Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வறுமை காரணமாக முஸ்லிமாக மதம் மாறிய முன்னாள் புலிப் போராளி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

ibc.png
வன்னியில் வாழ்ந்த முன்னாள் புலிப் போராளி ஒருவர், தனது குடும்பத்துடன் முஸ்லிமாக மதம் மாறியுள்ளார்! இது ஒன்றும் புதினம் அல்ல. ஏற்கனவே நூற்றுக் கணக்கான முன்னாள் புலிப் போராளிகள் (பெந்தெகொஸ்தே) கிறிஸ்தவர்களாக மதம் மாறியுள்ளனர். அதற்குக் காரணம் ஆதரவின்மை, வறுமை, வேலையில்லாப் பிரச்சினை.
 
லண்டன் IBC தொலைக்காட்சி ஒளிபரப்பிய ஆவணப் படத்தில் காட்டப் பட்ட அந்தத் தகவல் பலருக்கு அதிர்ச்சியாக இருக்கலாம். (ஈழத் தமிழன் வெட்கப்படவேண்ட ஒரு வீடியோ) இதைக் காண நேரும் போலித் தமிழ்த்தேசியவாதிகள், "கட்டாய மதமாற்றம் செய்கிறார்கள்" என்று சொல்லிக் கொண்டு கம்பு சுற்றக் கிளம்புவார்கள்.
 
அந்த ஆவணப் படத்தை ஒளிபரப்பிய அறிவிப்பாளர் "இது ஒரு நுணுக்கமான இனவழிப்பு" என்று பிதற்றினார். இதைக் கூறிய நிராஜ் டேவிட் என்ற அந்த அறிவிப்பாளர் ஒரு கிறிஸ்தவர்.முன்பொரு தடவை "தமிழர்கள் யூதர்களாக (மதம்) மாற வேண்டும்" என்று ஆலோசனை கூறியவர். இஸ்ரேலையும், யூதர்களையும் புகழ்ந்து கட்டுரைகள் எழுதிக் குவித்தவர். முஸ்லிமாக மாறும் தமிழர்கள் "இன்னொரு இனமாகி" விடுவார்கள். அதனால் அது ஒரு "நுணுக்கமான இனவழிப்பு" என்று விளக்கம் கூறுகிறார். முன்பு நிராஜ் டேவிட்டின் ஆலோசனையை கேட்டு தமிழர்கள் யூதர்களாக மாறி இருந்தால், அது இனவழிப்பு ஆகாதா? ஏன் இந்த இரட்டை வேடம்?
 
பரமேஸ்வரி சீவகன் அவர்கள் தயாரித்துள்ள இந்த ஆவணப் படத்தில் குறிப்பிட்ட ஒரு சிலரை மட்டுமே பேட்டி கண்டுள்ளனர். இவர்களைப் போன்று பலர் இருக்கிறார்கள் என்பதை அவரே கூறி இருந்தார். அதாவது, இந்த ஆவணப் படத்தில் காட்டப் படுபவர் மட்டுமல்லாது, ஏற்கனவே பல முன்னாள் போராளிகள் முஸ்லிம்களாக மதம் மாறியுள்ளனர்.
 
அதற்கான காரணத்தை ஆராய்ந்த மனநல மருத்துவர் பின்வரும் காரணங்களை கூறினார். முன்பு அவர்கள் சார்ந்திருந்த சைவக் கோயில்களில் இது போன்ற பிரச்சனைகளை கையாளும் நடைமுறை எதுவும் இல்லை. அது ஒரு பெரிய குறைபாடு. மேலை நாடுகளில் இருப்பது மாதிரி மனோவியல் ஆலோசனைகள் வழங்கும் பொறிமுறைகளும் போதுமான அளவிற்கு இல்லை. நகர்ப் புறங்களில் வாழும் வசதி படைத்தவர்களுக்கு கிட்டும் இது போன்ற சலுகைகள், போரினால் பாதிக்கப் பட்ட முன்னாள் போராளிகளுக்கு கிடைக்கவில்லை. மேலும் மதம் மாறுவதன் மூலம் பல நெருக்கடிகளில் இருந்து தப்ப முடிகின்றது.
 
