Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

  • Replies 3k
  • Views 276.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சியில் இருந்து மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜீவ் காந்தி விலகல்

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக அதன் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்த ராஜீவ் காந்தி அறிவித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் ராஜீவ் காந்தி. ஊடகங்களில் நாம் தமிழர் கட்சியின் பிரதிநிதியாக பங்கேற்றவர்.

அண்மையில் நாம் தமிழர் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது, பேராசிரியர் கல்யாணசுந்தரம், ராஜீவ்காந்தி மீது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நம்பிக்கை இன்மையை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்த நிலையில் தம்முடைய அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்களில் தாம் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவதாக ராஜீவ் காந்தி அறிவித்துள்ளார். அதில், அது ஒரு பேரின்ப கனாக்காலம் ...!! னைவருக்கும் நன்றி.

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுகிறேன்!! என தெரிவித்துள்ளார் ராஜீவ்காந்தி.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/rajiv-gandhi-quits-from-naam-tamilar-party-397147.html

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

ஒரு இரு நாளில் ப‌ய‌ணி யூடுப் ச‌ண‌லில் இருந்து 5000  பேர் வெளியேறி விட்டின‌ம் , 

ம‌ன‌சு பூரா அழுக்கு , வெளியில் ந‌ல்ல‌வ‌ன் போல் ந‌டிப்பு ,

இவ‌ரை விட‌ அறிவான‌ இளைஞ‌ர்க‌ள் க‌ட்சியில் எத்த‌னையோ பேர் இருக்கின‌ம் ,

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

கோசன்,

உங்கள் நீண்ட கட்டுரைக்கு நன்றியும், பாராட்டுக்களும்...

ஆனால் எனக்கு புரியாத விடயம், ஏன் இந்திய அரசியல் குறித்து நமக்கு பாடம் நடத்துகிறீர்கள்?

சீமானின் கட்சி அப்படி நடந்து கொள்ளும், இப்படி நடந்து கொள்ளும்.... பிஜேபி உள்ளே வரும் என்பது போன்ற உள்வீட்டு அரசியல் குறித்த விளக்கம் நமக்கு எதுக்கு என்கிறேன்?  

மாறாக, உங்கள் நேரத்தினை, எமது அரசியலுக்கு, அதில் உள்ள சிக்கல்களை விளக்க பயன்படுத்தலாமே.

நான் தெளிவாக சொல்லி இருக்கிறேன். இந்தியாவின் உதவியே வேண்டாம் என்று. பிச்சை வேண்டாம், நாயை பிடி.

நமது ஊரில், இளவயது உள்ள அனைவருக்கும் உள்ள கனவு வெளிநாடு வருவது.

இந்த நிலை தொடர்ந்தால், இறக்கும் வயதுபோனார் பிணங்களை தூக்கி போட சிங்களம் தான் வரும். அதன் பின் தமிழர் இல்லாத நாட்டில், ஈழம் எதுக்கு என்கிற கேள்வி எழுமே?

முதலில், நமது இளைஞர்களின் மனதை மாத்தி, என்ட்டர்ப்ரூனேர்ஸ் ஆக மாத்தக்கூடிய வழிவகைகளில் நமது சக்தியை பயன்படுத்த வேண்டும்.

அதுக்கு, ஒரு திரியினை திறந்து, உங்கள் திறமையினை அதில் காட்டுங்கள். நாமும் பேராதரவு தருவதுடன், பங்களிப்போம்.

அதனை விடுத்து, இந்த அரைக்காசுக்கு பெறுமதி இல்லாத விடயத்தில், முழு சக்தியினை விரயம் செய்யாதீர்கள் என்று, அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நீ என்ன எனக்கு சொல்வது என்றால்.... உங்கள் இஷடம்..

நாதம்ஸ்,

1. எனக்கு என் வாழ்க்கையில் ஒரே ஒரு அரசியல் கொள்கைதான். தமிழ் தேசியம். அதற்கு இலங்கை இந்தியா என்ற வேறுபாடு இல்லை. இரெண்டு என் நிலம்தான். தமிழ் தேசியத்துக்கு யார் ஆப்படிப்பதாக நான் நினத்தாலும் முடிந்தளவு எதிர்ப்பேன்.

2.இந்தியாவை நம்பி பலனில்லை, இலங்கையோடு போகலாம் என்ற உங்கள் போக்கில் எனக்கு 100% உடன்பாடில்லை. அப்படி போவதும் நான் இப்போதே கோசானா சேகர என்றும் நீங்கள் நாதமுனி சொய்சா என்றும் மாற்றுவதும் ஒன்றுதான். ஏதோ ஒரு வெளி அளுத்தம் மூலமே பெளத்த சிங்கள பேயை கட்டுபடுத்தவாவது முடியும் என்பதே துட்டன்காமினி காலத்தில் இருந்து இலங்கை தமிழருக்கு பாடம். ஆகவே அந்தந்த காலகட்டத்தில் கிடைக்கும் வெளி உதவிக்கான வாய்ப்புகளை நல்ல வழியில் நம் தலைமகள் பயன்படுத்த வேண்டும். என நான் ஏங்குகிறேன். அப்படி ஒரு அளுத்தம் தமிழ்நாட்டில் உண்மையான தமிழ் தேசியம் பலம் பெறும் போது ஏற்படும் என நம்புகிறேன். ஆகவே ஒரு ஈழதமிழனாக - தமிழ் நாட்டில் “உண்மையான” தமிழ் தேசியத்தை வளர நீரூற்றுவதை என் கடமையாக எண்ணுகிறேன்.

