Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் சாசனம் அமைப்பது குறித்து இந்தியாவுடன் பேச விரும்புகின்றோம் – TNA

Featured Replies

அரசியல் சாசனம் அமைப்பது குறித்து இந்தியாவுடன் பேச விரும்புகின்றோம் – TNA

mavai.jpg
அரசியல் சாசனம் அமைப்பது குறித்து இந்தியாவுடன் பேச விரும்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி தெரிவித்துள்ளது. இலங்கையின் அரசியல் சாசனம் அமைக்கும் பொறிமுறையில் சர்வதேசத்தின் பங்களிப்பு குறிப்பாக இந்தியாவின் பங்களிப்பு அவசியமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து திகதிகள் எதனையும் நிர்ணயம் செய்யவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய இனப்பிரச்சினைக்கு சமஸ்டி முறையிலான தீர்வுத் திட்டம் வழங்கப்பட வேண்டும் என்பதே கட்சியின் நிலைப்பாடு என தெரிவித்துள்ள அவர் வடக்கிற்கு நிதி விவகாரங்கள் கூட பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் இது விடயமாக தாம் பாராளுமன்றில்  அண்மையில் வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/archives/10483

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, நவீனன் said:

31/12/2016க்கு முன்னர் சந்திப்புக்கள் தரமாட்டார்கள் என்பதை சொல்கிறாரா???

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, நவீனன் said:

அரசியல் சாசனம் அமைப்பது குறித்து இந்தியாவுடன் பேச விரும்புகின்றோம் – TNA

mavai.jpg
அரசியல் சாசனம் அமைப்பது குறித்து இந்தியாவுடன் பேச விரும்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி தெரிவித்துள்ளது. இலங்கையின் அரசியல் சாசனம் அமைக்கும் பொறிமுறையில் சர்வதேசத்தின் பங்களிப்பு குறிப்பாக இந்தியாவின் பங்களிப்பு அவசியமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து திகதிகள் எதனையும் நிர்ணயம் செய்யவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய இனப்பிரச்சினைக்கு சமஸ்டி முறையிலான தீர்வுத் திட்டம் வழங்கப்பட வேண்டும் என்பதே கட்சியின் நிலைப்பாடு என தெரிவித்துள்ள அவர் வடக்கிற்கு நிதி விவகாரங்கள் கூட பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் இது விடயமாக தாம் பாராளுமன்றில்  அண்மையில் வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/archives/10483

ஐயா !

தண்ணீ குடிக்க வேண்டும் என்று நீங்கள் சொல்கிறீர்கள்
ஆனால்
தண்ணீ அடிக்க வேண்டும் என்று அவர்கள் சொல்கிறார்கள்

தண்ணீர் ஒன்றுதான் ஆனால் வேறு வேறு  அர்தங்கங்களால் பொருள் கொள்ளபடுகிறது..

டிஸ்கி :

மழை காலத்தில் மரத்தை ஒட்டிய கூட்டை  (தனது இருப்பிடம்) இழந்த குருவி அருகாமையில் இருந்த  குரங்கிடம் .. மீண்டும்  கட்டிதர தரமுடியுமா என்று கேட்டதாம் ..அதற்கு குரங்கு எனக்கு கலைக்க மட்டுந்தான் தெரியும் என்று  அரை குறையாக இருந்த  கூட்டையும் குஞ்சிகளோடு கலைத்து போட்டதாம் ..பஞ்சாயத்திற்கு நீங்கள் குரங்கை கூப்பிட்டு வந்து நிறுத்தவதால் எஞ்சி இருக்கும் கோவணத்தையும்  தொலைக்கதான் போகிறீர்கள்  (வடமாகாணசபை!! அதுபோக அடுத்தவன் குடிய கெடுப்பதெற்கென்றெ உருவவாக்கபட்ட "றோ" என்ன குச்சி ஐஸ் சப்புறாளா ).. குரங்கோட சுவாபம் அப்படி ..! அது போகட்டும் நாம நல்லதுக்கு சொல்வம் குரங்கு பிரித்த நாடுகள் ஒன்றாவது சண்டை சச்சரவின்றி இருக்கா.. ?ரெல் மீ ரெல் ...  குரங்கு தலையிடாமல் விட்டாலே உங்களுக்கு கோடி புண்ணியம் ... இதுல வெத்தலை பாக்கு வைத்து வேறு அழைப்பு ..!! யாராவது அவன் குடிய அவனே கெடுத்துக்கொள்வானா ? குரங்குங்கு அதன் சார்ந்த வனபகுதிகளில்தான் பீலீம் காட்டும் .. வேற எங்காவது ..? வாலை  ஒட்ட நறுக்கி விடுவார்கள்..குரங்கை பார்த்து அவ்வளவு பீதி பயம் கொள்ள வேண்டியது இல்லை .. உலகம் குரங்கிடம் மட்டுமே இல்லை அதை காண்டமிருகம் ரேஞ்சிற்கு கற்பனை செய்ய வேண்டிய  அவசியமும் இல்லை  .. அதையும் ஈழ தோழர்கள் கடந்து போக வேண்டும்

