Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடற்படைத் தளபதியாக தமிழர் நியமனம்

Featured Replies

கடற்படைத் தளபதியாக தமிழர் நியமனம்

கடற்படைத் தளபதியாக தமிழர் நியமனம்
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

இலங்கையின் கடற்படை தளபதியாக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடற்படையின் புதிய தளபதியாக ரியல் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னையா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் சற்று முன்னர் இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடற்படையின் 21ஆவது தளபதியாக ரியட் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், கடற்படையின் தற்போது தளபதியாக பதவி வகிக்கும் வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன பாதுகாப்பு படைகளின் பிரதானியாக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://newuthayan.com/story/20325.html

  • தொடங்கியவர்
புதிய கடற்படைத் தளபதி
 

image_916c3b4194.jpgஇலங்கை கடற்படையின் 21ஆவது கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை, இன்று (18) பெற்றுக்கொண்டார்.

1982ஆம் ஆண்டு இலங்கை கடற்படையில் இணைந்த ட்ரவிஸ் சின்னையா, வீர விக்ரம விபூஷ, ரணவிக்ரம, ரணசூர (மூன்று முறை) மற்றும் உத்தம சேவா ஆகிய விருதுகளைப் பெற்ற கடற்படையின் சிரேஷ்ட அதிகாரியாவார்.

புதிய கடற்படைத் தளபதியின் சேவைக் காலம் இம்மாதம் 22ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும். இந்த நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்யரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ ஆகியோரும் பிரசன்னமாகியிருந்தனர்.

image_ce5ca76bda.jpgimage_0a405d5aef.jpg

 

http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/புதிய-கடற்படைத்-தளபதி/46-202492

சொறிலங்காவின் ஊழியராக இவர் இருப்பதால் தமிழ் மக்களுக்கு எந்த பிரயோசனமும் இல்லை!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சின்னையாவுக்கு வாழ்த்துக்கள். ஏனெண்டால் தமிழன்ரை பெயர் எங்கை வந்தாலும் வாழ்த்திறது முக்கியம்.:grin:

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

சின்னையாவுக்கு வாழ்த்துக்கள். ஏனெண்டால் தமிழன்ரை பெயர் எங்கை வந்தாலும் வாழ்த்திறது முக்கியம்.:grin:

மகிழ்ச்சி ஐயா!

 

image.jpg

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி இப்படியும் வெளியிடப்பட்டுள்ளது.. உண்மைதானே? :unsure:

 

புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் முக்கியப் பங்கு வகித்த தமிழர்.. இலங்கை கடற்படை தலைமைத் தளபதியானார்!

கொழும்பு: இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக தமிழரான ட்ரெவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை கடற்படையின் தற்போதைய தளபதி ரவீந்த்ர விஜேகுணரத்ன பாதுகாப்பு படைகளின் தலைவராக நியமிக்கப்படுகிறார். இதையடுத்து ட்ரெவிஸ் சின்னையா புதிய கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். கண்டியைச் சேர்ந்த ட்ரெவிஸ் ஜெரமி லியான்ந்துரு சின்னையா கண்டியில் கல்வி கற்றார். பின்னர் இலங்கை கடற்படையின் திருகோணமலை கல்லூரியில் கடற்படை அதிகாரிக்கான படிப்படை நிறைவு செய்தார். இங்கிலாந்தில் கடற்படை அதிகாரிகளுக்கான சிறப்பு பயிற்சியை ட்ரெவிஸ் சின்னையா நிறைவு செய்தார். தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தில் நடத்தப்பட்ட கடற்படை தாக்குதல்களில் ட்ரெவிஸ் சின்னையா முக்கிய பங்கு வகித்தவர். ஆனால் இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சேவால் ஓரம்கட்டப்பட்டிருந்தார் ட்ரெவிஸ் சின்னையா. 2016-ல் கிழக்கு மாகாண கட்ற்படை தளபதியாகவும் பணியாற்றி வந்தார் ட்ரெவிஸ் சின்னையா என்பது குறிப்பிடத்தக்கது.

Read more at: http://tamil.oneindia.com/news/srilanka/travis-sinniah-apponts-as-srilanka-s-new-navy-commander-293112.html

தற்ஸ்தமிழ்

Edited by நிழலி
செய்தியை முழுமையாக இணைக்க

  • தொடங்கியவர்

இலங்கை கடற்படையின் தளபதியாக 47 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழர் நியமனம்

இலங்கையின் புதிய கடற்படைத் தளபதியாக வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் ஜெரோமி லியன்துரு சின்னையா ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார். 1970 ஆம் ஆண்டுக்குப் பிறகு தமிழர் ஒருவர் இப்பதவிக்கு வருவது இதுவே முதல் முறை.

