Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூதூர் பெருவெளி சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: கைது செய்யப்பட்டோர் விடுதலை! துரோகமும் சதியும்!!

Featured Replies

மூதூர் பெருவெளி சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: கைது செய்யப்பட்டோர் விடுதலை! துரோகமும் சதியும்!!

மூதூர் பெருவெளி சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: கைது செய்யப்பட்டோர் விடுதலை! துரோகமும் சதியும்!!

மூதூரின் பெரியவெளி கிராமத்தில் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்ட மூன்று சிறுமிகள் பற்றிய வழக்கு இன்று மூதூரின் நீதிமன்றத்தினால் புலனாய்வுப்பிரிவினரிடம் பாரப்படுத்தப்பட்டதுடன் அவ்வழக்கில் இனங்காணப்பட்ட 6 குற்றவாளிகளையும் நீதிமன்றம் உடனடியாக விடுதலைசெய்த கொடுமை இன்று நடந்துள்ளது.

அண்மையில் 7 – 8–வயதுடைய மூன்று சிறுமிகள் விளையாடிக்கொண்டிருந்தபோது முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த குழுவினரே இத்தகைய தகாத செயலில் ஈடுபட்டிருந்தனர்.
இவ்விடயம் வழக்குக்கு கொண்டுவரப்பட்ட சமயங்களில் அச்சமூகத்தைச் சேர்ந்த பலர் நீதிமன்ற முன்றலில் திரண்டு பாதிக்கப்பட்டவர்களை மறைமுகமாக அச்சுறுத்தும் செயலில் ஈடுபட்டுவந்திருந்தனர்.

இதனால் இன்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதன் உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் சகிதம் எட்டு வழக்கறிஞர்களும் இவ்விடயத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் ஆஜராக எதிர்த்தரப்பில் 12 வழக்கறிஞர்கள் ஆஜராகியிருந்தனர்.

பாதிக்கப்பட்ட தரப்பில் ஆஜரான சட்டத்தரணி வரதர் மறைமுகமாக பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோரின் ஒப்புதல் பெறப்பட்டதாக கூறி ஒரு கடிதத்தை கொடுத்து அதில் கைதுசெய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட ஒப்புதல் வழங்கியிருந்தமை பின்னரே தெரியவந்தது.

இதனை சாட்டாக காட்டிய நீதிமன்றம் கைதுசெய்யப்பட்டவர்களை விடுதலை செய்ததுடன் தொடர்ச்சியான விசாரணையை புலனாய்வுப்பிரிவிடம் ஒப்படைத்துள்ளமை தமிழ் மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

http://thuliyam.com/?p=70679

  • கருத்துக்கள உறவுகள்

பொது பல சேனா தான் இவயளுக்கு மருந்து.

தமிழர்களுக்கு ஸ்ரீலங்காவில் நீதி கிடைக்காது!

  • கருத்துக்கள உறவுகள்

19030399_10154774834708553_8270649477703

இது ஒரு முகநூல் பதிவு கிழக்கு எப்படி   அரித்தெடுக்கப்படுகிறதென்பது இந்த பதிவு சான்று  நாங்கள் ஒற்றுமை பற்றி பேசினாலும்  அதற்குள் என்ன லாபம் பார்க்கலாம் என  இருக்கும்  கூட்டம் இருக்கும் வரைக்கும்  இருப்புக்கு கேள்வி குறியே 

இப்படிப்பட்ட முஸ்லீம்களும் இருக்குறார்கள் அதற்கு உதாரணம் அமைச்சல் ஹிஸ்புல்லா 

  • தொடங்கியவர்

மூதூர் சிறுமிகளின் பெற்றோருக்கு உத்தரவாதம் கொடுத்துவிட்டு குற்றவாளிக்கு துணை போன சட்டத்தரணி வரதன்!

மூதூர் சிறுமிகளின் பெற்றோருக்கு உத்தரவாதம் கொடுத்துவிட்டு குற்றவாளிக்கு துணை போன சட்டத்தரணி வரதன்!

மூதூர் சிறுமிகளின் பெற்றோருக்கு உத்தரவாதம் கொடுத்துவிட்டு குற்றவாளிக்கு துணை போன சட்டத்தரணி வரதன்!

முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஐக்கியதேசியக் கட்சியை சேர்ந்தவரும் மூதூர் தொகுதியில் இம்ரான் மக்றூப் எனும் முஸ்லிம் நபரை நாடாளுமன்ற உறுப்பினராக்கியவரும் திருகோணமலையின் ஒரு தமிழர் ஆசனத்தை முஸ்லிம் சமூகத்திற்கு பெற்றுக்கொடுத்த புண்ணியவான் சட்டத்தரணி வரதன் மூதூர் நீதிமன்றில் திடீரென பல்டி அடித்து வழக்கின் போக்கை எதிர்பார்த்திருந்த தமிழர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்தார்.

அதே நேரம் விசித்திரமான சம்பவம் ஒன்றும் இடம்பெற்றது.

பாதிக்கப்பட்ட சிறுமிகள் சார்பாக ஆஜராக வந்த சட்டத்தரணி வரதன் சந்தேகநபர்களுக்கு சார்பாக பேச ஆரம்பித்தார்.

குறித்த வழக்கில் அடையாள அணிவகுப்பில் சந்தேக நபர்களை பாதிக்கப்பட்ட சிறுமிகள் அடையாளம் காட்டவில்லை என்பதால் அவர்களை விடுதலை செய்யவேண்டும் என கூறினார்.

அத்தோடு பொலிசார் குறித்த சிறுமிகளிடம் ஒரு புகைப்படத்தை காண்பித்து இவர்தான் குற்றவாளி என்று கூறி இவரை அடையாளம் காட்டுங்கள் என கூறியதாகவும் ஆனாலும் குறித்த சிறுமிகள் அடையாளம் காட்டவில்லை எனவும் பொலிசார் மீது குற்றச்சாட்டை முன்வைத்தார்.

குறித்த சட்டத்தரணியின் செயற்பாடு அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதோடு அதேசமயம் CHRD என்ற அமைப்பை சேர்ந்த வரதன் என்ற சட்டத்தரணி, சிறுமிகளின் சார்பாக வழக்காடுவதாக, அவர்களின் பெற்றோரிடம் சம்மத கடிதம் பெற்றுவிட்டு சந்தேக நபர்களுக்கு ஆதரவாக வாதாடியமை கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். இதற்கு அவர் நேரடியாகவே சந்தேகநபர்களுக்கு ஆதரவாக ஆஜராவதாக நீதிமன்றில் தெரிவித்துவிட்டு வாதாடியிருக்கலாம்.

நேற்று மூதூர் மல்லிகைத்தீவு சிறுமிகள் துஸ்பிரயோக வழக்கு மூதூர் நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றது. வழக்கு விசாரணைகளை பார்வையிட மக்கள் பிரதிநிதிகளான பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,கிழக்கு மாகாண கல்வியமைச்சர் தண்டாயுதபாணி, வடமாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஜனா, பிரசன்னா, ஜெனார்த்தனன் ஆகியோர் மன்றில் பிரசன்னமாகியிருந்தனர்.

சந்தேகநபர்கள் சார்பில் ஒன்பது சட்டத்தரணிகளும் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக ஏழு சட்டத்தரணிகளும் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

குறிப்பாக இன்றைய தினம் இரண்டு முஸ்லிம் சட்டத்தரணிகளும் பாதிக்கப்பட்ட சிறுமிகள் சார்பாக ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முதலாவதாக அடையாள அணிவகுப்பு நிகழ்வு இடம்பெற்றது. இந்த வழக்கில் இறுதியாக கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கான அடையாள அணிவகுப்பு அது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் குறித்த நபரை அடையாளம் காட்டாத போதிலும், இன்றைய தினம் புதிதாக பொலிசாரால் கொண்டுவரப்பட்ட சம்பவ தினம் குறித்த பிரதேசத்தில் நடமாடிய பிரதேசத்துக்குப் புதிய நபரைக் கண்ணுற்ற அதே பாடசாலையில் கல்வி பயிலும் (12வயது) மாணவிகள் இருவர் குறித்த நபரை அடையாளம் காட்டியிருந்தனர்.