முஸ்லிமாக மாறிய முன்னாள் போராளியும் அதனை தெளிவாக குறிப்பிடுகின்றார் போரில் பாதிக்கப் பட்டு நோயாளியான அவருக்கு உதவுவதற்கு இந்து சமூகத்தில் யாரும் முன்வரவில்லை. முஸ்லிமாக மதம் மாறியவுடன் இஸ்லாமிய சமூகத்தினரின் ஆதரவு கிடைத்துள்ளது. ஆகவே, இங்கு சமூகத்தில் ஒதுக்கப் பட்டவர்கள் ஆதரவின்மை காரணமாக மன அழுத்தங்களுக்கு ஆளாவது கவனிக்கத் தக்கது. அவர் எதிர்பார்க்கும் ஆதரவும், அரவணைப்பும் புறக்கணிக்கப் படும் பொழுது, அது கிடைக்கும் இடத்தை நோக்கிச் செல்வதில் தவறிருப்பதாக தெரியவில்லை. மேலும் முஸ்லிமாக மதம் மாறியதால், புலனாய்வுத்துறையினரின் சந்தேகக் கண்களில் இருந்து தப்பி நிம்மதியாக வாழ முடிந்துள்ளது.
 
இது போன்றதொரு சம்பவத்தை எங்கள் ஊரிலேயே கேள்விப் பட்டிருக்கிறேன். எனது உறவினர்களில் ஒருவர், இறுதியுத்தத்திற்கு முன்னர் புலிகளுக்கு ஆதரவாக வேலை செய்து வந்தார். அவரைத் தேடி வீட்டுக்குச் சென்ற படையினர், கைது செய்து அழைத்துச் சென்ற பின்னர் காணாமல்போயுள்ளார். அதற்குப் பின்னர், அவரது மனைவியும் பிள்ளைகளும் அநாதரவாக நின்றனர். மிகவும் வறிய குடும்பத்தை சேர்ந்த அவர்களுக்கு உதவ யாரும் முன்வரவில்லை. இந்த நிலைமையில், அந்தப் பெண் பெந்தெகொஸ்தே கிறிஸ்தவ மதத்தை தழுவியுள்ளார்.
 
முன்பு கிழக்கு மாகாணத்தில் பெருமளவு காணப்பட்ட அல்லேலூயா கிறிஸ்தவ சபைகள், தற்போது வட மாகாணத்திலும் பல்கிப் பெருகி உள்ளன. அதில் சேர்பவர்கள் பெரும்பாலும் ஏழைகள் அல்லது ஒடுக்கப் பட்ட சமூகத்தினர். ஆவணப் படத்தில் வரும் மனோதத்துவ நிபுணர் சொல்வதைப் போல, இதன் மூலம் அவர்களுக்கு ஆற்றுப் படுத்தல் கிடைக்கிறது. இது ஒரு மனோவியல் பிரச்சினை. அதைத் தீர்ப்பதற்கான சமூகக் கட்டமைப்பு உருவாக்கப் பட வேண்டும். ஆனால், பாமர மக்களுக்கு தெரிந்த ஒரே வழி மதம் மாறினால் ஆற்றுப் படுத்தல் கிடைக்கிறது என்பது தான்.
 
சிவசேனை போன்ற இந்து மதவாதிகள், இந்தப் பிரச்சினையை கையாளத் தெரியாமல், "மதம் மாற்றுகிறார்கள்" என்று பிற மதங்களை எதிர்த்து பிரச்சாரம் செய்வதால் இந்தப் பிரச்சினையை தீர்க்க முடியாது. மாறாக, இருக்கும் பிரச்சினையை கூர்மைப் படுத்தவே அது உதவும். இங்கே பிரச்சினை மதம் அல்ல. இலங்கை போன்ற வறிய நாடுகளில், ஆதரவற்றவர்களை தாங்கிப் பிடிக்கும் நிறுவனமோ அதற்கான நடைமுறையோ எதுவும் இல்லை.
 
