Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விந்து நாதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விந்து நாதம்
**************

விந்து என்றவுடன் ஏதோ கெட்ட வார்த்தை, ஏதோ பேச தகாத வார்த்தை என்றும் நம் மூட மக்கள் எண்ணி கொள்கிறார்கள். நாதம் என்றால் பலருக்கு என்னவென்றே தெரியாது,ஏதோ வாத்திய கருவி என்று நினைத்து கொள்கிறார்கள்.சரி உண்மையில் விந்து என்றால் என்ன? உடலுறவின்போது வெளி வரும் வெள்ளை திரவம் அவ்வளவுதானா? அதற்கும் உடல் ஆரோக்கியத்துக்கும் என்ன தொடர்பு? அதனால் உடலுக்கு என்ன நன்மை/தீமை?அதிகமாக விந்தை இழந்தால் உடலுக்கு என்ன தீங்கு?அதிகமாக விந்தை இழந்தால் உடலுறவு கொள்ளமுடியாதா அல்லது ஆண் குறி சுருங்கிவிடுமா?


இப்படி பலவிதமான கேள்விகள் ,சந்தேகங்கள் நமக்குள் இருந்தாலும் அதை வெளிபடையாக பேசி தீர்த்து கொள்ளவும் அறிவை வளர்த்து கொள்ளவும் ஆரோக்கியமான சுழலை நமது சமுதாயம் அளிக்கவில்லை. இதை பயன்படுத்திகொண்டுதான் லாட்ஜ் டாக்டர்களும் ,பரம்பரை சித்த வைத்திய கேடிகளும் நமது மக்களின் மண்டையை குழப்பி பணம் சம்பாரித்து கொண்டு இருக்கிறார்கள்.சரி விஷயத்துக்கு வருவோம்.விந்து என்றால் என்ன?விந்து என்றால் உயிர்.விந்து சக்தி என்றால் உயிர் சக்தி.உதாரணமாக ஒரு பல்பு எரிய ஒருவகையான சக்தி தேவை அதை நாம் மின் சக்தி என்கிறோம்.. தண்ணிரை கொதிக்க வைக்க வெப்ப சக்தி தேவை.இது போல இந்த உலகில் ஒவ்வொரு செயலை செய்யவும்,எந்த ஒரு பொருள் அசைக்கவும் ஒரு வகையான சக்தி தேவை. அது போல நமது இந்த உடல் எந்திரத்தை இயக்கவும் ஒரு சக்தி தேவைபடுகிறது.அந்த உயிர் சக்தியை கொடுப்பது தான் இந்த விந்துவின் வேலை.சுக்கிலம் என்று சொல்லகூடிய இந்த விந்துவானது,நாம் உண்ணும் உணவின் ஒரு பகுதியில் இருந்து உண்டாக்கபடும்,பிறகு இந்த சக்தியானது உயிர் அணுக்கள் சேர்க்க பட்டு விந்துவாக உடலில் சேமிக்க படுகிறது. இந்த விந்து சக்தியின் முக்கிய வேலை உடலில் உள்ள அனைத்து செல்களையும் புதுப்பித்தல் மற்றும் சேதாரமடைந்த செல்களை சரி செய்வதாகும். புதுப்பித்தல் முடிந்ததும் தேவைக்கு அதிகமாக சேமிக்கப்படும் விந்துவானது,விந்து பை நிரம்பியவுடன் தன்னிச்சையாகவோ அல்லது காம கனவுகளுடனோ வெளியேறி விடும்.ஒருவன் அதிகமான விந்தை செலவழிக்கும் போது அவனது சேதாரமான செல்களை சரி செய்யவும் புதுப்பிக்கவும் வழி இல்லாமல் அந்த உடல் தளர்வடைந்து சீர்கெடுகிறது.