அதன் பின்னர் திறந்த மன்றில் முதல் வழக்காக அழைக்கப்பட்ட குறித்த வழக்கில் பொலிசார் சார்பில் அறிக்கையிட்ட பொலிஸ் உத்தியோகத்தர் மரபணு சோதனை முடிவுகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை எனவும் குறித்த சந்தேக நபர்களை பிணையில் விடுவிப்பது அமைதியின்மையை ஏற்படுத்தும் எனவும் கூறினார்.

அதன்பின்னர் சந்தேகநபர்கள் சார்பில் ஆஜராகிய ஒன்பது சட்டத்தரணிகள் சார்பாகவும் ஒரு சட்டத்தரணி பிணை கோரிக்கை ஒன்றை முன்வைத்தார்.

கிழக்கு மாகாணசபை உறுப்பினரான லாபீர் எனும் குறித்த சட்டத்தரணி தனது வாதத்தில் அடையாள அணிவகுப்பில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் சந்தேகநபர்களை இனம்காட்டவில்லை எனவும், இந்த வழக்கில் சில குறிப்பிட்ட குழுவினர் தங்கள் சுயநலங்களுக்காக அப்பாவிகளை தண்டிக்க முனைவதாகவும், இதில் சர்வதேச சதிகள் இருப்பதாகவும், முகநூலில் இதுபற்றி எழுதி தேவையற்ற பிரச்சனைகளை சிலர் ஏற்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

அத்தோடு சந்தேக நபர்களின் உரிமையையும் சட்டத்தையும் மதித்து அவர்களை பிணையில் விடுவிக்குமாறும் எத்தகைய பிணை நிபந்தனைகளையும் தாம் ஏற்றுக்கொள்வதாகவும் இந்த வழக்கில் தனது தரப்பினர் எந்த தலையீடுகளையோ அச்சுறுத்தல்களையோ செய்யமாட்டார்கள் என கேட்டுக்கொண்டார்.

அதற்கு ஆட்சேபனை தெரிவித்த பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பான சட்டத்தரணி செலஸ்டின் குறித்த வழக்கு பாரதூரமான குற்றச்செயல் எனவும் இந்த வழக்கை பொதுமக்கள் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டுள்ளனர் எனவும் இவர்களுக்கு பிணை வழங்குவது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் எனவும் வாதிட்டார்.

அத்தோடு பாதிக்கப்பட்டவர்கள் சிறுமிகள் என்பதையும் விட குழந்தைகள் என்பதே பொருத்தமாக இருக்கும் எனவும் சட்டத்தரணிகள், பொலிசார், சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் என பலர் கூடியிருந்த இடத்தில் மேலு 42 நபர்களை நிறுத்தி அடையாளம் காட்டச் சொன்னால் அது அவர்களால் முடியாத காரியம் எனவும் புதுமையான அனுபவமற்ற இடத்தில் குறித்த குழந்தைகளால் அடையாளம் காட்ட முடியவில்லை எனவும் அதனை வைத்து இவர்கள் குற்றவாளிகள் அல்ல என்ற முடிவுக்கு வரமுடியாது எனவும் குறிப்பிட்டார்.

http://thuliyam.com/?p=70751

  • கருத்துக்கள உறவுகள்

மரத்தை வெட்டுவது மரத்தினால் ஆன கோடரியே  இனம்  விற்று  பிழைப்பு நடத்துபவர்கள்  நடத்துங்க உங்க காட்டில் இப்ப மழை ஆனால் அது வெள்ளமாகி  உடைத்து உங்களையே அடித்து செல்லும் 

  • கருத்துக்கள உறவுகள்

செய்த செயலுக்கு சிங்களவன் அடிபோடும்போது தெரியும் எம்மினம் ஏமாறுவது எம்மவர்களால் மட்டுமே என்பதை வரதன் நிரூபித்துள்ளார் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தனி ஒருவன் said:

19030399_10154774834708553_8270649477703

இது ஒரு முகநூல் பதிவு கிழக்கு எப்படி   அரித்தெடுக்கப்படுகிறதென்பது இந்த பதிவு சான்று  நாங்கள் ஒற்றுமை பற்றி பேசினாலும்  அதற்குள் என்ன லாபம் பார்க்கலாம் என  இருக்கும்  கூட்டம் இருக்கும் வரைக்கும்  இருப்புக்கு கேள்வி குறியே 

இப்படிப்பட்ட முஸ்லீம்களும் இருக்குறார்கள் அதற்கு உதாரணம் அமைச்சல் ஹிஸ்புல்லா 

பெரிதாக ஒன்றும் வேண்டாம். 

