Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் வெசாக் கொண்டாட்டங்கள்

Featured Replies

யாழ்ப்பாணத்தில் வெசாக் கொண்டாட்டங்கள்

யாழ்ப்பாண நகரில், வெசாக் கொண்டாட்டத்திற்கான ஆயத்தங்களில் பாதுகாப்புத் தரப்பினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாண பொதுநூலகச் சுற்றாடலில் வெசாக் தோரணங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நாளை புதன் கிழமை இவை திறந்து வைக்கப்படவுள்ளன.

http://uthayandaily.com/story/1860.html

  • கருத்துக்கள உறவுகள்

புத்தருக்கு அரோகரா....

  • தொடங்கியவர்
10 minutes ago, putthan said:

புத்தருக்கு அரோகரா....

புத்தருக்கு அரோகரா சொன்ன முதல் ஆள் புத்தன்தான்..:grin:

புத்தம் சரணம் கச்சாமி

தர்மம் சரணம் கச்சாமி

சங்கம் சரணம் கச்சாமி

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நவீனன் said:

புத்தருக்கு அரோகரா சொன்ன முதல் ஆள் புத்தன்தான்..:grin:

புத்தம் சரணம் கச்சாமி

தர்மம் சரணம் கச்சாமி

சங்கம் சரணம் கச்சாமி

சும்மா கொண்டாமாட்டோம், புறக்கணிப்பு செய்வோம் என்று தொடங்காமல் அரோகரா சொல்லி அவரையும் "அப்பே ஆளுவா" யாக்கி எங்களுடைய சாமியறையில் ஒரு சின்ன இடத்தை கொடுத்திட வேண்டும் .பிறகு புத்தருக்கே தர்மசங்கட்மாக போய்விடும் யாருக்கு சப்போர்ட் பண்ணுவது என்று...

  • தொடங்கியவர்

வடக்குக் கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் வெசாக் நிகழ்வு

வடக்கு மாகா­ணக் கல்வி, பண்­பாட்­ட­லு­வல்­கள், விளை­யாட்­டுத்­துறை மற்­றும் இளை­ஞர் விவ­கார அமைச்­சின் பண்­பாட்­ட­லு­வல்­கள் திணைக்­க­ளத்­தின் அனு­ச­ர­ணை­யில் வெசாக் வெளிச்­சக்­கூடு காட்­சிப்­ப­டுத்­த­லும் பக்­திப்­பா­டல் இசைத்­தல் நிகழ்­வும் நாளை புதன்­கி­ழ­மை­யும், நாளை மறு­தி­னம் வியா­ழக்­கி­ழ­மை­யும் இரவு 7மணி தொடக்­கம் வவு­னியா ஸ்ரீ போதி­தக்­சி­ணா­ரா­மய விகா­ரை­யில் நடை­பெ­ற­வுள்­ளது.

நிகழ்ச்சி ஒருங்­கி­ணைப்பை வவு­னியா மாவட்­டச் செய­ல­கம், வவு­னியா பிர­தேச செய­ல­கம், வவு­னியா தெற்­குப் பிர­தேச செய­ல­கம், அரச திணைக்­க­ளங்­கள் மற்­றும் பொலிஸ், முப்­ப­டை­யி­னர், சிவில் பாது­காப்­புப் படை­யி­னர், வவு­னியா தெற்கு பௌத்த சங்­கம் ஆகி­யன இணைந்து சிறப்­பிக்­க­வுள்­ளன.

http://uthayandaily.com/story/1908.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, putthan said:

சும்மா கொண்டாமாட்டோம், புறக்கணிப்பு செய்வோம் என்று தொடங்காமல் அரோகரா சொல்லி அவரையும் "அப்பே ஆளுவா" யாக்கி எங்களுடைய சாமியறையில் ஒரு சின்ன இடத்தை கொடுத்திட வேண்டும் .பிறகு புத்தருக்கே தர்மசங்கட்மாக போய்விடும் யாருக்கு சப்போர்ட் பண்ணுவது என்று...

கொழும்பிலை ஆடிவேல் நடத்தலாம் எண்டால்...யாழ்ப்பாணத்திலை வெசாக் நடத்தலாம் தானே.......

