Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மஹிந்தவும் நானும் இணைவோம் ; சம்பந்தன்

Featured Replies

மஹிந்தவும் நானும் இணைவோம்  ; சம்பந்தன்

 

(க.கமலநாதன்)

 

எமது நாட்டில் வாழும் மக்கள் அனைவரும் சம உரிமை கொண்ட ஒரே மக்களாவர் . இந்த நாடு என்றும் பிளவுபடவும் கூடாது. எமது பிரச்சினைகளையும் இலகுவாக தீர்த்துக்கொள்ள முடியும். எனவே அதனை புரிந்துக்கொண்டு  முன்னாள் ஜனாதிபதியும் நானும் இணைந்து ஆட்சிபுரிய வேண்டும் என்று விரும்புகின்றேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

mahina.jpg

தமிழ் வினைச்சொற்கள் விபரித்தல் என்ற தலைப்பில் ஜுலம்பிட்டியே மங்கள தேரரினால் இன்று மேல்மாகாண காலாசார சதுக்கத்தில் இடம்பெற்றது இந்நிழ்வில் விசேட விருந்தினராக கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

20170808141511_IMG_1716.jpg

 

வினைச்சொற்கள் விபரித்தல் என்ற பெயரில் ஜுலம்பிடியே தேரரினால் வெளியிடப்பட்டுள்ள புத்தகம் இந்நாட்டின் தமிழ். சிங்கள மக்களுக்கான உறவுப்பாலமாக அமையும். பெரும்பான்மை சிங்கள மக்களுக்கு தமிழ் சிங்கள மக்களுக்கும் இடையில் இந்த புத்தகம் ஒரு உறவை  ஏற்படுத்தும்.

20170808141641_IMG_1728.jpg

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு யாழ்ப்பாணத்தில் பிக்குமார்கள் பாடசாலைகளுக்கு சென்று சிங்களம் கற்பித்தார்கள். தமிழ் மாணவர்களும் ஆர்வத்துடன் கற்றார்கள். ஆனால் அரசாங்கத்தின் மொழிக்கொள்கை அரசியல் நோக்கத்தின் அடிப்படையில் மாற்றமடைந்த காரணத்தினால் துரதிஷ்ட வசமாக மேற்படி சிங்கள மொழி கற்பிக்கும் செயற்பாடுகள் தடைபட்டு போயின. 

20170808142344_IMG_1767.jpg

வடக்கு கிழக்கில் பல அழிந்த பெளத்த விகாரையில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஒரு காலகட்டத்தில் தமிழ் மக்கள் பெளத்தர்களில் குறிப்பிட்ட சிலர் பெளத்தர்களாகவும்  இருந்தார்கள். அதனால் எம்மத்தியில் ஏற்பட்டுள்ள குரோதங்களை இலகுவாக நாம் நீக்கிகொள்ள முடியும்.

20170808155454_IMG_1877.jpg

இந்த பணியை முன்னாள் ஜனாதிபதியும் மஹிந்த ராஜபக்சவும்  நானும் இணைந்து  நாட்டு மக்களுக்காக நிறைவேற்ற வேண்டும் என்று நான் விரும்புகின்றேன்.  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் என நாட்டிற்கான ஒரு பொதுப்பாதையை கொடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/22886

 

 

 

நானும் சம்பந்தனும் ஒரே மேடையில் அமர்ந்து நல்லிணக்கத்திற்கு முதற்புள்ளி இட்டோம் ; மஹிந்த 

 

 

(க.கமலநாதன்)

யுத்தினை நான் நிறைவு செய்தால்தான் நானும் சம்பந்ததும் ஒரே மேடையில் அமர முடிந்துள்ளதுடன் நல்லிணக்கத்திற்கும் முதற்புள்ளியினை இட்டோம். அதன் பலனாக நாட்டில் இன்று சமதானம் தோன்றியுள்ளது என முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

20170808155454_IMG_1877.jpg

எவ்வாறாயினும் சமாதானத்தை ஏற்படுத்திய எனக்கு இன்று சுதந்திரம் இல்லாமல் போயுள்ளது. 

