Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துருக்கியும்.... நானும்.  - தமிழ் சிறி. - 

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, முனிவர் ஜீ said:

தொடருங்கள்  துருக்கி பெண்கள் என்ன மாதியெண்டு சொல்லுங்கோ தம்பிக்கு 

Bildergebnis für turkise alte frau in deutshland   Bildergebnis für turkise alte frau in deutshland

Bildergebnis für turkise alte frau in deutshland

சென்ற தலைமுறையை சேர்ந்த பெண்கள்... தமது அழகில் கவனம் செலுத்துவதில்லை.
மிகவும் மொத்தமாகவும், உடைகளால்  உடம்பு முழுக்க மறைத்து.. தலையில் மொட்டாக்கு அணிந்து, முகம் தெரியக்  கூடியதாக இருப்பார்கள். இப்போதைய  இளம் பெண்கள் பலர் அப்படி இல்லை என்றாலும்.... பெற்றோர், உறவினர்கள், மதத் தலைவர்களின் கண்டனத்துக்குப் பயந்து...  அணிகின்றார்கள்.

துருக்கியில்  இந்த மொட்டாக்கு  அணியும் கலாச்சாரம் ஆரம்பத்தில் இருக்கவில்லையாம்.
பல ஆண்டுகளுக்கு முன்...  புகழ் பெற்ற துருக்கிய அரசியல் வாதி ஒருவர்,
மொட்டாக்கு அணியாத பெண்கள்... விபச்சாரிகளாக கணிக்கப் படுவார்கள் என்றதன் பின், அனைவரும் அணிய வேண்டி வந்ததாம்.

Edited by தமிழ் சிறி

  • Replies 143
  • Views 13.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Surveyor said:

என்ன மீனிங் இதுக்கு. 

சிறி அண்ணோய் எங்களுக்கு டொச் தெரியாது கண்டியளே.

9 hours ago, vaasi said:

Scheiße வை இங்கு கட் அன்ட் பேஸ்ட் செய்து பார்க்கவும் (தமிழில்) https://translate.google.ca/

டொச்லான்ட்  தெரியும் தானே Germany
 
சேர்வயர்  நீங்கள் கேட்ட  கேள்விக்கு, வாசி  சொல்லிய பதில் புரிந்திருக்கும்  என நம்புகின்றேன்.
அந்தச்  சொல்லை அவர்கள் மட்டுமல்ல பலரும் நண்பர் வட்டத்தில் கூட  சர்வ சாதாரணமாக பயன் படுத்துவார்கள். ஆனால்... துருக்கியர் இங்கு வாழ்ந்து கொண்டு, அந்தக் சொல்லுடன் வசிக்கும்  நாட்டையும் சேர்த்து திட்டும் போது... ஜேர்மன்காரனுக்கே... கோவம் வரும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Maruthankerny said:

இவர்கள் துருக்கி இல்லை ....
ஆனால் ...

துருக்கி ..... ஈராக் ... சிரியா எல்லைகளில் ஒரு தனித்துவமான இனமாக வாழ்கிறார்கள் 
இவர்களுக்கு பாரிய பழமைவாய்ந்த வரலாறு உண்டு 

இவர்கள் ஓரளவு இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றினாலும் 
எமது ஊரில் உள்ள கிறிஸ்தவம் போல் எல்லா நாடுகளும் உள்புகுத்தியதுதான் அது. 

நாடுகள் எல்லைகளை வகுத்த நேரம் இவர்கள் சரியான தலைமை இல்லாது 
நாடுகளின் அரசிலுக்குள் சிக்கிவிடடார்கள்.

கண்ணை மூடின மத வெறி இல்லாததால் 
துருக்கி ஈராக் சிரியா போன்ற நாடுகளால் எப்போதுமே 
தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறார்கள்.

தற்போது ஓரளவு ஐ ஸ் ஸ் தீவிரவாதிகளை ஓரளவு அடக்கியவர் இவர்கள்தான் என்றாலும் 
மறுபுறம் பலத்த இன்னல்களை சந்தித்தவர்களும் இவர்கள்தான்.
மதவெறி பிடித்த ஐ ஸ் ஸ் நாய்கள் குதறி குதறி கொடூரம் இழைக்க 
இவர்களின் மத சுதந்திரம் இன்னமும் காரணமாயிற்று.

துருக்கி பெண்கள் என்றால் .............
அது இன்னொரு இந்தியா என்று சொல்லலாம் 
காலையும் மாலையும் குரான் ஓதுவதும் உண்டு 
காலை எழுந்தவுடன் .... விஸ்கியில் வாய் கொப்பிளிப்பதும் உண்டு. 

வெளி உலகமே தெரியாத தவளைகளும் உண்டு ...
ஈழ தமிழரில் இருந்து .... எத்த்தியோப்பியா கறுப்பர் வரை பார்த்தவரும் உண்டு. 

துருக்கியர்கள் இஸ்லாம் மதம் சார்ந்தாலும் 
விபச்சாரம் .... குடி ... புகை இல்லாமல் இருப்பது என்றால் 
கொஞ்சம் கஷடப்படுவார்கள். 

விரிவான பதிவுக்கு,  நன்றி மருதங்கேணி.
அதிலும் அந்தக் கடைசி வரிகள், நிதர்சனமான உண்மை. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 5.3.2017 at 10:26 PM, புங்கையூரன் said:

தொடருங்கள்...தமிழ் சிறி!

பிரான்ஸில்  'அடையார்' என்று செல்லமாக அழைக்கப்படுவதும் இவர்கள் தானா?

