Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்வெளி (brexit): உங்கள் பார்வை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

M.P க்கு என்ன பிரச்சனை?

1) பிரித்தானியா ஐரோப்பாவில் இருந்து பிரிவது

2) ஐரோப்பிய தமிழர் பிரித்தானியாவில் அரச உதவி பெறுவது

3) புலிகளின் சொத்துக்கள்

4) முன்னாள் போராளிகளுக்கு புலம்பெயர் தமிழர் உதவி செய்யவில்லை

5) முன்னாள் போராளியான அவரது சகோதரம் ஆணா பொண்ணா?

 

அல்லது 

2 hours ago, தெனாலி said:

ஊரில் வேறு மாதிரி இருந்திருக்க வேண்டியவர்கள் எல்லாம் இங்கு வந்து எம்மை விட வசதியாக இருக்கிறார்கள் என்ற பொறாமை
 

 

  • Replies 70
  • Views 6.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எனது விருப்பம் டோல் உதவி பெறாதவர்களின் எண்ணிக்கையில் புலம் பெயர்ந்தோர் வரிசையில்  ஈழத்தமிழன் முன்னணியில் இருக்கவேண்டும் 
...தொடர்ந்து தங்கள் கடின உழைப்பை வெளிக்காட்ட வேண்டும் ..எப்படி இங்கே சமூர்த்தி உதவிப்பணம் பெறுபவர்கள் நோக்கப்படுகிறார்களோ 
அப்படித்தான் வெளிநாடுகளில் டோல் பெறுபவர்கள் இங்கே நோக்கப்படுகிறார்கள். அவர்கள் அங்கே டோல் பெறுவதை இங்கே அவிட்டுவிடுவதும் 
வெளிநாட்டிலிருந்து வரும் எங்கடை ஆட்கள் தான். அதாவது தாங்கள் திறம் என்று காட்ட அவர்களை மட்டம் தட்டுவினம் 

மிகுந்த பிரச்சினையுடைவர் பிரச்சினையே வேறு, தான் படிப்பின் மூலம் அடைந்த வெற்றியை மற்றவர்கள் உழைப்பின் மூலம் அடைந்திருக்கிறார்கள் 
என்பது தான் இவரது கடுப்பு. படிப்பை விட உழைப்பிட்கு இருக்கும் மரியாதையே தனி பெரியவரே படிப்பு இருந்தால் அந்த படிப்பு இருக்கும் ஒருவன் மட்டுமே முன்னுக்கு வரலாம், உழைப்பு இருந்தால் எவனும் முன்னுக்கு வரலாம். நாங்களும் இலங்கையில் படித்தவர்கள் தான் இலங்கையின் படிப்பின் ஆகக்கூடிய வருவிழைவு(Output) இதுதான், தான் மட்டுமே  எதுவோ சாதித்தவன் என்ற கணக்கிட்க்கு கொம்பு சீவி விடும் உந்த எண்ணம் இலங்கைக்கு மட்டுமே உதவும், அதனால் தான் பெரிய படிப்பு என்று பந்தா காட்டி காட்டியே பின்னேறிக்கொண்டிருக்கிறார்கள், உலகத்தரம் வாய்ந்த துறைசார்  நிபுணர்களின் காலடிக்கு கூட இவர்களால் செல்ல முடியவில்லை     ,,போதாக்குறைக்கு போதிய கல்வித்தகமைகள் இல்லாதவர்கள் வெளிநாடு வந்து  பிச்சை எடுக்காமல் டோல் எடுத்து ஓரளவு பிரச்சினையற்று சீவிக்கிறார்கள் என்ற கடுப்பும் சேர்ந்து உங்களுக்கு  இருக்கு போல ...


 

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்பதே எங்கள் விருப்பமும்.

பிரிட்டன் நேட்டோவில் இருந்தும் வெளியேறனும்.

பிரிட்டன் அமெரிக்காவுக்கு வால் பிடிப்பதை கைவிடனும்.

பிரிட்டன் அணிசேராக் கொள்கையை சரியாகக் கடைப்பிடிக்கனும்.. சும்மா பேருக்கு அதைச் சுமக்கக் கூடாது.

பிரிட்டன் பொதுநலவாய வலயத்தை பலப்படுத்தலாம்.. ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டிட்டு...! 

-------------------

பலர் தலைப்புக்கு சார்ப்பில்லாமல்.. எம் பியை தாக்க தலைப்பை பயன்படுத்துகிறார்கள்... என்றே படுகிறது. 

