Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அப்போலோவில் திடீர் பரபரப்பு

Featured Replies

  • Replies 79
  • Views 7.9k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் முக்கிய உத்தரவு!

 

george_long_16571.jpg

முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அப்போலோ மருத்துவமனை அறிவித்துள்ள நிலையில், அனைத்து காவல் பிரிவினரும் காவல் பணியில் கவனம் செலுத்த வேண்டும் என்று சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. இந்த அறிவிப்பு தமிழகம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், தமிழக சட்டம்- ஒழுங்கை பாதுகாப்பது குறித்து அனைத்து காவல்துறையினருக்கும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் இன்று முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதில், 'மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை அனைத்து காவல் பிரிவினரும் பணியில் இருக்க வேண்டும். அதே போல், மாலைக்குள் அனைத்து காவலர்களும் பணிக்கு திரும்ப வேண்டும். குறைந்த அளவு காவலர்களே காவல் நிலையங்களில் இருக்க வேண்டும்" என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதனிடையே, சென்னையில் சட்டம்- ஒழுங்கைப் பாதுகாக்க கூடுதலாக இரண்டு ஐ.ஜிக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஐ.ஜிக்கள் சாரங்கன் மற்றும் ஜெயராமன் ஆகியோர் சட்டம்- ஒழுங்கைப் பாதுகாக்க நியமிக்கப்பட்டுள்ளனர். 

http://www.vikatan.com/news/jayalalithaa/74234-commissioner-georges-important-order.art

ஜெயலலிதா குறித்து பரவும் வதந்தி... தொடரும் சிகிச்சை!

 

 

ஜெயலலிதா குறித்த தகவல்களை இன்னும் அரசாங்கமோ, அப்போலோ நிர்வாகமோ ஊர்ஜிதப்படுத்தவில்லை. அ.தி.மு.க கொடி அரைக்கம்பத்தில் பறக்கிறது, தலைமைச் செயலக கொடி அரைக்கம்பத்தில் பறக்கிறது என்று செய்திகள் வந்தன.ஆனால், தற்போது அவை மீண்டும் ஏற்றப்பட்டு இருக்கின்றன.தமிழக பொறுப்பு ஆளுநரோ, அப்போலோ நிர்வாகமோ  இன்னும் எந்த தகவலையும் ஊர்ஜிதப்படுத்தவில்லை. மேலும் சிகிச்சைகள் தொடர்கிறது என்று அப்போலோ தரப்பில் தகவல் வருகிறது...!. அப்போலோவின் சங்கீதா ரெட்டி அளித்த தனியார் தொலைக்காட்சி பேட்டியில் , ' ஜெயலலிதாவிற்கு சிகிச்சை தொடர்கிறது' என அறிவித்துள்ளார்!

 

jaya_apollo_19537_18193.jpg

 

A large team of doctors from Apollo and AIIMS continue to provide all life saving measures. #GodblessAmma

தலைமைச் செயலக கொடி அரைக்கம்பத்தில் பறக்கிறது என்று செய்திகள் வந்தன.ஆனால், தற்போது அவை மீண்டும் ஏற்றப்பட்டு இருக்கின்றன.

flags_18393.jpg

 

http://www.vikatan.com/news/tamilnadu/74242-apollo-and-aiims-continue-to-provide-all-life-saving-measures.art

தமிழகத்தில் தொலைதொடர்பு சேவை முடங்கியதா?

 

 

ஜெயலலிதா குறித்த தகவல்களை இன்னும் அரசாங்கமோ, அப்போலோ நிர்வாகமோ ஊர்ஜிதப்படுத்தவில்லை.மேலும் சிகிச்சைகள் தொடர்கின்றன என்று அப்போலோ தரப்பில் தகவல் வருகிறது...!. அப்போலோவின் சங்கீதா ரெட்டி அளித்த தனியார் தொலைக்காட்சி பேட்டியில் , ' ஜெயலலிதாவிற்கு சிகிச்சை தொடர்கிறது' என அறிவித்துள்ளார்!. 