3.மேலே புள்ளி 1, 2 நான் ஏன் இதில் சிரத்தை எடுக்கிறேன் என்பதை காட்டும். தமிழ் தேசியத்தை சீமானின் சதியை மீறி தமிழ் நாட்டில் ஆளும் சக்தியாக நிலை நிறுத்த வேண்டும் என்பதே என் எழுத்தின் நோக்கம்.

4.இப்போ என் பங்குக்கு ஒரு கேள்வி.  என்னை விட அதிகம் சீமானில் அக்கறை எடுத்து, அவரின் எமக்கு ஆபத்தான தியரிகளை எல்லாம் சிங்களவர் மத்தியில் ஆங்கிலத்தில் எடுத்து போபவர் நீங்கள். தமிழக அரசியலை பற்றி நாம் அலட்ட தேவையில்லை என்றபடியே ஏன் இதை செய்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, goshan_che said:

4.இப்போ என் பங்குக்கு ஒரு கேள்வி.  என்னை விட அதிகம் சீமானில் அக்கறை எடுத்து, அவரின் எமக்கு ஆபத்தான தியரிகளை எல்லாம் சிங்களவர் மத்தியில் ஆங்கிலத்தில் எடுத்து போபவர் நீங்கள். தமிழக அரசியலை பற்றி நாம் அலட்ட தேவையில்லை என்றபடியே ஏன் இதை செய்கிறீர்கள்?

நான் எங்கே சொன்னேன் சிங்களவர் மத்தியில் சீமான் தியரியை பரப்பினேன் என்று?

நானும், அதே தமிழ் தேசிய நோக்கில் தான் சீமானை பார்க்கிறேன்.

ஆனாலும், நீங்கள் பாரதிய ஜனதா கட்சி அரசியல், திராவிட அரசியல் என்று உங்கள் ஆர்வத்தினை எமக்கு தருவதில் பிரயோசனம் இல்லை என்றே சொல்கிறேன்.

தமிழ் தேசியத்துக்குள் மட்டும் என்றே இந்த திரியும், நாமும் விவாதிக்கிறோம். நீங்கள் அதனை இந்திய அரசியலுக்குள் நகர்த்துவதே... தேவையில்லாதது என்கிறேன். அதுக்காக நீங்கள் செலவழிக்கும் நேரம் தான் அனைவராலும் கவனிக்கப்படுகின்றது.

அது புரிந்தும் புரியாததுபோல் நீங்கள் தொடர்ந்து செயல்படுவதும் அவதானிக்கப்படுகின்றது. 

மீண்டும் சொல்கிறேன், இந்தியா தனது நலன்களுடன் தான் வரும்.மேலும் இலங்கையானது இந்தியாவின் கைகளை விட்டு, இப்போது சீன, அமெரிக்க அரசியலுக்குள் போய் விட்டது.

அமெரிக்காவின் நலன்களுக்காகவே, கோத்தாவின் அமெரிக்க குடியுரிமை விரைவாக நீக்கப்பட்டு, ஜனாதிபதி தேர்தலில் இறக்கப்பட்டார். அவரது மனைவியும், மகனும் அமெரிக்க குடிமக்கள். மனைவி ஸ்பான்சர் பண்ணினால், கோத்தா மீண்டும் அமேரிக்க கிறீன் கார்டு எடுப்பார் என்ற நிலையில் தான் ஜனாதிபதி ஆகி உள்ளார்.

ஆகவே டெல்லி வரும், புடுங்கும் என்று கனவு காண்பதில் பிரயோசனம் இல்லை.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

அதான் வந்த வேலை முடிஞ்சாச்சு இல்ல .. ( விகடன் )

அடுத்த கட்சிய கலைக்க கிளம்ப வேண்டியான் .! 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியின் விவாதங்களில் அவ்வளவு ஆர்வமில்லையானாலும் சில நாட்களாக என்ரர்ரெயின்மென்ற் தரும் காணொளிகளால் பார்க்கிறேன். இந்தக் கட்சியில் இப்போது ஏற்பட்டிருக்கும் நிலை பற்றி யார் ஆச்சரியப் பட முடியும்? வலது சாரி அமைப்புகள் அனைத்துமே தனிநபர் வழிபாட்டை மையமாகக் கொண்டவை தான். அந்த தனிநபர் வழிபாட்டை ஏற்றுக் கொள்ளாதோர் துரோகிகளாக்கப் படுவர்! இப்படியே தேய்ந்து மறைந்து போவதே இத்தகைய அமைப்புகளின் முடிவாக இருக்கும்! 

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Nathamuni said:

நான் எங்கே சொன்னேன் சிங்களவர் மத்தியில் சீமான் தியரியை பரப்பினேன் என்று?

நானும், அதே தமிழ் தேசிய நோக்கில் தான் சீமானை பார்க்கிறேன்.

ஆனாலும், நீங்கள் பாரதிய ஜனதா கட்சி அரசியல், திராவிட அரசியல் என்று உங்கள் ஆர்வத்தினை எமக்கு தருவதில் பிரயோசனம் இல்லை என்றே சொல்கிறேன்.

தமிழ் தேசியத்துக்குள் மட்டும் என்றே இந்த திரியும், நாமும் விவாதிக்கிறோம். நீங்கள் அதனை இந்திய அரசியலுக்குள் நகர்த்துவதே... தேவையில்லாதது என்கிறேன். அதுக்காக நீங்கள் செலவழிக்கும் நேரம் தான் அனைவராலும் கவனிக்கப்படுகின்றது.

அது புரிந்தும் புரியாததுபோல் நீங்கள் தொடர்ந்து செயல்படுவதும் அவதானிக்கப்படுகின்றது. 

