Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 ஒரு தெளிவுக்காக..

”நாம் தமிழர் அரசியல்” என்பது ஒரு கட்சிக்கான திரி அல்ல. மாறாக, நாமெல்லாம் தமிழர் எனும் கருத்தியல் கொண்ட எந்தப் பதிவை வேண்டுமானாலும் இடலாம்!

குறிப்பாக, பெ.மணியரசன், மு.களஞ்சியம் போன்றவர்களின் செவ்விகள் எல்லாம் இணைக்கப்படுகின்றன. இவர்கள் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் அல்லர்.

அதேபோல, ஐயா இமயவன், ஒரிசா பாலு போன்ற தனிமனித ஆளுமை கொண்டவர்களின் செவ்விகளும் இணைக்கப்படுகின்றன. காரணம் அவர்கள் நாமெல்லோரும் தமிழர்கள் எனும் கூற்றினை வழியுறுத்துவதால்..!

நாமெல்லோரும் திராவிடர்கள், இந்தியர்கள், சிறீலங்கன்ஸ், கனேடியன்ஸ். லண்டன்ஸ் என்கிற கருத்தியல்கள் இங்கே பதியப் படுவதில்லை!

”நாம் தமிழர்”

Edited by இசைக்கலைஞன்

  • Replies 3k
  • Views 276.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சீமான் தம்பிகள் நடத்திய போராட்டம் 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

"வேளாண்மை சட்டங்களின் நகல் எரித்து அதிரடி போராட்டம்.!!" காவிரி உரிமை மீட்புக்குழு

 

  • கருத்துக்கள உறவுகள்

பாஜகவின் அறிவோ அறிவு | நல்லவன் பாஜகவில் சேர மாட்டான் - சீமான்

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

உடையாரின் புரிதல் புரிந்ததுதானே. 😂

கட்டணம் செலுத்த பல சீமானின் தம்பிகள் சில்லறையோடு தயார் என்று மேலே எழுதியதைத் பார்த்தாலே தெரிகின்றது இது நாம் தமிழர் பிரச்சாரத்திற்கும், விளம்பரத்திற்குமான திரி என்று.  

 

இது தான் இந்த நடுநிலை என்று மதில் மேல் நிற்பவர்களது வேலை. கட்டணம் கட்டி எழுதுங்கள் என்பார்கள் கட்டுகிறோம் என்றால் அப்ப நீங்க அவர்களது வால் தானே என்பார்கள்

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

எனது வசன நடைகளை ஷூமா எடுத்து கையாண்டதும் (தெரிந்தோ, தெரியாமலோ), அதற்கு predictive ஆக நாதமுனியர் கொடுத்த (இது கோசான் வேறு பெயரில் எழுதிறார் என்ற தொனிப்பட்ட) ரியாக்சனும் comedy gold🤪.  கிரேஸி மோகன் கூட இப்படி ஸ்கிரிப்ட் எழுத கஸ்டப்படுவார்.

🤣அவர்கள் நம்பிக்கை வெளிநாட்டில் உள்ள ஈழத்தவர்கள் எல்லாம் சீமான் இரசிகர்கள் தான். சீமானை எதிர்த்து எழுதினால் அது நீங்களும் Tulpen ம் வேறு வேறு பெயர்களில் வருகிறீர்கள்.🤣

11 hours ago, goshan_che said:

இந்த திரி போல் இலங்கையில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு கூட யாழில் பிரச்சார திரி இல்லை.

கவலையானது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, இசைக்கலைஞன் said:

 ஒரு தெளிவுக்காக..

”நாம் தமிழர் அரசியல்” என்பது ஒரு கட்சிக்கான திரி அல்ல. மாறாக, நாமெல்லாம் தமிழர் எனும் கருத்தியல் கொண்ட எந்தப் பதிவை வேண்டுமானாலும் இடலாம்!

குறிப்பாக, பெ.மணியரசன், மு.களஞ்சியம் போன்றவர்களின் செவ்விகள் எல்லாம் இணைக்கப்படுகின்றன. இவர்கள் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் அல்லர்.

அதேபோல, ஐயா இமயவன், ஒரிசா பாலு போன்ற தனிமனித ஆளுமை கொண்டவர்களின் செவ்விகளும் இணைக்கப்படுகின்றன. காரணம் அவர்கள் நாமெல்லோரும் தமிழர்கள் எனும் கூற்றினை வழியுறுத்துவதால்..!

