Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für கவிக்கோ அப்துல் ரகுமான்

தமிழ் எழுத்து உலகிற்கு பேரிழப்பு.. கவிக்கோ... அப்துல் ரகுமான், காலமானார்.

கவிக்கோ அப்துல் ரகுமான் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். அவருக்கு வயது 80.

மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அப்துல் ரகுமான், இன்று அதிகாலை பனையூரிலுள்ள தனது வீட்டில் மூச்சுத் திணறல் காரணமாக காலமானார். 

'கவிக்கோ' என்று போற்றப்படும் தமிழ்க் கவிஞர் அப்துல் ரகுமான், மதுரையில் 1937ம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தையும், தாத்தாவும் சிறந்த உருது கவிஞர்கள்.

கல்லூரியில் தமிழை சிறப்புப் பாடமாக எடுத்துப் பயின்று, இலக்கண, இலக்கியங்களை கற்று, கவிதை எழுதத் துவங்கினார். தமிழ், ஆங்கிலம், அரபி, உருது, பாரசீகம், இந்தி ஆகிய பல மொழிகளிலும் புலமை பெற்றிருந்த இவர், சமஸ்கிருதமும் பயின்றவர்.

1937-ஆம் ஆண்டு நவம்பர் 9-ல் மதுரை மாவட்டத்தில் பிறந்த அப்துல் ரகுமான் தனது தொடக்கக் கல்வியையும் உயர்நிலைப் பள்ளிக் கல்வியையும் மதுரையில் உள்ள பள்ளிகளில் பயின்றார்.

இவரது முதல் கவிதை தொகுப்பு ‛பால்வீதி' 1974ம் ஆண்டு வெளிவந்தது. தொடர்ந்து பல இதழ்களில் கட்டுரைகள், கவிதைகள் எழுதினார்.

வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் தமிழ்துறை தலைவராக 20 ஆண்டுகள் பணியாற்றினார். தமிழில் கவிதைக் குறியீடுகள் குறித்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்ற இவர், 1999ல் 'ஆலாபனை' கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது வென்றார்.

- தற்ஸ்  தமிழ். -

கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார்!

கவிக்கோ அப்துல் ரகுமான் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை சென்னையில் காலமானார். 

கவிக்கோ

1937 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 9 ஆம் தேதி பிறந்த கவிக்கோ, 'வானம்பாடி' இயக்கக் கவிஞர்களோடு இணைந்து இயங்கிவந்தவர். தமிழில் கவிதைக் குறியீடுகள்குறிந்து ஆராய்ந்து முனைவர் பட்டம்பெற்றவர். தமிழில் ஹைக்கூ, கஜல் ஆகிய பிறமொழி இலக்கியங்களைப் புனைந்ததிலும் பரப்பியதிலும் இவர் குறிப்பிடத்தக்கவர். அறிவுமதி உள்ளிட்ட இளந்தலைமுறைக் கவிஞர்களுக்கு ஆசானாகவும் இவர் விளங்கினார். 

 70 வயதாகிய இவருக்கு, சென்னை பனையூரில் உள்ள அவரது வீட்டில் 2 மணியளவில் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், இன்று அதிகாலை சென்னையில் காலமானார். 1999-ம் வருடம் 'ஆலாபனை' கவிதைக்காக சாகித்ய அகாடமி விருது வென்ற அப்துல் ரகுமான், தி.மு.க ஆட்சி காலத்தில் வக்பு வாரியத் தலைவராகவும் இருந்தார்.

http://www.vikatan.com/news/tamilnadu/91091-abdul-rahman-passed-away-in-chennai.html

மறைந்த அப்துல் ரகுமானுக்கு நாளை மறுநாள் இறுதி சடங்கு: ஸ்டாலின் நேரில் அஞ்சலி

மறைந்த கவிக்கோ அப்துல் ரகுமான் உடலுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். இறுதிச் சடங்கு நாளை மறுநாள் நடைபெறும் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

 
 
மறைந்த அப்துல் ரகுமானுக்கு நாளை மறுநாள் இறுதி சடங்கு: ஸ்டாலின் நேரில் அஞ்சலி
 
சென்னை:
 
கவிஞரும், தமிழ்பேராசிரியருமான அப்துல் ரகுமான் (70) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். கவிக்கோ என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் அப்துல் ரகுமான் சென்னை பனையூரில் உள்ள அவரது வீட்டில் இரவு 2 மணியளவில் மூச்சுத்திணறலால் உயிரிழந்தார்.
 
