Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

15 மணித்தியாலம் நீர் வழங்காது அடித்து சித்திரவதை. நீதிமன்றில் குடிநீர் கேட்டு அழுகை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, விசுகு said:

சரியான  வாதமாகப்படவில்லை.....

இவர் அனுபவித்த வலி கொடுமைகளுக்கு என்ன தீர்வு? இந்த ஒரு வழக்கினால் இனி பொலிசார் தூசணத்தால் பேசாமல்/ அடிக்காமல் விடவா போகிறார்கள்? 

நன்றியுடன் மற்றவர்கள் ஒதுங்கி விடுவார்கள். 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, MEERA said:

இவர் அனுபவித்த வலி கொடுமைகளுக்கு என்ன தீர்வு? இந்த ஒரு வழக்கினால் இனி பொலிசார் தூசணத்தால் பேசாமல்/ அடிக்காமல் விடவா போகிறார்கள்? 

நன்றியுடன் மற்றவர்கள் ஒதுங்கி விடுவார்கள். 

 

நிச்சயமாக இது ஒரு எச்சரிக்கையாக இருக்கப்போகிறது

தனிப்பட்டவர்கள்  போல்

ஏன் சாதாரண அரச உத்தியோகத்தர்கள்  போலல்ல காவல்த்துறை வேலை.

மிகுந்த பொறுப்பும்

கண்ணியமும்

மக்களுக்கான பாதுகாப்புக்குமானது.

இலங்கையில் ஏதாவது நல்லது நடக்கவேண்டுமாயின் இவர்கள் திருந்தணும் முதலில்.

அந்த லண்டன்காரர் சரியாகவும் சாமர்த்தியத்துடனும் 

சட்டத்தின் நணுக்கங்களை அறிந்தும்  செயற்பட்டிருக்கிறார்

இனி அந்த இருவரும் தப்பமுடியாது.....

நமக்கேன் வம்பு என்றிருந்தால் எதுவும் மாறாது...

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

 

சரியாகத்தானே அவர் பேசுகின்றார்

சட்டத்துக்கு முரணாகவோ

அடம்பிடித்தோ

தான் தப்பித்துக்கொள்ள லஞ்சம் கொடுத்தோ முயலவில்லையே...?

அப்பறம் எப்படி  காவல்த்துறையின் இந்த சட்டமுரணான

அடாவடித்தனங்களை மறைமுகமாக நாம் ஆதரிக்கின்றோம்??

நீங்கள் சொல்லும் அடாவடித்தனங்களை கண்டிக்கப் போனவர் பட்டபாட்டைப் பார்த்தியலே?

விமான நிலையங்களில், செக் பண்ணும் போது, எக்காரணம் கொண்டும் தேவையில்லாமல் வாய் திறக்கக் கூடாது. மேற்கு நாடுகளுக்கு வெளியே பொலீஸ் தரத்தில் உள்ள அதிகாரிகள் செய்வது தவறு என்று தெரிந்தாலும், பவ்யமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டே இடத்தை காலி செய்யுங்கள். ஏனெனில் அதிகாரம் கொண்ட அவர்கள் உங்களை மிகப் பெரிய சிக்கலில் மாட்டிவிடலாம் என்று பல பெரிய கொலிடே கம்பனியள், ஆலோசனை சொல்கின்றன.

 

இந்தியாவில், சென்னையில் இமிகிரேசன் அதிகாரியுடன் கொழுவுப்பட்ட வெள்ளைத் தம்பதிகள், திரண்டுவந்த சக அதிகாரிகளால், விமானத்திலிருந்து பலவந்தமாக இறக்கப்பட்டு, இழுத்து செல்லப்பட்டு அறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கையில், தம்மை பெரு வழக்கு ஒன்று போட்டு சிறை வைக்கப் போகிறார்கள் என்று மண்டையில் உறைக்க, அழுது குளறி, மன்னிப்புக்கு மேல் மன்னிப்பு கேட்டு, தப்பி, விமானத்தை விட்டதால், பணம் போனாலும் பரவாயில்லை என்று அடுத்த தயாராயிருந்ப விமானத்தில் துபாய் வந்து, இந்திய தூதராலயத்தில், தமது தூதரக அதிகாரியுடன் போய் முறைப்பாடு செய்தனர். தேவையா அது? 

