Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''ஏன் அம்மா என்னை புரிந்து கொள்கிறீர்கள் இல்லை. எனது மரணத்திற்கு எவரும் காரணம் இல்லை'' ; மாணவியின் தற்கொலைக்கான காரணம் வெளியாகியது

Featured Replies

''ஏன் அம்மா என்னை புரிந்து கொள்கிறீர்கள் இல்லை. எனது மரணத்திற்கு எவரும் காரணம் இல்லை'' ;  மாணவியின் தற்கொலைக்கான காரணம் வெளியாகியது

 

 

என்னைத் தேட வேண்டாம் என்னை சந்தோஷமாக வாழவிடவில்லை. இத்துடன் என் வாழ்க்கையை முடித்துக்கொள்கின்றேன். எனது மரணத்திற்கு எவரும் காரணம் இல்லை என மன்னாரில் புகையிரதத்துக்கு முன்னால் பாய்ந்து தற்கொலைசெய்து கொண்ட மாணவியினால் எழுதப்பட்ட  3 பக்கங்கள் கொண்ட கடிதமொன்று பொலிஸாரிடம் கிடைத்துள்ளது.

fsfa.jpg

மன்னார் பெரிய பலத்துக்கு அருகில் கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த ரயில் ஒன்றில் குறித்த மாணவி நேற்று மாலை  பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவர் இறுதியாக எழுதிய கடிதம் கிடைக்கப்பெற்றுள்ளது.

18762392_10207385698915407_169086883_n.j

உயிரிழந்த மாணவி மன்னாரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர் தரத்தில் கல்வி கற்கும் தயாளினி என அழைக்கப்படும் சண்முகலிங்கம் மிதுலா என தெரியவந்தள்ளது.

18685381_10207385698835405_1351777039_n.

மாணவி தனது சொந்த இடமான முழங்காவில் பகுதிக்கு சென்று விட்டு மீண்டும் மன்னார் உப்புக்களம் பகுதியில் உள்ள தனது உறவினர் ஒருவரின் வீட்டிற்குச் சென்றபோதே குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

18741415_10207385699035410_1038878113_n.

இந்த அனர்த்தம் இடம்பெறும் முன்னர் மூன்று பக்கம் அடங்கிய கடிதம் ஒன்றை மாணவி எழுதி வைத்துள்ளார்.

சம்பவம் பற்றிமேலும்தெரியவருவதாவது,

முழங்காவில் பகுதிக்குச் சேர்ந்த தயாளினி என அழைக்கப்படும் சண்முகலிங்கம் மிதுலா என்ற மாணவி மன்னார் நகரில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர் தரத்தில் கல்வி கற்று வருகின்றார்.

18679064_10207385699355418_519123820_n.j

குறித்த மாணவி முழங்காவிலில் உள்ள தனது கிராமத்தில் இருந்து உடைகள் அடங்கிய பொதியொன்றுடன் மன்னாரில் உள்ள தனது வாடகை வீட்டை நோக்கி வந்துள்ளார்.

 

இந்த நிலையில் குறித்த மாணவி மன்னார் பெரிய பலத்துக்கு அருகில் கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த ரயில் ஒன்றின் முன் நேற்று மாலை பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதன் போது மாணவி உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

மாணவியின் உடலம் அதே புகை1478-2-ffccbc93f50f40e0366d6728f380ee56.யிரதத்திலேயே ஏற்றப்பட்டு மன்னார் சௌத்பார் புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதோடு, அவர் தன்னுடன் எடுத்துவந்த பொதியும் சோதனை செய்யப்பட்டது.

 

இதன் போது குறித்த மாணவி மனதை வேதனைக்கு உள்ளாக்குகின்ற வகையில் சுமார் 3 பக்கங்களை கொண்ட கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளமை தெரியவந்தது.

 

குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

ஏன் அம்மா எனக்கு மட்டும் இப்படி நடக்கிறது. என்னுடைய வாழ்க்கையில் சந்தோஷம் , அன்பு, பாசம் என்பவற்றை நான் இழந்து நிற்கிறேன். உங்களால் தான் அதை நான் இழந்து தனியாக தவிக்கின்றேன். அம்மா உங்களுக்குத் தெரியுமா நாள் அம்மா அம்மா என்று பாசமுடன் ஏங்கிக் கொண்டிருக்கிறேன் ஏன் அம்மா என்னை புரிந்து கொள்கிறீர்கள் இல்லை.

எனக்காக உள்ளவர்களுடன் சண்டையிட்டு என்னை அவர்களிடம் இருந்து பிரிக்க நினைக்கிறீர்கள். தொடர்ந்தும் எனக்கு துரோகம் செய்ய நினைக்கிறீர்கள் என 3 பக்கங்கள் கொண்ட குறித்த கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.

1478-6-25c5893d63f0c95a718d84463fca2b0d.

இதேவேளை, எனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என்றும் தனது வாழ்க்கையில் சந்தோசம் இல்லை எனவும் இதன் காரணமாகவே குறித்த முடிவை எடுத்துள்ளதாகவும் நான் இறப்பதற்கு காரணம் என்று சொன்னால் எனது குடும்பமே காரணம் எனவும் அக்கடிதத்தில் மேலும் எழுதப்பட்டுள்ளது.