இந்நிலையில், மறைந்த கவிக்கோ அப்துல் ரகுமான் உடலுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
 
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், "கவிக்கோ அப்துல் ரகுமானின் மறைவு செய்தியறிந்து அதிர்ச்சியுற்றேன். திமுக மீதும் கருணாநிதி மீதும் மிகுந்த பற்றுடன் இருந்தவர் அப்துல் ரகுமான்.தமிழுக்கு கவிக்கு வெகுமான இருந்தவர். அவரது தமிழ் என்றைக்கும் நிலைத்து நிற்கும். அவரை இழந்து நிற்கும் குடும்பத்தினருக்கு திமுக சார்பில் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
 
ஸ்டாலினை தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் அவரது மறைவுக்கு இரங்கல்கள் தெரிவித்து வருகிறார்கள்.
 
இந்த நிலையில், அப்துல் ரகுமானின் இறுதிச் சடங்கு, பனையூரில் நாளை மறுநால் நடைபெறும் என்று அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
 
ரகுமானின் மகன் லண்டனில் இருந்து வர வேண்டியுள்ளதால் கவிக்கோ அப்துல் ரகுமானின் இறுதிச் சடங்கு நாளை மறுநாள் நடைபெறும் என கூறப்படுகிறது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/06/02104627/1088604/MK-Stalin-tributes-to-kaviko-Abdul-Rahman.vpf

Edited by நவீனன்

ஆலாபனையால் தமிழ் இலக்கிய உலகிற்கு மரியாதை செய்த கவிக்கோ அப்துல் ரகுமான்

kaviko.png

கவிஞரும், தமிழ்பேராசிரியருமான அப்துல் ரகுமான் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். 80 வயதான கவிக்கோ என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்படும் அப்துல் ரகுமான் சென்னை பனையூரில் உள்ள அவரது வீட்டில் இரவு 2 மணியளவில் மூச்சுத்திணறலால் உயிரிழந்தார். 1937-ஆம் ஆண்டு நவம்பர் 9-ல் மதுரை மாவட்டத்தில் பிறந்த அப்துல் ரகுமான் தனது தொடக்கக் கல்வியையும் உயர்நிலைப் பள்ளிக் கல்வியையும் மதுரையில் உள்ள பள்ளிகளில் பயின்றார். பின்னர் மதுரை தியாகராசர் கல்லூரியில் சேர்ந்து இடைநிலை வகுப்பில் தேறினார். தொடர்ந்து அக்கல்லூரியிலேயே பயின்று இளங்கலை, முதுகலை பட்டங்களைப் பெற்றார்.

தமிழ்த்துறை தலைவர்

சென்னை தரமணியில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் அதன் இயக்குநராகப் பணியாற்றிய ச. வே. சுப்பிரமணியத்தை வழிகாட்டியாகக் கொண்டு புதுக்கவிதையில் குறியீடு என்னும் தலைப்பில் ஆய்வு செய்து சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். 20 ஆண்டுகள் தமிழ்த்துறையின் தலைவராகப் பணியாற்றினார். கவிதைகள், கட்டுரைகள் தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக 2009 மே முதல் 2011 வரை பணியாற்றி வந்தார்.  மேலும் இவர் தமிழன்னை விருது, பாரதிதாசன் விருது, கலைமாமணி விருது உள்ளிட்ட 14 விருதுகளை பல்வேறு அமைப்புகளால் வென்றிருக்கிறார். ஹைக்கூ, கஜல் உள்ளிட்ட பிறமொழி இலக்கியங்களை தமிழில் புனைந்திருக்கிறார்.

கவிக்கோ அப்துல் ரகுமான் தமது பால்வீதி கவிதை தொகுப்பில் தொடங்கி பித்தன் வரை பல்வேறு நூல்களை தமிழ் இலக்கிய உலக்கிற்கு கொடுத்துள்ளார்.

இவரது தந்தை உருதுக் கவிஞர். இவரது தாத்தா உருது, பாரசீக மொழிகளில் கவிதை புனையும் ஆற்றல் மிக்கவர். அதனால், இயல்பிலேயே இவரும் கவிதை எழுதும் திறன் கொண்டிருந்தார்.

