Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காலியில் இரு தரப்பினருக்கு இடையிலான மோதலால் பதற்றம்!

Featured Replies

காலியில் இரு தரப்பினருக்கு இடையிலான மோதலால் பதற்றம்!

காலியில் இரு தரப்பினருக்கு இடையிலான மோதலால் பதற்றம்!

காலி ஜின்தோட்டை பகுதியில் இரண்டு தரப்பினருக்கு இடையிலான மோதல் காரணமாக பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது. இதன்போது வீடொன்றுக்கும் தீ வைக்கப்படுவது போன்ற காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

அட்டூழியங்களில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

கால்பந்தாட்டப் போட்டி மற்றும் விபத்தொன்றை தொடர்ந்து இந்த மோதல் நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், பிரதேசத்தில் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்துவரும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

எவ்வாறாயினும் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் ஒத்துழைப்புடன் பதற்றமான நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பள்ளிவாசல் மற்றும் சில வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை இந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் ஏழு பேர் ஜின்தோட்டை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை கொழும்பு பிரதான வீதியிலுள்ள சில வீடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை ஜின்தோட்டை ஊடாக காலி, மாத்தறை மற்றும் கொழும்பிற்கு செல்ல வேண்டாம் என பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

நிலைமைகளை கையாளும் வகையில் அமைச்சர் பைசர் முஸ்தபா காலி, ஜின்தோட்டை பகுதிக்கு விரைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

காலியில் இரு தரப்பினருக்கு இடையிலான மோதலால் பதற்றம்!

https://news.ibctamil.com/ta/internal-affairs/Police-curfew-imposed-in-galle

  • தொடங்கியவர்

காலி ஜிந்தோட்டவில் முஸ்லிம் – சிங்கள குழுக்களிடையே மோதல்: பள்ளிவாசல் மற்றும் வீடுகள் மீது தாக்கு

காலி ஜிந்தோட்டவில் முஸ்லிம்  – சிங்கள குழுக்களிடையே மோதல்: பள்ளிவாசல் மற்றும் வீடுகள் மீது தாக்கு

காலி ஜின்தோட்டை பகுதியில் முஸ்லிம்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையில் கலவரம் ஒன்று ஏற்பட்டுவருவதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன. பள்ளிவாசல் ஒன்றும் முஸ்லிம்களின் பல வீடுகளும் தாக்கப்பட்டுள்ளன. விளையாடிக்கொண்டிருந்த முஸ்லீம் இளைஞர்கள் சிலரை தாக்கியதை அடுத்து இந்த பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சிறையில் இருந்து விடுதலையான ஒரு சிங்கள இளைஞர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் அடிபட்டு முஸ்லீம் குழந்தை ஒன்று நேற்றைய தினம் கீழே வீழ்ந்தமையே இந்த பதற்றத்தின் அடிப்படை கரணம் என்றும் குறித்த சிங்கள இளைஞர்குழு ஒன்றுடன் வந்து அங்கு விளையாடிக்கொண்டிருந்த முஸ்லீம் இளைஞர்களை தாக்கியதாகவும் அறியமுடிகிறது. இதனை அடுத்து பொலிஸாரும் விடேச அதிரடிப்படையினரும் அங்கு நேற்றைய தினம் குவிக்கப்பட்டு மீளபெறப்பட்டிருந்த நிலையில் இன்றையதினம் கலவரம் மூண்டுள்ளது.

முஸ்லீம் இளைஞர்களும் சிங்கள இளைஞர்களும் பெருமளவில் திரண்டு வருவதாகவும் அவர்களை கலைப்பதற்கு விசேட அதிரடிப்படையினர் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.

படங்கள்: கொழும்பு டெலிகிராப்

Anti-mulsim-attack-gintotaAnti-Mulsim-aattack-GintotaGintota-attack

http://www.samakalam.com/செய்திகள்/காலி-ஜிந்தோட்டவில்-முஸ்/

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, நவீனன் said:

காலி ஜிந்தோட்டவில் முஸ்லிம் – சிங்கள குழுக்களிடையே மோதல்: பள்ளிவாசல் மற்றும் வீடுகள் மீது தாக்கு

இது இனக்கலவரமாய் மாறும் எண்டு நான் நினைக்கேல்லை...நினைக்கவும் கூடாது.:cool:

  • கருத்துக்கள உறவுகள்

 நாங்கள் விழும்போது உதவாது  விட்டாலும் பரவாயில்லை உதைக்காமல் இருந்திருக்கலாம். அதன் விளைவுதான் இது. நீங்கள் அனுபவிக்கும்போது விளங்கும் வலி, அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பதன் பொருள்.