புதிய கடற்படை தளபதியான வைஸ் அட்மிரல் சின்னையா

இலங்கை கடற்படையின் 21-வது தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள இவர் இன்று, வெள்ளிக்கிழமை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமிருந்து நியமனக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டார்.

ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் வைத்து தனது நியமனக் கடிதத்தை அவர் பெற்றுக் கொண்டார்.

1982-ஆம் ஆண்டு இலங்கை கடற்படையில் இணைந்த ட்ரவிஸ் ஜெரோமி லியன்துரு சின்னையா, வீர விக்ரம விபூஷ, ரணவிக்ரம, ரணசூர உத்தம சேவா ஆகிய விருதுகளைப் பெற்ற கடற்படையின் மூத்த அதிகாரியாவார்.

புதிய கடற்படைத் தளபதியின் சேவைக் காலம் இம்மாதம் 22-ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருவதாக ஜனாதிபதி செயலக ஊடகப் பிரிவு கூறுகின்றது.

இலங்கையில் கடந்த 47 ஆண்டுகளில், முப்படையொன்றின் தளபதியாக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு முன்னதாக, நவம்பர் 16,1960 தொடக்கம் ஜூலை 30, 1970 வரை ரியர் அட்மிரல் ராஜநாதன் கதிர்காமர் கடற்படைத் தளபதியாக பதவி வகித்துள்ளார். இலங்கை கடற்படைக்கு நீண்டகாலம் தளபதியாக இருந்தவரும் அவரே.

அதன் பின்னர் இலங்கை தமிழரொருவருக்கு முப்படையொன்றில் கிடைத்த அதி உச்ச பதவியாகவே புதிய கடற்படை தளபதியின் நியமனம் கருதப்படுகின்றது.

அதற்கு முன்னதாக, பிப்ரவரி 9, 1955 முதல் டிசம்பர் 31, 1959 வரை தமிழரான மேஜர் ஜெனரல் ஏ.எம்.முத்துக்குமாரு இலங்கை ராணுவத்தின் தளபதியாகப் பதவி வகித்துள்ளார்.

தற்போது கடற்படை தளபதி பதவியிலுள்ள வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன இம்மாதம் 22-ஆம் திகதி சேவையிலிருந்து ஓய்வு பெறுகின்றார். அதன் பின்னர், பாதுகாப்பு படைகளின் பிரதானியாக அவர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

http://www.bbc.com/tamil/sri-lanka-40972979

  • கருத்துக்கள உறவுகள்

இதில் என்ன பெருமை கொள்ள இருக்கிறது ......? மாறாக சிங்களவன் இதையும் அரசியல் செய்ய உதவியாக இருப்பார் கண்டி சின்னையா அதாவது ஸ்ரீலங்காவின் முப்படைகளின் ஒன்றான கடற்படையில் உயர்பதவியில் ஓர் தமிழர் இருக்கின்றார் எமக்குள் எந்த பாகுபாடும் இல்லை என்பது போல் சர்வதேசத்துக்கு காட்ட உதவுவார் இந்த  கண்டி டமிலர் சின்னையா. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழரசு said:

இதில் என்ன பெருமை கொள்ள இருக்கிறது ......? மாறாக சிங்களவன் இதையும் அரசியல் செய்ய உதவியாக இருப்பார் கண்டி சின்னையா அதாவது ஸ்ரீலங்காவின் முப்படைகளின் ஒன்றான கடற்படையில் உயர்பதவியில் ஓர் தமிழர் இருக்கின்றார் எமக்குள் எந்த பாகுபாடும் இல்லை என்பது போல் சர்வதேசத்துக்கு காட்ட உதவுவார் இந்த  கண்டி டமிலர் சின்னையா. 

