Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பையன்26 said:

அண்ண‌ன் சீமான் எங்க‌ளுக்கு என்ன‌ செய்தார் , க‌ல்யாண‌சுந்த‌ர‌த்தின் புருடாக்க‌ள் கேலி கூத்துக‌ள் ஒவ்வொன்றாய் வெளியில் வ‌ருகிதே அக்கா , 

ட‌ங்கு அண்ணா சிறு ஓய்வு எடுப்பார் அம்ம‌ட்டும் தான் , அவ‌ரின் கொள்கையை காற்றில் ப‌ற‌க்க‌ விட‌ மாட்டார் , 

என் முடிவில் நான் ஒரு போதும் மாற்ற‌ம் செய்ய‌ மாட்டேன் , நாம் த‌மிழ‌ர் க‌ட்சியில் இருக்கும் அண்ண‌ங்க‌ள் த‌ம்பிங்க‌ கூட‌ ஓண்ணா உண‌வு சாப்பிட்டு இருக்கிறேன் , அவ‌ர்க‌ள் என் மீது காட்டிய‌ அன்பை விட‌ நான் அவ‌ர்க‌ள் மீது காட்டிய‌  அன்பு அதிக‌ம் , அவை அண்ண‌ன் சீமானோடு தான் தொட‌ர்ந்து ப‌ய‌ணிக்கின‌ம்  ,

நீங்க‌ள் யாழுக்கு இர‌வு நேர‌த்தில் வ‌ந்து புக்காரா குண்டு போட்ட‌ மாதிரி யாழில் ஏதாவ‌து குண்ட‌ தூக்கி போட‌னும் , 

நீங்க‌ள் அறிவுரை சொல்லும் அள‌வுக்கு ட‌ங்கு அண்ணா விப‌ர‌ம் தெரியாத‌வ‌ர் இல்லை , 
யாழில் உள்ள‌ ஒழுக்க‌மான‌ அறிவான‌ உற‌வுக‌ளில் ட‌ங்கு அண்ணாவும் , அவ‌ருக்கு த‌ம்பியாய் இருப்ப‌து என‌க்கு பெருமை 🙏
 
பையா, நான் எழுதினதை நீங்கள் வடிவாய் வாசிக்கவில்லை என்று நினைக்கிறேன்...நீங்கள் யாரு ?...உங்களுக்கு போய் புத்திமதி  சொல்லுவேனா?
இசை என்ட மச்சான் அவரை திட்டுவன்,கொஞ்சுவன்,அட்வைஸ்  பண்ணுவன் அது எனக்கும் அவருக்கும் இடையில் உள்ள விஷயம்.
 பகல்ல வீட்ல இருந்து சாப்பிட நான் ஒன்றும் கட்சி நடத்தேல்ல🙂...உங்கள் அமைப்பில் இருந்து ஒவ்வொருவராய் பிரிந்து போகும் போது கள்ளன் காசை  களவெடுத்திட்டான் ,துரோகி என்று பட்டங்களை கொடுத்துகிட்டே இருங்கோ ...உங்களுக்கு புதுசா என்ன?
 
  • Replies 3k
  • Views 276.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, ரதி said:

பையா, நான் எழுதினதை நீங்கள் வடிவாய் வாசிக்கவில்லை என்று நினைக்கிறேன்...நீங்கள் யாரு ?...உங்களுக்கு போய் புத்திமதி  சொல்லுவேனா?
இசை என்ட மச்சான் அவரை திட்டுவன்,கொஞ்சுவன்,அட்வைஸ்  பண்ணுவன் அது எனக்கும் அவருக்கும் இடையில் உள்ள விஷயம்.
 பகல்ல வீட்ல இருந்து சாப்பிட நான் ஒன்றும் கட்சி நடத்தேல்ல🙂...உங்கள் அமைப்பில் இருந்து ஒவ்வொருவராய் பிரிந்து போகும் போது கள்ளன் காசை  களவெடுத்திட்டான் ,துரோகி என்று பட்டங்களை கொடுத்துகிட்டே இருங்கோ ...உங்களுக்கு புதுசா என்ன?
 
நான் பொதுவாக‌ இசை அண்ணாவை ப‌ற்றி எழுதி இருந்தேன் , 
யார் ப‌க‌லில் வீட்டில் இருந்து சோறு சாப்பிடுகிற‌து ம்ம்ம்ம்ம்ம்ம் விப‌ர‌மாய் சொன்னால் அதுக்கான‌ த‌குந்த‌ விள‌க்க‌த்த‌ உட‌ன‌ த‌ருவேன் ,
உங்க‌ட‌ அண்ண‌ர் போராட்ட‌த்தை காட்டி கொடுத்து இன‌த்துக்கு மாபெரும் துரோக‌ம் செய்த‌வ‌ர‌ வார்த்தைக்கு வார்த்தை அண்ண‌ன் என்று எழுதுறீங்க‌ளே உங்க‌ளை மாதிரியான‌ ஆட்க‌ள் இந்த‌ திரிக்குள் வ‌ருவ‌தும் பார்க்க‌ கொஞ்ச‌ம் த‌ள்ளி நிப்ப‌தே ந‌ல்ல‌ம் 😁😀

யார் த‌ன்னும் போக‌ விட்டு பின்னால் குத்தினா அத‌ற்கு பெய‌ர் துரோக‌ம் அது க‌ல்யாண‌சுந்த‌ர‌த்துக்கும் பொருந்தும் 😡 ,