மீண்டும் சொல்கிறேன், இந்தியா தனது நலன்களுடன் தான் வரும்.மேலும் இலங்கையானது இந்தியாவின் கைகளை விட்டு, இப்போது சீன, அமெரிக்க அரசியலுக்குள் போய் விட்டது.

அமெரிக்காவின் நலன்களுக்காகவே, கோத்தாவின் அமெரிக்க குடியுரிமை விரைவாக நீக்கப்பட்டு, ஜனாதிபதி தேர்தலில் இறக்கப்பட்டார். அவரது மனைவியும், மகனும் அமெரிக்க குடிமக்கள். மனைவி ஸ்பான்சர் பண்ணினால், கோத்தா மீண்டும் அமேரிக்க கிறீன் கார்டு எடுப்பார் என்ற நிலையில் தான் ஜனாதிபதி ஆகி உள்ளார்.

ஆகவே டெல்லி வரும், புடுங்கும் என்று கனவு காண்பதில் பிரயோசனம் இல்லை.

1. கண்டி நாயக்க வராலாறு தியரி - சீமானே அதன் வீடியோவை வரலாற்று பிழை உள்ளது எனது கூறி பாரி வெளியிடுவதை தவிர்த்தார் என்கிறார் பாரி. இந்த தியரியைதானே நீங்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அதை ஒரு சிங்கள முன்னாள் ராணுவ அதிகாரி, கோட்டாவின் “வியத்கம” வுக்கு நெருக்கமானவர், சிங்களத்தில் மொழிபெயர்தார்? இதை நீங்கள் தெரிந்து செய்கிறீர்களா? அல்லது ஆர்வகோளாரில் தெரியாமல் செய்கிறீர்களா? 

2. இந்தியாவை நம்பி எல்லாம் நான் இல்லை. எனக்கு இந்திய அரசியல் பரிச்சயம் அதிகம் என்பதால் - மற்றைய மாநிலங்களில் பிஜேபி எப்படி நகர்ந்தது என்பதை வைத்து, சீமான் யார், அவரை பிஜேபி எப்டி உபயோகிக்கிறது என்பதை காண முடிகிறது. அவ்வளவே.

3. முன்பே சொன்னேன்- நீங்கள் “சிங்களவனோடு போகலாம்” “கருணா எம்பி ஆகி இருக்கலாம்” என்ற சிந்தனை உடையவர். இதை எப்படி தமிழ் தேசிய அரசியல் என்று சொல்ல முடியும்?

4. “இன்றைய நிலையி இலங்கையோடு போகலாம்” என்பது உங்கள் நிலைபாடு எண்டால் அதை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் இது அங்கயன்/வியாழேந்திரன் அரசியல். தமிழ் தேசியம் அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் தெரியாமல் தான் கேட்கிறேன்...🤔 🤔🤔🤔🤔
உண்மையில் கல்யாண சுந்தரம் அவர்கள், நாம் தமிழர் கட்சிக்கு துரோகம் இளைத்து விட்டாரா?
அதற்கான உண்மையான ஆதாரங்களாக எதை முன்வைக்கிறார்கள்?
வெறுமனே சீமான் சொன்னார் அவர் சாமான் சொன்னார் என்றால் அது மிகவும் கேவலமான நிலையாய் தான் இருக்கும் என நினைக்கிறேன்.
எப்படியோ இந்த சூழ்நிலை நாம் தமிழர் கட்சிக்கு நல்லதல்ல. ஒரு இனத்துக்கு தலைமை தாங்க நினைப்பவர், ஒரு மாநிலத்துக்கு முதலமைச்சராக வர வேலை செய்பவர், இப்படி எடுத்தேன் கவிட்டேன் என்று பேசுவது சரியாய் படவில்லை. இவர் அகராதியில் பேச்சு வார்த்தைக்கோ , சமரசத்துக்கோ  இடமில்லை என்று தான் தோணுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Sasi_varnam said:

இந்த‌க் காணொளிய‌ பாருங்கோ ந‌ண்பா , க‌ல்யான‌சுந்த‌ர‌த்தோடு ஒன்னா ப‌ய‌ணித்த‌வ‌ர் க‌ல்யான‌ சுந்த‌ர‌ம் செய்த‌ அனைத்து துரோக‌ங்க‌ளையும் சொல்லுகிறார் ,

என‌க்கு க‌ல்யான‌சுந்த‌ர‌த்தின் மீதான‌ ந‌ம்பிக்கை 2013ம் ஆண்டே போய் விட்ட‌து ,

இன்னும் எழுத‌ நிறைய‌ இருக்கு இந்த‌ காணொளி ஒன்றே போதும் நீங்க‌ள் தெளிவ‌டைய‌ ந‌ண்பா 

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, goshan_che said:

1. கண்டி நாயக்க வராலாறு தியரி - சீமானே அதன் வீடியோவை வரலாற்று பிழை உள்ளது எனது கூறி பாரி வெளியிடுவதை தவிர்த்தார் என்கிறார் பாரி. இந்த தியரியைதானே நீங்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அதை ஒரு சிங்கள முன்னாள் ராணுவ அதிகாரி, கோட்டாவின் “வியத்கம” வுக்கு நெருக்கமானவர், சிங்களத்தில் மொழிபெயர்தார்? இதை நீங்கள் தெரிந்து செய்கிறீர்களா? அல்லது ஆர்வகோளாரில் தெரியாமல் செய்கிறீர்களா? 

முடியல - உங்கள் புரிதலுக்கு நன்றி. மொழிபெயர்த்தவர்கள் முட்டாள்கள் அல்ல... நானும் நீங்கள் நினைக்கும் வழியிலும் எழுதவில்லை.... போதுமா...

