Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாம் விரும்பி வாங்கும் பொருட்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாத்தியார் said:

தமிழ் சாப்பாட்டுக்கடைகள் சிற்றிக்குள்ளை இருக்கா
நான் இதுவரை சுவிஸ் பக்கமே போகேல்லை
இது  தான் முதல் தடவை
அது தான் கேட்டேன்

ஆதவன் விபரமாச் சொல்லுவார் வாத்தியார்.

  • Replies 134
  • Views 14.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, colomban said:

தமிழ்சிறி சில வருடங்களுக்கு முன்பு நீங்கள் கருத்தடை செய்த்ததாய் ஓர் கட்டுரை எழுதி இருந்தீர்கள். 

இப்ப மறுபடியும் திரும்ப நோர்மலுக்கு வந்தீட்டீங்களா? 
மலை நிச்சயம் வருமா?

Bild könnte enthalten: 1 Person, Text :grin: :D:

முன்பு எழுதியிருந்தது, உண்மை தான்  கொழும்பான். 
அதனை.. யாழ் களத்தில் உள்ளவர்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து, 
குமாரசாமி அண்ணைக்கு  பகிடியாக ஒரு பதிலை   எழுதினேன்.
அதனை நீங்கள்... இன்னும் நினைவில் வைத்திருப்பது..... ஆச்சரியமாக உள்ளது.:grin:

17 hours ago, MEERA said:

இதென்ன புதுக் கதையாய் இருக்கு ?

புதுக்கதை இல்லை,  மீரா.  அது, 20 வருடத்துக்கு முன்பு நடந்த பழைய கதை.:grin:

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
On 27.6.2017 at 1:10 AM, தமிழ் சிறி said:

 

நான் வாங்கும் தூள்.. சூர்யா தூள் (சிகப்பு மூடி).  சரியான காரம். 
அதனைப் போட்டு சமைத்தால்... கலரும், உறைப்பும், வாசமும் அந்த மாதிரி   இருக்கும்.  

கறிக்கு நல்ல கலர் வேண்டு மென்றால் , கறியை அடுப்பிலிருந்து இறக்குவதற்கு முதல் , சிறிதளவு tomatenpüree (tomato puree / தக்காளி பேஸ்ட்) விட்டு இறக்குங்கள் கறி நல்ல கலராகவும் இருக்கும் , குழம்பாக இருந்தால் ஆக தண்ணியாக இல்லாமல் சிறிது தடிப்பாகவும் இருக்கும் , தக்காளியின் மெல்லிய புளிப்புச் சுவையும் சேர்ந்து கறியின் சுவையும் சற்று தூக்கலாகத் தெரியும்.

M-Classic Tomatenpüree

tomatenpüree சாதரணமாக கடைகளில் கிடைக்கும் 

படத்திலுள்ளது 200g ; விலை - 0.75 chf 

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
On 29.6.2017 at 1:53 PM, வாத்தியார் said:

சுவிஸ் சூரிச்சில் நல்ல சாப்பாட்டுக்கு கடை எது ? விலாசம் வேண்டும் .

ஞாயிறு மற்றையை தமிழ்க் கடைகள் திறக்குமா?

எனக்குத் தெரிந்து சூரிச்சில் ஒரளவுக்கு நல்ல தமிழ் சாப்பாட்டுக்கு கடை என்றால் இது தான் வாத்தியார் , பிரபல தமிழ்கடையான நாதன் கடைக்கு அருகில் இருக்கிறது.

Friends Corner

josefstrasse 140, 8005 Zürich

tp 043 818 22 04

சூரிச்சில் தமிழ்க் கடைகள் ஞாயிறு திறப்பதில்லை.....சனியும் மாலை 5.00 மணியுடன் பூட்டிவிடுவார்கள் , இப்போது பேரின்பம் மளிகைக் கடை ஞாயிறு  திறப்பதாகக் கேள்வி.

Bern இல்  ஞாயிறு தமிழ்க்கடைகள் திறப்பதாகக் கேள்வி

 

On 29.6.2017 at 4:13 PM, Nathamuni said:

ஆதவன் விபரமாச் சொல்லுவார் வாத்தியார்.