மேற்கத்திய நாடுகளில், அரசு அதற்கான வழிவகைகளை செய்து கொடுத்துள்ள படியால், அங்கு யாரும் மதம் மாறுவதில்லை என்பது குறிப்பிடத் தக்கது. அதாவது, ஒரு சோஷலிச நாட்டில் அல்லதுமேலைத்தேய நலன்புரி அரசுக்களில் நடைமுறையில் இருந்தது போன்ற ஒரு சமூகக் கட்டமைப்பு அவசியமாகின்றது. அதைப் புறக்கணித்து விட்டு, வெறுமனே "கட்டாய மத மாற்றம் நடக்கிறது" என்று குற்றம் சாட்டுவதால் பயனேதுமில்லை. இலங்கையில் உள்ள தமிழ் பேசும் சிவில் சமூகம் தொடர்ந்தும் ஏழைகளை புறக்கணித்து வந்தால், அவர்களும் தமக்குத் தெரிந்த மதம் மாறும் வழிகளை பின்பற்றுவதை தடுக்க முடியாது.
 
வாய் நிறைய தமிழ்த் தேசியம் பேசிக் கொண்டே, தமது சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் இரக்கப் படாத கயவர்கள் இவர்கள். தமது இனத் துரோகத்தை மறைப்பதற்காக எந்த பித்தலாட்டத்தையும் செய்யத் தயங்காதவர்கள். புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் வசதிபடைத்த புலி ஆதரவாளர்கள் ஒவ்வொருவரும், ஒரு முன்னாள் புலிப் போராளிக்கு உதவி செய்தாலே போதும். அதையும் இந்த ஆவணப் படமே கூறுகின்றது.
 
ஈழத் தமிழர் மத்தியில் உள்ள ஏற்றத் தாழ்வை மூடி மறைத்துக் கொண்டே "எல்லோரும் தமிழர் என்று ஒரே இனமாக சிந்திக்கிறார்கள்" என்று பிதற்றிக் கொண்டிருக்கும் வீணர்கள் உண்மைகளை பேசப் போவதில்லை. இன்று கைவிடப் பட்ட முன்னாள் புலிப் போராளிகள் வறுமையான குடும்பப் பின்னணி கொண்டவர்கள்.
 
ஈழப் போர் முடிந்தவுடன், வறிய குடும்பங்களை சேர்ந்த போராளிகள், சமூகத்தில் நலிவடைந்த பிரிவினராக ஒதுக்கப் பட்டனர். எந்த நேரமும் சந்தேகப் படும் புலனாய்வுத்துறையினரின் கெடுபிடி ஒரு பக்கம். வேலை வாய்ப்பில்லாத படியால் தொடர்ந்தும் வறுமைக்குள் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் மறுபக்கம். அதேநேரம், போர் அனுபவங்களால் ஏற்பட்ட மன அழுத்தங்களால் மனநிலை பாதிக்கப் பட்டுமுள்ளனர்.
 
இந்த இக்கட்டான சூழலில் இருந்து அவர்களை காப்பாற்றுவதற்கு, எந்தவொரு இந்து மத அமைப்போ அல்லது தமிழ்த் தேசிய அமைப்போ முன்வரவில்லை. அப்படியான நிலையில் அவர்கள் மதம் மாறுவதில் ஆச்சரியம் எதுவுமில்லை. மத மாற்றத்தை எதிர்ப்பவர்கள் முதலில் வறுமையை ஒழிக்க முன்வாருங்கள். அதற்கான நடவடிக்கைகள் பற்றி ஆராயுங்கள். இல்லாவிட்டால் அங்கு நடக்கும் மதமாற்றத்திற்கு, நீங்களும் ஒரு வகையில் உடந்தை என்ற உண்மையை ஏற்றுக் கொள்ளுங்கள்.
 