22 minutes ago, goshan_che said:

2. இந்தியாவை நம்பி எல்லாம் நான் இல்லை. எனக்கு இந்திய அரசியல் பரிச்சயம் அதிகம் என்பதால் - மற்றைய மாநிலங்களில் பிஜேபி எப்படி நகர்ந்தது என்பதை வைத்து, சீமான் யார், அவரை பிஜேபி எப்டி உபயோகிக்கிறது என்பதை காண முடிகிறது. அவ்வளவே.

உங்களை போலவே நாமும் இந்திய அரசியலை பார்க்கிறோம். சீமான் யார், அவரை பிஜேபி எப்டி உபயோகிக்கிறது என்பது இன்றய நிலையில் உங்கள் கற்பனை தான். உங்களவுக்கு இங்கே யாரும் அந்தளவுக்கு சிந்திக்கவும் இல்லை. அந்த தேவையும் இல்லை. உண்மையை சொல்வதானால், உங்கள் கருத்துக்கள் கவனிக்கப்பட வேண்டும் என்று, அவித்து  இறக்குகிறீர்கள் போலவே உள்ளது. 

22 minutes ago, goshan_che said:

3. முன்பே சொன்னேன்- நீங்கள் “சிங்களவனோடு போகலாம்” “கருணா எம்பி ஆகி இருக்கலாம்” என்ற சிந்தனை உடையவர். இதை எப்படி தமிழ் தேசிய அரசியல் என்று சொல்ல முடியும்?

நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், இன்றும் சிங்களவனோடு தான் இருக்கிறோம். இன்னும் குறித்த காலத்துக்கு இருக்கப்போகிறோம். இந்தியா என்னும் அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதை ஆக இல்லாமல், முடிந்தவரை பேசி, நம்ம தீர்க்க கூடிய நடைமுறை சிக்கலை தீர்க்கலாம். புராண கால அனுமன் முதல், இந்திய முனைவுகள் அனைத்துமே எமது அழிவில் தான் முடிந்தன. 

22 minutes ago, goshan_che said:

4. “இன்றைய நிலையி இலங்கையோடு போகலாம்” என்பது உங்கள் நிலைபாடு எண்டால் அதை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் இது அங்கயன்/வியாழேந்திரன் அரசியல். தமிழ் தேசியம் அல்ல.

இலங்கையோடு போகலாமா?

புரியவில்லை, நாம் என்ன தனி தேசத்தவரோ?

தீர்வு வந்தாலும், வராவிட்டாலும், சிங்களவரோடு சேர்ந்து தான் அந்த தீவில் வாழப்போகிறோம். ஒரு பேரிடர் நிகழ்ந்தால், அவர்களுக்கு நாமும், நமக்கு அவர்களும் தான் முதலில் ஓடி வரவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் சரிதான். அவரில் தவறு என்றால் கூப்பிட்டு இதுதான் தவறு இதனால் கட்சியைவிட்டு நீக்குகிறேன் என்பது தானே ஜனநாயகம். 

அதென்ன 5 மாதம் பேசாமல் இருந்தேன். இப்போவந்து போனவருசம் அதை செஞ்சார்.

சுந்தரவள்ளியை வைச்சு எழுதினார் ரசிச்சார் என்று கதை அளப்பான்.

புலிகளின் சரிவு கூட “ராஜகோபுரம் எங்கள் தலைவன்” “அவர் முருகனுக்கே நிகரானவன்” என்பதில் தான் தொடங்கியது.

கூப்பிட்டு நாங்கள் மக்களுக்காக போராடுகிறோம். எங்களுக்குள் பதவிநிலை வேண்டாம். சிங்களவன் வேணுமென்றால் கேணல், பிரிகேடியர் வைச்சு கூப்பிடட்டும் என்று இருந்தால் சிலவேளைகளில் புலிகளும் இப்போ இருந்திருப்பர். 

வாறவன் வா, போறவன் போ என்றால் கல்யாணசுந்தரம், ரஜீவ்காந்தி எல்லாம் வந்தேறிகளா. தமிழர்கள் தானே. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 9/9/2020 at 16:13, Sasi_varnam said:

உண்மையில் தெரியாமல் தான் கேட்கிறேன்...🤔 🤔🤔🤔🤔
உண்மையில் கல்யாண சுந்தரம் அவர்கள், நாம் தமிழர் கட்சிக்கு துரோகம் இளைத்து விட்டாரா?
அதற்கான உண்மையான ஆதாரங்களாக எதை முன்வைக்கிறார்கள்?
வெறுமனே சீமான் சொன்னார் அவர் சாமான் சொன்னார் என்றால் அது மிகவும் கேவலமான நிலையாய் தான் இருக்கும் என நினைக்கிறேன்.
எப்படியோ இந்த சூழ்நிலை நாம் தமிழர் கட்சிக்கு நல்லதல்ல. ஒரு இனத்துக்கு தலைமை தாங்க நினைப்பவர், ஒரு மாநிலத்துக்கு முதலமைச்சராக வர வேலை செய்பவர், இப்படி எடுத்தேன் கவிட்டேன் என்று பேசுவது சரியாய் படவில்லை. இவர் அகராதியில் பேச்சு வார்த்தைக்கோ , சமரசத்துக்கோ  இடமில்லை என்று தான் தோணுகிறது.

உங்கள் ஆதங்கம் புரியும் அதேவேளை, இது உள்கட்சி பிரச்சனை. நீங்கள் கேட்க்கும் ஆதாரம் எப்படி கிடைக்கும்?  கட்சியில் உள்வீட்டு விசயங்களை வெளியில் கசிய விட்டதால் தான், அவருடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.  

