Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர் போய் வந்தவனின் அனுபவங்கள்.. 42.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
On 01/03/2017 at 5:06 PM, முனிவர் ஜீ said:

அது சரி நீங்கள் எப்ப ஊருக்கு வந்து இப்படி எழுதுவீங்கள் சுவை சார் 

நான் அடிக்கடி ஊருக்கு வருபவன்.குறைந்தது வருடத்துக்கு இரன்டு முறையாவது. உங்கடை ஆசைக்கு ஏதாவது எழுதவேண்டும் என்டால் அரசியல் மற்றும் அங்குள்ள நிர்வாக முறைகள் அல்லது சீர் கேடுகள் தவிர்த்து எனக்கு எனது மண்னில் மண்னோடு வாழ வேண்டும் என்பதே எனது அவா.சொல்லப் போனால் எனது ஆயுளில் கொஞசக்காலாமாவது வாழ விரும்புகிறேன்.அம்புட்டுத்தான்.

  • Replies 349
  • Views 28.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஏன் பாருங்கோ லண்டனில் வாழ்க்கைச் செலவு கூடவில்லையோ<_<

  • கருத்துக்கள உறவுகள்

அனுபவத்தை, உண்மையை எழுதுங்கள் என்றார்கள், எழுதினால் இலங்கையை மற்றைய நாடுகளுடன் ஒப்பிட வேண்டாம், லண்டனில் கூடவில்லையோ குறையவில்லையோ என்கிறார்கள்.

என்ன விந்தை உலகம் இது? 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, MEERA said:

அனுபவத்தை, உண்மையை எழுதுங்கள் என்றார்கள், எழுதினால் இலங்கையை மற்றைய நாடுகளுடன் ஒப்பிட வேண்டாம், லண்டனில் கூடவில்லையோ குறையவில்லையோ என்கிறார்கள்.

என்ன விந்தை உலகம் இது? 

ஏம் மீரா லண்டனில் 10 வருடத்திற்கு முன்பு வாங்கிய ஒரு பொருளை இப்பவும் அதே விலைக்கு வாங்குவீர்களா?... மேலும் மேலே நான் எழுதியது உங்களுக்கு  இல்லை<_<

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

ஏம் மீரா லண்டனில் 10 வருடத்திற்கு முன்பு வாங்கிய ஒரு பொருளை இப்பவும் அதே விலைக்கு வாங்குவீர்களா?... மேலும் மேலே நான் எழுதியது உங்களுக்கு  இல்லை<_<

1 பவுன் பீட்சா இப்பவும் அதே 1 பவுன் தான் அக்கீ. உதாரணம் கேட்டியள் இல்ல. லண்டனில் தான் 1பவுன்.. பீட்சாவே அதிகம் வாங்கலாம். வெளியிடங்களில் வாங்குவதென்ன.. கிடைப்பதே அரிது. ஆனால் லண்டனில் கிடைக்கும். 

இப்பவும் சீனி அதே விலை தான் இடையில கூடிக் குறைஞ்சுது. முட்டை அதே விலை தான். பால்... இப்ப குறைஞ்சிட்டுது. முதல் 2 லீட்டர் 1 பவுன். இப்ப அதுவும் 89 க்கு கிடைக்குது. நான் 2008 வாங்கிய லாப்டப்.. இப்ப பாதி விலையில் அதைவிடப் பண்மடங்கு அதிகரித்த திறனுடன் கிடைக்கிறது. 256 எம் பி மெமரி ஸ்ரிக். 2004 இல்.. 125 பவுன். இன்று... 16 ஜி பி... கூடினது 12 பவுன்.  சொறீலங்காவில்.............................................tw_blush:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விலை கேக்கிற/சொல்லுற  குசும்பர்களுக்கு இந்த கனடா வீடியோ சமர்ப்பணம்.