அண்ண‌ன் சீமான் ப‌க‌லில் ஓசியா சோறு சாப்பிட‌ வில்லை அவ‌ர் சிந்தும் வேர்வையில் தான் சோறு சாப்பிடுகிறார் 🤞💪, உங்க‌ட‌ அண்ண‌ன் சிங்க‌ள‌வ‌ன் போடும் எலும்பு துண்டில் தானே கால‌த்த‌ ஓட்டுகிறார் 😁😀, க‌ம்ம‌ன்ன‌ பொத்திட்டு இருங்கோ பொல்லை கொடுத்து என்னிட‌ம் அடி வேண்ட‌ வேண்டாம் ந‌ன்றி வ‌ண‌க்க‌ம் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, பையன்26 said:

அப்பன்!தானும் தன்ரை பாடும் சிவனே எண்டு இருந்த திரி இது.சீமானையும் நாம் தமிழர்கட்சியையும் அறவே பிடிக்காதவர்கள் ஏன் இங்கே வந்து குத்துது குடையுது என கூக்குரலிடுகின்றார்கள் என தெரியவில்லை.பிரச்சனை கல்யானசுந்தரத்துக்கும் சீமானுக்கும் தான். ஆனால் இவர்களோ இப்போது கல்யாண்சுந்தரத்திற்க்காக வாதடுகின்றார்கள்.ராஜிவ்,கல்யாணம் எல்லோரும் அறிவாளிகளாம்.நல்லவர்களாம்.இதை ஏன் அவர்கள் கட்சியில் இருக்கும் போது சொல்லவில்லை?

இதை எப்படி சொல்வதென்றால் ஆடு நனையுதென்று ஓநாய் ஓவென்று அழுதுதாம் 😁

  • கருத்துக்கள உறவுகள்

பயணியை Unsubscribe செய்ய வேண்டுமா?

கொண்டாடி கூத்தடிக்கும் கூட்டத்திற்கு காலம் உணர்ந்து விடுதலையை

1 hour ago, குமாரசாமி said:

அப்பன்!தானும் தன்ரை பாடும் சிவனே எண்டு இருந்த திரி இது.சீமானையும் நாம் தமிழர்கட்சியையும் அறவே பிடிக்காதவர்கள் ஏன் இங்கே வந்து குத்துது குடையுது என கூக்குரலிடுகின்றார்கள் என தெரியவில்லை.பிரச்சனை கல்யானசுந்தரத்துக்கும் சீமானுக்கும் தான். ஆனால் இவர்களோ இப்போது கல்யாண்சுந்தரத்திற்க்காக வாதடுகின்றார்கள்.ராஜிவ்,கல்யாணம் எல்லோரும் அறிவாளிகளாம்.நல்லவர்களாம்.இதை ஏன் அவர்கள் கட்சியில் இருக்கும் போது சொல்லவில்லை?

இதை எப்படி சொல்வதென்றால் ஆடு நனையுதென்று ஓநாய் ஓவென்று அழுதுதாம் 😁

சீமானின் குடும்ப விடயங்களை பற்றி எவரும் இங்கு விமர்சிக்கவில்லை. பொது தளத்தில் பொரு அரசியலைப்பற்றிய விமர்சனங்கள் செய்வது நியாயமானது. பொது அரசியலில் உள்ள ஒருவரைக் பிடிக்காவிட்டால் அவர் சம்பந்தமான திரியில் கருத்து வைக்கக்கூடாது என்றால் மகிந்த, கோட்டபாய உட்பட  ஶ்ரீலங்கா அரசு சார்நத எந்த திரியிலும் கருத்து வைக்கும் உரிமையை நீங்கள் இழக்கின்றீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

நீட் தேர்வால் உயிரிழந்த மாணவி. கொதித்த நாம் தமிழர் கட்சியினர்

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, tulpen said:

சீமானின் குடும்ப விடயங்களை பற்றி எவரும் இங்கு விமர்சிக்கவில்லை. பொது தளத்தில் பொரு அரசியலைப்பற்றிய விமர்சனங்கள் செய்வது நியாயமானது. பொது அரசியலில் உள்ள ஒருவரைக் பிடிக்காவிட்டால் அவர் சம்பந்தமான திரியில் கருத்து வைக்கக்கூடாது என்றால் மகிந்த, கோட்டபாய உட்பட  ஶ்ரீலங்கா அரசு சார்நத எந்த திரியிலும் கருத்து வைக்கும் உரிமையை நீங்கள் இழக்கின்றீர்கள். 

தூல்பன் சீமானைவிடுங்கள், நாம் தமிழர் கட்சியின் கொள்கை அவர்களின் போராட்டத்தைப்பற்றி இதுவரை ஏதாவது ஒரு திரியில் நீங்கள் விமர்சனம் செய்து உள்ளீர்களா? ஏன் இந்த காழ்புணச்சி ஒரு தனி மனிதரில்... ஒரு கட்சியாக பார்த்து அவர்களின் கொள்கையில் விமர்சனத்தை வையுங்கள்... சீமான் விடுதலைக்காக குரல் கொடுத்த படியால் இளைஞர்கள் அவருக்கு பின்னால் திரள் கின்றார்கள், இவரை மாதிரி யாராவது குரல் கொடுத்தார்களா? எல்லோரும் திராவிட கொள்கைக்கு அடிமை, நீங்கள் உள்பட, 

குசா சொன்னது 100% உண்மை இதுவரை உள்ளுக்குள் வராத பலர், இப்ப வந்து கருத்து வைப்பது ஏனோ🤔, ஒரு வித காழ் புணர்ச்சி மட்டுமே...