செல்களை புதுப்பித்தல் என்பது பின்வருவனவற்றை உள்ளடக்கியது.
1 சதை வளர்ச்சி 
2 எலும்பு வளர்ச்சி 
3 ரோம வளர்ச்சி 
4 அறிவு வளர்ச்சி 
5 தோல் பொலிவு 
6 உயிரணு உற்பத்தி 
7 உடலுறுப்புகள் பேணுதல்

ஒருவன் தேவைக்கு அதிகமான விந்தை செலவழிக்கும் போது, மேல் சொன்ன வளர்ச்சிகள் தடை படுகிறது,அங்கு உடல் நலம் கெடுகிறது.இன்றும் கிராமங்களில் ஆட்டு கிடாய்களுக்கு ஒடை தட்டும் வழக்கம் உள்ளது.ஏன் என்று கேட்டு பாருங்கள் அவர்கள் சொல்லுவார்கள் ஒடை தட்டினால் சதை நன்றாக வளரும் கொழுப்பு நிரம்ப இருக்கும் என்று.இதை நாம் விந்துவின் முக்கியதுவத்துக்கு சான்றாக எடுத்துகொள்ளலாம்.அதிகமான விந்தை இழக்கும்போது அந்த உடல் நலிந்து தளர்ந்து சீர்கெட்டுபோகிறது,அத்துடன் உடல் இளைப்பு, பசி இன்மை ,மன குழப்பம் , துக்கம் இன்மை போன்றவைகளும் சேர்ந்துகொள்கிறது.

சுக்கிலத்தின் மகிமைகளை பின்வரும் சித்தர்களின் பாடல்களின் மூலம் அறியலாம்.

விந்தை விட்டவன் நொந்து கெட்டான் - திருமுலர் 
சுக்கிலம் விட ,சுவர் கெடும் -திருமுலர் 
இந்தரியம் தீர்ந்துவிட்டால் சுந்தரியும் பேய் போல - ****

சரி விந்து இழப்புக்கும் உடலுறவு கொள்ள முடியாமல் போவதுக்கும் என்ன தொடர்பு?அதிகமான விந்தை இழந்துவிட்ட ஒருவனது செயல்பாடுகள் அனைத்து செயல்களிலும் நிறைவனதகாவே இருக்காது.அது போல தான் உடலுறவிலும்.உடல் சக்திஇன்மை தான் காரணம் அனைத்துக்கும் வேறு ஒன்றும் இல்லை.ஆனால் ஊடகங்களும் போலி மருத்துவர்களும் இதை ஊதி பெரிதாக்கி விட்டார்கள். எனவே விந்தை விணடிக்காமல்,உடலுறவு என்பது ஏதோ கழிவை கழித்தல் போல வைத்து கொண்டால் உடல் நன்றாக இருக்கும்,அதை விடுத்தது,ஏதோ இன்பம் கிடைகிறது என்று அதை நோண்டி கொண்டே இருந்தால் உடல் பலம் கெட்டு , உடல் நோய்களின் இருப்பிடம் ஆகிவிடும்.

பின்வரும் ஆங்கில மருத்துவர்களின் கருத்தை பாருங்கள் .

1 விந்து என்பது எச்சில் போன்ற ஒன்று, அதை இழப்பதால் ஒன்றும் கெடுதல் இல்லை.
2 இறைக்கிற கிணறு தான் நன்றாக ஊறும்

இதை ஒருவன் பின்பற்றினால் அவன் வாழ்க்கை சிக்கி சின்னபின்னமாவது திண்ணம்.

ஐயோ ! விந்து இவ்வளவு முக்கியமானதா இது தெரியாமல் கண்டபடி விரயம் செய்து விட்டோமே என்று புலம்பி தவித்துலாட்ஜ் டாக்டர்களிடம் ஓட வேண்டாம்.

முறையான சத்தான உணவுகளும்,உடற்பயிற்சிகளும் ,நல்ல மருந்துகளும் உட்கொண்டு சீர் கெட்ட உடலை சீர் செய்யலாம். அதிக விந்தை இழந்து உடல், முக பொலிவை இழந்து விட்டோம் என வருந்தும் தோழர்களே, பின்வரும் உணவு முறைகளை பின்பற்றுங்கள், 3 மாதங்களில் சேர்ந்த மாற்றங்களை காணலாம்.

உணவு முறை
-------------------------
காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தவும் பிறகு 10 உலர் திரட்சைகள்,5 முந்திரி, 5 பாதாம் ,5 பிஸ்தா , 1 அத்தி பழம்(பிக்),1 உலர் பேரிச்சை என்று 3 மாதங்கள் உண்ணுங்கள் உடல் மற்றும் உயிர் சக்தி பெருகும்.நல்ல காய்கறிகள்,பருப்பு வகைகள் போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.
உடல் சூடு என்பது சக்தியை போக்கும் காரணி எனவே சூடு தரும் பொருள்களை தவிர்த்து விடுங்கள்.உடல் சூடு அதிகரித்தல் விந்து பையை விட்டு வெளியேறி விடும் .

