Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் - சிங்கள மாணவர்களிடையே மோதல் ; யாழ்.பல்கலைக்கழகத்தில் பதற்றம் (காணொளி இணைப்பு )

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 எங்கேயாவது ஒரு நெருப்புப் பொறி விழாதா, அதை ஊதி, ஊதி பெருப்பித்து நாட்டையே அழிக்க மாட்டோமா? அந்த அழிவிலிருந்து ஏதாவது சுய லாபம் தேடமாட்டோமா என்று ஏங்கி அலைந்து  அதற்காக உழைத்து காத்திருப்போரும் உண்டு. ஆனால் நமது போராடடம் ஒடுக்கப்பட்டபின் தென் பகுதியிலிருந்து அரசியலாளர்கள் வரும்போது இந்த நடனக் கூடடமும் வந்து ஆடிவிட்டுத் தான் போகுது. எல்லாம் அவர்கள் கட்டுப்பாடும், திடடங்களுந்தான் நடைபெறுகிறது. பெயருக்கு நல்லாட்சி, துயரம் எல்லாம் தொடர் கதை. வெளி நாட்டுக்கு நல்லிணக்கம் கதைக்கினம், உள்நாட்டில் அடக்குமுறை. விட்டுக்கொடுக்க வேணுமாம். அப்பிடி விட்டுக்கொடுத்துத்தானே எல்லாவற்றையும் இழந்து ஏதிலிகளாய் இருக்கிறோம். "குட்டக் குட்ட குனிகிறவனும் மடையன், குனியக் குனிய குட்டுகிறவனும் மடையன்."  

1 hour ago, hasan said:

சிங்கள பல்கலைக்கழகத்தில் இதுபோன்ற நிகழ்வில் நாதஸ்வர இசையும் வேண்டும் என்று தமிழ் மாணவர்கள் கேட்டால் 100% ஏற்றுக்கொள்வார்கள்.

எல்லாம் அவர்கள்  ஏற்றுக் கொண்டார்கள், இவர்களுக்குத்தான்  பெற்றுக்கொள்ள மனமில்லை.  விழுந்தவனுக்குத்தான் உபதேசம் செய்யுங்கோ.

  • Replies 60
  • Views 4.3k
  • Created
  • Last Reply

உங்களுக்கு போகிற இடமெல்லாம் நாதஸ்வரம் வேண்டும். ஆனால் உங்கடை யாழ்பாணத்திலை வேறை ஒண்டும் வரக்கூடாது. சுத்த சைவ வேளாள அடையாளம் மட்டும் இருக்கவேணும். உலக மேலாதிக்கம் என்ற படியால் கிறிஸ்தவத்துக்கு மட்டும்கொஞசம்  இடமுண்டு.  

என்னை மிகவும் கலங்க வைத்த காட்சி. ஒரு கண்டிய நடன கலைஞர் அடங்கி ஒடுங்கி கை கூப்பிய நின்ற காட்சி. இதை பார்த்த நாதர்சுவ கலைஞர் கூட கலங்கியிருப்பார். எந்த கலைஞரையும் உருகவைக்கும் காட்சி.
ஒரு சொட்டு கலை உணர்வு உள்ளவரையும் இது உருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

உலகமே கலங்கி நிற்குது தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு பச்சை அடிச்சு வைச்சுள்ளவை லொறியால அப்பாவி மக்களைக் கொன்று குவித்ததை இட்டு. 

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு எதுக்கு பச்சை.. வேற கலர் அதுக்குப் பொருந்தாதோ..?!

மேலும் அங்கு கண்டிய நடனம் ஆட விடுவினமோ.. இல்ல நாதஸ்வரம் தான் ஊத விடுவினமோ.. எதுக்கும் ஒருக்கா ஹசன் அண்ண தன்ர முதுகில இருக்கிற ஊத்தையை உரசிப் பார்த்திட்டுச் சொல்லுங்கண்ண.

அவையவை தாங்கள் பெரும்பான்மையாக உள்ள இடங்களில் தங்கட கலை கலாசாரப் பின்னணியில் தான் நிகழ்வுகள் செய்யினம். அங்கெல்லாம் சிறுபான்மையாக உள்ள மாணவர்கள் அதை அனுசரிச்சுப் போகினம்.

அதேன் சிங்களவர்களுக்கும் முஸ்லீம்களுக்கு போற இடமெல்லாம் தாங்க தான் பெரும்பான்மை என்ற நினைப்பும் மமதையும் வருகுது. அதுதான் இலங்கையில் அமைதி இன்மைக்கும்.. உலகில் அமைதி இன்மைக்கும் இன்று முக்கிய காரணமாக உள்ளது ஹசன் அண்ணா.

எதையும் ஒரு நீதியோடு கதைக்கனும். அல்லாவுக்கு ஒரு சட்டம். புத்தருக்கு ஒரு சட்டம். சிவனுன்னா... கால்ல போட்டு மிதிக்கனுன்னு இல்லைத் தானே. மிதிக்கனுன்னு விரும்பினா.. அல்லாவையும் மிதிக்கனும்.. புத்தரையும் மிதிக்கனும். சிவன் மட்டும் அதுக்கு ஆளானால் அது பாரபட்சம்.. பயங்கரவாதம்.. பாசிசமாகும். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nunavilan said:
6 minutes ago, nedukkalapoovan said:

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு எதுக்கு பச்சை.. வேற கலர் அதுக்குப் பொருந்தாதோ..?!

உங்களுக்கு பச்சையோடு என்ன பிரச்சினை? 

யாழ்ப்பாண பல்கலைக்கழக இலச்சினையில் ஏன் நந்தி சின்னம்?

கேளுங்கள் எனக்கு நந்தியோடு என்ன பிரச்சினை என்று? விளக்கமாக சொல்லலாம்.

சிவனோடு பிரச்சினை இல்லை. தமிழருக்கு முற்பட்ட ராவணனே சிவ பக்தன் தான்.

உங்கள் சிந்தனையோடு தான் பிரச்சினை.

 

  • கருத்துக்கள உறவுகள்

பச்சையை ஏற்கிறீங்க.. சிங்கத்தை ஏற்கிறீங்க.. ஆனால் நந்தி மட்டும் இருக்கக் கூடாது. அதுக்க பச்சை சிங்கம் எல்லாம் கலந்திருக்கனுன்னு நிற்கிறீங்க பாருங்க.. உதுதான் வேணாம் என்டினம். யூட் அண்ணை எப்பவும் தமிழர்களை மையமா வைச்சுத்தான்.. இந்துக்களை மையமா வைச்சுத்தான் எல்லைகளற்ற பொறுமைக்கும் விட்டுக் கொடுப்புக்கும் ஓதுவார்.. இதையே கிறீஸ்தவர்களுக்கும்.. இஸ்லாமியர்களுக்கும்.. சிங்களவர்களுக்கும்.. முஸ்லீம்களுக்கும் சொல்ல ஏன் தயங்குகிறாரோ.

அவையவை பெரும்பான்மையாக.. பூர்வீகமாக உள்ள இடங்களில் அவரவர் அடையாளம் முன்னிலைப்படுத்தப்படுவதில் எந்தத் தவறும் இல்லை. அதற்குள் மற்றவர்கள் தேவையற்ற வற்புறுத்தலுடன் கூடிய திணிப்புக்களை.. மிரட்டல்களை செய்யும் போதுதான்.. பிரச்சனைகள் உருவாக்கம் பெறுகின்றன.

கொழும்பில்.. அல்லது பேராதனியவில்.. அல்லது ஒலுவிலில் போய் நின்று கொண்டு தமிழ் மாணவர்கள்.. நாதஸ்வரம் இசைக்கனுன்னு அடம் பிடிக்கவில்லையே. அங்கங்கு அவையவையிட அடையாளங்களை கலாசாரங்களை மதிக்கினம் தானே. மற்றவைக்கு மட்டும் தமிழர்களிடம் எதுக்கு ஒரு அடாத்து... அருவருப்பு மனப்பான்மை. அது வளர்க்கப்படுவது நிச்சயம்.. யாருக்கும் பிரயோசனம் அல்ல. முதலில் யூட் போன்ற விடுப்புவாதிகள் இதனை உணரனும். எதிலும் தமிழரில்.. இந்துக்களில் குறைபிடிப்பதே சிலரின் வேலையாப் போச்சு. tw_blush:

5 hours ago, hasan said:

nunavilan

  • நிர்வாகம்
  •  
  • nunavilan
  • கருத்துக்கள நிர்வாகம்
  •  1,454
  • 33,464 posts
  • Gender:Male
  • Location:USA

"சிங்கள மாணவர்களை கண்டிய நடனமாடும் படி பின்னால் இருந்து யாரோ செயற்பட்டுள்ளார்கள்(சில வேளை ராணுவம்). முஸ்லிம் பகுதியில் உந்த கண்டிய நடனத்தை ஆடச்சொல்ல்லுங்கள் பார்க்கலாம். சிங்களவர்கள் ஒன்றுக்கு பத்து தரம் யோசிப்பார்கள். சிங்கள பல்கலைகளகத்தில் எங்காவது பரதநாட்டியம் ஆடப்பட்டதா??"

 

சிங்கள பல்கலைக்கழகத்தில் இதுபோன்ற நிகழ்வில் நாதஸ்வர இசையும் வேண்டும் என்று தமிழ் மாணவர்கள் கேட்டால் 100% ஏற்றுக்கொள்வார்கள். நான் படித்த பல்கலைக்கழகத்தில் பாரத நாட்டியத்தை விரும்பி ரசித்தவர்கள் சிங்களவர்கள்தான். இன்றும் கொழும்பில் மட்டுமல்ல வெளிநாடுகளிலும் சிங்களவர்கள் பரதம்  கற்கிறார்கள். 

