Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் வேலையற்ற பட்டதாரிகள் நடாத்திவரும் போராட்டத்தில் இன்று (31) பட்டதாரி இளைஞன் ஒருவனின் அழுகுரல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் வேலையற்ற பட்டதாரிகள் நடாத்திவரும் போராட்டத்தில் இன்று (31) பட்டதாரி இளைஞன் ஒருவனின் அழுகுரல்

  • கருத்துக்கள உறவுகள்

அடச்ச்சா....

மண் அள்ளியாவது, நாலுகாசு உழைக்க வக்கில்லை. அழுகிறார் ஆண்மகன்.

அவரோட A/L படிச்சவர் DS ஆபிசில வேலையாம். அது தான் பெரீய்ய பிரச்சனை. இவர்களுக்கு தேவை அரச வேலை, அதுக்குத் தான் இந்த அழுகை.

இவர் அனேகமா, விஜயகலாவுடனே பேசுகிறார் போலுள்ளது.

பெரும் யத்தம் இடையே, மண்னெண்ணய் விற்று பணம் சேர்த்த பெருமுயற்சி கொண்ட ஒருவர் மனைவி.

வேலை என்பது அனுதாபத்தால் கிடைப்பதல்ல. திறமையால், அதனால் காண்பிக்கப்படும் தன்னம்பிக்கையை, வேலை தருபவர் கண்டு கொள்ளும் போது.

ஏனெனில் வேலை தருபவர் தருமத்தாபனம்நடாத்துவதில்லை. நாலு காசு உழைத்து, அதில் வரும் லாபத்திலே சம்பளம் தருவார்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

அரச தொழிலினை ஏங்கி நிற்கிறார்கள் இதுவரை  என்னத்தை சொல்ல 

1 hour ago, Nathamuni said:

மண் அள்ளியாவது, நாலுகாசு உழைக்க வக்கில்லை. அழுகிறார் ஆண்மகன்.

நான் ஒரு நிறுவனத்தின் நடத்துனராக இருந்தால் - இங்கு குந்தி இருக்கும் எவருக்கும் வேலை கொடுக்க மாட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ஜீவன் சிவா said:

நான் ஒரு நிறுவனத்தின் நடத்துனராக இருந்தால் - இங்கு குந்தி இருக்கும் எவருக்கும் வேலை கொடுக்க மாட்டேன்.

லைக்கிறத்துக்கு பச்சை இல்லை  யாழ்ப்பாணம் வந்து பார்த்த பிறகே நினைத்தேன் அங்கே  இருக்கும் நிலத்தையும் அதன் செழிப்பையும்  அதே இடம் கிழக்கில் கைவசமிருந்தால் நான் கூட தொழிலதிபர் விவசாயத்தில் :97_raised_hand:

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, முனிவர் ஜீ said:

லைக்கிறத்துக்கு பச்சை இல்லை  யாழ்ப்பாணம் வந்து பார்த்த பிறகே நினைத்தேன் அங்கே  இருக்கும் நிலத்தையும் அதன் செழிப்பையும்  அதே இடம் கிழக்கில் கைவசமிருந்தால் நான் கூட தொழிலதிபர் விவசாயத்தில் :97_raised_hand:

இதை கூட, உங்கள் மனதுக்கு நீங்கள் சொல்லும் சமாதானம் என்பேன் முனிவர்.

கிழக்கில் என்ன இல்லை என்பதை விட என்ன உள்ளது என்று பாருங்கள்.

நேற்றிரவு வாசித்தேன். ரோஜா பட வாய்ப்பினை மணிரத்தினம் கொடுத்த போது, ரகுமானிடம் மிகச்சிறிய ஸ்டுடியோ. 

பாட வந்த பாலசுப்பிரமணியம், பருமன் காரணமாக சிறிய கதவின் ஊடாக பக்கவாட்டாகவே உள்ளே வந்து பாடி வெளியேறினார்.

Don't wait to be perfect to start but start to be perfect... Jeff Walker (Internet marketing guru)

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

இதை கூட, உங்கள் மனதுக்கு நீங்கள் சொல்லும் சமாதானம் என்பேன் முனிவர்.

கிழக்கில் என்ன இல்லை என்பதை விட என்ன உள்ளது என்று பாருங்கள்.

