Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் ஆயுதம் ஏந்தாத, வன்முறையில் ஈடுபடாத, ஜனநாயகவாதி! - சம்பந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் முதலமைச்சரே முடிவு எடுப்பார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற மற்றும் வடக்கு, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல் நேற்று வவுனியாவில் இடம்பெற்ற பின்னர் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

வடக்கு பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் முதலமைச்சரே முடிவு எடுப்பார் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற மற்றும் வடக்கு, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கான கலந்துரையாடல் நேற்று வவுனியாவில் இடம்பெற்ற பின்னர் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

   

வவுனியாவில் நிறுவப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை எங்கு அமைப்பது என்பது தொடர்பில் குழப்பநிலை நீடிக்கிறது. சுகயீனம் காரணமாக கூட்டமைப்பின் இந்தக் கூட்டத்திற்கு வடக்கு முதலமைச்சர் அவர்கள் கலந்து கொள்ளமாட்டார் என அறிந்து இரண்டு தினங்களுக்கு முன்னர் அவரைச் சந்தித்து பேசியிருந்தேன். அப்பொழுது பொருளாதார மத்திய நிலையம் தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளேன். அது எங்கு அமைப்பது என்பது தொடர்பில் வடக்கின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோருடன் பேசி முதலமைச்சர் இறுதி முடிவு எடுப்பார்.

அது விரைவாக எடுக்கப்பட வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் இந்த விடயத்தில் குழப்பம் காணப்படுகின்றது. பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இது பற்றி உறுப்பினர்களுடன் பேசி பொது முடிவுக்கு வர முயற்சி எடுப்பார். ஓமந்தை, தாண்டிக்குளம், மூன்று முறிப்பு காணிகள் குறித்தும் முதலமைச்சர் தெரிவித்தார். ஓமந்தையே சிறந்தது எனத் தெரிவித்தார். அதில் அமைக்க முடியாது போனால் மூன்று முறிப்பு காணியில் அமைக்க வேண்டும் எனவும் கலந்துரையாடினார். அது நீண்டகால குத்தகைக்கு கொடுக்கப்பட்டதாக கூறப்படுவதாக நீங்கள் தான் சொல்கிறீர்கள். ஆனால் அப்படி கொடுக்கப்படவில்லை, அதனை விடுவிக்க முடியும் என முதலமைச்சர் கூறியுள்ளார். இது தொடர்பில் விரைவாக முடிவு எட்டப்பட வேண்டும்.நாங்கள் ஏற்கனவே இது தொடர்பில் உறுப்பினர்களுடன் கலந்துரையாடி ஜனநாயக ரீதியாக முடிவெடுக்குமாறு கூறியுள்ளேன்.

நான் ஒரு ஜனநாயகவாதி. ஆயுதம் தூக்கவில்லை. வன்முறைகளை மேற்கொள்ளவில்லை. அதனால் இந்த விடயத்திலும் ஜனநாயக ரீதியாகவே முடிவுகள் எட்டப்பட வேண்டும். விரைவாக முடிவினை முதலமைச்சர் எடுத்து அதனை அறிவிப்பார் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, இதன்போது வவுனியா விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்க வேண்டும் என எதிர்கட்சித்தலைவரிடம் மனு ஒன்றினை கையளித்திருந்ததுடன், வவுனியா மொத்த மரக்கறி விற்பனை சங்கத்தினரால் தாண்டிக்குளத்தில் அமைக்க வேண்டும் எனவும் மனு ஒன்று கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.seithy.com/breifNews.php?newsID=161695&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சன நாய் அகவாதி சனத்துக்கு வெட்டிக்கிழிச்சது என்ன.. என்பதைச் சொன்னால் நல்லா இருக்கும்.. இந்த சுய புராணம் பாடுவதிலும். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
Quote

நான் ஒரு ஜனநாயகவாதி. ஆயுதம் தூக்கவில்லை. வன்முறைகளை மேற்கொள்ளவில்லை. அதனால் இந்த விடயத்திலும் ஜனநாயக ரீதியாகவே முடிவுகள் எட்டப்பட வேண்டும். விரைவாக முடிவினை முதலமைச்சர் எடுத்து அதனை அறிவிப்பார் எனவும் தெரிவித்தார்.