On 5.3.2017 at 10:37 PM, vaasi said:

அவர்கள் அல்ஜீரியர்

இங்கு துருக்கியர் அதிகமாக வசிப்பது மாதிரி.... பிரான்சில்   அல்ஜீரியர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.
அல்ஜீரியரை தான்...  விசுகு, சுவி போன்றோர் சங்கீத மொழியில்  "அடையார்" என்று அழைப்பார்கள். 
நாங்கள் துருக்கியரை அழைக்க...  "தூனா"  என்ற சங்கேத மொழியை பயன் படுத்துவோம். :grin:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für old sofa

துருக்கியர்... எந்தப்  பொருள் வாங்குவதாக இருந்தாலும், தமது நாட்டை சேர்ந்தவர்களின் கடைகளிலேயே... பொருட்களை வாங்குவார்கள்.  அங்கு கிடைக்காத பொருட்களை  மட்டுமே.... மற்றைய கடைகளில் வாங்குவார்கள். தமது பணம்... தன் இனத்தவனுக்கே போய் சேர வேண்டும் என்று சொல்வார்கள். அத்துடன் தாம்  வைப்பில் இடும் பணம் கூட... துருக்கி நாட்டின் வங்கியிலேயே  சேமிப்பார்கள். 

ஒரு துருக்கி...  அதனைக் கூட நம்பாமல்,  தான்  வேலை செய்த பணத்தை எல்லாம்... வீட்டில் உள்ள சோபாவுக்குள் சேர்த்து வைத்திருந்தார். இவர் பணத்தை அங்கு வைப்பது.... இவரின் மனைவிக்கு மட்டுமே தெரியும். ஒரு வருடாந்திர லீவுக்கு.... துருக்கிக்கு மனைவியுடன் சுற்றுலா செல்லும் போது, வீட்டில் உள்ள பூமரங்களுக்கு தண்ணீர்   ஊற்றவும், இடைக்கிடை வந்து வீட்டை  கண்காணிக்கவும்.. மனைவியின் சகோதரனிடம்  (மச்சான்)  வீட்டு திறப்பை கொடுத்து விட்டு, 6 கிழமை லீவில்   துருக்கிக்கு போய் விட்டார்.

மச்சான் இவர்  வீட்டுக்கு, வந்து பார்த்தால்...  வரவேற்பறையில் வைத்திருந்த சோபா பழசாகி இருந்தது... இவரின் மனதை உறுத்தியது. அக்காவும், அத்தானும்  திரும்பி  வருவதற்கிடையில், ஒரு "இன்ப அதிர்ச்சி" கொடுப்போம் என்று விட்டு.... இவர் பணம் சேர்த்து வைத்திருந்த சோபாவை தூக்கி எறிந்து  விட்டு, புது சோபாவை தனது செலவில் வாங்கி வைத்து விட்டார். :)

அத்தான்... துருக்கியில் இருந்து வரும் நாளும்  வந்தது.  "இன்ப அதிர்ச்சி" கொடுக்கும் விடயத்தை முன்பே சொல்லக் கூடாது என்பதால்....  இவர்  புதிய சோபா வாங்கி வைத்த விடயத்தை சொல்லவில்லை. வீட்டுக்கு வந்து பார்த்த... அத்தான், அக்கா பதறிப் போய், சோபா எங்கே என்று கேட்க... அது இப்ப குப்பைக் கிடங்கில  எரிஞ்சு  சாம்பலாகி இருக்கும். எப்படி நான் வாங்கின சோபா?  கலர் பிடிச்சிருக்கா... அத்தான் என்று கேட்டார்.
அதன் பின் என்ன நடந்திருக்கும்... என்பதை நீங்களே,  ஊகித்து  அறிந்து கொள்ளுங்கள். :grin: :D:

இன்னும் வரும்...... 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

நந்தன், ராஜவன்னியன்...
அவசரப் பட்டு கலாய்க்காதீர்கள்.... இந்தப் பதிவின் முடிவில்,  "யாவும் கற்பனை"  என்று போட இருக்கின்றேன். :D: :grin:

'எலி', மாட்டிடும்னு பார்த்தா.. பொறியிலிருந்து தப்பி ஓடுதே...? ghostbuster.gif

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Maruthankerny said:

இவர்கள் துருக்கி இல்லை ....
ஆனால் ...

துருக்கி ..... ஈராக் ... சிரியா எல்லைகளில் ஒரு தனித்துவமான இனமாக வாழ்கிறார்கள் 
இவர்களுக்கு பாரிய பழமைவாய்ந்த வரலாறு உண்டு 

இவர்கள் ஓரளவு இஸ்லாம் மார்க்கத்தை பின்பற்றினாலும் 
எமது ஊரில் உள்ள கிறிஸ்தவம் போல் எல்லா நாடுகளும் உள்புகுத்தியதுதான் அது. 

நாடுகள் எல்லைகளை வகுத்த நேரம் இவர்கள் சரியான தலைமை இல்லாது 
நாடுகளின் அரசிலுக்குள் சிக்கிவிடடார்கள்.

கண்ணை மூடின மத வெறி இல்லாததால் 
துருக்கி ஈராக் சிரியா போன்ற நாடுகளால் எப்போதுமே 
தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறார்கள்.

தற்போது ஓரளவு ஐ ஸ் ஸ் தீவிரவாதிகளை ஓரளவு அடக்கியவர் இவர்கள்தான் என்றாலும் 
மறுபுறம் பலத்த இன்னல்களை சந்தித்தவர்களும் இவர்கள்தான்.
மதவெறி பிடித்த ஐ ஸ் ஸ் நாய்கள் குதறி குதறி கொடூரம் இழைக்க 
இவர்களின் மத சுதந்திரம் இன்னமும் காரணமாயிற்று.