எம்மவர்கள் எல்லா ஐரோப்பிய நாடுகளிலும் வட அமெரிக்க.. அவுஸி - நியூசிலாந்திலும்... உள்ள சட்ட ஓட்டைகளுக்குள்ளால் புகுந்து விளையாடிக் கொண்டு தான் இருக்கினம். பல பொருளாதார தமிழ் அகதிகள்.. தம்மை அரசியல் அகதிகள் என்று சொல்லிக் கொண்டு இருக்க கடந்த 35 வருட ஊர் நிலவரம் சாக்காப் போச்சு. போராட்டத்துக்கு ஒரு துரும்பும் எடுக்காதவன்.. போராட்டத்தால்.. ஒரு சின்ன பாதிப்பு அடையாதவன் எல்லாம்.. அரசியல் அகதி.  முதலில் இந்த அகதிகள் என்ற வரையறைக்கு சரியான பரிமானமும் சரியான இனங்காணல் பொறிமுறையும் கொண்டு வரப்பட்டால் தான்.. இந்த அகதி முறை துஸ்பிரயோகம் உலகில் களையப்பட்டு உண்மையான அகதிகள் உலகில் பாதுக்காக்கப்படுவர். உண்மையான அகதிகள்.. குறிப்பாக அரசியல் அகதிகள் இன்று பல நாடுகளில் அரசபயங்கரவாதத்தால்.. புதைகுழிகளில் எலும்புக் கூடுகளாக இருக்க.. மற்றவர்கள் சுகபோகம் அனுபவிக்கிறார்கள். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

வெளியேறியாச்சு

  • கருத்துக்கள உறவுகள்
On 20/06/2016 at 8:02 PM, கிருபன் said:

நான் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறவேண்டும் என்றுதான் வாக்குப்போடவுள்ளேன். அப்படியாவது கமரோனை ஆட்சியிலிருந்து அகற்றலாம் என்ற நப்பாசைதான், வேறு ஒரு காரணமுமில்லை.

வெளியேறவேண்டும் என்று வாக்கைப் போட்டு டேவிட் கமரோனை ஆட்சியிலிருந்து அகற்றிவிட்டாச்சு.  குட்டை இப்போது கலங்கிக் குழம்பியுள்ளது. ஆனால் விரைவில் தெளிவாகும்!!  

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

வெளியேறவேண்டும் என்று வாக்கைப் போட்டு டேவிட் கமரோனை ஆட்சியிலிருந்து அகற்றிவிட்டாச்சு.  குட்டை இப்போது கலங்கிக் குழம்பியுள்ளது. ஆனால் விரைவில் தெளிவாகும்!!  

அதே

வாக்குப்போட்ட மக்களுக்கும் ஆப்பு இனித்தான் புரியப்போகுது...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, MEERA said:

வெளியேறியாச்சு

இனியென்ன முடியாட்சிதான் :cool:

London_mayor_Boris_1565799a.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பிரிய வேண்டும் என்று தான் வோட் போட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
On 21.6.2016 at 10:00 AM, nedukkalapoovan said:

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்பதே எங்கள் விருப்பமும்.

பிரிட்டன் நேட்டோவில் இருந்தும் வெளியேறனும்.

பிரிட்டன் அமெரிக்காவுக்கு வால் பிடிப்பதை கைவிடனும்.

பிரிட்டன் அணிசேராக் கொள்கையை சரியாகக் கடைப்பிடிக்கனும்.. சும்மா பேருக்கு அதைச் சுமக்கக் கூடாது.

பிரிட்டன் பொதுநலவாய வலயத்தை பலப்படுத்தலாம்.. ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டிட்டு...! 

-------------------

நெடுக்ஸ்... நீங்கள், சொல்லிய காரணங்களில் 20% மட்டுமே தற்போது வெற்றியளித்துள்ளது.
மிகுதி 80 வீதமும் நடக்கக் கூடிய சந்தர்ப்பமே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, தமிழ் சிறி said:

நெடுக்ஸ்... நீங்கள், சொல்லிய காரணங்களில் 20% மட்டுமே தற்போது வெற்றியளித்துள்ளது.
மிகுதி 80 வீதமும் நடக்கக் கூடிய சந்தர்ப்பமே இல்லை.