நேற்றிரவு வாசித்தேன். ரோஜா பட வாய்ப்பினை மணிரத்தினம் கொடுத்த போது, ரகுமானிடம் மிகச்சிறிய ஸ்டுடியோ. 

பாட வந்த பாலசுப்பிரமணியம், பருமன் காரணமாக கதவின் ஊடாக பக்கவாட்டாகவே உள்ளே வந்து பாடி வெளியேறினார்.

Don't expect to be perfect to start but start to be perfect... Jeff Walker (Internet marketing guru)

எனது ஊரில் நிலங்கள் பாரிய தட்டுப்பாடு நாதா  எல்லா இடன்ங்களும் வீடுகளும்  மற்றது சுனாமியால் பாதிக்கப்ட்ட மக்கள் கூட இன்னும் சரியாக இருக்க இடமில்லாமல் தொடர்மாடிகளில் வாழ்ந்து கொண்டு வருகிறார்கள்   மற்ற நிலங்கள் எல்லாம் வயல் பாவனைக்கு மட்டுமே நீங்கள் எனது ஊர் வந்தால் மட்டுமே புரிய வைக்கலாம் 

3 hours ago, Nathamuni said:

அடச்ச்சா....

மண் அள்ளியாவது, நாலுகாசு உழைக்க வக்கில்லை. அழுகிறார் ஆண்மகன்.

அவரோட A/L படிச்சவர் DS ஆபிசில வேலையாம். அது தான் பெரீய்ய பிரச்சனை. இவர்களுக்கு தேவை அரச வேலை, அதுக்குத் தான் இந்த அழுகை.

இவர் அனேகமா, விஜயகலாவுடனே பேசுகிறார் போலுள்ளது.

பெரும் யத்தம் இடையே, மண்னெண்ணய் விற்று பணம் சேர்த்த பெருமுயற்சி கொண்ட ஒருவர் மனைவி.

வேலை என்பது அனுதாபத்தால் கிடைப்பதல்ல. திறமையால், அதனால் காண்பிக்கப்படும் தன்னம்பிக்கையை, வேலை தருபவர் கண்டு கொள்ளும் போது.

ஏனெனில் வேலை தருபவர் தருமத்தாபனம்நடாத்துவதில்லை. நாலு காசு உழைத்து, அதில் வரும் லாபத்திலே சம்பளம் தருவார்.

????? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, கலைஞன் said:

????? :rolleyes:

நம்ம கலைஞர், நித்திரையால எழும்பி ஓடியாந்து பேந்தப் பேந்த முழுசுறதே வேலையாப் போட்டுது.

பிசியா இருப்பியள். ஒரு இரண்டு மாதம் கழிச்சு ஆறுதலா வாருங்க, ஆற அமர விளங்கப் படுத்தல்லாம். :grin: 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, முனிவர் ஜீ said:

லைக்கிறத்துக்கு பச்சை இல்லை  யாழ்ப்பாணம் வந்து பார்த்த பிறகே நினைத்தேன் அங்கே  இருக்கும் நிலத்தையும் அதன் செழிப்பையும்  அதே இடம் கிழக்கில் கைவசமிருந்தால் நான் கூட தொழிலதிபர் விவசாயத்தில் :97_raised_hand:

இப்படித்தான் 

2003இல் ஊருக்கு வந்து பார்த்தபோது

ஊரில் விழுந்து கருகி  கிடக்கும்  பனை தென்னை ஓலை கிழங்கு தேங்காய்களை 

எடுத்து வித்தாலே கோடிசுவரர் ஆகி  விடலாம் என்று சொன்னேன்

ஒருத்தரும் தயாரில்லை..

