறிந்து கொண்டு 
இருப்பார்கள் ஏதும் நடக்க சத்தியம் இல்லை.

யாரை எதிர்கட்சி கதிரையில் வைத்தால் 
தமிழனை அவர்களே அடிமைகளாக்கி காலில் போடுவார்கள் என்பதை சிங்களவன் 
நாடி பிடித்து அறிந்து வைத்திருக்கிறான்.
சாணக்கியமான அரசியல்!

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Maruthankerny said:

எதிரியாக இருந்தாலும் சிங்களவனை நாம் மதிப்பதாக எழுதுவதற்கு இது தான் காரணம்..

(பச்சை கைவசம் இல்லாததால் சில வரிகள்)

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

சிறு சிறு செய்தி துணிக்கைகளை பார்த்து பலர் ஆதங்க பட்டு 
டென்ஷன் ஆகிறார்கள் என்று நினைக்கிறேன்.
இது வெறும் இரத்த அழுத்தத்தை மட்டுமே உங்களுக்கு கொண்டுவரும்.

நான் முள்ளிவாய்க்காலில் எல்லாவற்றுக்கும் இறுதி கிரிகை செய்துவிட்டேன்.
தமிழனை இனி நிமிர விட்டால் சிங்களவனை போல ஒரு அடிமுட்டாள் உலகில் இருக்க முடியாது.
சிங்களவன் எவளவோ புத்திசாலி அது நடக்க சாத்தியமே இல்லை.

புலிகளை(தமிழனை) அழிக்க துணை போனவர்கள் சந்தோசமாக இருக்க வேண்டிய 
காலம் இது. ஏன் குத்தி முரிகிறார்கள் என்பது ஒரே குழப்பமாக இருக்கிறது.

சுயதம்மப்ட்டம் அடிக்க தமிழனுக்கு யாரும் கற்றுத்தர தேவை இல்லை 
சுய விளம்பரம் செய்ய கொஞ்சபேர்  அங்கே இங்கே இனி எதையாவது சொறிந்து கொண்டு 
இருப்பார்கள் ஏதும் நடக்க சத்தியம் இல்லை.

யாரை எதிர்கட்சி கதிரையில் வைத்தால் 
தமிழனை அவர்களே அடிமைகளாக்கி காலில் போடுவார்கள் என்பதை சிங்களவன் 
நாடி பிடித்து அறிந்து வைத்திருக்கிறான்.
சாணக்கியமான அரசியல்!

நன்றி... மருதங்கேணி....
இதனை... நான், முன்பே அறிந்திருந்தால்.... எனக்கு,  பிரசர் குளிசை பாவிக்க வேண்டி வந்திருக்காது.
இனிமேல்.... எவனாவது, சம்பந்தனுக்கு வக்காலத்து வாங்கினால்,
 "கக்கூஸ் செருப்பை" எடுத்து அடிக்க மாட்டேன். என்பதை.... உறுதி படக்  கூறுகின்றேன்.

  • தொடங்கியவர்

கன்னியா வெந்நீரூற்று வரலாற்றுப் பலகையை பிடுங்கியெறிந்தார் திருமலை அரசஅதிபர் – பிரதேசசபை கண்டனம்

http://nerudal.com/nerudal.21739.html

கன்னியா வெந்நீர் ஊற்று பிரதேசத்திற்கு வேறு பாதை: தமிழர்கள் விசனம்

http://www.bbc.com/tamil/sri_lanka/2014/08/140809_kanniya_road

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கை ஒரு தமிழன் ஆண்டிருந்தால்.. இந்த நிலைமை வந்திருக்குமா..??! :rolleyes:

கிழக்கின் திருமலை.. மக்கள் பிரதிநிதி.. பேப்பர் வாசிப்பதில்.. ரெம்ப பிசி. tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

சம் எதிர்க்கட்சி தலைவர் என்றால் அரசிற்கு ஒத்து ஊதுவது என்று நினைத்து ஒத்து ஊதிக் கொண்டிருக்கிறார். அரசின் அநியாயங்களை தட்டிக் கேட்பவராக இல்லை. 

தொல்பொருள் திணைக்களத்தின் அடாத்து நடவடிக்கைகளையே தட்டிக் கேட்க முடியாத நிலையில் சம்பந்தரும் அவரது பதவியும் இருப்பது தான் நிஜம். 

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்

கன்னியாவுக்கு நடந்த சோகமல்ல. இது மாற்றுக்கருத்து மாணிங்கங்களுக்கு நடந்த ஏமாற்றம். :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.