மேலும், விகடனில் வந்த கடிதமும், செந்திலின் பேட்டியும், யாராலோ ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. கடிதத்தில் பாதியை தான் ஏற்றுக்  கொள்கிறேன் என்று பேட்டியில் கலியாணம் சொல்லி இருக்கிறார்.

இது சவுக்கு சங்கர், பாண்டே (திமுக ஆலோசகர்) பின்னால் இருக்க கூடும் என்றே கருதுகின்றனர்

****

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, முதல்வன் said:

அதெல்லாம் சரிதான். அவரில் தவறு என்றால் கூப்பிட்டு இதுதான் தவறு இதனால் கட்சியைவிட்டு நீக்குகிறேன் என்பது தானே ஜனநாயகம். 

அதென்ன 5 மாதம் பேசாமல் இருந்தேன். இப்போவந்து போனவருசம் அதை செஞ்சார்.

சுந்தரவள்ளியை வைச்சு எழுதினார் ரசிச்சார் என்று கதை அளப்பான்.

புலிகளின் சரிவு கூட “ராஜகோபுரம் எங்கள் தலைவன்” “அவர் முருகனுக்கே நிகரானவன்” என்பதில் தான் தொடங்கியது.

கூப்பிட்டு நாங்கள் மக்களுக்காக போராடுகிறோம். எங்களுக்குள் பதவிநிலை வேண்டாம். சிங்களவன் வேணுமென்றால் கேணல், பிரிகேடியர் வைச்சு கூப்பிடட்டும் என்று இருந்தால் சிலவேளைகளில் புலிகளும் இப்போ இருந்திருப்பர். 

வாறவன் வா, போறவன் போ என்றால் கல்யாணசுந்தரம், ரஜீவ்காந்தி எல்லாம் வந்தேறிகளா. தமிழர்கள் தானே. 🤣

புலிகளின் சரிவு கூட “ராஜகோபுரம் எங்கள் தலைவன்” “அவர் முருகனுக்கே நிகரானவன்” என்பதில் தான் தொடங்கியது.

"அடடா .... இந்த பாட்டு தான் எங்கட போராட்டத்துக்கு தோல்வியை தந்தது என்று இன்றுவரைக்கும் தெரியாமலேயே இருந்து விட்டேன்.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Sasi_varnam said:

புலிகளின் சரிவு கூட “ராஜகோபுரம் எங்கள் தலைவன்” “அவர் முருகனுக்கே நிகரானவன்” என்பதில் தான் தொடங்கியது.

"அடடா .... இந்த பாட்டு தான் எங்கட போராட்டத்துக்கு தோல்வியை தந்தது என்று இன்றுவரைக்கும் தெரியாமலேயே இருந்து விட்டேன்.

க‌ட‌வுளோடு ஒப்பிட்டு த‌லைவ‌ருக்கு இன்னும் சில‌ பாட‌ல்க‌ள் இருக்கு , அதுக்கு முத‌ல்வ‌ன் என்ன‌ விள‌க்க‌ம் த‌ருவார் என்று தெரியாது 😁😀

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, Nathamuni said:

உங்கள் ஆதங்கம் புரியும் அதேவேளை, இது உள்கட்சி பிரச்சனை. நீங்கள் கேட்க்கும் ஆதாரம் எப்படி கிடைக்கும்?  கட்சியில் உள்வீட்டு விசயங்களை வெளியில் கசிய விட்டதால் தான், அவருடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டன.  

மேலும், விகடனில் வந்த கடிதமும், செந்திலின் பேட்டியும், யாராலோ ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. கடிதத்தில் பாதியை தான் ஏற்றுக்  கொள்கிறேன் என்று பேட்டியில் கலியாணம் சொல்லி இருக்கிறார்.

இது சவுக்கு சங்கர், பாண்டே (திமுக ஆலோசகர்) பின்னால் இருக்க கூடும் என்றே கருதுகின்றனர்.

நீங்கள் நல்லவரா, கெட்டவரா, முதல்வரே. 😁 🤔

என்ன‌ நாதா ( முத‌ல்வ‌னின் கேள்வியை நீங்க‌ளே அவ‌ர் இட‌ம் திருப்ப‌ கேக்கிறீங்க‌ள் ) ந‌ல்ல‌வ‌ரா கெட்ட‌வ‌ரா என்று /

என்னை கேட்டால் முத‌ல்வ‌ன் ந‌ல்ல‌வ‌ர் என்று தான் சொல்லுவேன் ,

முத‌ல்வ‌ன் போன‌ நூற்றாண்டில் யாழில் என்ன‌ பெய‌ரில் எழுதி இருப்பார் என்று ப‌ல‌ வாட்டி யோசிச்சு இருக்கிறேன் , (குறுக்கால‌ போவான் ) தான் முத‌ல்வ‌ன் என்ற‌ பெய‌ரில் எழுதுகிறார் என்ற‌ சிறு ச‌ந்தேக‌ம் 😁😀

  • கருத்துக்கள உறவுகள்

கல்யாண சுந்தரம் பேட்டி

Edited by ஏராளன்

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Nathamuni said:

முடியல - உங்கள் புரிதலுக்கு நன்றி. மொழிபெயர்த்தவர்கள் முட்டாள்கள் அல்ல... நானும் நீங்கள் நினைக்கும் வழியிலும் எழுதவில்லை.... போதுமா...