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் ஊரில் பெரிய வீடும் காணிகளும் இருக்க அதை விட்டு ரவுணுக்குள்ள போய் இருக்க வேணுமெண்டு பலர் கடன்பட்டு காணிவாங்கி வீடுகட்டிப்போட்டு கஸ்ரப்படுகினம்.ரவுணுக்குள்ள வுத்தமான காற்றும் இல்லை.நாங்கள் 30 வருடத்திற்குமுதலே  6 மணிக்கு எழும்பி ரவுணுக்குள் ரியுசன் போயிட்டு வந்து கிராமத்தில அப்பாவுக்கு தோட்டத்தில் உதவியும் செய்தோம். இப்போ எல்லோரும் எடுத்த  எடுப்பில அரசாங்க வேலை வேணுமெண்டு நிற்கினம்.இப்ப எல்லாவீட்லுடிம் Nமாட்டார் சைக்கிள் இருக்குது. அந்த நேரம் சைக்கிள்தான் எங்களுக்குப் பெரிய உதவி.அதுமட்டுமில்ல. இப்ப கிராமங்களில் ஒருத்தரும் மாடு வளர்க்கிறதில்லை.பைக்கைற் பால் வாங்கிக் குடிக்கினம்.மாடு வளர்த:தால் பராமரிக்க ஆள் இல்லையாம்.இதில் நின்று அழுகிற நேரம் ஒரு வருடம் விவசாயம் செய்து பாருங்கள்.எத்தனையோ நிலங்கள் வேலை செய்ய ஆளில்லாமல் தரிசுநிலங்காய்க் கிடக்குது.வேலை தானாய் வராது நாங்கள்தான் வேலையைத் தேடிப் போகவேண்டும். புலம் பெயர் நாடுகளில் எம்மவர்கள் எவ்வளவோ கஸ்ரப்பட்டு மற்றவன் கழிச்சு விட்ட வேலையைச் செய்துதான்எங்கள் குடும்பத்தையும் கவனித்து தாயகத்திற்கும் எம்மால் முடிந்த பங்களிப்பைச் செய்யிறம்.

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, புலவர் said:

அதே...

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

நம்ம கலைஞர், நித்திரையால எழும்பி ஓடியாந்து பேந்தப் பேந்த முழுசுறதே வேலையாப் போட்டுது.

பிசியா இருப்பியள். ஒரு இரண்டு மாதம் கழிச்சு ஆறுதலா வாருங்க, ஆற அமர விளங்கப் படுத்தல்லாம். :grin: 

என்ன பிசி, போன் தான் சூடாகும்

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கருத்தெழுதியவர்களின் கருத்து தான் என்ன?

படித்த பட்டதாரிகள் என்றால் என்ன?

உழைப்புக்கேற்ற ஊதியம் மாதிரி
படிப்புக்கேற்ற வேலை வேண்டாமோ?

எப்படி அந்த இளைஞனை மண் அள்ளப் போனால் என்ன என்று கேட்கலாம்?

இரவு பகலாக படித்து பட்டதாரிகளான யுவதிகளை புல்லு புடுங்க போகலாம் தானே எப்படி சொல்ல முடியும்?

எனக்கு விடை தெரியவில்லை.அதே நேரம் மேலே உள்ள கருத்துக்களையும் ஏற்க முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

என்ன பிசி, போன் தான் சூடாகும்

அட அப்படியே விசயம்.

நானெல்லோ பிழையா விளங்கிங்கொண்டன்.

21 minutes ago, ஈழப்பிரியன் said:

இங்கு கருத்தெழுதியவர்களின் கருத்து தான் என்ன?

படித்த பட்டதாரிகள் என்றால் என்ன?

உழைப்புக்கேற்ற ஊதியம் மாதிரி
படிப்புக்கேற்ற வேலை வேண்டாமோ?

எப்படி அந்த இளைஞனை மண் அள்ளப் போனால் என்ன என்று கேட்கலாம்?

இரவு பகலாக படித்து பட்டதாரிகளான யுவதிகளை புல்லு புடுங்க போகலாம் தானே எப்படி சொல்ல முடியும்?

எனக்கு விடை தெரியவில்லை.அதே நேரம் மேலே உள்ள கருத்துக்களையும் ஏற்க முடியவில்லை.

இத பாருங்களன்...

ஈழப்பிரியர், அவர்களது படிப்பு வேலை கொடுக்கவில்லை என்று தான் தெரிகிறதே.

வயது 30. இவருக்கும் பின்னால் (முன்னாலும் கூட), ஒவ்வொரு வருடமும் பட்டதாரிகள் வரும்போது, இவருக்கு வேலை கிடைக்க சந்தர்ப்பம் உண்டா?

60 வயது அம்மா தண்டசோறு போடுவதாக சொல்லும் கேவலத்திலும் பார்க்க, தனக்கும் அவருக்கும் சோறு போடும், தையிரியம் வேண்டாமா?

நாமெல்லாம் வெளி நாடுகளில் படிக்கும் போது, பெட்ரோல் நிலையங்களிலிலும், சூப்பர் மார்க்கெட்டிலும் வேலை செய்தே படித்தோம்.