c%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0

தற்போது தமிழகம் முழுக்க பலருக்கு மொபைல் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வீண் அசம்பாவிதங்களைத் தவிர்க்க, மொபைல் சேவை முடக்கப்பட்டு இருக்கலாம் என செய்திகள் வெளியாகின்றன.

http://www.vikatan.com/news/tamilnadu/74245-voice-calls-might-have-been-restricted-in-tamil-nadu.art

  • கருத்துக்கள உறவுகள்

 



ப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதலமைச்சருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதாக அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து, அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் முதலமைச்சரின் உடல்நிலை குறித்து தெரிந்துகொள்ள  வெளியூர்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான அ.தி.மு.க தொண்டர்கள் அப்போலோவில் குவிந்து வருகின்றனர்.

தொண்டர்களின் கூட்டத்தைக் கட்டுப்படுத்த அப்போலோ மருத்துவமனை பகுதியிலும் சென்னையின் முக்கிய இடங்களிலும் ஏழு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அப்போலோ மருத்துவமனை அமைந்துள்ள கீரிம்ஸ் சாலை மட்டுமல்லாது அனைத்து இடங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Apollo_2_08310.jpg

இந்த நிலையில் காவல்துறை டி.ஜி.பி திரிபாதி தலைமையில் உளவுத்துறை ஏ.டி.ஜி.பி சத்யமூர்த்தி மற்றும் சென்னை மாநகர ஆணையர்  ஜார்ஜ் உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தியுள்ளனர்.

சென்னை மாநகர் முழுவதும் காவல்துறையினர் ரோந்துப் பணியிலும், கண்காணிப்பிலும் ஈடுபட்டுள்ளனர். ஆங்காங்கே முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஆணையர்கள், காவல்துறைகாணிப்பாளர்கள் முன்பு காவலர்கள் காலை ஏழுமணிக்கே சீருடையில் பணியில் இருக்க வேண்டும்.பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் சி.பி.சி.ஐ.டி போலீசாரும் பணிக்குதிரும்ப வேண்டும் உத்தரவிட்டப்பட்டது.

அரசியல் தலைவர்களின் வீடுகளுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.மேலும் திமுக  தலைவர் கருணாநிதி, ஸ்டாலின் உள்ளிட்டோரின் வீடுகளுக்கும் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

 சென்னை மாநகரில் மக்கள் அதிகளவில் கூட்டம் கூடாமல் இருக்குமாறு காவல்துறையினர் எச்சரித்து வருகின்றனர்.மேலும் சி. ஆர். பி .எப் படை வீரர்களும்  வரவழைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

http://www.vikatan.com/news/coverstory/74177-possibilities-for-prohibitory-orders-in-tamil-nadu.art

  • கருத்துக்கள உறவுகள்
முதல்வர் ஜெ. மறைந்தார் என்ற தகவல் பரவியதால் அதிமுக கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.  அப்பல்லோ நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததால் கொடி மீண்டும் ஏற்றப்பட்டது.
 
தமிழக முதல்வர் ஜெயலலிதா(வயது 68) காலமானதாக தகவல் வெளியானது.  75 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த முதல்வர், சிகிச்சை பலனின்றி அப்பல்லோ மருத்துவமனையில் உயிர் பிரிந்ததாக தகவல் வெளியானது.   
 
இந்த தகவலை அப்பல்லோ நிர்வாகம் மறுத்துள்ளது.   முதல்வருக்கு தொடந்து தீவிர சிகிச்சை நடைபெறுவதாக அப்பல்லோ அறிவித்துள்ளது.
 
ஜெயலலிதா மறைந்ததாக வெளியான தகவலை  அடுத்து ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. தற்போது மறுப்பு செய்தி வந்துள்ளதால் அதிமுக கொடி மீண்டும் ஏற்றப்பட்டது.