இதில வந்து மகிந்த & கோத்தாவை கோத்தீர்கள் பாருங்கள் அங்கை நிற்கின்றீர்கள் உங்கள் சுய முகத்துடன். தமிழின அழிப்பு செய்த இந்த கெடு கெட்ட காவாலிகளை 😡 யாரும் இப்படி ஒப்பிட மாட்டார்கள்

சீமான் - யாரிவன்.. .ஒரு விடுதலைக்கா குரல் கொடுத்தான் ..... அவனும் நிம்மதியாக ஒரு கூத்தாடி மாயாண்டி படமெடுத்திருந்தால் இங்குள்ள கூத்தாடிகளும் சந்தோஷப்பட்டிருப்பார்கள்,

அவன் விடுதலையென வெளிக்கிட்டானே அதுதான் பிரச்சனை, யார் விடுதலை கேட்பது, நாங்கள் மொட்டுக்குடி... இதெல்லாம் ஏதிர் பார்க்காதே 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

சீமானின் குடும்ப விடயங்களை பற்றி எவரும் இங்கு விமர்சிக்கவில்லை. பொது தளத்தில் பொரு அரசியலைப்பற்றிய விமர்சனங்கள் செய்வது நியாயமானது. பொது அரசியலில் உள்ள ஒருவரைக் பிடிக்காவிட்டால் அவர் சம்பந்தமான திரியில் கருத்து வைக்கக்கூடாது என்றால் மகிந்த, கோட்டபாய உட்பட  ஶ்ரீலங்கா அரசு சார்நத எந்த திரியிலும் கருத்து வைக்கும் உரிமையை நீங்கள் இழக்கின்றீர்கள். 

இந்த கொள்கைகளை என்றாவது வாசித்து விமர்சித்துள்ளீர்களா???

முதன்மைக் கொள்கைகள்

1)தமிழின மீட்சியே நாம் தமிழர் இலட்சியம்!

2)ஈழத்தமிழர் பிரச்சினைக்கு ஒரே தீர்வு தனித்தாயகத் தமிழீழத் தனியரசு அமைப்பது தான் ! தமிழீழத் தனியரசு அமைக்கப் போராடுவதே நமது இலட்சியம்!

3)மாநிலம் அனைத்திற்கும் தன்னுரிமை தேசிய இனங்களின் பிறப்புரிமை ! இறையாண்மையுள்ள குடியரசுகளின் கூட்டு இணைப்பாட்சியாக அரசியல் சட்டம் திருத்தப் போராடுவோம்!
அதற்கான அரசியல் சட்டதிருத்திருத்தம் செய்திட
போராடுவதே நமது இலட்சியம்!

4)தமிழை எங்கும் வாழவைப்போம்! தமிழனையே என்றும் ஆளவைப்போம்!

5)சமதர்மப் பாதைக்கு வழிவகுத்திட தற்போதுள்ள கூட்டுறவு முறையை மக்கள் கூட்டுறவாய் மலரச் செய்வோம்.

6)நிலமற்றிருக்கும் நாற்பது சத மக்களுக்கும் மனையோ நிலமோ கிடைக்க நிலச்சீர்திருத்தம் செய்திடுவோம்!

7)இயற்கைக்கு உகந்த வகையில் பெரும்பான்மை மக்களுக்கேற்ற
அறிவியல் கண்டுபிடிப்புகளை வளர்த்தெடுப்போம்! தொழில் நுட்பக்கல்வியை ஊக்குவிப்போம்!

8)உலகத் தமிழர்களையெல்லாம் ஒன்றிணைத்து தமிழர் உரிமை வென்றிடப் போராடுவோம்!

9)சமனியத் தமிழரசை நிலைநாட்டுவோம் பொருளியல் ஏற்றத் தாழ்வகற்றுவோம்!

10)உழைப்புச் சுரண்டலை நியாயப்படுத்தி ஒழுங்கமைக்கும் வருணாசிரம சனாதனக் கொள்கையை அழிப்போம்!

11)சாதி சமய ஆதிக்கத்தை ஒழிப்போம்! சமத்துவமாய் வாழ வழிவகை செய்வோம்! சாதி சமய வேறுபாடுகளைக் கடந்து நாம் தமிழராய் ஒன்றிணைவோம்! தமிழருக்கான ஆட்சியை வென்றெடுப்போம்!

12)மகளிருக்குச் சமபங்கு அளிப்பது பிச்சையல்ல! – அதை அடைவது பிறப்புரிமை! – அதற்காகப் பாடுபடுவோம்!

13)எங்கும் தமிழ் எதிலும் தமிழ்! தமிழைக் கற்போம்! தமிழில் கற்போம்!

14)அனைத்து நிலையிலும் தமிழே ஆட்சிமொழி பேச்சு மொழி, அனைத்து இடத்திலும் எம் தமிழே வழிபாட்டு மொழி! வழக்காடு மொழி!
தமிழ்வழியில் கற்றௌருக்கே தமிழகத்தில் வேலைவாய்ப்பு!

15)ஊடகக்கலை பண்பாட்டுச் சீரழிவுகளை உரிய பண்பாட்டுப் புரட்சி மூலம் தடுப்போம்!