இதை அப்படியே சிங்களத்தில் மொழி பெயர்த்து முகப்புத்தகத்தில் மீதும் போட வேண்டும்.

லிங்கை பொது பல சேனவுக்கு அனுப்ப வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தனி ஒருவன் said:

தமிழர்களிடம் இருந்து காணிகளை ஆயுதம் காட்டி எதுவும் கொடுக்காமல் முஸ்லிம்கள் பறிக்கவில்லையே? அவர்கள் கொடுத்த பணம் போதுமென்று அதை வாங்கிக்கொண்டு தமிழர்கள் வேறு இடத்தில் குடியேறியதால் முஸ்லிம்கள் காணிகளை வாங்கி இருக்கிறார்கள்.

தமிழர்கள் ஆயுதம் காட்டி எதுவும் கொடுக்காமல் முஸ்லிம்களிடம் இருந்து பறித்த காணிகளுக்கு எப்போது நட்டஈடு கொடுக்கப் போகிறார்கள்?

Edited by Jude

44 minutes ago, Jude said:

தமிழர்கள் ஆயுதம் காட்டி எதுவும் கொடுக்காமல் முஸ்லிம்களிடம் இருந்து பறித்த காணிகளுக்கு எப்போது நட்டஈடு கொடுக்கப் போகிறார்கள்?

தமிழர்கள் முஸ்லிம்களிடம் ஆயுதம் காட்டி பறித்த காணிகளுக்கு ஒரு உதாரணமாவது தரமுடியுமா? 

2 hours ago, நிழலி said:

தமிழர்கள் முஸ்லிம்களிடம் ஆயுதம் காட்டி பறித்த காணிகளுக்கு ஒரு உதாரணமாவது தரமுடியுமா? 

உதாரணம் தந்தால் என்ன செய்ய போவதாய் உத்தேசம் ?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நிழலி said:

தமிழர்கள் முஸ்லிம்களிடம் ஆயுதம் காட்டி பறித்த காணிகளுக்கு ஒரு உதாரணமாவது தரமுடியுமா? 

வடக்கில் இருந்து முஸ்லிம்களை ஆயுதமுனையில் அவர்களின் காணிகளில் இருந்து வெளியேற்றியது உலகறிந்தது. விடுதலை புலிகள் காணிகளை கைப்பற்றவில்ல, திரும்பி வரலாம்   என்று தான்     சொன்னார்கள் இன்று அவர்கள் இல்லை, இருக்கும் தமிழர்கள் அதற்கு எப்படி பொறுப்பாவார்கள் என்று  நம்மில் பலர்    விதந்தாவாதம் செய்யலாம்.   ஈழத்தமிழருக்கு நண்பர்கள்   என்று உண்மையில் ஒருவருமே   இல்லாமல் இருப்பதற்கு இந்த விதமான மனிதாபிமானம் அற்ற விதந்தாவாதங்களும் காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

பரிகள் வேடத்தில் நரிகள் இங்கு ...
ஜாக்கிரதை ஜனங்களே !!:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, பெருமாள் said:

செய்த செயலுக்கு சிங்களவன் அடிபோடும்போது தெரியும் எம்மினம் ஏமாறுவது எம்மவர்களால் மட்டுமே என்பதை வரதன் நிரூபித்துள்ளார் 

ஈழப் போராட்டத்தில்... ஏற்பட்ட தோல்விக்கும், எம்மவர்களே  காரணம்.
அது... தொடர் கதையாக, இருப்பதை நினைக்க, இப்படிப் பட்ட  இனம், 
உலகில் வேறு எங்கும் இருக்க முடியாது.:(

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, தனி ஒருவன் said:

19030399_10154774834708553_8270649477703

இது ஒரு முகநூல் பதிவு கிழக்கு எப்படி   அரித்தெடுக்கப்படுகிறதென்பது இந்த பதிவு சான்று  நாங்கள் ஒற்றுமை பற்றி பேசினாலும்  அதற்குள் என்ன லாபம் பார்க்கலாம் என  இருக்கும்  கூட்டம் இருக்கும் வரைக்கும்  இருப்புக்கு கேள்வி குறியே 

இப்படிப்பட்ட முஸ்லீம்களும் இருக்குறார்கள் அதற்கு உதாரணம் அமைச்சல் ஹிஸ்புல்லா 

17 hours ago, Nathamuni said:

பெரிதாக ஒன்றும் வேண்டாம். 

இதை அப்படியே சிங்களத்தில் மொழி பெயர்த்து முகப்புத்தகத்தில் மீதும் போட வேண்டும்.

லிங்கை பொது பல சேனவுக்கு அனுப்ப வேண்டும்.

9 hours ago, Jude said:

தமிழர்கள் ஆயுதம் காட்டி எதுவும் கொடுக்காமல் முஸ்லிம்களிடம் இருந்து பறித்த காணிகளுக்கு எப்போது நட்டஈடு கொடுக்கப் போகிறார்கள்?

இதுகும்.... மேலே உள்ளவரின்  பதிவு.
முஸ்லீம்களுக்கு  வக்காலத்து வாங்குபவர்கள், இதனை பார்த்த பின்பாவது...
சோற்றில் உப்பு, போட்டு சாப்பிடுங்கள்.

Bild könnte enthalten: 1 Person, Text

Bild könnte enthalten: 1 Person, Text

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Jude said:

தமிழர்களிடம் இருந்து காணிகளை ஆயுதம் காட்டி எதுவும் கொடுக்காமல் முஸ்லிம்கள் பறிக்கவில்லையே? அவர்கள் கொடுத்த பணம் போதுமென்று அதை வாங்கிக்கொண்டு தமிழர்கள் வேறு இடத்தில் குடியேறியதால் முஸ்லிம்கள் காணிகளை வாங்கி இருக்கிறார்கள்.

தமிழர்கள் ஆயுதம் காட்டி எதுவும் கொடுக்காமல் முஸ்லிம்களிடம் இருந்து பறித்த காணிகளுக்கு எப்போது நட்டஈடு கொடுக்கப் போகிறார்கள்?

உங்களுக்கு தெரிந்த உன்மை அவ்வளவுதான் போல் இருக்கிறது தமிழரின்  காணிகளை ஏன் வாங்ன்க வேண்டும் என்று நீங்கள் சிந்திக்க வில்லை   கிழக்கை தங்கள் வசப்படுத்தி அதிலிருந்த  தமிழ் சமூகத்தை அடக்கி ஆள நினைக்கிறது முஸ்ல்லிம், சமுதாயம் அதற்கு அவர்கள்  வகுத்து வரும் வியூகம் என்பது நல்ல தமிழர்களை வைத்து   தமிழர் காணிகளை வாங்கி  அங்கு முஸ்லீம் குடும்பங்களை குடியேற்றி தமிழர்களை விரட்டி விடுவதுதான்  இந்த ஏறாவூர் என்பது  ஆரம்பத்தில் தமிழர்கள் கிராமமாக இருந்தது தற்போது அது மாறிவிட்டது  புணாணையில்  கட்டும் அரபிக்கல்லூரியை பாருங்கள் எத்தனை ஏக்கறை பிடித்து கட்டுகிறார்கள் ஊர்ல் இருந்தால் நிலமை தெரியும்  இல்லாவிட்டால் ??