இன்று பேசிய சில தலைவர்கள் கனடா அவுஸி மற்றும் இந்தியாவுடனான (பொதுநலவாயம் என்பது கன நாளைக்குப் பிறகு உச்சரிக்கப்பட்டது) கலந்துரையாடல்களை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

2008 இல் தமிழீழ தேசிய தலைவர் சொன்னது போல எனி உலகப் பொருண்மியம் ஆசியாவை மையப்படுத்திய ஒன்றாக அமைவது தவிர்க்க முடியாதது. அதனை உணர்ந்து நாம் சர்வதேச நகர்களை மையப்படுத்திய எமக்கு அனுகூலமான அரசியலை தாயகத்திலும் முன்னெடுக்க வேண்டும்.

இப்போ ஸ்காட்லாந்து பிரிந்து செல்வதற்கான வாக்கெடுப்பை மீண்டும் கோருகிறது. நாங்களும் எம் மீதான சிங்கள அரசுகளின் போர்க்குற்றங்களை முன்னிலைப்பத்தி.. பிரிந்து செல்வதற்கான கருத்துக்கணிப்பை தமிழ் மக்களிடம் நடத்த உலகத்தைக் கோருவதற்கான சரியான காரணங்களும் காலமும் நெருங்கி வருகிறது. 

அதனை நோக்கிச் செயற்படாமல்.. சேர் பொன்கள் செய்த அதே தவறை சிங்களவனோடு சகோதரர்களாக ஒன்றுக்கு இருப்போம் என்று மீண்டும் பேச ஆரம்பித்தால்.. தமிழினம் தெற்காசியாவில் அழிந்து போவது தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

பிரிந்தது சரி இதனால் ஏற்படப்போகும் சாதகம், பாதகம் பற்றி தகவல் தரமுடியுமா 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முனிவர் ஜீ said:

பிரிந்தது சரி இதனால் ஏற்படப்போகும் சாதகம், பாதகம் பற்றி தகவல் தரமுடியுமா 

எனி வருங்காலங்களில் பிரித்தானியாவுக்கென்று அமையும் சட்டங்களில் வரும் திருத்தங்கள்.. புகுத்தல்கள்.. புதிய நடைமுறைகளைப் பொறுத்துத் தான் நன்மை தீமை பட்டியலிடப்பட முடியும்.

ஆனால் குடிவரவு குடிபெயர்வு இறுக்கமாக்கப்படும். மக்கள் குறிப்பாக வெள்ளையளை கோபத்தில் ஆழ்த்தியதே இது தான். வெள்ளைகள் அதிகம் ஆதிக்கம் செய்யாத குடியேற்றக்காரர்கள் கலந்து வாழும்.. லண்டன்.. மான்செஸ்டர்.. லிவர் பூல்.. இங்கெல்லாம்..  வெளியேற்றத்திற்கு எதிரான வாக்குகளே அதிகம் பதிவாகியுள்ளன.

 தமிழர்கள் வாழும் லண்டன் borough களில் கிட்டத்தட்ட எல்லாமே  வெளியேற்றத்துக்கு எதிராகவே வாக்களித்துள்ளன. இந்த வெற்றி பூர்வீக வெள்ளைகள் குடியேற்றக்காரர்கள் தங்களின் வளங்களை அபகரித்துச் செல்கிறார்கள்.. தாங்கள் ஏழைகளாக்கப்படுகிறோம் என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடே அன்றி.. குடியேற்றக்காரர்களுக்கு மகிழ்ச்சியான ஒன்றல்ல. tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

இன்று பேசிய சில தலைவர்கள் கனடா அவுஸி மற்றும் இந்தியாவுடனான (பொதுநலவாயம் என்பது கன நாளைக்குப் பிறகு உச்சரிக்கப்பட்டது) கலந்துரையாடல்களை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என்று சொன்னார்கள்.

-----

 

1 hour ago, முனிவர் ஜீ said:

பிரிந்தது சரி இதனால் ஏற்படப்போகும் சாதகம், பாதகம் பற்றி தகவல் தரமுடியுமா 

பிரித்தானியா... ஐரோப்பாவில் இருந்து பிரிந்தது.. அமெரிக்காவுக்கு கிடைத்த வெற்றி.
அமெரிக்கா... என்றுமே, உள் மனதில் ஐரோப்பிய ஒன்றியத்தை ஆதரித்த நாடு அல்ல.
தன்னை விட... பொருளாதார, ஆயுத வளர்ச்சிகளில் வேறு ஒரு அமைப்பு உருவாகுவதை நிசசயம் விரும்ப மாட்டாது.
இதற்கு அங்கு குடியேறிய.... இந்திய, பாகிஸ்தானியர்களின் சிறு சத வீத வாக்காளர்களை அமெரிக்க விசுவாசம்,
ஐரோப்பா கண்டத்தில் வாழும்,  பிரித்தானிய மக்களின் எதிர்காலத்தை... கேள்விக் குறி ஆக்கி விட்டது.

