Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கழுத்தை அறுத்து விடுவேன் – லண்டனில் சைகையில் மிரட்டிய சிறிலங்கா இராணுவ அதிகாரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

யாருக்கு கிடைத்தது சுதந்திரம்?

 

 

 

கழுத்தை அறுத்து விடுவேன் – லண்டனில் சைகையில் மிரட்டிய சிறிலங்கா இராணுவ அதிகாரி

 

sri lanka army-threat-uk (1)பிரித்தானியத் தலைநகர் லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் பணியாற்றும், சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவர், தூதரகத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்த புலம்பெயர் தமிழர்களுக்கு சைகை மூலம் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

சிறிலங்காவின் 70 ஆவது சுதந்திர நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின் முன்பாக கூடிய புலம்பெயர் தமிழர்கள், ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

அப்போது, தூதரக அதிகாரிகளுடன் வெளியே வந்த சீருடை அணிந்த சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவர், புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து, கோபத்துடன் கழுத்தை அறுத்து விடுவேன் எனற சைகை மூலம் எச்சரித்துள்ளார்.

sri lanka army-threat-uk (1)

sri lanka army-threat-uk (2)

sri lanka army-threat-uk (3)

sri lanka army-threat-uk (4)

அடுத்தடுத்து மூன்று முறை அவர் கழுத்தில் கை வைத்து இவ்வாறு பகிரங்கமாக அச்சுறுத்தல் விடுத்து விட்டு கோபத்துடன் உள்ளே சென்றார்.

இந்தக் காணொளி தற்போது, சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

http://www.puthinappalakai.net/2018/02/05/news/28845

 

 

பிரித்தானியாவிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்னால் போராட்டம்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒர் ஜனநாயக நாட்டில் சாதரணா உயர்ஸ்தாரனிகரின் அலுவலகத்திற்கு முன்பாக புலிக்கொடி பிடித்து ஆர்ப்பாட்டம் செய்தவர்களையே பெல்ல கபனவா (கழுத்தை வெட்டுவேன்) என சைகை காட்டும் இவன், புலிக்கொடி ரீசெட் போட்டு இலங்கைக்கு சென்றால் என்ன நடக்கும் என சொல்லத்தேவையில்லை. ஒருவேளை கொலர் இல்லாத ரீசேட் போட்டு வரச்சொல்கின்றானோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

சனநாயக உரிமை உள்ள ஒரு நாட்டுக்கு வந்து நின்று கொண்டு.. காட்டுமிராண்டித்தன சிங்கள பாசிசத்தை படுகொலை வெறியை வெளிப்படுத்தும் இந்த மிருகத்தனமான செயலை.. பிரித்தானிய சட்ட வரையறைக்குள் கொண்டு வந்து.. இந்தச் சிங்கள இராணுவ வெறியனை.. சட்டத்தின் வாயிலாக தண்டிக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

லண்டன் பிரதான நீதிமன்றிற்கு இந்தக் காணொளி சமர்ப்பிக்கப்படுவதன் வாயிலாக.. இந்தப் போர்க்குற்றவாளி.. பிரித்தானியவை விட்டு வெளியேறுவது தடுத்து நிறுத்தப்பட்டு.. இவர் மீது கடும் நடவடிக்கைக்கு சட்ட ரீதியான நடவடிக்கைகளை பிரித்தானியா வாழ் புலம்பெயர் சமூகம் முன்னொடுக்க வேண்டும்.

இந்தக் காணொளி மூலம் சொறீலங்காவின் மனித இன விரோத செயற்பாடுகளையும்.. அந்த நாடு பயங்கரவாத அரசின் மற்றும் அரச படைகளைக் கொண்ட பயங்கரவாத நாடாக உலகின் முன் இனங்காட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதும்.. இந்த சிங்கள அரச பயங்கரவாதத்திற்கு எதிராக தமிழ் மக்கள் நடத்தியது தார்மீக போராட்டம் என்பதை உலகம் உணரவும் இந்தச் சந்தர்ப்பத்தை உச்ச அளவில் பாவிக்க வேண்டும். 