சரி போதும்

உங்களை போலவே நாமும் இந்திய அரசியலை பார்க்கிறோம். சீமான் யார், அவரை பிஜேபி எப்டி உபயோகிக்கிறது என்பது இன்றய நிலையில் உங்கள் கற்பனை தான். உங்களவுக்கு இங்கே யாரும் அந்தளவுக்கு சிந்திக்கவும் இல்லை. அந்த தேவையும் இல்லை. உண்மையை சொல்வதானால், உங்கள் கருத்துக்கள் கவனிக்கப்பட வேண்டும் என்று, அவித்து  இறக்குகிறீர்கள் போலவே உள்ளது. 

இதில் அவித்து இறக்கி, எனக்கு என்ன பயன்? நாளைக்கு என்னை தமிழ் கடையில் கண்டால் கோசான் என அடையாளம் காணுவீர்களா? என்னை மெச்சுவீர்களா? இல்லை. கோசான் என்பது ஒரு ஐடி. அதற்கு கெத்து கூட்டி நான் ஒன்றும் அடையப்போவதில்லை. 

நான் என்பார்வையை எழுதுகிறேன். ஏனைய கருத்தாளரைப்போலவே.

நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், இன்றும் சிங்களவனோடு தான் இருக்கிறோம். இன்னும் குறித்த காலத்துக்கு இருக்கப்போகிறோம். இந்தியா என்னும் அரசனை நம்பி புருசனை கைவிட்ட கதை ஆக இல்லாமல், முடிந்தவரை பேசி, நம்ம தீர்க்க கூடிய நடைமுறை சிக்கலை தீர்க்கலாம். புராண கால அனுமன் முதல், இந்திய முனைவுகள் அனைத்துமே எமது அழிவில் தான் முடிந்தன. 

இலங்கையோடு போகலாமா?

புரியவில்லை, நாம் என்ன தனி தேசத்தவரோ?

தீர்வு வந்தாலும், வராவிட்டாலும், சிங்களவரோடு சேர்ந்து தான் அந்த தீவில் வாழப்போகிறோம். ஒரு பேரிடர் நிகழ்ந்தால், அவர்களுக்கு நாமும், நமக்கு அவர்களும் தான் முதலில் ஓடி வரவேண்டும்.

இலங்கையோடு போகவேண்டாம் என்றால்- ஒரு 3ம் தரப்பு மத்தியஸ்தம் இல்லாமல் போக வேண்டாம் என்பதுதான். தவிர நாட்டை பிய்து எடுத்து நடுக்கடலில் நடவா முடியும்?

இலக்கை அரசோடு நாம் 1-2-1 டீல் போடபோனால், இப்போ - கிழக்கு தொல்பொருள் செயலணிக்கு நடந்ததுதான் நாளை ஒவ்வொரு விடயத்திலும் நடக்கும்.

 முன்பே சொன்னேன். சீனா நம்மை சீண்டாது. ஆக நமக்கு முன் இருக்கும் தெரிவு. 

1. வியாழேந்திரன்/அங்கயன் அரசியலா? முடிவு கிழக்கு செயலணி போல இருக்கும்.

2. தமிழ் தேசிய சக்திகள் ஒரே அணியில் வந்து இந்தியாவை 13 ஐ அமல் செய்ய சொல்லி வற்புறுத்துவதா? இது பலனளிக்குமா தெரியாது ஆனால் இதுதான் குறைந்த பட்ச தமிழ் தேசிய அரசியல்.

இதில் வழி 1 ஐ பிரேரிக்கும் நீங்கள் உங்களை எப்படி தமிழ் தேசியவாதியாக இனம் காண்கிறீர்கள் என்பது உண்மையிலேயே எனக்கு விளங்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Sasi_varnam said:

உண்மையில் தெரியாமல் தான் கேட்கிறேன்...🤔 🤔🤔🤔🤔
உண்மையில் கல்யாண சுந்தரம் அவர்கள், நாம் தமிழர் கட்சிக்கு துரோகம் இளைத்து விட்டாரா?
அதற்கான உண்மையான ஆதாரங்களாக எதை முன்வைக்கிறார்கள்?
வெறுமனே சீமான் சொன்னார் அவர் சாமான் சொன்னார் என்றால் அது மிகவும் கேவலமான நிலையாய் தான் இருக்கும் என நினைக்கிறேன்.
எப்படியோ இந்த சூழ்நிலை நாம் தமிழர் கட்சிக்கு நல்லதல்ல. ஒரு இனத்துக்கு தலைமை தாங்க நினைப்பவர், ஒரு மாநிலத்துக்கு முதலமைச்சராக வர வேலை செய்பவர், இப்படி எடுத்தேன் கவிட்டேன் என்று பேசுவது சரியாய் படவில்லை. இவர் அகராதியில் பேச்சு வார்த்தைக்கோ , சமரசத்துக்கோ  இடமில்லை என்று தான் தோணுகிறது.

இன்னும் சிந்தியுங்கள். 

தேடி வாசியுங்கள். கல்யாணசுந்தரம், ரஜீவ்காந்தி போன்றோரின் முந்திய செயல்பாடுகளை, நேர்மையை பிரிவுக்கு முன்னான வீடியோக்களில் பாருங்கள்.

நான் இங்கே காலம் காலமா எழுதி வருகிறேன்.

1. சீமானின் பின்னால் நிற்பவர்கள் அப்பழுக்கற்ற போராளிகள்

2. ஒரு காலம் வரும் - இவர்களுக்கும் நாம் தமிழரின் அதி தலைமை ஒருங்கிணைப்பாளர் அமித் ஷா தான் என்பது புரியும். 