 

தற்போது மாணவியின் சடலம் மன்னார் பொதுவைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/20355

  • கருத்துக்கள உறவுகள்

அனுதாபம் இல்லை. 

கோபம் மட்டுமே!

  • கருத்துக்கள உறவுகள்

கையெழுத்து நன்றாக உள்ளது, தலையெழுத்துதான் தவறி விட்டது....!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!

2 hours ago, Nathamuni said:

அனுதாபம் இல்லை. 

கோபம் மட்டுமே!

தல.. அவனவனுக்கு வந்தால்தானே தெரியும் தலைவலியும், திருகுவலியும். வெளிநாட்டில் என்றால் பரவாயில்லை.. அரசாங்கத்தின் தயவில் ஆவது காலத்தை ஓட்டலாம். இந்த சின்னப்பிள்ளைக்கு ஆதரவு இல்லாமல் போனது அவளின் குற்றமா? பெற்றவர்கள் மற்றும் சமூகத்தின் மேல்தான் பெரிய அளவு குற்றம் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, இசைக்கலைஞன் said:

ஆழ்ந்த இரங்கல்கள்..!

தல.. அவனவனுக்கு வந்தால்தானே தெரியும் தலைவலியும், திருகுவலியும். வெளிநாட்டில் என்றால் பரவாயில்லை.. அரசாங்கத்தின் தயவில் ஆவது காலத்தை ஓட்டலாம். இந்த சின்னப்பிள்ளைக்கு ஆதரவு இல்லாமல் போனது அவளின் குற்றமா? பெற்றவர்கள் மற்றும் சமூகத்தின் மேல்தான் பெரிய அளவு குற்றம் இருக்கு.

அம்மா திட்டுறத்துக்கு இது தான் தீர்வு என்றால்....

நானும் இல்லையை.... அட நீரும் இல்லையே...

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

அம்மா திட்டுறத்துக்கு இது தான் தீர்வு என்றால்....

நானும் இல்லையை.... அட நீரும் இல்லையே...

அட.. முழுப் பிரச்சினையும் என்ன எண்டு தெரியேல்ல.. எங்கட "பழைய" சமூக கட்டமைப்பில் அம்மா அப்பாவோடு பிணக்கு என்றால் மாமா, மாமி அல்லது சித்தப்பா, பெரியப்பாமார் தலையிட்டு தீர்த்து வைப்பினம். இந்த கட்டமைப்பு முறிந்தால் சிறு பிள்ளைகளுக்குத்தான் கெடுதல். ஒன்றில் சமூகம் பாதுகாப்பு தரவேண்டும்; இல்லாவிட்டால் அரசாங்கள் பாதுகாப்பு தரவேண்டும். நம் ஊரில் இப்போது இரண்டும் இல்லை என்பதுதான் நிலை. அதனால இறந்துபோன பிள்ளையை குற்றம் சொல்லாதிங்கப்பா.. tw_anguished:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, suvy said:

கையெழுத்து நன்றாக உள்ளது, தலையெழுத்துதான் தவறி விட்டது....!

நானும் உண்மையில் கடிதத்தை வாசிக்க ஆரம்பிக்கும் போதே நீங்கள் எழுதியதைத்தான் நினைத்தேன்.
குடும்பத்துக்குள் என்ன பிரச்சனையோ யாருக்குத்தெரியும்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, இசைக்கலைஞன் said:

அட.. முழுப் பிரச்சினையும் என்ன அதனால இறந்துபோன பிள்ளையை குற்றம் சொல்லாதிங்கப்பா.. tw_anguished:

நான் கடிதத்தை வாசிக்கவில்லை.

அம்மா திட்டினால்.... அவருக்கு கொடுக்கும் மரணதண்டனை தான் தற்கொலை.

இவ்வளவு எழுதுற அளவு படிப்பு வழங்கப்பட்டுள்ளதே. ஓரளவு சிந்திக்க முடியாதா?

அதுவே என் கோபம்... இல்லை... ஆதங்கம்...

  • கருத்துக்கள உறவுகள்

அந்த அம்மா வேண்டுமென்றே தெரிந்தே அந்தப் பிள்ளையை தண்டித்து இருந்தால்/கஸ்டப்படுத்தி இருந்தால் தொலைஞ்சது சனியன் என்டு பேசாமல் இருப்பார். அவரை அறியாமல் பிழை விட்டு இருந்தால் அவரது வாழ்க்கை முழுக்க இதற்காக வருந்துவார்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல வடிவான கையெழுத்து!

நானும் இதைத் தான் நினைத்தேன்!

தலையெழுத்தை நான் நம்புவதில்லை!

இந்தப் பிள்ளையும் தலையெழுத்தை நம்பின படியால் தான், இந்த முடிவுக்கு வந்திருக்கு!

எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது?