 

தமிழ்ச் சாப்பாட்டுக் கடைகள் என்றால் எனது தெரிவு London அல்லது Paris தான்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Athavan CH said:

தமிழ்ச் சாப்பாட்டுக் கடைகள் என்றால் எனது தெரிவு London அல்லது Paris தான்

இங்கு லண்டன் என்றால் ரோல்ஸ் திங்கள் செவ்வாய்கிழமை களில் நல்லா இருக்கும் அன்றுதான் ரோலே உருட்டுவார்கள் பின்பு அடுத்துவரும் திங்கள் மட்டும் ப்ரீச்சர் ரோலை பொரித்து தருவார்கள் பல கடைகளில் எண்ணெய் மாத்துவது கூட கிடையாது இதே போலத்தான் மற்றைய சாப்பாடுகளும் ஓனரின் கடுப்பு கோபத்துக்கு ஏற்றவாறு உப்பு காரம் கூடி குறையும் நிலையாய் இருக்காது. 

ஆனால் நான் கண்ட சைனாகாரன் கடையிலும் கெபாப் கடையிலும் சைனாக்காரன் அல்லது அரப்காரனோ சாப்பிடுவதில்லை ஏன் என்று அவர்களிடமே கேட்டும் மழுப்பலான பதிலை தருவார்கள் நம்மவர்களும் ,கறுப்பர்களும்,வெள்ளைகளும் தான் அவர்களின் வாடிக்கையாளர் ஆனால் நம்மவரின் கடை நம்மவருக்கே ஈயோட்டிகொண்டு இருப்பார்கள் கொஞ்சம் உணவு விடயத்தில் அக்கறை செலுத்தினால் பெரிய சந்தையே இருக்கு வாரத்தில் ஒருநாள் கொத்து வேண்டி சாப்பிடும் வெள்ளையும் சொல்லும் பழைய கொத்தை தந்து விட்டார்கள் அதில் இருந்து ஸ்ரீ லங்கன் சாப்பாட்டு கடை பக்கம் போவதில்லை என்று .

இப்படி பல டாகாடிகள் இருந்தாலும் ஒரு சில நல்ல கடைகள் உள்ளன புதிதாய் வரும் ஓனர்கள் காசை மிச்சம் பிடிக்க எண்ணி காலவோட்டத்தில் அந்த கடைகளும்காணமல் போய்விடுவதும் உண்டு. அடுத்து ஒருகடை நல்லா வருது என்றால் அங்குள்ள ஓட்டைகளை உளவறிந்து  கவுன்சில் இமிக்கிரேசன் போன்றவர்களுக்கு பெட்டிசம் போடுவது போன்றவற்றாலும் நல்ல உணவங்கள் காணாமல் போவது உண்டு .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Athavan CH said:

 

தமிழ்ச் சாப்பாட்டுக் கடைகள் என்றால் எனது தெரிவு London அல்லது Paris தான்

வெம்பிளியிலை உறைப்பு கொத்துரொட்டி விக்கிற கடையிலை வாங்கி சாப்பிட்டது....ஒரு வருசமாய் பின்பக்கம் முன்பக்கம் எண்டு பாகுபாடு பாரமல் தொடர்ந்து எரியுது.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

வெம்பிளியிலை உறைப்பு கொத்துரொட்டி விக்கிற கடையிலை வாங்கி சாப்பிட்டது....ஒரு வருசமாய் பின்பக்கம் முன்பக்கம் எண்டு பாகுபாடு பாரமல் தொடர்ந்து எரியுது.

பல கடைகளில் இன்றும் உறைப்புக்கு பச்சை செத்தல் தூள் தான்.

  • தொடங்கியவர்
4 hours ago, குமாரசாமி said:

வெம்பிளியிலை உறைப்பு கொத்துரொட்டி விக்கிற கடையிலை வாங்கி சாப்பிட்டது....ஒரு வருசமாய் பின்பக்கம் முன்பக்கம் எண்டு பாகுபாடு பாரமல் தொடர்ந்து எரியுது.

 

4 hours ago, பெருமாள் said:

பல கடைகளில் இன்றும் உறைப்புக்கு பச்சை செத்தல் தூள் தான்.

இது என்ன வில்லங்கமாக இருக்குது....