  • கருத்துக்கள உறவுகள்

அவதானிப்புகள் நன்றாகத்தான் இருக்கின்றன. 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் பண வீக்கம் கூடிவிட்டது  உண்மைதான். value, price இடையிலான வித்தியாசம் அதிகம். அவுசில் $50 இற்கு சூப்பர் மார்க்கெட்டில் வாங்கும் பொருட்களைவிட 5,000/- விற்கு குறைவான பொருட்களையே இலங்கையில் வாங்கலாம் என நினைக்கிறேன்.  நுகர்வுக் கலாச்சாரம் அதிகரித்து விட்டதாலும், வரிகளை கூட்டியதாலும், இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. அத்துடன் வியாபாரிகளின் over head costs அதிகரித்திருப்பதும் காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஜீவன் சிவா said:

2004 இல 70 ஆயிரம் - அதுவும் சுடிதார்

அந்த நேரம் நல்லூரில் ( இன்று யாழில் மிகவும் விலைகூடின வசிப்பிடம்) ஒன்றைரைப் பரப்பு காணியே வாங்கி இருக்கலாம்.

நீங்கெல்லாம் எங்கய்யப்பா இருக்கிறீர்கள் இந்த அண்டப்புளுகை அவிழ்த்துவிட?

உங்களை மாதிரி நாலுபேர் சீச்சீ நீங்கள் ஒருவரே போதும் - தமிழர் முன்னேற

தும்பளையான் ஏற்கனவே கூறியதை நான் மீண்டும் கூறி விடை பெறுகின்றேன்.

1kml5c.jpg

கடைசி முக்கை கொஞ்சம் கூடுதலாக எதிர்பார்த்தேன் .........
ஏமாத்திவிடீர்கள் .....

சும்மா புஷ்வாணம் மாதிரி இருக்கு. 

உங்களுக்கு கொழும்பில் ......... 5 லடசத்திட்கு சுடிதார் வேண்டுமானாலும் வாங்கலாம்.
ஆன்லைனிலேயே இருக்கு. 

18 hours ago, MEERA said:

நான் இலங்கை போனதும் Shopping list ஐ சகலனிடம் கொடுத்துவிடுவேன். அவர் ஓர் ஆணி வாங்குவது என்றாலும் நாலு கடையில் விசாரித்துதான் வாங்குவார், ஆத்துக்காரி தனது list ஐ தமக்கையிடம் கொடுத்துவிடுவார். மற்றும்படி House of Fashion இல் நேரம் கிடைத்தால்.  

அவசரமாக ஏதாவது தேவையெனில் food city, விலை கூடினாலும் ஏமாறவில்லை என்ற சந்தோசம். 

சீலை,சுடிதார், வேட்டி அடிக்கடி இந்தியா போகும் உறவினர் வாங்கி வருவார்.

நானும் எனது மச்சான் ஒருவருடன்தான் எல்லாம் செய்வது 
இது கொஞ்சம் வில்லங்கமான விடயம் என்பதால் ....
நாம் இங்கு சாதாரணமாக பழகுவதை ... அவர்கள் எப்படி எடுப்பார்களோ  தெரியவில்லை. 
பின்பு ஊரில் போய் சொல்லுவான் 
இவர் ஒரு அக்காவிட்க்கு சேலை வாங்கி கொடுத்தார் என்று ..
அதுதான் தனியாக கிளம்பினேன் .... அந்த காப்பில் 
அரப்பு அரைக்க பார்த்தார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, nedukkalapoovan said:

1 பவுன் பீட்சா இப்பவும் அதே 1 பவுன் தான் அக்கீ. உதாரணம் கேட்டியள் இல்ல. லண்டனில் தான் 1பவுன்.. பீட்சாவே அதிகம் வாங்கலாம். வெளியிடங்களில் வாங்குவதென்ன.. கிடைப்பதே அரிது. ஆனால் லண்டனில் கிடைக்கும். 