  • தொடங்கியவர்

கிந்தோட்டையில் கலவரம் ; நிலைமை கட்டுப்பாட்டுக்குள், 19 பேர் கைது

காலி கிந்­தோட்டையில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற மோதலையடுத்து இடம்பெற்ற கலவரத்தில்  படு­கா­ய­ம­டைந்த ஒருவர் காலி கரா­ப்பிட்­டிய வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார். அத்­துடன் சம்ப­வத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்கள் என்ற சந்­தே­கத்தின் பேரில் இதுவரை 19 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் இன்று காலை வரை பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

gali.jpg

குறித்த சம்­பவம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை கிந்­தோட்டை விதா­ன­கொட பிர­தே­சத்தில் கைக்­கு­ழந்­தை­யுடன் வீதியில் நடந்­து­சென்ற முஸ்லிம் பெண்­ணொ­ரு­வரை மோட்டார் சைக்­கிளில் பய­ணித்த ஒருவர் மோதி­யுள்ளார். அவ்­வி­பத்து இடம்­பெற்ற வேளையில் அசம்­பா­விதம் ஏதும் இடம்­பெ­றா­த­போதும் அதன் தொடர்ச்­சி­யா­கவே நேற்று முன்­தினம் இரவு அங்கு அமை­தி­யின்மை ஏற்­பட்­டுள்­ளது. 

DO4RZSWV4AAV2hM.jpg

நேற்­று­முன்­தினம் மாலை வேளையில் முஸ்லிம் இளை­ஞர்கள் சிலர் அப்­பி­ர­தே­சத்தில் சிங்­கள மக்கள் செறிந்து வாழும் பிர­தே­சத்­தி­னூ­டாக பய­ணித்­துள்­ளனர்.  இதன்போது அந்த இ­ளை­ஞர்­களை சிங்­கள இளை­ஞர்கள் தாக்­கி­யுள்­ளனர். அதனைத் தொடர்ந்து அங்கு அமை­தி­யின்மை ஏற்­பட்­ட­துடன் இரு தரப்பினரும் மோதிக்­கொண்­டுள்­ளனர். 

DO4RZSQVwAAoGDc.jpg 

இதே­வேளை குறித்த சம்­ப­வத்­துடன் தொடர்­பு­பா­டாத ஒருவர்  மஹ்ரிப் தொழு­கைக்குச் சென்று வீடு திரும்­பிக்­கொண்­டி­ருந்த வேளையில் வழி­ம­றிக்­க­பட்டு தக்­கப்­பட்­டுள்ளார். எனவே  படு­கா­யங்­க­ளுக்­குட்­பட்ட அவர் கார­பிட்­டிய வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பெற்று வரு­கிறார்.

DO4RZSQVAAAEZIU.jpg

மேலும்  அங்கு அமை­தி­யின்மை  ஏற்­பட்­டதை அறிந்­து­கொண்ட பொலிஸார் சம்­பவ இடத்­திற்கு விரைந்து நிலை­மையை கட்­டுப்­பாட்டுக்குள் கொண்­டு­வ­ரு­தற்கு முயற்­சித்­தனர். மேலும் விசேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரும் வர­வ­ழைக்­கப்­பட்டு பாது­காப்பு கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டனர். 

DO4RZSQUMAAbWdD.jpg

இதனையடுத்து இரவு 10.30 மணி­ய­ளவில்  நிலைமை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ள­துடன் சம்­ப­வத்­துடன் சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் என்ற சந்­தே­கத்தின்  பேரில் 19 பேரை காலி பொலிஸார் கைது செய்­துள்­ளனர். 