துருக்கி பெண்கள் என்றால் .............
அது இன்னொரு இந்தியா என்று சொல்லலாம் 
காலையும் மாலையும் குரான் ஓதுவதும் உண்டு 
காலை எழுந்தவுடன் .... விஸ்கியில் வாய் கொப்பிளிப்பதும் உண்டு. 

வெளி உலகமே தெரியாத தவளைகளும் உண்டு ...
ஈழ தமிழரில் இருந்து .... எத்த்தியோப்பியா கறுப்பர் வரை பார்த்தவரும் உண்டு. 

துருக்கியர்கள் இஸ்லாம் மதம் சார்ந்தாலும் 
விபச்சாரம் .... குடி ... புகை இல்லாமல் இருப்பது என்றால் 
கொஞ்சம் கஷடப்படுவார்கள். 

நன்றி மருதர் உங்கள் விளக்கத்திற்கு  கடைசியில்  நீங்கள் சொன்னதை அதிகம் கேள்வி யுற்ரு இருக்கிறேன் 

ஐ எஸ் போராளிகல் இவர்களை பிடித்டு சென்று அங்கு இருக்கும் போராளிகளுக்கு இவர்களை அவர்களின் காம பசிக்கு இரையாக்கி விடுவதாக் ஒரு கட்டுரையில் படித்தேன்  அதனால் இவர்கள் அவர்களுக்கு எதிராக போராடுவதாகவும் படித்த  ஞாபகம் 

15 hours ago, Maruthankerny said:

எங்களையும் ஐரோப்பியர்களையும் இணைக்கும் பாலமாக 
இவர்கள்தான் இருக்கிறார்கள்  (ஆசியா - ஐரோப்பா) 

ஆதலால் இவர்களிடம் இரண்டு பக்கமும் உண்டு 

என்னோடு ஒரு துருக்கி பெண் படித்தார் .... ஆங்கிலத்தில் தண்ணி போல எழுதுவார் 
இவரிடம் கேட்டுத்தான் நான் சில கட்டுரைகளை எழுதி இருக்கிறேன் 
எனது எழுத்துக்களை அவரை கொண்டுதான் திருத்துவேன் ... எனது எல்லா பேப்பருக்கும் 
எ எடுத்திருந்தேன் ... இவர்தான் முக்கிய காரணம்.

ஆனால் வெள்ளி சனி வந்தால் .....
எமது அம்மன் கோவிலில் பேய் ஆடுபவர்கள் போல் 
ஞாயிறு காலையில்தான் கொஞ்சம் அடங்கும். 
ஞாயிறு பின்னேரம் என்றால் லைபிரேரியில் போய் இருந்துவிடுவார். 

இப்போ மெட்ரானிக் என்ற ஒரு பெரிய மருத்துவ கொம்பனி ஒன்றில் 
முக்கிய பொறுப்பில் இருக்கிறார் ..... இவரது படிப்புக்கு எடுத்த லோன் எல்லாம் 
அந்த கொம்பனியே கட்டிதான் இவரை வேலைக்கு எடுத்தார்கள்.

11 hours ago, குமாரசாமி said:

இப்ப இருக்கிற பெரும்பாலான துருக்கி பெண்கள்......

கலியாணத்துக்கு முன்னமே கண்ணை செருகும் சந்தர்பம் வந்தால் செருக தவறமாட்டினம். :cool:

அதோடை பன்றி இறைச்சி மட்டும் சாப்பிடமாட்டினம். மற்றும்படி குரான்லை என்ன செய்யக்கூடாது எண்டு சொல்லியிருக்கோ அவ்வளவத்தையும் வெரி சிம்பிளாய் செய்வினம்..:grin:

ம் உன்மைதான் அறிந்து இருக்கிறன்  ஆனால் இன்னும் ஒன்றையும் பார்க்க கிடைக்கல ( துருக்கி அழகிகளின் அழகை )

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முனிவர் ஜீ said:

ம் உன்மைதான் அறிந்து இருக்கிறன்  ஆனால் இன்னும் ஒன்றையும் பார்க்க கிடைக்கல ( துருக்கி அழகிகளின் அழகை )

கண்போன போக்கிலே கால் போகலாமா கால் போன போக்கிலே மனம் போகலாமா 

மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா.....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Maruthankerny said:

துருக்கியர்கள் இஸ்லாம் மதம் சார்ந்தாலும் 
விபச்சாரம் .... குடி ... புகை இல்லாமல் இருப்பது என்றால் 
கொஞ்சம் கஷடப்படுவார்கள். 

உண்மை 

நானும் 2003இல் இஸ்தான்புல்லிற்கு சென்றிருந்தேன்.
இங்கு எல்லாவித களியாட்டங்களும் உண்டு. இதில் வியப்பென்னவென்றால் இங்கு உள்ளே கபரே விடுதிகளில் தமிழர் ஒருவர் முகமையாளராக இருந்தார். பல தமிழனாட்டு மேல்தட்டு ஆண்கள் / பெண்கள் இங்கு வந்து போவார்கள்.

பெல்லி டான்ஸில் இவர்களை மிஞ்ச முடியாது.

1 hour ago, முனிவர் ஜீ said:

ம் உன்மைதான் அறிந்து இருக்கிறன்  ஆனால் இன்னும் ஒன்றையும் பார்க்க கிடைக்கல ( துருக்கி அழகிகளின் அழகை )

டுபாயில் இருந்து சுல்தானாவின் அழகை பார்க்கவில்லை என்றால் என்னப்பா இது.
 