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=179006

  • தொடங்கியவர்

முதல்வரின் உடல்நலம் குறித்து கேட்டறிந்த மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு செய்தியாளர்களை சந்திக்க மறுப்பு

 

 
venkaiah-naidu

முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேற்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, அவருக்கு இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் மூலம் ஆஞ்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவரை அவசர சிகிச்சை பிரிவில் வைத்து இசிஎம்ஓ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து தமிழகம் முழுவதும் அசாதரண சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில்  முதல்வரின் உடல்நலம் குறித்து கேட்டறிய மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு சென்னை வந்தார்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனை சென்ற அவர் மருத்துவர்களை சந்தித்து சிகிச்சை குறித்து கேட்டதாக கூறப்படுகிறது. எனினும் அவர் செய்தியாளர்களை சந்திக்க மறுதுவிட்டார். 

http://www.dinamani.com/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Cy6nRfAVQAAyTAp.jpg

Cy6ouXiUAAAS0S-.jpg

  • தொடங்கியவர்

ஜெயலலிதா காலமானதாக ஜெயா பிளஸ் டிவியிலேயே நியூஸ்… பதறியடித்து மறுத்த டிவி நிர்வாகம் ஜெயலிதா காலமானதாக தவறான செய்தியை ஜெயா பிளஸ் டிவி ஒளிபரப்பிவிட்டு பின்பு தடாலடியாக மாற்றிவிட்டது.

 

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார் என்ற தவறான செய்தியை அதிமுகவின் அதிகாரபூர்வ செய்தி தொலைக்காட்சியான ஜெயா பிளஸ் ஒளிப்பரப்பியுள்ளது. பின்னர், அதனை டிவி நிர்வாகம் மறுத்துள்ளது. சென்னை அப்போலோ மருத்துவமனையில் 75 நாட்களாக சிகிச்சைப் பெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரது உடல் நிலை மிக மோசமாக உள்ளது என்று அப்போலோ நிர்வாகம் அறிவித்தது. இதனால் தமிழகம் முழுவதும் பதற்ற நிலை உருவானது.

 

இதனைத் தொடர்ந்து மாலை 5.40 மணியளவில் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியை சில தொலைக்காட்சிகள் ஒளிபரப்பின.

 

 இதனால், தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக தொண்டர்கள் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இந்நிலையில் 5.49 மணியளவில் அப்போலோ நிர்வாகம், முதல்வருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் மரணம் என்று வெளியான செய்தி தவறானது என்றும் கூறியது. இதன் பின்னர், அதிமுக தொண்டர்கள் அமைதியானர்கள்.

 

அவர்களின் முகங்களில் இருந்த சோகம் மாறி இயல்பு நிலைக்கு திரும்பின. இதுவெல்லாம் இப்போதைக்கு பெரிய செய்தி அல்ல. அதிமுகவின் அதிகார பூர்வ தொலைக்காட்சியான ஜெயா பிளஸ்சில் "தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா காலமானார்" என்று சிலைட் போடப்பட்டுள்ளது. அதிமுகவின் அதிகாரபூர்வமான தொலைக்காட்சியே ஜெயலலிதா மரணம் அடைந்தார் என்ற செய்தியை வெளியிட்டிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

பின்னர், இதுகுறித்த செய்தியை ஜெயா பிளஸ் நீக்கிவிட்டது. மேலும், அப்படி செய்யவில்லை என்று ஜெயா தொலைக்காட்சி நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஆனாலும், அவர்கள் வெளியிட்ட "தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா காலமானார்" என்ற சிலைட் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/jaya-tv-sparks-off-rumours-on-jayalalithaa-death-denies-it-269029.html

  • தொடங்கியவர்

அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து நோயாளிகள் இடமாற்றம்

 

appollo


சென்னை: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பிற நோயாளிகள் பாதுகாப்புக் காரணங்களுக்காக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், சென்னை க்ரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகள், அப்பல்லோ மருத்துவமனையின் கிளை மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்த மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

http://www.dinamani.com/

  • கருத்துக்கள உறவுகள்

கேஸ் பாரம் போலதான் கிடக்கு .....எவ்வளவு நாள் தான் இழுத்தடிப்பீங்கோ ...சட்டுப்புட்டென்று காரியத்தை முடித்தால் நாங்களும் எங்கட வேலைகளை பார்க்க போகலாமில்லே ...எத்தனை உயிர்களை தீக்குளிப்பு ,கலவரம் என்று அம்மா காவு வாங்கப்போறாவோ 

3 minutes ago, அக்னியஷ்த்ரா said:

கேஸ் பாரம் போலதான் கிடக்கு .....எவ்வளவு நாள் தான் இழுத்தடிப்பீங்கோ ...சட்டுப்புட்டென்று காரியத்தை முடித்தால் நாங்களும் எங்கட வேலைகளை பார்க்க போகலாமில்லே ...எத்தனை உயிர்களை தீக்குளிப்பு ,கலவரம் என்று அம்மா காவு வாங்கப்போறாவோ 

அந்த பக்கம் போய் விடாதீங்கோ - பெற்றோலை ஊத்தி கொளுத்திட்டு நீங்களா தியாகம் செய்ததா பீலா விடுவானுங்க. :grin:

  • தொடங்கியவர்
முதல்வர் உடல் நலம்: பிரதமரிடம் வெங்கைய நாயுடு விளக்கம்
 
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை இல்லை: ராஜ்நாத் சிங்

http://www.dinamalar.com/

சென்னை போலீஸ் கமிஷனர் சரமாரி உத்தரவு
 
 
 
Tamil_News_large_1663699_318_219.jpg
 

சென்னை: ‛முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது' என, அப்பல்லோ மருத்துவமனை அறிவித்த பிறகு, சென்னையில் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது. இதை தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு குறித்து சென்னை கமிஷனர் ஜார்ஜ் சரமாரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.அவரது உத்தரவு வருமாறு:


*காவல் நிலையங்களில் குறைந்த எண்ணிக்கையில் போலீசார் இருந்தால் போதும், தேவையின்றி போலீசார் யாரும் காவல் நிலையத்தில் அமர கூடாது.


* மக்கள் பார்வையில் இருக்கும்படி போலீசார் நடமாட்டம் இருக்க வேண்டும்.


*போலீசாருக்கு விடுமுறை என்ற பேச்சுக்கே இடமில்லை.


*ஐ.எஸ்., எனப்படும் நுண்ணறிவு பிரிவு போலீசாரும் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.


*பிரச்னைக்குரிய இடங்கள் என ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட பகுதிகளில், நிரந்தர எண்ணிக்கையில் போலீசார் இருக்க வேண்டும்.


*சிக்னல் தோறும் போலீஸ் பாதுகாப்பு இருக்க வேண்டும்.


*ரோந்து பணியில் தொய்வு இருக்க கூடாது. 24 மணி நேரமும் போலீசார் ரோந்து பணியில் இருக்க வேண்டும்.


*உயர் போலீஸ் அதிகாரி தலைமையில் ஒவ்வொரு பகுதியிலும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான போலீசார் தயார் நிலையில் இருக்க வேண்டும்.


இவ்வாறு சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1663699

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா ஈழத் தமிழருக்கு எதுவும் செய்ததில்லை.ஆனால்,இவர் ஒரு தைரியமிக்க,எதிர் நீச்சல் போடக் கூடிய,துணிச்சல் நிறைந்த பெண்மணி...விருப்பமில்லாமல் நடிக்க வந்து,விருப்பமில்லாமல் அரசியலுக்கு வந்து அந்த சாக்கடையில் கிடந்து உழன்ற பரிதாபத்துக்குரிய பெண்மணி...சாவின் பின்னராவது நிம்மதியாய் உறங்கட்டும்

  • தொடங்கியவர்

ஜெயலலிதாவின் உடல்நிலைபற்றிய முரணான செய்திகள் கவலையளிக்கின்றன

vikki

தமிழக முதலமைச்சர் கௌரவ செல்வி ஜெயலலிதா அவர்களின் உடல்நிலைபற்றிய முரணான செய்திகள் எமக்கு கவலையளிக்கின்றன. எனினும் அவர் விரைவில் சுகமடைய வேண்டும் என்ற வடமாகாண தமிழ் உள்ளங்களின் பிரார்த்தனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

இலங்கை வடமாகாண தமிழ் மக்களின் மனம்கவர்ந்த தலைவியார்  செல்வி ஜெயலலிதா அவர்கள் எமது மதிப்பிற்கும் அன்பிற்கும் உரியவர்.