DO2kbZXW0AAohzc.jpg

இந்நிலையில், இன்று காலை 9 மணிவரை அப் பகுதியில் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் நிலைமை சுமுகமடைந்துள்ள நிலையில் ஊரடங்குச்சட்டம் நீக்கப்பட வாய்ப்புள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

DO2kbG3XkAYkAnY.jpg

இதே­வேளை பிர­தே­சத்தில் அமைதியை ஏற்படதையடுத்து நேற்று காலை காலி பொலிஸ் நிலையத்தில் சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சம்பவத்தையடுத்து விசேட அதிரடிப்படையினர் தொடர்ந்தும் அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

http://www.virakesari.lk/article/27196

  • தொடங்கியவர்

கைது செய்யப்பட்ட 19 பேருக்கும் 30ஆம் திகதி வரை விளக்கமறியல்

காலி மாவட்டத்தின் ஜின்தோட்டை எனும் பிரதேசத்தில் இரண்டு இனக் குழுக்களிடையே  ஏற்பட்ட  முறுகல்நிலையை அடுத்து  முஸ்லிம்களுக்கு  சொந்தமான 50க்கும் மேற்பட்ட வீடுகளும், வியாபார நிலையங்களும் அடித்துடைக்கப்பட்டுள்ளன.

குறித்த இச் சம்பவத்தோடு தொடர்பட்டுள்ளனர் என சந்தேகத்தின் பேரில் 19 பேரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.

கைது செய்ய்ப்பட்ட குறித்த 19 சந்தேக நபர்களும் எதிர் வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்படுவர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவத்தார்.

http://www.virakesari.lk/article/27213

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

காலியில் மீண்டும் ஊரடங்குச் சட்டம்

காலி மாவட்டத்தின் சில பகுதிகளில் நேற்று இரவு ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலை காரணமாக அப்பகுதியின் சில பிரதேசங்களில் மீண்டும் ஊரடங்குச் சட்டம் இன்று மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை  மணிவரை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருந்துவத்தை, வெலிபிட்டிமோதர, மஹாலபுகல, உக்வத்த, ஜின்தோட்டை (மேற்கு மற்றும் கிழக்கு), பியதிகம ஆகிய பிரதேசங்களிலேயே இன்று மாலை 6 மணி முதல்  அமுலுக்கு வரும் வகையில் இந்த ஊரடங்கு சட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

http://www.virakesari.lk/article/27212

  • கருத்துக்கள உறவுகள்

இன்னமும் குடுத்து முடியல்லையோ...நடிச்சாமத்திலை இந்த ரிசாத்து நானா போனவராம் ..இந்த நேரம் சேர்த்து  போட்டிருக்கலாம்...

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, alvayan said:

இன்னமும் குடுத்து முடியல்லையோ...நடிச்சாமத்திலை இந்த ரிசாத்து நானா போனவராம் ..இந்த நேரம் சேர்த்து  போட்டிருக்கலாம்...

19 சிஙகளவர் வீடுகள் எரிக்கப் பட்டுள்ளன... பதிலுக்கே சிங்களவர்கள் தாக்கினர் என கொழும்பு செய்திகள் சொல்கின்றன.

  • தொடங்கியவர்

கிந்தோட்டையில் மீண்டும் “ஊர்கள்” அடங்கின….

hin.jpg

காலி, கிந்தோட்டை பிரதேசத்தில் சில பகுதிகளுக்கு இன்று மாலை 6.00 மணி முதல் நாளை காலை 6.00 மணிமுதல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என காவற்துறையினர்  தெரிவித்துள்ளனர்.

வெலிபிட்டிமோதர, மஹஹபுகல, உக்வத்த, கிந்தோட்டை மேற்கு மற்றும் கிழக்கு, பியந்திகம, குருந்துவத்த ஆகிய கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கு இவ்வாறு ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

காலி கிந்தோட்டைப் பிரதேசத்தில் நேற்று இரவு ஏற்பட்டிருந்த அமைதியின்மையை அடுத்தே இன்றைய தினமும் இந்த ஊடரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது.  கிந்தோட்டை பகுதிக்கு நேற்று வெள்ளிக்கிழமை இரவு சென்ற  வெளியிடத்தை சேர்ந்த குழுவினரால் முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.  இந்த தாக்குதல்களால் அந்த பகுதியிலுள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளும் வியாபார நிலையங்களும் தாக்கப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும் கிந்தோட்டை பிரதேசத்தில் ஏற்பட்ட அமைதியின்மை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/archives/50435

  • தொடங்கியவர்

கிந்தோட்டை பகுதிக்கு ஞானசார தேரர் விஜயம்

23658481_1544077095678617_64536946873435

காலி, கிந்தொட்ட பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற அசம்பாவிதம்தொடர்பில் கண்டறிய பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசாரதேரர் உள்ளிட்ட குழுவினர் அப்பகுதிக்கு விஜயம் செய்துள்ளனர்.