ஹசன் அண்ணா.. இப்படி எல்லாம் அளக்கபடாது. கொழும்புப் பல்கலையில் இருந்தப்போ.. பொங்கல் நிகழ்வு ஒன்றைச் செய்யவே அனுமதி தர மறுத்துவிட்டார்கள்.. நாங்க படித்த நேரத்தில்... 2000 களின் ஆரம்பத்தில். அப்படி இருக்க,... 100% அனுமதிப்பார்கள் என்பது உங்களின் தனிப்பட்ட கருத்தியல் திணிப்பு. ஏன் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில்.. நாதஸ்வரம் மேளதாளத்தோடு ஒரு வரவேற்பை நடத்திக் காட்டுங்கள் பார்க்கலாம். கணக்க வேண்டாம். உடன அல்கா கோவிச்சிடுவார். உங்களுக்கு ஒரு மண்ணாங்கட்டி மற்றவனுக்கு இன்னொரு மண்ணாங்கட்டி... இதனால் தான் சொறீலங்கா சீரழியுது. tw_blush:

யாழ். பல்கலைக்கழக சம்பவத்தை இனவாத மோதலாக சித்தரிக்க வேண்டாம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலை இனவாத மோதலாக சித்தரித்து நிலைமையை சிக்கலாக்க வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஊடக மற்றும் தகவல் பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதாரண தனது பேஸ்புக் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சம்பவம் மனவருத்தத்துக்குரியது.

யாழ். பல்கலைக்கழகத்தை விட தற்போது கொழும்பு பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் கல்வி கற்றுக் கொண்டிருப்பதாக நான் நினைக்கின்றேன்.

கடந்த வருடம் தமிழ் மற்றும் சிங்கள மாணவர்கள் இணைந்து நடத்திய கலை விழா ஒன்றுக்கு நான் சமூகமளித்திருந்தேன். அங்கு அவர்களுக்கிடையே மோதல்கள் இல்லை.

எனவே இந்த சம்பவத்தை இனவாதக் கண்ணோட்டத்தில் பார்க்கவோ, இனவாத கண்ணோட்டத்தில் சித்தரிக்கவோ வேண்டாம் என்று நான் வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றும் அவர் தன் பேஸ்புக் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilwin.com/politics/01/111222

யார் யாரை தாக்கினார்? இன்று யாழ். பல்கலையில் நடந்தது என்ன? நேரடி ரிப்போர்ட்

யாழ். பல்கலைக்கழகத்தில் முதலாம் வருட மாணவர்களை வரவேற்கும் “வெல்கம் பார்ட்டி” எனப்படும் நிகழ்வு வருடா வருடம் இடம்பெறுவது வழமை. குறித்த வருடத்தில் முதலாம் வருடத்துக்கு புகுமுகமாகும் மாணவர்களை வரவேற்று, சிரேஷ்ட மாணவர்களால் நிகழ்வுகள் நடத்தப்படும். கலை, முகாமைத்துவ, விஞ்ஞான, மருத்துவ பீட மாணவர்கள் தங்கள் வசதிக்கேற்ற நாளில் இந்நிகழ்வை ஒழுங்குபடுத்தி நடத்துவர்.

இன்றும் அப்படித்தான். யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட மாணவர்கள் முதலாம் வருட மாணவர்களுக்கு வரவேற்பளிக்கும் நிகழ்வை ஒழுங்குபடுத்தியிருந்தனர். ஆனால் அதற்கான திட்டமிடல் கடந்த இரண்டு வாரங்களாகவே இடம்பெற்றது. அதன்படி, வழமைபோல நிகழ்ச்சி நிரலில் கடைபிடிக்கப்படும் தமிழ் கலாசார மேளதாள – பாடல்களுடன் ( நாதஸ்வர வரவேற்பு) முதலாம் வருட மாணவர்கள் அழைத்துவர விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியத்தினால் திட்டமிடப்பட்டிருந்தது.

தடிகள் பொல்லுகளுடன் சிங்கள மாணவர்கள்
தடிகள் பொல்லுகளுடன் சிங்கள மாணவர்கள்


ஆனால் நேற்றுமாலை யாழ்.பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தில் கல்வியைத் தொடரும் சிங்கள மாணவர்கள் புதியதொரு சர்ச்சையைக் கிளப்பினர். தாம் கொழும்பிலிருந்து சிங்கள பாரம்பரியமான கண்டிய நடனக் குழுவை அழைத்து வரவுள்ளதாகவும், அவர்களின் நடனத்தைக் கொண்டே புகுமுக மாணவர்கள் வரவேற்கப்பட வேண்டும் எனவும் வாதாடினர். புகுமுக மாணவர்களை வரவேற்பதற்கான நிகழ்வு ஏற்கனவே திட்டமிடப்பட்டது எனவும், திடீரென ஒரு புதிய நிகழ்வை புகுத்த முடியாது எனவும், யாழ்ப்பாணத்தின் கலாசாரத்தின் படியே வரவேற்பு நிகழ்வு நடைபெறும் எனவும் தமிழ் மாணவர்கள் வாதிட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிங்கள மாணவர்கள் யாழ்ப்பாண கலாசார ரீதியில் நிகழ்வை நடத்த தாம் அனுமதிக்க மாட்டோம் எனக் கூறினர்.

Jaffna-uni-protest-3
அதன் பின்னர் இந்தப் பிரச்சினை விஞ்ஞான பீட பீடாதிபதியிடம் மாணவர்களால் கொண்டு செல்லப்பட்டது. விஞ்ஞான பீடாதிபதி, சிங்கள மாணவர்களின் வாதத்தை ஏற்று, கண்டிய நடனத்தைக் கொண்டு, புகுமுக மாணவர்கள் வரவேற்கவேண்டும் எனக்கூறினார். பீடாதிபதியின் இந்த முடிவினால் விஞ்ஞான பீட தமிழ் மாணவர்களில் சிலர் இன்று இடம்பெற்ற நிகழ்விலிருந்து ஒதுங்கிக் கொள்வது என்ற முடிவோடு, நேற்றிரவு பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறினர்.

தொடர்ந்து தமிழ் – சிங்கள மாணவர்களுக்கிடையில் கருத்து மோதல்கள் இடம்பெற்றது. அதன் பின்னர் குறித்த நிகழ்வை தடைசெய்யக்கோரி, விஞ்ஞான பீட தமிழ் மாணவர்கள் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தனர். உடனடியாகவே பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விஞ்ஞான பீடதிபதியோடு உரையாடினர். அந்த உரையாடலில் விஞ்ஞான பீடாதிபதி, தாங்கள் சிங்கள கலாசாரத்தை மதிப்பதாகவும், கண்டிய நடனம் கட்டாயமாக இடம்பெறும் என்றும் கூறினார்.

சிங்கள மாணவிகள் ஆடையணிந்தும் ஆடுவார்கள், ஆடையின்றியும் ஆடுவார்கள், அதை அவர்கள் செய்துவிட்டுப் போகட்டும். நீங்கள் இதற்குள் தலையிட வேண்டாம் என்று கூறினார். இதனால் விஞ்ஞான பீடாதிபதியுடன் முரண்பட்ட தமிழ் மாணவ பிரதிநிதிகள் அறையை விட்டு வெளியேறினர். தொடர்ந்தும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், விஞ்ஞான பீட தமிழ் – சிங்கள மாணவர்களை அழைத்து, கண்டிய நடனத்தை நிறுத்த முயற்சிகள் பல எடுத்தனர். அனைத்தும் தோற்றுப்போனது. சிங்கள மாணவர்கள் பக்கம் நின்ற பீடாதிபதி, விரிவுரையாளர்கள் காரணமாக அம்முயற்சிகள் தோற்றுப் போயின.

IMG_2405-768x576

தொடர்ந்தும் மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள், தனியாக சென்று விஞ்ஞான பீட பீடாதிபதியை சந்தித்துக் கலந்துரையாடினர். அந்த உரையாடலின் முடிவில், தமிழ் கலாசாரத்தின்படி நிகழ்வுகள் இடம்பெறட்டும் எனவும், கண்டிய நடனத்தை நிறுத்துவதாகவும் கூறி, மாணவ பிரதிநிதிகளை அனுப்பிவைத்தார் பீடாதிபதி.

அந்த உறுதிமொழிக்கு அமைவாக, இன்று காலை வரவேற்பு நிகழ்வுகள் யாழ். பல்கலைக்கழக வித்தியானந்தன் நூலக வாயிலிலிருந்து தொடங்கின. தமிழ் கலாசார முறைப்படி நாதஸ்வரம், மிருதங்கம் வாசிக்கப்பட்டு மாணவர்கள் வரவேற்கப்பட்டுக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் திடீரெனக் குறுக்கிட்ட சிங்கள மாணவர்கள், தாம் அழைத்து வந்த கண்டிய நடனக் குழுவை ஆடவிட்டனர். கண்டிய நடனக்காரர்கள் சற்றுத்தூரம் ஆடிச் சென்றதும் கலவரம் தொடங்கியது. திட்டமிட்ட ரீதியில் தமிழ் மாணவர்களைக் குழுமி நின்று தாக்கினர். பின்னர் தமிழ் மாணவர்களின் ஏனைய பீடங்களின் மாணவர்களும் அங்கு கூடியதும் அவ்விடத்தில் கலவரமே வெடித்தது.

Jaffna-uni-protest-2

இது எங்கள் நாடு. இது சிங்களத் தேசியம். இங்கு எங்கள் பண்பாடு மட்டும்தான் இருக்க வேண்டும்” எனக் கோசம் எழுப்பியவாறு தடிகள், பொல்லுகள், கம்பிகளைக் கொண்டு தமிழ் மாணவர்களை சிங்கள மாணவர்கள் தாக்கினர். தாக்குதல் உச்சமாக சிங்கள மாணவர்கள் அனைவரும் வேகமாக விஞ்ஞான பீட ஆய்வுகூடத்துக்குள் குவிந்தனர்.