இப்பவும் சீனி அதே விலை தான் இடையில கூடிக் குறைஞ்சுது. முட்டை அதே விலை தான். பால்... இப்ப குறைஞ்சிட்டுது. முதல் 2 லீட்டர் 1 பவுன். இப்ப அதுவும் 89 க்கு கிடைக்குது. நான் 2008 வாங்கிய லாப்டப்.. இப்ப பாதி விலையில் அதைவிடப் பண்மடங்கு அதிகரித்த திறனுடன் கிடைக்கிறது. 256 எம் பி மெமரி ஸ்ரிக். 2004 இல்.. 125 பவுன். இன்று... 16 ஜி பி... கூடினது 12 பவுன்.  சொறீலங்காவில்.............................................tw_blush:

உற்பத்தி செலவு மூன்றாம் தர நாடுகளுக்கு கொம்பனிகளை 
நகர்த்துவதாலும் புதிய தொழில்நுட்பம் காரணமாகவும் குறைந்து இருக்கிறது.
தவிர உலக வர்த்தக விதிமுறைகள் ஐரோப்பிய யூனியன் உருவான பின்பு 
பல மாற்றங்களை கொண்டுவந்து இருக்கிறது 
பிரிட்டனின் பிரிவு எப்படி இருக்கும் என்பது இப்போ முக்கிய கேள்வி ?

உணவு பொருட்கள் கனடாவிலும் லண்டனிலும் மலிவாகத்தான் இருக்கிறது 
இம்மிகிரேஷன் விளையாட்டை இங்கு கொஞ்சம் அவதானிக்க வேண்டும் 
உதராணத்திட்கு இந்த சின்ன விடயத்தை பாருங்கள் மிளகாய் தூளை ஒரு தமிழர் 
இலங்கையில் இருந்து இறக்குவார் இவருக்கு ஏற்றுமதி வரியை இலங்கை அறவிட தொடங்கினால் 
அவர் லஞ்சம் கொடுப்பார் ... தூள் வந்துவிடும் நாம் வாடிக்கையாளராக இருந்து .... ஒரு மூன்றாம் உலகை சுரண்டுகிறோம் துரதிஷ்ட்டமாக அது நமது நாடாகி விடுகிறது. 
லண்டன் காரன் ஏன் எல்லோரையும் உள்ளே விடுகிறான் ?? உள்ளே விடுகிறான் ? என்று பலரும் கேட்டு கொண்டு இருப்பார்கள் 
ஒரு நாளைக்கு கீத்ரோ விமான நிலையத்தின் வான் பரப்பை பாருங்கள் எத்தனை விமானம் வருகிறது 
எங்கிருந்து வருகிறதோ  ... அங்கும் இங்கும் ஒரு பாரிய வர்த்தகம் ..... வர்த்தக பரிமாற்றம் என்று தெரியாமலேயே நடக்கிறது. உள்ளே வரும் முதலாம் தலைமுறைதான் .... அங்கு கொஞ்சத்தை கொண்டுபோகும் பின்பு வீடு ... காடு என்று போட்டிக்கு போட்டி என்று இங்கேயே தொடங்கிவிடும். 

2025-2040 இட்குள் பாரிய ஒரு உணவு பற்றாக்குறையை உலகம் சந்திக்கும் என்றுதான் 
பலரும் சொல்கிறார்கள்  இப்போது 9 பில்லியன் பேருக்கு உணவு தயாரிக்கிறோம் 
இது 10 பில்லியனாக மாறும் ..... பயிர்ச்செய்கை நிலங்கள் குறைவடைந்துகொண்டு 
போகிறது .... நன்நீர் விடயம் என்பது .. அடுத்த உலக போரே தண்ணிக்காக வரலாம் எனும் 
நிலையில் செல்கிறது. (லண்டனில் நீங்கள் நாளும் நாளும் மழையில் நனைவதால் இதை உணர கொஞ்சம் கடினமாக இருக்கும். எனது இடத்திலும் பத்து ஆயிரம் குளம் இருக்கிறது சமூகக்கல்வியில் ஊரில் படித்த போது படித்திருப்பீர்கள் 5பெரும் வாபிகள் என்று அதிலேயே பெரியது சுப்பெரியோர் இங்குதான் இருக்கு) 
ஆனால் குளங்கள் நீர்மட்டம் குறைவதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது. 

