Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து முல்லைத்தீவு முஸ்லிம்களால் ஆர்ப்பாட்டம்

Featured Replies

ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து முல்லைத்தீவு முஸ்லிம்களால் ஆர்ப்பாட்டம்

மியன்மார்  நாட்டில்  ரோஹிங்யா முஸ்லீம்கள் மீது நடத்தப்படும் இனப்படுகொலையை கண்டித்து முல்லைத்தீவு ஹிஜிராபுரம் ஜும்மா பள்ளிவாசல் முன்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம்  ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

IMG_1434.jpg

முல்லைத்தீவு வாழ் முஸ்லிம்கள் ஒன்றிணைந்து இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர். 

இன்றைய ஜும்மா தொழுகையின் பின்னர் ஹிஜிராபுரம் பள்ளிவாசலுக்குமுன்பாக ஒன்றுகூடியவர்கள் கண்டனகோசங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

IMG_1441.jpg

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலையை உடன் நிறுத்து, ஆங் சான் சூகி நோபல் பரிசை திருப்பிக்கொடு, ஐ.நா. சபையே மௌனம் காப்பது ஏன் ?,ஐ.நா. சபையே ஏன் இந்த தூக்கம் ?இலங்கை வாழ் முஸ்லிம்களே ரோஹிங்யா முஸ்லிம்களுக்காக பிரார்த்திப்போம், இலங்கை அரசே மியான்மர் அரசுக்கு அழுத்தம்கொடு,போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பேரணியில் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ஜவாஹிர் ஜெனோபர் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

IMG_1455.jpg

IMG_1460.jpg

http://www.virakesari.lk/article/24165

  • கருத்துக்கள உறவுகள்

இதே முல்லை மண்ணில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட போது.. இனக்கொலை செய்த சிங்களவனோடு நின்று பயங்கரவாதம் அழிந்தததாகச் சொல்லி.. கிரிபத் தின்ற இந்த இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பயங்கரவாதிகளுக்கு மியாண்மாரில் நடப்பதைக் கண்டிக்க ஒரு வக்குமில்லை. 

முல்லை வடக்கின் காத்தான்குடியாகும் போலவே தெரிகிறது.. மிக விரைவில். 

இந்த இனச்சுத்திரிகரிப்பை முதலில் தடுத்தாகனும்.. நாங்கள். tw_angry::rolleyes:

  • தொடங்கியவர்
கிழக்கின் பல பகுதிகளில் ஆர்ப்பாட்டம்
 
image_34eadca008.gif

மியான்மாரில் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்தும், அங்கு அவர்கள் மீதான கொடூரத் தாக்குதல்களை நிறுத்தக் கோரியும் பல்வேறு பகுதிகளில் இன்றும்(08) ஆர்ப்பாட்டப் பேரணிகள் முன்னெடுக்கப்பட்டன.

அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் இவ்வாறு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை, ஜம்இய்யத்துல் உலமா, மஜ்லிஸ் அஷ்ஷீறா மற்றும் பொது அமைப்புக்கள் என்பன இணைந்து ஜூம்ஆத் தொழுகையின் பின்னர்  ஆர்ப்பாட்ட த்தில் ஈடுபட்டனர்.

ஹிஜ்ரா சந்தியிலிருந்து ஆரம்பமான இந்த  ஆர்ப்பாட்டப் பேரணியானது சம்மாந்துறை பிரதேச செயலகம் வரை சென்று அங்கு சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையினால்  ஐக்கிய நாடுகள் சபைக்கும் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கும் மகஜர்கள் பிரதேச செயலாளர் எஸ்.எல். முகம்மட் ஹனீபாவிடம் கையளிக்கப்பட்டன.

இதேவேளை வாழைச்சேனை , மூதூர் மீறாவோடை ,தோப்பூர் ஆகிய பகுதிகளிலும் இன்று பிற்பகல்ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/கிழக்கின்-பல-பகுதிகளில்-ஆர்ப்பாட்டம்/175-203442

யாழில் மீண்டுமொரு போராட்டம் : ரோஹிங்ய முஸ்லிம்களுக்கு ஆதரவாக

59b273ba1459d-IBCTAMIL.jpg
59b273ba3a1cc-IBCTAMIL.jpg

மியன்மாரில் ரோஹிங்ய முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள   படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்களை கண்டித்தும்  யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று  இன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த போராட்டம் மஸ்ஜித் மர்யம் பள்ளிவாசலில்   ஜும் ஆ தொழுகையின் பின்னர் இடம்பெற்றது.