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

உண்மை 

நானும் 2003இல் இஸ்தான்புல்லிற்கு சென்றிருந்தேன்.
இங்கு எல்லாவித களியாட்டங்களும் உண்டு. இதில் வியப்பென்னவென்றால் இங்கு உள்ளே கபரே விடுதிகளில் தமிழர் ஒருவர் முகமையாளராக இருந்தார். பல தமிழனாட்டு மேல்தட்டு ஆண்கள் / பெண்கள் இங்கு வந்து போவார்கள்.

பெல்லி டான்ஸில் இவர்களை மிஞ்ச முடியாது.

டுபாயில் இருந்து சுல்தானாவின் அழகை பார்க்கவில்லை என்றால் என்னப்பா இது.
 
உண்மையாக இருக்கும் ...
இரண்டு மாதம் முன்பு இரவு விடுதியில் துப்பாக்கி சூடு நடந்த போது 
இரண்டு (ஒரு ஆண் + ஒரு பெண்) ஹிந்தி காரர்களும் இறந்தார்கள். 
அவர்கள் பாலிவுட் சினிமா காரர்கள் என்று நினைக்கிறேன்.

இப்போ ..
சுசி ட்விட்டுடு போடுவதால் 
என்ன சூட்டிங் நடக்கிறது என்பதை புரிய கூடியதாக இருக்கிறது. 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

கண்போன போக்கிலே கால் போகலாமா கால் போன போக்கிலே மனம் போகலாமா 

மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா.....!  tw_blush:

அழகை ரசிப்பது அவ்வளவு குற்றமா அண்ணை tw_blush:

3 hours ago, colomban said:

டுபாயில் இருந்து சுல்தானாவின் அழகை பார்க்கவில்லை என்றால் என்னப்பா இது.

எங்கப்பன் எல்லாம் ஒரே இருட்டா இருக்கு எட்டிப்பார்த்தால் ஒரே வெட் அதால கப்சிப்:rolleyes:

ஆனால் மற்ற நாடுகளுக்கு நோ தடை  என் ஜாய்tw_blush:

துருக்கி

இதுவரை நான்கு தடவைகள் போய் வந்துள்ளேன்.

எனக்கு பிடித்த ஒரு நாடு
அவர்களது கலைகள், கலாச்சாரம், பழைய கட்டிடங்கள் - இன்னுமொரு இந்தியா.
ஆனால் இந்தியாவில் உள்ள பயம் இங்கில்லை.

கப்படோக்கியாவுக்கு போய் காலை சூரிய உதயத்தை பலூனில் இரண்டாயிரம் அடி உயரத்தில் இருந்தபடி பார்க்க வேண்டும் - அவ்வளவு அழகு.

Bilderesultat for kappadokia bilder

Bilderesultat for kappadokia bilder

Bilderesultat for kappadokia bilder

பி கு : இவை நான் எடுத்த படங்கள் இல்லை.

Bilderesultat for kappadokia bilder

இந்த மலைகளில் உள்ள குகைகள் வேறு ஒன்றும் இல்லை - வீடுகள் + தேவாலயங்கள்தான்

அதாவது முகலாயர்களின் ஆக்கிரமிப்பிற்கு பயந்த கிறிஸ்துவ மக்கள் + பாதிரியார்கள் வாழ்ந்த இடம்.

நான் பார்த்த நாடுகளில் என்னை கவர்ந்த சில நாடுகளில் துருக்கியும் ஒன்று.

தமிழ் சிறி 
தயவு செய்து சிலர் தவறாக நடப்பதற்காக ஒரு சமூகத்தையே அல்லது ஒரு நாட்டையோ கேவலமாக பார்க்க வேண்டாம்.

நாமும் ஐரோப்பாவில் வந்து குடியேறியவர்கள்தான் - எம்மவர் செய்யாத திருகுதாளமா?
ஆனால் நாம் எல்லாருமே அப்படியானவர்களா?
எம்மை எப்படி துருக்கியர், அல்பேனியர் அழைக்கின்றார்கள் என்று தெரிந்தால் நாமும் கவலைப்படுவோம்.

துவேசம் வேண்டாமே - ப்ளீஸ்

  • கருத்துக்கள உறவுகள்

சில வாரங்களுக்கு   முன்னர் துருக்கி நாடடைச் சேர்ந்தவர்களின்  அணி ஒன்றுக்கும் 

ஜெர்மன் அணி ஒன்றுக்கும் இடையில்  உதைபந்தாட்டம்  நடைபெற்றது.

விளையாட்டரங்கம் துருக்கி அணியினருடையது.

நான் மத்தியஸ்த்தர்.
 
விளையாடுபவர்களின் அடையாள அட்டைகளை எல்லாம் சரி பார்த்துவிட்டு

மைதானத்தை நோக்கிச் சென்றேன்.

விளையாட்டுத் தொடங்க முதல் மைதானத்தின் கரையில் ஒரு ஓரமாக
விளையாடுபவர்கள் தங்களைத் தயார் செய்து கொண்டிருந்தார்கள்

அப்போது துருக்கி அணியின் செயற்பாட்டாளர்   ஒருவர் என்னை நோக்கி

தன் கைகளை தலைக்கு மேலே நீட்டியபடி தன் பாஷையில்

எதோ உரத்த குரலில் கூறியபடி  ஓடி வந்தார்.
என்னை அண்மித்ததும் நீ பார்த்தாய் அல்லவா..... நீ பார்த்தாய் அல்லவா..... என்று கத்தினார்-

அந்த ஜெர்மன் நாட்டுப் பந்துத் தடுப்பாளருக்கு நீ சிவப்பு மட்டை கொடுத்து உடனே அவனை மைதானத்தை விட்டு அகற்று - அவன் பெரிய தப்புச் செய்து விட்டான்

அல்லாஹ்வை அவமதித்து விட்டான் என்கிறார்.

