Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழனா .. மராட்டியனா.?

  • Replies 3k
  • Views 276.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

'நாம் போட்டியிடாத இடங்களே இருக்க கூடாது'..! கட்சியினருக்கு அதிரடி கட்டளையிட்ட சீமான்..!

seeman-jpg.jpg

வர இருக்கின்ற 27 மற்றும் 30 ஆகிய நாட்களில் தமிழகத்தில் ஊரக அமைப்புகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற இருக்கிறது. அதில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

நாம் தமிழர் கட்சி உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுகின்றது. அக்கட்சிக்கு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் போட்டியிட வேண்டும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: நடைபெறவிருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலில், கட்சி சார்பாக போட்டியிடக்கூடிய அனைத்து உள்ளாட்சி இடங்களுக்கும் வேட்பாளர்களை நிறுத்தவேண்டியது கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களின் முழுமுதற் கடமையாகும்.  அதனடிப்படையில் மாநில, மாவட்ட, தொகுதி, நகரம், பகுதி, ஒன்றியம், கிளை உள்ளிட்ட அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் பொறுப்பாளர்களும் மாவட்டவாரியாக அமைக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் தேர்வு மற்றும் தேர்தல் பணிக்குழுவினருடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.

கட்சி சார்பாக போட்டியிடக்கூடிய அனைத்து உள்ளாட்சி இடங்களுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்வது மட்டுமின்றி தாங்களும் வாய்ப்புள்ள இடங்களில் தவறாமல் போட்டியிட்டு, நாம் தமிழர் கட்சி போட்டியிடாத உள்ளாட்சி இடங்களே இல்லை என்ற நிலையை உருவாக்கும் வகையில் களம் காண வேண்டும் எனவும், வேட்புமனு பதிவு செய்வதற்கு இன்னும் ஓரிரு நாட்களே மிஞ்சியுள்ள நிலையில் விரைந்து களப்பணியாற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

https://tamil.asianetnews.com/politics/ntk-to-contest-in-all-places-in-local-body-election-q2hm9x

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 12/4/2019 at 2:28 PM, ரதி said:

அங்கால அடாது மழை பெய்ந்தாலும் நாம எமது சேவையை விடாது தொடருவம் இல்லை மச்சான் 😎

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு. 😀

மச்சாளை கண்டு கனகாலம்.. எப்பிடி போகுது வாழ்க்கை?! 🤔

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=e3uR3ln0MiA

Edited by ஏராளன்
add video

  • கருத்துக்கள உறவுகள்
On 9/30/2019 at 3:46 AM, இசைக்கலைஞன் said:

மார்வாடிக்கு தரமான சம்பவம்..!

சீமான் பாசிஸ்டா என்று கேட்பவர்களுக்கு ஆதாரம் இதோ!

ஒரு பெண் மார்வாடி கடையில போய் வம்பு பண்ணி இருக்கு, அதில் தகராறு ஏற்படவே, கடைக்காரன் என்னை இனத்தை காட்டி அவதூறாக பேசினார் என கிளப்பி விட்டிருக்கு. சீமானின் கட்ட பஞ்சாயத்து ரவுடிகளும் அந்தாளை கூட்டமாய் போய் மிரட்டுகிறார்கள்.

இத்தனை ரவுடிகள் சூழ நிற்கும் போதும், பணிவாக ஆனால், பயமில்லாமல் நான் அப்படி பேசவில்லை என உரத்துச் சொல்லும் அந்த மார்வாடி மனிதனின் வீரமும், கண்ணியமும் போற்றுதலுக்குரியது.

இதையே சுமனே அல்லது ஞானசார செய்தால் இனவாதம் என கூவும் கூட்டம், இதை ஏதோ உலக சாதனை போல கொண்டாடுவது மகா கேவலம்.

  • கருத்துக்கள உறவுகள்

https://www.vikatan.com/government-and-politics/politics/naam-tamilar-party-candidates-elected-unopposed-in-12-wards

`அதிகாரத்தைப் பெறுவதற்கான முதல் வாய்ப்பு இது!'- 12 ஊராட்சி வார்டுகளைக் கைப்பற்றிய நாம் தமிழர் கட்சி

  • கருத்துக்கள உறவுகள்

திருடு .. அமுக்கு.. ☺️

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

சீமான் பாசிஸ்டா என்று கேட்பவர்களுக்கு ஆதாரம் இதோ!

ஒரு பெண் மார்வாடி கடையில போய் வம்பு பண்ணி இருக்கு, அதில் தகராறு ஏற்படவே, கடைக்காரன் என்னை இனத்தை காட்டி அவதூறாக பேசினார் என கிளப்பி விட்டிருக்கு. சீமானின் கட்ட பஞ்சாயத்து ரவுடிகளும் அந்தாளை கூட்டமாய் போய் மிரட்டுகிறார்கள்.