உங்களுக்கு ஒரு பிரெக்ஸிட் என்றால் எமக்கு ஒரு ட்ராம்  வந்து இருக்கிறான் 
எப்படி இருக்கும் என்று இனி போக போகத்தான் தெரியும்...... 
வீழும்போது உச்சியில் இருந்து வீழ்ந்தால் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதாலோ 
என்னமோ ? எமது சந்தை ஏறிக்கொண்டே போகிறது 
டாலரின் பெறுமதி கூடுவதால் இப்போதே ஏற்றுமதி வீழ்ச்சி அடைகிறது.
(அளவிட்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்ற நிலைதான் பணத்தின் பெறுமதியும்) 

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, சுவைப்பிரியன் said:

நான் அடிக்கடி ஊருக்கு வருபவன்.குறைந்தது வருடத்துக்கு இரன்டு முறையாவது. உங்கடை ஆசைக்கு ஏதாவது எழுதவேண்டும் என்டால் அரசியல் மற்றும் அங்குள்ள நிர்வாக முறைகள் அல்லது சீர் கேடுகள் தவிர்த்து எனக்கு எனது மண்னில் மண்னோடு வாழ வேண்டும் என்பதே எனது அவா.சொல்லப் போனால் எனது ஆயுளில் கொஞசக்காலாமாவது வாழ விரும்புகிறேன்.அம்புட்டுத்தான்.

நீங்கள் பிறந்த நாடு ஐயா உங்களுக்கு இல்லாமலா  போகும் இந்த இலங்கையில் உங்கள் ஆசை நிறைவேறும் 

18 hours ago, nedukkalapoovan said:

1 பவுன் பீட்சா இப்பவும் அதே 1 பவுன் தான் அக்கீ. உதாரணம் கேட்டியள் இல்ல. லண்டனில் தான் 1பவுன்.. பீட்சாவே அதிகம் வாங்கலாம். வெளியிடங்களில் வாங்குவதென்ன.. கிடைப்பதே அரிது. ஆனால் லண்டனில் கிடைக்கும். 

இப்பவும் சீனி அதே விலை தான் இடையில கூடிக் குறைஞ்சுது. முட்டை அதே விலை தான். பால்... இப்ப குறைஞ்சிட்டுது. முதல் 2 லீட்டர் 1 பவுன். இப்ப அதுவும் 89 க்கு கிடைக்குது. நான் 2008 வாங்கிய லாப்டப்.. இப்ப பாதி விலையில் அதைவிடப் பண்மடங்கு அதிகரித்த திறனுடன் கிடைக்கிறது. 256 எம் பி மெமரி ஸ்ரிக். 2004 இல்.. 125 பவுன். இன்று... 16 ஜி பி... கூடினது 12 பவுன்.  சொறீலங்காவில்.............................................tw_blush:

Sorry  நெடுக்ஸ் 
நான் நோர்வேயில் முதலாவதாக வாங்கின கம்ப்யூட்டர் 23 000 குரோன்கள் - 1989 இல் 
இப்ப ???

இப்படித்தான் பணவீக்கம் + பொருளாதாரம் + தொழில்நுட்ப வளர்ச்சி புரியாதவர்கள் சொல்வார்கள்

நீங்கள் உங்கள் பாணியில் தொடருங்கள் - நம்பவும் பலர் இருக்கிறார்கள் என்ற நினைப்பில் :grin:

On 2.3.2017 at 4:52 PM, ஜீவன் சிவா said:

சுனாமி நடந்ததால் திடீரென்று சென்றவர் 70 ஆயிரத்துக்கு தெரிஞ்ச அக்காவுக்கே சுடிதார் வாங்கி கொடுக்க ரெடி எண்டால் - நம்ம ஊர் சனத்துக்கு எவ்வளவு கொடுத்திருப்பார்!!!