நாமெல்லோரும் திராவிடர்கள், இந்தியர்கள், சிறீலங்கன்ஸ், கனேடியன்ஸ். லண்டன்ஸ் என்கிற கருத்தியல்கள் இங்கே பதியப் படுவதில்லை!

”நாம் தமிழர்”

"நாம் தமிழர்" என்று subjective ஆக உணர்ந்தவாறே, அந்த கோசத்தின் கீழ் இங்கே பதியப் படும் உரைகள்/காட்சிகளின் நன்மை, தீமை, ஆபத்து என எல்லாம் பதியப் படலாம் என்று நான் விளங்கிக் கொள்கிறேன்.  அது வீடியோ வடிவிலும் இருக்கலாமா, நீங்கள் சுட்டிக் காட்டியபடி நாம் தமிழர் அரசியலில் இல்லாத ஆட்களின்/குழுக்களின் வீடியோக்களாகவும் இருக்க்லாமா?

இதையெல்லாம் என்னை விட, இங்கே பொல்லோடு திரியும் bouncers விளங்கி கொள்ளக் கூடிய தேவை இருக்கிறது, எனவே தான் கேட்கிறேன்.😊

நன்றி இசை!

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

அடுத்த மாசத்துக்கு... இன்னும் பத்து நாள் இருக்கே...
அது மட்டும், காக்க வைக்காதீர்கள். :grin:

பயப்படாதீங்கோ.....உங்கினை தான் நீக்கமில்லாமல் நிறைந்திருப்பார்.... நாதக ஏதும் அசுமாத்தம் நடந்தால் டபார் எண்டு வந்து குதிப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

 

துரோகங்களும் காட்டிக் கொடுப்புகளும் தமிழர் வரலாற்றில் புதிதல்ல

 

  • கருத்துக்கள உறவுகள்

நீட் தேர்வுக்கெதிராக அறவழிப்போராட்டம் செய்த மக்கள் பாதை இயக்கத்தினரை வலுக்கட்டாயமாகக் கைதுசெய்து அப்புறப்படுத்துவதா? – சீமான் கண்டனம்

நீட் தேர்வுக்கெதிராக அறவழிப்போராட்டம் செய்த மக்கள் பாதை இயக்கத்தினரை வலுக்கட்டாயமாகக் கைதுசெய்து அப்புறப்படுத்துவதா? – சீமான் கண்டனம்

நீட்’ தேர்வுக்கெதிராக அறவழிப்போராட்டம் செய்த மக்கள் பாதை இயக்கத்தினரை கைதுசெய்து போராட்டத்தை ஒடுக்குவதா? – சீமான் கண்டனம் | நாம் தமிழர் கட்சி

‘நீட்’ தேர்வை நிரந்தரமாக நீக்கக்கோரி சாகும்வரையிலான பட்டினிப்போராட்டத்தை முன்னெடுத்த மக்கள் பாதை இயக்கத்தினர் மீது காவல்துறையினர் மூலம் அடக்குமுறையை ஏவி வலுக்கட்டாயமாகக் கைதுசெய்து அறவழிப்போராட்டத்தை ஒடுக்கிய தமிழக அரசின் செயல் அதிர்ச்சியளிக்கிறது. நீட் தேர்வை வன்மையாக எதிர்ப்பதாகச் சொல்லும் அதிமுக அரசு, அதே நோக்கத்திற்காக அறப்போராட்டம் செய்யும் இளைஞர்களைக் குண்டாந்தடியாகக் கைதுசெய்து அப்புறப்படுத்தியிருப்பது வன்மையானக் கண்டனத்திற்குரியது. நீட் தேர்வுக்கு விலக்குக்கோரி தமிழக அரசு சட்டமன்றத்தில் இயற்றிய தீர்மானத்திற்கு ஒப்புதல்தர மறுத்து, எதேச்சதிகாரப்போக்கோடு மாநிலத்தின் தன்னுரிமையை மறுக்கும் மத்திய அரசைக் கண்டிக்கவோ, அரசியல் நெருக்கடி கொடுக்கவோ நெஞ்சுரமற்ற தமிழக அரசு அப்பாவி இளைஞர்கள் மீது தாக்குதல் தொடுக்க முனைவது வெட்கக்கேடானது.