தற்போது முப்படையிலும் தமிழர்கள் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள் அண்ணை  கடற்படை முகாமுக்கு  வேலைக்கு சென்றவர் தற்போது ஒரு கடற்படை சிப்பாயாகவும் ஒரு வர் அதிலும் கூடிய பதவி ஒன்றிலும் பதவி வகித்து வருகிறார்கள் 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தனி ஒருவன் said:

தற்போது முப்படையிலும் தமிழர்கள் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள் அண்ணை  கடற்படை முகாமுக்கு  வேலைக்கு சென்றவர் தற்போது ஒரு கடற்படை சிப்பாயாகவும் ஒரு வர் அதிலும் கூடிய பதவி ஒன்றிலும் பதவி வகித்து வருகிறார்கள் 

தமிழர்களை முக்கிய பதவிகளில் வைத்திருந்தால் தான் அனைத்தையும் சாதிக்க முடியும் என்பது சிங்களத்திற்கு நன்றாகவே தெரியும்.

இது...

சேர்.பொன் இராமநாதனை குதிரை வண்டிலிலை வைச்சு டட்லி இழுக்கேக்கையே எனக்கு தெரியும். :cool:

 

சிங்கள-பௌத்த கடற்படை பயங்கரவாதிகள் பல படுகொலைகளை செய்த காலத்தில், சட்டவிரோத கடத்தல்களை செய்த காலத்தில் பெரும் பொறுப்பில் இருந்த ஒருவர் இவர். இவரும் ஒரு போர்க்குற்றவாளி. தமிழர் என்ற வகையில் டக்ளஸ், கருணா வரிசையில் இவரும் ஒருவர்.

  • கருத்துக்கள உறவுகள்

அட்மிரல் சின்னய்யாவும் சிறுபான்மைத் தமிழர்களும்

ஸ்ரீலங்காவின் 21ஆவது கடற்படைத் தளபதியாக கிழக்குப் பிராந்திய கடற்படைத் தளபதியாக செயற்பட்ட அட்மிரல் சின்னய்யா நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த காலத்தில், அதாவது மகிந்த ராஜபக்சவின் காலத்தில் சின்னய்யா அரசியல் ரீதியாகப் பழிவாங்கப்பட்டார் என்றும் தற்போது அவருக்கு இலங்கையின் கடற்படைத் தளபதி பதவி வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. தமிழர் ஒருவர் கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டமை கவனத்தை ஈர்க்கும் ஒரு நிகழ்வு என்பதுடன் அதன் பின்னால் உள்ள நுண் அரசியல்கள் குறித்த உரையாடல்களும் வலுப்பெற்றுள்ளன.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக் காலத்தில் முதலில் தமிழர் ஒருவர் பிரமத நீதியரசராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் மத்திய வங்கியின் ஆளுநராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டார். தற்போது கடற்படைத் தளபதியாக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழர் ஒருவர் பிரதம நீதியரசராக இருந்த காலத்தில், தமது நிலத்திற்காகவும் தமது உறவுகளின் விடுதலைக்காகவும் இனப்படுகொலைக்கான நீதிக்காகவும் ஈழத் தமிழ் மக்கள் போராடினார்கள். தமிழ் மக்களுக்கு நீதி கிடைத்தா? இல்லை.

மாறாக இத்தகைய நியமனங்கள் தமிழ் மக்களுக்கான நீதியை மறுக்கவும் தமிழ் மக்களின் உரிமையை மறுக்கவுமே மேற்கொள்ளப்படுகின்றன. இலங்கையின் எதிர்கட்சித் தலைவராக தமிழர் ஒருவர் பதவி வகிக்கிறார். தமிழ் மக்களின் இன்றைய பிரச்சினைகள் தொடர்பில் என்ன மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் ஒரு முன்னேற்றமும் இல்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரம், காணி விடுவிப்பு விகாரங்கள் தீர்க்கப்பட்டனவா? நீதி விசாரணை முடக்கப்பட்ட நிலையில் உள்ளது.

இலங்கையில் ஆட்சி புரியும் அரசு, காலம் காலமாக பதவிகளில் தமிழர்களை இருத்துகின்றபோது, தமது அரசுக்குச் சார்பாகவும், தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகவுமே செயற்படும் நபர்களை தேர்வு செய்கின்றது. சந்திரிக்காவின் ஆட்சிக் காலத்தில் லக்ஷ்மன் கதிர்காமர் தெரிவு செய்யப்பட்டமைக்கு ஒப்பான நிகழ்வுகளே இடம்பெற்றுள்ளன. இதனால் தமிழ் மக்கள் எதிர்கொண்ட நெருக்கடிகளும் அவர்களின் போராட்டத்தில் ஏற்பட்ட தாக்கங்களும் அதிகமானவை.