வாழ்க மருது - உங்கள் பணிக்கு தலை வணங்குகிறேன்.

(இது நடிப்பில்லை சத்தியமா உண்மைதான் மருது அண்ணை)

இது உண்மைச் சம்பவம்.

கொழும்பில்.. நடைபாதையில்.. பயணிக்கும் போது ஒரு மாற்றுத்திறனாளி உருவில் இருந்தவர் உதவி கேட்டார். கையில் இருந்த 2 ரூபா குத்தியை கொடுத்தேன். திருப்பி மூஞ்சியில் எறியாத குறையா வீதியில் விட்டெறிந்தார்.  எனக்குப் புரியவில்லை. 1 ரூபா தங்க நிறத்தில் வந்திருக்குது.. 2 ரூபா வெள்ளின்னு எறிராரோ என்று.  பக்கத்தில் வந்த உறவுக்காரரிடம் கேட்டேன்.. என்ன சங்கதின்னு. அந்தாளுக்கு ஏலுமென்றால்.. உங்களுக்கு எழும்பி அடிச்சிருக்கும்.. இப்ப எல்லாம்.. 2 ரூபா க்கு மதிப்பே இல்லை. 100 ரூபா தான் குறைஞ்ச பிச்சை என்று. 

உண்மையை எழுதுபவர் எவருமே இது உண்மை என்று எழுதுவதில்லை 
Sorry நெடுக்ஸ் அவிழ்த்து விடுங்கோ - என்ன காசா சொத்தா? 
 
19 hours ago, வல்வை சகாறா said:

அவதானிப்புகள் நன்றாகத்தான் இருக்கின்றன. 

யார்? எவை? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நான் பிரான்சில  முதல்முதல் வாங்கிய கணணியின் பெறுமதி 15 ஆயிரம் பிராங்குகள்

ஈரோவில் 2300 ஈரோக்கள்

தற்பொழுது சாதாரணமாக 300 ஈரோக்கு ஒரு  கணணி  வாங்கலாம்.

அது போலத்தான்  கைத்தொலைபேசிகளும்....

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, nedukkalapoovan said:

1 பவுன் பீட்சா இப்பவும் அதே 1 பவுன் தான் அக்கீ. உதாரணம் கேட்டியள் இல்ல. லண்டனில் தான் 1பவுன்.. பீட்சாவே அதிகம் வாங்கலாம். வெளியிடங்களில் வாங்குவதென்ன.. கிடைப்பதே அரிது. ஆனால் லண்டனில் கிடைக்கும். 

இப்பவும் சீனி அதே விலை தான் இடையில கூடிக் குறைஞ்சுது. முட்டை அதே விலை தான். பால்... இப்ப குறைஞ்சிட்டுது. முதல் 2 லீட்டர் 1 பவுன். இப்ப அதுவும் 89 க்கு கிடைக்குது. நான் 2008 வாங்கிய லாப்டப்.. இப்ப பாதி விலையில் அதைவிடப் பண்மடங்கு அதிகரித்த திறனுடன் கிடைக்கிறது. 256 எம் பி மெமரி ஸ்ரிக். 2004 இல்.. 125 பவுன். இன்று... 16 ஜி பி... கூடினது 12 பவுன்.  சொறீலங்காவில்.............................................tw_blush:

நெடுக்ஸ்,நீங்கள் லண்டன் வரேக்குள்ள பஸ்சுக்கு 50,70 சதம் இப்ப எவ்வளவு கொடுக்கிறீங்கள்?... கண காலத்துக்குப் பிறகு ஊருக்குப் போயிட்டு றோட்டில இருந்து எல்லாத்தையும் பார்த்து ஆtw_cold_sweat: என்டு வாயைப் பிளந்திட்டு,நல்லா ஏமாந்துtw_cookie: போட்டு அதை வந்து வெட்கமில்லாமல் சொல்லவும் ஒரு தைரியம் வேண்டும்.
இங்கே இருந்து போயிட்டு ஒரு வலது குறைந்த பிச்சைக்காரனுக்கு 2 ரூபா...நானாய் இருந்தால் எழும்பி அடிச்சிருப்பன்<_<
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