4 hours ago, சுவைப்பிரியன் said:

பிரச்சனை என்னவென்றால் வெளிநாட்டில் இருந்து செல்லும் பலர் பெரிய பிலிம் காட்டுறது.அதால வெளியிலிருந்து போறவர்களில் சில தரப்புக்கு கடும் கடுப்பு.இப்படித்தான் நான் ஒரு அலுவலகத்தில் அனுமதி ஒன்று எடுக்க வேண்டி இரந்தது.அங்கு போகமுன் தொலை பேசியில் கதைத்த போது வலு அமைதியாகவும் பண்பாகவும் கதைத்த அந்த உத்தியோகத்தர் நேரில் கண்டவுடன் அடிக்காத குறையாக அவமதித்து அனுமதி தராமல் துரத்தினார்.இத்தனைக்கும் நான் போனது சர்வசாதாரனமாக.அத்துடன் என்னிடம் அனுமதி எடுப்பதக்குத் தேவையான சகலுதும் இருந்தது.இன்னொரு முறை பேருந்தில் மாறி ஏறிவிட்டேன்.வாசிக்கத்தெரியாதவன் எல்லாம் ஏன்டா பஸ்சில் ஏறுகறிங்கள் என்டு சொல்லி இறக்கி விட்டுட்டான்.:unsure:

சாரத்தோட எல்லாம் போறது ஆனாலும் அநியாயம்.. :grin:

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Nathamuni said:

நீங்கள் சொல்லும் அடாவடித்தனங்களை கண்டிக்கப் போனவர் பட்டபாட்டைப் பார்த்தியலே?

விமான நிலையங்களில், செக் பண்ணும் போது, எக்காரணம் கொண்டும் தேவையில்லாமல் வாய் திறக்கக் கூடாது. மேற்கு நாடுகளுக்கு வெளியே பொலீஸ் தரத்தில் உள்ள அதிகாரிகள் செய்வது தவறு என்று தெரிந்தாலும், பவ்யமாக மன்னிப்பு கேட்டுக் கொண்டே இடத்தை காலி செய்யுங்கள். ஏனெனில் அதிகாரம் கொண்ட அவர்கள் உங்களை மிகப் பெரிய சிக்கலில் மாட்டிவிடலாம் என்று பல பெரிய கொலிடே கம்பனியள், ஆலோசனை சொல்கின்றன.

இந்தியாவில், சென்னையில் இமிகிரேசன் அதிகாரியுடன் கொழுவுப்பட்ட வெள்ளைத் தம்பதிகள், திரண்டுவந்த சக அதிகாரிகளால், விமானத்திலிருந்து பலவந்தமாக இறக்கப்பட்டு, இழுத்து செல்லப்பட்டு அறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கையில், தம்மை பெரு வழக்கு ஒன்று போட்டு சிறை வைக்கப் போகிறார்கள் என்று மண்டையில் உறைக்க, அழுது குளறி, மன்னிப்புக்கு மேல் மன்னிப்பு கேட்டு, தப்பி, விமானத்தை விட்டதால், பணம் போனாலும் பரவாயில்லை என்று அடுத்த தயாராயிருந்ப விமானத்தில் துபாய் வந்து, இந்திய தூதராலயத்தில், தமது தூதரக அதிகாரியுடன் போய் முறைப்பாடு செய்தனர். தேவையா அது? 

சாரத்தோட எல்லாம் போறது ஆனாலும் அநியாயம்.. :grin:

ஐயா

நீங்க சொல்வது எனக்கும் புரிகிறது

என் மீதான பற்றால் சொல்கிறீர்கள்

அது சரியா 

அதை இப்படியே விடலாமா என்பதே எனது கேள்வி

 

கனடாவிலிருந்து அமெரிக்கா போய்விட்டு திரும்பும் போது

கனடிய அலுவலகத்துக்குள் விசாரணைக்கு கூப்பிட்டார்கள்

போனோம்

விசாரிப்பவருக்கு பின்னால் பெரிய கொட்டை எழுத்தில்  பலகையில் எழுதியிருக்கு

இங்கு ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் பேசலாம் என்று.