16)நாளைய நாம் தமிழர் ஆட்சியில் அரசு சமயம் சாராது! ஆனால் யாருடைய தனிப்பட்ட சமயநம்பிக்கையிலும் அரசு தலையிடாது!

17)அரசியல் தலையீடு அற்ற நீதி நிர்வாகம்! கையூட்டு ஊழலற்றதாய் அனைத்து நிர்வாகம்

18)மகளிர் – ஆடவர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் தற்சார்பு பொருளாதாரத் திட்டத்தை உருவாக்குவோம்!

19)அதிகாரமும் பொருளும் பரவலாக்கப் போராடுவோம் அதிகாரமும் பொருளும் பிரமிடுபோல் கட்டமைப்போம்!

20)தனியார் மயக் கொள்ளை இலாபத்தைத் தடுப்போம்! கறுப்புப் பண கள்ளச்சந்தையை ஒழிப்போம்!

21)அமைப்புத் தொழிலாளர் – அமைப்பு சாரா தொழிலாளர் வேறுபாடு அகற்றி வாழ்வுரிமையை நிலைநாட்டுவோம்!

22)மருத்துவ வசதி அளிப்பதை அடிப்படை உரிமையாக்குவோம்! அனைத்து மருத்துவ வசதிகளும் அடித்தட்டு மக்களுக்குக் கிடைக்கச் செய்வோம்!

23)பிற மாநிலங்களில் வாழும் இந்தியத் தமிழருக்கு உரிமையும் பாதுகாப்பும் முறைப்படி கிடைத்திட தேசிய இன நட்புறக் கழகம் மாநிலந்தோறும் அமைப்போம்!
(எ-டு) தமிழர் – வங்காளியர் நட்புறவுக் கழகம்.

24)பண்பாட்டுச் சுற்றுலாவை மேம்படுத்தி உலகத் தமிழரை ஒருங்கிணைப்போம்!

25)அனைத்து முறைகேடுளை விசாரிக்க மக்கள் நீதிமன்றம்! நீதிமன்றத் தீர்ப்பையும் விமர்சிக்க சட்டம் இயற்றுவோம்!

26)சிலம்பம், களறி முதலான தமிழர் தம் வீரவிளையாட்டுகளுக்கு முன்னுரிமை அளிப்போம்!

43 minutes ago, உடையார் said:

உடையார் இதை அடிக்கடி இணைத்து கொமடி பண்ணிக்கொண்டு இருக்கின்றீர்கள். எல்லா அரசியல் கட்சிகளதும் கொள்கை விளக்க யாப்பை எடுத்தால் இப்படித்தான் எழுதியிருப்பார்கள்.ஹிட்லரின் நாசிக்கட்சியின் கொள்கை விளகமும் இப்படித்தான் வாசிக்க நன்றாக இருக்கும்  நடைமுறை அரசியலே பார்ததே விமர்சிப்பது. கனடாவில் சீமான் பேசிய பேச்சை பார்தீர்களா? அது தான்  சீமானின் உண்மையான சுயரூபம். அதனால் தானே கனடா நாடு  கழுத்தைப்பிடித்து சீமானை வெளியே தள்ளியது. 

  • கருத்துக்கள உறவுகள்

இனியொரு கட்டுரையில் இருக்கும் தகவல்களின் படி (சபாநாவலன் எதிலும் நடுநிலையான பார்வையுடைய ஒருவர், எனவே இங்கே எழுதும் பலருக்கு அவர் துரோகி தான்!):

2009 இற்குப் பின்னர் தேங்கிப் போன புலம் பெயர் ஈழத்தமிழர்களின் நிதி ஆற்றை ஒரு அணைகட்டி தங்கள் பக்கம் திருப்பியிருக்கிறது நா.த. வும் வீ.ம.மு வும்! இதற்காகவே இந்த தீவிர ஈழ ஆதரவு முகம்.

 இதற்கு எதிர்ப்பு வராமலிருக்க 2200 psi pressure washer மூலம் மண்டையைக் கழுவி எங்கள் ஈழத்தமிழர்களில் சிலரையும் அடியார்களாக மாற்றி விட்டனர்!

இப்ப வந்து காசு கொடுத்தால் கேழு, இல்லையேல் கேட்காதே என்கின்றனர். எவருக்காவது காசு கொடுத்து எப்படியாவது ஏமாந்து விட்டுப் போங்கள், அது உங்கள் விருப்பம்! ஆனால் ஏன் மற்றவனும் இவர்களது முகத்தை நம்ப வேண்டுமென்று பிரச்சாரம் செய்ய வேண்டுமென எனக்கு விளங்கவில்லை!

இந்த திரி நா.த பிரச்சாரத் திரி என்று தான் நான் நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

அப்பன்!தானும் தன்ரை பாடும் சிவனே எண்டு இருந்த திரி இது.சீமானையும் நாம் தமிழர்கட்சியையும் அறவே பிடிக்காதவர்கள் ஏன் இங்கே வந்து குத்துது குடையுது என கூக்குரலிடுகின்றார்கள் என தெரியவில்லை.பிரச்சனை கல்யானசுந்தரத்துக்கும் சீமானுக்கும் தான். ஆனால் இவர்களோ இப்போது கல்யாண்சுந்தரத்திற்க்காக வாதடுகின்றார்கள்.ராஜிவ்,கல்யாணம் எல்லோரும் அறிவாளிகளாம்.நல்லவர்களாம்.இதை ஏன் அவர்கள் கட்சியில் இருக்கும் போது சொல்லவில்லை?