டிஸ்கிக்கு டிஸ்கி :

நான் ஏதோ குரங்கு குரங்கு என்று எழுதி போட்டன் டார்வின் நியாண்டதல் எல்லாரும் மன்னிக்குக .. நான் எழுதிய குரங்கு என்ற உள்குத்து எனக்கே தெரியவில்லை .. அது எந்த நாடு /  மனிதர் என்று அறியதாருங்கள் பிளீஸ்

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

மாவை.... அரசியல் படிக்க,  
இன்னும்,  ஐம்பது  ஆண்டு தேவை. :grin:

1 hour ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

குரங்கு தலையிடாமல் விட்டாலே உங்களுக்கு கோடி புண்ணியம் ... இதுல வெத்தலை பாக்கு வைத்து வேறு அழைப்பு ..!! யாராவது அவன் குடிய அவனே கெடுத்துக்கொள்வானா ? குரங்குங்கு அதன் சார்ந்த வனபகுதிகளில்தான் பீலீம் காட்டும் .. வேற எங்காவது ..? வாலை  ஒட்ட நறுக்கி விடுவார்கள்..குரங்கை பார்த்து அவ்வளவு பீதி பயம் கொள்ள வேண்டியது இல்லை .. உலகம் குரங்கிடம் மட்டுமே இல்லை அதை காண்டமிருகம் ரேஞ்சிற்கு கற்பனை செய்ய வேண்டிய  அவசியமும் இல்லை  .. அதையும் ஈழ தோழர்கள் கடந்து போக வேண்டும்

1g3ww5.jpg

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறவுகள்

ஏனப்பு..நீங்கள் செத்துச் சீரழிஞ்சு போகேக்கை....ஓடி வந்து பாத்தவங்களோ?

பஞ்சப் பயலுக....தங்களையே சுமக்க ஏலாமல் இருக்கிற நேரத்தில....நீங்களும் அவங்களுக்குப் பாரமாய் இருக்க வேணாமே!

சாறியை வாங்குங்கோ....சந்தனத்தை வாங்குங்கோ....!

வேற எதுவுமே வேணாம்...அப்பு! 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, நவீனன் said:

அரசியல் சாசனம் அமைப்பது குறித்து இந்தியாவுடன் பேச விரும்புகின்றோம் – TNA

mavai.jpg
அரசியல் சாசனம் அமைப்பது குறித்து இந்தியாவுடன் பேச விரும்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி தெரிவித்துள்ளது. இலங்கையின் அரசியல் சாசனம் அமைக்கும் பொறிமுறையில் சர்வதேசத்தின் பங்களிப்பு குறிப்பாக இந்தியாவின் பங்களிப்பு அவசியமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து திகதிகள் எதனையும் நிர்ணயம் செய்யவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய இனப்பிரச்சினைக்கு சமஸ்டி முறையிலான தீர்வுத் திட்டம் வழங்கப்பட வேண்டும் என்பதே கட்சியின் நிலைப்பாடு என தெரிவித்துள்ள அவர் வடக்கிற்கு நிதி விவகாரங்கள் கூட பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் இது விடயமாக தாம் பாராளுமன்றில்  அண்மையில் வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/archives/10483

இவரும் இவரது கூட்டுகளும் சும்மா நட்டு லூசான அறிக்கைகளையும் கருத்துக்களையுமே சொல்லுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
54 minutes ago, குமாரசாமி said:

இவரும் இவரது கூட்டுகளும் சும்மா நட்டு லூசான அறிக்கைகளையும் கருத்துக்களையுமே சொல்லுவார்கள்.