எனக்கு ஒன்றும் விளங்கவில்லை விளையாட்டே  

இன்னும் தொடங்கவில்லை.அதற்குள் சிவப்பா ...

நான் ஒன்றையும் அப்படி அவதானிக்க வில்லையே என்றேன்.

இல்லை நீ காணாவிட்டால் பரவாயில்லை  நான் காட்டுகின்றேன்.

அவன் என்ன செய்தான் என்று நீ வந்து பார் என்றான்.  

நடந்தது என்னவென்றால் ஜெர்மன் நாட்டுக் கோல் தடுப்பாளன்

மைதானத்தின் அருகே ஒரு ஓரமாக  மூலையில் உச்சா அடித்துவிட்டானாம்-

அது அல்லாஹ்வின் மேல் உச்சா அடித்தமாதிரியாம் .:11_blush:

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, வாத்தியார் said:

உருவமில்லாத ஒருவர் மீது ...எப்படி உச்சா அடிக்க முடியும் என்று நீங்கள் சொல்லவில்லையா வாத்தியார்? :cool:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, ஜீவன் சிவா said:

Bilderesultat for kappadokia bilder

இந்த மலைகளில் உள்ள குகைகள் வேறு ஒன்றும் இல்லை - வீடுகள் + தேவாலயங்கள்தான்

அதாவது முகலாயர்களின் ஆக்கிரமிப்பிற்கு பயந்த கிறிஸ்துவ மக்கள் + பாதிரியார்கள் வாழ்ந்த இடம்.

நான் பார்த்த நாடுகளில் என்னை கவர்ந்த சில நாடுகளில் துருக்கியும் ஒன்று.

தமிழ் சிறி 
தயவு செய்து சிலர் தவறாக நடப்பதற்காக ஒரு சமூகத்தையே அல்லது ஒரு நாட்டையோ கேவலமாக பார்க்க வேண்டாம்.

நாமும் ஐரோப்பாவில் வந்து குடியேறியவர்கள்தான் - எம்மவர் செய்யாத திருகுதாளமா?
ஆனால் நாம் எல்லாருமே அப்படியானவர்களா?
எம்மை எப்படி துருக்கியர், அல்பேனியர் அழைக்கின்றார்கள் என்று தெரிந்தால் நாமும் கவலைப்படுவோம்.

துவேசம் வேண்டாமே - ப்ளீஸ்

நீங்கள் ஒரு நடுநிலைவாதியென்பது அனைவருக்கும் தெரிந்தவிடயம்.

அண்மைக்கால/ இன்றைய உலகச்செய்திகளை ஒழுங்காக படித்து விட்டு கருத்தெழுத வாருங்கள்.

ஒருசில விடயங்கள் தெரியாவிட்டால் பல திரிகளிலிருந்து ஒதுங்கியிருங்கள்.

முந்திரிக்கொட்டை மாதிரி முன்னுக்கு வராதீர்கள்.

துருக்கியர்களின் துவேசத்தைப்பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?

நாங்கள் இங்கு  உலக அரசியலும் உலக வரலாறுகளும் தெரியாமல் கருத்தெழுதுபவர்கள் அல்ல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, முனிவர் ஜீ said:

------

ம் உன்மைதான் அறிந்து இருக்கிறன்  ஆனால் இன்னும் ஒன்றையும் பார்க்க கிடைக்கல ( துருக்கி அழகிகளின் அழகை )

முனிவர் ஜீ.... ப்ளீஸ்...  அந்த ஆசையை,  விட்டுடுங்கோ... :rolleyes:
இங்கு வந்த ஆரம்பத்தில்... இலங்கை ஐயர் பெடியன் ஒருவன், 
துருக்கி பெட்டையை  காதலித்து, அவளுடன்  ஓடி விட்டான். 
காணாமல் போன அந்தப் பெண்ணின்...  தாய், தகப்பன், சொந்தக்காரன், அவர்களுக்கு தெரிந்த துருக்கி எல்லாமாக 50 பேரளவில்... ஐயர் வீட்டின் முன் கையில் கிடைத்த  ஆயுதங்களுடன் வந்து, சத்தம் போட்டு நாறப் பண்ணி விட்டார்கள். :)  

ஓடிய துருக்கிப்  பெண்ணை.... தம் இனத்தில், யாரும் கலியாணம் கட்ட மாட்டார்கள் என்று,
ஐய்யர் பெடியனுக்கு.... துருக்கி முறைப்படி சுன்னத்து  சடங்கு செய்து,  கலியாணம் கட்டி வைத்து விட்டார்கள்.
இதை நினைத்தால்... எதிரே துருக்கிப் பெண் வந்தால், நாம்.... தலையை குனிந்து கொண்டு போவதுதான் புத்திசாலித்தனம். :grin:

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஜீவன் சிவா said:

Bilderesultat for kappadokia bilder

இந்த மலைகளில் உள்ள குகைகள் வேறு ஒன்றும் இல்லை - வீடுகள் + தேவாலயங்கள்தான்

அதாவது முகலாயர்களின் ஆக்கிரமிப்பிற்கு பயந்த கிறிஸ்துவ மக்கள் + பாதிரியார்கள் வாழ்ந்த இடம்.