அங்குள்ள நிலைமை கண்டறிந்து, விசேடமாக காயமடைந்தவர்கள் மற்றும்சொத்து சேதம் ஏற்பட்டவர்கள் தொடர்பில் தகவல்களைத் திரட்டிஅப்பிரதேசத்தில் சமாதானத்தை உறுதிப்படுத்த பொதுபல சேனா குழுவினர்அப்பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளதாக இன்று காலை வெளியிட்டஅறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதேவேளை, அங்கு விஜயம் செய்த குழுவினர் காலி மாவட்ட செயலகத்தில்விசேட சந்திப்பொன்றில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.madawalanews.com/2017/11/blog-post_247.html

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Nathamuni said:

19 சிஙகளவர் வீடுகள் எரிக்கப் பட்டுள்ளன... பதிலுக்கே சிங்களவர்கள் தாக்கினர் என கொழும்பு செய்திகள் சொல்கின்றன.

யாழ்ப்பாணக் கஞ்சா வேலை செய்யிது....அப்ப காவியும்...காவிக்கோவிலும்தான் காரணம் என்று ரிசாத்து சொன்னது....சீனாவும் மியன்மார் போக வேண்டியதுதான்...

  • தொடங்கியவர்

STF எங்களது வீடுகளை உடைத்தார்கள் ; கிந்தோட்டை முஸ்லிம்கள் அமைச்சர் ஹக்கீமிடம் முறைப்பாடு..

23621300_1544064772346516_18967146959682
பொலிஸார் மற்றும் எஸ் டி எப் எங்களது வீடுகளை உடைத்ததாக கிந்தோட்டை பிரதேச மக்கள் அமைச்சர் ஹக்கீமிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
 
காலி கிந்தொட்டை பிரதேசத்திற்கு ஶ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் உட்பட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.மன்சூர் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்லம் ஆகியோர் களத்திற்கு இன்று சென்றுள்ளனர்.
 
இதன் போது பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டது.
 
இதன்போது அங்கு கருத்து வெளியிட்ட பிரதேசவாசிகள் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் தங்கள் வீடுகளை தாக்கியதாக குறிப்பிட்டுள்ளனர்.
 
  • கருத்துக்கள உறவுகள்
கலவரம் சிங்களவர் தமிழர்களிடையே ஏற்பட்டிருந்தால்... முசுலீம்களும் சிங்களருடன் இனைந்து தமிழர் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தும் சூறையாடியும் குதூகலித்திருப்பார்கள்.
 
இது நான் அநுராதபுரத்தில் கண்ணால் கண்ட உண்மை.  
  • தொடங்கியவர்

பாதுகாப்பு பிரிவினர் முஸ்லிம்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தும் அளவுக்கு நல்லாட்சியில் சட்டம் ஒழுங்கு உள்ளது..

23561711_1544439208975739_59390474751822
 
காலி கிந்தோட்டையில் முஸ்லிம்களின் வீடுகள் மீது பாதுகாப்பு படையினர்தாக்குதல் நடாத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பூரண விசாரணைநடத்த வேண்டும்  என பானதுறை பிரதெச சபையின் முன்னாள் தலைவர்இபாஸ் நபுஹான் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில்குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது......

காலி கிந்தோட்டையில் சில நாட்களாக முஸ்லிம்கள் மீது தாக்குதல்நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த தாக்குதலின் பின்னணியில்இவ்வரசு உள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது. மிகப் பெரிய பிரச்சினைசென்று கொண்டிருக்கிறது என நன்கு தெரிந்தும் நேற்று மாலை பாதுகாப்புவாபஸ் பெறப்பட்டுள்ளது.சுமூக நிலை தோன்றியதை உறுதிய செய்யமுன்பே வாபஸ் பெறப்பட்டமை இனவாத செயலை செய்வோருக்கு வழிவிடும் வகையில் செய்யப்பட்டதா என்ற சந்தேகம் எழுகிறது. இதனைஇவ்வாட்சியாளர்களால் மாத்திரமே செய்ய முடியும்.