நான் பிரான்சில  முதல்முதல் வாங்கிய கணணியின் பெறுமதி 15 ஆயிரம் பிராங்குகள்

ஈரோவில் 2300 ஈரோக்கள்

வாங்கிக் கண்ணாடிப் பெட்டிக்குள்ள பத்திரமா வைச்சிருப்பாரோ!??

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, கிருபன் said:

வாங்கிக் கண்ணாடிப் பெட்டிக்குள்ள பத்திரமா வைச்சிருப்பாரோ!??

15,000 பிராங்குகள் அப்போது £1,500. 

2002 இல் Comet வாங்கியது

IMG_4560.jpg

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, MEERA said:

15,000 பிராங்குகள் அப்போது £1,500. 

2002 இல் Comet வாங்கியது

IMG_4560.jpg

15, 000 பிராங்குகள் பெரிய தொகை என்று நினைத்தேன்!

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

15, 000 பிராங்குகள் பெரிய தொகை என்று நினைத்தேன்!

£1500 பெரிய தொகையில்லையா...அளவுக்கு அதிகமாய் இருந்தால் இஞ்சால கொஞ்சத்தை தட்டி விடுறது<_<

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ரதி said:

£1500 பெரிய தொகையில்லையா...அளவுக்கு அதிகமாய் இருந்தால் இஞ்சால கொஞ்சத்தை தட்டி விடுறது<_<

அளவுக்கு அதிகமாக இருப்பதில்லை. 

1995 இல் Windows 95 வந்தபோது £2000 செலவழித்து Top of the range இல் ஒரு கணிணி வாங்கினேன். மெமரி 16 MB (GB இல்லை). ஹார்ட் ட்றைவ் 512 MB என்று நினைக்கின்றேன்.

பின்னர் upgrade செய்து 2004 வரை பாவித்தேன். இன்னும் எறியவில்லை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் என்ரை திறமை பெருமையளை எடுத்து விடுவம்.:grin:

நான் 97லை எண்டு நினைக்கிறன் ஒரு கொம்பியூட்டர் வாங்கினனான்.....

அப்ப அதின்ரை விலை 5000 ஜேர்மன் மார்க்குக்கு கிட்ட முடிஞ்சுது.(கவனிக்கவும் ரெடி காசு tw_glasses: )

அப்ப  என்ரை நண்பன் நாய்பேய் ஸ்பீட்டான கொம்பியூட்டர் எண்டு வாயைப்பிளந்தவன்.:cool:

முந்தியெல்லாம் நடு ராத்திரியிலை இன்ரநெட் பாக்கிறேல்லை. ஏனெண்டால் முதலாவது பயங்கர செலவு. அதோடை இன்ரநெட் ஓன் பண்ணினவுடனை அந்த பெட்டி போடுற சத்தத்துக்கு மனுசி நித்திரைப்பாயாலை எழும்பி வந்துடும்.tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் எமது முதலாவது கணணியை (windows 98, PENTIUIM 2/3, 256MB RAM, 40GB HDD)1999 இல் அப்பா 80,000/- செலவழிச்சு வாங்கியிருந்தார். அதே வருடத்தில் தான் 135,000/- இற்கு ஒரு பஜாஜ் ஓட்டோவும் வீட்டுத் தேவைக்கு வாங்கினோம். இப்போ 30,000/- வுக்கே ஓரளவு சிறந்த கணனி ஒன்றை வாங்க முடியும்.புதிய ஓட்டோ விலை 400k/-யை தாண்டிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

