Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

தோள் கொடுப்பான் தோழன் ..........

 

ராஜேந்திரன் வழக்கமாக் நண்பர்கள் கூடும் அந்த மதகின் மேல் உட்கார்ந்து யோசனையில் ஆழந்து இருந்தான். மாலை  எழு மணியாகியும் சூரியன் மறைய நேரம் இருந்தது. சூரிய  கதிர்கள் சற்று கண்களை கூச்ச மடைய  செய்யவே அருகில் இருந்த தேநீர்க்கடையில் சென்று தேநீருக்கு சொல்லிவிட்டு கடைக் காரப் பையன் வரவுக்காய் காத்திருந்தான். 

 

தாயார் கமலா அம்மாள் மாலை உணவு வேளையாகியும் மகன் வரவுக்காய்   காத்திருந்தாள். கணவன் அப்போது  தான் வேலை முடிந்து வந்து கை கால் கழுவும் ஒசைக்கேட்டுகொண்டு இருந்தது. மாலதி சாமி விளக்கு ஏற்றி வழிபட்டுக்கொண்டு இருந்தாள். .கடவுளே இந்த வரனாவது கை கூடவேண்டும். பாடசாலை யிலும் சக ஆசிரியைகளின் ஏளனப் பார்வை . வயது  முப்பதாக  போகிற எனக்கு ஒரு வழி காட்டு . என  பிரார்த்தனை செய்துவிட்டு  வந்து    சமையலறையில்  , தந்தையின் சாப்பாட்டு பெட்டியை கழுவி வர  உலர  வைத்தாள்  . சேகரம் ஐயா கடையில் வேலை பார்க்கும் சுந்தரம் மிகவும்  கட்டுப் பாடானவர் ,மது புகை போன்ற எந்த  கெட்ட பழக்கங்களும் இல்லாதவர் ..இடையில் வெற்றிலை போடுவார்.. ஆணும் பெண்ணுமாய் இரு குழந்தைகளை பெற்று வளர்த்து தனது  வசதிக்கு  ஏற்ப வேண்டிய கல்வியை கொடுத்து ஆளாக்கி விட்டவர். மூத்தவள் பெண் அந்த ஊரின் கல்லூரியில் ஆசிரியையாக்கி பார்த்தவர். இளையவன் ராஜேந்திரனை மிகுந்த சிரமத்தின் மத்தியில் கட்டிட நிர்மாணத்துறை அதிகாரியாக்கினார் .சுந்தரத்தின் க டின் உழைப்பு இரு குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்கியதோடு ஒரு கல்வீட்டுக்கும் சொந்தக்காரர் ஆகி இருந்தார். சாப்பிட உட்கார்ந்தவர் மகன் ராசேந்திரன் பற்றிக் கேட்டார். சாப்பிட்டு முடித்தவர். உடல் அசதியால், சற்று சாய்வு  நாற்காலியில்அ உட்க்கார்ந்து சென்ற வாரம் வந்த வரனைப் பற்றிய  யோசனையில் ஆழ்ந்தார். 

 

என் மகளுக்கு இந்த வரனாவது கை கூட வேண்டும். வீடும் ரொக்க்முமாய் கேட்கிறார்களே ....வீட்டை சீவிய உரித்து  வைத்து கொடுத்து விடலாம். நகை நட்டு கொஞ்சம் கமலா சேகரித்து  வைத்திருக்கிறாள் .செலவுக்கு கடனோ உடனோ வாங்கி சமாளித்து விடலாம்.  ரொக்கத்து க்கு என்ன செய்வது . பொருட்கள் விற்கும் விலைவாசியில் நாளாந்த சீவியமே  அப்படியும் இப்படியுமாய் போகிறது . என்று ஆழ்ந்த் சிந்தையில்  அப்படியே உறங்கிவிடடார் .