மதிப்பிற்குரிய ஐயா சகாயம் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் இயங்கும் மக்கள் பாதை இயக்கத்தினர் நீட் தேர்வு முறைக்கெதிராக சென்னையில் அமைந்துள்ள அவ்வியக்கத்தின் தலைமை அலுவலகத்தில் கடந்த 14ம் தேதி முதல் காலவரையற்ற பட்டினிப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை நேரில் அணுகி, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற முன்னெடுப்புகளை விரைந்து செய்கிறோம் எனும் நம்பிக்கை மொழிகளைத் தர வேண்டிய தமிழக அரசு, அதற்கு நேர்மாறாகக் கைதுசெய்து போராட்டத்தைக் குலைக்க முனைவது சனநாயகத்துரோகமாகும். தங்கை அனிதா தொடங்கி 13 பிஞ்சுகள் நீட் எனும் கொலைக்கருவிக்கு இரையாகியுள்ள நிலையில், கிராமப்புற மாணவர்களின் மருத்துவக்கனவு முற்று முழுதாய் பொசுங்கிய தற்காலத்தில் நீட் தேர்வை எதிர்த்து அறப்போர் செய்ய வேண்டிய தமிழக அரசு அதிகாரமற்ற எளியப் பிள்ளைகள் மீது பாய்வது அரச நிர்வாகத்தின் கையாலாகத்தனத்தையே காட்டுகிறது. நீட் தேர்வுக்கு எதிராக ஒட்டுமொத்தத் தமிழகமே எதிர் நிற்கையில், அதே நோக்கத்திற்காக பட்டினிப்போராட்டம் செய்த மக்கள் பாதை இயக்கத்தைச் சேர்ந்த தம்பி, தங்கைகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க முனைவது மக்களின் உணர்வுகளுக்கெதிரான படுபாதகச்செயலாகும்.

நீட் தேர்வின் மூலம் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவைச் முற்றாகச் சிதைக்கும் மத்திய அரசின் மனுதர்மக் கோட்பாட்டிற்கும், நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு பெறுவோம் எனக்கூறி பல ஆண்டுகளாகத் தமிழக மாணவர்களை வஞ்சித்து வரும் தமிழக அரசின் ஆளுமையற்ற செயல்பாட்டுக்கும் எதிரான கோபத்தின் வெளிப்பாடே இத்தகைய போராட்டங்கள் என்பதை எவராலும் மறுக்கவியலாது. ஆகவே, அதனைப் புரிந்துகொண்டு நீட் தேர்வை நிரந்தரமாக நீக்குவதற்கான சட்டப்போராட்டத்தினையும், அரசியல் நகர்வுகளையும் முன்னெடுக்க வேண்டும் எனவும், கைதுசெய்யப்பட்டுள்ள மக்கள் பாதை அமைப்பினர் மீது எவ்வித வழக்கும் தொடராது அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

செந்தமிழன் சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

https://www.naamtamilar.org/seeman-condemns-tn-police-forcefully-evict-makkal-pathai-members-who-were-protested-against-neet/

 

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த்தேசியத்தின் வெற்றி - தேர்தல் அரசியலிலா ? இயக்க அரசியலிலா ?

 

சூர்யாவை மிரட்டும் நீங்கள் முடிந்தால் என்னை மிரட்டிப் பாருங்கள் |சீமான் |சூர்யா

 

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் எப்படித்தான் மாரி தாவக்கை போல் கத்தினாலும், அவருடைய சுயரூபம் கலைந்து கனநாள் ஆச்சு. 

  • கருத்துக்கள உறவுகள்

சீமானின் தம்பி செல்வம் படுகொலை அதிமுக பிரமுகர் காவல்துறை ஆய்வாளர் இவர்களை கைது செய்ய வேண்டும்

 

36 minutes ago, zuma said:

சீமான் எப்படித்தான் மாரி தாவக்கை போல் கத்தினாலும், அவருடைய சுயரூபம் கலைந்து கனநாள் ஆச்சு. 

ஆமா 2009 க்கு பின் அவருடைய சுயருபம் வெளிப்பட்டது உண்மையே. தன் மானமுள்ள தமிழன் 

பனை விதைகள் சேகரிப்பு ஓலைப்பட்டி சாக்கடை சுத்தம் செய்தல் காரைக்குடி நாம் தமிழர் கட்சியின் பிள்ளைகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, zuma said:

சீமான் எப்படித்தான் மாரி தாவக்கை போல் கத்தினாலும், அவருடைய சுயரூபம் கலைந்து கனநாள் ஆச்சு. 

ஆ.... மெய்தானோ...... அண்ணை.....