நான் பார்த்த நாடுகளில் என்னை கவர்ந்த சில நாடுகளில் துருக்கியும் ஒன்று.

தமிழ் சிறி 
தயவு செய்து சிலர் தவறாக நடப்பதற்காக ஒரு சமூகத்தையே அல்லது ஒரு நாட்டையோ கேவலமாக பார்க்க வேண்டாம்.

நாமும் ஐரோப்பாவில் வந்து குடியேறியவர்கள்தான் - எம்மவர் செய்யாத திருகுதாளமா?
ஆனால் நாம் எல்லாருமே அப்படியானவர்களா?
எம்மை எப்படி துருக்கியர், அல்பேனியர் அழைக்கின்றார்கள் என்று தெரிந்தால் நாமும் கவலைப்படுவோம்.

துவேசம் வேண்டாமே - ப்ளீஸ்

ஜீவன் சிவா....
எனக்கு... மிக நெருங்கிய நண்பர்களாக, இரண்டு துருக்கியர் உள்ளார்கள்.
நட்பு  என்றால்.. அவர்கள் எனது வீ ட்டிற்கு வருவது,  நாம் அவர்களது வீட்டிற்குப் போய்  வரும் அளவிலான நட்பு.
ஆனால்... 85 வீதமான துருக்கியர் சுயநலம் மிக்கவர்களும், மற்றவனை  எந்த நாட்டவராக  இருந்தாலும், மட்டம் தட்டி, தமது காரியத்தை சாதிப்பதிலேயே குறியாக இருப்பார்கள். அதனைப் பற்றி... கீழே விரிவாக எழுதுகின்றேன். அதன்  பின், புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகின்றேன். :) 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für nadarajar    Bildergebnis für mouse temple in jaipur

பொதுவாக..... ஒரு துருக்கி இருந்தால் அமைதியாக "கப் சிப்" என்று நல்ல பிள்ளையாக இருப்பான். இரண்டு பேர் சேர்ந்தால்...  தமது நாடு, மதம் தான் சிறந்தது என்று எமக்கு, வகுப்பு எடுக்க ஆரம்பிப்பான்.  நாலைந்து பேர் சேர்ந்தால்.... மற்றவனின் நாட்டையும், மதத்தையும், இனத்தையும் கேவலப் படுத்தி கதைக்க ஆரம்பிப்பார்கள்.

ஒருமுறை  இப்படித்தான்  ஜேர்மன் தொலைக்காட்சியில்  மத சம்பந்தமான நிகழ்ச்சி ஒன்றில்... மேலே  உள்ள கோவிலின் காணொளி போன்ற  ஒன்றை...  காட்டினார்கள்.  ஒழுங்கான இனம் என்றால், அதனைப் பார்த்து விட்டு அது அந்த நாட்டின் மத நம்பிக்கை என்று விட்டு, அடுத்த வேலையை பார்க்கப் போயிருப்பார்கள். ஆனால்.. துருக்கிக்கு, என்னை மட்டம் தட்ட இதனை பயன்படுத்தி....

1) நீங்கள், எலியை கும்பிடுற ஆக்கள்.

2) உங்களுடைய கடவுள்...   "சேர்ட்" போடாமல் வெறும் மேலுடன்  இருப்பதை பார்க்க, அருவருப்பாக உள்ளது என்று...  விஜயகாந்த் ஸ்ரைலில் துப்பியும் காட்டுவார்கள். 

3) உங்கள் சமயத்தில்... பெண்களும்  கடவுளாக இருக்கிறார்கள். அதனால் ஆன் கடவுளுக்கு ஒரே கொண்டாட்டம்.

4) மாடும் உங்களுக்கு... கடவுளா?  போன்ற லூசுத்தனமான கேள்விகளை கேட்டு, வெறுப்பை  காட்டுவார்கள்.

ஈழப் போர் நடந்த  போது... துருக்கியும்,  மறை முகமாக இலங்கைக்கு உதவி செய்த நாடு என்ற வகையில், இலங்கை அரசின் செய்திகளையே... துருக்கிய ஊடகங்களும் வெளியிடுவதால், தமிழர்கள் எல்லோரும் பயங்கரவாதிகள் என்றே சொல்வார்கள். இந்த விடயத்தில் குர்திஸ் துருக்கிகள் எமது போராட்டத்தை  விளக்கி சொன்னாலும், கடைசியாக எமக்காக  கதைத்த குறத்திற்க்காக அவர்களுடனும் சண்டைக்குப் போகின்றவர்கள் தான்... இந்த துருக்கிகள்.

இப்படிப் பட்ட  அவர்களிடம்... எனக்கு, எந்தக் காலத்திலும் நல் எண்ணம் ஏற்பட மாட்டாது  என்பது தான் உண்மை. 

இன்னும் வரும்.....    

Edited by தமிழ் சிறி

1 hour ago, தமிழ் சிறி said:

நான் பழகிய வரையில் பெரும்பாலான இஸ்லாமியர்கள் (ஒரு சிலரை தவிர) தங்களது மதம் தான் புனிதமானது என்றும் மற்ற மதங்கள் எல்லாம் கீழ்தரமானவை என்று வாதிடுவார்கள். ஒருவருக்கு தனது மதத்தில் பற்று இருப்பது சரிதான். ஆனால் அவர்கள் மற்ற மதங்களை மட்டம் தட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

சிறி அண்ணை, நீங்கள் எழுதியதில் எந்த விதமான துவேஷ கருத்துக்களும் இல்லை.