இத்தனை ரவுடிகள் சூழ நிற்கும் போதும், பணிவாக ஆனால், பயமில்லாமல் நான் அப்படி பேசவில்லை என உரத்துச் சொல்லும் அந்த மார்வாடி மனிதனின் வீரமும், கண்ணியமும் போற்றுதலுக்குரியது.

இதையே சுமனே அல்லது ஞானசார செய்தால் இனவாதம் என கூவும் கூட்டம், இதை ஏதோ உலக சாதனை போல கொண்டாடுவது மகா கேவலம்.

👍

ஞானசார தேரர் மட்டுமல்ல.. எந்தச் சிங்களவன் வந்து உங்கட வீட்டில நடுவில நின்று திட்டினாலும்.. உங்களுக்கு இப்ப உறைக்காது. பயத்தை சாத்வீகம் என்று சொல்லி பசப்பத்தான் முடியும்.

தமிழ்நாட்டில் வந்து பஞ்சம் பிழைச்சுக் கொண்டு தமிழனையே திட்ட முடியுமா..?! இங்கிலாந்தில் வந்து இருந்து கொண்டு ஆங்கிலேயர்களை திட்டினால்.. அவர்கள் உங்களை மெச்சுவார்களாக்கும்..??!

அதேன் சீமான் தன் வீட்டுக்குள் வந்து தன்னையே திட்டுபவனை திருந்தடான்னு சொல்வது உங்களுக்கு எல்லாம் பாசிசமாகத் தெரிகிறது. சிங்களவன் வந்து உங்கள் நாட்டுக்குள் வீட்டுக்குள் புகுந்து நின்று கொண்டு உங்களை திட்டுவது மட்டும்..  சகோதரத்துவமாகத் தெரிகிறதாக்கும். சிங்களவனை சிங்கள தேசத்தில் போய் வெருட்டிட்டு வாருங்கள் பார்க்கலாம்..?! அப்போது தெரியும் எது பாசிசம் என்று. 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎12‎/‎18‎/‎2019 at 12:29 PM, இசைக்கலைஞன் said:

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு. 😀

மச்சாளை கண்டு கனகாலம்.. எப்பிடி போகுது வாழ்க்கை?! 🤔

நீங்கள் என்னை கை  விட்டதை தவிர😥 , மற்றும் படி சும்மா போகுது வாழ்க்கை...உங்கட திரியை திசை  திருப்பவில்லை ...தொடருங்கள் 
 
  • கருத்துக்கள உறவுகள்
On 12/20/2019 at 11:44 PM, nedukkalapoovan said:

ஞானசார தேரர் மட்டுமல்ல.. எந்தச் சிங்களவன் வந்து உங்கட வீட்டில நடுவில நின்று திட்டினாலும்.. உங்களுக்கு இப்ப உறைக்காது. பயத்தை சாத்வீகம் என்று சொல்லி பசப்பத்தான் முடியும்.

தமிழ்நாட்டில் வந்து பஞ்சம் பிழைச்சுக் கொண்டு தமிழனையே திட்ட முடியுமா..?! இங்கிலாந்தில் வந்து இருந்து கொண்டு ஆங்கிலேயர்களை திட்டினால்.. அவர்கள் உங்களை மெச்சுவார்களாக்கும்..??!

அதேன் சீமான் தன் வீட்டுக்குள் வந்து தன்னையே திட்டுபவனை திருந்தடான்னு சொல்வது உங்களுக்கு எல்லாம் பாசிசமாகத் தெரிகிறது. சிங்களவன் வந்து உங்கள் நாட்டுக்குள் வீட்டுக்குள் புகுந்து நின்று கொண்டு உங்களை திட்டுவது மட்டும்..  சகோதரத்துவமாகத் தெரிகிறதாக்கும். சிங்களவனை சிங்கள தேசத்தில் போய் வெருட்டிட்டு வாருங்கள் பார்க்கலாம்..?! அப்போது தெரியும் எது பாசிசம் என்று. 

பாசிசமா இல்லையா என்பது செய்பவன் எந்த இனம் என்று, அல்லது வன்கொடுமை எங்கே செய்யப்படுகிறது என பார்த்து அமைவதில்ல.

1. இங்கே அந்த மார்வாடி மனிதன் தமிழை, தமிழர்களை பழித்ததாக எந்த ஆதாரமும் இணைக்கப்படவில்லை.