இதன்போது  பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச நாடுகள் தலையிட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்  வலியுறுத்தினர்.  

அத்துடன் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை  ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியவாறு  தமது கண்டனங்களை வெளியிட்டனர்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/Again-Jaffna-support-Rohingya-Muslims

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் வெள்ளிக்கிழ்மை தான் கூட்டம் போடுவம். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

தொப்பி போடாமல் நிற்பவர்கள் எல்லாம் தமிழர்களா?

விரைவில் தமிழர்கள் கூட ந்டத்தலாம் பேரணி  அந்த மக்களுக்காக 

9 minutes ago, தனி ஒருவன் said:

விரைவில் தமிழர்கள் கூட ந்டத்தலாம் பேரணி  அந்த மக்களுக்காக 

உண்மைதான் முனிவர்,

அண்மையில் யாழ்பாணத்தில் நல்லூர் திருவிழாவின் போது முஸ்லிம் கடைகளில் பொருள் வாங்க வேண்டாம் என்பதற்கு, பல யாழ்பாணத்து நடு நிலைவாதிகள் வந்து நாம் இனவாதம் இல்லாமல் முஸ்லிம்களுடன் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று பாடம் எடுத்தனர் ?????

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Dash said:

உண்மைதான் முனிவர்,

அண்மையில் யாழ்பாணத்தில் நல்லூர் திருவிழாவின் போது முஸ்லிம் கடைகளில் பொருள் வாங்க வேண்டாம் என்பதற்கு, பல யாழ்பாணத்து நடு நிலைவாதிகள் வந்து நாம் இனவாதம் இல்லாமல் முஸ்லிம்களுடன் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்று பாடம் எடுத்தனர் ?????

சந்தர்ப்பவாதிகள்  அவர்கள் ஏதோ வட மாகாண முதல்வர் கூட அறிக்கை விட்டவராமே  வடக்கிலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டது பற்றி ??

5 minutes ago, தனி ஒருவன் said:

சந்தர்ப்பவாதிகள்  அவர்கள் ஏதோ வட மாகாண முதல்வர் கூட அறிக்கை விட்டவராமே  வடக்கிலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டது பற்றி ??

அறிக்கை விட்டவர் தான், ஆனால் மன்னிப்பு, மீண்டும் வந்த்து குடியேறிங்கோ என்று சம்பந்தன் லெவலுக்கு போகவில்லை.

Edited by Dash

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Dash said:

அறிக்கை விட்டவர் தான், ஆனால் மன்னிப்பு, மீண்டும் வந்த்து குடியேறிங்கோ என்று சம்பந்தன் லெவலுக்கு போகவில்லை.

விரைவில் முஸ்லீம்களால் வடக்கும் அபிவிருத்தியடையும்  கிழக்கை போல் வாழுங்கோ என்று சொல்லுவம் வேற என்னதான் செய்கிறது இனம் பெருக்கும் கூட்டம் அல்லவா இன்னும் சிறிது காலம் போனால் இலங்கையில் தமிழர்கள் மூன்றாவது இனமே

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தனி ஒருவன் said:

விரைவில் முஸ்லீம்களால் வடக்கும் அபிவிருத்தியடையும்  கிழக்கை போல் வாழுங்கோ என்று சொல்லுவம் வேற என்னதான் செய்கிறது இனம் பெருக்கும் கூட்டம் அல்லவா இன்னும் சிறிது காலம் போனால் இலங்கையில் தமிழர்கள் மூன்றாவது இனமே

கவலை வேண்டாம், இதே ரூட்டில் சென்றால் கடைசியில் Zombies கூட்டம் ஆகி விடுவர்...

ஆனால் மிச்சம் இருக்கும் கூட்டத்தின் கதி??

Resident evil, World War Z, I'm Legend போன்ற படங்களை பார்த்து வைக்கவும்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தனி ஒருவன் said:

விரைவில் முஸ்லீம்களால் வடக்கும் அபிவிருத்தியடையும்  கிழக்கை போல் வாழுங்கோ என்று சொல்லுவம் வேற என்னதான் செய்கிறது இனம் பெருக்கும் கூட்டம் அல்லவா இன்னும் சிறிது காலம் போனால் இலங்கையில் தமிழர்கள் மூன்றாவது இனமே

அப்போ முஸ்லிம்கள் எந்த இனத்தில் அடங்குவர்? தொப்பிகள் என்பது சரியா?
 
