Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாணசுந்தரம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டாரா ?

  • Replies 3k
  • Views 276.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மார்க் ஷூக்கர்பெர்க்கை வளைத்த மோடி! 

  • கருத்துக்கள உறவுகள்
கடந்த 2 நாட்களாக நாம் தமிழர் கட்சியில் நிலவி வந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாட்டை துரைமுருகன்..
நம்மை கருத்தியல் ரீதியாக எதிர் கொள்ள முடியாமல் சமுக வலைதளங்களில் இப்படி தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும் ஆரிய திராவிட கும்பலை வேரோடு பிடுங்கி எறிந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம்.

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் என்ன பிரச்சனை / கல்யாணசுந்தரம் / சீமான்

  • கருத்துக்கள உறவுகள்

உங்களை யாரு தம்பி கழுத்தை பிடிச்சு வெளியே தள்ளுனா? நீங்க முன்பே முடிவு செய்துட்டீங்க!-வெற்றிக்குமரன்

  • கருத்துக்கள உறவுகள்

உசிலம்பட்டி கருகட்டான்பட்டி உறவுகள் பனை விதைகள் நடுதல் நிகழ்வில் நாம் தமிழர் கட்சி

  • கருத்துக்கள உறவுகள்

பனை விதைகள் நடுதல் சிவகாசி நாம் தமிழர் கட்சி உறவுகள் தம்பி தங்கைகள் களத்தில்! தமிழ் திருநாடு

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களுக்கு வெளிப்படையான ஆதரவினை கடந்த 11 வருடங்களாக வழங்கிவரும் நாம் தமிழர் கட்சி, நான் உட்பட பல ஈழத் தமிழர்களுக்கும், தமிழகத்தில் தமிழ்த் தேசியத்தின்பால் நம்பிக்கை கொண்டவர்களுக்கும் ஒரு நம்பிக்கையாக இருந்துவருகிறது. திராவிட கட்சிகளின் வாரிசு அரசியலும், ஊழல் அரசியலும் கூடவே தேசியக் கட்சிகளான காங்கிரஸ் ப ஜ க ஆகியவற்றின் கூட்டணிகளாகவும் இதுவரை தமிழகத்தில் ஆட்சிசெய்துவரும் தமிழர்நலனில் அக்கறையில்லாத கட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், தமிழருக்கான அரசியலை முன்னெடுக்கவும் என்று ஆரம்பிக்கப்பட்ட இக்கட்சி சில தினங்களாக உள்வீட்டுப் பிரச்சினையில் சிக்கித் தவிக்கிறது.

சமூக வலைத்தளங்களில் பல தமிழ்த் தேசிய ஆதரவாளர்களினால் போற்றப்பட்ட இக்கட்சி, இப்போது அதே சமூக வலைத்தள செயற்பாட்டாளர்கள் இரு அணிகளாகப் பிரிந்து ஒருவரையொருவர் வசைபாடவும், கடந்த 11 வருடங்களாக சிறுகச் சிறுக சேர்த்த ஆதரவாளர்களையும் இரு குழுக்களாகப் பிரியவிட்டு, பலரை இக்கட்சியிலிருந்து விலகிச் செல்லவும் இந்த உள்வீட்டு விவகாரம் காரணமாக இருக்கிறது.

திராவிடக் கட்சிகளின் செயற்பாட்டாளரான சுந்தரவள்ளி சிறிது காலத்திற்கு முன் கூறிய, "கல்யாணசுந்தரத்தை  நாம் தமிழர் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளாராக இருத்தினால், நான் ஆதரவளிப்பேன்" எனும் கூற்றில் தொடங்கி, அண்மையில் ஜூனியர் விகடனில் வந்த "மாறுங்கள் அல்லது அழிக்கப்படுவீர்கள் - சீமானுக்குத் தம்பியின் கடிதம்" எனும் தலைப்பில் வெளியிடப்பட்ட மொட்டைக்கடிதம்,  சமூகவலைத் தளச் செயற்பாட்டாளர் செந்திலுக்கு கல்யாணசுந்தரம் கொடுத்த பேட்டி மற்றும் அதற்கு எதிர்வினையாக இடும்பாவனம் கார்த்தி தனது வலைத்தளத்தில் தெரிவித்த கல்யாண்சுந்தரத்திற்கெதிரான குற்றச்சாட்டுக்கள், சுந்தரவள்ளியின், "எனது சொல்லைக்கேட்டு கல்யாணசுந்தரத்தை கட்சியை விட்டு நீக்க வேண்டாம்"  என்கிற பசப்பு வார்த்தைகள் என்று நாம் தமிழர் கட்சி இப்போது செல்லும் திசை தெரியாது தவிப்பதுபோலவே தோன்றுகிறது.