தற்போதெல்லாம் எது இடம்பெற்றாலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஸவை குற்றம் சுமத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனையும் அவரது தலையில் போட்டுவிட முயற்சிப்பார்கள் என்பதில்ஐயமில்லை

இந்த பிரச்சினையின் போது வீடுகளை பாதுகாப்பு பிரிவினரே முன்னின்றுஉடைத்ததாக அங்குள்ளவர்கள் பகிரங்கமாகவே கூறுகின்றனர். பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மானும் பாதுகாப்பு படையினரின்செயற்பாடுகளில் சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளமைகுறிப்பிடத்தக்கது.இன்று இராணுவத்தினரே இச் செயலை செய்கின்றார்கள்என்றால் இதன் பின்னால் அரச ஆதரவு இருக்க வேண்டும்.

இதுவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் காலத்தில்நடந்திருந்தால், இதனை முன்னாள் ஜனாதிபதியே திட்டமிட்டு செய்வதாககூறியிருப்பார்கள். ரதுபஸ்வல பகுதியில் ரானுவம் துப்பாக்குச்சூடு நடத்தியபோது மஹிந்தவே அங்கு சென்று துப்பாக்கி சூடு நடத்தியது போலவிமர்சித்தார்கள்.

இன்று இப்படி நடந்தும் யாருமே இவ்வரசை குற்றம் சுமத்துவதாக இல்லை. முஸ்லிம் அரசியல் வாதிகள் அனைவரும் அரசின் நடவடிக்கையில் பலகுறைபாடுகள் இருப்பதை நன்கு அறிந்தும் அரசியல் இலாபங்களை கருத்தில்கொண்டு அரசின் செயற்பாட்டை பாராட்டிக்கொண்டிருக்கின்றனர்.

இந் நிலையை எமது அரசியல் வாதிகள் தொடர்வாக இருந்தால் எந்தவித சிறுஅச்சமுமின்றி மீண்டும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் என்பதில்ஐயமில்லை. இந் நேரத்தில் இவ்வரசுக்கு அழுத்தம் வழங்கும் வகையிலானசெயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். அதுவே எதிர்காலத்தில்இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க உதவும்.

http://www.madawalanews.com/2017/11/blog-post_898.html

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதுக்கு இல்லை.ஆனால் நல்லது.:unsure:

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, நவீனன் said:

நபுஹான் சார்.. இதுக்காக பிரான்சில் ஒரு மாபெரும் ஒன்றுகூடல் பண்ணமாட்டீங்களா? தமிழர்கள் எதாச்சும் பண்ணினாதான் 27 வருஷத்துக்கு அப்புறமும், உங்களை அவங்க மண்ணில் மறுபடியும் ஏத்துக்கிட்டதுக்கு அப்புறமும்... வீம்புக்காக பண்ணுவீங்களா?

உலகத்திலேயே மிகவும் கொடூரமான எளிய நிகழ்வுகளில் ஒன்று சனசந்தடி மிக்க பாதையைக் கடக்க ,'குருடனுக்கு குருடன் கையைப் பிடித்து வழி காட்டுவது'.நேற்று இரவு காலி கிந்தோட்டைப் பகுதியில் நடந்த வன்முறைக்குப் பிறகு சிலர் ஆலோசனை என்ற பெயரில் அள்ளி வழங்கும் முத்துக்களைப் பார்க்கும் போது இப்படித் தான் தோன்றுகிறது

'திருப்பி அடி என்றும் தாக்கு என்றும் ஜிஹாத் கோஷங்கள்'உடன் சிலர் கிளம்பி இருக்கிறார்கள்.அநேகமானோர் மத்திய கிழக்கில் இருப்பவர்கள்.அல்லது ஐ எஸ் போன்ற பயங்கரவாத மென்டலிட்டியில் இருப்பவர்கள்.பலருக்கு காலி மாநகர் இலங்கைப் படத்தில் எங்கே இருக்கிறது என்று கூடத் தெரியாது..