13 hours ago, தனி ஒருவன் said:

விரைவில் முஸ்லீம்களால் வடக்கும் அபிவிருத்தியடையும்  கிழக்கை போல் வாழுங்கோ என்று சொல்லுவம் வேற என்னதான் செய்கிறது இனம் பெருக்கும் கூட்டம் அல்லவா இன்னும் சிறிது காலம் போனால் இலங்கையில் தமிழர்கள் மூன்றாவது இனமே

அப்படி கைவிடாமல் அவர்களை வெல்ல விடாமல் எமது இருப்பை தக்க வைப்பது எமது கைகளில் தான் உள்ளது.

இவர்களை கண்டு அஞ்சுவதும் ஒதுங்குவதும் தான் இவர்களுடைய வெற்றிக்கு மூலாதாரம்.

எதிர்த்து நில்லுங்கோ ஓடிவிடுவார்கள்.

அண்மையில் மட்டகளப்பில் பிரம்ம குமாரிகள் கட்டடம் மீட்கபடவில்லையா? அலி சாகிர் வந்து கூட நீதி மன்றத்தை மீறி தடுக்க முடியவில்லை !!!

மீராவோடை சக்தி வித்தியாலய காணி மக்கள் போராட்டம் மூலம் மீட்கபட்டது. இது இலங்கை தீவின் வரலாற்றில் ஒரு திருப்பு முனை, 70 வருடமாக மோதிய தமிழனும் சிங்களவனும் ஒன்றாக போராடிய முதல் தருணம்.

மன்னாரில் கரிசலில் சண்டித்தனம் காட்ட போய் சட்டத்தின் பிடியில் சிக்கினார்கள். ரிஷாட் நானாவால் கூட காபாற்ற முடியவில்லை.

முல்லைத்தீவிலும்  காணி பிடிக்க வெளிகிட்டு முழு மாகாணம் இவர்களுக்கு எதிராக ஆர்பாட்டம் பண்ணியது தான் மிச்சம். முல்லை மக்கள் முஸ்லிம் கடைகளை புறகணிக்க ஆரம்பித்து விட்டார்கள்

இப்பொழுது முக புத்தகத்தில் புலிகள் காலத்தில் சிங்கள பிரதேசம் மீது நடத்த பட்ட தாக்குதக்களை மீண்டும் கிண்டியெடுத்து சிங்களவரையும் தமிழரையும் மோத விடும்  முயற்சிகளையே இவர்கள் மேற்கொள்கிரார்கள். 

சிங்களவனே புலிகளை மறந்து விட்டான், ஆனால் இவர்கள் மீண்டும் அதை ஞாபகபடுத்த முனைவது இவர்களது கையாலாகாதனத்தை தான் காட்டுது.

ஏன் முஸ்லிம் குடியேற்றத்தை வன்மையாக எதிர்த்தவர் சீ.வீ ஆனால் அவரையே தமது விழாவுக்கு அழைத்திருப்பது  வழமை போல் தொப்பி பிரட்டி காலில் விழுந்த்து விட்டார்கள் என்பதையே காட்டுகிறது. 

Edited by Dash

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, குமாரசாமி said:

அப்போ முஸ்லிம்கள் எந்த இனத்தில் அடங்குவர்? தொப்பிகள் என்பது சரியா?
 
அவர்களை எந்த இனத்திலும் அடக்க முடியாது அவர்களுக்கென ஒரு நிலைப்பாடு இல்லாதவர்கள்  எப்படியும் எங்கேயும் வாழ்ந்து விட்டு போகலாம் என்ற கொள்கையில் வாழ்ந்து கொண்டு செல்பவர்கள்  அவர்களுக்கெனவே அந்த தொப்பியும் உருவாக்கியிருக்கிறான் போல அந்த அல்லா

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இந்த ரோகின்யா முஸ்லீம்கள் கொல்லப்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஆனால் ஒன்றை இலங்கை முஸ்லீம்கள் ஒன்றை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். முஸ்லீம் நாடுகளில் இருக்கும் மாற்று மதத்தவர்கள் எவ்வளவு துன்பப்படுகிறார்கள் தெரியுமா? உ+ம் பாக்கிஸ்தானில் இருக்கும் கிறிஸ்தவர்கள் / இந்துக்கள். பாக்கிஸ்தானில் கிறிஸ்தவர்கள் / இந்துக்களை அங்குள்ள முஸ்லீம்கள் மிகவும் கொடுரமாக கொல்வார்கள். காபிர்களை கொல்வது சரி.