அடுத்து.... இத்தாலி, பிரான்ஸ் போன்ற நாடுகளும் பிரியலாம். அதற்கு அமெரிக்கா பின்னணியில் உதவி செய்து கொண்டிருக்கும் என்பது நிச்சயம். பின்... ஜேர்மனி தனியே..... ஐரோப்பாவை கட்டி ஆள முடியாது. பழைய படி.... தனி நாடுகள். 
அமெரிக்காவின்  காட்டில்..... உய்யலாலா தான்.

உண்மையில்.... ஐரோப்பா என்ற அமைப்பை உருவாக்குவதற்கு... ஜேர்மனிய மக்கள் கொடுத்த வரிப் பணம் மிக மிக அதிகம்.
என்றாலும்.... முயற்சி செய்து பார்த்தார்கள், தனியே நின்றாலும்  மீண்டும் சமாளிப்பார்கள் என்ற நம்பிக்கை என்னிடம் உள்ளது.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி சொல்ல முடியாது நெடுக்கர்...

முஸ்லிம் மக்கள் நிறைந்த பர்மிங்காம் விலக வாக்களித்து இருக்கிறது.

என்னுடன் வேலை செய்யும் வெள்ளை இளைஞன், வீடு இல்லாததால் இன்னும் கலியாணம் இல்லை. வீடு வாங்காததால் தாய் தந்தையுடன் வாழ்கிறான். தானும் தனது நண்பர்களும் வீட்டுப் பிரச்னையினால் தான் விலக வாக்களித்தார்களாம்.

உண்மையில் கிழக்கைரோப்பிவில் இருந்து வந்தவர்கள் இருவகை. ஒருவகை பெரும் பணக்காரர்கள். வீடு வாசல் வாங்கி, வியாபாரம் செய்ய வந்தவர்கள். இரண்டாவது வகை, ஒரு வீட்டில் பல குடும்பங்களாக இருந்து கடை நிலை வேலை செய்தவர்கள்.

வெள்ளை இனத்தவர்களால் இவர்களுடன் பொருத முடியவில்லை. அடுத்தவர்கள், வெள்ளை கட்டு மான பணியாளர்கள். தமது வேலைகளை குறைந்த விலைக்கு அவர்கள் எடுத்துக் கொண்டு விடடார்கள் என்ற கோபத்தில் இருந்தவர்கள்.

மிகவும் விரக்தி அடைய வைத்த சம்பவம் என்னெவெனில், இங்கு பிறக்கும் ஒவ்வொரு பிள்ளைக்கும் கிழமைக்கு £17.50 படி அரச மானியம் கிடைக்கும். இந்த மானியத்தினை, தாம் இங்கே இரண்டு, மூன்று வருடம் வேலை செய்து திரும்பினாலும், அங்குள்ள தமது பிள்ளைகளுக்கு அந்த மானியம் கிடைக்க வேண்டும் என்று கறாராக நின்றது. இது தொடர்பில் போலிஸ் பிரதமருடனும் கமரோன் பேசிப் பார்த்தார். அவர் விட்டுக் கொடுக்கவில்லை. 

இப்போ எல்லாம் புட்டுக்கிச்சு. பிரிட்டன் விலகும் என்று யார் தான் எதிர் பார்த்தார். இது அளவுக்கு மிஞ்சி, அமுதம் நஞ்சான கதை.

இதில் உள்ள தார்மீகப் பிரச்சனை என்னவெனில், நாளை நம்மவர் கூட, நான் இங்கே பல ஆண்டுகளாக வேலை செய்கிறேன். மனைவி பிள்ளைகளுக்கு விசா தராது விடினும், பிள்ளைகளுக்கு இந்த மானியத்தினைக் கொடுக்கலாமே எனக் கேட்கலாம்.

என்னைப் பொறுத்த வரையில், EU மிக அழுத்தமாக தமது பிடியை இறுக்குவதை உணர்ந்த அரசியல் வாதிகள் வெளியே வந்து, காத்திரமான மறு பேச்சு வார்த்தை நடத்தி, மக்களுக்கு முன் வைத்து மேலும் ஒரு ஆணை பெறுவார்கள்.