ஆய்வு கூடத்தின் கதவு, யன்னல்களை அடித்து நொறுக்கினர். தங்கள் சிங்கள மாணவிகளை கம்பிகளால் கீறி காயப்படுத்திக் கொண்டனர். தமக்குத் தாமே அடித்துக் கொண்டனர். கம்பிகளால் கை, கால்களில கீறி காயமேற்படுத்திக் கொண்டனர். தமிழ் மாணவர்கள் தாக்கித்தான் தமக்குக் காயம் ஏற்பட்டது என, உடனடியாகவே அவ்விடத்தில் கூடிய பொலிஸ் மற்றும் புலனாய்வாளர்களிடம் முறைப்பாடு செய்தனர். பொலிஸ் மற்றும் புலனாய்வாளர்கள் சிங்கள மாணவர்களைப் பாதுகாப்பாகக் கூட்டிச் சென்றனர்.

இதனை புகைப்படம் எடுத்த ஊடகவியலாளர்களைத் தாக்கவும் ஓடிவந்தனர் சிங்கள மாணவர்கள்.

கலவரங்களுக்கிடையில் அகப்பட்டுக்கொண்ட, விஞ்ஞான பீட விரிவுரையாளர்களையும், யாழ்.பல்கலைக்கழக மார்ஷலையும் சிங்கள மாணவர்கள் தாக்கியுள்ளனர். இப்போது தாம் செய்தது பிழை என விஞ்ஞான பீட விரிவரையாளர்கள் தமிழ் மாணவர்களிடம் கூறி வருகின்றனர்.

Jaffna-uni-protest-1

மறுபுறத்தில் கலவரத்தில் ஈடுபட்ட தமிழ் மாணவர்களை அடையாளம் காட்டித் தருமாறும், அவர்களின் வீடியோக்கள், புகைப்படங்களை தருமாறும் புலனாய்வாளர்கள் மாணவர்களை மிரட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இப்போது யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்துக்கு காலவரையறையற்ற விடுமுறை அளிக்கப்பட்டள்ளது. விடுதியில் உள்ள மாணவர்களை பாதுகாப்பு கருதி உடனடியாக வெளியேறும்படி, பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. பல்கலைக்கழக சூழலில், பொலிஸாரும், புலனாய்வாளர்களும் குழுமி நிற்கின்றனர். வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் திடீர் அறிவிப்பால் செல்லும் இடம் தெரியாமல் தெருவில் நின்று தவிக்கின்றனர்

http://thuliyam.com

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு முன்னுரிமை குடுத்து தமிழ் மாணவர்கள் கண்டிய நடனத்தை அனுமதித்திருக்கலாமே.. :shocked: இப்ப அமெரிக்கா குறை நினைக்கப் போகுது.. tw_worried: tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, இசைக்கலைஞன் said:

இலங்கையின் நல்லிணக்க முயற்சிகளுக்கு முன்னுரிமை குடுத்து தமிழ் மாணவர்கள் கண்டிய நடனத்தை அனுமதித்திருக்கலாமே.. :shocked: இப்ப அமெரிக்கா குறை நினைக்கப் போகுது.. tw_worried: tw_blush:

அவை சற்றலைட்டால இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருப்பினம். அவை நல்ல முடிவு தான் எடுப்பினம். அவை எல்லாம் வல்லவை. இதை டமிழர்களுக்கு போதிக்க ஒரு குறூப் இப்ப வரும். :rolleyes:tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

அவை சற்றலைட்டால இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருப்பினம். அவை நல்ல முடிவு தான் எடுப்பினம். அவை எல்லாம் வல்லவை. இதை டமிழர்களுக்கு போதிக்க ஒரு குறூப் இப்ப வரும். :rolleyes:tw_blush:

போதனைகளை கேட்டு அதன்படி செயற்பட்டவர்கள் வாழ்கின்றார்கள்.

 

  • தொடங்கியவர்

பல்கலைகழக மாணவர்களுக்கு இடையிலான பிணக்குகளை சிலர் பூதாகரமாக முயல்வதாக மாணவர் ஒன்றியம் குற்றச்சாட்டு:

 

 

மாணவ குழுக்களுக்கிடையில் பல அடிப்படையில் பிணக்குகள் ஏற்படுவதுண்டு. ஆனால் அடுத்த நிமிடமே நாம் யாவரும் பல்கலைக்கழக மாணவர்கள் என்ற அடிப்படையில் ஒன்றிணைந்து ஒற்றுமையாகவே படித்து வருகின்றோம். சிலர் சிறிய பிணக்குகளையும் பூதாகரம் ஆக்கி சுய நன்மை அடைய முனைகின்றனர். இத்தகைய நிலமையினை தாம் ஒரு போது அனுமதிக்க  மாட்டோம் என யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம் தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.
 
யாழ்.பல்கலைகழக விஞ்ஞான பீட மாணவர்களுக்கு இடையில் நேற்றைய தினம் ஏற்பட்ட மோதல் சம்பவத்தினை அடுத்து இன்று முதல் யாழ்.பல்கலைக்கழக அனைத்து பீடங்களும் கால வரையின்றி மூடப்பட்டு உள்ளது.
 
இந்நிலையில் யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு உள்ளது. அந்த அறிக்கையிலேயே அவ்வாறு குறிப்பிடப்பட்டு உள்ளது.
 
அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது , 
 
 
 
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்தின் முதலாம் வருட மாணவர்களுக்கான வரவேற்பு உபசார நிகழ்வு  விஞ்ஞானபீட சிரேஸ்ட மாணவர்களால் வருடாந்தம் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. 
 
வரவேற்பு உபசார விழா நடத்துவது வழமையானது. இந்நிலையில் நிகழ்ச்சி நிரலில் மாற்றம் செய்து நிகழ்ச்சி நடாத்த வேண்டும் என ஒரு மாணவர் குழுவும், நிகழ்ச்சி நிரலில் மாற்றம் ஏற்படுத்தாது நிகழ்ச்சி நடத்த வேண்டும் என விஞ்ஞான பீடத்தைச் சேர்ந்த இன்னொரு மாணவர் குழுவுக்கும் கருத்து முரண்பாடு ஏற்பட்டது. 
 
இந்நிலையில் பீடாதிபதியும், மாணவ ஆலோசகர்களும் நிகழ்ச்சி நிரலில் மாற்றம் ஏற்படுத்தாது வழமைபோல நிகழ்ச்சி நடத்துமாறும் விழாக்குழுவிடம் வலியுறுத்தி இருந்தனர். 
 
அத்துடன் துணைவேந்தரின் அனுமதி பெறாத நிகழ்ச்சிகள் நடைபெறக்கூடாது என்ற அடிப்படையிலும் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டது. பின்னர் இம்முரண்பாடு மாணவர் குழுக்களிடையே வலுப்பெற்றது. 
 
இந்நிலையில் விஞ்ஞானபீடாதிபதி சிரேஸ்ட மாணவர் ஆலோசகர், மாணவ ஆலோசகர்கள், விரிவுரையாளர்கள் ஈடுபட்டு சுமூக நிலையினை ஏற்படுத்தினர். சகல மாணவர்களினதும் பாதுகாப்புக்கருதி பாதுகாப்புக்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.
 
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மூவின மாணவர்களும் ஒற்றுமையாகவே படித்து வருகின்றார்கள். இதனை மாணவர்கள், பெற்றோர், கல்விசார் பணியாளர்கள், கல்வி சாராப் பணியாளர்கள், சமூகம் முழுமையாக அறிந்து கொள்ளும். 
 
அதிகமான மாணவர் எண்ணிக்கையினைக் கொண்ட தேசிய பல்கலைக்கழகங்களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமும் ஒன்று. இந்நிலையில் ஒரு சிலரை உள்ளடக்கிய மாணவ குழுக்களுக்கிடையில் பல அடிப்படையில் பிணக்குகள் ஏற்படுவதுண்டு. ஆனால் அடுத்த நிமிடமே நாம் யாவரும் பல்கலைக்கழக மாணவர்கள் என்ற அடிப்படையில் ஒன்றிணைந்து ஒற்றுமையாகவே படித்து வருகின்றோம். 
 
இந்நிலையில் சிலர் சிறிய பிணக்குகளையும் பூதாகரம் ஆக்கி சுய நன்மை அடைய முனைகின்றனர். இத்தகைய நிலமையினை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஒருபோதும் அனுமதிக்காது.
 
மேலும் தொடர்புசாதனங்களுக்கும் ஒரு உன்னத சமூகப் பொறுப்பு உண்டு. உண்மையினை அறிந்து மாணவர்களுக்கும் சமூகத்துக்கும் பாதிப்பினை ஏற்படுத்தாத வகையில் தகவல்களை வழங்குமாறும் தொடர்புசாதனங்களை வேண்டுகின்றோம். 
 
குறிப்பாக தென்னிலங்கை சார்ந்த தொடர்புசாதனங்கள் மக்களுக்கு உண்மையான தகவல்களையும் உண்மையான நிலமைகளையும் நடுநிலமையுடன் சேர்க்க வேண்டிய பொறுப்பும் அவர்களுடையது என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
 
ஓரளவு சுமூகமான அரசியல் சூழ்நிலையில் மாணவர்கள் கல்வியை தடையின்றி கற்கின்ற சூழ்நிலையில் ஒருசில அரசியல் சக்திகள் தன்னலம் கருதி மாணவர்களிடையே ஊடுருவி மாணவர் கல்வியினைப் பாதிக்கின்ற, அமைதியைக் குழப்புகின்ற சூழ்நிலையினை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஒருபோதும் அனுமதிக்காது.
 
