Jump to content

என் முதலாவது காதலி...!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

 

என் முதலாவது காதலியே...!

உன்னை நெஞ்சோடு…,

இறுக்கமாக அணைத்த நாள்,

இன்னும் நினைவிருக்கின்றது!

 

நீ…,!

எனக்கு மட்டுமே என்று..,

பிரத்தியேகமாக...

படைக்கப் பட்டவள்!

 

உனது அறிமுகப் பக்கத்தில்,

எனது விம்பத்தையே தாங்குகிறாயே!

இதை விடவும்…,,

எனக்கென்ன வேண்டும்?

உனது நிறம் கறுப்புத் தான்!

அதுக்காக….,

அந்தக் கோபாலனே கறுப்புத் தானே!

அதுவே உனது தனித்துவமல்லவா?

 

உன்னைப்  பற்றி…,

எனக்கு எப்பவுமே பெருமை தான்!

ஏன் தெரியுமா?

ஜனநாயகமும்...சோசலிசமும்,

உடன் பிறந்த குழந்தைள் போல..

உன்னோடு ஒன்றாகப் பிணைந்திருக்கின்றனவே!,

உலக அதிசயங்களில் ஒன்றல்லவா, இது?

 

என்னவளே...!

தோற்றத்தில்…,

நீ கொஞ்சம் பெரிசு தான்!

அதுவும் நல்லது தானே!

அதிலும்,,,

ஒரு வசதி தெரியுமா?

எந்த தேசத்தின் பணமானாலும்,

உனது ஆடைகளுக்குள் இரகசியமாக,

மறைத்து விடலாமே!

 

உன்னை அடைவதற்கு..,

நான் பட்ட பாடு…,

உன்னைத் தொடுவதற்கு,

நான் கடந்த தடைகள்,

அப்பப்பா..!

இப்போது நினைத்தாலும்,

இதயத்தில் இலேசாக  வலிக்கிறதே!

விதானையிடம் கூட…,

கையெழுத்துக்கு அலைந்தேன்!

விதானையின் விடுப்புக்களுக்கு…,

விடை சொல்லிக் களைத்தேன்!

பாம்புகள் போல நீண்ட வரிசைகளில்,

பல பகல் பொழுதுகள்..,,

பைத்தியக் காரனாய்க்காத்திருந்தேன்!

 

நாளைக்கு வந்திருவாள் என்றார்கள்,

நாலு நாட்கள் எடுத்தது!

 

சில வேளைகளில்..,

உனது அழகிய மேனியில்..

அன்னியர்கள் சிலர்,

ஓங்கிக் குத்துவார்கள்!

அந்த வேளைகளில்..,

உன்னை விடவும்,

எனக்குத் தான் வலிக்கும்!

 

ஒரு நாள்…,

உன்னை அந்நியர்களின் வீட்டில்,

அனாதரவாய்க் கை விட்டேன்!

எனக்கு மட்டும்,விருப்பமென்று நினைத்தாயா?

உன்னை விட்டுத் தான் ஆக வேண்டும்!

 

எனக்கோ,

இரவு முழுவதும் தூக்கமேயில்லை!

எப்போது விடியும் என்ற ஏக்கத்தில்..,

இமைகளை மூட முடியவில்லை!

 

விடிந்ததும்..,

ஓடோடி வந்தேன் உன்னிடம்!

 

உன்னைக் காணவில்லை என்றார்கள்!

இதயத்தின் துடிப்பே,,,.

அடங்கிப் போன உணர்வு!

 

இரண்டு நாட்களின் பின்னர்..,

அந்த உத்தியோகத்தரின்,

'மூன்றே முக்கால்' கால் மேசைக்கு,,,

உனது சக தோழிகளுடன்..,

நாலாவது காலாகி.....

நீ  மிண்டு கொடுத்துக் கொண்டிருந்தாய்!

 

அப்போதும் கூடப் பார்..!

உனது கறுப்பு நிறம் தான்…,

உன்னை மீட்டுத் தந்தது!

 

பத்து வருடங்களின் பின்னர்…,

 

இன்னொரு காதலி வந்தாள்!

 

நீ எனது முதல் காதலியல்லவா?

உன்னையும் வைத்துக் கொள்ளத் தான் ஆசை!

கெஞ்சிக் கேட்டும் பார்த்தேன்!

வஞ்சகர்கள் அவர்கள்!

இரண்டு லட்சம் கேட்டார்கள்!

 

இரண்டு லட்சத்தை..,

எங்கே தேடுவேன்!