சிங்களப் பேரினவாத ஆதிக்க மனப்போக்கிற்கு ஒத்துழைக்கும் மனம் கொண்டவர்கள்தான் ஸ்ரீலங்காவில் பதவிகளுக்கு நியமிக்கப்படுவார்கள் என்பதும், அதனால் தமிழ் மக்களுக்கு பாதிப்பே தவிர, எந்த நன்மையும் கிட்டியதில்லை என்பதற்கு இப்படிப் பல நிகழ்வுகள் உதாரணமாகின்றன. அட்மிரல் சின்னய்யா விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின்போது கடுமையாகப் பணியாற்றியவராம். தமிழ் மக்களுக்கு எதிராக கட்டமைக்கப்பட்ட இலங்கை இராணுவக் கட்டமைப்பை பாதுகாக்கும் நபர் என்தனாலேயே அவருக்கு இந்தப் பதவி வழங்கப்படுகின்றது என்பது வெளிப்படையானது.

மகிந்த ராஜபக்ச, யுத்தம் முடிந்த நாட்களில் தமிழ் இளைஞர் யுவதிகளை இராணுவத்தில் சேர்க்கும் நடவடிக்கையில் இறங்கினார். வறிய குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர் யுவதிகள் இதில் இணைக்கப்பட்டனர். இவர்கள் இராணுவப் பண்ணைகளிலும் இராணுவ முகாங்களிலும் கூலிகளாக வேலை பார்த்து வருகின்றனர். எதற்காக தமிழ் இளைஞர் யுவதிகள் இவ்வாறு நடாத்தப்படுகிறார்கள் என்பது குறித்து விளக்கம் ஏதும் தேவையில்லை. அதைப்போல தமிழர் ஒருவருக்கு இராணுவப் பதவி ஒன்றை வழங்கிழயுள்ளதாக இலங்கை அரசு காட்டிக் கொள்ள முடியற்சிக்கலாம்.

இலங்கை அரசு, அதன் இராணுவ எந்திரத்தைக் கொண்டு, ஈழத் தமிழ் மக்கள்மீது இனப்புடுகொலை புரிந்தது, காணாமல் ஆக்கியது, அதற்கான நீதி முன்வைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தும் இக் கால கட்டத்தில் இதுபோன்ற தந்திரோபாயங்களில் இவ் அரசு ஈடுபடுகின்றது. தமிழர் ஒருவருக்கு கடற்படை தளபதி பதவி வழங்கப்பட்டதை எதிர்த்து மகிந்த ராஜபக்ச அணியும் அரசியல் செய்யக்கூடும். இங்கு பிரச்சினை தமிழரோ, சிங்களவரோ என்பதல்ல, பௌத்த சிங்களப் பேரினவாத - சிறுபான்மையினரை ஒடுக்கும் மனநிலை கொண்ட அரசியல் இராணுவக் கட்டமைப்பே பிரச்சினைக்குரியது. ஆனால் அக்கட்டமைப்பை பலப்படுத்தும் செயல்களே தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.

தெருக்களில் குந்தியிருந்து, பிள்ளைகளுக்காகவும் பிள்ளைகளின் நீதிக்காகவும் நிலத்திற்காகவும் ஈழத் தமிழ் மக்கள் போராடுகின்றனர். ஈழத் தமிழ் மக்கள் விடயத்தில் பாரா முகமாகவும் கள்ள மௌனத்துடனும் காலம் கடத்துகின்றது இலங்கை அரசாங்கம். தமிழ் மக்கள் ஸ்ரீலங்கா அரசின் உயர் பதவிகளைக் கோரி போராடவில்லை. அவர்கள் தமது நிலத்தையும் அதன் உரி்மையையும் கோரியே போராடுகின்றனர் என்பதை இவ் அரசு புரிந்துகொள்ள வேண்டும்.

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

http://globaltamilnews.net/archives/37321

Image may contain: 3 people, people standing
 
 
LikeShow more reactions
CommentShare
 
 
  • கருத்துக்கள உறவுகள்

உயர் பதவியை குடுத்து அள்ளிக் கொண்ட இந்த தமிழன் மூலம் தமிழருக்கு தேவையான உரிமைகளை தன் சுய அறிவோடு, தன் அதிகாரத்திற்க்குட்பட்டட நிலையில் பெற்று தருவார் என நம்புவோமாக...