3. அப்போது இவர்கள் சீமானையும் அவரின் சதியையும் கடந்து உண்மையான தமிழ் தேசிய அரசியலை தமிழ்நாட்டில் கட்டி எழுப்பக்கூடும்.

3க்கான அறிகுறிகள் தெரிகிறன. எதிர்பார்ப்போம் நம்பிக்கையுடன். 

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, ஏராளன் said:

கல்யாண சுந்தரம் பேட்டி

பிர‌ச்ச‌னையை ஊதி பெரிசாக்கின‌தே க‌ல்யாண‌சுந்த‌ர‌ம் தான் , நெறியாள‌ர் இதை ஏன் கேக்க‌ ம‌றுத்து விட்டார் ( அண்ண‌ன் சீமான் உங்க‌ளை த‌ண்டிச்சிம் அதே த‌ப்பை மீண்டும் மீண்டும் செய்கிறீங்க‌ள் ,

இது ப‌ல‌ருக்கு தெரிந்த‌ உண்மை க‌ட்சியில் இருந்து நீக்க‌ப் ப‌ட்ட‌வையை க‌ல்யாண‌சுந்த‌ர‌ம் ஊக்கிவிக்கிறார் , 

க‌ல்யாண‌சுந்த‌ர‌த்தின் மீது பிழைக‌ள் இல்லை என்றால் ( ஜ‌யா கலைக்கோட்டுதயம் மூல‌ம் உண்மைக‌ளை சொல்லி ச‌மாத‌ன‌மாய் போய் இருக்க‌லாம் தானே )

செந்திலுக்கு பேட்டி குடுத்த‌ பிற‌க்கு தான் இந்த‌ பிர‌ச்ச‌னை பூதாக‌ர‌மாய் வெடிச்ச‌து , க‌ல்யாண‌சுந்த‌ர‌ம் ச‌த்திய‌த்தின் வ‌ழி வ‌ந்த‌வ‌ர் போல் வார்த்தையை அள்ளி விடுகிறார் , க‌ல்யாண‌சுந்த‌ர‌த்தோடு அர‌சிய‌ல் க‌ள‌த்தில் ப‌ய‌ணித்த‌வ‌ர்க‌ள் க‌ல்யாண‌ சுந்த‌ர‌ம் ந‌ட‌த்தும் ப‌ய‌ணி யூடுப் ச‌ண‌லில் எங்க‌ளுட‌ன் விவாதிக்க‌ த‌யாரா என்று கேட்டு இருக்கின‌ம் , அத‌ற்கு முத‌ல் ப‌தில் அளிக்க‌ட்டும் , 

க‌ல்யாண‌ சுந்த‌ர‌மா சீமானா என்ற‌ குழ‌ப்ப‌த்தை முத‌ல் யார் உண்டு ப‌ண்ணின‌து ,

இவ‌ர் தொகுதியில் உள்ள‌ இளைஞ‌ர்க‌ளையே குழ‌ப்பி க‌ட்சிக்குள் குழ‌ப்ப‌த்தை உண்டு ப‌ண்ணின‌வ‌ர் , இப்ப‌டி க‌ல்யாண‌சுந்த‌ர‌ம் மேல் ப‌ல‌ குற்ற‌சாட்டுக‌ள் இருக்கு , ஆண்ட‌வா சீ என்டு இருக்கு 

  • கருத்துக்கள உறவுகள்

எங்க‌ட‌ போராட்ட‌ம் வென்று எங்க‌ளுக்கு என்று ஒரு நாடு அடைந்து இருந்தால் இவ‌ர்க‌ள் யார் என்று கூட‌ தெரிந்து இருக்காது 😡, பேர் இழ‌ப்பை ச‌ந்திச்சிட்டோம் இவ‌ர்க‌ளின் கையை ப‌ல‌ப் ப‌டுத்தி அடுத்த‌ க‌ட்ட‌த்துக்கு ந‌க‌ர்வோம் என்றால் , இதுங்க‌ள் ஊழ‌ல் குற்ற‌ சாட்டும் போட்டியும் புறாமையும் பிள‌வுக‌ளை அதிக‌ம் உண்டு ப‌ண்ணுதுக‌ள் 😓

  • கருத்துக்கள உறவுகள்

அண்ண‌ன் சீமான் வெளிப்ப‌டையாய் சொல்லி விட்டார் க‌ல்யாண‌சுந்த‌ர‌ம் ம‌ற்றும் ராஜிவ்காந்தி கூட‌ இனி க‌ட்சியில் ப‌ய‌ணிக்க‌ முடியாது ,

புல‌ம்பெய‌ர் நாட்டு அமைபுக‌ளுக்கு அண்ண‌ன் சீமானை ப‌ற்றி க‌ல்யாண‌சுந்த‌ர‌ம்  ப‌ல‌ வ‌த‌ந்திக‌ளை ப‌ர‌ப்பி இருக்கிறார் , இது அண்ண‌ன் சீமானின் காதுக்கு வ‌ரும் போது க‌ல்யாண‌சுந்த‌ர‌த்தின் முக‌த்தை பார்த்து க‌தைக்க‌ எப்ப‌டி ம‌ன‌ம் வ‌ரும் 😓 ,

க‌ல்யாண‌சுந்த‌ர‌ம் க‌ட்சிக்கு ந‌ல்ல‌து செய்ய‌ நினைத்தால் ஊட‌க‌ ச‌ந்திப்பை த‌விர்த்து அவ‌ரின் முக‌ நூல் ப‌க்க‌த்தை மூடி விட்டு நான் என் வேலை பார்க்க‌ போகிறேன் என்று போய்கிட்டு இருக்க‌னும் 🤞