  • கருத்துக்கள உறவுகள்

பதின்ம வயதுப் பிள்ளைகளைக் கையாளும் தன்மை இப்போ பெற்றோரிடத்திலும் ஆசிரியர்களிடம் குறைந்து வருகிறது தாயகத்தைப் பொறுத்த வரை.  இதனால் பிள்ளைகளுக்கும் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்குமான இடைவெளி அதிகரிப்பதோடு.. பாடசாலைகள் மாணவர்களின் மன உள்ளக்கிடக்கைகளை வெளிக்கொணரும்.. வகையில் மன நல ஆலோசகர்களை கொண்டிருக்க கட்டாயப்படுத்தப்பட வேண்டும்.

எல்லாப் பாடசாலைகளிலும் ஒரு மனநல ஆலோசனையாளரும்.. ஒரு வைத்திய தாதியும் இருக்கும் பட்சத்தில்.. இப்படியான மாணவ.. மாணவியர் வெளிப்படையாக தங்கள் பிரச்சனைகளைக் கூற அவர்களுக்கு நம்பிக்கை ஊட்டப்பட்டிருப்பின்.. இந்தப் பிள்ளை இந்த முடிவுக்குப் போயிருக்காது.

இதே முடிவு.. எவ்வளவு முட்டாள் தனமானது என்பதை அவள் சிந்திப்பதற்கு இடமளிக்காத குடும்ப.. சமூக.. பாடசாலைச் சூழல்களே இங்கு கண்டிக்கப்பட வேண்டியவை. 

இதே பிள்ளை.. அவனின் 21 வயதில்.. இப்படி ஒரு முடிவுக்கு போயிருக்க வாய்ப்பிருக்குமா என்று கேட்டால்.. குறைவு என்றே அர்த்தமாகும்.

பிள்ளைகளோடு.. நண்பர்களாக.. பெற்றோர் பழகும் போது.. இன்னும் பெற்றோர் - பிள்ளைகள் பிணைப்பும் இடைவெளியும் குறையும், மாறாக.. தாம் தாம் நினைத்ததை இரு தரப்பும் விட்டுக்கொடுப்புக்கு இடமின்றி.. செய்யப் போனால்.. நிலைமை இப்படித்தான் அமையும். தவிர்ப்பது கடினமாகும்.

எமது குடும்ப.. சமூக.. பாடசாலைச் சூழல்கள் நவீன காலத்திற்கு ஏற்ப பிள்ளைகளோடு உறவாட மாற்றி அமைக்கப்பட்டால் இன்றி.. இப்படியான சம்பவங்கள் பெருகுமே தவிர குறைய வாய்ப்பில்லை எனலாம். :rolleyes:tw_angry:

அந்தக் குழந்தையின் விழிகளில் இருக்கும் கூர்மை இதுவோர் அநியாய சாவு என்பதை உறுதிப்படுத்துகிறது!

பெற்றோர்கள் கண்டிப்பதில் தவறில்லை! கண்டிக்கத்தான் வேண்டும். ஆனால் ஒவ்வொரு கண்டிப்பின் பின்னரும் சிறு இடைவெளியில் பலமடங்கு பாசத்தை பொழிய வேண்டும்! பிள்ளைகள் மீது உண்மையான அக்கறையை, அன்பை அவர்கள் உணரச்செய்ய வேண்டும்! இதில் தான் பெரும்பாலான பெற்றோர்கள் தவறிழைக்கிறார்கள். இதன் பின்னணியில் எமது கல்வி, மத, சமூக கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளே இருப்பதாக கருதுகிறேன்!

இவற்றை நிவர்த்தி செய்ய புத்திஜீவிகள் என்பவர்கள் முன்வரவேண்டும்! பொறுப்புள்ள ஊடகங்களுக்கும் இதில் பங்குண்டு!  

 

  • கருத்துக்கள உறவுகள்

 உன்மையில் தாய்ப்பாசத்துக்கு ஏங்கித்தான் இறந்திருப்பாளேயானால் ஆழ்ந்த அனுதாபங்கள்   இன்னும் சில பெண்களை புரிந்து கொள்ள முடியாமல் உள்ளது :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, போல் said:

அந்தக் குழந்தையின் விழிகளில் இருக்கும் கூர்மை இதுவோர் அநியாய சாவு என்பதை உறுதிப்படுத்துகிறது!

பெற்றோர்கள் கண்டிப்பதில் தவறில்லை! கண்டிக்கத்தான் வேண்டும். ஆனால் ஒவ்வொரு கண்டிப்பின் பின்னரும் சிறு இடைவெளியில் பலமடங்கு பாசத்தை பொழிய வேண்டும்! பிள்ளைகள் மீது உண்மையான அக்கறையை, அன்பை அவர்கள் உணரச்செய்ய வேண்டும்! இதில் தான் பெரும்பாலான பெற்றோர்கள் தவறிழைக்கிறார்கள். இதன் பின்னணியில் எமது கல்வி, மத, சமூக கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளே இருப்பதாக கருதுகிறேன்!

இவற்றை நிவர்த்தி செய்ய புத்திஜீவிகள் என்பவர்கள் முன்வரவேண்டும்! பொறுப்புள்ள ஊடகங்களுக்கும் இதில் பங்குண்டு!  

 

ஆழ்ந்த அனுதாபங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.