இதை எப்படி சொல்வதென்றால் ஆடு நனையுதென்று ஓநாய் ஓவென்று அழுதுதாம் 😁

இதைதான் முழு பூசணி தோட்டத்தை ஒரு சோற்று பருக்கையில் புதைப்பது என்பது அண்ணை.

இசையின் 1ம் திரியிலும், இதிலும் டங்குவார் பிய்ய பிய்ய நாத அரசியலை விமர்சித்து நான் உட்பட பலர் பல வருடமாக எழுதியுள்ளோம்.

ஆகவே ஏதோ இந்த பிளவுக்கு மட்டும் பின் நாம் எழுதுவதாக அர்த்தம் இல்லை.

ரஞ்சித்தின் தமிழ் தேசியம் பற்றிய திரியில் நான் சீமானின் நிதி ஒழுங்கீனம் பற்றி, கேள்வி படுவதை சொல்கிறேன் என எழுதி செம டோஸ் வாங்கினேன்.

இன்றைக்கு, சபா நாவலன் அதை எழுதுகிறார். கல்யாணம்? எனக்கு அண்ணனுக்கும் மட்டும் தெரிந்த ரகசியம் சொன்னால் கட்சி சிதறிடும் என்கிறார் ?

ஏன் சீமான் மெளனமாயுள்ளார்? அப்படி ஒரு ரகசியமும் இல்லை என்றால் கல்யாணாத்தை ரகசியத்தை சொல்லும் படி கேட்காலாமே?

நான் இங்கே பல தடவை இதை எழுதியுள்ளேன்.

சீமானுக்கு பின் நிற்பவர்கள் பலர் அப்பழுக்கற்றவர்கள் என. இதுவரை கல்யாணத்தின், ரஜீவ் காந்தி மீது அப்படி ஒரு பார்வையே இருந்தது. ஆனால் சபா நாவலன் இப்போ கல்யாணமும் கூட்டு களவானி என்கிறார்.

சும்மா ரகசியம் பேசாமல் - உண்மையை சொல்லி தன் மீதும் விழும் கறையை கல்யாணம் துடைக்க வேண்டும்.

சீமானை பல வழிகளில் கட்சியுள்ளே கேள்வி கேட்டு வழி நடத்தியவர்கள் என்பதும் முன்பே அரசல்புரசலாக அறிந்ததே.

ஆகவே இவர்கள் வெளி வந்து தமிழ் தேசியத்தினை இனத் தூய்மை அரசியலில் இருந்து மீட்பார்கள் என்ற என் எதிர்பார்பில் தவறு என்ன.

நான் முன்பே 6 படிகளில் சீமான் எப்படி பிஜேபி க்கு வழி சமைத்து கொடுத்து அதற்காக தமிழ் தேசியதினை பாவித்து பின் கசக்கி எறிகிறார் என கூறியுள்ளேன்.

அவர் அச்சொட்ட அதே படி வழியே நடக்கிறார் என்பதையே அண்மைய நிகழ்வுகள் காட்டுகிறான.

ஆகவே

நாத எக்கேடு கெட்டாலும், சீமான் எக்கேடு கெட்டாலும் எனக்கு கவலை இல்லை. ஆனால் 

தமிழ் தேசியம் = வெறுப்பரசியல்

என்பதை நிறுவி, தமிழ் தேசியத்தினை உள் இருந்து கொல்லும் கிருமிகளை எதிர்த்து எழுதுவது ஒவ்வொரு தமிழனின் கடமை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ தேச அபிமானிகளும்   பகைவர்களும் 

தமிழகம்  அதிலும்சீமானை  நோக்கி  திரும்பிவிட்டார்கள் என்பதைத்தான்

சில  வருடங்களாக சீமான் சார்ந்த  விடயங்களும் நாம் தமிழர்கள் கட்சி சார்ந்த பிரச்சினைகளும்

யாழ் களத்தில் அதிகம் கருத்தாடப்படுவதிலிருந்து தெரிகிறது.

அதிலும்  புலிகளை  எதிர்ப்பவர்களுக்கு கூட சீமான் புலிகளைின்  பெயரை  கெடுக்கிறார் என்று  பந்தி  பந்தியாக

மாதக்கணக்கில் நேரம்  ஒதுக்கி  எழுதுவதை  பார்க்கும் போது?????

Edited by விசுகு

6 minutes ago, விசுகு said:

தமிழீழ தேச அபிமானிகளும்   பகைவர்களும் 

தமிழகம்  அதிலும்சீமானை  நோக்கி  திரும்பிவிட்டார்கள் என்பதைத்தான்

சில  வருடங்களாக சீமான் சார்ந்த  விடயங்களும் நாம் தமிழர்கள் கட்சி சார்ந்த பிரச்சினைகளும்

யாழ் களத்தில் அதிகம் கருத்தாடப்படுவதிலிருந்து தெரிகிறது.

அதிலும்  புலிகளை  எதிர்ப்பவர்களுக்கு கூட சீமான் பலிகளைின்  பெயரை  கெடுக்கிறார் என்று  பந்தி  பந்தியாக

மாதக்கணக்கில் நேரம்  ஒதுக்கி  எழுதுவதை  பார்க்கும் போது?????