இந்தப் பிரச்னையின் ஆணி வேர் வெறும் தம்மா துண்டு வாகன விபத்து.கூட்டிக் கழித்துப் பார்த்தால் நேற்று நடந்த பொருளாதார இழப்புக்கு முழுக் காரணமும் எமது சமூகத்தில் இருந்த ஒரு சில ஐசக் நியூட்டன்களும் ஐன்ஸ்டீன்களும் தான்..அந்த அறிவு ஜீவி ஆத்மாக்கள் மன்னிக்கவேண்டும்.இங்கே குறிப்பிடுவது விஞ்ஞானத்தில் அல்ல..போக்கிரித்தனத்தில்....

ஒரு  பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவரின் ஆட்டோ வந்து மோதுகிறது.முஸ்லிம் சிறுமி காயமடைகிறாள்..சம்பந்தப்பட்ட ஆட்டோ டிரைவர் நஷ்ட ஈடும் செலுத்துகிறான்.அவ்வளவுடன் முடிந்து போய் இருக்க வேண்டிய விடயம் இது..ஆனால் சில பிற்போக்குவாதிகள் குறித்த டிரைவரைத் தாக்க அவர் ஆட்களை வைத்துக் கொண்டு  தாக்கியவர்களை உதைப்பந்தாட்டம் விளையாடிவிட்டு வரும் போது தாக்கியதாகச் சொல்கிறார்கள்.

 அவ்வளவுதான் ..ஏதோ இது ஆப்கானிஸ்தானோ பாகிஸ்தானோ என்று நினைத்துக் கொண்டு ஒரு கும்பல் சிங்கள ஊருக்குச் சென்று தலிபான் தனமாக தாக்கி இருக்கிறது.துரதிஷ்டம் இதை எல்லாம் எமது செய்தி வழங்குனர்கள் எழுதுவதும் இல்லை..சொல்வதும் இல்லை. உடனே செய்திகளும் வதந்திகளும் இறக்கை கட்டிக் கொண்டு பறக்க காடையர் கும்பல் ஏவிவிடப்பட்டது.

எமது ஒரு சிலரின் பொறுப்பற்றதனத்திற்குக் கிடைத்த நோபல் பரிசுகளையும் தங்க மெடல்களையும் ஆறுதல் பரிசுகளையும் தான் நாம் இப்போது அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம்.........உலகத்தில் வாகன விபத்துக்களுக்கு கலவரம் நடப்பதாய் இருந்தால் இந்தப் பூமியில் டைனோசர்கள் அழிந்தது போல மனித இனம் எப்போதோ அழிந்து போய் இருக்கும்...

கல்வி அறிவு இல்லாத ஜீவராசிகளால் எவ்வளவு பிரச்னை என்று பாருங்கள்...எந்த வேலை வெட்டியும் இல்லாத ஒரு பட்டிக்காட்டுக் கூட்டம் போய் யாரையாவது கண்டபடி அடித்துவிட்டு வந்தால் சம்பந்தமே இல்லாமல் அடிவாங்குவது என்னவோ ஒன்றுமே தெரியாத அப்பாவிகள் தான்.அடுத்த முக்கியமான விசயம் சந்திரிக்கா காலத்தில் நடந்த மாவனல்லைக் கலவரம், மகிந்த ஜனாதிபதியாக இருந்த போது நடந்த அளுத்கம கலவரம் மாதிரி தான் இதுவும் என்று ஜோடிப்பு செய்கிறார்கள்..அந்தப் பிரச்னைகளும் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த அநீதிகளும் வேறு..இது வேறு.இது முட்டாள்தனத்தின் உச்சம்...

இந்நிலையில் சில முஸ்லிம் அரசியல்வாதிகள் போய் நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து இருப்பதாகவும் 'அவரால் தான் இது சாத்தியமானது,இவரால் தான் மக்களுக்கு கக்கா போக முடிந்தது' என்ற ரேஞ்சுக்கு அல்லக்கைகளின் காக்கா கூச்சல்கள் வேறு..இந்தக் கன்றாவிக் கோலங்களைப் பார்க்கும் போது சாகப் போகும் பெண்ணுடன் இரத்தக் காட்டேறிகள் உறவு கொள்வது போல இருக்கிறது...