 

kalaiy.blogspot

  • Replies 50
  • Views 4.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தன்னம்பிக்கை அற்றவர்கள் தான் மதத்தின் பின்னால் செல்பவர்கள். அற்ப சலுகைகளுக்காக மதம் மாறிவிட்டு பல சாட்டுக்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

மதம், மாறி விட் டால்...  வறுமை போய்  விடுமா? :unsure:
அப்படி என்றால்... முஸ்லீம், கிறிஸ்தவர்கள் எல்லோரும்...  பணக்காரராக இருக்க வேண்டுமே.
மீரா... மேலே குறிப்பிட்ட மாதிரி,  "அற்ப சலுகைகளுக்காக மதம் மாறிவிட்டு பல சாட்டுக்கள்"  சொல்வது சரியல்ல. 

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொருவரும் தாம் செல்லும் பாதைக்கு ஆயிரம் காரணம் சொல்லலாம் . அவர்களின் வறுமையைப் போக்க மதம் மாறுவது மட்டுமா ஒரே வழி ...... ?

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, MEERA said:

தன்னம்பிக்கை அற்றவர்கள் தான் மதத்தின் பின்னால் செல்பவர்கள். அற்ப சலுகைகளுக்காக மதம் மாறிவிட்டு பல சாட்டுக்கள். 

கிட்டத்தட்ட 7 வருடங்கள் 

உதவிகளுக்காக காத்திருந்து காத்திருந்து.......?

அவர்கள் வலி சொல்லி மாளாது

அரசும் ஒதுக்கி

தமிழரும் ஒதுக்கி.....

பாவம் விட்டுவிடுவோம்...

7 minutes ago, விசுகு said:

கிட்டத்தட்ட 7 வருடங்கள் 

உதவிகளுக்காக காத்திருந்து காத்திருந்து.......?

அவர்கள் வலி சொல்லி மாளாது

அரசும் ஒதுக்கி

தமிழரும் ஒதுக்கி.....

பாவம் விட்டுவிடுவோம்...

இந்த முஸ்லிமாக மதம் மாறியவரை மீண்டும் சைவ மதத்துக்கு மாற்ற என்ன வழி??

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Dash said:

இந்த முஸ்லிமாக மதம் மாறியவரை மீண்டும் சைவ மதத்துக்கு மாற்ற என்ன வழி??

நாம் மிக மிக தாமதமாகத்தான் சிந்திக்கின்றோம்

செயற்படுகின்றோம்

இருப்பவர்களையாவது காப்பாற்றலாம்...

11 minutes ago, விசுகு said:

நாம் மிக மிக தாமதமாகத்தான் சிந்திக்கின்றோம்

செயற்படுகின்றோம்

இருப்பவர்களையாவது காப்பாற்றலாம்...

வன்னியில் தமிழர்கள் 5 பேரால் குறைந்து முஸ்லீம் எண்ணிக்கை 5 பேரால் உயர்ந்துள்ளது.
என் இவர்களை மீண்டும் சைவ மதத்துக்கு மாற்ற முடியாது??

1 hour ago, தமிழ் சிறி said:

மதம், மாறி விட் டால்...  வறுமை போய்  விடுமா? :unsure:
அப்படி என்றால்... முஸ்லீம், கிறிஸ்தவர்கள் எல்லோரும்...  பணக்காரராக இருக்க வேண்டுமே.
மீரா... மேலே குறிப்பிட்ட மாதிரி,  "அற்ப சலுகைகளுக்காக மதம் மாறிவிட்டு பல சாட்டுக்கள்"  சொல்வது சரியல்ல. 

 

1 hour ago, MEERA said:

தன்னம்பிக்கை அற்றவர்கள் தான் மதத்தின் பின்னால் செல்பவர்கள். அற்ப சலுகைகளுக்காக மதம் மாறிவிட்டு பல சாட்டுக்கள். 

அப்படியே வான் கோழி மாதிரி தலையை கொண்டு போய் மண்ணுக்குள் புதையுங்கோ !!!

ஒரு முஸ்லீம் அமைப்பு  போராளிகளை தேடி உதவி வழங்கும் என்றால் புலம் பெயர் நாட்டில் இருக்கும் அறிவாளிகள் எல்லாம் என்ன செய்தார்கள்??