  • 1 month later...
  • தொடங்கியவர்

 

CousCous

கொஸ்கொஸ்

826933_-_MM_DE_CousCous__500_g.png

இது எல்லா சுப்பர் மார்க்கட்களிலும் கிடைக்கும். சமைப்பதற்கும் இலகுவானது, மிக முக்கியமாக சிறுவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள், இது ஒருவகை தானியம் மத்தியதரைக்கடல் பிராந்திய மற்றும் ஆபிரிக்க உணவு வகைக்குள் இது வரும் என நினைக்கிறேன்.(சில வேளைகளில் இது நாம் லட்டு செய்ய பாவிக்கும் ரவை யின் இனமோ தெரியவில்லை)

அரிசியை விட குறை வான மாச்சத்தும் , கூடுதலான புரதமும் கொண்டது

செய்முறை

Bowl ஒன்றினுள் ஒரு கப் குஸ்குஸினுள் ஒன்றேகால் கப் கொதி நீரை (1:1.25)  ஊற்றி மூடிவிட்டால் , 10 நிமிடங்களில் குஸ்குஸ் தயார்.

வீட்டில் நூடில்ஸ் செயவது போல் செய்யலாம் , இங்கு நூடில்ஸுக்குப் பதில் குஸ்குஸினைப் போடலாம்

 சோற்றுக்குப் பதிலாகவும் பாவிக்கலாம்.

எங்கள் வீட்டில் வாரத்தில் ஒரு முறையாவது சாப்பிடுவோம்

https://www.youtube.com/watch?v=78ENTFiAqtw///

.youtube.com/watch?v=-TTV53VUR5k

 

நான் சாப்பிடும் முறை

குஸ்குஸினை பல வழிகளில் சாப்பிடலாம் , இணையத்தில் ஏராளமான மெனுக்கல் இருக்கின்றன, நான் சாப்பிடும் எளிய முறை இது தான்.
 ஒரு கடலை கறி , அவித்த  cauliflower, broccoli ,  குஸ்குஸ் அவ்வளவு தான்.
குஸ்குஸினை  கடலை கறியுடன் சேர்த்து ஒவ்வொரு வாய்க்கும் ஒரு அவித்தமரக்கறி யுடன் சாப்பிட வேண்டியது தான், சிம்பிளான நிறைவான உணவு, மனைவிக்கும் வேலை மிச்சம்

 கடலை கறி
 கடைகளில் கொண்டைக்கடலை அவித்து டின்னில் விற்பார்கள் , வழமை போலவே பெரும் சீரகம் ,வெங்காயம் , உள்ளி எல்லாம் போட்டு  தாளித்து மிளகாய்த்தூள் , ஒரு அரைக் கட்டி மெகி சூப் கட்டி அல்லது கரம் மசாலா வெட்டிய தக்காளி யைப் போட்டு கொஞ்சம் நீர் விட்டு ஒரு கொதிக்க விட்டு டின்னில் இருக்கும் கடலையை கொட்டி கிளறி ஒரு நிமிடம் விட்டு தேங்காய்ப்பால் அல்லது கிறீம் விட்டு  இறக்க வேண்டியது தான்.(கிறீம் விடுவது என்றால் கொஞ்சம் முதலில் விடவும் , நீங்கள் வாங்கும் கிறீமைப் பொருத்து) வெள்ளி அல்லாத நாட்களில் கடலையுடன் சேர்த்து mackerel மீன் (நான் சுவிஸ் கடைகலில் உள்ள மீன் டின் தான் பாவிக்கிறனான்) சேர்த்து போடுவேன்.மிகுந்த சுவையாக இருக்கும்

ricci-couscous-mittelgrob.jpg

CousCous

கடை  Migros

விலை 2.25chf (500g)

 

m-classic-kichererbsen.jpg

கடலை டின்

கடை  Migros

விலை 1.10 chf (250 g)

m-classic-makrelen-filets-95g.jpg

mackerel மீன்

கடை : Migros

விலை :1.60 chf

 

நீங்களும் குஸ்குஸ் சாப்பிடுபவர்கலளாயின் உங்கள் அனுபவங்களையும் பகிருங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குஸ்குஸ் நல்ல சாப்பாடு....மரக்கறி இல்லாட்டி மீன் இறைச்சியளுக்கும் சோறுமாதிரி ஒத்து வரும்.சில பேருக்கு சோறு சாப்பிட்டால் வயிறு முட்டாய் இருக்கும். இது அப்பிடியில்லை....சமிபாட்டுக்கும் சுகமான சாப்பாடு.