 பறித்த  அந்த காணிகள் பற்றி தெரிந்த உங்களுக்கு தமிழரின் காணிகள்  சிங்கள  பேரினவாதிகளாலும் , முஸ்லீம் பேரினவாதிகளாலும் கைப்பற்றப்படும் போது தெரியவில்லை என்பதும்  அதன் போது இப்படி  ஒரு கருத்து எழுதவில்லையே என்று நினைக்கும் போது  வெடிக்கை  சீ சீ வேடிக்கையாக இருக்குறது 

11 hours ago, Jude said:

வடக்கில் இருந்து முஸ்லிம்களை ஆயுதமுனையில் அவர்களின் காணிகளில் இருந்து வெளியேற்றியது உலகறிந்தது. விடுதலை புலிகள் காணிகளை கைப்பற்றவில்ல, திரும்பி வரலாம்   என்று தான்     சொன்னார்கள் இன்று அவர்கள் இல்லை, இருக்கும் தமிழர்கள் அதற்கு எப்படி பொறுப்பாவார்கள் என்று  நம்மில் பலர்    விதந்தாவாதம் செய்யலாம்.   ஈழத்தமிழருக்கு நண்பர்கள்   என்று உண்மையில் ஒருவருமே   இல்லாமல் இருப்பதற்கு இந்த விதமான மனிதாபிமானம் அற்ற விதந்தாவாதங்களும் காரணம்.

நீங்கள் குறிப்பிட்டுள்ளவை விதண்டாவாதம் அல்ல, அவை தான் நாம் கேட்க நினைக்கும் நியாயமான கேள்விகள். புலிகள் முஸ்லிம்களை வெளியேற்றிய பின் அவர்களும் சரி, தமிழ் மக்களும் சரி அவர்களது காணிகளை மட்டுமல்ல பெறுமதியான சொத்துகளையும் பள்ளிவாசல்களையும் கூட கையகப்படுத்தவில்லை. இந்த நிலை 1995 ஆம் ஆண்டு சிங்கள இராணுவம் யாழ்ப்பாணத்தை பிடிக்கும் வரைக்கும் நீடித்தது.

புலிகளின் / தமிழ் மக்களின் தோல்விக்கு பூகோள அரசியல் முதல் கொண்டு பலவகையான விரிவான மற்றும் நுட்பமான காரணங்கள்  இருக்கும் போது வெறுமனே அவர்கள் நண்பர்களை சம்பாதிக்கவில்லை என்று  (அதுவும் நீங்கள் நண்பர்கள் என்று சொல்ல முற்படுவது கம்யூனிச / சோசலிச கழுதைக் கூட்டங்களை என நினைக்கின்றேன்) ஒற்றை காரணத்தை சொல்வது அவர்கள் மீதான கடுமையான காழ்ப்புணர்ச்சியினால் மட்டுமே.

புலிகள் அற்ற இந்த 8 ஆண்டுகளில் உங்களால் எத்தனை பேரை நண்பர்களாக மாற்றிக் கொள்ள முடிந்தது என்றும்  அப்படி நண்பர்களாக்கியதன் காராணத்தினால் அரசியல் ரீதியில் நாம் எந்தளவுக்கு சாதிக்க முடிந்துள்ளது என்றும் விளக்க முடியுமா?

2009 பின் முஸ்லிம் செல்வந்தர்களாலும், றிசாட்  போன்றவர்களாலும் தமிழ் மக்களின் காணிகள் சுரண்டப்பட்டும் அபகரிக்கப்பட்டும் வருவது அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஆனால் இப்படியான விடயங்களால் பாதிக்கப்படும் தமிழ் மக்களின் சார்பில் குரல் கொடுக்காது, அவர்களது அரசியலை மலினப்படுத்தி அவர்களையே குற்றவாளிகளும் ஆக்கி விடும் உங்களைப் போன்றவர்களால் தான் நாம் இன்னமும் இழப்புகளை மட்டுமே எதிர் கொண்டு வருகின்றோம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வீடியோ, இணையத்தில் இன்று இணைக்கப் பட்டு உள்ளது. இணைத்த தேவர் வம்சம், சீமானுக்கு முழு எதிரானது. 

அதே வேளை, இவர்கள் மீள தம் பேரில் வெளியிடும் வீடியோ ஜேர்மன் வாழ் ஈழத் தமிழருடையது.

முஸ்லிகள் மேல் கடும் கோபத்தில் இருக்கிறார் போல் உள்ளது. 

இந்த வீடியோவை இணைப்பது, அதிலுள்ள கருத்துக்களுக்கு நான் ஆதரவு என்பதல்ல.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

களைகளை புடுங்கி மண்ணை சுத்தம் செய்யாதவரை 
நல்ல பயிர்ச்செய்கை என்பது ஒருபோதும் சாத்தியம் இல்லை.