இந்த ரோகின்யா முஸ்லீம்கள் பாக்கிஸ்தானிடம் ஆயுதம் பெற்று அங்குள்ள பெளத்தர்களை கொலை செய்தமையினாலேயே இவர்களுக்கு இந்த நிலமை ஏற்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
On 9/8/2017 at 11:03 AM, nedukkalapoovan said:

இதே முல்லை மண்ணில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட போது.. இனக்கொலை செய்த சிங்களவனோடு நின்று பயங்கரவாதம் அழிந்தததாகச் சொல்லி.. கிரிபத் தின்ற இந்த இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பயங்கரவாதிகளுக்கு மியாண்மாரில் நடப்பதைக் கண்டிக்க ஒரு வக்குமில்லை.

பூர்வீக குடிகளை அவர்கள் நாடான கனடா, அமேரிக்கா மற்றும் ஐரோப்பா, ஆபிரிக்கா எங்கும் கொன்றோளித்த மக்களின் வாரிசுகளிடமும் அரசுகளிடமும், சிறிலங்காவில் தமிழருக்கு எதிராக நடப்பதை கண்டிக்குமாறு கேட்ட காலம் அதற்குள் மறந்துவிட்டதா?

3 hours ago, தனி ஒருவன் said:

அவர்களை எந்த இனத்திலும் அடக்க முடியாது அவர்களுக்கென ஒரு நிலைப்பாடு இல்லாதவர்கள்  எப்படியும் எங்கேயும் வாழ்ந்து விட்டு போகலாம் என்ற கொள்கையில் வாழ்ந்து கொண்டு செல்பவர்கள்

அவர்கள் அரபு இன மக்கள். எப்படி பல சிங்களவர்கள் அறியாமையால் இலங்கை தமிழர்களை இன்னமும் இந்தியாவில் இருந்து வந்து வந்து போகும் கள்ளத்தோணிகள் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்களோ அப்படியே நீங்களும் உங்கள் அறியாமையால்இலங்கை முஸ்லிம்கள் பற்றி  குழம்பிப் போய் சிங்கள இனவாதிகளுக்கு நிகரான தமிழ் இனவாதியாகி இருக்கிறீர்கள். அவர்கள் தங்களை அரபுக்கள் என்று சொல்லும் போது அதை மதித்து அவர்களுக்கு, அவர்களின் இனம் பற்றிய விருப்புக்கு, மதிப்பு கொடுங்கள். உங்களுக்கும் மதிப்பு கிடைக்கும். அல்லது நீங்களும் சிங்களவர்களில் பலர் நினைப்பது போல கள்ளத்தோணி ஆகி விடுவீர்கள்.

1 hour ago, colomban said:

இந்த ரோகின்யா முஸ்லீம்கள் பாக்கிஸ்தானிடம் ஆயுதம் பெற்று அங்குள்ள பெளத்தர்களை கொலை செய்தமையினாலேயே இவர்களுக்கு இந்த நிலமை ஏற்பட்டது.

இதற்கு உங்களிடம் ஆதாரம் இருக்கிறதா? விடுதலைப்புலிகள் இந்தியாவிடமும் வேறு வழியிலும் ஆயுதம் பெற்று பௌத்தர்களை கொன்றதன் காரணமாக இலங்கை தமிழர்களுக்கு இந்த நிலை உண்டானது என்றால் அது சரியா?