என்ற வகையில் உண்மை நிலையினை தெரிவிக்க வேண்டிய கடப்பாடு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு உரியது. இந்நிலையில் மாணவர்களுடைய கல்வியினைப் பாதிக்காது விரைவில் பல்கலைக்கழகத்தை ஆரம்பித்து சகல மாணவர்களின் கல்வியினையும் தொடர பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் துணைவேந்தரை வேண்டி நிற்கின்றது. 
 
இந்நிலையில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கும் என்பதனையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம்.என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/134138/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணாவின் இத் திரியிலான கருத்துக்களை வாழ்க்கை கற்றுக் கொடுத்த பாடம் என எடுத்துக்கலாமா?

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Jude said:

இது  நாமல்  ராஜபக்ஸவுக்கு ஆதரவானவர்களால் திட்டமிட்டு செய்யப்பட்டதாக எனக்கு படுகிறது. சிங்கள மாணவர்கள் வரவேற்கப்படும் போது அவர்களின் மொழியும் கலாச்சாரமும் இடம்பெற சந்தர்ப்பம் கொடுப்பதே நியாயமானது. தென்னிலங்கை பல்கலைக்கழகங்களில் எமது கலாச்சாரத்துக்கு இடமில்லை. ஆகவே இங்கு அவர்களின்  கலாச்சாரத்துக்கு இடமில்லை என்று சிலர் விவாதிக்கின்றனர். இந்த வாதம் சரியானால் அவர்கள் இடம் தராதது சரியானது என்று ஏற்றுக் கொள்ளப்பட்டே வாதம் ஆரம்பம் ஆகிறது. அவர்கள் இடம் தராதது  சரியானால் அது பற்றிய முறைப்பாடுகள் அனைத்தும் செல்லுபடியற்றவை. அறுபது வருட  முறைப்பாடுகள் - நாற்பது வருட போர் அனைத்தும் நியாயமற்றவை என்றாகிறது.

ஆனால் இந்த வன்முறை திட்டமிட்டு செய்யப்பட்டு இருக்கிறது.  ராஜபக்ஸவின் செயற்பாடுகளின் சாயல் தெரிகிறது.

 

 

புலிகளை பற்றி பேசினாலே அல்லது பாட்டு கேட்டாலோ பிடித்து உள்ளுக்குள் போடும் நிலையில் இராணுவமும் அதன் புலனாய்வுகாரர்களும் உள்ள போது பசிலின் ஆட்கள் இதனை செய்திருப்பார்கள்  என்பதை நம்ப முடியாமல் உள்ளது.

14 hours ago, கலைஞன் said:

அவன் கண்டியன் நடனம் ஆடட்டும், நீங்கள் பரதநாட்டியம் ஆடுங்கோ. இதுக்கு ஏனப்பா சண்டை? ஆத்திரக்காரனுக்கு புத்தி மத்திமம்!!! 

மொறட்டுவவில் ஆடத்தான் இருக்கு.:D::D:

8 hours ago, hasan said:

என்னை மிகவும் கலங்க வைத்த காட்சி. ஒரு கண்டிய நடன கலைஞர் அடங்கி ஒடுங்கி கை கூப்பிய நின்ற காட்சி. இதை பார்த்த நாதர்சுவ கலைஞர் கூட கலங்கியிருப்பார். எந்த கலைஞரையும் உருகவைக்கும் காட்சி.
ஒரு சொட்டு கலை உணர்வு உள்ளவரையும் இது உருக்கும்.

தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லப்பட்ட போது மனம் கலங்கி ஒரு வரி எழுதியதை காணவில்லை. இந்த திரியில் மட்டும் ஏன் உங்களுக்கு இப்படி  கலங்கினது என அறியலாமா??

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Jude said:

போதனைகளை கேட்டு அதன்படி செயற்பட்டவர்கள் வாழ்கின்றார்கள்.

 

உரிமைப்போராட்டம் , விடுதலைப்போராட்டம் என்பது இன்றைய சோற்றுக்கல்ல...
இனிவரும் சந்ததிகளாவது கல்லும் கொட்டனும் தூக்காமல் நிம்மதியாக வாழவேண்டும் என்பதற்காவே.

 உங்ளைப்போன்றவர்கள் ஒருநிமிட சுகத்திற்காக எதையும் செய்யக்கூடிய மனப்பான்மை உடையவர்கள்.:cool:

 

 

'நேற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கண்டிய நடனத்தை ஆட வந்த சிங்கள மாணவர்களை வீரத்தோடு அடித்துத் துரத்தி விட்டோம்' என்ற இருமாப்புடனான பல தமிழ்ப் பதிவுகளை இன்று முகநூலில் காணக் கூடியதாக இருப்பது வருத்தத்தைத் தருகிறது.

தேசிய கீதத்தைத் தமிழில் பாட உரிமை கேட்கிறோம். எங்கும் அரங்கேற்றிட உரிமையுள்ள தேசிய நடனத்தை விழாவில் ஆடினால் அடித்துத் துரத்துகிறோம். மிகவும் மோசமான உளப்பாங்கல்லவா இது?

பல்கலைக்கழகங்கள் அனைத்து மத மாணவர்களுக்கும் பொதுவானவை. அதிலும் யுத்த பூமி என்பதால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இன்னும் விஷேடமானது.

'யாழ்ப்பாணமானது, இப்பொழுதும் ஒரு கலவர பூமியாகவே இருக்கிறது' எனவும், 'அங்கு வாழும் தமிழ் பேசும் மக்கள் சிறு விடயத்துக்கும் கலவரங்களை உண்டுபண்ணக் கூடியவர்கள்' எனவும் உலகுக்குக் காட்டும் தேவை இப்போதும் அரசுக்கு இருக்கிறது.

இராணுவத்தை முற்றுமுழுதாக வடக்கிலிருந்து அகற்றும்படி கோரிக் கொண்டிருக்கும் உலக நாடுகளுக்கு, இராணுவத்தை வடக்கில் இன்னும் நிலைநிறுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த இம் மாதிரியான ஒரு சம்பவம் கூட அரசுக்குப் போதும்.

இம் மாதிரியான வன்முறைகளில் ஈடுபடும்போது அல்லது பிறரால் வன்முறைகளில் ஈடுபடத் தூண்டப்படும்போது, சிங்களவர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலுள்ள பல்கலைக்கழகங்களில் கற்கும் தமிழ் பேசும் மாணவர்களது நிலைப்பாட்டையும் கருத்திற் கொள்ள வேண்டும். தீயின் திரி தொடர்ச்சியாகப் பற்றி எரியத் தொடங்குமானால் இலங்கை முழுவதிலுமுள்ள அனைத்து தமிழ் பல்கலைக்கழக மாணவர்களும் பெரும் இழப்புகளைச் சந்திக்க நேரிடும். இப்போது மாத்திரமல்ல. அது அடுத்த தலைமுறைக்கான கல்வியையும், இன்னும் ஓரிரு வருடங்களில், இத் தலைமுறைக்கான தொழில்வாய்ப்புக்களையும் கூடப் பாதிக்கும்.

இச் சிறிய தீவில், இழப்புக்கள் எப்போதும் சிறுபான்மையினருக்கு மாத்திரமானதே. சிந்தித்து செயற்படுங்கள்.

வன்முறையில் வீரமில்லை. வனாந்தரங்களில் வேட்டைக்கென வைக்கும் பொறிகள் வைப்பவர்களைத் தவிர, வேறெவரினதும் பார்வைக்குத் தெரிவதில்லை.

- எம்.ரிஷான் ஷெரீப்
17.07.2016

 

 

நீங்கள் பேண விரும்பும் கலாசாரம் எது?

 
 
13412898_10156888235375386_7457913816845
Niyanthini Kadirgamar
10 hrs · 
 

“தமிழ் கலாசாரத்தை நாம் பேணிப் பாதுகாக்க வேண்டும்!,” என்று கூறுகிறார்கள் யாழ் பல்கலைக்கழகத்தின் தமிழ் மாணவர்கள். அதுவும் சிங்களவர்களின் கலாசார ஆக்கிரமிப்புக்கு எதிராக என்று நியாயப்படுத்துகிறார்கள். 
சில மாதங்களுக்கு முன் யாழ் பல்கலைக்கழகத்திற்கு சென்றிருந்த போது இவ்வகையான மோதல் ஒன்று தமிழ் மாணவர்களிடையே ஏற்பட்டதை பார்த்திருந்தேன். அடிபிடி மோதல் என்பதே எங்கள் கலாசாரத்தில் ஊறிக்கிடக்குதே? அதைத் தான் பேண வேண்டுமென்று பேசுகிறீர்களோ?
அன்றும் பல்கலைக்கழகத்தில் ஒரு விழா நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஒலிபெருக்கியில் சினிமா பாடல்கள் ஒலித்தன. வர்த்தக நோக்குடன் சந்தைப்படுத்தப்படும் அப்பாடல்களை எம் கலாசாரத்துக்கு ஒத்தது என்று விரும்பி நுகர்ந்து கொண்டு, பாரம்பரிய நடனக் கலைகலுள் ஒன்றான கண்டிய நடனம் மட்டும் உங்களுக்கு கடுப்பை எத்துதோ?

நீங்கள் பேண விரும்பும் கலாசாரம் எது?