க‌ட்சியில் ஒன்று இர‌ண்டு பிர‌ச்ச‌னைக‌ள் இல்லை ராஜிவ் காந்தியால் க‌ல்யாண‌சுந்த‌ர‌த்தால் ப‌ல‌ பிர‌ச்ச‌னைக‌ள் 😓,

க‌ல்யாண‌சுந்த‌ர‌ம் க‌ட‌சியாய் குடுத்த‌ பேட்டியில் அவ‌ர் உள் ம‌ன‌சில் ஒன்று வெளி ம‌ன‌சில் இன்னொன்று அப்ப‌ட்ட‌மாய் தெரியுது 😡,

அண்ண‌ன் சீமான் 2012ம் ஆண்டே சொன்னார் க‌ட்சியில் த‌ன‌து த‌ம்பிக‌ள் நான் பெரிசா நீ பெரிசா என்று ச‌ண்டை போடுவ‌து க‌வ‌லை அளிக்குது என்று 😓

க‌ல்யாண‌சுந்த‌ர‌த்தை உல‌குக்கு அறிமுக‌ம் செய்து வைச்ச‌தே அண்ண‌ன் சீமான் தான் அண்ண‌ன் சீமான் இல்லாட்டி க‌ல்யாண‌ சுந்த‌ர‌ம்  ப‌ள்ளியில் ப‌டிப்பிக்கும் ஆசிரிய‌ர் என்ற‌ வ‌ட்ட‌த்துக்குள் தான் இருந்து இருப்பார் 🤞, க‌ட்சிக்காக‌ த‌ன‌து ஆசிரிய‌ர் வேலைய‌ இழ‌ந்த‌வ‌ர் அத‌ நான் ம‌ற‌க்க‌ வில்லை 😓, ஆனால் க‌ல்யாண‌சுந்த‌ர‌த்தின் ப‌ல‌ செய‌ல் பாடுக‌ள் அருவ‌ருக்க‌ த‌க்க‌து 😓

அண்ண‌ன் சீமானில் குறை சொல்ல‌ பெரிசா ஒன்றும் இல்லை , பாப்போம் அண்ண‌ன் சீமானின் ந‌ட‌வ‌டிக்கைய‌ல் இனி எப்ப‌டி இருக்கு என்று 🤞💪,

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, பையன்26 said:

1. 6 மாதம் முதல் கூட தான் இப்படி விலகிவிடவா என்று கேட்க சீமான் வேண்டாம் என்று சொன்னதாக, ஏராளன் பதிந்த வீடியோவில் சொல்கிறார் கல்யாணசுந்தரம். பச்சை பொய்யா?

2. உங்களுக்கு 2013 லயே ரஜீவ்காந்தியும் துரோகி எண்டு தெரிஞ்சிட்டா?

3. 2013 இலேயே கல்யாண சுந்தரத்தை பற்றி தெரிந்த நீங்கள் அவரை பற்றி ஏன் தலைமைக்கு புகார் கொடுக்கவில்லை ?

  • கருத்துக்கள உறவுகள்

திமுக அனுதாபியும், கல்யாணசுந்தரம், ரஜீவ்காந்தி விடயத்தை முதலில் டிவிட்டரில் போட்டு உடைத்தவருமான சவுக்கு சங்கரின் பேட்டி.

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

1. 6 மாதம் முதல் கூட தான் இப்படி விலகிவிடவா என்று கேட்க சீமான் வேண்டாம் என்று சொன்னதாக, ஏராளன் பதிந்த வீடியோவில் சொல்கிறார் கல்யாணசுந்தரம். பச்சை பொய்யா?

2. உங்களுக்கு 2013 லயே ரஜீவ்காந்தியும் துரோகி எண்டு தெரிஞ்சிட்டா?

3. 2013 இலேயே கல்யாண சுந்தரத்தை பற்றி தெரிந்த நீங்கள் அவரை பற்றி ஏன் தலைமைக்கு புகார் கொடுக்கவில்லை ?

என்ர‌ ப‌திவை வ‌டிவாய் வாசியுங்கோ , நான் இந்த‌ திரியில் ராஜிவ் காந்தி பொய் சொல்லுகிறார் என்று ஒரு போதும் எழுத‌ வில்லை எழுதின‌ ஆதார‌ம் இருந்தா காட்டுங்கோ ,

க‌ல்யாண‌சுந்த‌ர‌ம் சொன்ன‌ பொய்யை தான் எழுதி இருந்தேன் , உண்மையை சொல்ல‌ப் போனால் 2013ம் ஆண்டில் இருந்து என‌க்கு க‌ல்யாண‌சுந்த‌ர‌த்தை பிடிக்காது , 

யூடுப்பில் முக‌ நூலில் க‌ல்யாண‌சுந்த‌ர‌த்துக்கு ஆத‌ர‌வாய் யார் எழுதின‌ம் என்று பாருங்கோ எல்லாம் ம‌ற்ற‌ க‌ட்சியை சேர்ந்த‌வ‌ர்க‌ள் , 

க‌ல்யாண‌சுந்த‌ர‌த்திட‌ம் நேர்மை இருந்து இருந்தா இவ‌ள‌வு பிர‌ச்ச‌னை வ‌ந்து இருக்காது , க‌ட்சியில் எத்த‌னையோ மூத்த‌வ‌ர்க‌ள் இருக்கின‌ம் அவ‌ர்க‌ள் இட‌த்தில் வெளிப்ப‌டையாய் எல்லாத்தை சொல்லி இருந்தால் பிர‌ச்ச‌னை முடிவுக்கு வ‌ந்து இருக்கும் ,
 
Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.