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம் மக்களின் ஆக்கிரப்மை மட்டும் இல்லை எமது இனத்தினை அங்கு நிலை நாட்ட அங்குள்ள மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கு உதவுவதோடு நாமும் போய் இடத்தை நிரப்ப வேண்டும்.சரி ஏதோ காரனாத்தால் அது சரி வராவிட்டாலும் அங்குள்ள மக்களை கேலி செய்யாமலாவது இருக்க வேணும்.:unsure:

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Jude said:

அவர்கள் அரபு இன மக்கள். எப்படி பல சிங்களவர்கள் அறியாமையால் இலங்கை தமிழர்களை இன்னமும் இந்தியாவில் இருந்து வந்து வந்து போகும் கள்ளத்தோணிகள் என்று நினைத்து கொண்டு இருக்கிறார்களோ அப்படியே நீங்களும் உங்கள் அறியாமையால்இலங்கை முஸ்லிம்கள் பற்றி  குழம்பிப் போய் சிங்கள இனவாதிகளுக்கு நிகரான தமிழ் இனவாதியாகி இருக்கிறீர்கள். அவர்கள் தங்களை அரபுக்கள் என்று சொல்லும் போது அதை மதித்து அவர்களுக்கு, அவர்களின் இனம் பற்றிய விருப்புக்கு, மதிப்பு கொடுங்கள். உங்களுக்கும் மதிப்பு கிடைக்கும். அல்லது நீங்களும் சிங்களவர்களில் பலர் நினைப்பது போல கள்ளத்தோணி ஆகி விடுவீர்கள்.

13 hours ago, colomban said:

நாங்கள் ஒன்றும் இனவாதியல்ல எனக்கும் நல்ல முஸ்லீம் நண்பர்கள் இருக்குறார்கள் ஒரு சில முஸ்லீம்களின் கருத்தை கேட்டால் உங்களுக்கே கோபம் வரும்  அதை அனுபவிப்பவர்கள் அனுபவித்து கொண்டிருப்பவர்களுக்கே தெரியும்   அதை வெளியில் இருந்து இனவாதத்தை தூண்டாதீர்கள் என்று எழுதுபவர்களுக்கு தெரியாது  முஸ்லீம் களின் வரலாறு நாமும் அறிந்திருக்கிறேன் அதே சிங்களவர்கள் சொல்வதை போலவே அவர்களும் சொல்கிறார்கள் நீங்கள் கள்ள தோணியென்றும்  இதையெல்லாம் சொல்ல வெளிக்கிட்டால் மத வாதியாகவும் இனவாதியாகவும் தெரியும் சொல்ல போனால் வாயால் சொல்லி விடலாம் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை நாங்கள் அண்ணன் தம்பி என்று ஆனால் உள்ளுணர்வு வெறுத்து கொண்டே இருக்கும் அவர்கள் செய்யும் நடவடிக்கைகளால் இன்று வடக்கு கிழக்கில் நீங்கள் முடியுமானவரை பகுதிகளை கைப்பற்றி விடுங்கள் அதற்க்கான செலவினங்களை நாங்கள் தருகிறோம் பல நாடுகள் அவர்களுக்கு துணையாக நிற்க நாம் இப்படி பேசிக்கொண்டு போவோம் பேந்து நாங்கள் தானே வாழ போகிறோம் வாழ்ந்து விட்டு செல்கிறோம் 

வெளிநாடுகளில்  இருந்து கொண்டு கருத்து மட்டு சொல்லலாம்  

இதே உணர்வு  அந்த முஸ்லீம்களுக்கு அண்ணன் தம்பி பாசம் வரவேண்டாம் மனித உரிமை மீறல் என்ற ரீதியில் ஏன் இலங்கையில் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் மீது வரவில்லை ??

இதுவும் ஒரு வன்முறைக்காட்சி அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை நானும் கண்டிக்கிறேன் யாரோ செய்யும் பிழைக்காக யாரோ தண்டனை அனுபவிப்பதென்பது கண்டிக்க தக்கதே அதே வங்க தேசத்தில் இந்துக்கள் மிதான வன்முறையும் இணைத்து  இருக்கிறேன் 

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

உலக அரசியலும் பிராந்திய அரசியலும்(உலகப்பொருளாதரச் சுரண்டலும் பிராந்தியப்பொருளாதாரச் சுரண்டலும்)இன மத பேதங்களை தணிப்பதாகக் காட்டியவாறு ஊக்குவிக்கின்றது. ஏனென்றால்  இன மத வெறியற்றஅமைதியான உலகு  சுரண்டலுக்கெதிராகத் திரும்பும் எனவே இவற்றை தொடர்ந்து  பேணவே செய்வார்கள். 