ட்ரெவிஸ் சின்னைனைய்யா தன் பிள்ளை குட்டிகளோடு சீரும் சிறப்புமாக நலமோடு வாழ எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

இதிலென்ன புதுமை.எத்தனையோ தமிழ் பெயருடைய நபர்களுக்கு யாழ்ப்பாணம் மட்டக்களப்பு என்ன நிறம் அது எங்கை இருக்குது என்டு ம் தெரியாது.இதில் எங்ளில் பலரின் உறவுகளும் அடக்கம்.:unsure:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மியாவ் said:

உயர் பதவியை குடுத்து அள்ளிக் கொண்ட இந்த தமிழன் மூலம் தமிழருக்கு தேவையான உரிமைகளை தன் சுய அறிவோடு, தன் அதிகாரத்திற்க்குட்பட்டட நிலையில் பெற்று தருவார் என நம்புவோமாக...

ட்ரெவிஸ் சின்னைனைய்யா தன் பிள்ளை குட்டிகளோடு சீரும் சிறப்புமாக நலமோடு வாழ எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்...

தமிழினத்தின் பட்டறிவிலாகட்டும் வரலாற்றிலாகட்டும் சிங்கள அரசினது உயர்பதவிகளில் அமர்ந்த எவரும் தமது இனம் நிலம் குறித்து எண்ணியதோ ஏற்றம் பெறவைக்க முயன்றதோ கிடையாது.  பொன்.இராமநாதன் முதல் இன்றைய எதிர்க்கட்சித்தலைவர் வரை தொடர்கிறது. இவர்களோடு இன்னொருவர் இணைகிறார் அவளவே . ட்ரவிஸ் ஜெரோமி லியன்துரு சின்னையா என்ற சிங்களத் தமிழரான  இவருக்குக் கொடுக்கப்பட்டுள்ள   எவீர விக்ரம விபூஷ, ரணவிக்ரம,ரணசூர உத்தம சேவா  ஆகியவிருதுகளே  தமிழின அழிப்புக்கு எப்படி உதவியிருப்பாரென்தைப் புலப்படுத்துகின்றது.

  • தொடங்கியவர்

கடமைகளைப் பொறுப்பேற்கின்றார் புதிய கடற்படைத் தளபதியான தமிழன்

 
கடமைகளைப் பொறுப்பேற்கின்றார் புதிய கடற்படைத் தளபதியான தமிழன்
 Share
  •  
  •  
  •  
  •  
  •  

இலங்கை கடற்படையின் 21ஆவது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட தமிழரான ரியர் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னையா இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

கடற்படை தலைமையகத்தில் இன்று காலை தமது கடமைகளை சம்பிரதாயபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.

இதன்போது, கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, புதிய கடற்படைத் தளபதிக்கு பாரம்பரியமாக கடற்படைத் தளபதியின் வாள் மற்றும் கடமைகளை சமர்ப்பித்துள்ளார்.

குறித்த நிகழ்வுக்காக ரியர் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னையாவின் மனைவி திருனி, கடற்படை கட்டளைகளின் தளபதிகள், மற்றும் கடற்படையின் மூத்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இலங்கையில் இடம்பெற்ற மூன்று தசாப்த கால போருக்குப் பின்னர் முதன்முறையாக இலங்கையின் முப்படைகளில் ஒன்றான கடற்படைக்கு தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

இலங்கை கடற்படையின் கிழக்கு பிராந்திய கட்டளைத் தளபதியாக ரியர் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னையா கடமையாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://newuthayan.com/story/21798.html

  • கருத்துக்கள உறவுகள்

இப்படித்தான் முத்தையா முரளியையும் பப்பாவில் ஏத்தி வைத்து இருந்தவை கடைசியில்அவருக்கு நடந்தது உலகம் அறியும் .

On 8/19/2017 at 5:44 PM, மியாவ் said:

உயர் பதவியை குடுத்து அள்ளிக் கொண்ட இந்த தமிழன் மூலம் தமிழருக்கு தேவையான உரிமைகளை தன் சுய அறிவோடு, தன் அதிகாரத்திற்க்குட்பட்டட நிலையில் பெற்று தருவார் என நம்புவோமாக...

 

இன்னுமா நம்புகிறீர்கள் நம்புங்க ..............................நம்புங்க 

  • தொடங்கியவர்

தளபதி சின்னையாவுக்கு பின்னாலுள்ள அரசியல்!

625.500.560.350.160.300.053.800.900.160.
 

47ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கைக் கடற்படையின் தளபதியாக தமிழரான வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா நியமிக்கப்பட்டதும் சர்வதேச ஊடகங்கள் அதற்கு அதிகளவில் முக்கியத்துவம் அளித்திருந்தன.