உண்மை.  இதுகளை....  கவனத்தில்  நாம் எடுத்தால், 
எமக்குத் தான்..... நட்டு,  லூ.... சாகும்.  :grin:

  • கருத்துக்கள உறவுகள்

பேசிட்டு.. வெறுங்கையை விசிக்கிக்கிட்டு வர வேண்டியான். நீங்க பேச அவங்கள் கேட்கிற காலம் எல்லாம் போயே போச்சு.  :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எதிர்பார்த்து தவம் கிடந்தால், இன்னும் ஏழேழு சென்மத்துக்கும் தீர்வு கிட்டாது..

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான  அறிவாளி அரசியல்வாதிகளை தெரிந்த மக்களை என்ன செய்வது??

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுக்கு அந்த இந்தக் கதையெல்லாம் வேணாம் பேச்சு பேச்சாக இருக்கவேணும். சம்hந்தர் சொன்ன மாதிரி 31.12.2016 முடிய அடுத்தநானள் தீர்வு இருக்க வேணும் நான் வெடியெல்லாம் வேண்டி வைச்சிருக்கிறன்.

பிறகு, தீர்வுதான் எப்பவோ வந்திட்டுது என்று சொல்லுவினம்!!

பிறகு, தீர்வுதான் எப்பவோ வந்திட்டுது என்று சொல்லுவினம்!!

பத்திரிகைகளுடன் இரத்தினத்தார் மற்றும் சண்முகத்தின் வருகைக்காக காத்திருந்தனர் உருத்திரனும் இலட்சுமனனும். கையில் ஒரு சுருட்டைப் புகைத்தபடி வரும் இரத்தினத்தாருடன் சண்முகமும் வந்தார். “எப்பிடி ஒண்டா வந்தாலும் கட்டிப் புரண்டு கடிபட்டுக் கதைக்கிறது உறுதிதானே…” என விழிகளைத் திருப்பிப் பார்த்தன நாவல் மரத்தில் இருக்கும் இரண்டு காகங்களும்.

“மாவை இந்தியாவோடை அரசியலமைப்பை பற்றி கதைக்கப் போறாராம்.. அப்ப வெளிநாடுகளிலை பேசப் போறினம்..” என்றபடி உட்கார்ந்தார் இரத்தினத்தார். “ஓம் அண்ணை.. அப்பதானே வெளிநாடுகளின்டை சப்போட் கிடைக்கும்..” வழமைக்கு மாறாக உற்சாகமாயிருந்தார் சண்முகத்தார்.

“இலங்கை அரசுக்கு எதிராய், வாற பொங்கலுக்கு போர் வெடிக்கும், வாற சித்திரை வருசத்துக்குப் போர் வெடிக்கும் எண்டு முந்தி மாவையர் சொன்னார். சின்னப் பொடியள் வெடி கொளுத்திற மாதிரி.. பிறகு ஒண்டும் வெடிக்கேல்லை.. அரசாங்கத்தை அணைச்சுக் கொண்டு போனதுதான் மிச்சம்..”

இரத்தினத்தார் சொல்லி முடிக்க சண்முகத்தின் முகம் சரிந்தது. சுறுசுறுப்பும் குறைந்தது.

“முந்தியும் வெளிநாட்டு ஆதரவு தேவை, பேச்சுவார்த்தையள் நடத்தப்போறம், நடத்திறம், இந்தியாவோடை பேசினம். அவை அழுத்தம் குடுப்பினம்.. இப்பிடி எத்தினை சந்திப்புக்கள் நடந்ததடா? ”

“இரத்தினத்தார் இரண்டாவது குண்டையும் போட்டார்..” என நினைத்துக் கொண்டான் உருத்திரன்.

“அண்ணே! அரசாங்கத்தோடை இணக்க அரசியல் செய்யிறியள் எண்டால், பிறகு ஏன் உலக நாடுகளின்டை ஆதரவு.. அப்ப அரசாங்கம் உங்கடை கோரிக்கையை ஏற்றுக்கொள்ளேல்லையா? ஏற்றுக் கொள்ளேல்லை எண்டால் பிறகு என்னத்துக்காக அரசாங்கத்துக்கு ஆதரவு அளிக்கினம்..”

இலட்சுமனன் அடுத்த கேள்வியைத் தொடுத்தான்.

“சும்மாவே ஆடுற ஆளுக்கு, உடுக்கடிச்ச மாதிரி உவனும் எடுத்து விடுறான்..” என்ற தொனியில் இலட்சுமனனைப் பார்த்தார் சண்முகத்தார்.

“அப்ப உது சர்வதேச விசாரணை மாதிரித்தான் போகப் போகுதோ? அதுக்கும் சர்வதேச நாடுகளோடை பேச்சு வார்த்தை நடத்திறம் எண்டுதானே சொன்னவையள்..” உருத்திரன் சந்தேகத்துடன் கேட்டான்.