Historical Data about Cost of Living by Year in Sri Lanka

Currency: LKR

Search:
Year
Price per Square Meter 
to Buy Apartment 
Outside of Centre
2016 123136.59
2015 -
2014 134126.64
2013 111983.73
2012 121204.86
2011 23598.80

Historical Data about Cost of Living by Year in United Kingdom

Currency: GBP
Search:
Year
Price per Square Meter 
to Buy Apartment 
Outside of Centre
2016 4513.02
2015 3511.27
2014 2645.77
2013 2704.57
2012 2177.15
2011 1542.53
2010 2121.43
Showing 1 to 7 of 7 entries
Showing 1 to 6 of 6 entries
 
மாஸ்கோ (ரசியா)  ரியோ டி ஜெனிரோ (பிரேசில்) 
இரண்டிலும் இதுதான் 2000-2008 இற்கும் இடையில் நடந்தது 

நீங்கள் முதலீடாளர் என்றால் முதலீடு செய்ய இப்போ இலங்கை 
சூப்பர் இடம் 
நீங்கள் நுகோர்வோராக இருந்தால் .... உங்கள் வாழ்க்கை 
ரெவெர்ஸில் சென்றுகொண்டு இருக்கும்.

பார்வையாளராக இருந்தால் ...
எல்லாம் பள பளப்பாக இருக்கும் 
புது வீதி புது பஸ் கார் கார் கடைகள் உணவகங்கள் என்று 
களை கட்டும் .......... வேலைவாய்ப்பு எனும் போர்வையின் கீழ் 
ஒரு மனிதன் சுரண்ட படுவதை காண முடியாது. 

இந்தியாவில் இது நடந்து கொண்டிருக்கும் என்று எண்ணினேன் ..
இங்கிருக்கும் இந்தியர்களுடன் பேசும்போது ... அப்படி பெரிதாக இல்லை 
ஏழை வர்க்கம் மிக பெரியது அதனால் திடீர் மாற்றம் மற்ற நாடுகள்போல் 
சாத்தியம் இல்லை என்று சொல்கிறார்கள். மெதுவாக மாறி கொண்டு இருக்கிறது என்று 
சொல்கிறார்கள். 
 
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் 23 ஆயிரத்தை 2011இல் முதலீடு செய்து இருந்தால் 
இப்போ உங்கள் இலாபம் ஒரு லட்ஷம் ரூபா.

இந்த அளவில்தான் விலைவாசியும் கூடிக்கொண்டு இருக்கும்.
வருடா வருடம் எல்லா நாட்டிலும் சனத்தொகை கூடும் 
அப்போ நுகர்வோர் எண்ணிக்கை கூடும் 

supply and Demand 

 எனும்போது சப்பிளைக்கு டிமாண்ட் கூடும். இது சாதாரணம் 
இலங்கை பிரேசில் மாஸ்கோ வில் நடந்தது நடப்பது எக்கோனிமிக் பூமிங் 
என்று சொல்வது. மாஸ்கோ ... பிரேசிலில் எதிர்ப்பாராத எண்ணெய் வளம் கண்டறியப்பட்ட நேரம் 
எண்ணெய் விலை அதி உச்சத்தில் இருந்தது ஒரு பெறல் எண்ணெய் $145- $160 வரை ஏறி இறங்கும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, ரதி said:
நெடுக்ஸ்,நீங்கள் லண்டன் வரேக்குள்ள பஸ்சுக்கு 50,70 சதம் இப்ப எவ்வளவு கொடுக்கிறீங்கள்?... கண காலத்துக்குப் பிறகு ஊருக்குப் போயிட்டு றோட்டில இருந்து எல்லாத்தையும் பார்த்து ஆtw_cold_sweat: என்டு வாயைப் பிளந்திட்டு,நல்லா ஏமாந்துtw_cookie: போட்டு அதை வந்து வெட்கமில்லாமல் சொல்லவும் ஒரு தைரியம் வேண்டும்.
இங்கே இருந்து போயிட்டு ஒரு வலது குறைந்த பிச்சைக்காரனுக்கு 2 ரூபா...நானாய் இருந்தால் எழும்பி அடிச்சிருப்பன்<_<