விசுகு, இங்கு கள உறவுகளில் புலிகளை எதிர்பபவர்கள் என்று யாரை கூறுகின்றீர்கள்? எனது பார்வையில் இங்கு யாரும் இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, tulpen said:

விசுகு, இங்கு கள உறவுகளில் புலிகளை எதிர்பபவர்கள் என்று யாரை கூறுகின்றீர்கள்? எனது பார்வையில் இங்கு யாரும் இல்லை. 

ரொம்ப கடினமான கேள்வி

ஏனெனில்  நேரடியாக எழுதமாட்டார்கள்

ஆனால் வேசம் அதிகநேரம்  போடமுடியாது

ஏனெனில் அது உறுத்தும்

எனவே புலிகள் பற்றிய  செய்திகள்

அல்லது அவர்களது தியாகங்களை  எழுதும்  இடத்தில்

ஏன்  புலிகள் அது  செய்யவில்லையா

இது யார் செய்தது

உங்களது   தனி மனித பக்தி  கண்ணை  மறைக்குது என  தொடங்கிவிடுவார்கள்

அப்புறம்  புலிகளின  தியாகம்  பேசும் திரி???????????????????

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, விசுகு said:

தமிழீழ தேச அபிமானிகளும்   பகைவர்களும் 

தமிழகம்  அதிலும்சீமானை  நோக்கி  திரும்பிவிட்டார்கள் என்பதைத்தான்

சில  வருடங்களாக சீமான் சார்ந்த  விடயங்களும் நாம் தமிழர்கள் கட்சி சார்ந்த பிரச்சினைகளும்

யாழ் களத்தில் அதிகம் கருத்தாடப்படுவதிலிருந்து தெரிகிறது.

அதிலும்  புலிகளை  எதிர்ப்பவர்களுக்கு கூட சீமான் புலிகளைின்  பெயரை  கெடுக்கிறார் என்று  பந்தி  பந்தியாக

மாதக்கணக்கில் நேரம்  ஒதுக்கி  எழுதுவதை  பார்க்கும் போது?????

என்னை சுட்டி இருந்தால்,

1. நான் புலி எதிர்ப்பாளன் இல்லை. புலிகளின் தலைமையின் சில தவறுகளை, 2009-2016 கால பகுதியில் விமர்சித்தேன். அந்த தவறுகளில் இருந்து நாம் பாடம் படிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக.

2. இப்போ நாம் பாடம் படித்தோமோ இல்லையோ, பாடம் படிக்கும் காலம் முடிந்து விட்டது. 2009 பின்னான எமது அரசியலுக்கு புலிகள் பொறுப்பல்ல. ஆகவே கடந்த பல வருடங்களாக அவர்களை நினைவு கூறுவதை தவிர நான் வேறு ஏதும் எழுதுவதில்லை.

3. நீங்கள் ஒருவர் இப்படித்தான் என முத்திரை குத்திவிட்டு பார்த்தால். அப்படித்தான் தெரியும்.

4. இதே திரியில் “ இலங்கை எனது தாய்திரு நாடு, இலங்கை தேசியத்தை ஏற்ற, இலங்கை மீதுள்ள பேரபிமானத்தில் கட்டுரை எழுதினேன்” என எழுதுபவர்கள் எல்லாம் சீமானை போற்றி புகழ்ந்து வருட கணக்கில் எழுதுகிறனர். ஒரு இலங்கை தேசியவாதி எப்படி சீமானை ஆதரிக்க முடியும்? என்ற முரண் உங்களுக்கு புலப்படுவதே இல்லை.

5. இலங்கையில் “ இலங்கை தேசியவாதியாகவும்” “ தமிழகத்தில் சீமானை ஆதரிக்கும் தமிழ் இனத் தூயவாதியாகவும்” ஒரே நபர் எப்படி இருக்க முடியும்? இது தப்பாச்சே? இந்த கேள்வியும் உங்களிடம் எழவில்லை.

ஆனால் நாம் எழுதினால் இவர்கள் புலிகளின் சில முடிவுகளை விமர்சித்தோர், ஆகவே இவர்கள் தமிழ் தேசிய எதிரிகள் என்ற தானியக்கி முடிவுக்கு வருவீர்கள்.

யுத்த காலத்தில் சில இணைய தளங்கள் செய்த அதே உள்ளடி வேலை இப்போதும் தொடர்கிறது.

பிரபா படத்தை, புலி கொடியை போட்டால் போதும் பெரும்பாலான எமது மக்களின் தலையில் மிளகாய் அரைக்கலாம்.

இதை தெளிவாக அறிந்து உங்களை கையாள்கிறார்கள்.

17 minutes ago, விசுகு said:

ரொம்ப கடினமான கேள்வி

ஏனெனில்  நேரடியாக எழுதமாட்டார்கள்

ஆனால் வேசம் அதிகநேரம்  போடமுடியாது

ஏனெனில் அது உறுத்தும்

எனவே புலிகள் பற்றிய  செய்திகள்

அல்லது அவர்களது தியாகங்களை  எழுதும்  இடத்தில்

ஏன்  புலிகள் அது  செய்யவில்லையா

இது யார் செய்தது

உங்களது   தனி மனித பக்தி  கண்ணை  மறைக்குது என  தொடங்கிவிடுவார்கள்

அப்புறம்  புலிகளின  தியாகம்  பேசும் திரி???????????????????

விடுதலைப் புலிகள் என்பது தனி நபர் அல்ல. ஒரு போராட்ட அமைப்பு. அவர்கள் தமது பாதையில் விட்ட பல தவறுகளை சுட்டிக்காட்டுவது புலிகளை எதிர்ப்பதாகாது என்பது எனது கருத்து. 