அவர் சொல்லவேண்டிதை பயப்படாமல் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று கூறும் இயல்புடையவர். அவர் சுகமடைந்து அரசியல் வானில் தொடர்ந்து பிரகாசிக்க வேண்டும் என்று இறைவனை இறைஞ்சுகின்றோம்.

நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
வடமாகாண முதலமைச்சர்
இலங்கை

http://globaltamilnews.net/archives/9375

  • தொடங்கியவர்

முற்றிலும் முடங்கிப் போன சென்னை!

 

சென்னை

முதல்வர் உடல்நிலை பற்றிய வதந்தியால், கிரீம்ஸ் ரோடு அப்போலோ மருத்துவமனை மற்றும் ராயப்பேட்டை அதிமுக அலுவலகம் தவிர, ஒட்டுமொத்த தமிழகமும் வெறிச்சோடி முடங்கிக் கிடக்கின்றது. குறிப்பாக சென்னையில் கடும் போக்குவரத்து நெருக்கடியோடு இயங்கும் பிரதான சாலைகள் அனைத்தும் மாலை 6 மணி முதல் வெறிச்சோடி கிடக்கின்றன.

நேற்று (4.12.2016) மாலை முதலே முதல்வர் உடல்நிலை பற்றிய வதந்திகள் தீவிரமாகப் பரவத் தொடங்கின. வாட்ஸ் அப் மூலம் பல்வேறு செய்திகள் பரவியதால் இன்று அதிகாலை முதல் பெரும் பரபரப்பு நிலவியது. ஆயினும் பள்ளி, கல்லூரிகள் இயங்கின. மதியம் முதல் மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. பல பள்ளிகள், பிள்ளைகளை வந்து அழைத்துச் செல்லுமாறு பெற்றோருக்கு எஸ்எம்எஸ் அனுப்பின.  பல அலுவலகங்களில் மாலை 3 மணியோடு ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். குறைந்த அளவே ஓடிய பேருந்துகளும் படிப்படியாகக் குறைக்கப்பட்டன.

இச்சூழலில், அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளிவராத நிலையில், மாலை ஐந்தரை மணி அளவில் சில தொலைக்காட்சி ஊடகங்கள் முதல்வர் பற்றிய செய்திகளை ஒளிபரப்பின. இதையடுத்து, பல இடங்களில் வன்முறை பற்றிக் கொண்டது. அப்போலோ மருத்துவமனையை சிலர் தாக்கத் தொடங்கினார்கள். சில நிமிடங்களிலேயே அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்ட செய்தி தவறென்றும் முதல்வருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திக்குறிப்பு வெளியிட்டது.

ஆயினும், மாலை முதலே சென்னையின் பிரதான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டன. ஒருசில பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. இரவு 8 மணிக்கெல்லாம் சென்னை முற்றிலும் அடங்கி விட்டது. உச்சக்கட்ட பரபரப்பில் இருக்கும் மவுண்ட்ரோ டு வெறிச்சோடிக் காணப்பட்டது. பூந்தமல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு, அண்ணா நகர் பகுதிகளில் ஓரிரு வாகனங்கள் மட்டுமே இயங்கின. கோயம்பேட்டில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகளின் எண்ணிக்கை மிகக் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளன. வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்துகளும் ஒன்றிரண்டு மட்டுமே இயங்கின. பெரும்பாலான பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளன. திறந்திருக்கும் ஒரு சில பெட்ரோல் பங்குகளில் டூவீலர்கள் நிறைந்திருக்கின்றன. ஏடிஎம்களில் மட்டும் வரிசை நிற்கிறது..