இன்னும் 8 மாதங்களில் வரவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல்களுக்காக  ( மே 2021 ) அனைத்துக் கட்சிகளும் மும்முரமாக இயங்கிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், தமிழர்களின் நம்பிக்கையென்று எதிர்பார்க்கப்பட்ட நாம் தமிழர் இப்போது இரு கூறுகளாகப் பிரிந்து நிற்கிறது.

கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் கட்சிக்குள்ளும், வெளியேயும், சமூக வலைத்தளங்களிலும் ஆதரவாளர்கள் பிரிந்து நிற்க, இதுவரை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இதுபற்றி வாயே திறக்காமல் இருப்பது பலரையும் விசனத்திற்குள்ளாக்கியிருப்பதுடன், இக்கட்சியினது, இதனை ஆதரித்து நின்ற தமிழ்த்தேசிய ஆதரவாளர்களினதும் நம்பிக்கையில் மண்ணையள்ளிப் போட்டிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

நீ இல்லைன்னாலும் கட்சி இயங்கும்டா- நான் செத்தாதான் நாம் தமிழர் கட்சியை உடைக்கவே முடியும் - சீமான்.

seeman232-1599549024.jpg 

சென்னை: நான் மரணித்தால்தான் நாம் தமிழர் கட்சியை இரண்டாக உடைக்க முடியும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

2009-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்டது முதல் பலரும் அதில் இருந்து வெளியேறி உள்ளனர். தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை மீது மாநில நிர்வாகி பேராசிரியர் கல்யாணசுந்தரம் அதிருப்தியை வெளியிட்டு வருகிறார்.

இது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகி இருக்கிறது. இந்த நிலையில் யூ டியூப் சேனல் ஒன்றுக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்துள்ளார்.

எவன் நினைக்கிறானோ...

அதில் நாம் தமிழர் கட்சியின் உட்கட்சி விவகாரங்கள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன. இதற்கு சீமான் அளித்திருக்கும் பதில்:

அடுத்து நான்தான்.. நான் இல்லைன்னா கட்சியே இல்லைன்னு எவன் நினைக்கிறானோ.. அவனை போடா... நீ இல்லைன்னாலும் கட்சி இயங்கும்டா அப்படின்னு ஒன்னு காட்ட  வேண்டியது இருக்குது..
hqdefault.jpg 
நயவஞ்சகம், சூழ்ச்சி

இப்படியான ஒரு நயவஞ்சகத்தை.. ஒரு சூழ்ச்சி துரோகத்தை உலகத்திலேயே நான் எங்குமே பார்த்தது இல்லை. எவ்வளவோ பேரை எதிர்த்து அரசியல் செய்திருக்கிறேன்..சிறைபடுத்தப்பட்டிருக்கிறேன். அப்ப கூட வேதனை இல்லை.. துளிகூட கலங்கியது இல்லை... ஆனால்...
என் சாவுக்கு...

என் சாவுக்காக காத்திருக்கிறார்கள்

சொந்த பிள்ளை மாதிரி வளர்த்த இவங்க வந்து.. அவர்கள் என் சாவை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். கட்சியில் ஆயிரம் பேர் வருவான் போவான்... 2 பேர் இல்லைங்கிறதால கட்சி உடைஞ்சிடுமா? சீமானை ரெண்டாக வெட்டினாலே ஒழிய கட்சி எப்படி உடையும்?