 

மதகின் மீதிருந்த இந்திரன். தேநீர் பருகியவாறே ..இருக்கையில் ..தூரத்தே மோட்டார் சைக்கிளில்  .கறுப்புக் கண்ணாடியுடன் வருபவர்  இவனை நோக்கி வேகத்தை மெதுவாககினார். எதோ வழி கேட்பவர் போலும் என்று எண்ணியவன்..சற்று அருகே வந்ததும் ..அட இவன் நம்ம கதிரேசன் போல் இரு க் கிறதே என் எண்ணினான். அதற்கிடையில் ..மாப்பிள ....என்னடா யோசினை ... ..........என்றான். அட டா ...நாம் கதிரேசு .....எப்படா வந்தாய் மிடில் ஈஸ்ட்இல் இ ருந்து ..சென்ற வாரம் தானடா ..என்று பலதும்பத்தும் கதைத்தவர்கள் , . இறுதியில் சகோதரியின் கலியாணபேச்சுக்கு   கதையில்  வந்து நின்றது . கதிரேசுவுக்கு மூன்று பெண் சகோதரிகள்.  மூத்த    ஆண்  பிள்ளையான இவனை கடன்  உடன் எல்லாம் பட்டு மத்திய கிழக்குக்கு அனுப்பிய தந்தை ..இரு வருடத்தில்  கடனும் முடிய , தன் கடமை  முடிந்த்து என மேலுலகம் சென்று விடடார்  மூத்தவனான் இவருக்கு  குடும்ப  பொறுப்பை ஏற்க வேண்டிய கடடாயம்.  தங்கை மார் படித்துக் கொண்டு இருந்தார்கள்   .நண்பர்கள் பேசிய வாறே சென்றனர் . ராஜேந்திரனை   வீட்டில்  இறக்கி விட்டவன். உள்ளே வரும்படி அழைத்தும்  கா லையில்  வருகிறேன் என் கதிரேசு சென்று விடடான் 

 

மறு நாள் காலை ராஜேந்திரன் வேலைக்கு புறப்ட்டுக் கொண்டு இருந்தான். மாலாவும் தந்தையும் பஸ் க்கு  சென்று விட்டனர். வாயிலில் மோட்டார்  சைக்கிள்  ....கதிரேசு வந்திருந்தான் .... கிளம்பிடடாயா  மாப்பிள்ளை ..இந்தா இதைக்கொண்டு உள்ளே வை என்று பணம் நிரம்பிய பார்சல் ஒன்றை நீட்டினான்.  என்னடா இது ..... .   இன்று  லீவு  எடுக்கவா என்று கேட்டான்  போக மனமின்றி .. மாலையில் பேசலாம் டா நீ புறப்படு ..   சென்று வா என்று விடை கொடுத்தான் நண்பன். . ராஜேந்திரன்நே ரே சென்று சாமி அறையில் வைத்தவன். அதில் பணம் பத்து லட்சம் இருக்க கண்டு  ஆச்சரியம்  அடைந்தான் ,  அலமாரியில் வைத்து பூட்டி திறப்பை தாயிடம் கொடுத்து   மாலையில்  வந்து பேசுவதாக சொன்னான்.  கதிரேசு கமலா ம்மா வு  டன் பேசிக் கொண்டு இருந்தாள் 

 தன மக ளுக்கு இந்த இடமாவது சரி வரவேண்டும்   இவர்களது வயதுடையவர்கள்  கையிலே குழந்தையுடன்   இருக்கிறார்கள் என் சொல்லி  ஆதங்கப்பட்  டாள்  . நல்ல  காரியம்  நடை பெற வேண்டுமேன்று மிகவும் விரும்பினாள். தேநீரை பருகி முடித்தும்  கவலைப் படாதீர்கள்  அம்மா .எல்லாம் சுபமே நடக்கும் என் விடை பெற்றான். 

 

 மறு நாள் மாப்பிள்ளை   வீட்டுக்கு   சேதி பறந்தது.  இவர்கள் கலியாண விடயமாக கலந்தாலோசிப்பதற்கு வர இருப்பதாக . பேச்சின் முடிவில் அடுத்த மாதம்  வரும் நல்ல நாளில் மண மக்கள் திருமணம் நடை பெற  வேண்டிய ஆயத்தங் களை   செய்ய தொடங்கினார்கள் 

 

மாலையில் நண்பர்கள் மீண்டும் சந்தித்தார்கள். கதிரேசு ...என்று கண் கலங்கினான்......... உனக்கும் சகோதரிகள் இருக்கிறார்கள் இந்த நிலையிலும்   எனக்கு இவ்வளவு உதவி செய்கிறாய் .. என் அவனது  நல் உள்ளத்தை பாராட்டினான் .   திருமணம் இனிதே  நடந்தது  

 

தருணம் அறிந்து உதவுபவர்கள் உலகில் மிகச்சிலர் தான் .  இத்தகைய சில   தக்க தருணத்தில்  உதவும் நட்புகளால் தான் பல  பெண்களின் வாழ்வு வளம் பெறுகிறது . உண்மையான நட்பை ஆபத்தில் அறியலாம் . .