2. அந்த மனிதனின் மீது பழி போடும் ஒரே ஆதாரம் அந்த பெண்ணின் சொல் மட்டுமே.

3. காணொளியில் அந்த பெண் மார்வாடி கடையில் வாடிக்கையாளர் என்பது தெரிகிறது. அடகு வைப்பவர்-கொடுப்பவர் இடையே ஏற்பட்ட முறுகல் இது.

4. பிரபாகரனின் ஆளுயர படத்தின் முன்பு வைத்து ஒரு சிறுமியை வன்புணர்ந்த நாம் தமிழர் தம்பிகளின் காணொளியை கண்ட நமக்கு, நாம் தமிழர் தம்பிகள் எப்படி பட்ட ஒழுக்க சீலர்கள் என்பதும், அவர்களுக்கு எதிராக ஒருவிதமான ஒழுங்காற்று நடவடிக்கையும் இல்லை என்பதும் கண்கூடு.

5. இறுதிவரை தன் நியாயத்தை எடுத்து சொல்லும் அந்த நபர் சொல்வதை கேட்க கூட மாட்டாமல் - இவர்கள் எல்லாரும் அந்த பெண் சொல்வதை மட்டுமே கருத்தில் எடுத்து அந்த நபரை மிரட்டுவதை பார்க்கும் யாருக்கும் இங்ஜே யார் பாசிஸ்டுகள் என்பது தெளிவாக புரியும்.

6. ஞானசாரர், சுமனே வந்து எம் ஊரில் செய்யும் அக்கிரம்மங்களுக்கும் இதுக்கும் ஒரு வித்யாசமுமில்லை. அதை எம்மக்களால் எதிர்த்துக் கேட்க முடியாது, அவர்கள் வாய்மூடி இருக்கிறார்கள். ஏனென்றால் இலங்கையில் நடப்பது பாசிச, இனவாத ஆட்சி. தமிழ்நாட்டில் கொஞ்சமேனும் சுந்தந்திரம் இருக்க போய் இந்த மனிதன் தன் நியாயத்தையாவது சொல்ல முடிகிறது. இதுவே சீமான் முதலமைச்சர் என்றால்? இந்த மார்வாடி மனிதனும் இந்த வன்முறை கும்பலுக்கு பயந்து, அந்த பெண் கேட்ட சலுகையை வழங்கிவிட்டு ஒதுங்கி போகக்கூடும்.

பிகு: இலங்கையில், பெங்களூருவில், மும்பாயில் தமிழர்கள் சீசனுக்கு சீசன் இதே போன்ற பாசிச சிங்கள, கன்னட, மராட்டிய கும்பல்களால் தாக்கப்படுகிறார்கள். இந்த வெத்து வேட்டு தம்பிகள் முடிந்தால் அந்த இடங்களுக்கு போய், தாக்கவிட்டாலும் பரவாயில்லை, தாக்கப்படும் தமிழர்களை காக்கவாவது செய்யலாமே? 

மாட்டர்கள், இவர்கள் வீரம் எல்லாம் தனியே மாட்டியனொருவனை மிரட்டி பணம் புடுங்குவது மட்டும்தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 12/20/2019 at 1:41 PM, goshan_che said:

சீமான் பாசிஸ்டா என்று கேட்பவர்களுக்கு ஆதாரம் இதோ!

ஒரு பெண் மார்வாடி கடையில போய் வம்பு பண்ணி இருக்கு, அதில் தகராறு ஏற்படவே, கடைக்காரன் என்னை இனத்தை காட்டி அவதூறாக பேசினார் என கிளப்பி விட்டிருக்கு. சீமானின் கட்ட பஞ்சாயத்து ரவுடிகளும் அந்தாளை கூட்டமாய் போய் மிரட்டுகிறார்கள்.

இத்தனை ரவுடிகள் சூழ நிற்கும் போதும், பணிவாக ஆனால், பயமில்லாமல் நான் அப்படி பேசவில்லை என உரத்துச் சொல்லும் அந்த மார்வாடி மனிதனின் வீரமும், கண்ணியமும் போற்றுதலுக்குரியது.

இதையே சுமனே அல்லது ஞானசார செய்தால் இனவாதம் என கூவும் கூட்டம், இதை ஏதோ உலக சாதனை போல கொண்டாடுவது மகா கேவலம்.

சீமான் ஃபாசிஸ்ட் இல்லை! அவ்வளவுதான் சொல்லமுடியும். அதற்காக, கட்சியில் நூறு வீதம் எல்லாம் சரியாக நடக்கும் எனவும் சொல்ல வரவில்லை. அப்படிச் சொல்வது இயற்கைக்கு எதிரானது ஆகும்.