உடைச்சு பாரு..
கட்சியை உடைச்சு காட்டு

சரி வா.. ஒரு பந்தயம் வெச்சுக்குவோம்.. ஒரு சேலஞ்ச்... எங்க கட்சியை இரண்டாக உடைத்துக் காட்டு... நான் எத்தனை முறையும் சாகத் தயாராக இருக்கிறேன்... அது எதிரிகள் கைகளால்.. என் உடம்பில் ஒரு சின்ன கீறலை கூட என் துரோகிகள் கைகளால் ஏற்க தயாராக இல்லை. இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

https://tamil.oneindia.com/news/chennai/seeman-sepaks-on-internal-party-issues-397018.html 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 6/9/2020 at 15:34, இசைக்கலைஞன் said:

பாக்கியராசன் மீதுள்ள காழ்ப்புணர்வில கிளப்பி விடுகிறார்கள். யார் விலகினாலும் அவர்மீது பழியை போடுவது இயல்பாகி விட்டது.

கல்யாணசுந்தரம் நின்று விளையாடி பரிணமிப்பார் என்பது எனது நம்பிக்கை! 

உள் பிரிவுகளால் அழிந்ததுதான் ஈழத்தமிழினம். அந்த அச்சம் சர்வதேச தமிழினத்திற்கும் தொடரப்போகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

வெளியில் இருந்து பார்க்கும் போது, அடடா, இது நடக்கக்கூடாதே என்று தோன்றும். கட்சியினை நடத்துபவர்களுக்கு தெரியும் எது சரி, எது பிழை என்று. ஏன் செய்கிறோம் என்று. அவர்கள் முட்டாள்கள் இல்லை.

தமக்கு, கட்சிக்கு சவால் வரும் என்றால் வெளியே அனுப்புவது அரசியல் தான்.

மிக பலம் கொண்ட எம்ஜிஆர் கூட, கருணாதியால் வெளியே அனுப்பப்பட்டார். பின்னர் வைக்கோவும்... அதுதான் அரசியல்.

நம்ம லோக்கல் லெவலில் பார்த்தால், கஜேந்திரகுமார், கஜேந்திரனை பக்கத்தில் வைத்துக் கொண்டு, மணிவண்ணனை வெட்டுவது, எதிர்காலத்தில், திறமைகள் கொண்ட அவர், தனக்கு சவால் வரக்கூடாது என செய்யும் அரசியல்.

சஜித்தினை சகித்துக் கொண்டு இருந்த ரணில், இன்று தனது நிலையே தலைகீழாக மாறி, வெளியேறும் நிலையில்...

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

கலியாணசுந்தரம் மட்டுமல்ல, ராஜிவ்காந்தியும் தான் பிரச்சனையில்

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

வெளியில் இருந்து பார்க்கும் போது, அடடா, இது நடக்கக்கூடாதே என்று தோன்றும். கட்சியினை நடத்துபவர்களுக்கு தெரியும் எது சரி, எது பிழை என்று. ஏன் செய்கிறோம் என்று. அவர்கள் முட்டாள்கள் இல்லை.

தமக்கு, கட்சிக்கு சவால் வரும் என்றால் வெளியே அனுப்புவது அரசியல் தான்.

மிக பலம் கொண்ட எம்ஜிஆர் கூட, கருணாதியால் வெளியே அனுப்பப்பட்டார். பின்னர் வைக்கோவும்... அதுதான் அரசியல்.

நம்ம லோக்கல் லெவலில் பார்த்தால், கஜேந்திரகுமார், கஜேந்திரனை பக்கத்தில் வைத்துக் கொண்டு, மணிவண்ணனை வெட்டுவது, எதிர்காலத்தில், திறமைகள் கொண்ட அவர், தனக்கு சவால் வரக்கூடாது என செய்யும் அரசியல்.

சஜித்தினை சகித்துக் கொண்டு இருந்த ரணில், இன்று தனது நிலையே தலைகீழாக மாறி, வெளியேறும் நிலையில்...

சரி நாதம் அண்ணை. கட்சியில் பொறுப்பு கூட வேண்டாம் அடிமட்ட உறுப்பினராக இருப்பது கூட தலைமைக்கு பாதகமா. நல்ல தமிழ்தேசியம் போங்கள்.🤣

தேசியவாதத்துக்கு பாசிசவாதத்துக்கும் அடிப்படையில் நூழிலை வித்தியாசம் தான் என்பதை மீண்டும் மீண்டும் ஞாபகபடுத்திறீங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

 கல்யாணசுந்தரம் பக்கத்து நியாயம்.

டிஸ்கி: ஒரு மனுசன ஓய்வெடுக்க கூட விடமாட்டங்கள்😁

  • கருத்துக்கள உறவுகள்

நான் இங்கு பலமுறை எழுதியதுதான்.