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, விசுகு said:

அண்ணை,

இதை கவனிப்பது போல நீங்களும் ( உங்கள் போன்றவர்களும்) இன்னொரு விடயத்தையும் கவனிக்க வேண்டும்.

மாவீரர், துளிதுளியாய் பக்கங்களில் தலை கறுப்பும் தெரியாத நபர்கள். மருத்துக்கும், மறந்தும் இலங்கை அரசை இன படுகொலையாளர் என எழுதாதவர்கள், சீமான், சீமான் என்று புரண்டு அழுவதன் சூட்சுமம்தான் என்ன?

முடிவாக நான் சொல்வருவது,

புலிகளை சில சமயம் விமர்சித்தவன் எல்லாம் தமிழ் தேசியத்தின் வைரியும் அல்ல,

சீமானை ஆதரிப்பவன் எல்லாம் தமிழ் தேசியவாதியும் அல்ல.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

என்னை சுட்டி இருந்தால்,

1. நான் புலி எதிர்ப்பாளன் இல்லை. புலிகளின் தலைமையின் சில தவறுகளை, 2009-2016 கால பகுதியில் விமர்சித்தேன். அந்த தவறுகளில் இருந்து நாம் பாடம் படிக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக.

2. இப்போ நாம் பாடம் படித்தோமோ இல்லையோ, பாடம் படிக்கும் காலம் முடிந்து விட்டது. 2009 பின்னான எமது அரசியலுக்கு புலிகள் பொறுப்பல்ல. ஆகவே கடந்த பல வருடங்களாக அவர்களை நினைவு கூறுவதை தவிர நான் வேறு ஏதும் எழுதுவதில்லை.

3. நீங்கள் ஒருவர் இப்படித்தான் என முத்திரை குத்திவிட்டு பார்த்தால். அப்படித்தான் தெரியும்.

4. இதே திரியில் “ இலங்கை எனது தாய்திரு நாடு, இலங்கை தேசியத்தை ஏற்ற, இலங்கை மீதுள்ள பேரபிமானத்தில் கட்டுரை எழுதினேன்” என எழுதுபவர்கள் எல்லாம் சீமானை போற்றி புகழ்ந்து வருட கணக்கில் எழுதுகிறனர். ஒரு இலங்கை தேசியவாதி எப்படி சீமானை ஆதரிக்க முடியும்? என்ற முரண் உங்களுக்கு புலப்படுவதே இல்லை.

5. இலங்கையில் “ இலங்கை தேசியவாதியாகவும்” “ தமிழகத்தில் சீமானை ஆதரிக்கும் தமிழ் இனத் தூயவாதியாகவும்” ஒரே நபர் எப்படி இருக்க முடியும்? இது தப்பாச்சே? இந்த கேள்வியும் உங்களிடம் எழவில்லை.

ஆனால் நாம் எழுதினால் இவர்கள் புலிகளின் சில முடிவுகளை விமர்சித்தோர், ஆகவே இவர்கள் தமிழ் தேசிய எதிரிகள் என்ற தானியக்கி முடிவுக்கு வருவீர்கள்.

யுத்த காலத்தில் சில இணைய தளங்கள் செய்த அதே உள்ளடி வேலை இப்போதும் தொடர்கிறது.

பிரபா படத்தை, புலி கொடியை போட்டால் போதும் பெரும்பாலான எமது மக்களின் தலையில் மிளகாய் அரைக்கலாம்.

இதை தெளிவாக அறிந்து உங்களை கையாள்கிறார்கள்.

உங்களது 1.2 இலிலும்  உடன்பாடுண்டு

அதற்கு மேல் நாம்  அடுத்த  கட்டங்களுக்கு  செல்வது  பற்றி பேசணும்  எழுதணும் என்பதே  எனது நிலைப்பாடு

அதைவிடுத்து புலிகளை ஆராய்வதும் இகழ்வதும் 

அவர்கள் மேல் பற்றுக்கொண்ட கோடானுகோடி தமிழர்களை வதைப்பதாகும்

மற்றும் இங்கு  கருத்தாடல்கள்  திசைதிரும்பி

போட்டாபோட்டி எழுத்துகள்  வர  தொடங்கியவுடன் நான்  எனது நேரத்தை  மிச்சப்படுத்திக்கொள்வது வழமை.

மற்றும்  தூய தேசியம்  எங்கும்  எதிலும்  இல்லை  என்பது அனுபவம் தரும்  பாடம்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

நன்றி அண்ணா,

நான் அவதானித்தவரையில் இப்போ இங்கே புலிகள் மீதான விமர்சனம் என்பது மிக குறைவு.

அதற்க்கான கால எல்லை முடிந்து விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

அண்ணை,

இதை கவனிப்பது போல நீங்களும் ( உங்கள் போன்றவர்களும்) இன்னொரு விடயத்தையும் கவனிக்க வேண்டும்.

மாவீரர், துளிதுளியாய் பக்கங்களில் தலை கறுப்பும் தெரியாத நபர்கள். மருத்துக்கும், மறந்தும் இலங்கை அரசை இன படுகொலையாளர் என எழுதாதவர்கள், சீமான், சீமான் என்று புரண்டு அழுவதன் சூட்சுமம்தான் என்ன?