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

கொழும்பிலை ஆடிவேல் நடத்தலாம் எண்டால்...யாழ்ப்பாணத்திலை வெசாக் நடத்தலாம் தானே.......

உன்மைதானே கு.சா இந்த வெசாக் பண்டிகை முடிந்த பின்  எத்தனை பேர் போட்டோக்கள் போடுவார்கள் என்று  பாருங்கோ வெசாக் பண்டிகையில் என்று  இன்று வடக்கு கிழக்கில் ஓடும் பேருந்துகள் தொடக்கம்  இருக்கும் முகாம்கள் வரைக்கும் (ராணுவ) அவர்கள் பண்டிகைகளை கொண்டாடுகிறார்கள் 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

கொழும்பிலை ஆடிவேல் நடத்தலாம் எண்டால்...யாழ்ப்பாணத்திலை வெசாக் நடத்தலாம் தானே.......

puthurbuddhacolour.jpgசோழர் கால புத்தர்.......சோழன் வழிபட்டிருக்கிறான் என்றால் ஏன் நாங்கள் வழிபடக்கூடாது....:unsure:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

puthurbuddhacolour.jpgசோழர் கால புத்தர்.......சோழன் வழிபட்டிருக்கிறான் என்றால் ஏன் நாங்கள் வழிபடக்கூடாது....:unsure:

புத்தனே சொன்ன பிறகு இனி நான் புத்தனையும் சேர்த்து வழி பட போகிறேன்   சாமி என்ன த்தை தான்  கொடுக்கிறது பெயருக்கும்  இனத்துக்கும் மட்டுமே சாமி மற்றும் படி வேலைக்கு ஆகதவர்கள் 

On 9/5/2017 at 1:58 PM, நவீனன் said:

யாழ்ப்பாண நகரில், வெசாக் கொண்டாட்டத்திற்கான ஆயத்தங்களில் பாதுகாப்புத் தரப்பினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

புத்தன் இன் பின்னால் ஒழிந்திருக்கும் கொலைகாரர்கள் யாழ் மண்ணில் இருக்கும் வரை இனப்படுகொலையாளர்களின் வெசாக் யாழ் மண்ணில் நடைபெறுவதில் ஒன்றும் புதினமில்லை!

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, முனிவர் ஜீ said:

புத்தனே சொன்ன பிறகு இனி நான் புத்தனையும் சேர்த்து வழி பட போகிறேன்   சாமி என்ன த்தை தான்  கொடுக்கிறது பெயருக்கும்  இனத்துக்கும் மட்டுமே சாமி மற்றும் படி வேலைக்கு ஆகதவர்கள் 

பண்டாரநாயக்க பிரதமராக வருவதற்கு முன்னர் சிவன், பார்வதி, பிள்ளையார், முருகன், புத்தர், இயேசு, அனைவரின் படங்களையும் ஒன்றாக வைத்து வீடுகளில் வணங்கிவந்தார்கள். பேரூந்து, பாரவூர்திகளிலும் அனைத்துக் கடவுள்களும் ஒரே கண்ணாடிச் சட்டத்துக்குள் அடங்கிக் காட்சிகொடுத்தனர். 
 
  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Paanch said:

இப்பவும் சிங்களவர்கள் கடைகளில் இருக்கிறது  அதே படங்கள் அவர்களின் வாகனன்ங்களிலும்  அல்லாவை தவிர 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, முனிவர் ஜீ said:

இப்பவும் சிங்களவர்கள் கடைகளில் இருக்கிறது  அதே படங்கள் அவர்களின் வாகனன்ங்களிலும்  அல்லாவை தவிர 

அல்லாவுக்கு உருவமில்லை முனிவர் ஐீ. இருந்திருந்தால் அவருடைய படமும் இணைந்திருக்கும். தமிழர்களும் வணங்கியிருப்பார்கள். இருந்தும் இலங்கையில் அல்லாவை வணங்குபவர்கள் அத்தனைபேரும் பூர்வீகத்தில் தமிழர்கள்தான். இயேசுவை வணங்குபவர்கள் தமிழரும், சிங்களவருமே. :100_pray::100_pray:  

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Paanch said:

பண்டாரநாயக்க பிரதமராக வருவதற்கு முன்னர் சிவன், பார்வதி, பிள்ளையார், முருகன், புத்தர், இயேசு, அனைவரின் படங்களையும் ஒன்றாக வைத்து வீடுகளில் வணங்கிவந்தார்கள். பேரூந்து, பாரவூர்திகளிலும் அனைத்துக் கடவுள்களும் ஒரே கண்ணாடிச் சட்டத்துக்குள் அடங்கிக் காட்சிகொடுத்தனர். 
 