Edited by nedukkalapoovan

யார் இந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ?

 

Brigadier Priyanka Fernandoலண்டனில் புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து. கழுத்தை அறுத்து விடுவேன் என சைகை மூலம் எச்சரித்த  பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, ஆயிரக்கணக்கான தமிழ்ப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட இறுதிக்கட்டப் போரில், இராணுவ படைப்பிரிவு ஒன்றுக்குத் தலைமை தாங்கிய அதிகாரி என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சிறிலங்காவில் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பும், அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டமும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

2008- 2009ஆம் ஆண்டு காலப்பகுதில், மணலாறு பகுதியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி முன்னேறிய 59 ஆவது டிவிசனில் இடம்பெற்றிருந்த 11 ஆவது கெமுனுகாவல்படை பற்றாலியனின் கட்டளை அதிகாரியாக பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ பணியாற்றியிருந்தார்.

முல்லைத்தீவு மருத்துவமனை மீதான பீரங்கித் தாக்குதலை 59 ஆவது டிவிசன் படையினரே மேற்கொண்டனர் என்று ஐ.நா விசாரணை அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

http://www.puthinappalakai.net/2018/02/06/news/28869

 

 

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை வெளியேற்ற கோரும் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்

 

sri lanka army-threat-uk (1)லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து. கழுத்தை அறுத்து விடுவேன் என சைகை மூலம் எச்சரித்த சிறிலங்கா இராணுவ பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை, பிரித்தானியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின்  தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் ரயனும், நாடாளுமன்ற உறுப்பினர் சோபெய்ன் மக் டொனாவும் பிரித்தானிய வெளிவிவகாரச் செயலரிடம் இந்தக் கோரிக்கைகளை விடுத்துள்ளனர்.

லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவின்  இராஜதந்திர ஆவணங்களை விலக்கிக் கொண்டு, அவரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.

sri lanka army-threat-uk (3)

இதுதொடர்பாக அவர்கள், தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவரான பொரிஸ் ஜோன்சனுக்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

அதில், இந்த நாட்டில் விருந்தினராக, அதிகாரி நிலையில் இருந்து கொண்டு பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, அச்சுறுத்தல் விடுத்துள்ளமை, பொருத்தமற்றதும், ஏற்றுக்கொள்ள முடியாததுமான செயல் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

http://www.puthinappalakai.net/2018/02/06/news/28867

  • கருத்துக்கள உறவுகள்

http://www.thesundayleader.lk/2018/02/06/sri-lankan-official-in-uk-suspended-over-throat-cutting-gesture/

பதவி நிறுத்தம். உடனடியாக மீளழைப்பு

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

http://www.thesundayleader.lk/2018/02/06/sri-lankan-official-in-uk-suspended-over-throat-cutting-gesture/

பதவி நிறுத்தம். உடனடியாக மீளழைப்பு

இது தான் நடக்கும், இதற்குமேல் நடப்பதற்கு ஒன்றுமே இல்லை இந்த விடயத்தில்.

  • கருத்துக்கள உறவுகள்

துப்பு இல்லாமல் எவன் எவன் காலையெல்லாமோ நக்கி உதவி கேட்டு போரிட்ட முதுகெலும்பில்லாத தெருப்பொறுக்கிள் தான் இந்த லங்கள நாய்கள்...

வரலாறு புத்தகத்தில் லங்களவன் போர் முறையை எடுத்துறைக்க கறுப்பு பக்கம் காத்திருக்கிறது...

வருங்கால உலக சந்ததியினர் காறி துப்புவார்கள் உன்னைனை போன்ற ஓனாய்களைப் பார்த்து... 

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தமிழர்களுக்கு தான் செய்ததை, இங்கிலாந்தில் சைகையில் காட்டியிருக்கிறார் அவ்வளவுதான்.

இங்கிலாந்தில் இருந்து இலங்கைக்கு திருப்பியழைக்கப்பட்டால் அவர் எதையுமே இழக்கப்போவதில்லை, இங்கிலாந்தின் சொகுசு வாழ்க்கையை விட அதிகமாக இலங்கையில் அவர் அனுபவிக்க ஏற்பாடு செய்து கொடுப்பார்கள்.