இலங்கையின் கடந்த அரை நூற்றாண்டு வரலாற்றில் தமிழர் ஒருவர் இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றின் தளபதியாக நினைத்துக் கூடப் பார்க்க முடியாத நிலை காணப்பட்டதே அதற்குக் காரணம்.

இலங்கை இராணுவத்தின் முதல் தளபதியாக மேஜர் ஜெனரல் அன்ரன் முத்துக்குமாரு என்ற தமிழரே பதவி வகித்திருந்தார். இலங்கைக் கடற்படையின் தளபதியாக வைஸ் அட்மிரல் ராஜன் கதிர்காமர் 10 ஆண்டுகள் பணியாற்றியிருந்தார்.

ஆனால் 1970களுக்குப் பின்னர் இலங்கையின் முப்படைகளில் தமிழர் ஒருவரால் உயர்நிலைப் பதவியைப் பெற முடியாத நிலையே காணப்பட்டது. அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன.

ஒன்று முப்படைகளிலும் அதிகளவில் தமிழர்கள் இணையும் வாய்ப்பு இருக்கவில்லை. இரண்டாவது தகுதி வாய்ந்தவர்கள் சிலர் இருந்தாலும் தமிழர்கள் என்பதற்காக ஒதுக்கப்பட்டமை.

சிங்களம் மட்டும் சட்டம் உள்ளிட்ட தமிழர்களை ஒதுக்கி ஓரம் கட்டும் நடவடிக்கைகள் இலங்கை அரசாங்கங்களால் முன்னெடுக்கப்பட்டதால் தமிழர்கள் விரக்தியும் வெறுப்பும் அடையும் நிலை ஏற்பட்டது.

அது முப்படைகள் மற்றும் பொலிஸ் சேவைகளில் பெரும்பான்மையினரான சிங்களவர்களின் ஆதிக்கத்துக்கு வழி வகுத்தது.

வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக நடத்தப்பட்ட ஆயுதப் போராட்டமும் அதனை ஒடுக்குவதற்கான அரசாங்கத்தின் போரும் இரண்டு இனங்களுக்கிடையிலான போராகவே முன்னெடுக்கப்பட்டது.

சிங்கள இராணுவம் என்றும் தமிழ்ப் புலிகள் அல்லது தமிழ்த் தீவிரவாதிகள் என்றும் தான் போரிடும் தரப்புகள், மறுதரப்புகள் மாத்திரமன்றி சர்வதேச ஊடகங்களாலும் அடையாளப்படுத்தப்பட்டன.

அதற்குக் காரணம் இந்தப் போருக்குப் பின்னால் இருந்த அரசியலும் இனத்துவக் காரணிகளும் தான்.

இனப்பிரச்சினை, இனப்படுகொலை என்பது போலவே இது இனங்களுக்கிடையிலான போராகத் தான் கூர்மையடைந்திருந்தது.

இன்று இனப்பிரச்சினையே இல்லை என்றும், இனப்படுகொலையே நடக்கவில்லை என்றும் பலரும் நியாயப்படுத்த முனைகிறார்கள். ஆனால் அதே நபர்கள் சிங்களப் படைகள் என்றும், தமிழ்த் தீவிரவாதிகள் என்றும் முன்னர் தாங்கள் கூறியிருந்ததை மறந்து விடுகிறார்கள்.

இனத்துவ ரீதியான முரண்பாடுகளும், ஓரம் கட்டல்களும் அதிகம் நிகழ்ந்தது முப்படைகளில் தான். இன்றும் கூட முப்படைகளில் 99 வீதமானவர்கள் பெரும்பான்மையின சிங்களவர்களாகத் தான் இருக்கின்றனர்.

இவ்வாறான நிலையில் உயர்நிலைப் பதவிக்கு தமிழர்கள் தகைமை பெறும் வாய்ப்பு மற்றவர்களை விடக் குறைவானதாகவே இருந்திருக்கிறது.

இப்போது இரண்டாவது காரணிக்கு வருவோம். மிகச் சொற்பமாகவே தமிழர்கள் முப்படைகளில் பதவி வகித்திருந்தாலும் அவர்களால் உயர்நிலைப் பதவிகளை அடைவதற்கு இனத்துவப் பின்புலமே தடையாக இருந்தது.

இலங்கை இராணுவத்தில் இரண்டாவது நிலை வரை உயர்ந்த மேஜர் ஜெனரல் பாலரட்ணராஜா போன்றவர்களாலும் சரி, மேஜர் ஜெனரல் இரத்தினசபாபதி, மேஜர் ஜெனரல் இரத்தினசிங்கம் போன்றவர்களாலும் சரி இராணுவத் தளபதி பதவியை எட்டிப் பிடிக்க முடியவில்லை.