நாம படிக்கும் படிப்புக்கு, இந்த வேலையா என்று நினைத்தால், குஞ்சியப்புவா துட்டு தந்திருப்பார் ?

படித்த படிப்புக்கு வேலை இல்லையா, மண் அள்ளிப் போட்டுக்கொண்டே, வேலை தரக் கூடிய மேலதிக படிப்பு படிக்க வேண்டும்.

போன வருடம் ஊர் திருவிழாவுக்கு போய் இருந்தேன்.

கோயில் தானாதிகாரி, கோவிலுக்கு இணையத் தளம் செய்கிறோம் என்றார். உதவி தேவைப்படின் சொல்லுங்கள் என்றேன்.

அவர் ஒரு ஆசிரியர், உடனே சொன்னார். இல்லை, தேவைப்படாது, நான் யாழ்ப்பாணத்தில் ஒரு கோர்ஸ் செய்கிறேன், இன்னும் மூன்று வாரம் தான். முடிந்து விடும். நானே செய்து விடுவேன் என்றார்.

இணையத் தளம் ஓடுகிறது இப்போது.

முயற்சி..... அது இல்லாவிடில் இவ்வாறு, பெண்கள் முன்னால் கேவலமாக கண்ணீர் விட்டு அனுதாபம் வாங்க வேண்டியது தான்.

அவரது நோக்கத்தினை நான் சொல்கிறேன்: அரச வேலை. மறு கணமே, கொழுத்த சீதனத்துடன் கலியாணப் பேச்சு. தம் மீது நம்பிக்கை இல்லாதவர்கள். 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ஈழப்பிரியன் said:

இங்கு கருத்தெழுதியவர்களின் கருத்து தான் என்ன?

அரசாங்கத்திடம் இருந்து  வேலைய எதிர்பார்க்காமல் தான் படித்த படிப்புக்கு தனியார் நிறுவனத்திலோ அல்லது  தன்னாலோ ஏன் தொழில் தொடங்க முடியாது  அந்த படிப்பை வைத்து ஏன் வெளிநாட்டில் தொழில் ஒன்றை பெற்றுக்கொள்ள இவர்களால்  முடியாதுள்ளது  தான் படித்த படிப்புக்கு அரசாங்கம் தான் வேலை தரவேண்டும் என்பது ??

  • கருத்துக்கள உறவுகள்

   இலமென்றிசை இருப்பாரைக் காணின்

நிலமென்னும் நல்லாள் நகும்.

வடபகுதியில் றோட்டுப் போடுவது சிங்களத் தொழிலாளிகள்.வடபகுதியில் வேலை இருக்கிறது.நம்மவர்கள் செய்யக்கூச்சப்பட்டுகிறார்கள். தோட்ட வேலைக்கு ஆள் இல்லாமல் விவசாயிகள் நிலங்களைத் தரிசிக்க விட்டிருக்கிறார்கள்.சிங்கள ஆமிக்காரன் தமிழர்களின் நிலத்தில் பயிர் செய்து தமிழனுக்கே விற்கிறான்.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Nathamuni said:

11 minutes ago, முனிவர் ஜீ said:

அரசாங்கத்திடம் இருந்து  வேலைய எதிர்பார்க்காமல் தான் படித்த படிப்புக்கு தனியார் நிறுவனத்திலோ அல்லது  தன்னாலோ ஏன் தொழில் தொடங்க முடியாது  அந்த படிப்பை வைத்து ஏன் வெளிநாட்டில் தொழில் ஒன்றை பெற்றுக்கொள்ள இவர்களால்  முடியாதுள்ளது  தான் படித்த படிப்புக்கு அரசாங்கம் தான் வேலை தரவேண்டும் என்பது ??

வெளிநாட்டிற்கும் உள்நாட்டுக்கும் ரொம்பவே வித்தியாசம்.அங்கு பகுதிநேர வேலை செய்து தமக்காக தாமே உழைத்து படித்தவர் என்று எனக்கு தெரிந்து யாருமே இல்லை.

வெளிநாட்டில் காணியை பூமியை விற்று வட்டிக்கு கடனை வாங்கி வந்து சும்மா இருக்க முடியுமா?எம்மை காவாந்து பண்ண யாருமே இல்லை எனும் போது எமது இருப்புக்காக என்ன வேலை என்றாலும் செய்ய தயாராகிறோம்.