சிங்கள ஊடங்களில் இப்போதே ஹீரோ ஆகியிருப்பார் , இலங்கை வந்து இறங்கியதும் மாலைகள் மரியாதைகள்தான்.

இதன்மூலம் மனித உரிமைகளை சர்வதேச தரத்தில் இலங்கை பேணுகிறது என்று அர்த்தமல்ல, 

அது எப்போது நம்பப்படுமென்றால், இந்த பிரிகேடியரின் பதவியிழப்புக்கும். திருப்பியழைப்புக்கும் காரணமான ஆர்ப்பாட்டத்தில் முன்னணியில் நின்றோர்  பகிரங்கமாக இலங்கைவந்து திரும்பி செல்லும்போது ,  சிங்கள அரசு அவர்கள் ஜனநாயக வழில் போராடியவர்கள் என்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே,

அல்லது ஜனநாயக வழியில்தானே போராடினோம்,தாராளமாக இலங்கை சென்று வரலாம், இலங்கை அரசு எங்களை புரிந்துகொள்ளும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நம்பும்வரையில் மட்டுமே!

தமிழர்களை மிரட்டிய இராணுவ அதிகாரி இடை நிறுத்தம்

 

 

பிரித்தானியாவில் ஆர்ப்பாட்டம் நடத்திய புலம்பெயர் தமிழர்களை மிரட்டியதாகக் கூறப்படும் இலங்கை பிரிகேடியரை, அரசாங்கம் அவரது பணிகளில் இருந்து உடனடியாக தற்காலிகமாக நிறுத்தி வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.

2_Army_1.JPG

சுதந்திர தினத்தன்று இலங்கை அரசுக்கு எதிராக பிரித்தானியாவில் புலம் பெயர் தமிழர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது. இவ்வார்ப்பாட்டம் லண்டன் இலங்கைத் தூதரகத்துக்கு முன்பாக நடத்தப்பட்டது.

இதன்போது, ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களின் கழுத்தை வெட்டுவதாக இலங்கை தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோ சைகை செய்தமை சமூக வலைதளங்களில் தீயாகப் பரவியது.

இதையடுத்து, அவரை சேவையில் இருந்து உடனடியாக இடைநிறுத்தி வைக்குமாறு இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரிகேடியர் பிரியங்கர, 2008 - 2009 காலப் பகுதியில் வெலிஓய, ஜானகபுர பகுதியில் போரிட்ட 11 கெமுனு படைப்பிரிவுக்குத் தலைமை தாங்கியிருந்தார்.

போர்க்குற்றச்சாட்டுக்களில், குறித்த படைப்பிரிவு மீது கடுமையான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/30332

பிரித்தானியத் தலைநகர் லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் பணியாற்றும், சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவர், தூதரகத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்த புலம்பெயர் தமிழர்களுக்கு சைகை மூலம் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

சிறிலங்காவின் 70 ஆவது சுதந்திர நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தின் முன்பாக கூடிய புலம்பெயர் தமிழர்கள், ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

அப்போது, தூதரக அதிகாரிகளுடன் வெளியே வந்த சீருடை அணிந்த சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவர், புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து, கோபத்துடன் கழுத்தை அறுத்து விடுவேன் எனற சைகை மூலம் எச்சரித்துள்ளார்.

sri lanka army-threat-uk (1)

sri lanka army-threat-uk (2)

sri lanka army-threat-uk (3)

sri lanka army-threat-uk (4)

அடுத்தடுத்து மூன்று முறை அவர் கழுத்தில் கை வைத்து இவ்வாறு பகிரங்கமாக அச்சுறுத்தல் விடுத்து விட்டு கோபத்துடன் உள்ளே சென்றார்.