[தன்னம்பிக்கை அற்றவர்கள் தான் மதத்தின் பின்னால் செல்பவர்கள். அற்ப சலுகைகளுக்காக மதம் மாறிவிட்டு பல சாட்டுக்கள். ]

திருந்தவே மாட்டீர்களா?

ஏனென்றால், உங்களுக்கு தெரியும், 
"வறுமை காரணமாக முஸ்லிமாக மதம் மாறிய முன்னாள் புலிப் போராளி!", இந்த போராளி யாழ் இல் வந்து உங்கடை கருத்துகளை வாசிக்க மாட்டார் என்று

இப்படியும் சொல்லலாம், தன்னம்பிக்கை அற்றவர்கள் தான், London வருவார்கள், மீரா (தமிழ் பெயர் அல்ல) என்று பெயர் வைப்பார்கள் ..

Edited by Knowthyself

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

கிட்டத்தட்ட 7 வருடங்கள் 

உதவிகளுக்காக காத்திருந்து காத்திருந்து.......?

அவர்கள் வலி சொல்லி மாளாது

அரசும் ஒதுக்கி

தமிழரும் ஒதுக்கி.....

பாவம் விட்டுவிடுவோம்...

 

1 hour ago, Dash said:

வன்னியில் தமிழர்கள் 5 பேரால் குறைந்து முஸ்லீம் எண்ணிக்கை 5 பேரால் உயர்ந்துள்ளது.
என் இவர்களை மீண்டும் சைவ மதத்துக்கு மாற்ற முடியாது??

அப்படியே வான் கோழி மாதிரி தலையை கொண்டு போய் மண்ணுக்குள் புதையுங்கோ !!!

ஒரு முஸ்லீம் அமைப்பு  போராளிகளை தேடி உதவி வழங்கும் என்றால் புலம் பெயர் நாட்டில் இருக்கும் அறிவாளிகள் எல்லாம் என்ன செய்தார்கள்??

தமிழனை நேசிக்கும்.... விசுகு, டாஷ்....  அவர்களுக்கு, ஒரே பதில்.
தமிழன் என்றால்..... கிள்ளுக் கீரை, என்ற நிலைமைக்கு... ஆளாக்கியவர்கள்,  யார்?  என்பது உங்களுக்கு தெரிந்து இருக்கும்.
புலம் பெயர் தமிழர் தான்... இப்படியானவர்கள், மதம் மாறுவதற்கு காரணம் என்று, சொல்வது, கண்டிக்கக் கூடிய விடயம்.
எவ்வளவோ... சந்தர்ப்பம், இருந்தும், அதனை தவற விட்ட...
சம்பந்தன், சுமந்திரன் போன்ற  அரை வேக்காட்டு தலைவர்களே...... இதற்கு பதில் சொல்ல  வேண்டும்.

முஸ்லீம்.... தலைவர்களுக்கு உள்ள, புத்திசாலித்தனம்......  இவர்களுக்கு இல்லாமல் போனது.... ஏன்...? ஏன்...? 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
Quote

இப்படியும் சொல்லலாம், தன்னம்பிக்கை அற்றவர்கள் தான், London வருவார்கள், மீரா (தமிழ் பெயர் அல்ல) என்று பெயர் வைப்பார்கள் ..

நீங்கள் இலங்கையில் இருந்தா எழுதுகிறீர்கள்? Knowthyself  தமிழ் பெயராக்கும்tw_confused:

  • கருத்துக்கள உறவுகள்

முதல் அங்கை மக்கள் வாழ நாம் ஊக்குவிக்க வேணும்.அந்த மக்கள் வாழ்வுக்கு உதவ வேண்டும்.

16 minutes ago, nunavilan said:

நீங்கள் இலங்கையில் இருந்தா எழுதுகிறீர்கள்? Knowthyself  தமிழ் பெயராக்கும்tw_confused:

உங்கடை கேள்விகள் சரிதான், திருந்திக்கிறன், மனமென்னவோ இலங்கையில் தான் வாழுது ..

[தன்னம்பிக்கை அற்றவர்கள் தான் மதத்தின் பின்னால் செல்பவர்கள். அற்ப சலுகைகளுக்காக மதம் மாறிவிட்டு பல சாட்டுக்கள்.]