தமிழ் வினைச்சொற்கள் விபரித்தல் என்ற தலைப்பில் ஜுலம்பிட்டியே மங்கள தேரரினால் நுலொன்று  நேற்று மேல்மாகாண காலாசார சதுக்கத்தில் நூல் ஒன்று வெளியிட்டு வைக்கப்பட்டது. இந்நிழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

mahina.jpg

எமது நாட்டில் இருக்கின்றவர்கள் மொழியை கற்க வேண்டியது மிக அவசியமானதாகின்றது. அப்போதுதான் நாட்டவர்கள் மத்தியில் இருக்கின்ற நம்பிக்கையின்மை மாற்றம் பெரும். நாம் கல்வி கற்ற காலத்தில் தமிழ் மாணவர்களுடனேயே கற்றோம் அப்போது எம்மிடையே வேறுபாடுகள் இருக்கவில்லை.

குறுகிய அரசியல் நோக்கங்களில் செயற்படுகின்றவர்கள் தான் வேறுபாடுகளை ஏற்படுத்த முற்படுகின்றார்கள். எமது ஆட்சி காலத்தில் யுத்தினை நிறைவு செய்த காரணத்தினாலேயே இன்று எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்ததனும் நானும் ஒரே மேடையில் உரையாற்ற முடிந்துள்ளது. அதனால் நாம் யுத்தினை நிறைவு செய்ததால் நல்லிணக்கத்தறிக்கு முதற் புள்ளி வைத்துள்ளோம்.

20170808142344_IMG_1767.jpg

நாம் யுத்தம் செய்தபோதும் தமிழ் மக்களுடன் யுத்தம் செய்யவில்லை. தீவிரவாதிகளுடனேயே யுத்தம் செய்தோம். அதனால் தான் இன்று நாட்டு மக்கள் சகலருக்குமே சுதந்திரம் கிடைத்துள்ளது. ஆனால் எனக்கு சுதந்திம் இல்லாமல் போயுள்ளது.

அவுஸ்திரேலியாவிற்கு நான் சென்றிருந்த போது யுத்தினால் மகனை இழந்தை தந்தை ஒருவர் என்மீது வழக்கு தொடுத்தார். இங்கிலாந்து சென்றிருந்த போது அங்கு என்னுடன் வந்தவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது. அதேபோல் நான் அமெரிக்கா சென்றிருந்த போதும் அவ்வாறான செயற்பாடுகள் தானம் இடம்பெற்றன என அவர் மேலும் தெரிவித்தார்.

http://www.virakesari.lk/article/22888

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே ஒன்றுக்குள் ஐக்கியமானவர்கள் தானே நீங்கள் ஐயா
இன்னுமா .....

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் நினைத்துக்கொள்வான்

இப்படி ஒரு மறதிக்கூட்டமான இனம் உலகில் இருக்குமா  என..

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பாடு ஒன்று பட்டியை விட்டு தானாகவே வேலிபாய்ந்து வெளியே வெளிச்சத்துக்கு வந்துவிட்டது :cool:

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதாவது தெரிந்து கொள்ள வேண்டும் எதிரி யார் என துரோகி யார் என  கண்ணுக்கு தெரிந்த எதிரிகளைவிட கண்ணுக்கு புலப்படாத எதிரிகளே அதிகம் தமிழ் மக்களுக்கு இதில் வேடிக்கை தமிழர்களால்   தேர்ந்தெடுக்கப்பட்டு மிக நம்பிக்கைக்குரியவர்களே எதிரியாகிறார்கள் 