  • கருத்துக்கள உறவுகள்

பயன்பாடுடைய திரி. 

உணவே மருந்தென வாழ்வியல் இருந்தநிலை மாறி உணவாக மருந்துகளை உட்கொள்ளும் கணிசமான மக்கட்தொகையைக் கொண்டதாக எமதினம் உள்ள  சூழலில்  பல அறியாதவிடயங்களை அறியக்(தூள்) கூடியதாக உள்ளது. கொத்தைச் சாப்பிட்டு குமாரசாமியண்ணை பட்டபாட்டை வாசிச்சு  வயிற்றுநோ வந்திட்டுது. தமிழ்சிறியவர்களுக்கு முயற்சி திருவினையாக்க  இறையருள் கிட்டுவதாக. 

லண்டன் மிற்சம்பகுதியிலே (களத்திபெயராலான) ஒரு சாப்பாட்டுக்கடை  ஆட்டிறைச்சிக்கறியும் பறோட்டடாவும் நல்ல சுவை. இப்ப எப்படியோ தெரியாது. 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für rossmann

 

Bildergebnis für statement after shave

ஜேர்மனியில்  வசிப்பவர்களுக்கு,   ஒரு அரிய  சந்தர்ப்பம்.
நீங்கள்,   தாடி வளர்க்காமல்,  "ஷேவ்" எடுப்பவர்களா?
அப்படி என்றால், இது உங்களுக்கான செய்தி. :grin:

இந்தக் கிழமை, Rossmann  என்னும் கடையில்...  Statement After Schave   மலிவு விலையில், விற்கிறார்கள். 
சாதாரணமாக அதன் விலை  31€  99 சதம். இந்த வாரம் 12€ 49 சதத்திற்கு  விற்பனை செய்யப் படுகின்றது.
நாம் அதனை பூசினால்... மற்றவர்களை, கவர்ந்து இழுக்கும்  நல்ல  வாசம்.  நம்பி வாங்குங்கள். :)

On 6.9.2017 at 7:43 PM, தமிழ் சிறி said:

Bildergebnis für rossmann

 

Bildergebnis für statement after shave

ஜேர்மனியில்  வசிப்பவர்களுக்கு,   ஒரு அரிய  சந்தர்ப்பம்.
நீங்கள்,   தாடி வளர்க்காமல்,  "ஷேவ்" எடுப்பவர்களா?
அப்படி என்றால், இது உங்களுக்கான செய்தி. :grin:

இந்தக் கிழமை, Rossmann  என்னும் கடையில்...  Statement After Schave   மலிவு விலையில், விற்கிறார்கள். 
சாதாரணமாக அதன் விலை  31€  99 சதம். இந்த வாரம் 12€ 49 சதத்திற்கு  விற்பனை செய்யப் படுகின்றது.
நாம் அதனை பூசினால்... மற்றவர்களை, கவர்ந்து இழுக்கும்  நல்ல  வாசம்.  நம்பி வாங்குங்கள். :)

நன்றி தமிழ் சிறி உங்கள் தகவலுக்கும் 

இன்று இதை வேண்டினேன் நல்ல வாசனை. 

மிண்டும் நன்றிகள் 

??☺️?

giphy.gif

giphy.gif

 

  • தொடங்கியவர்
On 8/26/2017 at 2:01 AM, குமாரசாமி said:

குஸ்குஸ் நல்ல சாப்பாடு....மரக்கறி இல்லாட்டி மீன் இறைச்சியளுக்கும் சோறுமாதிரி ஒத்து வரும்.சில பேருக்கு சோறு சாப்பிட்டால் வயிறு முட்டாய் இருக்கும். இது அப்பிடியில்லை....சமிபாட்டுக்கும் சுகமான சாப்பாடு.

உண்மை தான் குமாரசாமி அண்னை
நானும் வேலை இடத்துக்கு சோற்றை விட குஸ்குஸ் தான் அதிகம் கொண்டு போறனான்.

புறோக்கோலியும்  கோலிபிளவரும் மிகவும் நல்லது என சொல்கிறார்கள் அதனை நீரவியில் அவித்துச் சாப்பிடுவது தான் அதிக பலன் தரக்கூடியது என்று கூறப்படுகிறது( https://cathe.com/ten-fascinating-health-benefits-of-broccol  , https://draxe.com/cauliflower/) அதனால் வாரத்தில் ஒரு நாளாவது இதைச் சாப்பிடுவதற்கு முயல்வேன்.