உங்களுக்கே தெரியல்லே.. நீங்க என்ன கேட்டீங்க.. இப்ப என்ன எழுதிறீங்கன்னு. உங்களைப் போன்ற விளப்பம் இல்லாததுகளுக்கு பதில் எழுதுவதை தவிர்ப்பது இதனால் தான். வெட்கம் ரோசம் மானம்.. தனிமனித தாக்குதல் இதனை விட்டால்.. உங்களிடம் கருத்தேதும் இல்லை. இதிலும் நீங்கள் இப்படிக் கருத்தெழுதுவதையே தவிர்க்கலாம். tw_blush:

3 hours ago, Maruthankerny said:

Historical Data about Cost of Living by Year in Sri Lanka

Currency: LKR

Search:
Year
Price per Square Meter 
to Buy Apartment 
Outside of Centre
2016 123136.59
2015 -
2014 134126.64
2013 111983.73
2012 121204.86
2011 23598.80

Historical Data about Cost of Living by Year in United Kingdom

Currency: GBP
Search:
Year
Price per Square Meter 
to Buy Apartment 
Outside of Centre
2016 4513.02
2015 3511.27
2014 2645.77
2013 2704.57
2012 2177.15
2011 1542.53
2010 2121.43
Showing 1 to 7 of 7 entries
Showing 1 to 6 of 6 entries
 
மாஸ்கோ (ரசியா)  ரியோ டி ஜெனிரோ (பிரேசில்) 
இரண்டிலும் இதுதான் 2000-2008 இற்கும் இடையில் நடந்தது 

நீங்கள் முதலீடாளர் என்றால் முதலீடு செய்ய இப்போ இலங்கை 
சூப்பர் இடம் 
நீங்கள் நுகோர்வோராக இருந்தால் .... உங்கள் வாழ்க்கை 
ரெவெர்ஸில் சென்றுகொண்டு இருக்கும்.

பார்வையாளராக இருந்தால் ...
எல்லாம் பள பளப்பாக இருக்கும் 
புது வீதி புது பஸ் கார் கார் கடைகள் உணவகங்கள் என்று 
களை கட்டும் .......... வேலைவாய்ப்பு எனும் போர்வையின் கீழ் 
ஒரு மனிதன் சுரண்ட படுவதை காண முடியாது. 

இந்தியாவில் இது நடந்து கொண்டிருக்கும் என்று எண்ணினேன் ..
இங்கிருக்கும் இந்தியர்களுடன் பேசும்போது ... அப்படி பெரிதாக இல்லை 
ஏழை வர்க்கம் மிக பெரியது அதனால் திடீர் மாற்றம் மற்ற நாடுகள்போல் 
சாத்தியம் இல்லை என்று சொல்கிறார்கள். மெதுவாக மாறி கொண்டு இருக்கிறது என்று 
சொல்கிறார்கள். 
 
 இப்படி எல்லாம் விளக்கினால்.. விளங்காது இங்க சிலருக்கு. ஏனெனில்.. அவ்வளவு சொறீலங்கா விசுவாசம். சிங்களவனே இங்கு வந்து பார்த்தால்.. மூச்சடங்கிப் போடுவான். அதுகளே சொல்லுதுகள்.. வாழ்க்கைச் செலவு எகிறிக் கிடக்குது. மகிந்தவை தூக்கி எறிஞ்சு.. இவையை கொண்டு வந்தால்.. இவையும் அதை தான் செய்யினம் என்று. ஆனால்.. எங்கட வெளிநாட்டு டமிழர்கள்.. சிலர் தான்.. இப்ப சொறீலங்கா விசுவாசத்தின் உச்சில நிற்கினம். டோல் காசு கண்ணை மறைக்குது. tw_blush::rolleyes:

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.