அதை விடுத்து நாம் இன்னொருவனை குற்றம் சாட்டுகிறோம் எதிரி எனவும் துரோகி எனவும் 

Edited by தனி ஒருவன்

  • தொடங்கியவர்

நாட்டை பிளவுபட ஒருபோதும் அனுமதியோம்: மஹிந்த முன்னிலையில் சம்பந்தன் திட்டவட்டம்

  • கருத்துக்கள உறவுகள்

சப்பா.. முடியல்ல. இத்தனை ஆயிரம் செல்லும்.. பொம்பர் குண்டுகளும் விழுந்த இடத்தில்.. ஒன்று உந்த மண்டையில் விழவில்லையே என்ற திமிர் தான் இப்படி எல்லாம் சிலரைப் பேச வைக்குது. :rolleyes:tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பையும் வினைச்சொல் ஆக்கி விட்டார் சம்பந்தர் ஐயா.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

மஹிந்தவும் நானும் இணைவோம்  ; சம்பந்தன்

நானும் சம்பந்தனும் ஒரே மேடையில் அமர்ந்து நல்லிணக்கத்திற்கு முதற்புள்ளி இட்டோம் ; மஹிந்த.....

எமது முன்னைய தமிழ்த்தலைமைகள் விட்ட தவறுகளில் சம்பந்தனும் ஒன்று...tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, விசுகு said:

சிங்களவன் நினைத்துக்கொள்வான்

இப்படி ஒரு மறதிக்கூட்டமான இனம் உலகில் இருக்குமா  என..

இயக்கங்கள் தோன்ற முன்பே 70களில் தமிழர்களின் உயர்கல்விக்கு வேட்டுவைப்பதற்காக தரப்படுத்தலைக் கொண்டு வந்தது சிங்களம்.   57ளில் எங்கள் சகோதர சகோதரிகளைக் கொன்று குவித்தது சிங்களம். தமிழர் பகுதியில் திட்டமிட்டு சிங்களக் குடியேற்றம் செய்தது சிங்களம். ஆனால் கேடு கெட்ட மானம் கெட்ட ஈனப்பிறவிகளான எங்கட தமிழர்களில் பெரும்பான்மையானவர்கள் தங்கட சுயநலத்திற்காக சிங்களத்துக்கு ஆதரவு தருகிறார்கள்.நான் பெரியவன்  ,நீ பெரியவன் என்று போட்டி போட்டு ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுத்து தான் மட்டும் மகிழ்ச்சியாக இருந்தால் காணும் என்று சுயநலமாக வாழ்கிறான் தமிழன்.  சிங்களத்தீவிற்கு அடிக்கடி சுற்றுலா சென்று , அங்கு பாலும் தேனும் ஓடுது ,  மகிந்தா மாமாவும், மைத்திரி சித்தப்பாவும், சந்திரிக்கா பாட்டியும் ,ரணில் பெரியப்பாவும் அங்கை எங்கட சனத்தை நல்லாய் வைத்திருக்கிறார்கள் என்று மகிழ்ச்சியடைகிறார்கள்..  இலண்டனிலும் , சிட்னியிலும் சிங்கள துடுப்பாட்ட அணி வரும்போது வாளை ஏந்திய சிங்கத்தின் உருவத்தைப் பொருத்திய உடையினை அணிந்து சிங்கள தேசியக் கொடி பிடித்து , சிங்களநாட்டின் தேசிய கீதத்தினை பாடி , தற்பொழுது சிங்கள அரசுளில் மந்திரிகளாக இருக்கிற ரணதுங்காவையும், ஜெயசூரியாவையும் கடவுளாக நினைத்து  வாழுகிற இனம் தான் எங்கட இனம்.  அவனுக்கு எங்கட சகோதரிகளான கிருசாந்தி, இசைப்பிரியாவுக்கு நடந்த் கொடுமைகளைவிட  ஜெயவர்த்தனா, சங்கக்காரா போன்றவர்கள் சதம் அடிக்கத்தவறியதுதான் கவலை.