பெண்கள் சேலை கட்டி பல்கலைக்கழகம் வரவேணும் என்று circular அனுப்புவதுவா? இல்லை, jeansஉடுத்தினால் பெண் மாணவர்களை தூற்றிப்பேசும் பிற்போக்குத்தனமா? மட்டக்களப்பு, அம்பாறை, மலையகம் போன்ற வேறு மாவட்டங்களில் இருந்து வரும் தமிழ் மாணவர்களிடம் வேற்றுமைகாட்டி நடப்பதா? முஸ்லீம் மாணவர்கள் தொழுகைக்கு ஒரு அறை தருமாரு விண்ணப்பித்த போது மறுக்கும் தன்னலமா? சிலந்திகள் வந்து வலையமைப்பதற்கு சொகுசாகவுள்ள, ஒரு முறையேனும் புரட்டப்படாத புத்தகங்கள் நிறைந்த உங்கள் நூலகத்தையா? சாதியம், ஆணாதிக்கம், பிரதேசவாதம் என்று எமக்குள்ளேயேயுள்ள பல ஒடுக்குமுறைகளினால் முன்னேற முடியாமல் கட்டுண்டு கிடக்கும் கல்வி முறையையா? இன்று இலங்கையில் மற்றைய பகுதிகளுடன் ஒப்பிடுகையில், வட மாகாணத்தின் மிகவும் பின்நோக்கிய கல்வி நிலையையா?

இதற்கு மாணவர்களை மட்டும் குறை கூறக்கூடாது. ஆனால், மாணவர்கள் கூர்மையாக சிந்திக்க வேண்டிய காலம் இது.

போருக்குப் பிற்பட்ட காலங்களில் ஏற்பட்ட சவால்களுக்கெல்லாம் காரணம் கலாசார சீரழிவு, கலாசார சீரழிவு என்று கூச்சமில்லாமல் அரசியல்வாதிகள், ஆசிரியர்கள், மதத்தலைவர்கள், NGOகள், நிபுணர்கள் என்று எல்லோரும் கூறிக்கொண்டனர். ஏன் சிலர் இதை தமது விஞ்ஞாபனத்தில் கூட சேர்த்துக்கொண்டனர்.

இவ்வாறு இழிவு நிலையிலுள்ள கலாசாரத்தையா பேணப்போகிரீர்கள்?

(பாழாப்போன)கலாசாரம் எதுக்கு தம்பி?

Edited by hasan

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாளனுக்கும் துட்ட கைமுனுவுக்குமான போர் தேசியத்தலைவர் பிரபாகரனோடு முடிந்து விட்டதாக நினைத்தவர்களுக்கு இது ஒரு அறிவிப்பு மட்டுமே. தமிழ்த்தேசியத்தை சிங்களதேசம் ஏற்றுக்கொண்டு சமாதானமாகப் பிரிந்து செல்லாத வரை இது நீடிக்கும். இது சும்சும் கும்பலால்  ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் இதுதான் உண்மை. சம்பந்தர் 2016 இற்குள் தீர்வு எடுத்துத்தர மாட்டார் என்பதற்கு உதாராணம் *** தம்பலகாமத்தில் புத்தர்சிலை ஒரு உதாரணம் மட்டுமே. எல்லாளன்கள் மீண்டும்மீண்டும் பிறந்து கொண்டே இருப்பார்கள். தமிழ்மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் யாழ்பல்கலைக்கழகத்தின் பங்கு  தொடர்ந்து  இருந்து கொண்டே இருக்கிறது..நெல்லுக்குள் பதர்கள் போல அவ்வப்போது  பதர்களும் அங்கு உருவாவது உண்மையே.தமிழ்த்தேசியம் என்னும் பெருங்காற்றின் முன்னால் இந்தப் பதர்களின் நிலை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

 உங்ளைப்போன்றவர்கள் ஒருநிமிட சுகத்திற்காக எதையும் செய்யக்கூடிய மனப்பான்மை உடையவர்கள்.:cool:

என்னை பற்றிய உங்கள் அபிப்பிராயத்தை சொல்லி விட்டீர்கள்.  

உங்களை பற்றிய எனது அபிப்பிராயத்தை சொல்லும் சந்தர்ப்பம் இது:

1 hour ago, குமாரசாமி said:

உரிமைப்போராட்டம் , விடுதலைப்போராட்டம் என்பது இன்றைய சோற்றுக்கல்ல...
இனிவரும் சந்ததிகளாவது கல்லும் கொட்டனும் தூக்காமல் நிம்மதியாக வாழவேண்டும் என்பதற்காவே.

ஆயிரம் ஆயிரம் உயிர்களை பலி கொடுத்து, அந்த மக்களை பல தசாப்தங்கள் பிற்பட்ட பொருளாதார, அறிவியல் நிலைக்கு தள்ளி, இளம் பெண்களை விதவைகளாக்கி விபச்சாரிகளாக வாழ வைத்து நீங்கள் நடத்திய விடுதலை போராட்டம் சோற்றுக்கு நடந்த போராட்டம் அல்ல என்பது உண்மை தான். சோற்றுக்கு இந்த விடுதலை போராட்டம் வகுத்த வழி விபச்சாரம். உங்கள் முட்டாள்தனத்துக்கு மீதமுள்ள நொந்து போன மக்களையும் பலி கொடுக்க தயங்காத உங்கள் வக்கிரம் உங்களுடைய எழுத்தில் தெரிகிறது. 

 

 

அன்புள்ள பல்கலைக்கழக தோழர்களுக்கு ,

நேற்று யாழ்பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவத்தையும் அது சார்ந்து வெளிவந்த செய்திகள் பற்றியும் இங்கே இம்மியளவும் கதைப்பதற்கு எனக்கு உடன்பாடில்லை. கொட்டனை ஓங்கினார்கள், கல் எறிந்தார்கள் காயம் வந்தது, பொலீஸ் வந்தது,சிங்களவன் என்றோம் ,தமிழன் என்றோம் என்ற பாணியில் மக்களை உசுப்பேத்தி வர்ணனைகளை அள்ளி வீசும் எந்த ஊடகத்திற்கும் வெளியே நான் நிற்க பிரியப்படுகின்றேன்.

இது நாம் உரையாடிக்கொள்ள வேண்டிய தருணம்.

நேற்று இரவு பல்கலைகழகத்தை கடந்துவரும் போது மயான அமைதியுடன் பொலீஸ் சூழ இருந்தது. பகல் நடந்தவைகள் , செய்தியில் திரிக்கப்பட்டவைகள் , ரோட்டில் கேள்வியுற்றவைகள் அனைத்தும் என்னை மிகவும் உணர்ச்சி வசப்படுத்தியிருந்தன. வந்தவுடன் பேஸ்புக்கில் ஒரு இஸ்டேட்டஸ் போட்டேன் பத்து நிமிடத்தில் அதை அழித்துவிட்டேன். எனக்குள்ளும் அந்த பதட்டமும் , உணர்வுச்சிக்கலும் தொற்றியிருந்தது. நீங்களும் அவ்வாறுதான். நம்முடைய மனதில் காழ்பு இல்லை என்பதை மீண்டும் மனதுக்கு ஒரு முறை சொல்லிக்கொடுப்போம்.

இப்போது

இத்தனை வருட கால இன முரண்பாடு , எங்களை எத்தனை உணச்சிக்கு ஆளாக்கி வைத்திருக்கின்றது என்பதை நம் ஒவ்வொருவராலும் உணர முடிகின்றது. நேற்று பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு இடையில் எழுந்த முரண்பாட்டை மாணவர்கள் அந்த இடத்தில் அணுகியதைவிட ஊடகங்களும் , வலைத்தள வாசிகளும் மிக கூர்மையாக ஆணுகினார்கள். பலருக்கு யாரோ சிலர் ஆயுதத்தைத் தூக்கிக்கொண்டு அவர்களுக்கு முன்னால் போய் நிற்கவேண்டும் , அது மட்டும்தான் வேண்டும் . அத்தனை பழி உணர்ச்சி. 
குறிப்பாக safe zone க்குள் இருக்கும் புலம்பெயர்ந்தவர்களும், அதிகாரம் , அரசியல் பின்னனி சார்ந்தவர்களுக்கும் நாங்கள் ஆயுதம் தாங்கி அடிபடவேண்டும். எல்லா இன மக்களிடையேயும் இப்படி சிந்திக்கும் பிற்போக்கு பேர்வழிகள் மலிந்து போய்க்கிடக்கிறார்கள்.

இது பல்கலைக்கழக பிரச்சினை , முன்பு போல் அதை பகடை அரசியலாக்கி கொண்டிருக்கின்றன சிங்கள தமிழ் ஊடகங்கள். பார்க்கப்போனால் அது சில நபர்கள் சார்ந்தது மட்டுமே . முதல் உணர்வு வசப்பட்டு கையோங்கிய சிலரதும் அதற்கு பதில் கை ஓங்கிய சிலரதும் பிரச்சினை. அந்த சிலர் இரண்டு தரப்பிலும் பல்கலைக்கழக வளாகத்தில் உலவுகின்றனர்.

அவர்கள் நேற்று அங்கே தீடிரென முளைத்தவர்கள் கிடையாது. சமீப நாட்களாக இது பனிப்போர் போல் உள்ளே குமைந்து கொண்டு இருந்த ஒன்றுதான். விகாரை கட்ட வேண்டும் என்ற சுவரொட்டிகள் , நந்தி சிலை உடைப்பு , உட்காரும் பெஞ்ச்கள் உடைப்பு என விஞ்ஞான பீடத்திற்கு நெருக்கமாக இருக்கும் இடங்களில் மறைந்தும் மறையாமலும் குமைந்து வந்த பிரச்சினை நேற்று வெடித்திருக்கிறது. அது ஒரு தீடீர்காரணம்கிடையாது அது பல உபநிகழ்வுகளின் சமீபத்தைய வெடிப்பு .

ஒட்டு மொத்த தமிழ் மாணவர்களையோ ஒட்டுமொத்த சிங்கள மாணவர்களையோ இரண்டு தரப்பாக நிறுத்தி அடிபடுங்கள் என்று சொல்வதைப்போலிருக்கிறது ஊடகங்களினதும் சமூக வலைத்தளங்களினதும் பதிவுகள். அவர்களின் சுவாரஸ்ய பசிக்கும் , இனவாதத்தாகத்துக்கும் மாணவர்கள் பலியாடுகள் . கயவர்கள்.