கடைகள் மூடப்பட்டிருப்பதால் எல்லாப் பகுதிகளுமே இருண்டு கிடக்கின்றன. பெரும்பாலும் ஹோட்டல்களையே நம்பியிருக்கும் பேச்சிலர்கள் உணவு தேடி அலைவதைப் பார்க்கமுடிகிறது. மால்கள், பிரமாண்ட வணிக நிறுவனங்கள் எல்லாம் அடைக்கப்பட்டு அமைதியில் ஆழ்ந்திருக்கின்றன. ஆங்காங்கே காவல் வாகனங்கள் நிற்கின்றன. கூட்டமாக வருபவர்களை நிறுத்தி விசாரிக்கிறார்கள்.
சிக்னல்களில் போக்குவரத்துக் காவலர்கள் தவிர யாருமில்லை. நாளை பள்ளி திறக்கப்படுமா, பேருந்துகள் ஓடுமா, அலுவலகம் செல்ல முடியுமா என ஏராளமான கேள்விகள் மக்களை சூழ்ந்திருக்கின்றன. பரபரப்பும், நம்பிக்கையுமாக நாறைய விடியலை நோக்கி இந்த இரவு நகர்ந்து கொண்டிருக்கிறது.

http://www.vikatan.com/news/tamilnadu/74252-chennai-paralyzed-deserted-roads-closed-shops.art

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, ரதி said:

ஜெயலலிதா ஈழத் தமிழருக்கு எதுவும் செய்ததில்லை.ஆனால்,இவர் ஒரு தைரியமிக்க,எதிர் நீச்சல் போடக் கூடிய,துணிச்சல் நிறைந்த பெண்மணி...விருப்பமில்லாமல் நடிக்க வந்து,விருப்பமில்லாமல் அரசியலுக்கு வந்து அந்த சாக்கடையில் கிடந்து உழன்ற பரிதாபத்துக்குரிய பெண்மணி...சாவின் பின்னராவது நிம்மதியாய் உறங்கட்டும்

பரிதாபத்திட்கு உரிய பெண்ணா ?

ஊழல் லஞ்சம் என்று நாட்டை கொள்ளையடித்து 
தோழி வளர்ப்பு மகன் என்று கூத்தடித்து 
நாட்டையே  பரிதாபத்திட்கு உள்ளாக்கிய 
மா பாவி ! 

எனக்கு ஒரு சின்ன சந்தேகம் .............
அப்போலோவிட்கு யாரு பில் கட்டுவது இப்போ ?

இந்த 173 நாள் நாடக செலவு தமிழ்நாட்டு அரசின் தலையில்தான் வீழுமா ? 

  • தொடங்கியவர்
ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்பு
 
அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் துவங்கியது
கிரீம்ஸ் சாலையில் போலீசார் குவிப்பு
அப்பல்லோவில் இருந்து கிளம்பியது எய்ம்ஸ் குழு
 
 
 

http://www.dinamalar.com/

  • தொடங்கியவர்

மன்னிப்பு கோரினார் ரங்கராஜ் பாண்டே

 

 

ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து தவறான செய்தியை ஒளிபரப்பியதற்காக, தந்தி தொலைக்காட்சியின் தலைமைச் செய்தியாளர் ரங்கராஜ் பாண்டை மன்னிப்பு கோரியுள்ளார்.

இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது,

pandey_23179.jpg

http://www.vikatan.com/news/tamilnadu/74253-rangaraj-pandey-apologizes-to-admk-party-members.art

  • கருத்துக்கள உறவுகள்

15338620_1176950612391551_46843388438581

tw_astonished:

டிசம்பர் 06 பாபர் மசூதி இடித்த நாள்.. இது ஒரு கரிநாளாக அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுவதால் முதல்வரின் மறைவுச் செய்தியை அந்த நாளில் (06) சொல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் கரிநாள் முதல்வரின் மறைவு நாளாக தமிழகத்தில் நினைவுகூரப்படும். :unsure:

  • தொடங்கியவர்
காலமானார் ஜெயலலிதா: அப்பல்லோ அறிவிப்பு

RIP

  • கருத்துக்கள உறவுகள்

RIP

Edited by ragaa

  • தொடங்கியவர்

ஜெயலலிதா இறப்பு அறிக்கை - முழு விபரம்

 

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அகால மரணத்தையடுத்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் 12 மணியளவில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. அவ்வறிக்கையின் தமிழ் சாரம் இது:

press_01012.jpg

தமிழக முதல்வர் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா இன்று (5.12.16) இரவு 11.30 மணி அளவில் இயற்கை எய்தினார் என்பதை சொல்லவியலா துயரத்தோடு பகிர்ந்துகொள்கிறோம்.