  • தொடங்கியவர்

மகிந்­த­வு­டன் சேர்ந்து பணி­யாற்ற சம்­பந்­தன் விருப்பம் தெரி­விப்பு

பிக்­கு­வின் நூல் வெளி­யீட்டு விழா­வில் உரை

 
மகிந்­த­வு­டன் சேர்ந்து பணி­யாற்ற சம்­பந்­தன் விருப்பம் தெரி­விப்பு
 

நாட்­டில் வாழும் ஏனைய மக்­க­ளும் இந்த நாட்டுக்கு உரித்­து­டைய மக்­கள். இந்த நாடு அவர்­கள் அனை­வ­ருக்­கும் சொந்­த­மா­னது என்று நினைத்து ஆட்சி நடத்­தி­னால் நிலமை வேறு­வி­த­மாக அமை­யும்.

இந்­தப் பணியை முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வும் நானும் இணைந்து நாட்டு மக்­க­ளுக்­காக நிறை­வேற்ற வேண்­டும் என்று விரும்­பு­கின்­றேன்.

இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார்.
தமிழ் வினைச்­சொற்­களை விவ­ரித்­தல் என்ற தலைப்­பில் ஜுலம்­பிட்­டியே மங்­கள தேர­ரி­னால் எழு­தப்­பட்ட புத்­த­கம் மேல்­மா­காண காலா­சார சதுக்­கத்­தில் நேற்று வெளி­யி­டப்­பட்­டது.

இந்த நிழ்­வில் முதன்மை விருந்­தி­ன­ராக கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:
வினைச்­சொற்­கள் விவ­ரித்­தல் என்ற பெய­ரில் தேர­ரி­னால் வெளி­யி­டப்­பட்­டுள்ள புத்­த­கம் தமிழ். சிங்­கள மக்­க­ளுக்­கான உற­வுப்­பா­ல­மாக அமை­யும். பெரும்­பான்மை சிங்­கள மக்­க­ளுக்­கும் தமிழ் மக்­க­ளுக்­கும் இடை­யில் இந்­தப் புத்­த­கம் ஓர் உறவை ஏற்­ப­டுத்­தும்.

நாடு சுதந்­தி­ரம் அடைந்த பின்­னர் யாழ்ப்­பா­ணத்­தில் பிக்­கு­மார்­கள் பாட­சா­லை­க­ளுக்கு சென்று சிங்­க­ளம் கற்­பித்­தார்­கள். தமிழ் மாண­வர்­க­ளும் ஆர்­வத்­து­டன் கற்­றார்­கள். ஆனால் அர­சின் மொழிக்­கொள்கை அர­சி­யல் நோக்­கத்­தின் அடிப்­ப­டை­யில் மாற்­ற­ம­டைந்த கார­ணத்­தி­னால் துன்­பி­யல் நிகழ்­வாக சிங்­கள மொழி கற்­பிக்­கும் செயற்­பா­டு­கள் தடைப்­பட்டு போயின.

அந்த திட­மான முயற்சி முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தால் தமி­ழர்­கள் சிங்­க­ளத்­தை­யும் சிங்­க­ள­வர்­கள் தமி­ழை­யும் கற்­றி­ருப்­பார்­கள். அந்த நிலை தொடர்ந்­தி­ருந்­தால் இந்த நாட்­டில் ஏற்­பட்ட பல பிரச்­சி­னை­கள் இடம்­பெற்­றி­ருக்­கா­மல் போயி­ருக்­கும். அது நடை­பெ­ற­வில்லை.

வடக்கு கிழக்­கில் பல அழிந்த பௌத்த விகா­ரை­க­ளில் தமிழ் எழுத்­துக்­கள் பொறிக்­கப்­பட்­டுள்­ளன. ஒரு கால­கட்­டத்­தில் தமிழ் பௌத்­தர்­கள் இருந்­தார்­கள். எனவே பௌத்­தம் இரு­வ­ருக்­கும் பொது­வா­னது.