உடல் இழந்த சக்தியை பெற பின்வரும் முலிகை பொடிகளை பாலுடன் சேர்த்து உட்கொள்ளலாம்.

1 ஓரிதழ் தாமரை 
2 ஜாதிகாய் சூரணம் 
3 அஸ்வாகாந்த சூரணம்

100 சதவிதம் உயிர்சக்தி (ஆண்மை குறைவு) மருந்துகள் மேல் சொன்ன மூலிகைகளில் இருந்து தான் தயாரிக்கபடுகிறது ,எனவே கண்ட மருந்துகளை வாங்கி தின்னாமல் நன்றி,மேல் சொன்ன முலிகை பொடிகளை நல்ல ஆயுர்வேத அல்லது சித்த மருந்து கடைகளில் வங்கி உண்டு பலன் பெறுங்கள்.

 

நன்றி

- *சித்தர்களின் குரல் shiva shangar*

 

  • கருத்துக்கள உறவுகள்

எங்கையா சிறியர் உங்க ரொணிக் ரொபிக் இறைக்க இறைக்க ஊறும் என்ற சொல்லும் எப்போவோ சொன்ன ஞாபகம் 

58 minutes ago, colomban said:

2 இறைக்கிற கிணறு தான் நன்றாக ஊறும்

 

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

எங்கையா சிறியர் உங்க ரொணிக் ரொபிக் இறைக்க இறைக்க ஊறும் என்ற சொல்லும் எப்போவோ சொன்ன ஞாபகம் 

 

அவர் கிணற்றை சொல்லியிருக்கின்றார் என்று நினைக்கிறேன்....!

நம்ம வீட்டு கிணறு இறைக்க இறைக்க ஊறும் பொழுது அடுத்த வீட்டுக் கிணறு வற்றியிருக்கும் ..... நான் கிணற்றை சொல்கிறேன்....!

எந்த விஞ்ஞான விளக்கமும் அற்ற முட்டாள்தனமான ஒரு பதிவு tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ கைப்பழக்கத்திற்கு அடிமையான ஒன்று பயத்தில எழுதித் தள்ளி இருக்குது. tw_blush::rolleyes:

விந்து பொதுவாக 72 மணி நேரத்துக்கு ஒருக்கா புதிப்பிக்கப்படும். 

ரெம்ப முட்டி முட்டிட்டுன்னா.. நல்ல சுவீட் ரீம் வந்து அதுவே தானா பாஞ்சிடும். 

இதுக்கு என்ன சொல்லப் போகினம்..??!tw_blush::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

அவர் கிணற்றை சொல்லியிருக்கின்றார் என்று நினைக்கிறேன்....!

நம்ம வீட்டு கிணறு இறைக்க இறைக்க ஊறும் பொழுது அடுத்த வீட்டுக் கிணறு வற்றியிருக்கும் ..... நான் கிணற்றை சொல்கிறேன்....!

அதான் சொல்லி போட்டியளே பிரகென்ன கெணறாவது கொளமாவது tw_blush:

Edited by தனிக்காட்டு ராஜா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, nedukkalapoovan said:

யாரோ கைப்பழக்கத்திற்கு அடிமையான ஒன்று பயத்தில எழுதித் தள்ளி இருக்குது. tw_blush::rolleyes:

விந்து பொதுவாக 72 மணி நேரத்துக்கு ஒருக்கா புதிப்பிக்கப்படும். 

ரெம்ப முட்டி முட்டிட்டுன்னா.. நல்ல சுவீட் ரீம் வந்து அதுவே தானா பாஞ்சிடும். 

இதுக்கு என்ன சொல்லப் போகினம்..??!tw_blush::rolleyes:

65/70 வயதினருக்கும் உந்த சுவீட் ரீம் வர ஏற்பாடுகள் ஏதாவது இருக்கின்றதா? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, குமாரசாமி said:

65/70 வயதினருக்கும் உந்த சுவீட் ரீம் வர ஏற்பாடுகள் ஏதாவது இருக்கின்றதா? :cool:

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

65/70 வயதினருக்கும் உந்த சுவீட் ரீம் வர ஏற்பாடுகள் ஏதாவது இருக்கின்றதா? :cool:

இந்த வெளிப்படை, வெகுளித்தனம் பிடித்திருக்கு..! bjr1.gif

இதிதெல்லாம் வயது வித்தியாசம் இருக்கிறா என்ன..? சுய ஒழுக்கமுடன் வாழ்ந்தால் என்றும் இளமைதானே..? dubitatif.gif

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, colomban said:

சுக்கிலத்தின் மகிமைகளை பின்வரும் சித்தர்களின் பாடல்களின் மூலம் அறியலாம்.