1. தமிழ் தேசியம் என்ற தங்ககாப்பை காட்டி வரும் விசப்பாம்பு சீமான்.

2. அவரின் கீழ் வேலை செய்பவர்கள், தம்பிகள் உண்மையான போராளிகள்.

3. போன பேட்டியில் கூட, “எப்போதும் என் கொள்கை தமிழ் தேசியம்தான்”, “கட்சியை விட்டு போகும் நிலை வராது, வந்தால்- வேறு கட்சி எல்லாம் இல்லை, ஆசிரியர் தொழில் இருக்கு” என்று கூறியவர் கல்யாணசுந்தரம்.

4. சீமான் மீது பாலியல் குற்றசாட்டு எழுந்த போது, அந்த பெண்ணை நாகரீகம் இன்றி தாக்காமல், இது தனிபட்ட சட்ட பிரச்சனை, இதில் கருத்து கூற ஏதும் இல்லை என நாகரீகமாக பதில் அளித்ததை, சீமானை காபாந்து பேசவில்லை என நினைத்து, பழிவாங்க படுகிறார் கல்யாண சுந்தரம்.

5. கல்யாணசுந்தரம் போன்ற தமிழ் தேசியத்தின் மீது உண்மையான பிடிபுள்ளவர்களுக்கு, சீமானின் முகம் போக, போக தெரியும். யாழ் களத்தில், சீமான் காவடிதுக்கும் உறவுகளுக்கும்தான். என்ன கொஞ்ச காலம் எடுக்கும்.

பின்ன வரட்டே.

  • கருத்துக்கள உறவுகள்
On 8/9/2020 at 10:32, குமாரசாமி said:

உள் பிரிவுகளால் அழிந்ததுதான் ஈழத்தமிழினம். அந்த அச்சம் சர்வதேச தமிழினத்திற்கும் தொடரப்போகின்றது.

தாத்தா போனுக்காள் உண்மை நில‌வ‌ர‌த்தை சொல்லிட்டேன் உங்க‌ளுக்கு , மூளைய‌ போட்டு குழ‌ப்பாம‌ல் ரிலாக்ஸ்சா இருங்கோ , 

அண்ண‌ன் சீமானால் நூறு க‌ல்யான‌சுந்த‌ர‌த்தை உருவாக்க‌ முடியும் , இனி வ‌ரும் தொலைக் காட்சி விவாத‌ங்க‌ளில் யார் க‌ல‌ந்து கொள்ள‌ போகின‌ம் என்ற‌த‌ பொறுத்து இருந்து பாருங்கோ ,

எம் போராட்ட‌த்தை வ‌ள‌க்க‌ த‌லைவ‌ர் எத்த‌னை துரோக‌ங்க‌ள் அவ‌ல‌ங்க‌ளை ச‌ந்திச்சார் , த‌மிழ‌க‌ அர‌சிய‌லில் இது ஒன்றும் புதிது இல்லை , கால‌ப் போக்கில் எல்லாம் ச‌ரியாய் வ‌ரும் ,

***

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

இசையின் பதிலுக்காக காத்திருக்கிறேன். 🤣

துரோகிகளால் அழிவதைவிட துரோகி ஆக்கப்படுவதால் அழிகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவன் எப்போது விழுவான், அப்போது ஏறி மிதிக்கலாம் என்ற அணுகுமுறை தான் இங்கே தெரிகிறது.
நிச்சயம் சீமான் கல்யாணுடன் கதைத்து இந்த குற்றச்சாட்டுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.
இதுவும் கடந்து போகும்...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

ஒருவன் எப்போது விழுவான், அப்போது ஏறி மிதிக்கலாம் என்ற அணுகுமுறை தான் இங்கே தெரிகிறது.
நிச்சயம் சீமான் கல்யாணுடன் கதைத்து இந்த குற்றச்சாட்டுக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும்.
இதுவும் கடந்து போகும்...

வாய்பில்ல ராஜா, வாய்பில்ல.

https://youtu.be/XArauPwUQvc 

இந்த வீடியோவை பாருங்கள்.