 

 

ஒரு குட்டிக் கதை சொல்ல  வந்தேன்    

 .

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கதை நல்லாய் இருக்கு சகோதரி.....!மத்திய கிழக்கு நாடுகளுக்கு போகிறவர்கள் பெரும்பாலும் கடன் கிடன் வாங்கித்தான் போறது. அதிலும் தன் கடனையும் தீர்த்து நண்பனுக்கும் உதவுவதற்கு நல்ல மனம் வேண்டும்....! tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சீதனம் என்ற கொடிய நோய் எமது இனத்துக்கு ஒரு சாபம்.புலிகளின் காலத்தில் சிறிது கட்டுக்குள் இருந்தது இப்போ மீண்டும் தலைவிரித்தாடுகிறது.

காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கதையை வாசிக்க...நிலாக்காவின் வலைத்தளத்து நினைவு வந்து போனது!

உங்கள் எழுத்து நடை...மீண்டுமொரு முறை...பழைய நினைவுகளைக் கிளறி விட்டது!

தொடர்ந்தும் எழுதுங்கள்...!

 

Posted
On 1.4.2017 at 7:35 AM, நிலாமதி said:

நண்பர்கள் பேசிய வாறே சென்றனர் . ராஜேந்திரனை   வீட்டில்  இறக்கி விட்டவன். உள்ளே வரும்படி அழைத்தும்  கா லையில்  வருகிறேன் என் கதிரேசு சென்று விடடான் 

நிலாமதி நல்லா இருக்கிறது.

ஆனால் என்னைத்தான் ஏமாத்தி விட்டீர்கள்.

தமிழ் படம் பாத்து + தமிழ் கதைகள் வாசித்து பழகிய மனசு அடுத்தநாள் கதிரேசு மாலாவை ப்ரொபோஸ் பண்ணும் என்று எதிர்பார்த்தது:grin:.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உண்மையான நண்பன் தேவை அறிந்து தோள் கொடுப்பான்.
நல்லதொரு பதிவு. வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மத்தியகிழக்கு நாடுகளுக்கு நேர்மையான விசாவில் வந்து, கொடும் வெயிலில் 12 மணிநேரம் உழைத்து, பணம் சேமித்து தன் இரத்த உறவுகளை காப்பாற்றும் பலருமுள்ள நிலையில், நண்பனுக்காக சேமித்த பணத்தை தக்க தருணத்தில் கொடுத்துதவ பெரிய மனது வேண்டும்..

பகிர்விற்கு நன்றி.  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கதை எழுதிய விதம்,  உடனே புரியும் படியாக...  இலகுவாக  உள்ளது நிலாமதி அக்கா.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உதவும் மனம்...! அது அவரவர் மனதைப் பொறுத்தது. இருந்தும் உதவி செய்வதற்கு மனத்தில் துணிவும் வேண்டும். நிலாமதி அவர்களின் கதை துணிவுக்கு மேலும் பலமூட்டுகிறது. :)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்படியான நண்பர்கள் அமைவது மிகவும் கடினம் .....கதைக்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

80 களில்  எனது மைத்துணர் ஒருவரும் மத்திய கிழக்கு நாடொன்றில்  வேலை செய்தார்

வேலை செய்த இடத்தில் ஒரு 10 பேர் நல்ல நட்பாக பழகினார்கள்

விடுமுறைக்கு இருவர் இருவராக வருவார்கள்

மற்றவர்களது கடும்பங்களை  சந்திப்பார்கள்

உதவிகள் தேவைப்படும்  குடும்பங்களுக்கு உதவுவார்கள்

அவ்வாறே அவர்களது நண்பரின்  தங்கை  ஒருவருக்கு சீதனப்பீரச்சினை  வந்தபோது

போட்டி போட்டு உதவி  செய்தார்கள்

அந்த நேரத்தில் மிகவும்  போற்றப்பட்ட விடயமது..

நன்றி  பாட்டி

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த காலத்தில் இது நடப்பது குறைவு 

ம் கதை  கதைக்கு அழகாக :104_point_left:

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.