மாண்புமிகு புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதா காய்ச்சல், நீர்ப்போக்கு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு 22.9.2016 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாண்புமிகு முதல்வருக்கு தொடர்ந்து அளிக்கப்பட்ட பல்நோக்கு சிகிச்சை காரணமாக அவரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. வாய் வழியே உணவு எடுத்துக்கொள்ளும் அளவிற்கு உடல்நிலை சீரடைந்து வந்தது. இதனடிப்படையில் மாண்புமிகு முதல்வர் மேம்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சை பிரிவிலிருந்து உயர் சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார். அங்கே எங்களின் மருத்துவ நிபுணர் குழு அவரின் உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வந்தது.

இந்நிலையில், திடீரென டிசம்பர் 4, 2016-ல் துரதிர்ஷ்டவசமாக மாண்புமிகு முதல்வர் இதய துடிப்பு முடக்கத்தால் பாதிக்கப்பட்டார். அருகிலேயே தீவிர சிகிச்சைப் பிரிவு மருத்துவர் இருந்ததால், முதல்வருக்கு உடனே சர்வதேச அளவில் மிகவும் மேம்படுத்தப்பட்ட முறையான எக்மோ முறையில் சிகிச்சையளிக்கப்பட்டது. அவரின் உயிரைக் காப்பாற்ற முடிந்த அளவில் முயற்சி செய்து சிறந்த சிகிச்சை முறைகள் பின்பற்றப்பட்டன. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று (5.12.2016) இரவு 11.30 மணியளவில் அவர் உயிரிழந்தார்.

அப்போலோ குழுமத்தின் ஒவ்வொரு உறுப்பினரும், ஊழியரும், மருத்துவரும் தங்களால் இயன்ற அளவிற்கு மாண்புமிகு முதல்வரை அக்கறையாக பார்த்துக்கொண்டார்கள். நவீன சிகிச்சை முறைகளையும், தொழில்நுட்பங்களையும் கொண்டு மாண்புமிகு முதல்வரை ஆற்றுப்படுத்த ஓய்வின்றி உழைத்தோம். இந்திய தேசத்திற்கும், தமிழக மக்களுக்கும் நேர்ந்த இந்த அளவுகடந்த துயரத்தில் நாங்களும் கனத்த இதயத்தோடு பங்கெடுத்துக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

http://www.vikatan.com/news/coverstory/74263-press-release-of-apollo-regarding-demise-of-jayalalithaa.art

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Maruthankerny said:

பரிதாபத்திட்கு உரிய பெண்ணா ?

ஊழல் லஞ்சம் என்று நாட்டை கொள்ளையடித்து 
தோழி வளர்ப்பு மகன் என்று கூத்தடித்து 
நாட்டையே  பரிதாபத்திட்கு உள்ளாக்கிய 
மா பாவி ! 

எனக்கு ஒரு சின்ன சந்தேகம் .............
அப்போலோவிட்கு யாரு பில் கட்டுவது இப்போ ?

இந்த 173 நாள் நாடக செலவு தமிழ்நாட்டு அரசின் தலையில்தான் வீழுமா ? 

எவன் செத்தான் எவனுக்கென்ன..? ரேசன் கார்டுல கூடுதலா  என்ன குடுக்க போறாங்களா ..? ஒரு ஆணியும் கிடையாது..

டிஸ்கி:


எல்லா ஜீவராசிகளும் மரணிப்பதற்காகவே இந்த உலகில் பிறக்கின்றன..

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, இசைக்கலைஞன் said:

15338620_1176950612391551_46843388438581

tw_astonished: :unsure:

"ஓர் அறையில் மரணம், அடுத்த அறையில்... வாரிசுச்  சண்டை"
இந்தக் கலண்டரில்... இவ்வளவு துல்லியமாக கணித்துள்ளமை.. எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

"ஓர் அறையில் மரணம், அடுத்த அறையில்... வாரிசுச்  சண்டை"
இந்தக் கலண்டரில்... இவ்வளவு துல்லியமாக கணித்துள்ளமை.. எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது. :rolleyes:

இது கட்டாயம் "மெய்கண்டான்" கலண்டராத்தான் இருக்கும்.. tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.