பிரபகரனின் தோல்வி என்பது ...
பிரபாகரனின் "தன்னிலை மாறுதல்" எனும் இடத்தில்தான் தொடங்கியது.

சர்வதேசம் புடலங்காய் கத்தரிக்காய் ....
என்று பல மாறுதல்களை "தன்னிலை" கடந்து செய்ய முற்படட போதுதான் 
தோல்வியின் படலம் தொடர தொடங்கியது. 

இதை இல்லை என்று வாதிடலாம் .....
ஆனால் பிரபாகரனின் வெற்றி என்பது "தன்னிலை தாளாமை"
என்பத்தில்தான் தொடங்கியது என்பதை ... எந்த வாதமும் இல்லாமல் 
எல்லோராலும் ஏற்றுக்கொள்ள படுகிறது.

இதை ஏற்றுக்கொள்ளும்போதே ... மறைமுகமாக முதலாவதும் ஏறுகொள்ள்ளப்படுகிறது.
ஆனால் ....... அவர் அவர் விருப்பு வெறுப்பு அதற்கு இடம் கொடுப்பதில்லை. 

On 6/14/2017 at 8:59 AM, Sasi_varnam said:

பரிகள் வேடத்தில் நரிகள் இங்கு ...
ஜாக்கிரதை ஜனங்களே !!:rolleyes:

வாங்கின காசுக்கு சேவகம் நடக்குது! அவ்வளவ்வு தான்!

:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, தனி ஒருவன் said:

  புணாணையில்  கட்டும் அரபிக்கல்லூரியை பாருங்கள் எத்தனை ஏக்கறை பிடித்து கட்டுகிறார்கள் ஊர்ல் இருந்தால் நிலமை தெரியும்  இல்லாவிட்டால் ??

அதில் குடியேற்றதிட்டங்களும் உண்டு ...‍‍‍ஹிஸ்புல்லா மாதிரிகிராமம் என்று பெரிய ஒரு பெயர்பலகையும் உண்டு நான் இந்தடவை வரும் பொழுது பார்த்தேன்....

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

அதில் குடியேற்றதிட்டங்களும் உண்டு ...‍‍‍ஹிஸ்புல்லா மாதிரிகிராமம் என்று பெரிய ஒரு பெயர்பலகையும் உண்டு நான் இந்தடவை வரும் பொழுது பார்த்தேன்....

நீங்கள் ஊருக்கு வந்து போவதாக் தெரிகிறது என நினைக்கிறேன் அப்படியே மேற்குப்பக்கமும் வளைச்சு பிடிக்கிறாங்கள்  எல்லாம்  உள் விளையாட்டால் நடக்கிரது ஆர் ஆர் உடந்தை என்பது மந்த மான நிலையில் தொக்கி நிற்கிறது  வெளிவரும்  சில நாட்களுக்குள் 

  • கருத்துக்கள உறவுகள்
On 6/14/2017 at 3:09 AM, Jude said:

வடக்கில் இருந்து முஸ்லிம்களை ஆயுதமுனையில் அவர்களின் காணிகளில் இருந்து வெளியேற்றியது உலகறிந்தது. விடுதலை புலிகள் காணிகளை கைப்பற்றவில்ல, திரும்பி வரலாம்   என்று தான்     சொன்னார்கள் இன்று அவர்கள் இல்லை, இருக்கும் தமிழர்கள் அதற்கு எப்படி பொறுப்பாவார்கள் என்று  நம்மில் பலர்    விதந்தாவாதம் செய்யலாம்.   ஈழத்தமிழருக்கு நண்பர்கள்   என்று உண்மையில் ஒருவருமே   இல்லாமல் இருப்பதற்கு இந்த விதமான மனிதாபிமானம் அற்ற விதந்தாவாதங்களும் காரணம்.