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, இசைக்கலைஞன் said:

சீமான் ஃபாசிஸ்ட் இல்லை! அவ்வளவுதான் சொல்லமுடியும். அதற்காக, கட்சியில் நூறு வீதம் எல்லாம் சரியாக நடக்கும் எனவும் சொல்ல வரவில்லை. அப்படிச் சொல்வது இயற்கைக்கு எதிரானது ஆகும்.

சீமானை விட்டுவிடுவோம்,

ஒரு தனிமனிதனை - குழுவாக சேர்ந்து மிரட்டுமிறார்கள். தான் தப்பே செய்யவில்லை என அவர் மீண்டும், மீண்டும் சொல்லச் சொல்ல அதை கேட்காமல் வன்முறையை பிரயோகிப்போம் என மிரட்டுகிறார்கள்.

இந்த காணொளியை “ மார்வாடியை வச்சு செஞ்ச போது” என்ற தலைப்பில், நாம் தமிழர் அரசியல் எனும் திரியில் நீங்கள்தான் பகிர்ந்துள்ளீர்கள்.

உங்களுக்கு இரெண்டு கேள்விகள்.

1. இதுதான் நாம் தமிழர் அரசியலா? அப்படியாயின் இதை பாசிச அரசியல் என்றல்லாமல் வேறெப்படி அழைப்பது?

2. இதை பகிரும் போது, உங்கள் மனச்சாட்சி உறுத்தவில்லையா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓ.. அதுவா.. தமிழில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும் என சட்டம் இருக்கும்போது, அந்த சட்டத்தை வியாபாரிகள் பின்பற்றாதபோது அரசு இயந்திரம் தலையிட்டு சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்! சட்டம் தன் கடமையை செய்யாதபோது, மக்கள் அந்த சட்டத்தை கையில் எடுப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, இசைக்கலைஞன் said:

ஓ.. அதுவா.. தமிழில் பெயர்ப்பலகை வைக்க வேண்டும் என சட்டம் இருக்கும்போது, அந்த சட்டத்தை வியாபாரிகள் பின்பற்றாதபோது அரசு இயந்திரம் தலையிட்டு சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்! சட்டம் தன் கடமையை செய்யாதபோது, மக்கள் அந்த சட்டத்தை கையில் எடுப்பார்கள்.

நீங்கள் இணைக்கும் வீடியோக்களை நீங்களே பார்க்கிறதில்லையா?

இது கடைக்கு பெயர் வைப்பதை பற்றிய வீடியோவே இல்லை.

அந்த பெண் பலவருடமாக இந்த மார்வாடிக் கடையின் வாடிக்கையாளர். அந்த மார்வாடி நபர் “உங்களுக்கு ஏது நாடு” என்று தன்னிடம் கேட்டதாக கூறி, இந்த ரவுடிக் கும்பலை கூட்டி வந்து மிரட்டுகிறது.

அந்த மார்வாடியோ நான் அப்படிச் சொல்லவே இல்லை என மிகவும் பணிவாக ஆனால் ஆணித்தரமாக சொல்கிறார்.

எதிர்த்து பேசினால் உன் கடை மட்டுமல்ல கும்பகோணத்தில் ஒரு கடையும் இருக்காது, அடித்து நொருக்கி விடுவோம் என மிரட்டுகிறது ரவுடிக் கும்பல்.

அவர் சொல்வதை எதையும் கேட்காமல், ரவுடிக் கும்பலின் தகைவண் “நீ இப்படிச் சொன்னாய் என்று வச்சுகுவமே!” என்ற ரீதியில் தொடர்ந்து மிரட்டுகிறார். 

இறுதியில் இந்த ரவுடிகள் போனால் போதும் என்ற மனநிலையில் “நான் அப்படிச் சொல்லவில்லை, ஆனால் மன்னிப்பு கேட்கிறேன்” என்கிறார் அந்த மனிதர்.

இதுதான் உங்கள் அரசியலா?

நாம் தமிழர் ஆட்சியில், கடன் வாங்கிய ஒவ்வொரு தமிழனும் கடன் கொடுத்த வெளி மாநிலகாரனை “என்னை பழித்தான்” என பொய் குற்றம் சாட்டி, குழு வன்முறையை பாவித்து தப்பிக்கும் வண்ணம் சட்டத்திருத்தமேதும் கொண்டு வருவீர்களா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்லும் காணொளி எதுவென தெரியவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் நாம் தமிழர் செய்யும் அரசியலின் காபன் கொப்பியை இலங்கையின் அம்பேபிட்டி சுமண தேரர் செய்யுள் காணொளி. தமிழனால் மிரட்டப்படும் மார்வாடி. சிங்களவனால் மிரட்டபடும் தமிழன். என்பதை தவிர இரண்டு காணொளிகளுக்குமிடையே ஒரு வேறுபாடுமில்லை.