எல்லோரும் மாட்டின் லூதர் கிங் ஆகமுடியாது. அத்தோடு மாட்டின் லூதர் கிங், தான் எப்போதும் ஜனநாயகவாதி என சொல்லவில்லை. மக்கள் தான் சொன்னார்கள். அந்த அளவுக்கு அவரின் ஜனநாயக செயற்பாடு இருந்தது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த மண்ணாங்கட்டி ஜனநாயகவாதி 40/50 வருசமாய் பாராளுமன்றம் போய் என்னத்தை வெட்டிப்புடுங்கினவராம்?

  • கருத்துக்கள உறவுகள்


சம்பந்தரையா நேரமிருந்தா இதையும் ஒருக்காப் பார்க்கலாமே!

"மார்ட்டின் லூதர் கிங்கினுடைய போராட்டத்தின் பலனாக 1965-ஆம் ஆண்டு கருப்பினத்தவர்களுக்கு ஓட்டுரிமை அளித்தது அமெரிக்க அரசாங்கம். அதனைத் தொடர்ந்து கருப்பினத்தவர்களும், வெள்ளையினத்தவர்களும் சமம் என்பதைப் பிரகடணப்படுத்தும் மனித உரிமை சட்டத்தை அமெரிக்கா நிறைவேற்றியது. கருப்பினத்தவர்களுக்கு சம உரிமை பெற்றுத்தரும் இயக்கத்தில் கருப்பினத்தவர்கள் மட்டுமே இடம்பெற்றால் பலன் இருக்காது என்று நம்பிய மார்ர்டின் லூதர் கிங் மற்ற இனத்தவரையும் தனது இயக்கத்தில் சேர்த்துக்கொண்டார். அனைவருடைய மனங்களும் மாறினால்தான் சம உரிமைக்கு வாய்ப்பு உண்டு என்று அவர் நம்பினார். இது குறித்து இன ஒதுக்கல் ஆதரவாளர்கள் ஆத்திரம் அடைந்தனர். "

https://ta.wikipedia.org/wiki/மார்ட்டின்_லூதர்_கிங்

  • கருத்துக்கள உறவுகள்

யானை ஒரு மிகவும் பலம் மிக்க மிருகம்! 

அது நாலு மரத்தைத் தூக்கினால் ..அதை வைத்திருபவனுக்குக் கொஞ்சம் உதவியாக இருக்கும்! 

அது சாதுவாக இருந்தால்....நாலு மரங்களுக்குத் தான் நட்டம்!

அத்துடன் அது வெளிவிடும் ' மெதேன் வாயுவினால்' வளி மண்டலமும் வீணாக மாசடையும்!

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஆயுதம் ஏந்தாத .......

நாயின் படத்தை பார்த்தால் எது முயல் பிடிக்கும் 
எது முயல் பிடிக்காது என்று சொல்லலாமாம் என்று பழையவர்கள் சொல்வார்கள். 

சம்மந்தன் ஐயாவிட்கு இது ரொம்ப ஓவர் ஆன பேச்சு !

ஆயுதம் ஏந்தி போராட வீர்ர்களால் தான் முடியும். இளைஞர்களை ஆயுதம் ஏந்த தூண்டுவதற்கும் உசுப்பேற்றுவதற்கும் அரசியர் நேர்மையோ வீரமோ தேவையில்லை. தமிழரசு அரசியல்வாதிகளுக்கு  இருக்கும்  நரித்தனம் போதும். இரண்டாவதை செய்தவர் இந்த சம்பந்தர். 