எத்தனை லட்சம் இளைஞர் யுவதிகள் வெளிநாடு வந்தோம்.இவர்களுக்கு செய்யும் உபதேசத்தை ஏன் நாம் கடைப்பிடிக்கவில்லை.நான் செய்யாத ஒன்றை என்னால் செய்ய முடியாததை அடுத்தவர் செய்ய வேண்டும் என்று எப்படி அடுத்தவருக்கு சொல்வது.

அவர்களுக்கு சொல்வதை நாமே பின்பற்றி இருந்தால் இன்று நாம் சுதந்திரமான நாட்டில் இருந்திருப்போம்.போராட கூலி வேலை செய்ய துணிவில்லாதபடியால் தான் வெளிநாட்டில் அடிமையாக இருக்கிறோம்.

35 minutes ago, புலவர் said:

   இலமென்றிசை இருப்பாரைக் காணின்

நிலமென்னும் நல்லாள் நகும்.

வடபகுதியில் றோட்டுப் போடுவது சிங்களத் தொழிலாளிகள்.வடபகுதியில் வேலை இருக்கிறது.நம்மவர்கள் செய்யக்கூச்சப்பட்டுகிறார்கள். தோட்ட வேலைக்கு ஆள் இல்லாமல் விவசாயிகள் நிலங்களைத் தரிசிக்க விட்டிருக்கிறார்கள்.சிங்கள ஆமிக்காரன் தமிழர்களின் நிலத்தில் பயிர் செய்து தமிழனுக்கே விற்கிறான்.

புலவர்

இதே நிலமை முன்னரும் இருந்தது தானே?

ஏன் எம்மால் செய்ய முடியாமல் போனது?

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, ஈழப்பிரியன் said:

எத்தனை லட்சம் இளைஞர் யுவதிகள் வெளிநாடு வந்தோம்.இவர்களுக்கு செய்யும் உபதேசத்தை ஏன் நாம் கடைப்பிடிக்கவில்லை.நான் செய்யாத ஒன்றை என்னால் செய்ய முடியாததை அடுத்தவர் செய்ய வேண்டும் என்று எப்படி அடுத்தவருக்கு சொல்வது.

அவர்களுக்கு சொல்வதை நாமே பின்பற்றி இருந்தால் இன்று நாம் சுதந்திரமான நாட்டில் இருந்திருப்போம்.போராட கூலி வேலை செய்ய துணிவில்லாதபடியால் தான் வெளிநாட்டில் அடிமையாக இருக்கிறோம்.

இங்கே நாம் செய்யும் அணைத்து வேலைகளும் அங்கேயும் உண்டு. வரட்டுக் கெளரவம் செய்ய விடாது. இங்கே அது இல்லை, அதனால் செய்கிறோம்.

படித்தவராயின், நாலு பிள்ளைகளுக்கு டியூசனாவது சொல்லிக் கொடுக்கலாம்.

மன்னிக்க வேண்டும், முயன்று விழுபவர் எழும்ப கை கொடுக்கலாம். முயற்சியில்லாமல் அழுகையால் மாங்காய் பிடுங்கலாம் என்று நினைத்தால்?

அதுக்குள், 7 பேரே தானே கொண்டாந்து இறக்கி வாக்கு போட வைத்தாராம்.

அந்த நேரத்தில் வேலையாவது தேடியிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

வெளிநாட்டிற்கும் உள்நாட்டுக்கும் ரொம்பவே வித்தியாசம்.அங்கு பகுதிநேர வேலை செய்து தமக்காக தாமே உழைத்து படித்தவர் என்று எனக்கு தெரிந்து யாருமே இல்லை.

வெளிநாட்டில் காணியை பூமியை விற்று வட்டிக்கு கடனை வாங்கி வந்து சும்மா இருக்க முடியுமா?எம்மை காவாந்து பண்ண யாருமே இல்லை எனும் போது எமது இருப்புக்காக என்ன வேலை என்றாலும் செய்ய தயாராகிறோம்.