 எனது கடவுச்சீட்டை பார்த்துவிட்டு (பிரெஞ்சு) அவர் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டார்

நான் பிரெஞ்சில் பதில் சொன்னேன்

அவர் மீண்டும்  மீண்டும்  ஆங்கிலத்தில் கேட்க நான் பின்னாலுள்ள பலகையை காட்டினேன்

நான் பிரெஞ்சில் சொல்வது அவருக்கு  புரிகிறது

ஆனால் சேட்டை.

நான் சொன்னேன் ஒன்றில் பிரெஞ்சில் பேசு

அல்லது போட்டை களட்டு 

அல்லது உனது அதிகாரியைக்கூப்பிடு என்று.

ஒரு பதிலுமில்லை எல்லா ஆவணங்களையும் திருப்பித்தந்து போ என்றார்.

விட்டுது சனி என்று வந்து விட்டேன்..

 

 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, விசுகு said:

ஐயா

நீங்க சொல்வது எனக்கும் புரிகிறது

என் மீதான பற்றால் சொல்கிறீர்கள்

அது சரியா 

அதை இப்படியே விடலாமா என்பதே எனது கேள்வி

 

கனடாவிலிருந்து அமெரிக்கா போய்விட்டு திரும்பும் போது

கனடிய அலுவலகத்துக்குள் விசாரணைக்கு கூப்பிட்டார்கள்

போனோம்

விசாரிப்பவருக்கு பின்னால் பெரிய கொட்டை எழுத்தில்  பலகையில் எழுதியிருக்கு

இங்கு ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் பேசலாம் என்று.

 எனது கடவுச்சீட்டை பார்த்துவிட்டு (பிரெஞ்சு) அவர் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டார்

நான் பிரெஞ்சில் பதில் சொன்னேன்

அவர் மீண்டும்  மீண்டும்  ஆங்கிலத்தில் கேட்க நான் பின்னாலுள்ள பலகையை காட்டினேன்

நான் பிரெஞ்சில் சொல்வது அவருக்கு  புரிகிறது

ஆனால் சேட்டை.

நான் சொன்னேன் ஒன்றில் பிரெஞ்சில் பேசு

அல்லது போட்டை களட்டு 

அல்லது உனது அதிகாரியைக்கூப்பிடு என்று.

ஒரு பதிலுமில்லை எல்லா ஆவணங்களையும் திருப்பித்தந்து போ என்றார்.

விட்டுது சனி என்று வந்து விட்டேன்..

ஆகா....

அது கனடா..... விசுகர்.. நீங்கள் கேட்டது சரிதான்.

அப்படியே போய் இலங்கைல தமிழில கதை அல்லது பிரஞ்சில கதை என்று விமான நிலையத்தில சொல்லிப்போட்டு, வந்திட முடியுமா? 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

ஆகா....

அது கனடா..... விசுகர்.. நீங்கள் கேட்டது சரிதான்.

அப்படியே போய் இலங்கைல தமிழில கதை அல்லது பிரஞ்சில கதை என்று விமான நிலையத்தில சொல்லிப்போட்டு, வந்திட முடியுமா? 

அது தான் ராசா

சில நாடுகளுக்கு போகப்பிடிப்பதில்லை...

நமக்கு சரிவராது...

பொத்துக்கொண்டு வந்திடும்.....

சில நாட்களுக்கு முன்

வாகனத்தை நிறுத்தக்கூடாத இடத்தில் 2 நிமிடம் நிறுத்திவிட்டேன்

வந்து விட்டார்கள்

ஓடி வந்து மன்னிப்புக்கேட்டு விட்டு காரை எடுத்தேன்..

கார் சாரதிப்பத்திரத்தை தா பார்க்கணும் என்று வாங்கிவிட்டு

என்னில்  எனது காரில் ஏதாவது பிழை பிடிக்க 20 நிமிடம் அவர்கள் அதே இடத்தில் அவர்களது காரை நிறுத்திஇருந்தார்கள்.

எல்லாம் முடிய 95 ஈரோக்கள் தண்டப்பணம் அடித்தார்கள்

அத்தோடு போயிருக்கலாம்

இதை கட்டு என்றார் ஒருவர்.

நமது மறுபக்கம் வெளியில் வந்துவிட்டது

நீங்க இந்த இடத்தில் எவ்வளவு நேரம் நின்றீர்கள்???