அநேகமான புத்த விகாரைகளிள் பிள்ளையாரை வாசலில் வைத்திருக்கிறார்கள்....

நேற்று கொழும்பில் வெசாக் பண்டிகை 

IMG_7832.jpg

IMG_7841.jpg

IMG_7853.jpg

IMG_7859.jpg

IMG_7882.jpg

IMG_7915.jpg

IMG_7922.jpg

IMG_7861.jpg

IMG_7862.jpg

IMG_7875.jpg

IMG_7879.jpg

  • கருத்துக்கள உறவுகள்

நாங்களும் உங்கள் பக்கம்தான் .....!  tw_blush:

IMG_7859.jpg

  • கருத்துக்கள உறவுகள்

Related imageFlag of the Bharatiya Janata Party.svg

  • கருத்துக்கள உறவுகள்

சிறி லங்கா ஒரு பௌத்த நாடு. அந்த நாட்டின் எந்த மூலையிலும் வெசாக் மட்டுமல்ல

எந்தப் பௌத்த மதக் கொண்டாட்டங்களும் நடைபெறும்
சிறுபான்மையினர் கைதட்டி வாழ்த்துச் சொல்லலாம்
அல்லது வாயைப் பொத்திக் கொண்டு இருக்கவேண்டும் .

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம கோவிலகளில் அறுபத்துநான்கு நாயன்மாருடன் புத்தனையும் இணைத்து விட்டால் காணும் மதவெறி பிடிச்ச rssகாரனும் துவேசம் பிடிச்ச பிக்குகளும் மல்லுகட்டட்டும். புலம் பெயர் கோவில்கள் கவனிக்க வைத்த பின் எடுத்தாலும் கொல்லுப்பாடு உருவாகும் வைத்தாலும் கொல்லுப்பாடு ரணகளமாக்கட்டும் இரண்டு மதவெறி கூட்டமும் முரன்படவேண்டியதுதான் நம்மவர் அப்பாவியாக முகத்தை வைத்துகொண்டு திரிய வேண்டியதுதான்.

5 hours ago, putthan said:

அநேகமான புத்த விகாரைகளிள் பிள்ளையாரை வாசலில் வைத்திருக்கிறார்கள்....

பவுத்தம் இந்துவை விழுங்குகின்றது இலங்கையில்என்று செய்தி இல்லா நேரம் கொட்டை எழுத்தில் போட்டுட வேண்டியதுதான் பிறகென்ன அரகர சிவசம்போ "ஆயிரம் வருடங்களுக்கு முன்  கட்டிய அணை மூலம் இலங்கை படையெடுப்பை சந்திக்கும்" என்று அங்குள்ள லூசு அறிக்ககை  விட்டாலும் ஆச்சரியபடுவதற்கில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

முன்னரெல்லாம் வெசாக் கொண்டாட்டம் பார்க்க வேண்டுமென்றால் நெடும் தூரம் பயணம் செய்து திக்கு திசை தெரியாத இடங்களுக்கு நிறைய பணம் செலவு செய்து போக வேண்டும்.

இப்போது அந்தக் குறை தமிழ் மக்களுக்கு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஈழப்பிரியன் said:

முன்னரெல்லாம் வெசாக் கொண்டாட்டம் பார்க்க வேண்டுமென்றால் நெடும் தூரம் பயணம் செய்து திக்கு திசை தெரியாத இடங்களுக்கு நிறைய பணம் செலவு செய்து போக வேண்டும்.

இப்போது அந்தக் குறை தமிழ் மக்களுக்கு இல்லை.