தமிழில் உயர்கல்வி பயின்ற போது ஆங்கில இலக்கியம் மீதும் நேசம் பிறந்தது. கீட்ஸ், ஷெல்லி உள்ளிட்ட கவிஞர்களின் கவிதையில் மனம் கவரப்பட்டார். கல்லூரியில் நடக்கும் அனைத்து கவிதைப் போட்டிகளிலும் இவருக்குத்தான் முதல் பரிசு கிடைக்கும். முதுகலைக் கல்வி பயிலும்போது, மவுலானா ஜலாலுத்தீன் ரூமி, இக்பால், தாகூர், கலீல் ஜிப்ரான் ஆகியோரது கவிதைகளைப் படித்தார். அவர்களைப் போலவே எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டு, அவ்வாறே எழுதவும் தொடங்கினார்.

தமிழ், ஆங்கிலம், அரபி, உருது, பாரசீகம், இந்தி ஆகிய பல மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார். சமஸ்கிருதமும் கற்றார். எந்தத் துறையில் இறங்கினாலும் அதன் வேர் வரை சென்று ஆழக் கற்பது இவரது இயல்பு.
ஆறாவது விரல்
தமக்கு உயிரும் வாழ்க்கையுமே கவிதைதான் என்று சொன்னவர் அப்துல் ரகுமான். எழுதுகோலைத் தம் கையின் ஆறாவது விரலாகவே உணர்கிறார். ‘இந்த ஆறாவது விரல் வழியே வடியும் இரத்தமும் சதையும்தாம் தம் எழுத்துகள்’ என்று சொன்னவர்.

என் ஆறாவது விரல் வழியே
சிலுவையிலிருந்து
வடிகிறது ரத்தம்
ஆம் –
என் ‘மாம்சம்’
வார்த்தை ஆகிறது என்றவர்.

சுவையான பால்வீதி – 1974ல் இவரது முதல் கவிதை தொகுப்பான ‘பால்வீதி’ வெளிவந்தது. பாலைச் சுண்டக் காய்ச்சித் திரட்டாகக் கட்டி ஆக்கியது போன்று, சிந்தனையையும் கற்பனையையும் திரட்டி வடித்த புதுக்கவிதைகள் கொண்டது பால்வீதி.

நேயர் விருப்பம் – அடுத்து வெளிவந்தது, கவியரங்கங்களில் அவர் பல ஆண்டுகளாகப் படைத்த கவிதைகளுள் தெரிந்தெடுத்த சிலவற்றையும், இந்தி உருது இசைப்பாடல் வடிவங்களைத் தமிழில் அறிமுகப்படுத்திப் படைத்த பாடல்களையும் கொண்ட நேயர் விருப்பம். இது 1978ஆம் ஆண்டில் வெளிவந்தது.

புதுக்கவிதை தொகுதிகள்:-

அதைத் தொடர்ந்து 1989ஆம் ஆண்டு சுட்டுவிரல் என்ற நூல் வெளியானது. இந்த நூலில் சமுதாயச் சீரழிவுகளுக்குக் காரணமானவர்கள் அனைவரையும் குற்றம் சாட்டுகிறார். சினம் கொண்டு சாடியுள்ளார்.

ஆலாபனை:-

1995 ஆம் ஆண்டு ஆலாபனை வெளியானது. 1998ல் விதைபோல் விழுந்தவன் நூலும், 1998ல் முத்தமிழின் முகவரி, பித்தன் ஆகிய புதுக்கவிதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார்.

தமிழ் இலக்கியத்திற்கு மரியாதை:-

இவரது ‘ஆலாபனை’ கவிதைத் தொகுப்புக்காக சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. இதன்மூலம், வெகுகாலமாக தமிழ்க் கவிதைக்கு வழங்கப்படாமல் இருந்த இந்த விருதை தமிழுக்குப் பெற்றுத் தந்தார்.