நான் சொந்த தொழில் வைத்திருப்பவன்

அதை எனது கடை தான் கட்டும்

அதை அரசில் நான் கழிப்பேன்

ஆக அதை கட்டப்போவது நானல்ல அரசுதான் என்று

கிழி கிழி என்று கிழித்து 

பொலிசுக்கு செய்வம்  என்று இங்க சுவர்களில் எழுதுபவர்கள் தான் உங்களுக்கு சரி என்றேன்.

முகமெல்லாம் கறுத்து ஒன்றும்பேசாமல் அவர்களது வாகனத்திலேறி சென்று விட்டார்கள்...

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, விசுகு said:

அது தான் ராசா

சில நாடுகளுக்கு போகப்பிடிப்பதில்லை...

நமக்கு சரிவராது...

பொத்துக்கொண்டு வந்திடும்.....

சில நாட்களுக்கு முன்

வாகனத்தை நிறுத்தக்கூடாத இடத்தில் 2 நிமிடம் நிறுத்திவிட்டேன்

வந்து விட்டார்கள்

ஓடி வந்து மன்னிப்புக்கேட்டு விட்டு காரை எடுத்தேன்..

கார் சாரதிப்பத்திரத்தை தா பார்க்கணும் என்று வாங்கிவிட்டு

என்னில்  எனது காரில் ஏதாவது பிழை பிடிக்க 20 நிமிடம் அவர்கள் அதே இடத்தில் அவர்களது காரை நிறுத்திஇருந்தார்கள்.

எல்லாம் முடிய 95 ஈரோக்கள் தண்டப்பணம் அடித்தார்கள்

அத்தோடு போயிருக்கலாம்

இதை கட்டு என்றார் ஒருவர்.

நமது மறுபக்கம் வெளியில் வந்துவிட்டது

நீங்க இந்த இடத்தில் எவ்வளவு நேரம் நின்றீர்கள்???

நான் சொந்த தொழில் வைத்திருப்பவன்

அதை எனது கடை தான் கட்டும்

அதை அரசில் நான் கழிப்பேன்

ஆக அதை கட்டப்போவது நானல்ல அரசுதான் என்று

கிழி கிழி என்று கிழித்து 

பொலிசுக்கு செய்வம்  என்று இங்க சுவர்களில் எழுதுபவர்கள் தான் உங்களுக்கு சரி என்றேன்.

முகமெல்லாம் கறுத்து ஒன்றும்பேசாமல் அவர்களது வாகனத்திலேறி சென்று விட்டார்கள்...

நல்லது விசுகர். அது கூட மேற்கில், பிரான்சில் தான் சாத்தியப்பட்டது.

 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

நல்லது விசுகர். அது கூட மேற்கில், பிரான்சில் தான் சாத்தியப்பட்டது.

அது தான்  நாதர்

அவருடைய இடத்தில் நானிருந்தாலும் இவ்வாறு தான் நடந்திருக்கும்..

சிங்களவர் மட்டும் என்றாலும் கொஞ்சம் பழைய கலவரங்கள் ஞாபகம் வந்திருக்கும்

இங்கு ஒரு தமிழரும் இருந்தபடியால்........????

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Jude said:

மேலே பச்சையில் உள்ளவை பாராட்டப்பட வேண்டிய செயற்பாடுகள். ராஜபக்ஷ காலம் போல என்று இந்த போலிஸ் இன்னமும் நினைத்திருக்க கூடும். நீதிபதிகள் இளம்செழியன் மற்றும் யூட்சென் அரச இயந்திரங்களில் உள்ள குற்றவாளிகளுக்கு பொருத்தமான தீர்ப்புகளை வழங்கியவர்கள். இந்த வழக்கிலும் இதனை எதிர்பார்க்கலாம். இன்றைய அரசு அமெரிக்க, பிரித்தானிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தங்கி உள்ள அரசு. இந்த நாடுகள் சட்டத்தை மதிக்கும் அரச நிருவாகத்தை எதிர்பார்க்கிறார்கள். இந்த நாடுகள் இலங்கையில் இருந்து தமது பயனை பெற அரச நிருவாகம் சட்டத்தை மதிக்கும் நிருவாகமாக இருக்க வேண்டிய தேவை உள்ளது. 