விந்தை விட்டவன் நொந்து கெட்டான் - திருமுலர் 
சுக்கிலம் விட , சுவர் கெடும் - திருமுலர் 
இந்தரியம் தீர்ந்துவிட்டால் சுந்தரியும் பேய் போல - ****

திருமூலர் சொல்வதைப் பார்த்தால்....
அந்தக் காலத்திலே... கக்கூசுக்குள்  நின்று, 
"கைப்பழக்கம்"  செய்கின்றவர்கள், நிறைய இருந்திருக்கிறார்கள் போலுள்ளது. tw_dizzy:

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தனிக்காட்டு ராஜா said:

எங்கையா சிறியர் உங்க ரொணிக் ரொபிக் இறைக்க இறைக்க ஊறும் என்ற சொல்லும் எப்போவோ சொன்ன ஞாபகம் 

இதோ... வந்திட்டன்,  ராஜா..... :grin:
ஆஹா.... வெள்ளிக்கிழமைக்கு ஏற்ற  தலைப்பு. :D:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மஞ்சுளா, உஷா நந்தினி, லதா, ஜெயலலிதா, சரோஜாதேவி, 
சுவீட் ட்ரீம்ஸில் வந்து சாரம் நனையா தூங்கியதெல்லாம் ஒரு காலம்.

 

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, colomban said:

மஞ்சுளா, உஷா நந்தினி, லதா, ஜெயலலிதா, சரோஜாதேவி, 
சுவீட் ட்ரீம்ஸில் வந்து சாரம் நனையா தூங்கியதெல்லாம் ஒரு காலம்.

Ähnliches Foto  Bildergebnis für மீண்டும் கோகிலா

 

கொழும்பான் அண்ணை,  உங்களுடைய  காலத்தில்.... 
மஞ்சுளா, உஷா நந்தினி, லதா, ஜெயலலிதா, சரோஜாதேவி என்று பலர்  வந்தார்கள்  என்றால்.....

என்னுடைய  காலத்தில், 
ஜெனொலியாவைத்   தவிர.... வேறு ஒருவரும் கனவில்  வரவில்லை. ஆனால்.................
ஒரு முறை.... ஸ்ரீதேவி வரப்  பாத்தவ, நல்ல காலம்...  கட்டியிருந்த  "சாரம்"  நனைய... முதல், முழித்து விட்டேன். 

  • கருத்துக்கள உறவுகள்

எங்கட காலத்தில இவர்தான்.....!  tw_blush:

Image associée

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 9/22/2017 at 10:02 PM, தமிழ் சிறி said:

Ähnliches Foto  Bildergebnis für மீண்டும் கோகிலா

 

கொழும்பான் அண்ணை,  உங்களுடைய  காலத்தில்.... 
மஞ்சுளா, உஷா நந்தினி, லதா, ஜெயலலிதா, சரோஜாதேவி என்று பலர்  வந்தார்கள்  என்றால்.....

என்னுடைய  காலத்தில், 
ஜெனொலியாவைத்   தவிர.... வேறு ஒருவரும் கனவில்  வரவில்லை. ஆனால்.................
ஒரு முறை.... ஸ்ரீதேவி வரப்  பாத்தவ, நல்ல காலம்...  கட்டியிருந்த  "சாரம்"  நனைய... முதல், முழித்து விட்டேன். 

 

நான் அந்தளவு பழைய ஆள் இல்லை த.சி.

எங்கள் காலத்தில் , குஷ்பு / அமலா / கெளதமி / நதியா /சுகன்யா போன்றோரே இருந்தார்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

 

K.B.Sundarambal.jpeg

மேலே இருக்கும் படத்திலிருப்பவர் காலத்து ஆட்களெல்லாம் அப்பட்டமாக பொய் சொன்னால் எப்படி..?  :unsure::mellow::)

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

எங்கட காலத்தில இவர்தான்.....!  tw_blush:

Image associée

இது எங்க காலமுங்க உங்க காலம்  பழசு வெள்ளைங்க எங்க காலம் கலருங்க

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

இது எங்க காலமுங்க உங்க காலம்  பழசு வெள்ளைங்க எங்க காலம் கலருங்க

ஏன் நீங்கள் எல்லாரும் காலத்தை எதை வைத்து கணக்கிடுகிறீங்கள் வயசை வைத்தா அல்லது மனசை வைத்தா ....... வயசுதான் உங்கள் பிரச்சினை என்றால் முந்திப் பிறந்தது என் குற்றமா....உங்களின் மனங்கள் வயதாகி விட்டால்  நான் ஒன்றும்  சொல்வதற்கில்லை. வரைமுறைக்குட்பட்ட வாலிபமாவதற்கு முயற்சி எடுங்கள்....!   tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, suvy said:

ஏன் நீங்கள் எல்லாரும் காலத்தை எதை வைத்து கணக்கிடுகிறீங்கள் வயசை வைத்தா அல்லது மனசை வைத்தா ....... வயசுதான் உங்கள் பிரச்சினை என்றால் முந்திப் பிறந்தது என் குற்றமா....உங்களின் மனங்கள் வயதாகி விட்டால்  நான் ஒன்றும்  சொல்வதற்கில்லை. வரைமுறைக்குட்பட்ட வாலிபமாவதற்கு முயற்சி எடுங்கள்....!   tw_blush:

உந்த போற வயதை  சொன்னால் எல்லோருக்கும் கோபம் வருதுப்பா உங்களுக்கு இளமை ஊஞ்சல் ஆடுகிறது  நான் சொன்னது சரியா சுவி சாமி tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

இருந்தாலும் உங்களுடன் முரண்பட நான் விரும்பவில்லை நான் கருப்பு வெள்ளையுடன் இருந்து கொள்கிறேன்....!   :unsure:  tw_blush:

Résultat de recherche d'images pour "shruti hassan blake & white photos"

  • 2 years later...

உண்மையில் நாதம் என்பது விந்துவா அய்யா

  • கருத்துக்கள உறவுகள்

இதில் நிறைய குழப்பகரமான விடயங்கள் உண்டு 
இது பற்றி ஒரு தீர்க்கதரிசனமான முடிவை எடுக்க முடியாது 
அதனால்தான் இவ்வாறு விளக்கம் குறைந்த கட்டுரைகள் வருகின்றன என்று எண்ணுகிறேன் 
தமிழில் கட்டுரை புத்தகம் செய்தி எழுதுவது மிக மிக இலகு காரணம் எந்த அடிப்படையும் தேவை இல்லை.
அவர்கள் பாட்டுக்கு அடித்துவிட வேண்டியதுதான். அதுதான் பல எழுத்து வித்துவான்கள் யாழை விட்டு ஓடியதும் முதல் காரணம் .. இங்கு கேள்விகளை முன்வைப்பார்கள்? அவர்களிடம் பதில் இல்லை.
இதை பற்றி எழுதும்போது இவர் குறைந்த பட்ஷம் இதுபற்றி தானாவது கொஞ்சம் அறிய முற்பட்டு இருக்கலாம்.  