 

அந்த இரண்டு லட்சம் உனக்கல்லவாம்!

என் சொந்தங்கள் மீது,,,,

எரி குண்டுகள் போடவாம்!

 

ஒரு நிமிடம் தான் சிந்தித்தேன்!

உனது முகம் வாடியது தெரிந்தது!

இறுக்கமாய் மனதை வரித்து,

உன்னிடம் சொன்னேன்…!

 

சரி தான் …. போடி!

 

(உருவகக் கவிதை)

a-contemporary-ordinary-sri-lankan-passp

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கருப்புக் கடவுச் சீட்டு கலக்குது....!  tw_blush: 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆ..... முதல் காதலி
நம்ம ரோமியோ காதலைப்பற்றி எழுதிக் கலக்கப்போகிறார் என்று பார்த்தால் பிரிய சகியை கடைசியில் "சரிதான் போடி" என்று சொல்லிவிட்டாரே

இருந்தாலு அவள்

"அட  அற்பப்பதரே உன் ஒருவனையே நேசித்த உத்தமியல்லவா  என்னையா போடி என்றாய்"

என்று கேட்காமல் ஊமையாகி போனதைத்தான் என்னால் தாங்க முடியவில்லைtw_bawling:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நல்லதொரு உருவகக் கவிதை நன்றாக எழுதியுள்ளீர்கள். நான்கூட இன்னும் முதல் காதலியை பத்திரமாக பெட்டியில் வைத்துள்ளேன். முதலுக்கு என்றும் முதல் மரியாதைதான். பாராட்டுக்கள் புங்கை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்படியே காதலிகளை, துணைகளை பழசாகப் போனால் மாற்றவும் வழி இருக்கவேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நானும் எதோ புங்கை துணிவா காதலி பற்றி எழுதத்தான் போறார். வாசிக்கலாம் என எண்ணி ஓடோடி வந்தேன். என்னை ஏமாற்றிவிட்டீர்களே.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அருமை அருமை புங்கை.

குள்ளநரி ஜே ஆர் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்திய கறுப்பு காதலி முழு தமிழர்களையுமே வசப்படுத்திவிட்டாள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted
19 hours ago, புங்கையூரன் said:

 

என் முதலாவது காதலியே...!

உன்னை நெஞ்சோடு…,

இறுக்கமாக அணைத்த நாள்,

இன்னும் நினைவிருக்கின்றது!

------

இரண்டு நாட்களின் பின்னர்..,

அந்த உத்தியோகத்தரின்,

'மூன்றே முக்கால்' கால் மேசைக்கு,,,

உனது சக தோழிகளுடன்..,

நாலாவது காலாகி.....

நீ  மிண்டு கொடுத்துக் கொண்டிருந்தாய்!

புங்கையூரானின்  கவிதையை  ஆரம்பத்தில் வாசித்த போது....
அவரின் காதலியாக... "லப்ரொப்", அல்லது  "ஐ போன்" ஆக இருக்குமோ என்று நினைத்தேன். 
இடையில்... விதானையார் எல்லாம் வந்த போது... அந்த நினைப்பை மாற்ற வேண்டி வந்தது.
கடைசியில்... நீங்கள், கடவுச் சீட்டை  குறிப்பிடும் வரை.. என்னால் ஊகிக்க  முடியாமல் இருந்தது, 
உங்கள் கவிதைக்கு கிடைத்த வெற்றி. :)

கடவுச் சீட்டை... மேசை ஆடாமல் இருக்க, முண்டு கொடுத்த அநியாயத்தை... 
எங்கு போய் சொல்வது என்றுதான் தெரியவில்லை.   :grin:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கவிதை தூள் ....எனக்கும் இடக்கிடை கவிதையில் கை வைப்போமோ என்று ஆசை வாரது.....எழுத வருதில்லை...

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 28/03/2017 at 4:17 AM, suvy said:

கருப்புக் கடவுச் சீட்டு கலக்குது....!  tw_blush: 

நன்றி...சுவியர்!

அதுகும் அதில எழுதியிருக்கிற எழுத்து....இருபத்தியிரண்டு கரட் தங்கமாம்!

உண்மையே...?

 

On 28/03/2017 at 4:26 AM, வல்வை சகாறா said:

ஆ..... முதல் காதலி
நம்ம ரோமியோ காதலைப்பற்றி எழுதிக் கலக்கப்போகிறார் என்று பார்த்தால் பிரிய சகியை கடைசியில் "சரிதான் போடி" என்று சொல்லிவிட்டாரே

இருந்தாலு அவள்

"அட  அற்பப்பதரே உன் ஒருவனையே நேசித்த உத்தமியல்லவா  என்னையா போடி என்றாய்"

என்று கேட்காமல் ஊமையாகி போனதைத்தான் என்னால் தாங்க முடியவில்லைtw_bawling:

நான் நினைச்சன்!