எல்லா இடங்களிலும் வேற்று இன மக்களை, அவர்களின் இனம் மொழி சார்ந்து சுருக்கி அழைக்கும் தன்மை காணப்படுகிறது. நான் இருக்கும் நாட்டில் கூட மலையாளிகளை "மானா" என்றும் பிலிப்பினியை "பீனா"  என்றும் சிங்களவர்களை "சீனா" என்றும் எல்லா தமிழ் சனமும் தங்களுக்குள் அழைக்கிறவை. இது ஒரு துவேஷ தன்மை இல்லை. இதே போல அவர்கள் எங்களை (தமிழர்களை) "தானா" என்று தங்களுக்குள் அழைத்தால் கூட வருத்தப்பட ஒன்றுமில்லை. 

இது தெரியாமல் சிலர்  துவேசம் அது இது எண்டு கதை அளக்கத்தான் சரி.

இதைப்பற்றி கவலைப்படாமல் நீங்கள் தொடருங்கள்.... காத்திருக்கிறோம் ..

Edited by Surveyor

8 minutes ago, Surveyor said:

நான் பழகிய வரையில் பெரும்பாலான இஸ்லாமியர்கள் (ஒரு சிலரை தவிர) தங்களது மதம் தான் புனிதமானது என்றும் மற்ற மதங்கள் எல்லாம் கீழ்தரமானவை என்று வாதிடுவார்கள். ஒருவருக்கு தனது மதத்தில் பற்று இருப்பது சரிதான். ஆனால் அவர்கள் மற்ற மதங்களை மட்டம் தட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தமிழசிறி -மன்னிக்கவும்
உங்கள் திரியை ஒரு விவாத மேடையாக்க விரும்பவில்லை.
அப்படி திசை திரும்புவதாக தோன்றினால் சொல்லவும் - பதிவை எடுத்துவிடுகின்றேன்.

அவர்களுக்கு அவர்களது மதம், மொழி, இன அடையாளங்கள் பெரியது.
நாமும்தான் தமிழர் என்றும் இந்து என்றும் மார் தட்டுகிறோமே - இது மட்டும் சரியா என்பதுதான் எனது கேள்வி.
நாம் மற்றவர்களை விட எந்த விதத்திலும் மேன்மையானவர்கள் இல்லை.
எல்லாரும் சமமே. 

முடிச்சவுக்கி மொள்ளைமாரி எமது சமூகத்தில் இருப்பதுபோல அவர்கள் சமூகத்திலும் இருப்பார்கள். அதற்காக அந்த சமூகமே கேவலமானது எனும் கருத்துடன்தான் நான் உடன்படவில்லை.

யாதும் ஊரே யாவரும் கேளிர் - கணியன் பூங்குன்றனார் // புறநானூறு

யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

பொருள்

எல்லா ஊரும் எம் ஊர்
எல்லா மக்களும் எம் உறவினரே
நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை
துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை
சாதல் புதுமை யில்லை; வாழ்தல்
இன்பமென்று மகிழ்ந்தது இல்லை
வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை
பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல
இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று
தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம்
ஆதலினால்,பிறந்து வாழ்வோரில்
சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை
பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.

இதுதான் நான் சொல்ல வந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
On 3/6/2017 at 10:45 PM, Maruthankerny said:

எங்களையும் ஐரோப்பியர்களையும் இணைக்கும் பாலமாக 
இவர்கள்தான் இருக்கிறார்கள்  (ஆசியா - ஐரோப்பா) 

மருத‌ன்கேணி கூறியது போல் இது ஆசியா, ஐரோப்பாவிற்கு ஒர் பாலமாகவே உள்ளது.

80 களில் இலங்கையில் இருந்து செல்லும் பெரும்பாலன இளைஞ‌ர்கள் இந்த இஸ்தான்புல் ரூட்டையே பாவித்தார்கள். (ஈரான் ஊடக) கூடுதலாக சிங்களவர்கள் இத்தாலி சென்றடைய இலகுவாக இருந்தது. இங்கிருந்து பல்கேரியாவிற்கு பஸ்சில் செல்லலாம். (90களின் பின் பெரும்பாலும் மொஸ்கோ‍‍ ரூட்)

பணம் இருந்தால் இங்கு எதுவும் செய்யலாம். 

ஐரோப்பாவின் நேயாளியான துருக்கியில் பணவீக்கம் அதிகம். லீரா எனப்படும் நோட்டே (ஆரம்பா கால இத்தாலியன் லீரா போன்று) இங்கு பாவிக்கப்படுகின்றது. 
ஒரு மில்லியன் லீரா போன்றா நோட்டுக்கள் எல்லாம் பாவிக்கப்டுகின்றது.ஒரு வேளை இப்போது யூரோவுடன் pact ஆக இருக்கலாம். 

இது ஒர் பழையா கிறிஸ்தவ நாடு. இஸ்லாம் ஆக்கிரமித்துக் கொண்டது. பள்ளிவாசல்கள் எல்லாம் தேவலாயம் போன்று இருக்கும்.  வேதகமத்தில் புனித பவுல் எழுதிய நிருபமான  எபேசுவுக்கு எழுதிய நிருபம், இங்குள்ள சபைக்கே எழுதப்பட்டது.
 