பெண்களுக்கு ஸ்ட்ரோஜனும்  ஆண்களுக்கு டெஸ்டரோனும் மிக அவசியமானது 
இது உடலுறவின் போது சுரக்கிறது ஆகவே உடலுறவு இருபாலருக்கும்  உடல் ரீதியா பல 
நண்மைகளை கொடுப்பதோடு ஒரு அன்னிய உன்னிய உறவாக குடும்ப வாழ்வு இருக்கவும் 
உதவுகிறது. மணம்முடித்து பிள்ளைகள் வளர்ந்துவர  பள்ளிக்கு விடுவது வேலைச்சுமை  பொருளாதார நெருக்கடி சமையல் வீட்டு வேலை என்று வீடே தலைகீழாக மாறி இருக்கும்போது. உணர்வின்பால் தூண்டுதலை உணரும் பெண்களுக்கு உடலுறவை மணம்முடித்த காலத்தில் தொடர்வதுபோல  தொடரமுடிவதில்லை. இதற்கு பெண்கள் ஆண்களையும் குற்றம் சுமத்துகிறார்கள்  முன்னைய வீரியம் ஆண்களிடமும்  தாம் காண்பதில்லையாம் .. பெண்கள் உடலுறவு உணர்வை எட்டுவதுக்கு உற்சாகம் சுற்று சூழல்  எல்லாம் காரணமாக அமைகிறது ....... (Quality over Quantity) அதாவது முறையான உடலுறவு இல்லாத பட்ஷத்தில் அது இல்லாமலே  இருக்கலாம் என்று எண்ணுகிறார்கள் ...... (Quantity over Quality) ஆண்கள் மாறாக அறையோ குறையோ செய்யக்கூடியதை  இன்றைக்கு செய்துவிட வேண்டும் மற்றதை நாளை பார்க்கலாம் என்று எண்ணுகிறார்கள்.
பெண்கள் திருப்தி அடையாத காரணத்தால் ஆண்கள் தொடங்கும்போதே ... எதோ வெட்டி புடுங்க போறமாதிரி வெளிக்கிடுகிறார்? என்று ஒரு சலிப்பு தன்மைக்கு வந்துவிடுகிறார்கள். இந்த ஸ்ட்ரோஜென் மற்றும்  டெஸ்டரோன் உடலில் பல நோய்கள் வருவத்துக்கும் காரணம் ஆகிறது .... சமசீரான உடலுறுவு இல்லாத  பெண்களுக்கும் ஆண்களுக்கும் இதை சப்ளிமென்ட்டாக எடுத்துக்கொள்கிறார்கள். உண்மையில் இதை உடலுறவால் தீர்க்கலாமா? அல்லது  சப்ளிமென்ட் மூலம் தீர்க்கலாமா? என்பதை அது சார்ந்த நிபுணர்கள்தான்  கூறவேண்டும். 

ஸ்ட்ரோஜென் பெண்கள் உடலில் என்ன மாறுதல்களை செய்கிறது? 

Image result for how do estrogen affect women body

இது கூடுவதாலும் பக்க விளைவுகள் உண்டு குறைவதாலும் பக்க விளைவுகள் உண்டு 

Estrogen Levels

இது இயற்கையாகவே ஒரு வயதின் பின்பு குறைந்துகொண்டுதான் போகிறது 
இளமையாக இருப்பதற்கும் இதற்கும் நிறைய தொடர்பு இருப்பதான எண்ணம் இங்கிருந்துதான் வருகிறது 

Image result for how do estrogen affect women body

 

அப்போ இது ஆண்களுக்கு இல்லையா? இருக்கிறது ஆண்களிலும் கூடி குறைவதால் 
பல மாறுதல்களை உண்டுபண்ணுகிறது உதாரணத்துக்கு கீழே இருக்கும் படம்போல 

Image result for how do estrogen affect women body

 

டெஸ்டரோன் ஆண்கள் உடலில் என்ன மாறுதல்கள் செய்கிறது? 

Image result for how do testoterone  affect men body

Image result for how do testoterone  affect men body

டெஸ்ட்ரோன் அளவு கூடி குறைவதால் என்ன பாதிப்பு? 

Image result for how do testoterone  affect men body

எல்லா வயதிலும் இது ஒரே மாதிரி இருக்குமா? 

Image result for how do testoterone  affect men body

எளிய முறையில் இதை சீராக்கி உடல் ஆரோக்கியம்  
ஆரோக்கியமான திருப்திகரமான  உடலுறவு 
அழகான ஆரோக்கியமான வாழ்வு வாழ ....... ஆன் பெண் இருபாலருக்கும் ஒரே ஒரு சிறந்த வழிதான் உண்டு.
உடற்பயிற்சி   உடற்பயிற்சி  .... உடற்பயிற்சி  யோகா!
நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால்தான்  .. நீங்கள் கஷ்ட்டப்பட்டு உழைக்கும் பணம் 
வடிவமைக்கும் குழைந்தைகள்  பல கனவுகளுடன் கஸ்டரபட்டு கட்டும் வீடுகள் 
இறைப்பணிகள் பொதுப்பணிகள் எல்லாவற்றையும் மென்மேலும் வளர்த்தும் அழகாக்கியும் 
அனுபவித்து ஒரு நிறைவான வாழ்வை வாழ முடியும்.