ஆனால் சீமானின் பிளான் நல்லாவே வேலை செய்யுது

1. தமிழ் தேசியத்தை ஏற்றுவது

2. பெரியாரை தூற்றி ஒரு வெற்றிடத்தை உருவாக்குவது

3. பெரியார் நீக்க வெற்றிடத்தை தமிழ் தேசியம் அடைக்கும் என்ற மாயையை உருவாக்குவது

4. 2/5 தமிழரை தெலுங்கர் என பிஜேபி பக்கம் தள்ளுவது

5. வளர்ந்து வரும் நிலையில் தமிழ் தேசியத்தை இரெண்டாக உடைத்து எல்லாரினதும் நம்பிகையை சிதைப்பது, தமிழ் தேசியத்தை தீண்ட தகாத கொள்கை ஆக்குவது.

6. தாமரையை மலர செய்வது.

இப்போ stage 4 -5 இல் நிற்கிறீர்கள்.

இந்த திரியில் இனி இப்போதைக்கு எனக்கு வேலை இல்லை. இனி இங்கே சீமான் ரசிகர் மன்றம் சார்பாக அடுத்தடுத்து குத்து பாட்டு அரங்கேறும்.

ஆனால் எனது 6 point plan ஐ அடிகடி நினைவு படுத்தி பாருங்கள். சிலருக்கு இப்பவாவது விளங்கும். சிலருக்கு 6ம் படியில் நிற்கும் போதும் விளங்காது.

🙏🏾

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அளவுக்கு எனக்கு அரசியல் ஞானம் கிடையாது கோஷன். சூழ்நிலைகளை ஆழமாக பிரித்துமேயும் திறனும் கிடையாது. ஆனால் ஒன்று மட்டும் தெரியும், உயிரை கொடுத்து போராடியவர்களையே நொடியில் தூக்கி எறிந்த சமூகம் எம்முடையது. 
சீமானாய் தூக்கி போட எவ்வளவு நாளாகும். 
எதிர்பார்ப்பில் தானே வாழ்க்கை சுவராஷ்யமாக போகும். 
தமிழ் தேசியம் போலிகளால் காவாந்து செய்யப்பட்டால் நம்மால் செய்யக்கூடியது ஒன்றும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, goshan_che said:

க‌ட்சியின் வ‌ள‌ர்சிக்கு க‌டின‌மாய் உழைத்த‌வ‌ர்க‌ள் தொட்டு அண்ண‌ன் சீமான் அருகில் இருப்ப‌வ‌ர்க‌ள் , உண்மையை போட்டு உடைக்க‌ , 

நீங்க‌ள் ம‌ழ‌லைய‌லுக்கு பாட‌ம் எடுப்ப‌து போல் இருக்கு உங்க‌ளின் எழுத்து ,

உங்க‌ளின் க‌ருத்தோடு உட‌ன் ப‌ட‌ இதில் ஒன்றும் உண்மை இல்லை , க‌ள‌ நில‌வ‌ர‌ம் என்ன‌ என்று அறிந்து விட்டு எழுதுங்கோ , த‌மிழ் நாட்டில் நீங்க‌ள் க‌ட‌சியாய் கால் வைச்ச‌து எப்போது கோசான் 

  • கருத்துக்கள உறவுகள்

தலயின் 6 போயிண்டு பிளானுக்கும், கட்சியில் ஒருவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதுக்கும் என்னையா தொடர்பு?

சும்மா, வழமை போல காதில ரத்தம் வருவது போல போட்டு தாக்கவேண்டாம். 

கு செல்வம், தி மு க வில் இருந்து பா ஜ க போனார். அதுக்கு ஒரு 4 போயிண்டு பிளானை சொல்லுங்கோ....

கலியாணசுந்தரத்தினை லண்டனில் சந்தித்தவர்கள் அபிப்பிராயம் கேட்டிருக்கிறேன், ஆகையால் இது எனக்கு புதிதாக இருக்கவில்லை. தாமதமாகி இருக்கிறது.

விகடன் கடிதமும், செந்தில் பேட்டியும் ஒரே நேரத்தில் வந்தது தான் இவரின் மீது விழுந்த சந்தேக பார்வை.