இந்த லண்டன்வாசி பெரிதும் பாராட்டப்பட வேண்டியவர். துணிச்சலும், தன்மானமும், தனது பலம் பற்றிய அறிவும் உள்ளவர். தனது உரிமைகளை போராடி பெறுவது வேதனையானது என்று தெரிந்து இருந்தும் அதனை சாதித்து குற்றவாளிகளான போலிசை கைப்பற்ற உதவி இருக்கிறார். நன்றி நண்பரே.

 

   இந்த லண்டன் வாசி இங்கு அவரை ஒன்றுமே தெரியாத முட்டாள் எனும் தோரணையில் கருத்துக்கள் வருது அது ஏன் என்று புரியவில்லை ..........................

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் ராசா, தமிழ்ப்பொலிஸ் எண்டா  திறம்  எண்டே  நினைக்கிறீர்கள்?   காக்கிச் சட்டையை  மாட்டினால் சிங்களவன், தமிழன் என்கிற வேறுபாடு கிடையாது. எல்லாம் சர்வாதிகாரமும் , கையூட்டுந்தான். அதிலும் சில தமிழ்ப்போலீஸ்காரர்தான் மாமா வேலை பாக்கிறது. போலீஸ் நிலையம் போகிறவர்கள், சிங்கள போலிசோடை  ஆங்கிலத்தில் , அல்லது சிங்களத்தில் கதைத்தால் எங்கட தமிழ்ப்போலீசுக்கு அந்தமாதிரி கோபம் வரும். ஏனெண்டா குடிவகை, தின்பண்டம், வரவு   குறைஞ்சு போய்விடும் என்கிற கடுப்பு. இவையள் தான் பிரச்னையளை  பெரிதாக்கி இழுத்தடிக்கிறவை. சில நியாய பக்கம் நடக்கிற தமிழ்ப்பொலிசாரை சும்மா எழுத்து வேலைக்கும், எடுபிடி வேலைக்கும் வைத்திருப்பார்கள். விளக்கம் போன்ற முக்கிய  தேவைகளில் இவர்களை பயன்படுத்துவதில்லை. இப்படிப்பட்ட  அடாவடிகளுக்கு, தமிழ் சரியாகக் கூட எழுதவராது என்கிற உண்மை  பலருக்குத் தெரியாது. நல்ல தமிழ் போலீசாரும் உண்டு. அவர்கள் தலையைக் குனிந்து ஏதும் செய்ய முடியாதவர்களாக தங்கள் சம்பளத்துக்காக சகித்துக் கொண்டு மௌனமாக இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இது சொறீலங்கா அதிகார மையங்களில் இருக்கும் பாரம்பரிய காடைத்தனத்தின் வெளிப்பாடு. சொறீலங்கா பல வழிகளில் சுத்தப்படுத்தப்பட வேண்டிய ஒரு தேசம். அங்க போறவை உதை முதல்ல விளங்கிக் கொண்டு போனால்.. ஒரு பிரச்சனையும் இல்லை. இல்ல போகாமல் விடனும். :rolleyes:

On 24 septembre 2016 at 6:44 AM, போல் said:

சிங்கள-பௌத்த போலீஸ் பயங்கரவாதிகளின் காட்டுமிராண்டித்தனம் யாழில் தொடர்கிறது.
பாதிக்கப்பட்டவர் 1 கோடிவரை நட்டஈடு கேட்டு வழக்கு தொடர வேண்டும்.
நல்லாட்சி அரச பயங்கரவாதத்தின் சுயரூபம் மேலும் மேலும் வெளிவருகிறது.

 

On 24 septembre 2016 at 1:48 PM, முனிவர் ஜீ said:

இவருக்கு எதை எடுத்தாலும் இனவாதம் ஒன்று மட்டும் தெரிந்தது

முனிவர்க்கு இனவாதம் என்றால் என்னவென்று தெரியாதது ஆச்சரியம் இல்லை. ****

கடந்த 60, 70 வருடங்களில் நிகழ்த்தப்பட்ட சகல சிங்கள-பௌத்த அரச இயந்திரங்களினதும் தமிழின விரோத, திட்டமிட்ட தமிழின அழிப்பு செயற்பாடுகளை சுருக்கமாக சொல்வதென்றால் அது "சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதம்". நேர்மையான உலகறிந்த இந்த உண்மையை அப்படியே வெளிப்படையாக சொல்வது யதார்த்தவாதம். இதை இனவாதம் என்பது முழுமையான பேதைமை.

சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் விசுவாசிகளுக்கு இது கசப்பான உண்மையாக இருக்கும். 

Edited by இணையவன்
சக உறுப்பினர் மீதான சீண்டல் தணிக்கை செய்யப்பட்டுள்ளது

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, போல் said:

 

சிங்கள-பௌத்த அரச பயங்கரவாதிகளின் விசுவாசிகளுக்கு இது கசப்பான உண்மையாக இருக்கும். 

வெல்டண் சார் நல்ல கண்டுபிடிப்பு இதைதான் உங்ககிட்ட எதிர்பார்தேன்tw_blush:

When in Rome, do as the Romans do 

இங்கு சில எழுதப்படாத சட்டங்கள் இருப்பதை சிலர் மறந்து விடுவதனால்தான் இவ்வாறான பிரச்சனைகள். இங்கு மற்றவர்களை உதாரணத்திற்கு எடுக்க விரும்பவில்லை. 2013/2014 என்று நினைக்கின்றேன் இங்கு வந்திருந்தபோது அண்ணரின் மகள் எங்கோ செல்ல ஆயத்தமாகினாள். நானும் யாழ் நூலகத்துக்கு செல்லவேண்டியிருந்ததனால் என்னை விட்டு விடும்படி கேட்டேன். செல்லும் வழியில் போலீஸ் மறித்தது - எதுக்கென்ற விபரமே தெரியாமல் இருவரும் இறங்கினோம். திரும்பி என்னை பாத்தவள் சித்தப்பா ஹெல்மட் என்றாள். அப்பதான் தவறு புரிந்தது.

போலீசும் அவளை தனியே அழைத்து சென்று நான் யார் என்று கேட்டார், என்னையும் அழைத்து அவள் யார் என்று கேட்டார். அழகான பெண்கள் பெறா மகளாக இருப்பினும், போலீஸ்காரனின் சந்தேகம் நியாயமாகவே பட்டது எனக்கு. அப்புறம் ஏன் ஹெல்மட் போடவில்லை என்கிறார். நானும் பல வருடங்களாக புலம்பெயர்ந்து வேறு நாட்டில் வாழ்வதால் எனக்கு மோட்டார் சைக்ளில் பயணம் செய்து பழக்கமில்லை,  அதனால் மறந்துவிட்டேன் போடவில்லை  மன்னித்துக்கொள்ளுங்கள், இதற்கான குற்றப்பணத்தை நான் தவறு செய்திருப்பதனால் கட்டுகின்றேன் என்றேன். அவரும் எனது அண்ணன் மகளுக்கு பேசத்தொடங்கினார். எனக்கு கோபம் வந்தது. அடக்கிக்கொண்டு சார் இது நான் செய்த தவறு அதற்கு அவளை திட்ட வேண்டாம் - ரசீதை கொடுங்கள் பணத்தை நான் கட்டிவிடுகின்றேன், அவளை அனுப்பிவிடுங்கோ என்றேன். அப்புறம் எப்படி நீ நூலகத்துக்கு போவாய் என்கிறார், ஓட்டோவில்தான் என்றேன். 

என்ன யோசித்தாரோ தெரியாது அண்ணர் மகளின் லைசென்ஸை வாங்கி ஒரு  காகிதத்தில் எதோ எழுதினார். பின்னர் அவளை போகச் சொல்லிவிட்டு காகிதத்தை என்னிடம் தந்து பையினை கோட்ஸில் கட்ட சொன்னார். பின்னர் என்னுடன் சிறிது நேரம் அளவளாவி அவரே ஒரு ஓட்டோவை மறித்து ஏற்றியும் விட்டார்.

ஆட்டோவில் காகிதத்தைப் பிரித்து பார்த்தபோது அது ஒரு வெற்றுக் காகிதமாக இருந்தது - Don't do this again என்று எழுதியிருந்தது. இவர் ஒரு சிங்களவர், கொஞ்சம் தமிழறிவு, கொஞ்சம் ஆங்கிலம் தெரியும். வீட்டுக்கு வந்ததும் அண்ணர் மகள் சொன்னாள் - சித்தப்பா பிழையை பிழை என்று மனதார ஒத்துக்கொண்டு மரியாதையாய் கதைத்தபடியால்தான் இன்று நாம் தப்பினோமென்று.

இதற்கு மேல் இங்கு எதுவும் எழுத விரும்பவில்லை.