இதுக்கொன்றும் சொல்லமாட்டியளோ?

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Knowthyself said:

உங்கடை கேள்விகள் சரிதான், திருந்திக்கிறன், மனமென்னவோ இலங்கையில் தான் வாழுது ..

[தன்னம்பிக்கை அற்றவர்கள் தான் மதத்தின் பின்னால் செல்பவர்கள். அற்ப சலுகைகளுக்காக மதம் மாறிவிட்டு பல சாட்டுக்கள்.]

இதுக்கொன்றும் சொல்லமாட்டியளோ?

மாறியவரின் மனதை வாசித்தவர் போல கூறுகிறீர்கள். இதற்கு என்னத்தை சொல்வதுtw_blush:

எனது மூதாதையினரில் பலர் 1800  களின் பிற்பகுதியிலும் 1900 களின் ஆரம்பம்களிலும் சைவ சமயத்திலிருந்து கிறிஸ்தவர் ஆயினர். காலப்போக்கில் ஒரு சிலரை தவிர அநேகர் மீண்டும் சைவ சமயத்திற்கு திரும்பி வந்தனர். 

தற்போது அதீத உணர்ச்சி வயப்படாது அக, புற சூழ்நிலைகளை எமக்கு சாதகமாக்க செய்ய வேண்டிய கருமங்களை உறுதியுடன் எடுத்துசெல்ல வேண்டும். 

Tough get going when the going get tough.

37 minutes ago, nunavilan said:

மாறியவரின் மனதை வாசித்தவர் போல கூறுகிறீர்கள். இதற்கு என்னத்தை சொல்வதுtw_blush:

அவர்களின் தனிபட்ட முடிவுகளுக்கு கருத்து சொல்ல நாம் யார், அந்த போராளிக்கு தன்னம்பிக்கை இல்லை என்று சொல்ல நாம் யார், அவர்களின் மனதை புண்படுத்தாமல் எழுதுவதற்கு, பல்கலை கழகமோ, மனதை வாசிக்கவோ தேவையில்லையே

நீட்டிகொண்டு போகவியலாது முடிக்கிறன்

Edited by Knowthyself

2 hours ago, தமிழ் சிறி said:

 

தமிழனை நேசிக்கும்.... விசுகு, டாஷ்....  அவர்களுக்கு, ஒரே பதில்.
தமிழன் என்றால்..... கிள்ளுக் கீரை, என்ற நிலைமைக்கு... ஆளாக்கியவர்கள்,  யார்?  என்பது உங்களுக்கு தெரிந்து இருக்கும்.
புலம் பெயர் தமிழர் தான்... இப்படியானவர்கள், மதம் மாறுவதற்கு காரணம் என்று, சொல்வது, கண்டிக்கக் கூடிய விடயம்.
எவ்வளவோ... சந்தர்ப்பம், இருந்தும், அதனை தவற விட்ட...
சம்பந்தன், சுமந்திரன் போன்ற  அரை வேக்காட்டு தலைவர்களே...... இதற்கு பதில் சொல்ல  வேண்டும்.

முஸ்லீம்.... தலைவர்களுக்கு உள்ள, புத்திசாலித்தனம்......  இவர்களுக்கு இல்லாமல் போனது.... ஏன்...? ஏன்...? 

இதற்குள் ஏன் அரசியலை உள்வாங்குகிறீகள் , இந்த போராளி வறுமை காரணமாக தான் மதம் மாறியுள்ளார் என்பது தெளிவு , இவர்களது வறுமையை போக்க ஏன்  எந்த சைவ மத அமைப்பும் முன் வரவில்லை, தாயகத்த்திலும் புலம் பெயர் நாடுகளிலும்  இருக்கும் கோவில்கள் ஏன்  இவர்களது வறுமையை போக்க முன்வரவில்லை , கனகாம்பிகை குளத்தில்  6 கோடி றுப்பாய் செலவில் கோவில் கட்டியவர்கள் என் இவர்களது வறுமையை போக்கவில்லை,