இதில முக்கியமான விசயம், அவரும் போகவில்லை, கட்சியும் அனுப்பவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Sasi_varnam said:

உங்கள் அளவுக்கு எனக்கு அரசியல் ஞானம் கிடையாது கோஷன். சூழ்நிலைகளை ஆழமாக பிரித்துமேயும் திறனும் கிடையாது. ஆனால் ஒன்று மட்டும் தெரியும், உயிரை கொடுத்து போராடியவர்களையே நொடியில் தூக்கி எறிந்த சமூகம் எம்முடையது. 
சீமானாய் தூக்கி போட எவ்வளவு நாளாகும். 
எதிர்பார்ப்பில் தானே வாழ்க்கை சுவராஷ்யமாக போகும். 
தமிழ் தேசியம் போலிகளால் காவாந்து செய்யப்பட்டால் நம்மால் செய்யக்கூடியது ஒன்றும் இல்லை.

ந‌ண்பா நீங்க‌ள் ஒன்றும் யோசிக்க‌ வேண்டாம் , த‌மிழ‌க‌ அர‌சிய‌லில் இத‌ விட‌ எவ‌ள‌வோ ந‌ட‌ந்து இருக்கு , ஆசிரிய‌ரா இருந்த‌வ‌ர‌ மேடையில் ஊட‌க‌ங்க‌ளில் பேச‌ வைச்ச‌தே அண்ண‌ன் சீமான் தான் , 

திராவிட க‌ட்சிக‌ள் ஊழ‌லில் ஊறி போன‌ க‌ட்சிக‌ள் , நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் இருந்து கொண்டு ப‌ல‌ பிராட்டு த‌ன‌ங்க‌ள் ம‌ற்றும் ப‌ல‌ சொல்ல‌ முடியாத‌ அசிங்க‌ங்க‌ளை செய்த‌வ‌ர‌ விட்டு மெள‌வுன‌மாக‌ வில‌குவ‌து சிற‌ப்பு , அத‌ தான் அண்ண‌ன் சீமான் சொய்து இருக்கிறார் 

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Nathamuni said:

தலயின் 6 போயிண்டு பிளானுக்கும், கட்சியில் ஒருவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதுக்கும் என்னையா தொடர்பு?

சும்மா, வழமை போல காதில ரத்தம் வருவது போல போட்டு தாக்கவேண்டாம். 

கு செல்வம், தி மு க வில் இருந்து பா ஜ க போனார். அதுக்கு ஒரு 4 போயிண்டு பிளானை சொல்லுங்கோ....

கலியாணசுந்தரத்தினை லண்டனில் சந்தித்தவர்கள் அபிப்பிராயம் கேட்டிருக்கிறேன், ஆகையால் இது எனக்கு புதிதாக இருக்கவில்லை. தாமதமாகி இருக்கிறது.

விகடன் கடிதமும், செந்தில் பேட்டியும் ஒரே நேரத்தில் வந்தது தான் இவரின் மீது விழுந்த சந்தேக பார்வை.

இதில முக்கியமான விசயம், அவரும் போகவில்லை, கட்சியும் அனுப்பவில்லை. 

கோசான் மழ‌லைய‌லுக்கு பாட‌ம் எடுக்கிறார் , யாழில் இருப்ப‌வ‌ர்க‌ள் கூட‌ முதிய‌வ‌ர்க‌ள் தானே நாதா ,

அண்ண‌ன் சீமான் கூட‌ புகைப்ப‌ட‌ம் எடுக்கும் போது , முத‌ல் எடுத்த‌ ப‌ட‌ம் வ‌டிவாய் இல்லை அண்ண‌ இன்னொரு ப‌ட‌ம் எடுப்போம் என்று சொல்ல‌ ச‌ரி எடுப்போம் என்று த‌ன‌து த‌ம்பிக‌ளின் சொல்லுக்கு ம‌திப்பு கொடுத்து வ‌ழி ந‌ட‌த்தும் ந‌ல்ல‌ அண்ண‌ன் , 

அப்ப‌டி ப‌ட்ட‌ அண்ண‌ன‌ ஜ‌ந்து மாத‌ம் ச‌ந்திக்க‌ முய‌ற்சி ப‌ண்ணியும் ம‌றுத்து விட்டார் என்று க‌ல்யான‌சுந்த‌ர‌ம் சொல்லும் போது ச‌ந்தேக‌ம் க‌ல்யான‌ சுந்த‌ர‌ம் மேல் தான் வ‌ந்த‌து நாதா 😯

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.