எத்தனை லட்சம் இளைஞர் யுவதிகள் வெளிநாடு வந்தோம்.இவர்களுக்கு செய்யும் உபதேசத்தை ஏன் நாம் கடைப்பிடிக்கவில்லை.நான் செய்யாத ஒன்றை என்னால் செய்ய முடியாததை அடுத்தவர் செய்ய வேண்டும் என்று எப்படி அடுத்தவருக்கு சொல்வது.

அவர்களுக்கு சொல்வதை நாமே பின்பற்றி இருந்தால் இன்று நாம் சுதந்திரமான நாட்டில் இருந்திருப்போம்.போராட கூலி வேலை செய்ய துணிவில்லாதபடியால் தான் வெளிநாட்டில் அடிமையாக இருக்கிறோம்.

புலவர்

இதே நிலமை முன்னரும் இருந்தது தானே?

ஏன் எம்மால் செய்ய முடியாமல் போனது?

அப்ப வேலையில்லாப் பட்டதாரிகள் இப்படிப் போராட்டம் நடத்தவில்லை.இப்பதான் சிங்களவர்கள் வடபகுதிக்கு பெருமளவுக்கு வந்து வேலை செய்கிறார்கள் .வெளிநாட்டுக்கு வந்தவர்கள் எல்லாம் படிப்புக்காக ஏத்த வேலைதான் செய்வம் என்று நினைத்திருந்தால் 90 வீதமானவர்கள் வேலை இல்லாமல் ஊருக்குத் திரும்பித்தான் போகவேண்டி வந்திருக்கும் வெளிநாட்டுக்காசும் ஊருக்குப் போயிருக்காது.படிப்புக்கேத்த. வேலை கிடைக்கும் வரை பெற்றோரின் உழைப்பில் சீவிப்பதற்கு வெட்கப்பட வேண்டும்.அவர்களுக்கு சற்று ஓய்வு கொடுத்து நாங்கள் கிடைத்த வேலையைச் செய்து கொண்டே தகுந்த வேலைக்கு முயற்சி எடுக்க வேண்டும்.சும்மா குப்பிறப்படுத்துக்கொண்டு கொம்புக்கு மண்ணெடுத்தால் முன்னேற்றம் வராது. இப்படிப்பட்டவர்களுக்கு அரசாங்கம் வேலை கொடுத்தால் அங்கே போய் நித்திரைதான் கொள்ளுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

வெளிநாட்டிற்கும் உள்நாட்டுக்கும் ரொம்பவே வித்தியாசம்.அங்கு பகுதிநேர வேலை செய்து தமக்காக தாமே உழைத்து படித்தவர் என்று எனக்கு தெரிந்து யாருமே இல்லை.

வெளிநாட்டில் காணியை பூமியை விற்று வட்டிக்கு கடனை வாங்கி வந்து சும்மா இருக்க முடியுமா?எம்மை காவாந்து பண்ண யாருமே இல்லை எனும் போது எமது இருப்புக்காக என்ன வேலை என்றாலும் செய்ய தயாராகிறோம்.

எத்தனை லட்சம் இளைஞர் யுவதிகள் வெளிநாடு வந்தோம்.இவர்களுக்கு செய்யும் உபதேசத்தை ஏன் நாம் கடைப்பிடிக்கவில்லை.நான் செய்யாத ஒன்றை என்னால் செய்ய முடியாததை அடுத்தவர் செய்ய வேண்டும் என்று எப்படி அடுத்தவருக்கு சொல்வது.

அவர்களுக்கு சொல்வதை நாமே பின்பற்றி இருந்தால் இன்று நாம் சுதந்திரமான நாட்டில் இருந்திருப்போம்.போராட கூலி வேலை செய்ய துணிவில்லாதபடியால் தான் வெளிநாட்டில் அடிமையாக இருக்கிறோம்.

நான் சொன்னதற்கும் நீங்கள் சொன்னதற்கும்  இருக்கும் வேறுபாடுகளை கவனியுங்க ஒரு மனிதன்  படிப்பது எதற்க்காக என்பதை புரிந்து கொள்ளுங்கள்  அண்ணை  இங்கே  அரச துறையில் வேலை செய்பவர்கள் அவர்கள் படித்த படிப்புக்கும் வேலைக்கும் சம்பந்தம் இல்லாமலும் வேலை செய்கிறார்கள்  வர்த்தகம் படித்தவன் நான்  வங்கியில் தான் வேலை செய்வோம் என்பது போல் தான் இருக்கிறது இவர்கள் நினைப்பு