அளவுக்கு அதிகமான சுயஇன்பம்  டெஸ்ட்ரோனை வீணாக்கும் அதேநேரம் 
உடலுறவுதான் டெஸ்ட்ரோன் சுரக்கவும் வழி சமைக்கிறது. அது உடலுக்கு மட்டும் கெடுதல் இல்லை 
உலகு உடன் ஆன உறவிலும் விரிசலை உண்டுபண்ணும் ....... பல கெட்ட பழக்கங்களுக்கு ஆளாகுவீர்கள் 
பார்க்கும் பெண்களை எல்லாம் சதைகுவியலாகவே பார்ப்பீர்கள் ...அது பெண்களுக்கும் உங்களுக்கும் இடையில் ஒரு ஆரோக்கிய உறவை வளர்க்காது. நீங்கள் எவ்வாறு பெண்களை பார்க்கிறீர்கள் என்பதை 
பெண்கள் உங்களை பார்க்கும்போது உணர்ந்து கொள்வார்கள் ... ஆதலால் அவர்கள் உங்களிடம் இருந்து விலகி  சென்றுவிடுவார்கள். இது பெண்களுக்கு மட்டும் அல்ல உலகில் வாழும் பெண் பறவைகள் பெண் மிருகங்களுக்கும்   இந்த உணர்வு உண்டு ... ஒரு ஆரோக்கியமான ஆண்ணுடன் இன விருத்தி செய்து இந்த உலகில்  ஆரோக்கியமான தமது இனத்தை பாதுகாக்கும் திறன் பெண்பாலிடம் இருக்கும் திறனும் கடமையும் ஆகும். மனிதரில் மட்டுமே ஆணாதிக்க சிந்தனை உருவாகி திருமணத்தை ஒரு விபச்சார வடிவுக்கு கொண்டுவந்து  ... திருமணம் ஆன பின்பும் இவன் ஒன்றுக்கும் லாயக்கு இல்லை என்ற உண்மையை பெண்கள்  தெரிந்துகொண்டாலும் விட்டு ஓட முடியாத மாதிரி .... ஒருவனுக்கு ஒருத்தி ... கல்லானாலும்  கணவன்.... மற்றும் மயிர் மண்ணாங்கட்டி என்று பெண்களை ஏய்த்து பிழைக்க தொடங்கியதால்தான்  மனிதர்களில்  பல குறைபாட்டு மனிதர்கள் தொடர்ந்தும் பிறக்கிறார்கள் ....  வலதுகுறைந்த பிறவிகள்  பறவைகள்  மிருகங்களில் மிக மிக குறைவு ஒரே காரணம் பொறுப்புள்ள பெண்பால்தான். இது எதிர்மறையாக  ஆண்களையும் இன்னும் இன்னும் சோம்பேறிகள் ஆக்குகிறது. எப்படி பியரை குடித்துவிட்டு  வயிற்றை தள்ளிக்கொண்டு  திரிந்தாலும் அம்மா ஊரில் இருந்து ஒரு வடிவான பெட்டையை அனுப்புவா  என்ற போக்கு பின்னாளில்  அவர்களுக்கே அது எதிராக அமைகிறது என்பதை உணர மாட்ட்டார்கள். 

Image result for indian girls exercising

Image result for indian girls exercising

உடற்பயிற்சிக்கு  வெட்கம் நாணம் தேவை இல்லை 
தம்பதிகளாகவே அருகில் இருக்கும் ஒரு ஜிம்முக்கு சென்று சேர்ந்துவிடுங்கள் 
அதில் செலவிடும் ஒருமணிநேரம்  உங்களுக்கு பல வருடங்களை சேமித்து 
தருவதோடு ஆரோக்கியமான  வழமையான உடலுறவுக்கு வழி சமைக்கிறது. 

Image result for indian girls exercising

Image result for indian girls exercising

Image result for indian men exercising

  • கருத்துக்கள உறவுகள்

Image result for indian men exercising

Image result for indian men exercising

  • 2 weeks later...
On 3/12/2020 at 8:18 PM, Maruthankerny said:

தமிழில் கட்டுரை புத்தகம் செய்தி எழுதுவது மிக மிக இலகு காரணம் எந்த அடிப்படையும் தேவை இல்லை.
அவர்கள் பாட்டுக்கு அடித்துவிட வேண்டியதுதான். அதுதான் பல எழுத்து வித்துவான்கள் யாழை விட்டு ஓடியதும் முதல் காரணம் .. இங்கு கேள்விகளை முன்வைப்பார்கள்? அவர்களிடம் பதில் இல்லை.
 

 

பிரதான கட்டுரையை விட நீங்கள  இணைத்த கட்டுரை சுப்பர். அசத்திடீங்க😀 நன்றி மருதங்கேணி.  👍👍👍👍👍👍👍👍👍👍👍

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.