விசயம் தெரியாமல் இம்மளவு நாளும் விசர்தனமா இருந்திட்டம்.... 🤔

சரி... அங்கை சரியான மழையாமே, மெய்யே? 🗯️

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nunavilan said:

 

துரோகங்களும் காட்டிக் கொடுப்புகளும் தமிழர் வரலாற்றில் புதிதல்ல

 

இவ‌ர் சொல்லுவ‌து முற்றிலும் உண்மை , உள்ள‌ பேசி தீர்க்க‌ வேண்டிய‌ பிர‌ச்ச‌னைக‌ளை த‌மிழ‌க‌த்து க‌ருணாசுந்த‌ர‌ம் பொது வெளியில் கொண்டு வ‌ந்த‌து க‌ட்சிக்கு செய்த‌ மாபெரும் துரோக‌ம் ,

(நாமே த‌மிழ‌ர்) என்ர‌ க‌ட்சி ஆர‌ம்பிக்க‌ போவ‌தாக‌ க‌தை அடி ப‌டுது போக‌ போக‌ க‌ருணாசுந்த‌ர‌த்தின் உண்மை முக‌ம் வெளியில் தெரிய‌ வ‌ரும் ,

க‌ருணாசுந்த‌ர‌ம் க‌ட்சியை பிடிக்காட்டி மெள‌வுன‌மாக‌ வில‌கி போய் இருக்க‌னும் , ஆனால் க‌ருணாசுந்த‌ர‌ம் அக்கா அண்ணா உங்க‌ளிட‌ம் ஊட‌க‌ம் இருக்கா நான் பேட்டி த‌ருகிறேன் என்று ப‌ல‌ ஊட‌க‌ங்க‌ளில் தான் நேர்மையான‌வ‌ன் போல் காட்டி ப‌ல‌ குழ‌ப்ப‌த்த‌ உண்டு ப‌ண்ணி ,

இப்போது ஏதோ ஊட‌க‌ ச‌ந்துப்புக்கு ம‌றுத்து விட்டார் என்று நீங்க‌ள் இணைத்த‌ காணொளிய‌ பார்த்து தெரிந்து கொண்டேன் , 

க‌ருணாசுந்த‌ர‌த்தின் ம‌ன‌து அழுக்கு , டென்மார்க்கில் க‌ருணாசுந்த‌ர‌த்துக்கு ஜால்ரா அடிப்ப‌வ‌ர்க‌ளுட‌ன் போன‌ கிழ‌மை அவைக்கும் என‌க்கும் சில‌ முர‌ன் பாடுக‌ள் வ‌ந்த‌து அவை வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌லாய் இருந்துட்டு போக‌ட்டும் ஆனால் நான் வைச்ச‌ கேள்விக்கு ப‌தில் அளிக்க‌ முடியாம‌ல் அவ‌ர்க‌ள் த‌டுமாறினார்க‌ள் , அவ‌ர்க‌ளின் முக‌ நூலில் நான் எழுத‌ முடியாத‌ மாதிரி செய்து வைச்சு இருக்கின‌ம் , போங்க‌டா ப‌ண்னாடைய‌ல் என்று எல்லாரையும் வுலொக் செய்து விட்டு வில‌கி விட்டேன் 😁😀

Edited by பையன்26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கேள்வி பதில் - பொறுமை இருந்தால் முழுவதும் பாருங்கள்👍
மேதகு பிரபாகரன் இருந்தால் தலைவன் இல்லையேல் இறைவன்🙏

 

  • கருத்துக்கள உறவுகள்

என் தம்பியை கொன்றவன் எவன்டா சீமான் தலைமையில் வெடிக்கும் போராட்டம் |

 

  • கருத்துக்கள உறவுகள்

தற்சார்பு வணிகத்தை எப்போது கையில் எடுக்க போகிறோம் ? தமிழர் மரபு மீட்சி 

 

  • கருத்துக்கள உறவுகள்

சீமான்தம்பி செல்வனுக்கு 23 வயதுதான் & 6 மாத கைகுழந்தை உள்ளது

 

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் இலட்சியத்தை தொடர்ந்து நாங்கள் முன்னெடுப்போம்-நாம்தமிழர் பிரித்தானியா சூளுரை

 

  • கருத்துக்கள உறவுகள்

பசுமை புரட்சி நண்பர்கள் குழு பனை விதைகள் நடுதல் கள்ளக்குறிச்சி மாவட்டம் புதுஉச்சிமேடு கிராமம்

 

சீமான் தம்பிகள் வேலையை பாருங்கள்! நாம் தமிழர் கட்சி தமிழ் திருநாடு

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.