மேஜர் ஜெனரல் துரைராசா போன்றவர்கள் இராணுவத்தின் முன்னணிப் படைப் பிரிவுகளைச் சாராமல் மருத்துவப் படைப் பிரிவு போன்றவற்றில் அங்கம் வகித்ததால் கூட உயர்நிலைப் பதவிகளில் இருந்து ஒதுக்கப்பட்டனர்.

போர்க் காலத்தில் முப்படைகளிலும் பணியாற்றிய உயர்மட்டத் தளபதிகள் பலர் புலனாய்வுப் பிரிவின் கண்காணிப்பு பட்டியலில் தொடர்ச்சியாக இருந்து வந்தவர்கள் என்பது அனைவரும் அறிந்த இரகசியம்.

கடற்படையில் இருந்து 2009ல் ஓய்வுபெற்ற பின்னர் கனடாவில் தஞ்சமடைந்த கொமடோர் குருபரன் என்ற அதிகாரி தாம் தமிழர் என்பதால் கடற்படையில் பல சவால்களைச் சந்திக்க நேரிட்டதாக கனேடிய நீதிமன்றத்தில் கூறியிருந்தார்.

தம்மீது சந்தேகம் கொண்டு போர் நடக்கும் பகுதிகளில் பணியில் அமர்த்தப்படவில்லை என்றும் உயர்பதவியில் கொழும்பில் பணியாற்றிய போது கூட தம்மைப் புலனாய்வுப் பிரிவினர் எந்த நேரத்திலும் கண்காணித்து வந்தனர் என்றும் யாருடனும் எதையும் பேச முடியாமல் தனிமைப்படுத்தப்படும் நிலையில் இருந்ததாகவும் கூறியிருந்தார்.

இதேநிலைதான் இராணுவம், கடற்படை, விமானப்படையில் இருந்த தமிழ் அதிகாரிகளில் பெரும்பாலானோர் எதிர்கொண்ட பிரதான சவால்.

தமிழ், சிங்கள இனப் போராகவே பார்க்கப்பட்ட மூன்று தசாப்த காலப் போரில் தமிழ் அதிகாரிகளை அரசாங்கமோ அல்லது சக படை அதிகாரிகளோ நம்புகின்ற நிலை இருக்கவில்லை.

எங்கே தமிழர் என்பதால் புலிகளுக்கு உதவி விடுவார்களோ என்ற அச்சமே அதிகம் இருந்தது. இதனால் தகுதி வாய்ந்த அதிகாரிகள் பலர் கடற்படை, விமானப்படை, இராணுவத்தில் இருந்த போதும் கூட அவர்களுக்கு தளபதியாகும் வாய்ப்புக் கிடைக்காமல் போனது.

விமானப்படையில் தலைமை அதிகாரி வரை உயர்ந்தவர் எயர் வைஸ் மார்ஷல் பாலசுந்தரம் பிரேமச்சந்திரா, அவர் ஒரு தமிழர் என்பதால் தான் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் விமானப்படைத் தளபதியாகும் வாய்ப்பு மறுக்கப்பட்டு ஓரம் கட்டப்பட்டார். அதனால் அவர் ஓய்வு பெறும் நிலை ஏற்பட்டது.

இந்தளவுக்கும் இறுதிப் போர்க்காலத்தில் இவரே விமானப்படையின் நடவடிக்கைத் தளபதியாகச் செயற்பட்டவர்.

தற்போது கடற்படைத் தளபதியாக பொறுப்பேற்றுள்ள வைஸ் அட்மிரல் சின்னையா, கடலில் விடுதலைப் புலிகளின் 10 ஆயுதக் கப்பல்களை மூழ்கடிக்கும் நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கியதைப் போலவே போரில் விமானத் தாக்குதல்களை் அனைத்தையும் ஒருங்கிணைத்தவர் எயர் வைஸ் மார்ஷல் பிரேமச்சந்திரா தான்.

ஆனாலும் கூட, அவரை முன்னைய அரசாங்கம் நம்புவதற்கு தயாராக இருக்கவில்லை. போர் முடிவுக்கு வந்த பின்னர் கூட அவரால் விமானப்படைத் தளபதி பதவியை அடைய முடியாமல் வெளியேற நேரிட்டது.