ஒவ்வொரு இனமும்  மனிதநேயத்தோடு சிந்திக்காதவரை  உள்ளக அழிவுகளும் ஆக்கிரமிப்புகளும் தொடரவே செய்யும். ஈழத்தீவிலே விஜயனின் வருகையோடு சிங்களமும், பாரசீக அரேபியர்களது வர்த்தகப் பயணங்களோடு  இஸ்லாமும் ஆரம்பிக்கிறது. இனவாதம் முதலில் பாயந்தது இஸ்லாமியர்களின்மேல்.   பின்னாளில் மிகப்பெரும் பொருண்மியவளம் கொண்ட இஸ்லாமிய நாடுகளால் நிராகரிக்கபடலாம் என்ற அச்சத்தால் இஸ்லாமியர்களை அரவணைத்துச் சென்றவாறு தமிழ்  இஸ்லாமிய முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்தினர். அதற்குச் சில முஸ்லிம் தலைமைகளும்  துணைபோனமை துயரமானது. யாழின் வெளியேற்றம் குறித்துச் சிலாகிப்போர்  மிக அண்மையாக நடைபெற்ற வன்புணர்வுட்டபட்ட கொடுமைகள் குறித்து என்ன எண்ணப்பாட்டை வெளிப்படுத்துகின்றனர் என்றும் சிந்திக்க வேண்டும். உண்மைகள் பேசப்படுவதோடு சமதளத்திலே அனைத்துவகை விரோதமான செயற்பாடுகளையும் தமிழ் மற்றும் முஸ்லிம்கள் ஓரமாக வைத்துவிட்டுச் சிந்திக்காதவரை மாற்றங்கள் நிகழாது. தமிழரது நிலங்களை அபகரித்தவாறு தமிழரோடு சமரசம் செய்தல் சாத்தியமா என்றும் சிந்திக்க வேண்டும். 

உலகிலே எங்கே  எந்தவொரு இனம் அழிக்கப்பட்டாலும் குரல்கொடுக்கும் மனப்பான்மையுடையோராகத் தமிழினம் இருக்கவேண்டும். அழிவுக்குள்ளாகிவரும் நாம் இன்னொரு இனத்தினது அழிவை ஏற்றுக் கண்டிக்காதிருக்க முடியாது. ஈழத்து முஸ்லிம்கள் குறைந்தபட்சம் இறுதிப்போர்க்காலத்திலாவது  ஒரு அடையாள எதிர்ப்பையாவது செய்திருக்கலாம். சரி அதுகூட வேண்டாம் வெற்றிப்பாற்சோறையும் வெடிகொழுத்துவதையுமாவது தவிர்த்திருக்கலாம். இன்னும் காலம் செல்லவில்லை ஒரு இணக்கப்பாட்டுடனான செயற்பாட்டிற்கு என்றே நம்புகின்றேன். எல்லாம் கடந்து ஒருவேளை  சிங்களமும் தமிழரும்வட-கிழக்கு உங்களுக்கு தெற்கு எமக்கு  இது எமது நாடு என்று இணைந்தால்  நிலமை எப்படியிருக்கும் என்பது சிந்திக்கவேண்டியதாகும்.  எனவே எப்போதும் அரசியலில் பகையும் நட்பும் நிரந்தரமானதல்ல. ஆனால் இனத்தின் இருப்பை நிரந்தரமாக்குவதற்கு அந்தந்த இனம்சார்ந்த தலைமைகளும்  அறிவுயீவிகளும் முயன்றாவறே இருப்பர்.  நீண்ட ஒடுக்குமுறையே  ஒரு பிரபாகரத்தைத் தோற்றுவித்தது. உலகஇயங்குகை  இன்னும் முடியவில்லை. எனவே எல்லாம் முடிந்துவிட்டதாகக் கொள்ள முடியாது. அடக்குமுறைகளே  புதிய பிரசவங்களை  தோற்றுவிக்கின்றதென்பது வரலாறு.

Edited by nochchi
எழுத்துப்பிழைதிருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை முஸ்லீம்களின் போராட்டத்தை விடுங்கள்.