இந்தக் காணொளி தற்போது, சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

http://www.puthinappalakai.net/page/2

 

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை வெளியேற்ற கோரும் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்

sri lanka army-threat-uk (1)

லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களைப் பார்த்து. கழுத்தை அறுத்து விடுவேன் என சைகை மூலம் எச்சரித்த சிறிலங்கா இராணுவ பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை, பிரித்தானியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின்  தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் ரயனும், நாடாளுமன்ற உறுப்பினர் சோபெய்ன் மக் டொனாவும் பிரித்தானிய வெளிவிவகாரச் செயலரிடம் இந்தக் கோரிக்கைகளை விடுத்துள்ளனர்.

லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவின்  இராஜதந்திர ஆவணங்களை விலக்கிக் கொண்டு, அவரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரியுள்ளனர்.

sri lanka army-threat-uk (3)

இதுதொடர்பாக அவர்கள், பிரித்தானியாவின் வெளியுறவுச் செயலர் பொரிஸ் ஜோன்சனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

அதில், இந்த நாட்டில் விருந்தினராக, அதிகாரி நிலையில் இருந்து கொண்டு பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, அச்சுறுத்தல் விடுத்துள்ளமை, பொருத்தமற்றதும், ஏற்றுக்கொள்ள முடியாததுமான செயல் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

http://www.puthinappalakai.net/2018/02/06/news/28867

பிரிகேடியர் பிரியங்கவை சிறிலங்காவுக்கு திருப்பி அழைக்க பிரித்தானியா 2 வாரகாலக்கெடு?

 

Brigadier priyanga fernandoலண்டனில் புலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்திய சிறிலங்கா இராணுவ அதிகாரியான பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை, இரண்டுவார காலத்துக்குள் திருப்பி அழைக்குமாறு பிரித்தானிய அரசாங்கம் சிறிலங்காவிடம் வலியுறுத்தியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிரித்தானிய அரச அதிகாரிகளை மேற்கோள்காட்டி இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அதேவேளை, இந்தச் சம்பவம் தொடர்பாக, விசாரணைகளை ஆரம்பிக்குமாறு லண்டன் பெருநகர காவல்துறையிடமும், பிரித்தானிய அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும், பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவிடம் லண்டன் பெருநகர காவல்துறை விசாரணைகளை மேற்கொள்வதற்கு, அவருக்குள்ள இராஜதந்திர விலக்குரிமை தடையாக இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Brigadier priyanga fernando

பிரிகேடியர் பிரியங்கவிடம் விசாரணைகளை மேற்கொள்வதற்கு முன்னதாக, அவருக்கு பிரித்தானிய அளித்துள்ள இராஜதந்திர விலக்குரிமையை நீக்க வேண்டியிருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை பாதுகாப்பு ஆலோசகர் பணியில் இருந்து இடைநிறுத்தம் செய்வதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு நேற்று அறிவித்திருந்தது.

http://www.puthinappalakai.net/2018/02/07/news/28890

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ பணியில் இருந்து இடைநிறுத்தம் – விசாரணைகள் ஆரம்பம்

லண்டனில் போராட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த, சிறிலங்கா இராணுவ அதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ உடனடியாக, பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகர் பதவியை வகித்து வந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, புலம்பெயர் தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் சைகை செய்த காணொளி பரவியதை அடுத்து, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

உடனடியாக அவரை மினிஸ்டர் கொன்சீலர் (பாதுகாப்பு) பணியில் இருந்து இடைநிறுத்துமாறு லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்துக்கு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Brigadier Priyanka Fernando

அத்துடன் சிறிலங்கா இராணுவத்தை உள்ளடக்கிய, சிறிலங்காவில் உள்ள அதிகாரிகள் இந்தச் சம்பவம் தொடர்பாக உடனடியாக ஆரம்பகட்ட விசாரணைகளை தொடங்கவுள்ளனர்” என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

http://www.puthinappalakai.net/2018/02/06/news/28876

தமிழர்களின் கழுத்தை அறுப்பதாக மிரட்டிய பிரிகேடியரை மீண்டும் பணிக்கமர்த்தினார் மைத்திரி…

Brigadier-Priyanka-Fernando.jpg?resize=6
லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை மீண்டும் பணியில் இணைத்துக் கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இலங்கை வெளிவிவகார அமைச்சுக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க கூறியுள்ளார்.