சிங்கள பகுதியியூடாக நெடுஞ்ச்சலையில் பயணித்த வாகனத்தை இடை மறித்து, டயாஸ்போரா புலிகள் வாகனத்தில் மறைந்துள்ளார்கள் என கூச்சல் இட்டு, நத்தர்பாப்பா வேடமணிந்த ஆள் உட்பட எல்லாரையும் பொலிஸ் நிலையம் அனுப்புகிறார் வணக்கத்துகுரிய தேரர்.

On 9/30/2019 at 2:54 AM, இசைக்கலைஞன் said:

மார்வாடிக்கு தரமான சம்பவம்..!

இது

9 minutes ago, இசைக்கலைஞன் said:

நீங்கள் சொல்லும் காணொளி எதுவென தெரியவில்லை!

Edited by goshan_che

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் வந்து நின்றுகொண்டு உனக்கு ஏது நாடு என்று மார்வாடி கேட்டால் விட்டு வைப்பாங்களா? 🤔 என்ன அடிதடியா அங்கே நடக்குது?! இருக்கிறது ஒரே இடம் தமிழ்நாடுதான். அந்த உரிமையை இப்போது இருக்கும் அரசு காப்பாற்றி வைக்கும் என நம்பிக்கை இல்லாத காரணத்தினால் இவை நடக்கின்றன.

கனடாவில் குபெக் மாநிலத்தில் குடியேறிவிட்டு உனக்கேது நாடு என்று ஃபிரெஞ்சு காரனை கேட்டால் அடிதான் விழும். இது பரவாயில்லை! வெறும் வாய்வார்த்தைதான். 

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, இசைக்கலைஞன் said:

தான் அப்படி கேட்கவே இல்லை என்கிறாரே?

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, goshan_che said:

தான் அப்படி கேட்கவே இல்லை என்கிறாரே?

சே,

உங்கள் வாதத்தை ஏற்றுக்கொண்டால் தமிழர் என்கின்ற இனமே காலப்போக்கில் அடையாளமில்லாமல் போகும் . உங்களுக்கு ok யா ?

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Kapithan said:

சே,

உங்கள் வாதத்தை ஏற்றுக்கொண்டால் தமிழர் என்கின்ற இனமே காலப்போக்கில் அடையாளமில்லாமல் போகும் . உங்களுக்கு ok யா ?

என்ன கப்பித்தான் இப்படிச் சொல்கிறீர்கள்?

ஒரு மார்வாடி கடைக்காரனை போட்டு வாங்குவதிலா நம் அடையாளம் இருக்கிறது?

நாம் ஆங்கில மொழி பாடசாலைகளை நாடி ஓடும் போது.

நாம் எம் குழந்தைகளுக்கு வாயில் நுழையாத பெயர்களை வைக்கும் போது.

நாம் எம் உடைகளை நாகரீகம் அற்றது என களைந்த போது.

நாம் எம் தின்பண்டங்களை, சமையலை விட்டு, பிரியாணி, பால்கோவா, பக்கோடா என மாறியபோது.

நாம் எம் நாட்டர்பாடல்களை, கிராமிய கூத்துக்களை புறம்தள்ளி, சினிமா மோகத்தில் அலையும் போது.

ஆன்மீகம், இந்து சமயம் என்ற போர்வையில் வடநாட்டு நடைமுறைகளை ஏற்ற போது.

இழக்கப்படாத இன அடையாளமா? பிழைக்க வந்த ஒரு மார்வாடியை உதைப்பதால் காக்கப்படப் போகிறது?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

உங்கள் கருத்துக்களை தொடர்ச்சியாக அவதானித்து வருபவன். அந்த  அவதானத்தின் அடிப்படையிலேதான் எனது கருத்தை எழுதினேன். 

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, Kapithan said:

உங்கள் கருத்துக்களை தொடர்ச்சியாக அவதானித்து வருபவன். அந்த  அவதானத்தின் அடிப்படையிலேதான் எனது கருத்தை எழுதினேன். 

தமிழ்தேசிய அரசியல், தமிழ் அடையாளம் இவற்றில் எனக்கு ஒரு முரணும் இல்லை. ஆனால் பிழைப்பு தேடி வந்தவர்களை இம்சித்துத்தான் இவை அடையப்படும் என நான் நினைக்கவில்லை. அப்படித்தான் அடையவேண்டும் என்றால் எனக்குத் தேவையும் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.