நான்  இவர்களை தினம் தினம் மட்டக்களப்பில் பார்க்கிறேன் நன்றாக சாப்பிடுகிறார்கள் அதிகாலையில்  வந்து கூட்டம் சேர்கிறது  மீண்டும்  கொஞ்ச நேரம் இவ்வர்கள் அரசுக்கெதிராக கேசம் பிறகு கலைந்து போகிறார்கள் இவர்கள் வெளிவாரிப ட்டதாரிகள் இவர்களில் சிலர் முடித்திருக்கும்  பாடங்களுக்கு ஆசியராகவும் செல்லலாம்,ஆனால் அந்த பாடங்களுக்கு மேலதிகமாகவே பாடசாலைகளில் ஆசிரியர்கள் உள்ளார்கள் அதை அரசு கவனத்தில் எடுத்துள்ளது மேலும் பல்கலைக்கழகங்களில் இனிமேல் வெளிவாரி பட்டப்படிப்புக்களை நடத்துவதா வேண்டாமா என அரசு தீர்மானம் எடுத்து வருகிறது ........................ அல்லது அபிவிருத்தி உத்தியோகத்தராகவும்செ ல்லலாம் அர்சாங்கம் தற்போது மகிந்த அரசாங்கம் பெற்ற கடனை அடைப்பதில் குறியாக இருக்கிறது இவர்க அரசு உள் வாங்கினால் இவர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பளம் திறைசேரியினால் வழங்க முடியாத காரியமாக கூட இருக்கலாம்  

வட மாகாண சபை  அழைப்பு விடுத்து இருக்கிறது 2017.04.21 வரரக்கும் பட்டதாரிகள்  அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக  இணைப்பதற்கு நேற்று எங்கேயோ பார்த்த ஞாபகம் 

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டுக்கு வந்து முன்னேஇயவர்களைப்பார்த்தால் படித்தவர்களை விட படிக்காதவர்களே அதிகம் எனலாம். அவர்கள் கிடைத்த எந்த வேலையையும் செய்யத்தயாராக இருந்த படியால் மொழி தெரியாத நாட்டிலும் வந்து பிழைத்துக் கொண்டார்கள் .இங்கே அழுதுகொண்டிருப்பவர் வெளிநாட்டுக்கு வந்தால் பெற்றோல் நிலையத்திலும் கடைகளிலும் வேலை செய்யத்தயங்குவாரா?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

இங்கு கருத்தெழுதியவர்களின் கருத்து தான் என்ன?

படித்த பட்டதாரிகள் என்றால் என்ன?

உழைப்புக்கேற்ற ஊதியம் மாதிரி
படிப்புக்கேற்ற வேலை வேண்டாமோ?

எப்படி அந்த இளைஞனை மண் அள்ளப் போனால் என்ன என்று கேட்கலாம்?

இரவு பகலாக படித்து பட்டதாரிகளான யுவதிகளை புல்லு புடுங்க போகலாம் தானே எப்படி சொல்ல முடியும்?

எனக்கு விடை தெரியவில்லை.அதே நேரம் மேலே உள்ள கருத்துக்களையும் ஏற்க முடியவில்லை.

படித்த படிப்புக்கேற்ற வேலை தான் வேண்டும் என்றால் ஒன்றும் செய்ய ஏலாது.சம்பாத்தியம் மட்டும்தான் வேண்டும் என்றால் நானே அவருக்கு வழி பண்ணுகிறேன்.கேட்டு சொல்லுங்கள்.:unsure:

இந்தப் பட்டதாரிகள் வழிபாட்டிடங்களில் பிச்சைப் பாத்திரத்துடன் போய் குந்திக்கொள்வது பொருத்தமானது.  

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Nathamuni said:

அடச்ச்சா....

மண் அள்ளியாவது, நாலுகாசு உழைக்க வக்கில்லை. அழுகிறார் ஆண்மகன்.

அவரோட A/L படிச்சவர் DS ஆபிசில வேலையாம். அது தான் பெரீய்ய பிரச்சனை. இவர்களுக்கு தேவை அரச வேலை, அதுக்குத் தான் இந்த அழுகை.

இவர் அனேகமா, விஜயகலாவுடனே பேசுகிறார் போலுள்ளது.