எனது முறை இது தான் (பெரும்பாலும் ஞாயிற்று கிழமைகளில்-  இன்று என்ன சமைக்கிறது என தெரியவில்லை என கூறும் மனைவிக்கு ஓய்வு கொடுத்து விட்டு நானே களத்திலிறங்கி செய்வேன் , அவர்களும் பாவம் தானே )

புறோக்கோலியும்  கோலிபிளவரும் (ஒவ்வொன்றும் ஒரு பெரிய பூ ) சிறிய சிரிய பூக்களாகப் வெட்டி எடுத்து கழுவியெடுத்து , ஸ்டீமரில் அவித்து,
 குஸ்குஸ்  + கடலைக்கறி  யுடன் சாப்பிடுவோம்.

குஸ்குஸ்  + கடலைக்கறி  யை தனித்தனியே கோப்பைகளில் போட்டு விட்டு ஒரு பெரிய பிளேட்டில் அவித்த புறோக்கோலியும்  கோலிபிளவரும் மேசையின் நடுவில் வைத்து விட்டால்  எல்லாரும் சேர்ந்து ஒரு கை பார்ப்போம்.

குறிப்பு :
வெட்டிய புறோக்கோலியையும் கோலிபிளவரயையும் , அவிப்பதற்கு முன் ஒரு பெரிய bowl இனுள்  ஒரு மேசைக்கரண்டி உப்பு போட்டு ஒரு மெல்லிய வென்னீரில் ஒரு 5 நிமிடம் ஊற விடுவேன் இதன் மூலம் அதிலுள்ள சிறிய சிறிய நுண்ணுயிர்கள் எல்லாம் வெளியேற்றலாம் என ஒரு குறிப்பில் வாசித்தேன்.

shutterstock_90385804.jpg

Broccoli

(Ten Fascinating Health Benefits of Broccoli https://cathe.com/ten-fascinating-health-benefits-of-broccol)

vegetarian-cauliflower-dish.jpg

Cauliflower

fight-cancer-232x224.jpg

Top 8 Health Benefits of Cauliflower https://draxe.com/cauliflower/

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

 

Different-Types-of-Dates.jpg dubai+14.JPG

 

நம்மூர் சாலைகளில் இறைந்துகிடக்கும் வேப்பம்பழம் போல் சீந்துவாரின்றி இருந்தாலும் அலுவலகத்தில் ஒவ்வொரு சீசனிலும் அரபிகள் பொதி பொதிகளாக பண்ணைகளில் விளைந்த பேரீச்சம்பழங்களை பணியாட்கள் அனைவருக்கும் அன்பளிப்பாக வழங்குவர்கள்.. சுவையாகவும், அதே சமயம் ஊட்டச்சத்து மிகுந்ததாகவும் இருக்கும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Athavan CH said:

எனது முறை இது தான் (பெரும்பாலும் ஞாயிற்று கிழமைகளில்-  இன்று என்ன சமைக்கிறது என தெரியவில்லை என கூறும் மனைவிக்கு ஓய்வு கொடுத்து விட்டு நானே களத்திலிறங்கி செய்வேன் , அவர்களும் பாவம் தானே )

வீட்டிலை சமையல் வேலை நான் தான் பாக்கிறனான் எண்டதை இதைவிட அழகாய் எந்தப் பண்டிதராலையும் சொல்லேலாது. :grin:

  • கருத்துக்கள உறவுகள்

குஸ்குஸ்ஸை சிறிது ஒலிவ் ஒயில் உப்பு போட்டு கலந்து கொதிதண்ணீர் விட்டு (புட்டு பதத்தில்) 10 நிமிடம் ஊற விட்டு நீராவியில் (ஸ்டிமரில்) அவித்து பின் இறக்கி சூட்டுடன் பட்டர் போட்டு பிரட்டி விடவும்.....!

புரோக்கோலி, காலி ஃபிளவர் இவற்றுக்கும் அவித்தபின் சூட்டுடன் சிறிது பட்டரும், போர்மாஸ் துருவல் லும் போட்டு கிளறி விடலாம்.....!