அதுபோல விமானப்படையில் பிரதி தலைமை அதிகாரி வரை பதவிகளைப் பெற்ற எயர் வைஸ் மார்ஷல் ரவி அருந்தவநாதனால் கூட விமானப்படைத் தளபதி பதவியைப் பெற முடியவில்லை.

கடற்படையிலும் கூட பல அதிகாரிகள் உயர்மட்டப் பதவிகளில் இருந்தாலும் அவர்களால் தளபதி பதவியைப் பெற முடியவில்லை.

தமிழ் அதிகாரிகளை போர்ப் பிரதேசங்களில் இருந்து பெரும்பாலும் ஒதுக்கி வைத்து முக்கியத்துவமில்லாத பின்புலப் பணிகளில் ஈடுபடுத்தும் ஒரு மரபும் கூட முப்படைகளிலும் கடைப்பிடிக்கப்பட்டது.

இப்போது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா கூட இந்தப் பதவியை இலகுவாகப் பெற்றவரில்லை.

அரசியல் பழிவாங்கல், அச்சுறுத்தல் போன்றவற்றினால் சேவையிலிருந்து விலகி மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டதாலேயே அவரால் உயர் பதவியை அடைய முடிந்தது.

வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா, எயர் வைஸ் மார்ஷல் பிரேமச்சந்திரா போன்றவர்கள் விடுதலைப் புலிகளின் முதுகெலும்பை முறிப்பதற்காகப் பணியாற்றியவர்கள். ஆனாலும் கூட அவர்களை அரசாங்கம் நம்பவில்லை.

என்னதான் அரசாங்கத்துக்காகப் பணியாற்றினாலும் தமிழர்களை நம்பாத அவர்களை உயர் பதவிக்கு அனுமதிக்காதளவுக்கு இனரீதியான வன்மங்கள் அரச இயந்திரத்திற்குள் ஊறிப்போயிருந்தன.

இப்போது கூட இந்த நிலையில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதாகக் கூற முடியாது.

இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் தமிழர் ஒருவரை உயர்நீதிமன்ற பிரதம நீதியரசராக நியமித்தது, மத்திய வங்கி ஆளுநராகவும் தமிழரை நியமித்தது.

இவை ஒன்றும் இலங்கை அரச இயந்திரத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் என்று கருத முடியாது. ஏனென்றால் இந்த அரசாங்கம் பதவிக்கு வந்த போது பெரியளவு சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது.

வெளியுலக நெருக்கடிகள் அதிகளவில் இருந்தன. அவற்றைத் தணித்து சூழலை தமக்குச் சாதகமாக திருப்பிக் கொள்ள வேண்டிய தேவை இருந்தது. அதற்காகவே இந்த அரசாங்கம் தமிழர்களை முக்கிய பதவிகளில் அமர்த்தியது.

மத்திய வங்கி ஆளுநராக, பிரதம நீதியரசராக தமிழர்களைத் தான் நியமித்திருக்கிறோம். எதிர்க்கட்சித் தலைவராகவும் தமிழர் தான் இருக்கிறார் என்று ஜெனிவாவிலும் சர்வதேச அரங்குகளிலும் அரசாங்கம் பிரசாரம் செய்ததை மறந்து விட முடியாது.

இதன்மூலம் இலங்கையில் தமிழர்களுக்குப் பிரச்சினை இல்லை என்று காண்பிக்கவும் அரசாங்கம் தவறவில்லை.

அந்த வகையில் தான் இப்போது முப்படைகளில் ஒன்றான கடற்படையின் தளபதியாக தமிழர் ஒருவரை நியமிக்கும் முறை வந்திருக்கிறது. அல்லது அதற்கான வழி தேடப்பட்டிருக்கிறது.

இலங்கையின் முப்படைகளும் சிங்கள இனத்தைச் சார்ந்தது என்ற வலுவான குற்றச்சாட்டை மறைப்பதற்கும் தமிழர்கள் இப்போது முக்கிய பதவிகளில் ஆளுமை செலுத்துகிறார்கள். அந்தளவுக்கு நாங்கள் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளோம் என்று காட்டுவதற்கும் தான் இது உதவும்.

தமிழர் ஒருவர் கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டு விட்டதால் இலங்கையில் தமிழர்களின் இனப்பிரச்சினை தீர்ந்து விடாது.

வெறும் பதவிகளினால் மாத்திரம் தீர்க்கப்பட்டக் கூடிய பிரச்சினை இது அல்லவே.

http://www.canadamirror.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.