அது சிறந்த பலன் கொண்டதாக இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Nathamuni said:

-----

என்னைப் பொறுத்த வரையில், EU மிக அழுத்தமாக தமது பிடியை இறுக்குவதை உணர்ந்த அரசியல் வாதிகள் வெளியே வந்து, காத்திரமான மறு பேச்சு வார்த்தை நடத்தி, மக்களுக்கு முன் வைத்து மேலும் ஒரு ஆணை பெறுவார்கள்.

அது சிறந்த பலன் கொண்டதாக இருக்கும். 

மீண்டும் தேர்தலா... நாதமுனி. tw_dizzy: tw_cold_sweat:
இது... பிரித்தானியா, இந்தியா.... போன்ற சனநாயக நாடுகளுக்கு மட்டுமே பொருந்தும். :grin:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 hours ago, ரதி said:

நானும் பிரிய வேண்டும் என்று தான் வோட் போட்டேன்.

என்ன காரணதிற்காக லண்டன் பிரியவேணும் எண்டு தங்கச்சி வோட் பண்ணினது?
 இந்த அண்ணன் அறிய ஆசைப்படுகிறான். :grin:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

மீண்டும் தேர்தலா... நாதமுனி. tw_dizzy: tw_cold_sweat:
இது... பிரித்தானியா, இந்தியா.... போன்ற சனநாயக நாடுகளுக்கு மட்டுமே பொருந்தும். :grin:

இன்று மீண்டும் இந்த மறு வாக்குப் பதிவு  தேர்தல் தேவை வேண்டும் என்று பாராளுமன்றைக் கோரி 500,000 வரை மனுத்தாக்கல் செய்துள்ளார். 

இது மிக வேகமானது.

அதாவது 72% வாக்குப் பதிவு இருக்கும் போது விலகுமாறு கோருவோர் சதவீதம் 60% ஆவது இருக்க வேண்டும். 

இரண்டுக்கும் இடையே விகிதம் குறைவாக இருப்பதால் மறு வாக்குப் பதிவு தேவை என மனு செய்கிறார்கள்.

பிரித்தானிய ஒழுங்கு முறையில் 100,000 மேலாயின் விவாதத்துக்கு எடுக்கப் படும்.

1 hour ago, குமாரசாமி said:

என்ன காரணதிற்காக லண்டன் பிரியவேணும் எண்டு தங்கச்சி வோட் பண்ணினது?
 இந்த அண்ணன் அறிய ஆசைப்படுகிறான். :grin:

எங்கண்ட அக்கா மெசப்பெத்தோமிய சுமேரியர், விலகாது எண்டு நினைச்சு, தன்னை ஜெர்மனிக்கு அனுப்ப ஏலாது எண்டு ஒரு வீம்பா சொன்னா. 

இப்ப என்ன பாடோ தெரிய வில்லை... ஒரே யோசனையாக கிடக்குது.. அந்த பியர்கள்வர் பியருக்கு என்ன செய்யப் போறார்?

இதை நினைச்சாவது ரதி அக்கா வாக்கை மாத்திப் போட்டிருக்கலாம்.:grin:

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Nathamuni said:

 

எங்கண்ட அக்கா மெசப்பெத்தோமிய சுமேரியர், விலகாது எண்டு நினைச்சு, தன்னை ஜெர்மனிக்கு அனுப்ப ஏலாது எண்டு ஒரு வீம்பா சொன்னா. 

இப்ப என்ன பாடோ தெரிய வில்லை... ஒரே யோசனையாக கிடக்குது.. அந்த பியர்கள்வர் பியருக்கு என்ன செய்யப் போறார்?

இதை நினைச்சாவது ரதி அக்கா வாக்கை மாத்திப் போட்டிருக்கலாம்.:grin:

தகவலுக்கு நன்றிகள் ??

 

இந்த இருவரையும் மேடைக்கு அழைக்கிறோம்

On 20/06/2016 at 0:18 PM, Nathamuni said:

இங்கு பெனிபிட் கொடுப்பதன் நோக்கம், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சகலரிடமும் பணவோட்டம் இருக்க வேண்டும் என்பதால் தான்.

இந்த வசனத்துக்குத்தான் பச்சை.
 