சிறீ  உங்களால் முடிந்தால் இவர்களை தேடி கண்டு பிடியுங்கள் , உங்களால் முடிந்த உதவியை செயுங்கள் , இல்லாவிடில் ஜெர்மனியில் இருக்கும் கோவில்களுக்கு இவர்களை பற்றி அறிவியுங்கள் , இவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து மீண்டும் சஉய்வ மதத்துக்கு மாற்றுவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கருத்து எழுதிய எல்லோருக்கும்,

90 இன் நடுப்பகுதி திடீரென ஒருவருடனும் தொடர்பில்லை கையில் காசில்லை என்ன செய்வது என்று தெரியாது சில மாதங்களாக, அடுத்து 90 இன் இறுதிப்பகுதி, 3/4 நாட்டகளாக உணவு இல்லை பக்கெட்டில் காசிருந்தும் வெளியே போக முடியாத நிலை தண்ணீரை மட்டும் குடித்துக் கொண்டு அடுத்த சில நாட்கள் காய்ந்த பாணுடன்,அடுத்து பழுதடைந்து மணத்த பாணை தண்ணீரில் நனைத்து. இப்படி பல அனுபவங்கள் உண்டு. கடைசிவரை தன்னம்பிக்கையை இழக்கவில்லை.

 

இஸ்லாமியருக்கும் கிறீஸ்தவருக்கும் ஆள் பிடிக்கும் தேவை உள்ளது, அதனை நீங்கள் மனிதாபிமானம் என்றால் ஏற்றுக்கொள்ள நான் முட்டாள் அல்ல.

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காணொளியைப் பாத்துவிட்டு அவர்கள் கூறுவது எல்லாமே உண்மையாக இருக்கும் என்று நாம் நம்புவது முட்டாள்த்தனம். உண்மையில் எத்தனையோ போராளிகள் இன்னும் உதவியின்றி இருக்கின்றனர் தான். மறுக்கவில்லை. அதற்காக மதம் மாறுவதை ஏற்றுக்கொள முடியாது.உவர்களிலும் துன்பப்படும் எத்தனையோ மனிதர் அங்கு இல்லையா என்ன? புலம் பெயர்ந்த மக்கள் எல்லோரும் உதவவில்லை ஆயினும் எத்தனையோ பேர் தம்மாலான உதவிகளை உறவில்லாத எத்தனையோ பேருக்கு போர் முடிந்து இத்தனை ஆண்டுகளின் பின்னரும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். நாம் யாரையும் உதவி செய்யுங்கள் என்று கூறவும் முடியாது. ஒரே நேரத்தில் பல உதவி பெறுவோரை நிறுத்தவும் முடியாது. அங்கவீனமானோரை வீடியோ எடுத்து அவர்களுக்குத் தெரியாமலே தாம் வெளிநாட்டவரிடம் பணம் வாங்கி கொள்ளையிடும் பலபேரை என் அனுபவத்திலும் கண்டுள்ளேன். எல்லாவற்றையும் எழுதினால் உங்களுக்கே சீ என்று போய்விடும். என்னால் மற்றவர்க்குக் கிடைக்கும் உதவி நின்றுவிடுவதிலும் எனக்கு உடன்பாடு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முஸ்லீம் அமைப்பு வடகிழக்கில் செயல்படுவதற்கும் தமிழ் அமைப்பு செயல்படுவதற்கும் பாரிய இடைவெளி, காரணம் தமிழ் அரசியல்வாதிகளின் திறமையின்மை.

எனது நண்பரொருவர்(அரச உத்தியோகத்தர்)  நாம் இங்கிருந்து மாதாந்தம் உண்டியல் மூலம் அனுப்பும் பணத்தை அங்கிருக்கும் சில முன்னாள் போராளிகளுக்கு கொடுத்துக்கொண்டிருந்தார். 2016 இன் ஆரம்பத்தில் புலனாய்வாளர்கள் அவரை விசாரித்து வெருட்டியது "உனக்கு உண்டியலில் பணம் வருகிறது, அதை வைத்தே உன்னை உள்ளுக்குள் போடுவன்" என்று. அன்றுடன் அவர் விடைபெற்றுவிட்டார்.