அப்­ப­டி­யி­ருந்­தால் எம்­மத்­தி­யில் ஏற்­பட்­டுள்ள குரோ­தங்­களை இல­கு­வாக நாம் நீக்­கி­கொள்ள முடி­யும். நாம் அனை­வ­ரும் ஒரே நாட்டு மக்­கள். இந்த நாட்­டின் எதிர்­கா­லம் ஒற்­று­மை­யி­லேயே தங்­கி­யுள்­ளது. சிங்­கப்­பூர் போன்ற நாடு­கள் எமது நாட்டை முன்­னு­தா­ர­ன­மாக கொண்­டு­தான் வளர்ச்­சி­பெற்­றன.

இன்று சிங்­கப்­பூர் எங்­குள்­ளது நாம் எங்கே உள்­ளோம். சிங்­கப்­பூர் மக்­கள் நாளாந்­தம் எமது நாட்­டினை விட­வும் 50 வீதம் அதி­க­மாக உழைக்­கின்­றார்­கள். இவ்­வி­த­மான பின்­ன­ணி­க­ளுக்கு எமது கொள்­கை­களே கார­ண­மா­கும். கொள்­கை­க­ளில் மாற்­றம் செய்­ய­வேண்­டும்.

இந்த நாட்­டில் வாழும் ஏனைய மக்­க­ளும் இந்த நாட்­டிற்கு உரித்­து­டைய மக்­கள். இந்த நாடு அவர்­கள் அனை­வ­ருக்­கும் சொந்­த­மா­னது என்று ஆட்­சி­ந­டத்­தி­னால் நிலமை வேறு­வி­த­மாக அமை­யும்.

இந்­தப் பணியை முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வும் நானும் இணைந்து நாட்டு மக்­க­ளுக்­காக நிறை­வேற்ற வேண்­டும் என்று விரும்­பு­கின்­றேன். அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மற்­றும் முஸ்­லிம் அர­சி­யல் தலை­வர்­கள் என்று நாட்­டிற்­கான ஒரு பொதுப்­பா­தையை கொடுக்க வேண்­டும்.

நாட்டு மக்­கள் மதிப்­பு­டன் சமத்­து­வ­ட­னும் சம உரி­மை­க­ளு­ட­னும் வாழ வேண்­டி­யது அவ­சி­ய­மா­கும். இந்த நாடு பிரி­ப­டக்­கூ­டாது. இந்த நாடு ஒரு­மித்த ஒற்­று­மை­யான ஒரே நாடாக எப்­பொ­ழு­தும் இருக்க வேண்­டும். இந்த நாட்­டிற்கு எவ்­வி­த­மான குந்­த­க­மும் ஏற்­ப­ட­வும்­கூ­டாது.

இத­னைப் பிரிப்­ப­தற்கு நாங்­கள் எல்­லோ­ருமே எதிர்ப்­பு­தான். அத­னால் பிரி­வினை வாதம் ஏற்­ப­டு­வதை நாங்­கள் எதிர்­கின்­றோம். நாம் ஒற்­று­மை­யாக ஒரு­மித்து நாட்டை கட்­டி­யெ­ழுப்ப வேண்­டும் – -என்­றார்.

நிகழ்­வில் உரை­யாற்­றிய மகிந்த ராஜ­பக்ச தெரி­வித்­த­தா­வது,
எமது பாட­சா­லைக் காலத்­தில் சிங்­கள – தமிழ் மாண­வர்­கள் ஒன்­றா­கக் கல்வி கற்­கும் சூழல் இருந்­தது. குறு­கிய அர­சி­யல் நோக்­கத்தை கொண்­ட­வர்­கள், இந்த ஒற்­று­மையை – அன்­னி­யோன்­யத்தை கெடுத்­து­விட்­டார்­கள்.