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர்..... சனநாயகவாதி என்று பீய்த்திக் கொண்டிருக்காமல், 
ஸ்ரீலங்காவின் எதிர்க் கட்சி  தலைவர் பதவியிலும் இருந்து கொண்டு....
தன்னை தேர்ந்து எடுத்த தமிழ் மக்களுக்கு..... உலக அரசியல் தலைவர்களுடன் ஏதாவது செய்ய மனமில்லாத மனிதன் இவர்.
சும்மா.... பீலா.... வீட்டுக் கொண்டிருக்காமல், ஆக வேண்டியதை பாருங்கள் 

"நான் தமிழின அழிப்புக்கு தமிழின படுகொலைகளுக்கு பெரும் துணை போய்க் கொண்டிருக்கும் நாசகாரக் கும்பல்களுக்கும்,  தமிழின அழிப்பை 68 வருடங்களாக செய்துவரும் சிங்கள-பௌத்த அரச பயங்கரவாத இயந்திரத்துக்கும் எப்போதும் துதிபாடுபவனே தவிர அவர்களை எதிர்ப்பது வன்முறை என்று தெரியும்.

இன அழிப்புக்களை செய்யும், மாபெரும் மனிதப் படுகொலைகளை செய்யும் குழுக்களை, அரசுகளை, கும்பலை எதிர்ப்பது போன்ற வன்முறைகள் எனக்கு அறவே பிடிக்காது.

இதனால நான் தான் உண்மையான தமிழ் சனத்தை உயிருக்கு பயந்து நாயாக அலைய வைக்கும் சனநாயகவாதி. - இப்படிக்கு சம்பந்தன்"

என்று சொல்ல வருகிறார் இவர்.  

 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, தமிழரசு said:

.

நான் ஒரு ஜனநாயகவாதி. ஆயுதம் தூக்கவில்லை. வன்முறைகளை மேற்கொள்ளவில்லை. அதனால் இந்த விடயத்திலும் ஜனநாயக ரீதியாகவே முடிவுகள் எட்டப்பட வேண்டும். விரைவாக முடிவினை முதலமைச்சர் எடுத்து அதனை அறிவிப்பார் எனவும் தெரிவித்தார்.

அட

இது முதலமைச்சருக்கா...?

நானும்  எதோ சர்வதேசத்தக்க விடுகிறார் என்று பார்த்தன்

இப்பத்தான் கீழ பார்த்தா

வவுனியாவிலிருந்து....

 

  • கருத்துக்கள உறவுகள்
 
கூட்டமைப்பைக் கேள்விகளால் கிழிக்கும் காணாமல் போகடிக்கப்பட்டோரி...

கூட்டமைப்பைக் கேள்விகளால் கிழிக்கும் காணாமல் போகடிக்கப்பட்டோரின் உறவு ஒருவர்

Posted by Pathivu Media on Montag, 18. Juli 2016

 

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, nunavilan said:
 
 

 

இந்த அம்மாட குரல் இந்த அரங்கிற்குள் அடங்கிவிடக் கூடாது. இது சர்வதே ஏமாற்றுவாதிகளையும் இனங்காட்டும் வகையில்.. சர்வதேசத்தின் மனச்சாட்சியையும் தட்ட வழிவகை செய்யனும். 

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா நீங்கள் அச்சாப்பிள்ளை. அப்பிடியே தொடருங்கோ. தேர்தல் வர வாக்குக்கு  எங்களிட்டை ஓடிவாங்கோ. அது முடிய சிங்களவனிட்டையும், இந்தியாவிட்டையும் ஓடிப்போய் சேவை செய்யுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் ஐயா ஏதோ தமிழர்களை வன்முறையாளர்கள் என்று சொன்னதா எடுக்கொண்டிட்டம்.. :unsure: ஆனால் உண்மை அது இல்லை.. மைத்திரியின் கைகளிலும் ரத்தம் இருப்பதால் அப்படி சொல்லிவிட்டார்.. :D: :grin:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.