அருமையாய் இருக்கும்....!  tw_blush:

 Résultat de recherche d'images pour "emmental rapé 1kg"

 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கடந்த விடுமுறைகாலங்களில் சொறிலங்கா போய் வந்தவர்களுக்கு லண்டன் த்ரீ நெட்வொர்க் Essential plans ,Advanced plans. என்று அவர்கள் முன்பே வேறுபடுத்தி வைத்துள்ளார்கள் இதில் Advanced plans எடுத்தவர்களுக்கு மட்டுமே  சொறிலங்கா  ரோமிங் ப்ரீ இதை அறியாமல்     Essential plans ல் உள்ளவர்களுக்கு எக்கச்சக்கமான பில் வந்துள்ளது  இதில் த்ரீ நெட்வொர்க் விளம்பரபடுத்திய முறை பிழையானது அதை வைச்சு ரிகிளைம் செய்யலாம் நண்பனின் பில் 1420பவுண்ட்  அவ்வளவும் திரும்ப வந்துள்ளது +இனி வரும் காலம்களுக்கு 15பவுன்லைன் ரெண்டல் இப்படி யாரவது பாதிக்க பட்டு இருந்தால் ஒம்புச்ட்மன் அணுகவும் .

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பயனுள்ள  தகவல்கள், நாமும் சூர்யா கறி தூள் தான் பாவிக்கிறோம். இனி மேல் ரபினாவை தேட வேண்டியதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

couscous ஐ பல்வேறு விதமாக பாவிக்கலாம் என்பது எல்லோருக்கும் தெரியும்.

couscous இல் உப்புமா கூட செய்யலாம். ஏனெனில் couscous இன் அடிப்படை நருகல் பொருகலாக திரிக்கப்பட்ட ரவையை (coarsely ground wheat, semolina). இதற்கு  இனிப்பும் கசப்பும் உள்ள மாதாளம் பழ முத்துக்கள் சுவை ஊட்டும்.

couscous இன் இன்னுமோர் சிறப்பான உபயோகம், முழுக் கோழியை (அல்லது கோழியைப் போன்ற வேறு எந்த இறைச்சி ஆகிலும்) வெதுப்பியில் வாட்டி சமைக்கும் போதாகும்.

இதை கடைகளில் கிடைக்கும் stuffing இதற்கு பதிலாக பாவிக்கலாம்.

இதை செய்யும் பொது, couscous  ஐ அளவான கொதிநீரில் உப்பிட்டு அப்படியே உவித்து வைக்கவும், வேண்டு மாயின் சிறிதளவு இனிப்பான paprika (sweet paprika) மேலாக தூவியும் வைக்கலாம் (as garnish), ஆனால் அவசியமன்று.     

கோழியில் தோலிற்கும் தசைக்கும் இடையிலும், தோலை நீக்காமல் தசையில் ஆங்காங்கே கீறிய பகுதியிலும்  மசாலையை  பூசிய பின்பு, அதே பாத்திரத்தில் உவித்த couscous  யும், அத்துடன் அளவான fried and dried onion flakes  (பிரியாணிக்கு பாவிப்பது) சேர்த்து விடுபட்டிருக்கும் மசாலையில் பிரட்டி எடுக்கவும். வேண்டுமாயின் மேலதிக மசாலை சேர்த்து பிரட்டவும்.           

இதை முழுக் கோழியின் குழியில் (cavity from where innards and offal were removed) இயலுமான அளவு திணிக்கவும்.
திணிக்கும்போது  அவ்வப்போது திணிக்கப்பட்ட couscous ஐ  கரண்டியின் ஒடுக்கமான பிடியினால் குழியின் ஆழம் அளவிற்கு துளைத்து விடவும், இது வெப்ப காற்றோட்டத்திற்கும். கடத்தலுக்கும், அதன் மூலமாக எல்லாப் பகுதிகளும் சமமாக வாடப்படுவதற்கும்  மிகவும் முக்கியம்.

இதை புசித்த அநேகமானோர், ஊரில் முதல் நாள் சமைத்த இறைச்சி கறியை பொருக்க காய்ச்சி சோற்றை  அதில்  பிரட்டி  சாப்பிடும் சுவையை ஒத்தது என்றனர்.

ஆயினும், கிரமமாக சாப்பிடுவது உடல் நலத்திற்கு உகந்தது அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
On 29/06/2017 at 12:53 PM, வாத்தியார் said:

சுவிஸ் சூரிச்சில் நல்ல சாப்பாட்டுக்கு கடை எது ? விலாசம் வேண்டும் .