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

முனிவர் ஜீ.... ப்ளீஸ்...  அந்த ஆசையை,  விட்டுடுங்கோ... :rolleyes:
இங்கு வந்த ஆரம்பத்தில்... இலங்கை ஐயர் பெடியன் ஒருவன், 
துருக்கி பெட்டையை  காதலித்து, அவளுடன்  ஓடி விட்டான். 
காணாமல் போன அந்தப் பெண்ணின்...  தாய், தகப்பன், சொந்தக்காரன், அவர்களுக்கு தெரிந்த துருக்கி எல்லாமாக 50 பேரளவில்... ஐயர் வீட்டின் முன் கையில் கிடைத்த  ஆயுதங்களுடன் வந்து, சத்தம் போட்டு நாறப் பண்ணி விட்டார்கள். :)  

ஓடிய துருக்கிப்  பெண்ணை.... தம் இனத்தில், யாரும் கலியாணம் கட்ட மாட்டார்கள் என்று,
ஐய்யர் பெடியனுக்கு.... துருக்கி முறைப்படி சுன்னத்து  சடங்கு செய்து,  கலியாணம் கட்டி வைத்து விட்டார்கள்.
இதை நினைத்தால்... எதிரே துருக்கிப் பெண் வந்தால், நாம்.... தலையை குனிந்து கொண்டு போவதுதான் புத்திசாலித்தனம். :grin:

ஐயோ வேண்டாம் சாமி நான் சுத்த சைவ பழம்   அமெரிக்கா பக்கம் பார்ப்பம் என்ன tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

இலண்டனில் துருக்கிகள் வாழும் இடத்திற்கு கிட்ட வசிக்கவில்லை என்பதால் சராசரி துருக்கிகளைப் பற்றி அவ்வளவு தெரியாது. ஜேர்மனியில் அவர்கள் எக்கச்சக்கம் என்பதால் பல விடயங்களை தமிழ் சிறி அண்ணா தொடர்ந்தும் சுவைபடத் தருவார் என்று எதிர்பார்க்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, colomban said:

மருத‌ன்கேணி கூறியது போல் இது ஆசியா, ஐரோப்பாவிற்கு ஒர் பாலமாகவே உள்ளது.

80 களில் இலங்கையில் இருந்து செல்லும் பெரும்பாலன இளைஞ‌ர்கள் இந்த இஸ்தான்புல் ரூட்டையே பாவித்தார்கள். (ஈரான் ஊடக) கூடுதலாக சிங்களவர்கள் இத்தாலி சென்றடைய இலகுவாக இருந்தது. இங்கிருந்து பல்கேரியாவிற்கு பஸ்சில் செல்லலாம். (90களின் பின் பெரும்பாலும் மொஸ்கோ‍‍ ரூட்)

பணம் இருந்தால் இங்கு எதுவும் செய்யலாம். 

ஐரோப்பாவின் நேயாளியான துருக்கியில் பணவீக்கம் அதிகம். லீரா எனப்படும் நோட்டே (ஆரம்பா கால இத்தாலியன் லீரா போன்று) இங்கு பாவிக்கப்படுகின்றது. 
ஒரு மில்லியன் லீரா போன்றா நோட்டுக்கள் எல்லாம் பாவிக்கப்டுகின்றது.ஒரு வேளை இப்போது யூரோவுடன் pact ஆக இருக்கலாம். 

இது ஒர் பழையா கிறிஸ்தவ நாடு. இஸ்லாம் ஆக்கிரமித்துக் கொண்டது. பள்ளிவாசல்கள் எல்லாம் தேவலாயம் போன்று இருக்கும்.  வேதகமத்தில் புனித பவுல் எழுதிய நிருபமான  எபேசுவுக்கு எழுதிய நிருபம், இங்குள்ள சபைக்கே எழுதப்பட்டது.
 
இதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது ...... ஆனால் புறணிக்கவும் முடியாது.
இஸ்லாமும் கிறிஸ்தவமும் யுடிசமும் கிட்டதட்ட ஒரே  இடத்தில் தோன்றியிருக்கின்றது 
மாறி மாறி அங்கும் இங்கும் திரிந்து இருக்கின்றது ஆகவே வரலாறு மாறி மாறி வருகிறது 

ஆனால் உலகின்  நீண்டல்கால ராஜ்யமான ஓர்தமன் ராஜ்ஜியம் இஸ்லாம் தழுவியதே 
ஒர்த்தமனானின் எச்சமாகவே இன்றைய துருக்கி இருக்கிறது ... துருக்கியின் தேசிய கொடிகூட 
ஓர்தமானை தழுவியதே 

இப்போது துருக்கியில் இருக்கும் கிறிஸ்தவம் மாறி மாறி வந்த ஐரோப்பிய படைஎடுப்பால் 
ஊடுருவியதுதான் (பைபிள் கால கிறிஸ்தவம் பின்னைய ஒர்த்தமான் ராஜ்ஜியத்தால் அகற்றப்படுகிறது) 
ஒர்த்தமான் ராஜ்ஜியம் நீண்ட காலத்திட்கு நிலைத்ததட்கு இதுவும் ஒரு காரணம் 
அவர்கள் மற்றைய சமயங்களை பிற்காலத்தில் அழிக்க முற்படவில்லை மாறாக இஸ்லாத்திட்கு கீழ்ப்பட்டு 
கூடிய வரி போன்ற உடன்படிக்கைகள் மூலம் ஏற்றுக்கொள்கிறார்கள் 
கூடிய வரி மூலம் பணம் வருவதால் ...... அது விஸ்திரம் ஆவதை ஏற்றுக்கொள்கிறார்கள். 

துருக்கியின் வரலாறை படித்து ஞாபகத்தில் வைத்திருக்க கொஞ்சம் கஸ்ட்ட படணும் 
ஒரே தில்லு முல்லு நிறைந்து இருக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.