Zafer Ahmad 

இன்றைய உலகிலுள்ள இரண்டு மிக மோசமான இனமதவெறிக் குழுக்களுக்கிடையிலான சிறு மோதல் தான் இது!

சரியோ பிழையோ இனமதவெறிக் குழுக்களுக்களின் அழிவு இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால் சாத்தியப்படலாம்.
 
33 minutes ago, போல் said:

இன்றைய உலகிலுள்ள இரண்டு மிக மோசமான இனமதவெறிக் குழுக்களுக்கிடையிலான சிறு மோதல் தான் இது!

சரியோ பிழையோ இனமதவெறிக் குழுக்களுக்களின் அழிவு இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதால் சாத்தியப்படலாம்.
 
இது தமிழனுக்கு சோகமான செய்தி, ஏன் என்றால் போர்த்துக்கேயர் காலத்து கலவரத்தின் போது முஸ்லிம்கள் அம்பாறை மாவட்டத்தை நோக்கி இடம் பெயர்ந்து அந்த மாவட்டம் பறிபோனது.

ஆங்கிலேயர் கால்த்து கலவரத்தின் போது திருகோணமலை நோக்கி இடம்பெயர்ந்து அந்த மாவட்டத்தை கைபற்றினர்.

இப்ப நடக்கும் கலக்த்தின் பின் எந்த தமிழன் மாவட்டம் பறிபோகுமோ?????

யாழ்பாணமா?கிளிநொச்சியா?முல்லைதீவா? அல்லது வேகமாக பறிபோய்கொண்டிருக்கும் வவுனியாவா அல்லது ஏற்கனவே பறிபோன மன்னாரா????

  • கருத்துக்கள உறவுகள்

எங்கண்ட பாதுகாப்புப் படைகள், ஒரு கையில் மனித உரிமை சாசனைத்தையும், மறுகையில் துப்பாக்கியையும் வைத்துக் கொண்டெல்லோ போர் செய்தவையள் என்று சொன்ன வரிடம் போய், இந்த முறைப்பாடு செய்வது நியாயமோ?

தலைவலியும், நோவும் தனக்கு வந்தால் தான் புரியும்.

23 hours ago, நவீனன் said:

STF எங்களது வீடுகளை உடைத்தார்கள் ; கிந்தோட்டை முஸ்லிம்கள் அமைச்சர் ஹக்கீமிடம் முறைப்பாடு..

23621300_1544064772346516_18967146959682
பொலிஸார் மற்றும் எஸ் டி எப் எங்களது வீடுகளை உடைத்ததாக கிந்தோட்டை பிரதேச மக்கள் அமைச்சர் ஹக்கீமிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
 
காலி கிந்தொட்டை பிரதேசத்திற்கு ஶ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் உட்பட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.மன்சூர் , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்லம் ஆகியோர் களத்திற்கு இன்று சென்றுள்ளனர்.
 
இதன் போது பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டது.
 
இதன்போது அங்கு கருத்து வெளியிட்ட பிரதேசவாசிகள் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் தங்கள் வீடுகளை தாக்கியதாக குறிப்பிட்டுள்ளனர்.
 
Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

image_1511149133-70aa552f06.jpg

  • தொடங்கியவர்
காலி அசம்பாவிதம் பொலிஸாருக்கு கிடைத்த படிப்பினை
 
image_514c1bff7f.jpgகாலி-கிந்தொட்டை பகுதியில் அண்மையில் இடம்பெற்ற சம்பவத்தை தடுக்கமுடியாமல் பொலிஸ் தரப்பு தோல்வியடைந்து விட்டதை  ஏற்றுக்கொள்வதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அங்கு ஏற்பட்ட அசம்பாவித சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு முடியாமல் போனமை பாரிய பிரச்சினை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காலி பிரதேசத்தில் நேற்று(20) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டப் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கிந்தொட்டை சம்பவத்தை படிப்பினையாக எடுத்துக்கொண்டு எதிர்வரும் காலங்களில் சிறப்பாக பொலிஸார் செயற்படவுள்ளதாகவும் பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/காலி-அசம்பாவிதம்-பொலிஸாருக்கு-கிடைத்த-படிப்பினை/175-207591

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.