சகல இனத்தவர்களுக்கும் தங்களுடைய அடையாளம் சார்ந்த ஆற்றுகைகளையும் வெளிப்படுத்த உருத்துடையவர்கள் தான் ஆனால் அது எந்தச்சூழலில் எப்போது நிகழ்த்தப்படுகின்றது என்பதும் . அது அச்சுறுத்தலுக்கு உள்ளாகிக்கொண்டு அரசினாலும் குறித்த பெரும்பான்மை அடிப்படை வாதத்தாலும் வஞ்சிக்கப்படும் ஒரு மக்கள் கூட்டத்தின் நடைமுறைச்சூழலில் வலிந்து செய்யப்படுவது மோசமானது. ஆனால் பல்கலைக்கழகத்திற்கு வெளியே முளைக்கும் புத்தர் சிலைகளை நோக்கி யாரும் ஏன் சுட்டு விரலைக்கூட தூக்க வில்லை என்பது நகை முரண் அல்லவா? இதற்கு பின்னால் ஏதோ ஒன்று இயங்குவதை உணர்ந்துகொள்ளுங்கள்.
எல்லோரும் சுதந்தரமானவர்கள் , சமனானவர்கள் என்று பேச முன்வரும் வாரிடமும் நான் முன்பு குறிப்பிட்ட சுவரொட்டிகள், நந்திநிலை உடைப்புகள் , கல்லாசன தகர்ப்புக்கள் நிகழ்த்தப்பட்ட பின்னனி என்ன என்பதற்கான விபரத்தை கோரி நிற்கின்றேன். நிச்சயமான இது ஒட்டு மொத்த இனச்சூழலின் வடிவமல்ல அடிப்படைவாத பிற்போக்கு மனநிலை கொண்ட ஒரு சிலரின் செயல்கள்.

ஏன் வழமைக்கு அதிகமாக கடந்த வருடங்களில் இனமுரண்சூழலை கட்டமைப்பது போல யாழ் பல்கலைக்கழகத்திற்கு அதிகமான சிங்கள மாணவர்கள் திணிக்கப்படுகின்றார்கள் என்பதற்கும் , ஏன் தமிழ் – சிங்கள மாணவர்கள் ஒரு சில பீடங்களைத்தவிர மிகுதியான பீடங்களில் எதிர்படுகையில் புன்னகைத்து கொள்வது கூட இல்லையென்பதற்கும் தர்க்க ரீதியான பதில் அதிகாரம் சார்ந்த யாரிடமாவது இருக்கின்றதா ? இது கூட அங்குவரும் சிங்கள மாணவர்கள் செய்யும் செயலல்ல . அது இனவாதம் ஊறிப்போன அதிகார மையங்கள் செய்யும் கயமைத்தனம் .

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தொடக்கம் பல்கலைக்கழக நிர்வாகம் வரை இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும். நீர் சுத்திகரிப்பானில் நீர் பெறுவதில் இருந்து சிங்கள தமிழ் பிரச்சினை பல்கலைக்கழக வளாகத்தினுள் தினமும் கூர்ப்படைவதை பல்கலைக்கழக நிர்வாகம் எப்போது உணரப்போகின்றது.

அதிகார பீடங்கள் எப்போதும் மக்களுக்கும் அறத்துக்கும் எதிரானவைதானே. ஆனால் இதை இப்படியே விட்டால் இந்த கொடுநோய் மீண்டும் அழிவுக்குத்தான் கொண்டு செல்லும்.

தவிர தமிழ்- சிங்கள் மாணவர்களைப்போலவே முஸ்லீஸ் மாணவர்களுக்கும் தமிழ் மாணவர்களுக்குமான உறவு நிலைகள் தொடர்ந்தும் நோயுற்று இருப்பதை மிகச்சாதாரணமாக கடந்து போக இயலுமா? முஸ்லீம் மாணவர்களின் தொழுகை அறையில் ஊற்றப்பட்ட ஓயில் கறை இன்னும் அகலாமல் கிடப்பதை உள்ளூர எவருமே உணரவில்லையா ?

மூன்று இனத்தவரும் ஒரே வளாகத்தில் எங்கிருந்தோ உருவாக்கப்படும் வேற்றுமனநிலைக்கு பழக்கப்பட்டு கொண்டே இருக்கிறோம். ஒரு குழு அலது குறுகி இயங்கும் ஆள்மனப்பதிவு ஒன்று தொடர்ந்தும் அந்த பல்கலைக்கழக வளாகத்தினுள் அடுத்தடுத்து கடத்தப்படுகின்றது.

லீவு விடுவதன் ஊடாக காழ்ப்பு அல்லது எதிர்மறை நிலைஎன்ற கத்தியை உறைக்குள் திரும்ப அனுப்புகின்றது நிர்வாகம் . அதிகார பீடங்கள் எங்கும் அப்படித்தான். உறையிலடப்பட்ட கத்தியை எப்படி கண்டறிந்து அழிக்கப்போகின்றோம் என்ற மனித நிலைக்கு நாங்கள் எப்போது போகப்போகின்றோம். முரண்பாடு தவிர்ப்பு , முரண்பாடு நிலை மாற்றம் , முரண்பாட்டு அகற்றல் எல்லாம் பாடத்திட்டமாக மட்டும் பல்கலைக்கழகம் கடந்து போகின்றது.
நாம் இனி அடக்கு முறையை எப்போதும் ஆயுதத்தால் எதிர்கொள்ள போவதில்லை என்று ஒரு நம்பிக்கையை ஆவது உருவாக்கி கொள்வோம்.

மரபை , சுயத்தை , நமது இருப்பை அழிப்பது மாணவர்கள் இல்லை. அவ்வாறு இயங்குபவர்களுக்கு பின்னால் அதிகாரம் , அடிப்படை வாதம் சார்ந்த பெரிய அரசியல் , பணக்கொள்ளைக்கூட்டம் இயங்கிக்கொண்டிருக்கிறது. அதை உணரவேண்டும் சிந்தனை தளத்தில் இவைகளை எதிர்கொண்டால் மாணவர்கள் முன்னால் அவை கண்நேரமும் நிற்காது.

நாம் எமது இருப்பை பாதுகாக்க போராடுதல் தவறில்லை. ஆனால் அது உணர்ச்சி , பதட்டம் என்பவற்றின் தளத்தில் நடத்தல் கூடாது அது , சிந்தனைதளத்தில் நின்று நடக்க வேண்டும்.
உங்களை தூண்டி விட்டு குளிர் காய்பவர்கள் நாளை நீங்கள் ஒரு பிரச்சினைக்குள் போக அவர்கள் அரசியல் மேடைகளை அலங்கரித்து யாருக்கு எதிராக உங்களை கல்லெறியச்சொன்னார்களோ அவர்களோடு சேர்ந்து நிற்பார்கள்.

நாங்கள் மாணவர்கள். நாங்கள் அவர்களைப்போல் கயவர்கள் இல்லை. 
ஒரே வளாகத்தில் ஒரே வகுப்பறைகளில் ஒரே சிற்றுண்டிச்சாலைகளில் நாங்கள் புளங்குகின்றோம் , கல்வி கற்கிறோம் , ஒவ்வொரு நாளும் எதிர்ப்படுகிறோம்.
நிமிர்ந்து பரஸ்பரம் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கும். எல்லோரும் மனிதர்களாகவே பிறக்கிறோம்.

ஆதலால்.

புன்னகைக்க தொடங்குவம். 
ஓம் அதையும் நாங்களே தொடங்குவம்.

அன்புள்ள 
யதார்த்தன்

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

 

jaffna.jpg

விடுதலைப் புலிகளை அழித்துவிட்டால் நாட்டில், அமைதி, சமாதானம், நல்லிணக்கம், இன ஒற்றுமைகள் வந்துவிடும் அல்லது அடைந்துவிட்டோம் என்பது பொய் என்பதை அடுத்தடுத்து நாட்டில் நிலவும் நிகழ்வுகள் திடமாக எடுத்துக்காட்டுகின்றன.

இலங்கை மூவினங்களைக் கொண்ட ஒரு நாடு. ஆனால் மூவினங்களிடத்திலும், மேலிடம் ஓரிடமாக இருப்பின் அவ்விடம் நிச்சையமாக அடக்கி ஆளும் சிந்தனையில் தான் இருக்கும் என்பதை இப்பொழுதும் காணக்கூடியதாக இருக்கிறது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் புலிகளின் ஆயுதப் போராட்டம் முடிவிற்கு கொண்டு வரப்பட்ட பின்னர், இலங்கையில் நல்லிணக்கம் கொண்டுவரப்பட்டதாக இலங்கை அரசாங்கம் விளம்பரம் செய்து கொண்டது. அதனை சர்வதேச சமூகத்தை நம்ப வைக்க இலங்கை அரசாங்கம் பகீரதப் பிரயத்தனப்பட்டுக் கொண்டது.

ஆனால், சிங்களத்தின் மீதும், பௌத்தத்தின் மீதும், கொண்ட தீவிர காதல் கோத்தபாய ராஜபக்சவை புலியழிப்போடு நிறுத்திக் கொள்ளவில்லை. நல்லிணக்கம், மீள்கட்டுமானம் என்று தொடங்கிய சிங்கள மேலாதிக்க சிந்தனை, ஒரே நாடு, ஒரே தேசம் என்று பறைசாற்றி, இந்த நாட்டில், ஒரே இனம், ஒரே மதமாக்கியது.

யுத்தம் முடிந்த கையோடு, சிங்கள மக்கள் வடக்கு, கிழக்கின் பெரும்பகுதிகளில் மறைமுகமாகவும், நேரடியாகவும் குடியேற்றப்பட்டார்கள்.

இவ்விடத்தில், இனவாதம் பேசவில்லை நாம். இலங்கையில் எந்தப் பகுதியில் எவர் வேண்டுமானாலும் வாழலாம் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால் அது எந்த காலத்தில்? எப்படி நிகழ்கின்றது என்பது தான் இங்கே நோக்குதற்கு உரியது.