உங்கள் எல்லோரிடமும் கேட்பது, உண்மையாகவே ஒரு மாவீரர் குடும்பமோ அல்லது போராளி குடும்பமோ இருந்தால் தெரியப்படுத்துங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, colomban said:

வன்னியில் வாழ்ந்த முன்னாள் புலிப் போராளி ஒருவர், தனது குடும்பத்துடன் முஸ்லிமாக மதம் மாறியுள்ளார்! இது ஒன்றும் புதினம் அல்ல. ஏற்கனவே நூற்றுக் கணக்கான முன்னாள் புலிப் போராளிகள் (பெந்தெகொஸ்தே) கிறிஸ்தவர்களாக மதம் மாறியுள்ளனர். அதற்குக் காரணம் ஆதரவின்மை, வறுமை, வேலையில்லாப் பிரச்சினை.

அப்ப என்ன புண்ணாக்குக்கு புலம்பெயர்ந்த டமிழன்கள் அல்லலோயா,ஜெகோவாக்களுக்கு மாறி  மானத்தை வாங்கிறாங்கள்???

ஓ இஞ்சையும் வறுமை பிரச்சனையோ?tw_glasses:

  • கருத்துக்கள உறவுகள்

மதம் மாறுவதும் விடுவதும் அவரவர் தனிப்பட்ட உரிமை சார்ந்த விடயம். ஆனால்.. முன்னாள் போராளிகள் என்ற அடைமொழியின் கீழ்... தேசிய தலைவரின் தலைமைத்துவத்தின் கீழ் இயக்கம் செயற்பட்ட போது போராளிகளிடம் பொதுவாக இனங்காணப்பட்ட நற்பண்புகளை... போராளிப் பண்புகளை.. இப்பவும் எதிர்பார்க்கும் நம்மில் பலரும்.. ஊடகங்களும்.. எதிரிகள்... ஊடகங்கள் மூலம் முன்னெடுக்கும் உளவியல் போரும் தான்.. இப்படியான விடயங்கள் தூக்கிப் பிடிக்கப்பட முக்கிய காரணம்.

எத்தனையோ முஸ்லீம்கள் இலங்கையில்.. வறுமைக் கோட்டின் கீழ் வாழினம். மதம் மாறுவதால்.. வசதி வாய்ப்பு வந்திடும் என்றில்லை. தொடர்ந்து உதவி கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கக் கூடாது. மாறாக கிடைக்கும் உதவியை வைச்சுக் கொண்டு நிரந்தர வருமானத்துக்கு வழிதேடினால்.. ஒரு பிரச்சனையும் இல்லை. இங்கு தான் உதவி செய்பவர்களும்.. உதவி பெறுபவர்களும் தவறுவிடுகிறார்கள். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

அப்ப என்ன புண்ணாக்குக்கு புலம்பெயர்ந்த டமிழன்கள் அல்லலோயா,ஜெகோவாக்களுக்கு மாறி  மானத்தை வாங்கிறாங்கள்???

ஓ இஞ்சையும் வறுமை பிரச்சனையோ?tw_glasses:

இராப்பகலாக மாடாய் வேலை செய்து போதகரையும் போதகர் குடும்பத்தையும் வசதியாக வாழ வைக்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதம் மாறுவதும்.....தங்கள் பெயர்களை மாற்றியமைப்பதும் அவரவர்களின் தனிப்பட்ட விடயம்.
ஆனால் அவர்கள் அதற்கான காரணங்களை விளக்க ஆரம்பிக்கும் போதுதான் ஆயிரம் கேள்விகள் எழுகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் சுதிக்காக மாதம் மாறிவிட்டு மற்றவரை சாடுபவர்களையும் அவர்களை தூக்கிப்பிடிப்பவர்களையும் கண்டுகொள்ளக் கூடாது. 

சென்றவாரம் வாரம் மஸ்தான் mp பள்ளிவாயலுக்கு வருவதற்காக வவுனியா பசார் வீதியை முற்றாக மூடும் நிலமையிலேயே இலங்கை அரசியல் உள்ளது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.