போலீசாரும் மனுஷர்தானே. அவர்கள் உங்களை பார்த்து பொறாமை, ஏரிச்சலில் செய்யும் காரியங்களுக்கு கடவுளை குற்றம் சொல்லுங்கள். :35_thinking:

  • கருத்துக்கள உறவுகள்

 காவல் துறையின் அடடாகாசங்கள் எல்லா இடத்திலும் உண்டு. இங்கும் சும்மா வாகனத்தை மறித்து விட்டு (random check), ஒரு பிழையும் இல்லா விடடால், நாலு  டயர்களையும் சுற்றி பார்ப்பார்கள் என்ன பிழை பிடிப்பது என்று. அதுவும் சிறு பான்மையினர் கொஞசம் அடக்கி வாசித்தால் தான் தப்பலாம். இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் காவல் துறையின் சாகசங்கள் எல்லோரும் அறிந்ததே.

சேற்றுப் பண்டியை கண்டால் விலகிப் போறதே  நல்லது. அதுவும் விடுமுறை போகும் போது விமான நிலைய அதிகாரிகளிடம், காவல்  துறையிடம்  அதிகமாக பேசக் கூடாது.

இத்தனைக்கும் இந்த நண்பரின் புத்திசாலித் தனத்தை  பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு விவசாயத்துறை அமைச்சர், ஜங்கரனேசன், யூனிவேர்சல் டியூட்டரி நடத்தேக்க, கெல்மெற் இல்லாம ஓட, ஆரியகுளத்தடில போலீஸ் காரர் மறிச்சு, அவரை இறங்கச் சொல்லி, தான் அந்த மோட்டார் சைக்கிளை ஓடிக்கொண்டு, முன்னமே மறித்து வைத்திருந்த இன்னொருத்தர் மோட்டர் சைச்கிள்ள, ஜங்கரனேசனை ஏறி பின்னால வரச் சொல்லி யாழ் ஸ்ரேசனுக்குப் போனார்.

இறங்கியவர், பொலீஸ் வண்டி என்ற நினைப்பில், கீயை அப்படியே விட்டுட்டு 'உள்ள வாங்கடா, உங்களுக்கு...' என்று பல்லை நறும்பிக் கொண்டே உள்ள போட்டார்.

வரும்போதே தான் போலீஸ் காரரடன் கொழுவல் பட்டதை காதுக்குள் போட்டிருந்தார், மற்றவர்.

பார்த்தார், ஜங்கரர், தனது வண்டி நம்பரை அவர் எடுக்கவில்லை என்றவுடன், மெதுவாக, சைக்கிளை கிளப்பிக் கொண்டு கிளம்பிவந்திட்டார்.

மற்றவர் தடுமாற பொலீஸ் காரர், உங்களை எல்லா உள்ள வரச்சொன்னனான் என்று வெளிய வந்தால் ஒருவரைக் காணம்.

விசயம் விளங்கினோன்ன, அவன் வாய் திறக்கவேயில்ல, நல்ல பெடியன், நான் தன் போகச் சொல்லி கையைக் காட்டினனான்.., நீ உள்ள வா என்று உள்ள கொண்டு போய், 1200 ரூபாவுக்கு வேட்டு வைத்தார்.

இதை அவர் பின்னர், ஜங்கரனை சந்தித்து சொல்லி, தேவையில்லாமல் வாய் திறக்கக் கூடாது எண்டது படிப்பினை என்று சொன்னாராம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த பொலிசுகள் எல்லாம் உத்தியோகபூர்வ ரவுடிகள்.....உலகத்திலை எந்த நாட்டை எடுத்துக்கொண்டாலும் உவங்கடை ஆக்கினையள் கொஞ்ச நஞ்சமில்லை.....கிங் எண்ட நினைப்பிலை தான் எப்பவும் திரிவினம்.
ஜேர்மனியிலை ஒருக்கால் இரவு ரோந்து செய்ய வெளிக்கிட்ட பொலிசுக்கு நல்ல இருட்டடி குடுத்தாப்பிறகு.......இரவிலை லைற் எரியாத ரோட்டுக்கு பொலிசு வர பஞ்சிப்படும்.ஆனால் சிற்றியிலை  உவையின்ரை லொள்ளு தாங்கேலாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.