போர் என்­னால் முடி­வுக்கு கொண்டு வரப்­பட்­ட­தால்­தான், சம்­பந்­தன் இன்று என்­னு­டன் ஒரே மேடை­யில் இருக்­கின்­றார்த போர் முடி­வுக்கு வந்­த­தும் நல்­லி­ணக்­கம் கட்­டி­யெ­ழுப்­பப்­பட்­டது.

போர் நடந்­த­போது அதனை ஏற்­ப­டுத்த முடி­யாது. இன்று நல்­லி­ணக்­கம் என்ற பெய­ரில் நாட்­டைப் பிரிக்க ஏற்­பாடு நடக்­கின்­றது. நாட்டை இணைப்­ப­தற்­கான முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

சிறு­பான்­மை­யி­னர், பெரும்­பான்­மை­யி­னர் என்று பிரிப்­ப­தற்கு நான் விரும்­ப­வில்லை. நாங்­கள் ஒரே நாட்­டைச் சேர்ந்­த­வர்­கள். எம்­மி­டையே கோபம், பிரி­வி­னை­வா­தம், வைராக்­கி­யம் என்­ப­வற்றை ஏற்­ப­டுத்த முனைந்­தால் அது அர­சி­யல் நோக்­கத்­திற்­கா­கவே அன்றி மக்­க­ளின் தேவைக்­காக அல்ல.

நாங்­கள் தமிழ் மக்­க­ளுக்கு எதி­ரா­கப் போர் செய்­ய­வில்லை. கொடூர பயங்­க­ர­வா­தத்­திற்கு எதி­ராக 30 வரு­டம் போர் புரிந்­தோம். மூன்று வரு­டங்­க­ளிற்­குள் போரை நிறை­வுக்கு கொண்­டு­வந்­தோம்.

இன்று அதன் பிர­தி­ப­ல­னாக சுதந்­தி­ர­மான சுற்­றித்­தி­ரி­யும் சந்­தர்ப்­பம் ஏற்­பட்­டுள்­ளது. எனக்கு அவ்­வாறு செல்ல முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது.

மேற்­கு­லக நாடு­க­ளுக்கு நான் சென்­றால் வெவ்­வேறு விட­யங்­க­ளுக்­காக என்னை நீதி­மன்­றத்­திற்கு கொண்­டு­செல்ல முயற்­சிக்­கின்­ற­னர். நான் அரச தலை­வ­ராக இருந்­த­கா­லத்­தில் பொது­ந­ல­வாய மாநாட்­டுக்­குச் சென்­ற­போது ஆஸ்­தி­ரே­லி­யா­வில் தங்­க­ளது உற­வு­களை இழந்­த­வர்­கள் இணைந்து எனக்­கெ­தி­ராக முறைப்­பாடு செய்து கைது செய்­வ­தற்கு முயற்­சித்­த­னர்.

நான் பிரிட்­டன் சென்­ற­போது எனது அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக வழக்கு தாக்­கல் செய்ய முயற்­சிக்­கப்­பட்­டது. நான் அமெ­ரிக்­கா­வுக்கு சென்­ற­போது எனக்­கெ­தி­ராக நீதி­மன்­றம் சென்­றார்­கள். இது­கு­றித்து நாங்­கள் அப்­போது பெரி­தாக பேச­வில்லை – என்­றார்.

http://newuthayan.com/story/17604.html

  • கருத்துக்கள உறவுகள்

விஜயனும்...குவேனியும் போல இணைந்து வாழ வாழ்த்துக்கள்!

 

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரியின்  நட்பு கசந்து போச்சோ,  தட்ஷணை குறைஞ்சு போச்சுதோ. இப்பிடி போய் உரசுறார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, satan said:

மைத்திரியின்  நட்பு கசந்து போச்சோ,  தட்ஷணை குறைஞ்சு போச்சுதோ. இப்பிடி போய் உரசுறார்.

சம்பந்தம் இன்னும் ஆரோடை உரசுப்படேல்லையெண்டு சொல்லுங்கோ பாப்பம்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.