ரொஹிங்கியாவில் நடப்பது திட்டமிட்ட இனச் சுத்த்இகரிப்பு என்பதை எத்தனை பேர் ஏற்றுக்கொள்கிறீர்கள்? 1983 இல் திருநெல்வேலிக் கண்ணிவ்டெஇத் தாக்குதலில் 13 சிங்கள ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பெள்த்த இனவாதிகளாலும், சிங்கள் அரசாலும் முன்னெடுக்கப்பட்ட பழிவாங்கல்தான் ஜூலைக் கலவரம். வெறும் 13 சிப்பாய்களின் மரணத்துக்காக ஆயிரக்கணக்கான அப்பாவிகள் கொன்று குவிக்கப்பட்டு, சொத்துக்கள் சூரையாடப்பட்டு, லட்சக்கணக்கான தமிழர்கள் தெற்கிலிருந்து துரத்தப்பட்டு, இந்தியாவுக்கு அகதிகளாக துரத்தப்பட்ட வரலாறு இன்று ரொஹிங்கியாவிலும் நடக்கிறதென்பதை எத்தனை பேர் தெரிந்திருக்கிறீர்கள்.

பெளத்த மதவாதிகளும், உலகின் கண்ணுக்கு மனிதவுரிமை ஆர்வலர் என்றும்,   ஜனநாயகவாதியென்றும் பொய்வேஷம் போட்டு நடித்த ஆங் சாங் சுகியின் பேரினவாத  அரசும் இன்று ரொஹிங்கியா சிறுபான்மை  மக்களுக்குச் செய்வது எமக்கு நிகழ்த்தப்பட்ட அதே இனக்கொலையத்தான். 

தொடர்ச்சியான இனவழிப்பாலும் அடக்குமுறையாலும் அல்லல்ப் பட்ட ரொஹிங்கியாக்களின் விடுதலைக்காகப் போராடிவரும் ஒரு இயக்கம் (எமது தமிழ் இயக்கங்களைப் போன்ற) அண்மையில் பர்மியச் சிப்பாய்கள் மேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட 12 சிப்பாய்களுக்காக ஆங் சாங் சூகியின் பெளத்த பேரினவாத அரசு திட்டமிட்ட முறையில் இனவழிப்பை நடத்திவருகிறது. எம்மைப் போன்றே ரொஹிங்கியாக்கள் பாலியல் வன்முறைகளுக்கும், கொலைகளுக்கும், சொத்துச் சூரையாடல்களுக்கும், பலாத்கார இடப்பெயர்வுகளுக்கும் எமக்கு இந்தியாவைப் போன்றே, பங்களாதேச அரசின் பாராமுகத்திற்கும் உள்ளாக்கப்படுகிறார்கள்.

இவர்களின் போராட்டமும் எம்மைப் போன்றே வளரலாம். இறுதியில் பிராந்திய வல்லரசொன்றின் உதவியுடன் இன்னொரு முள்ளிவாய்க்காலொன்று ரொஹிங்கியாவில் அரங்கேற்றப்பட்டு நாதியற்றவர்களாக (எம்மைப்போன்றவர்களாக) மாறலாம்.

இப்போது சொல்லுங்கள், ரொஹிங்கியாக்களுக்காக எவரும் போராடலாமா இல்லையா?

இப்போதைக்கு விடயத்துக்கு வரலாம். இலங்கை முஸ்லீம்கள் ரொஹிங்கியாக்களுக்காகப் போராடுவதுபற்றி. உண்மையிலேயே மக்களின் உரிமைக்காகப் போராடுகிறார்கள் என்றால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் சந்தர்ப்பவாத அரசையல்வாதிகளின் பின்னால் இழுபட்டு , தாம் வாழ்ந்த இடத்திலேயே தம் கண்முன்னால் லட்சக்கணக்கில் கொன்றொழிக்கப்பட்டபோது வேடிக்கை பார்த்தது மட்டுமல்லாமல், ஆதரவும் தெரிவித்து வாழ்த்தும் தெரிவித்த இலங்கை முஸ்லீம்களுக்கு ரொஹிங்கியாக்களுக்காக குரல் கொடுக்க எந்த அருகதையும் இல்லையென்பதுதான் எனது கருத்து.

மதத்தால் மட்டுமே பிரிந்தும், மற்றைய எல்லா விடயங்களிலும் ஒன்றாகவிருந்த சகோதரத் தமிழினம் அழிக்கப்பட்டபோது இனனவாதிகளுக்கு ஆதரவு தெரிவித்த இலங்கை முஸ்லீம்கள், எவரென்றே தெரியாத, மதத்தைத் தவிர வேறு எந்த முறையிலும் தொடர்பில்லாத ரொஹிங்கியாக்களுக்காக கூக்குரலிடுவது சுத்த சந்தர்ப்பவாதத்தனம். 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, ragunathan said:

இவர்களது சந்தர்பாவதம் எதுவரை? சிங்களத்தின் பிரித்தாளும் தந்திரம் எதுவரை?