“ஒண்டிலையும் தெளிவில்லை.. எல்லாம் மூடு மந்திரமாய் இருந்தால் உப்பிடித்தான். பிறகு சொல்லுவினம். அரசியல் அமைப்பைத்தான் ஏற்கனவே மாத்தியாச்சு எண்டுவினம்..” இரத்தினத்தாரின் நக்கலைக் கண்டு சண்முகத்தாரின் முகம் சுருண்டது.

“சரியடா… போனமுறை சனங்கள் மாவீரர்களுக்கு விளக்கு ஏற்றினது. அதை எங்கடை மக்கள் பிரதிநிதியள் வெளிப்படையாய் அங்கீகரிக்கக் கேக்க வேணும்.. ஏன் இன்னும் கேக்கேல்லை..” என்றார் இரத்தினத்தார்.

“அது மக்கள்தானே நடத்தினவை..” அநயாசமாகச் சொன்னார் சண்முகத்தார்.

“மக்கள் செய்யிறதை மக்கள் பிரதிநிதியள் தானே அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகவேணும்..” சுட்டினார் இரத்தினத்தார்.

“மெல்ல மெல்ல, அதைச் செய்வம்..” சண்முகத்தார் சமாளித்தார்.

“அதென்னடா விளக்கேத்த அடிபடுறியள். மெல்ல மெல்ல வராமல், வேகமாய் வந்து ஏத்திட்டு பறக்கிறியள்.. இப்ப என்ன மெல்ல மெல்ல?” இரத்தினத்தார் எரிந்தார். “சரி விடுங்கோ, மெல்ல மெல்ல செய்யட்டும்..” உருத்திரன் சண்முகத்தாருக்குப் பரிந்து பேசினான்.

“உனக்கு விசரே..!“ குமுறலாகப் பார்த்தார் இரத்தினத்தார்.

“நல்லாட்சியிலை மாவீரர் நாள் கொண்டாடை விட்டம் எண்டு காட்டினது அரசாங்கம்.. பிறகேன் அம்பாறை கஞ்சிகுடிச்சாறிலை மாவீரர் துயிலும் இல்லத்திலை முகாம் அமைக்கப் பாக்கினம்?”

“….”

“உடனடியாய் அனைத்து துயிலும் இல்லங்களையும் விடுவிக்க எங்கடை மக்கள் பிரதிநிதியள் நடவடிக்கை எடுக்க வேணும்.. அதோடை துயிலும் இல்லங்களை சட்ட ரீயாக அரசியல் ரீதியாக அங்கீகரிக்க வேணும்.. அதுதான் அதுக்கு பாதுகாப்பு…”

“….”

“அடுத்த வருசம் விளக்கு ஏற்ற வரேக்குள்ளைத்தான் நினைவு வருமோ…” இலட்சுமனன் நக்கலாகச் சொன்னான்.

“மக்களுக்கு உண்மையாய் இருப்பதுதான் மாவீரருக்கும் உண்மையாய் இருக்கிறது கண்டியளோ…” எழுந்து நடந்தார் இரத்தினத்தார்.

“மாவீரர் துயிலும் இல்லம் எண்டுறது எங்கடை கோவில்.. ஆமிக்கு கோயில்களை உடைக்கிறதும் அபகரிக்கிறதும் பிடிச்ச வேலைதானே…” இரண்டு காகங்களும் ஒன்றை ஒன்று பார்த்து பேசிக் கொண்டன. மாவீரர்களை நினைத்தால்போல் தலைசாய்க்கும் விதமாய் ஒருமுறை அசைந்தது நாவல்.

-நாவலடித் தம்பி-

http://thuliyam.com/?p=51901

On 16/12/2016 at 4:28 PM, விசுகு said:

இலங்கையின் அரசியல் சாசனம் அமைக்கும் பொறிமுறையில் சர்வதேசத்தின் பங்களிப்பு குறிப்பாக இந்தியாவின் பங்களிப்பு அவசியமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

உங்க முதலாளிமார் உங்களை மீண்டும் ஏமாத்தி போட்டாங்களோ?

ஏமாந்த ஜால்றா கும்பல்கள் நிறைய! ஏமாந்த எல்லா குழுக்களையும் சேர்த்து ஒரு சங்கம் நிறுவி போராடினால் ஏமாத்தும் முதலாளி வழிக்கு வரலாம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.