காதல் இலக்கியம்:

2002 ஆம் ஆண்டு மின்மினிகளால் ஒரு கடிதம் என்னும் நூல் வெளிவந்துள்ளது. இது அரபி, உருது மொழிகளின் கஸல் என்னும் காதல் கவிதை வடிவத்தைத் தமிழில் அறிமுகம் செய்ய இவர் படைத்த அழகிய காதல் இலக்கியம். ஹைக்கூ, கஜல் ஆகிய பிறமொழி இலக்கிய வகைகளை தமிழில் பரவச் செய்தார். சூஃபி பாடல்களின் தத்துவ தரிசனம் இவர் பாடல்களில் பிரதிபலிக்கும். இலக்கிய கட்டுரைகள் இக்கவிதை நூல்கள் மட்டுமின்றி இரு ஆராய்ச்சி நூல்கள், பத்துக்கும் மேற்பட்ட இலக்கியக் கட்டுரை நூல்கள், பிறமொழிக் கவிதைகளை மொழிபெயர்த்து விளக்கி எழுதிய பல கட்டுரைத் தொகுதிகள் என்று பல நூல்களைப் படைத்து வெளியிட்டுள்ளார். தத்துவ கவிதைகள் ‘திராவிட நாடு’, ‘திராவிடன்’, ‘முரசொலி’, ‘தென்றல்’, ‘இன முழக்கம்’, ‘மன்றம்’, ‘விகடன்’ உள்ளிட்ட பல இதழ்களில் இவரது தொடர் கட்டுரைகள், சிறுகதைகள் வெளிவந்தன. இலக்கியத்தின் பல களங்களில் முத்திரை பதித்தாலும், ஒரு கவிஞராகவே இவர் புகழ்பெற்றார். இவரது தத்துவக் கவிதைகள் நல்ல வரவேற்பைப் பெற்றன.

கடைசி வரை சினிமா பாடல்களை எழுத மாட்டேன் என தீர்க்கமாய் இருந்த கவிக்கோ!

பல்வேறு விருதுகளுக்கும் படைப்புகளுக்கும் சொந்தக்காரரான கவிக்கோ அப்துல்ரஹ்மான் கடைசி வரை சினிமாவுக்கு பாடல்களை எழுதமாட்டேன் என தீர்க்கமாய் இருந்தவர் ஆவர்.  சினிமாவுக்கு பாட்டில்லை பல்வேறு படைப்புகளுக்கு சொந்தக்காரரான கவிக்கோ அப்துல் ரஹ்மான் சினிமாவுக்கு பாடல்களை எழுத மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தார். குறிப்பாக கவிக்கோ சினிமாவில் இடம் பெறும் குத்துப்பாட்டுகளை விரும்பியதில்லை. சினிமா குத்துப்பாடல்கள் குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கவிக்கோ பத்துப்பாட்டு என்றால் பதறுகிறோம். குத்துப்பாட்டு என்றால் குதூகலமாய் ஆடுகிறோம் என்றார்.

https://globaltamilnews.net/archives/28717

  • கருத்துக்கள உறவுகள்

18813537_10155025750858801_5624642373328ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன காரணம் என்று தெரியவில்லை .....
இவர் இறந்து விட்டார் என்றுதான் எண்ணிக்கொண்டு இருந்தேன்.

நல்லகாலம் லூசு மாதிரி இங்கு எதையும் எழுதாமல் விட்டுவிடடேன் 

ஆழ்ந்த இரங்கல்கள் !

(அன்னாரின் சில கவிதைகளை காப்பி அடித்து .... காதலை டேவோலோப் பண்ணியதால் 
மறைமுகமாக அண்ணலுக்கு கடமை பட்டுள்ளேன் ) 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்

Image associée

ஆழ்ந்த இரங்கல்கள்.....!

ஆழ்ந்த இரங்கல்கள்.....!

 

  • கருத்துக்கள உறவுகள்

எனது மனங்கவர்ந்த கவிஞர். அவரது சுட்டு விரல் என் கைகளிலே இருக்கிறது. இவ்வளவு சீக்கிமகப் போய்விடுவாரென்று எதிர்பார்க்க வில்லை. எனது ஒரு நூலை அவரது கவிக்களத்திற்தான் வெளியிட்டேன். அப்துல் ரகுமான் ஐயா அவர்கள் சுவனபதியில் திருவருளுடன் சேர்ந்திருக்க ஆண்டவன் அருள்புரிவாராக. அன்னாரின் குடும்பத்தினருக்கும் உறவினர் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிக்கிறேன்.

Edited by karu

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.