இலங்கை முழுவதும், தமிழ், முஸ்லிம் மக்கள் பரந்து வாழ்கின்றார்கள். அவர்கள் தங்கள் பிறப்பிடம், மற்றும் பூர்வீக குடியிருப்பின்படி தமது இருப்பை தக்க வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் வடக்கு கிழக்கில் யுத்தம் முடிந்த கையோடு, பெருந்தொகையான சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டது தான் இலங்கை அரசாங்கம் செய்த மிகப் பெரியதோர் திட்டமிட்ட சூழ்ச்சி அல்லது நிகழ்ச்சி நிரல்.

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவிற்குக் கொண்டுவந்த பின்னர், அரசாங்கம் முதலில் அரசியல் ரீதியான பிரச்சினைகளை தீர்த்து வைத்திருக்க முன்வந்திருக்க வேண்டும். போருக்கும், ஆயுத மோதல்களுக்கும், காரணம் யாதென்பதை கண்டறிந்து அதற்கான மூல வேரினை அறிந்து, பரிகாரம் தேடியிருக்க வேண்டும்.

தமிழ் இளைஞர், யுவதிகள் ஏன் அகிம்சையை கைவிட்டு, ஆயுதத்தினை கையில் எடுத்தனர் என்பதற்கான விடைக்கான கேள்வியினை கண்டறிந்து, மீண்டும், ஆயுதமோ, வன்முறையோ நாட்டில் தேவையில்லை என்பதை அரசாங்கம் உணர்ந்திருக்குமாயின், போர் முடிந்த கையோடு அரசியல் பிரச்சினைக்கான தீர்வு எட்டபட்டிருக்கும்.

ஆனால் அதற்கு மாறாக தான் அரசாங்கம் சிந்தித்தது. இலங்கை முழுவதும், சிங்கள மக்களை குடியேற்றுவதும், இலங்கையின் தமிழ்ப் பல்கலைக்கழகங்களான கிழக்கு, மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களை அதிகளவில் இணைத்துக் கொள்வதன் மூலம் தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிராகரிக்கலாம் என முடிவு செய்தது.

இன்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நடந்த சண்டை உணர்த்துவது என்ன? ஏன் சண்டை வந்தது? சிங்கள மாணவர்கள் தமிழ் மாணவர்களுக்கு எதிரியா? இல்லை தமிழ் மாணவர்கள் சிங்கள மாணவர்களுக்கு விரோதியா????

இது தான் கேள்வி....! இதை சரியான பின்புலத்தோடு அணுக வேண்டுமே தவிர, வெறும் இனவாதமாக அரசாங்கம் பார்க்க கூடாது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ் மக்களின் இனவிடுதலைப் போராட்டத்தின் மூல வேராக விளங்குகின்றது என்பது அரசாங்கத்திற்கு நன்றாகவே தெரியும்.

விடுதலைப் போராட்டத்தின் தொடக்கமும் இங்கிருந்து தான் தொடங்குகின்றது. விடுதலைப் போராட்ட தொடக்கத்தில் இருந்து, இன்று வரை யாழ். பல்கலையின் தமிழினத்தின் விடுதலையில் அளப்பரிய பங்காற்றியிருக்கின்றது.

ஆனால், இன்று அப் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்களின் தொகையோ தமிழ் மாணவர்களின் தொகைக்கு நிகராக நிரப்பட்டுள்ளார்கள். இன்னும் சிறிது காலத்திற்குள் சிங்கள மாணவர்களே பெரும்பான்மையான மாணவர்களாகியிருப்பார்கள்.

இவ்விடத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டமையை தவறு என்றோ அன்றி, சிங்கள மாணவர்கள் தமிழர் பகுதியில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தில் படிக்கக் கூடாது என்றோ வாதிடவில்லை.

மாறாக, இலங்கை அரசாங்கம் யுத்தம் முடிந்த கையோடு, சிங்கள மாணவர்களையும், மக்களையும் தமிழர் பகுதிக்குள் அனுப்புவதற்கு காட்டிய அக்கறையினை தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையில் ஈடுபாடு காட்டி பிரச்சினைக்கு ஓரளவேனும் தீர்வினை எட்டிய பின்னர்,

வடக்கு கிழக்கில் மாணவர்களின் கற்கைகளுக்கு அனுமதியளித்திருக்கலாம். நீண்டகாலமாக மனதின் வடுக்களாக மாறிப்போன இனப்பிரச்சினை தீ, நெஞ்சில் குடைந்து கொண்டிருக்க, அந்த தீக்கு மருந்து கொடுக்காமல், மேலும், அதை பெரிதாக்க நினைப்பதன் விளைவு தான் இது.

முள்ளிவாய்க்காலில் அத்தனையையும் இழந்து சோகத்தோடு பயணிக்கும் தமிழ் இனம், தன் இருப்பின் அடையாளமாக, தங்கள் சொத்தின் இருப்பிடமாக, அறிவாலயமாக திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கத்தில் தங்களின் மேலாதிக்கத்தை காட்ட முனைந்தால், எப்படி பொருத்துக் கொள்வார்கள்.

இதை இன்னொருவிதமாக நோக்கலாம். இதுவரை காலமும், இது சிங்கள பௌத்த நாடு என்று நினைத்திருந்த பெரும்பான்மை இனத்தினை சேர்ந்த சகோதர மாணவர்கள் தமிழர் பகுதியில் படிக்க வந்ததன் பின்னர், தமிழர், கலாச்சாரம், பண்பாடு, நிகழ்வுகளை எவ்வாறு நோக்குவார்கள். அதனை அவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?

நாங்கள் தான் இந்த நாட்டின் பெரும்பான்மை இனத்தினை சேர்ந்தவர்கள். இது எங்கள் நாடு. எங்கள் பௌத்த மதம் தான் மேலானது. எங்கள் கலாச்சாரத்திற்கு தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்னும் சிந்தினையில் வாழ்ந்த பிள்ளைகளை தமிழ் மக்களின் தாயக பூமிக்கு அனுப்பி வைத்தால் அவர்களின் மனதில் எவ்வகையான பாதிப்பை ஏற்படுத்தும்.

இது தான் பிரச்சினைகளுக்கான மூலகாரணம். இவ்விடத்தில் சிங்கள தமிழ் மாணவர்கள் மோதிக்கொண்டதும் அதற்காக தான். சகிப்புத் தன்மையும், ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் அவர்களிடத்தில் இன்னமும் ஏற்படவில்லை என்பது தான் நிறுத்திட்டமான உண்மை.

பள்ளிக் கூடத்தில் இருந்து, மத வழிபாட்டு விகாரை ஈராக, அரசியல் மேடை வரை பௌத்த, சிங்கள நாடு என்று எடுத்துரைத்தே வளர்த்துவிட்டு, அவர்களை அதோடு தொடர்பில்லாத இடத்திற்கு அனுப்பி வைத்தால் மீண்டும் கலவரங்களும், சண்டித்தனங்களும் ஏற்படவே செய்யும்.

நாட்டில் உண்மையில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட்டு, இனப்பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட்டிருக்குமானால் இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த வன்முறை நிகழ்வுக்கு வாய்ப்பே இன்றி போயிருக்கும்.

இது தமிழ் மக்களுக்கும் சொந்தமான தேசம். அவர்களும் இந்த தேசத்தின் குடிகள். அவர்களுக்கென்றொரு, கலாச்சாரம், பண்பாடு இருக்கின்றது. அதனை அவர்கள் பின்பற்றுவதற்காக உரித்துடையவர்கள் என்று அவர்கள் உணர்ந்திருப்பார்களாயின், நாட்டில் மீண்டும் மீண்டும் வன்முறைகளுக்கு இடமிருக்காது.

ஆனால் அதனை ஆற்றுப்படுத்துவதற்கு அரசாங்கம் தயாராகவேயில்லை. அது வன்முறைகளை கொண்டு தான் குளிர் காய்ந்து கொள்ள நினைக்கிறது. இதற்கு மாணவர்களும் இளைஞர்களும் தான் இரையாக வேண்டியிருக்கின்றது.

இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்களை நாளை, சிங்கள இணைய ஊடகங்களும், இனவாதத்தையே பிரதான தொழிலாக கொண்டிருக்கும் அரசியல் கட்சிகளும் எவ்வாறு அணுகுவார்கள் என்பது நன்றாகவே தெரியும்.

நாட்டில் சிங்களத்திற்கும், பௌத்தத்திற்கும் மரியாதை அற்றுப் போகின்றது. புலிகள் மீள் உருவாகின்றார்கள் என்றெல்லாம் கூப்பாடு போடப்போகின்றார்கள். அதை வைத்து ஊடகங்களும் நன்றாகவே வைத்து செய்வார்கள். இது இனவாதிகளுக்கான துருப்புச்சீட்டு.

ஆனால், வடக்கில் நடந்தது இனவாதம் என்பார்கள். பயங்கரவாதம் என்பார்கள். ஒருவேளை இதே நிகழ்வு கொழும்பில், நடந்தால்? தமிழ் மாணவர்களின் கதி என்ன?

ஆக, அரசாங்கம் சிந்தித்து செயலாற்ற வேண்டிய காலகட்டமிது. புலிகளை அழித்தால் மட்டும் இனப்பிரச்சினை தீர்ந்து நல்லிணக்கம் வந்துவிட்டது என்று பொருள் அல்ல.

இந்த நாட்டில் எங்களைப் போன்று, தமிழ் மக்களுக்கும், உரிமை உரித்து உண்டு என்று பெரும்பான்மை சமூகத்தினை சேர்ந்த பிள்ளைகள் மனதில் விதைக்கும் வரை அது வன்முறையாகவே வெடிக்கும்.