முடிவாக நான் சொல்வருவது,

புலிகளை சில சமயம் விமர்சித்தவன் எல்லாம் தமிழ் தேசியத்தின் வைரியும் அல்ல,

சீமானை ஆதரிப்பவன் எல்லாம் தமிழ் தேசியவாதியும் அல்ல.

ஏனப்பா  எல்லாவற்றிற்குள்ளும்  சீமானை தொடுக்கிறீர்கள்??

இங்கு தான் எனக்கும்  உங்கள்  போன்றவர்களுக்குமான விரிசலே ஆரம்பம்

நானே  ரொம்ப நொந்து போயிருக்கின்றேன்

புலிகளுடனும்  தேசியத்துடனும் நின்ற நான்

இன்று ஊர்ச்சங்கத்துடனும் சீமான்  உட்பட சிலருடனும்  நிற்கவேண்டி வந்து விட்டதே என்று????😭

9 minutes ago, goshan_che said:

நன்றி அண்ணா,

நான் அவதானித்தவரையில் இப்போ இங்கே புலிகள் மீதான விமர்சனம் என்பது மிக குறைவு.

அதற்க்கான கால எல்லை முடிந்து விட்டது.

அதே.

நன்றி  சகோ

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

"புலிகள் முன்னெடுத்த போராட்டத்தின் தவறுகளை விமர்சிப்பவன் புலிகளின் பகைவன், புலிகளின் போராட்டத்தை தலை மேல் தூக்கி வைத்துப் பேசினால் அவன் ஈழதேசிய அபிமானி" - இந்த கறுப்பு வெள்ளையைத் தவிர வேறு நிறங்கள் இல்லையென்ற பார்வை தான் நா.த போன்ற தமிழ் போலித் தேசியர்கள் ஈழத்தமிழரிடம் கொள்ளையிட வகை செய்யும் பார்வை!

கண்ணைத் திறந்து வைத்துக் கொண்டே இவர்களிடம் ஏமாந்து கொண்டு, இங்கே வந்து நா.தவை  கல்லெறி வாங்கும் காய்த்த மரங்களாகச் சித்திரிக்க ஒரு தனியான திறமை வேண்டும்!  

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இணைப்புக்கு ந‌ன்றி நாதா நேற்று இர‌வு இந்த‌ காணொளிய‌ பார்க்க‌ இருந்தேன் யூடுப்பில் ஆங்கில‌த்தில் எழுதி இருந்திச்சு டென்மார்க் நேர‌ம் மூன்று ம‌னிக்கு தான் பார்க்க‌லாம் ,
இந்த‌ காணொளியில் பேசும் அண்ண‌ன் க‌ட்சி ஆர‌ம்பிச்ச‌ கால‌ம் தொட்டே அண்ண‌ன் சீமானோடு ஒன்னா ப‌ய‌ணித்த‌வ‌ர் இப்ப‌வும் க‌ட்சிக்காக‌ க‌டின‌மாய் க‌ள‌ ப‌ணி செய்கிறார் ,

2ஜீ ஊழ‌லில் க‌ணிமொழி சிறைக்கு சென்ற‌ போது இந்த‌ அண்ண‌ன் தான் க‌ருணாநிதி குடும்ப‌த்தின் உண்மை முக‌த்தை மேடைக‌ள் போட்டு ம‌க்க‌ளுக்கு புரிய‌ வைச்ச‌வ‌ர் , இந்த‌ அண்ண‌னின் துணிவுக்கு க‌ள‌ ப‌ணிக்கு நேர்மைக்கு க‌ல்யாண‌சுந்த‌ர‌ம் இவ‌ரின் அருகில் நிக்க‌வே த‌குதி இல்லாத‌வ‌ர் , 
அண்ண‌ன் சீமான் இவ‌ர் போன்ற‌வ‌ர்க‌ளை தொலைக் காட்சி விவாத‌ங்க‌ளுக்கு அனுப்பாம‌ல் தொட‌ர்ந்து நோகாம‌ல் நொங்கு சாப்பிடும் க‌ல்யாண‌சுந்த‌ர‌த்தை அனுப்பிய‌த‌ன் விலைவு தான் இப்போது ந‌ட‌க்கும் குழ‌ப்ப‌த்துக்கு முக்கிய‌  கார‌ண‌ம் , 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, tulpen said:

விடுதலைப் புலிகள் என்பது தனி நபர் அல்ல. ஒரு போராட்ட அமைப்பு. அவர்கள் தமது பாதையில் விட்ட பல தவறுகளை சுட்டிக்காட்டுவது புலிகளை எதிர்ப்பதாகாது என்பது எனது கருத்து. 

அதற்கான காலம் முடிந்து விட்டது  சகோ

அதிலிருந்து வெளியில்  வாருங்களேன்

புலிகள் மேல் விமர்சனம் வைப்பது  மட்டும் தான் உங்கள் சரக்காக  இருப்பின் நாம் இனி நகரவே முடியாது காண்.

23 minutes ago, விசுகு said:

அதற்கான காலம் முடிந்து விட்டது  சகோ

அதிலிருந்து வெளியில்  வாருங்களேன்

புலிகள் மேல் விமர்சனம் வைப்பது  மட்டும் தான் உங்கள் சரக்காக  இருப்பின் நாம் இனி நகரவே முடியாது காண்.

அப்படியா! இதுக்கெல்லாம் expiry date இருக்கா? கோட்டபாயவும் மகிந்தவும் இதை சொல்லி தான் தப்பிக்க நினைக்கிறார்கள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.