ஞாயிறு மற்றையை தமிழ்க் கடைகள் திறக்குமா?

நான் சுவிஸ் வாசி அல்ல.

ஆனால் சுவிஸ் இல் விடுமுறைகளை கழித்த அனுபவத்தில் இதை சொல்கிறேன்.

சுவிஸ் இல் தமிழ் உணவகம் மிகவும் அரிது. துருக்கி உணவகங்கள் ஆங்காங்கே இருக்கிறது.

சுவிஸ் இல் fast food கலாசாரம் அறவே கிடையாது, இது நன்மையான விடயம். ஆயினும் McDonalds ஆங்காங்கே இருக்கிறது.

Take away உணவகண்கள் உண்டு, ஆயினும் புதிதாக வருபர்களிட்கு அறிவது சிரமமானது.

அனுபத்தில் இருந்து, Bern இல் 2 அல்லது 3 தமிழ் கடைகள் உண்டு. Sunday இல் சென்ற பொது திறக்கப்பட்டிருந்தது. 

நீங்கள் அசைவப் பிரியராயின், சுவிஸ் இல் குதிரை இறைச்சி (Horse meat) ஐ  சுவிஸ் வைத்தே சமைத்து (Shallow fry) அல்லது துரித பிரயாணமாயின் உங்கள் வீட்டிற்கு எடுத்து சென்று சமைத்தோ சாப்பிட்டுப் பாருங்கள்.  காற்றுப் புகாவண்ணம் பொன்னிறத்திலான பேக்கிங் இல் இருக்கும். Coop, Migros அல்லது Denner இவற்றில் எதாவது ஒன்றில் குதிரை இறைச்சி வாங்கலாம்.

சுருக்கமாக, சீனாவிற்கு சென்றால் பாம்பின் நடுப் பிடி எனக்கு என்பதே  சுவிஸ் இல் புதிதாக செல்வோருக்கு சொல்லக்கூடியது.

  • கருத்துக்கள உறவுகள்

அட இப்படி ஒரு பயனுள்ள திரியை இன்றுதான் பார்க்கின்றேன் பெரும்பாலும் தினமும் யாழ் களத்துக்கு வந்துபோகும் நான் எப்படி இதை கவனிக்காமல் விட்டேன் என்பது ஆச்சரியம் தகவல்களுக்கு நன்றி 
 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழரசு said:

அட இப்படி ஒரு பயனுள்ள திரியை இன்றுதான் பார்க்கின்றேன் பெரும்பாலும் தினமும் யாழ் களத்துக்கு வந்துபோகும் நான் எப்படி இதை கவனிக்காமல் விட்டேன் என்பது ஆச்சரியம் தகவல்களுக்கு நன்றி 
 

தலைப்பு ...அவ்வளவு கவர்ச்சியாக இல்லாதது தான் ....காரணமாக இருக்கும் என நினைக்கிறேன்!

அட.....வாங்கித் தான் பாருங்களேன்...!

என்று தலைப்பு வைத்திருக்கலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

img_1428.jpg

பாக்கிஸ்தான் மாம்பழத்தைவிட நல்ல மாம்பழம். இங்கே LIDLபல்பொருள் அங்காடியில் வேண்டலாம். விலை 1.69 €வில் இருந்து 2.49 €வரை விற்கும். சுவையானது.  வாங்கிச் சுவைத்து மகிழவும். 

எனது துணைவியார் அள்ளியந்தததை கிளிக்கிப் போட்டிருக்கிறன்.

img_1432.jpg

Edited by nochchi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, nochchi said:

img_1428.jpg

பாக்கிஸ்தான் மாம்பழத்தைவிட நல்ல மாம்பழம். இங்கே LIDLபல்பொருள் அங்காடியில் வேண்டலாம். விலை 1.69 €வில் இருந்து 2.49 €வரை விற்கும். சுவையானது.  வாங்கிச் சுவைத்து மகிழவும். 

எனது துணைவியார் அள்ளியந்தததை கிளிக்கிப் போட்டிருக்கிறன்.

img_1432.jpg

LIDL  எண்ட கடையை நான் ஜேர்மனியிலை கேள்விப்படவேயில்லை...:grin:......மலிஞ்சகடை போலை கிடக்கு..tw_blush:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.