ஏனெனில் இனவாதம் இலங்கையில் இன்று நேற்று விதைக்கப்பட்ட ஒன்றல்ல. அது விதைத்து விருட்சமாகி, வேர்கள் பரந்து கிளைகளைக் கொண்டு நிமிர்ந்து நிற்கிறது. அதை வெட்டி அழித்து, மாற்றத்தை கொண்டு வராதவரை, எப்படியான அமைதியான சூழலிலும் வன்முறை வெடிக்கும்.

மீண்டும், ஆயுத கலாச்சாரத்திற்கு இழுத்துச் செல்லாதீர்கள். வன்முறை ஆபத்தானது. அதைவிட ஆபத்தானது இனவாதம். மனங்களில் மாற்றத்தை கொண்டுவந்த பின்னர், எதுவேண்டுமென்றாலும் செய்யுங்கள்.

வளரும் பிள்ளைகளின் மனதில் உரிமைகள் தொடர்பில் எடுத்துரையுங்கள். அதை முடித்துவிட்டு, மாணவர்களை இணைத்துப்பாருங்கள். நெஞ்சில் வஞ்சனைகள் இருக்கும் போது இணைத்தால் இரண்டும் ஒட்டாது.

இருபக்கமும், மனதில் வடுக்கள் இருக்கின்றன. ஒரு பக்கம் இழந்த, இழந்து கொண்டிருக்கின்ற ஆற்ற முடியாத சோகம். இன்னொரு புறம் எங்கள் நாடு, எங்கள் மதம், எங்கள் இனம் என்னும் இறுமாப்பு. இரண்டிலும் மாற்றம் கொண்டு வந்தாலே இலங்கை அமைதியடையும். அதுவரை வன்முறைகள் அங்கங்கே தலைகாட்டவே செய்யும்.

http://www.visarnews.com/2016/07/blog-post_735.html

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் தமிழனை அடித்தாலும் ............. 
அவர்கள் அடிக்கிறார்கள் என சொல்லமுடியாது!
அப்படி வாய் திறந்து சொல்பவர்களை அடிக்க சில தமிழர்கள்......

அடிக்கும்போது வலிக்குது என்று கத்தினால் .... நீ பயங்கரவாதி  அல்லது அதுக்கு துணை போகிறவன். 

  • கருத்துக்கள உறவுகள்

8யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் “கண்டிய நடனத்தை ஆட வந்த சிங்கள மாணவர்களை வீரத்தோடு அடித்துத் துரத்தி விட்டோம்” என்ற இருமாப்புடனான பல தமிழ்ப் பதிவுகளை இன்று முகநூலில் காணக் கூடியதாக இருப்பது வருத்தத்தைத் தருகிறது.

தேசிய கீதத்தைத் தமிழில் பாட உரிமை கேட்கிறோம். எங்கும் அரங்கேற்றிட உரிமையுள்ள தேசிய நடனத்தை விழாவில் ஆடினால் அடித்துத் துரத்துகிறோம். மிகவும் மோசமான உளப்பாங்கல்லவா இது?

பல்கலைக்கழகங்கள் அனைத்து மத மாணவர்களுக்கும் பொதுவானவை. அதிலும் யுத்த பூமி என்பதால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இன்னும் விஷேடமானது.

‘யாழ்ப்பாணமானது, இப்பொழுதும் ஒரு கலவர பூமியாகவே இருக்கிறது’ எனவும், ‘அங்கு வாழும் தமிழ் பேசும் மக்கள் சிறு விடயத்துக்கும் கலவரங்களை உண்டுபண்ணக் கூடியவர்கள்’ எனவும் உலகுக்குக் காட்டும் தேவை இப்போதும் அரசுக்கு இருக்கிறது.

Student attack 3இராணுவத்தை முற்றுமுழுதாக வடக்கிலிருந்து அகற்றும்படி கோரிக் கொண்டிருக்கும் உலக நாடுகளுக்கு, இராணுவத்தை வடக்கில் இன்னும் நிலைநிறுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்த இம் மாதிரியான ஒரு சம்பவம் கூட அரசுக்குப் போதும்.

இம் மாதிரியான வன்முறைகளில் ஈடுபடும்போது அல்லது பிறரால் வன்முறைகளில் ஈடுபடத் தூண்டப்படும்போது, சிங்களவர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலுள்ள பல்கலைக்கழகங்களில் கற்கும் தமிழ் பேசும் மாணவர்களது நிலைப்பாட்டையும் கருத்திற் கொள்ள வேண்டும்.

Student attack 1தீயின் திரி தொடர்ச்சியாகப் பற்றி எரியத் தொடங்குமானால் இலங்கை முழுவதிலுமுள்ள அனைத்து தமிழ் பல்கலைக்கழக மாணவர்களும் பெரும் இழப்புகளைச் சந்திக்க நேரிடும். இப்போது மாத்திரமல்ல. அது அடுத்த தலைமுறைக்கான கல்வியையும், இன்னும் ஓரிரு வருடங்களில், இத் தலைமுறைக்கான தொழில்வாய்ப்புக்களையும் கூடப் பாதிக்கும்.

இச் சிறிய தீவில், இழப்புக்கள் எப்போதும் சிறுபான்மையினருக்கு மாத்திரமானதே. சிந்தித்து செயற்படுங்கள்.

வன்முறையில் வீரமில்லை. வனாந்தரங்களில் வேட்டைக்கென வைக்கும் பொறிகள் வைப்பவர்களைத் தவிர, வேறெவரினதும் பார்வைக்குத் தெரிவதில்லை.

-அஸீம் கிலாப்தீன்-
சுகந்திர ஊடகவியலாளர்
17.07.2016

http://www.zajilnews.lk/41133

 

  • கருத்துக்கள உறவுகள்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு பச்சையும் அடிச்சு பெரும்பான்மையாக முஸ்லீம் மாணவர்களை விரிவுரையாளர்களையும்.. எடுத்து வைச்சுக் கொண்டு.. முஸ்லீம் இஸ்லாமிய மதவெறிக் கூட்டம்.. தமிழ் பகுதிகளில் பல்கலைக்கழகங்கள் சிங்கள மயமாவதில் குளிர்காய்ந்து கொண்டு.. யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்த மோதல் என்பது சிங்கள மாணவர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்ட ஒன்று என்று அறிந்த பின்னும் முகநூல்.. புலம்பெயர் ஊடகங்கள் என்ற பொய்க்காரணங்களோடு.. இதில் சுய ஆதாயம் விளைகின்ற பதிவுகளை அதிகம் இட்டுவருவதைக் காண முடிகிறது.

இந்த முஸ்லீம் கூட்டம் போர்க்காலத்தில் தமிழர்களையும் போராட்டத்தையும் காட்டிக்கொடுப்பதில்.. தம் சுய இலாபத்தை ஈட்டியது போன்று இப்போ இந்த மோதல்களை சாட்டாக வைச்சு பிரச்சனையின் தோற்றுவாய்களுக்கு தீர்வு தேடாமல்.. பிரச்சனைகளைப் பெருகவிட்டு இரு தரப்பையும் மோதவிட்டு தாம் அதில் போர்க்காலம் போலவே இப்போதும் ஆதாயம் தேட முனைகின்றனர்.

தமிழ் மாணவ சமூகம்.. சிங்கள பேரின வெறிக் கூட்டத்திடம் மட்டுமன்றி முஸ்லிம் இஸ்லாமிய மதவெறிக் கூட்டத்திடமும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டி இருப்பதோடு.. புத்திசாதுரியமாகச் சிந்தித்து இந்த இரு தரப்பும்.. தமிழ் மக்களின் பூர்வீகச் சொத்துக்களை (கல்வி.. பண்பாடு..கலை உட்பட) நாசம் செய்யும் ஆக்கிரமிப்புக் கொள்கைகளும் முஸ்லீம் பரம்பலும் தமிழர் இன இருப்புக்கு எதிராக நிலைக்கொள்வதில் இருந்து பாதுகாப்பை அளிக்க வேண்டும்.

இந்த முஸ்லிம் நிறமாறிகளின் கொடூர எண்ணங்கள் தமிழர் பகுதிகளில் நிறைவேறாத விழிப்புணர்வுச் செயற்பாடுகள் இன்று மிகவும் அத்தியாவசியமாக உள்ளது. அது சிங்கள பெளத்த பேரின ஆக்கிரமிப்பு எதிராக விழிப்புணர்வுக்கு ஒத்திருக்க வேண்டியதும் அவசியமாகிறது.

சகோதரத்துவம் பேசிக் கொண்டு தமிழர்களை காட்டிக்கொடுப்பதையும் கெடுப்பதையும் நோக்காகக் கொண்டு தமிழர் மத்தியில் யாரும் போலி முகத்தோடு இருப்பதை தமிழ் மக்கள் சரியான இனங்கண்டு அவர்களின் நாடகங்களுக்கு முடிவு கட்டும் புத்திசாலித்தனத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
On 16/07/2016 at 2:38 PM, விசுகு said:

பாவம்   மாணவர்கள்

நல்லாட்சியில் அனுபவிக்கப்போகிறார்கள்

நரிகளின் ஆட்சியின் கோரமுகத்தால் படிப்பை இழக்கப்போகிறார்கள்

புணர்வாழ்வுக்கு போகப்போகிறார்கள்...

ஆழ்ந்த அனுதாபங்கள்

இதையெல்லாம் கண்ணை மூடிக்கொண்டு கொண்டாட ஒரு கூட்டமும் இருக்கு...

 

 

On 17/07/2016 at 10:01 PM, ரதி said:

விசுகு அண்ணாவின் இத் திரியிலான கருத்துக்களை வாழ்க்கை கற்றுக் கொடுத்த பாடம் என எடுத்துக்கலாமா?

பாடம்

மேலும் தௌிவைத்தந்துள்ளது சகோதரி..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.