தூண்டிலை..எந்த நேரம் போடுறது...மீனை எந்த நேரம் கழட்டி விடுகிறது எண்ட 'கலை' தெரியாவிட்டால்..பின் விளைவுகள் பெரிய பார தூரமாய்ப் போய்விடும் என்பது எனது பட்டறிவு!

இப்படித்தான் ஒருத்தி....உங்களுக்காக என்னவெல்லாம் வேணுமோ..அவ்வளவும் செய்வான் எண்டாள்!

சரி...சரி....உங்கட அப்பா, அம்மாவோட ஒருக்காக் கதைக்க வேணும்..ஒரு அப்பொயின்ட்மென்ற் எடுத்துத் தாருமன் எண்டு கேட்டன்!

உங்களுக்கென்ன விசர், கிசர் ஏதும் பிடிச்சிருக்கோ ? அக்காக்கள் இருக்கேக்கை..நீங்கள் கேட்கிறது வடிவில்லை எண்டு சொன்னாள்!

இவளை நம்பியிருந்தால்...இப்ப நம்மட நிலைமை எப்படி இருந்திருக்கும்!

சும்மா உணர்ச்சி வசப்படாமாவ் யோசிச்சுப் பாருங்கோ..! (

வரவுக்கும், கருத்துக்கும் நன்றி...சகாறா! 

On 28/03/2017 at 6:01 AM, Kavallur Kanmani said:

நல்லதொரு உருவகக் கவிதை நன்றாக எழுதியுள்ளீர்கள். நான்கூட இன்னும் முதல் காதலியை பத்திரமாக பெட்டியில் வைத்துள்ளேன். முதலுக்கு என்றும் முதல் மரியாதைதான். பாராட்டுக்கள் புங்கை.

நன்றி...காவலூர் கண்மணி!

என்னுடைய முதல் காதலியையும்..நான் வேண்டாம் என்று எவ்வளவு வற்புறுத்தியும் ..மேல் மூலையில... ஒரு செல்ல வெட்டு ஒண்டு வேட்டிப்போட்டுத் திரும்பத் தந்து விட்டார்கள்!

எங்கேயோ..வங்கியில் ஒரு பெட்டிக்குள்ள கிடக்க வேண்டும்! அதுக்கும், வேறு சில பொருட்களுக்கும் சேர்த்து..வருடத்துக்கு நூற்றி அறுபது டொலர் வருகுது!

நீங்களே...சொல்லுங்கோ...நான் அவளை நல்லா வைச்சிருக்கிறனா இல்லையா எண்டு..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 28/03/2017 at 6:22 AM, கிருபன் said:

இப்படியே காதலிகளை, துணைகளை பழசாகப் போனால் மாற்றவும் வழி இருக்கவேண்டும்?

அப்பிடிப் போடுங்கோ...அரிவாளை கிருபன்!

ஒரு ஏழு வருசக் கொண்ட்ராக் முதலில் சைன் பண்ண வேணும்!

பிறகு ஒவ்வொரு ஏழு வருசமும்...இரண்டு பேருக்கும் விருப்பமெண்டால்...மீண்டும் புதுப்பிக்கப் படலாம்!

பதினெட்டு வயது வரும் வரை..பிள்ளை குட்டியள் இருந்தால் அவர்களை எப்படிப் பாதுகாப்பது,படிப்பிப்பது..அவர்கள் தேவைகளை எப்படிப் பூர்த்தி செய்வது என்பதும் அந்த ஒப்பந்தங்களில் உள்ளடக்கப் பட வேண்டும்!

ஒரு பகுதிக்கு விருப்பமில்லை என்றால்...போய்க் கொண்டேயிருக்க வேண்டியது தான்!

வருகைக்கு நன்றி....கிருபன்!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 27.3.2017 at 10:26 AM, புங்கையூரன் said:

பத்து வருடங்களின் பின்னர்…,

இன்னொரு காதலி வந்தாள்!

இன்னொரு காதலி பிறவுண் கலரில் வந்தாலும்.....

நான் அந்த பழைய கறுப்பியை விடவேயில்லை.றங்குப்பெட்டியில் வைச்சிருக்கிறன்..

Bildergebnis für deutsche pass

புங்கையரே! கவிதை பிரமாதம். tw_thumbsup:

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.