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ragunathan said:

இப்போதைக்கு விடயத்துக்கு வரலாம். இலங்கை முஸ்லீம்கள் ரொஹிங்கியாக்களுக்காகப் போராடுவதுபற்றி. உண்மையிலேயே மக்களின் உரிமைக்காகப் போராடுகிறார்கள் என்றால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் சந்தர்ப்பவாத அரசையல்வாதிகளின் பின்னால் இழுபட்டு , தாம் வாழ்ந்த இடத்திலேயே தம் கண்முன்னால் லட்சக்கணக்கில் கொன்றொழிக்கப்பட்டபோது வேடிக்கை பார்த்தது மட்டுமல்லாமல், ஆதரவும் தெரிவித்து வாழ்த்தும் தெரிவித்த இலங்கை முஸ்லீம்களுக்கு ரொஹிங்கியாக்களுக்காக குரல் கொடுக்க எந்த அருகதையும் இல்லையென்பதுதான் எனது கருத்து.

மதத்தால் மட்டுமே பிரிந்தும், மற்றைய எல்லா விடயங்களிலும் ஒன்றாகவிருந்த சகோதரத் தமிழினம் அழிக்கப்பட்டபோது இனனவாதிகளுக்கு ஆதரவு தெரிவித்த இலங்கை முஸ்லீம்கள், எவரென்றே தெரியாத, மதத்தைத் தவிர வேறு எந்த முறையிலும் தொடர்பில்லாத ரொஹிங்கியாக்களுக்காக கூக்குரலிடுவது சுத்த சந்தர்ப்பவாதத்தனம். 

இதைத்தான் சொல்கிறோம் நன்றி ரகுநாதன் கிழக்கை கைப்பற்றுவோம் , முல்லைத்தீவை மீண்டும்முஸ்லீம்  மாவட்டமாக மாற்றுவோம் மாற்றி காட்டுவோம் என சத்தமமிடும் முஸ்லீம் இனவாதிகள் சில கண்ணுக்கு தெரியவில்லை அதே போல காசு கொடுக்க தேவையில்லை சும்மாவே வந்து படுத்து இட்டு போவாளுகள் என்று சொல்லும் கூட்டம் இருக்கும் வரைக்கும் நாங்கள் இனவாதியாக இருப்போம் சிலர் கண்ணுக்கு இனவாதியாக தெரிந்தாலும் பரவாயில்லை எங்களுக்கு எங்கள் இருப்பு முக்கியம். 

அனுபவபட்டவனுக்கே அதன் வலி தெரியும் 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஜூட் அவர்கள் இந்த வீடியோவை பார்க்க வேண்டும் கிழக்கு கல்முனைபுதிய நகர் அபிவிருத்தி திட்டம்  இத்னால் தமிழர்கள் இழக்க போவ்தென்ன   அந்த திட்டத்தில் எந்த தமிழ் ஊராவது அபிவிருத்தி என்ற சொல்லுக்குள் வந்திருக்கிறதா பார்த்தீர்களா  கிழக்கில்  அபிவிருத்தி என்பது உழுதுண்டு பயிர் விளைவிக்கும் நிலத்தை இழந்து எங்களுக்கு இஸ்டம் இல்லை ஆனால் அவர்கள் கங்கணம்கட்டிக்கொண்டு இருக்கிறார்கள் சாய்ந்தமருது பிரதேச செயலகம் பிரித்து கொடுத்தால் அவர்களது பெரும்பான்மையை கல்முனையிலிழந்து விடுவார்கள் அதனால் பிரிக்க வில்லை அதே போல தமிழர்களுக்கான  பிரதேச செயலகம் கல்முனை அதை கூட  பெற முடியாதளவுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் போது இவர்கள் மீது வரும்கோபம் உங்களுக்கு இனவாதமாக தெரியலாம்  இவை உங்களுக்கு உதாரணமாக ஏனென்றால் இவைகளை பொறுத்துகொண்டே வாழ்வதால் அரசியல்  பெற்ற பழத்தை கொடுத்து ஒரு துண்டு தரமாட்டியா என்று கேட்கும்  நிலை அரசியல் இருக்கும் வரைக்கும்  ஆப்பு என்பது சொருகி கொண்டே இருப்பார்கள்  தமிழர்களுக்கு :104_point_left:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.