பெரும் யத்தம் இடையே, மண்னெண்ணய் விற்று பணம் சேர்த்த பெருமுயற்சி கொண்ட ஒருவர் மனைவி.

வேலை என்பது அனுதாபத்தால் கிடைப்பதல்ல. திறமையால், அதனால் காண்பிக்கப்படும் தன்னம்பிக்கையை, வேலை தருபவர் கண்டு கொள்ளும் போது.

ஏனெனில் வேலை தருபவர் தருமத்தாபனம்நடாத்துவதில்லை. நாலு காசு உழைத்து, அதில் வரும் லாபத்திலே சம்பளம் தருவார்.

இதற்கு எமது இனம்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் .....
இவர்களை இப்படியான அறிவுடன் வளர்ப்பதே எமது சமூகம்தான்.

போலிதான் தமிழனின் உண்மையான சொத்து 
இன்னொருவனை மட்டம் தட்டவே "உயர்" சாதி என்று சொன்னான்.
இன்னொரு மனிதன் அதில் அடிப்பட்டு அவனின் பரம்பரை வாழ்வே 
சீரழிந்து போவதை யாரும் கண்டு கொள்ளவில்லை.
இந்த "உயர்" சொல்லின் உண்மையான அர்த்தமே யாருக்கும் தெரியவில்லை.
அப்படி ஏதும் தங்களிடம் இருக்கிறதா என்ற எண்ணம் யாருக்கும் இருக்கவில்லை. 

அரச உத்தியோகமே "உத்தியோகம்" என்ற போலி தோற்றம் 
வருமானத்தை ... வாழ்வாதாரத்தை தாண்டி .. இந்த உத்தியோகத்தில் 
உள்ளவர்களால் கட்டமைக்க பட்ட ஒன்று. இன்னமும் சமூகம் ஏமாந்துகொண்டுதான் 
இருக்கிறது. படிப்பு அறிவு வளர என்ற சிந்தை யாரிடமும் இல்லை.
"நான் படித்தவன்" என்ற ஒரு போலி மாயையால் படித்தும் 
அறிவில் வலதுகுறைந்து வாழும் ஒரு சமூகம் வளர்கிறது.

இத்தனை  படிப்பாளிகளை கொண்ட தமிழ் சமூகம் 
ஏதாவது ஒரு முன்னேற்றத்தை ஒரு படித்தவனால் கண்டிருக்கிறதா ?
அதை விரல் விட்டு எண்ண முடியும். 
ஒவ்வரு வருடமும் .... உயர் கல்வி பரீடசை வெளியாகும்போது 
ஒவ்வரு பாடசாலையும் போட்டி போடுகிறது ... இங்கு இத்தனை மாண்வர்களுக்கு 
இந்தளவு சித்தி என்று ...............
இந்த போட்டி ............ எல்லா இடத்திலும் இருக்கவேண்டுமே ?
பட்டம் பெற்று வெளியேறியவுடன் .... அவர்கள் சத்தத்தை  கூட
சமூகத்தில் கேட்க முடியவில்லை. 
நீதிபதி இளம்செழியன் என்று ஒரு பெயரை கேட்க்கிறேன் ....
சமூகம் சார்ந்து சிந்திப்பவன் என்று இப்படி ஒன்றோ ... இரண்டோ 
எங்காவது எப்போதாவது கேட்க முடிகிறது.
சமூகத்தை சீரழிக்க உதவியவன் பட்டியல் விண்ணை தாண்டும்.

நான் சுருக்கமாக சொல்ல வருவது...........
இது நடக்க கொஞ்சம் நாள் எடுக்கலாம் ... ஆனால் நடக்கும்.
இங்கிருந்து குளிர் வெய்யில் பாராது அடி அடி  என்று  அடித்து 
அங்கு அனுப்பி ... அவர்கள் முன்னேறியவுடன்.
இங்கிருப்பவர்களை தீண்ட தகாதவர்கள் ... தர குறைவான வேலை 
செய்பவர்கள் என்று .......
ஏணிகளை கூட ஒருநாள் இந்த இனம் எட்டி உதைத்து கொள்ளும். 

என்னை கேட்டால் ..........
தலையில் போட்ட குண்டு காணாது என்றுதான் சொல்லுவேன்.
இதுக்கு பிறகும் புத்தி வரவில்லை என்றால் .........
வேறு என்னதான் சொல்ல தோன்றும்?? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.