  • கருத்துக்கள உறவுகள்

வேறென்ன எல்லாம் சுயநலம் தான் காரணம் அண்ணெய்...இவர்களது வருகைகள் கூட,கூட வீட்டு விலைகள் கூடுகிறது.வாடகை அதிகரிக்கின்றது.பத்தாததற்கு வேலைகள் எல்லாத்தையும் அவர்களே எடுத்துக் கொள்கிறார்கள்...ஒரு சாரார் ஜரோப்பாவில் இருந்து வரும் போதே சொத்து,சுகங்களோட வாறது,வீடுகளை வாங்கி வாடகைக்கு விட்டுப் போட்டு,களவாய் வேலை செய்து கொண்டு,பெனிபிட் எடுத்துக் கொண்டு பேசாமல் இருந்தால்,நாங்களும் பேசாமல் இருந்திருப்போம். ஆனால் இங்கே இருக்கும் ஆட்களை கேவலமாய் பார்ப்பினம் பாருங்கோ! அதற்குத் தான் இந்த வோட்டு

17 minutes ago, ரதி said:

இவர்களது வருகைகள் கூட,கூட வீட்டு விலைகள் கூடுகிறது.வாடகை அதிகரிக்கின்றது.பத்தாததற்கு வேலைகள் எல்லாத்தையும் அவர்களே எடுத்துக் கொள்கிறார்கள்..

இதை நீங்க வந்தபோதும் சொல்லி இருப்பாங்கதானே?

  • கருத்துக்கள உறவுகள்

கிழக்கு ஐரோப்பியர்கள் அகதிகளாக வந்தவர்கள் இல்லை தானே.

மன்னிக்கவும் ரதி, நெடுக்ஸ் 


உங்கள் கருத்துக்கள் ஏதோ நீங்கள் இங்கிலாந்தில் பல தலைமுறைகளா வாழுற மாதிரியும், மற்ற குடி வரவாளர்கள் உங்களின் உரிமைகளை பறிப்பது போலவும் உள்ளன. ஆனால் நீங்களும் ஒரு நாள் வந்தேறு குடிகளாக இந்த நாட்டுக்குள் புகுந்ததை வசதியா மறந்து விட்டீர்கள்.

தமிழனா கொக்கா? கேவலம் கெட்ட இனம்.

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவன்,நான் சுயநலக்காரி என்று முதலே சொல்லி விட்டேன். தவிர நுணா எழுதிய மாதிரி அவர்கள் அகதிகள் இல்லை. அதிக பணமீட்ட வந்தவர்கள். எங்கட நாட்டில் இனப்பிரச்சனை,யுத்தம் என்று வந்திருக்கா விட்டால் நாங்கள் இந்தளவிற்கு இடம் பெயர்ந்து வந்திருக்க மாட்டோம்.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பிரித்தானியா வெளியேறவேண்டும் என்றுதான் வாக்குப்போட்டேன். கூட வேலை செய்யும் வெள்ளைக்காரனுக்கு அது மிகவும் வருத்தமாக இருந்தது. படிப்பு அறிவு குறைந்த, பிறநாட்டவரைப் பிடிக்காதவர்கள்தான் பிரித்தானியா வெளியேறவேண்டும் என்று அதிகம் வாக்குப்போட்டார்கள். ஏன் நீ போட்டாய் என்று கேட்டார்.

எனது காரணம் அதுவல்ல. பிரித்தானியாவின் பொருளாதாரம் ஒரு ஆட்டம் காணவேண்டும், வீட்டு விலைகள் குறையவேண்டும். பழமைவாதத்தைத் தூக்கிப் பிடித்து தாம் இன்னும் உலகின் பலமான சக்தி என்று நினைத்துக்கொண்டு வேலை செய்யாமல் அரச உதவிப் பணத்தில் இருக்கும் வெள்ளைகள் கொட்டம் அடங்கவேண்டும் என்பதுதான் எனது காரணம். கடின உழைப்பில் நம்பிக்கையுள்ள என்னைப்போன்றவர்கள் எந்த நிலையையும் தாங்கிக்கொள்வார்கள். ஆனால் உழைக்காமல் இருப்பவர்கள்தான் ஐரோப்பாவிலிருந்து வெளியேறியதின் தாக்கத்தை உணர்வார்கள்.

பொருளாதாரம் நலிவடைய இனவாத உணர்வுகள் அதிகமாகும். பணக்காரர்கள் இன்னும் பணக்காரர்கள் ஆவார்கள். ஏழைகள் இன்னும் ஏழைகளாக மாறுவார்கள். நடுத்தர வர்க்கத்தினர் வரிச்சுமையை அனுபவிப்பார்கள். 

தமிழர்கள் தங்களைப் பணக்காரர்கள் என்று நம்புபவர்கள். பஸ்ஸில்கூட பயணம் செய்வது கெளரவத்திற்கு இழுக்கு என்று நினைப்பவர்கள்.:cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.