நீங்கள் உங்கள்  பரம்பரை எல்லாமே ஒரு காலத்தில் வந்தேறு குடிகளுக்கு காசுக்கு விலை போன **** கூட்டம்தான். இப்பிடித்தான் பேசச்சொல்லும்.
கேடுகெட்ட கூட்டம். ஒன்றுமே இல்லாமல் கஷ்டப்படுபவர்களிடம் காசைக்காட்டி சூசகமாக காணிகளை அபகரிக்கும் கூட்டத்துக்கு வக்காலத்து வாங்குதுகள். விஜயகாந்த் சொன்னமாதிரி சீ தூ.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Eppothum Thamizhan said:

நீங்கள் உங்கள்  பரம்பரை எல்லாமே ஒரு காலத்தில் வந்தேறு குடிகளுக்கு காசுக்கு விலை போன **** கூட்டம்தான். இப்பிடித்தான் பேசச்சொல்லும்.
கேடுகெட்ட கூட்டம். ஒன்றுமே இல்லாமல் கஷ்டப்படுபவர்களிடம் காசைக்காட்டி சூசகமாக காணிகளை அபகரிக்கும் கூட்டத்துக்கு வக்காலத்து வாங்குதுகள். விஜயகாந்த் சொன்னமாதிரி சீ தூ.

தயவுசெய்து இப்படி எழுதாதீர்கள் ......
சிலரின் எதிர்பார்ப்பே நீங்கள் யாரவது வந்து இப்படி எதையாவது எழுதவேண்டும் என்பதே.

சிலருக்கு தாங்கள் தமிழரில்லை என்ற எண்ணம் 
தமிழர்கள் தாழ்ந்துபோனால் அதில் ஒரு சுகம்.

அதற்கு காரணம் உண்டு விரிவாக எழுதமுடியாது.
சில விடயங்களை விளங்கினாலும் ......விளங்காத மாதிரி நடிப்பதில் 
லாபம் நிறைய உண்டு.

உங்களை ஒருவர் அடித்தால் .... நீங்கள் என்ன செய்வீர்கள் என்பது 
ஒருவருக்கு நிற்ச்சயமாக தெரிந்தால் ...... அவர் யோசித்து அதை எப்படி 
முறியடிப்பது என்று சிந்தித்து ஒரு முடிவெடுத்த்து உங்களை அடிக்க வாய்ப்பு உண்டு.

நீங்கள் என்ன செய்வீர்கள் என்பது யாருக்கும் தெரியாத வரைதான் உங்கள் பலம். 

இது தமிழர்களால் தமிழருக்கா ... கருத்துக்கள் பகிரும் ஒரு களம்.
இதில் சில கருத்துக்கள் வித்தியாசமாகத்தான் இருக்கிறது ......
அதில் நிறைய காரணமும் இருக்கிறது 
அப்படியானவற்றை கண்டால் ......... காணாத மாதிரி போய்க்கொண்டு இருந்தால் 
பின்பு அவர்களை காண கிடைக்காது.
சீ .. சீ இந்த பழம் புளிக்கும் என்றுவிட்டு  ... காணாமல் போனவர்கள்தான் அதிகம். 

ஆக்கிரமிப்பு பற்றி பேசும்போது ......
தமிழர்கள் அடிவாங்கும்போது அலறியது தப்பு என்று 
அவர்கள் சொல்வார்கள்.
ஆமாய்யா ....... தமிழர்கள் அப்படி அழுத்திருக்க கூடாது 
என்று எழுதிவிட்டு போனால் ..... அவர்கள் எதிர்பார்ப்பு தவிடு ஆகிடும்.
நீங்கள் அதை உணர்ச்சிபூர்வமாக பார்த்து கருத்து எழுத தொடங்கினால் ...
அவர்கள் எதிர்பார்ப்பு அதுதான் !

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, Maruthankerny said:

மருது  இப்பிடியெல்லாம் எழுதக்கூடாது என்றுதான் நினைக்கிறானான் ஆனால் உந்தாளின்ட அலப்பறை தாங்க முடியுதில்லை. இது உங்கடை மாகாணம் .இல்லை என்ற நிலைக்கு கொண்டு வருவம் எண்டு ஒரு முஸ்லீம் சொன்னபின்னும் அவங்களுக்கு வக்காலத்து வாங்கிறதுகளை வேறு என்ன செய்யலாம்.?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.