எல்லாம் புத்தன் செயல்:10_wink:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

எல்லாம் புத்தன் செயல்:10_wink:

இவ்வளவு நெருங்கி வருவீர்கள் என்று நினைக்கவே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Paanch said:

அல்லாவுக்கு உருவமில்லை முனிவர் ஐீ. இருந்திருந்தால் அவருடைய படமும் இணைந்திருக்கும். தமிழர்களும் வணங்கியிருப்பார்கள். இருந்தும் இலங்கையில் அல்லாவை வணங்குபவர்கள் அத்தனைபேரும் பூர்வீகத்தில் தமிழர்கள்தான். இயேசுவை வணங்குபவர்கள் தமிழரும், சிங்களவருமே. :100_pray::100_pray:  

ஆனால் ,மக்காவில் உள்ள  கறுத்த கூண்டை  அங்கு சீசனுக்கு அதாவது உம்றா , கச் செல்பவருக்கு ஒரு ஓட்டைகுள்ளால எதையோ காண்பிப்பார்கள்   உன்மையில் என்னென்று தெரியாது அதற்குள் இருப்பது

கொழும்பை விட  கிளிநொச்சி வெசாக் கூண்டால் மிளிர்கிறதே படங்கள் தேவையாயின் இணைக்கலாம்  

  • கருத்துக்கள உறவுகள்

பெளத்தர்கள் வாழாத யாழ்ப்பாணத்தில் எதுக்கு இவ்வளவு பெரிய வெசாக் எடுபிடிகள். இதை தான் புத்தர் செய்யச் சொல்லி போதிச்சவரோ..??!  சிங்களவங்கள் இன்னும் பிற்போக்குத்தனமாகவே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். என்ன.. உலக மயமாக்கத்தை விரும்பும்.. பெரிய வல்லரசு முதலைகளை கைக்குள் போட்டுக் கொண்டு சொந்த நாட்டை அடகு வைச்சுக் கொண்டு.. தமிழனை வெற்றி கொண்டு விட்டதாகப் படம் காட்டிக் கொண்டிக்கிறார்கள். போர்த்துக்கீயர் காலத்தில் இருந்து இது தான் கதை. :rolleyes:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, nedukkalapoovan said:

பெளத்தர்கள் வாழாத யாழ்ப்பாணத்தில் எதுக்கு இவ்வளவு பெரிய வெசாக் எடுபிடிகள். இதை தான் புத்தர் செய்யச் சொல்லி போதிச்சவரோ..??!  சிங்களவங்கள் இன்னும் பிற்போக்குத்தனமாகவே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். என்ன.. உலக மயமாக்கத்தை விரும்பும்.. பெரிய வல்லரசு முதலைகளை கைக்குள் போட்டுக் கொண்டு சொந்த நாட்டை அடகு வைச்சுக் கொண்டு.. தமிழனை வெற்றி கொண்டு விட்டதாகப் படம் காட்டிக் கொண்டிக்கிறார்கள். போர்த்துக்கீயர் காலத்தில் இருந்து இது தான் கதை. :rolleyes:

தமிழர்தாயகத்தின் மீது தமது ஆதிக்கத்தை நிறுவும் நிறுவனமயப்பட்ட அமைப்பாக இலங்கையில் பெளத்த அமைப்புகள் செயற்பட்டுவருகின்றன. தமிழரது பாதுகாப்பு வளையம் ஒரு இடைத்தடங்கலாக இருந்த காலம் போக மீண்டும் அவர்களது அடாத்தும் ஆட்சியதிகாரமும் தலையெடுத்து முன்னகர்கிறது.  ஒரு இனத்தை அழித்தலென்பது உயிர்க்கொலையூடக மட்டுமன்றி கலாசார பண்பாட்டு மத மொழித்தினிப்புகள் ஊடாகவும் செய்யலாம் என்பதை சிங்களம் நிறைவேற்றிவருகிறது. இதுவரைகாலமும்  படைகளைக்கொண்டு ஆயுதவழியில் செய்தததை இப்போது அதே படைகளைக் கொண்டு கலாசார பண்பாட்டு மத மொழியழிப்பைச் செய்வதனூடாக நிறைவேற்றுகிறததென்பதே பொருத்தமாகும். இதில் மதம் மண்ணாங்கட்டியன்பதெல்லாம் ஒரு கவசமாகும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.