கடந்த சுதந்திர தினத்தன்று லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது, பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தும் வகையில் கழுத்தை அறுப்பதாக சைகை காட்டினார் என கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டது.

இதனையடுத்து தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் ராணுவ பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை, உடனடியாக அமுலுக்கும் வரும் வகையில் பணி இடைநிறுத்தம் செய்யுமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்திருந்தது.

எவ்வாறாயினும் அந்த பணி நிறுத்தத்தை இரத்து செய்து அவரை மீண்டும் பணியில் இணைத்துக் கொள்ளுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க கூறியுள்ளார்.

http://globaltamilnews.net/2018/65605/

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ தொடர்பில் லண்டன் காவல்துறையினர் விசாரணை…

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

Report.jpg?resize=566%2C800

முறைப்பாட்டுப் பிரதி…

பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் கடயைமாற்றி வரும் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ தொடர்பில் லண்டன் காவல் துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த 4ம் திகதி லண்டனில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வுகளின் போது, இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு எதிரில் புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருந்தவர்களின் கழுத்தை அறுத்து கொலை செய்வதாக பிரிகேடியர் பிரியங்க, சைக மூலம் காண்பித்திருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பிலான காணொளி இணைய மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும், பிரிகேடியர் பிரியந்தவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டவுரிஸ், இலங்கை வெளிவிவகார அமைச்சிடம் முறைப்பாடு செய்திருந்தார்.

பிரிகேடியர் பிரியங்கவிற்கு எதிரான முறைப்பாடுகள் நிரூபிக்கப்பட்டால் அவர் ராஜதந்திர பதவிகளை வகிக்கவோ அல்லது பிரித்தானியாவில் தங்கியிருக்கவோ அனுமதிக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகிறது. தமிழர்களுக்கான அனைத்து பாராளுமன்ற உறுப்பினர் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் போல் சாலி, பிரிகேடியர் பிரியங்கவின் செயற்பாடு குறித்து பிரித்தானிய வெளிவிவகார செயலாளரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

 

 

http://globaltamilnews.net/2018/65723/

‘ ஒரு காணொளியை வைத்து அதிகாரிகளை நீக்க முடியாது’ – சிறிலங்கா இராணுவத் தளபதி

 

Lieutenant General Mahesh Senanayakeவெறுமனே ஒரு காணொளியை வைத்துக் கொண்டு, பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை பதவியில் இருந்து நீக்க முடியாது என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.

லண்டனில் புலம்பெயர் தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை, பாதுகாப்பு ஆலோசகர் பணியில் இருந்து இடைநிறுத்துமாறு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு, லண்டனில் உள்ள சிறிலங்கா தூதரகத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று ரத்துச் செய்துள்ளதுடன், பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவை மீண்டும் பணியில் இணைந்து கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க,

“வெறுமனே சமூக வலைத்தள காணொளி ஒன்றின் அடிப்படையில் அவர்கள், அதிகாரிகளை நீக்க முடியாது. விசாரணைகள் மட்டுமே முடிவு செய்யும்.

வெளிவிவகார அமைச்சும், சிறிலங்கா தூதரகமும் விசாரணைகளை நடத்தும்.

பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ, கேணலாக இருந்த போது, மனிதாபிமானப் போர் நடவடிக்கையில் 11 ஆவது கெமுனு காவல்படையின் கட்டளை அதிகாரியாக, முல்லைத்தீவின் பல கிராமங்களை மீட்டு, மகத்தான சேவை ஆற்றியுள்ளார்.” என்று தெரிவித்துள்ளார்.

அதேவேளை, சிறிலங்கா இராணுவம் மீண்டும் ஒரு நம்பகமான காணொளி ஆதாரத்தை நிராகரிக்கிறது என்று சிறிலங்காவில் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர்கள் அமைப்பின் கீச்சகப் பதிவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

http://www.puthinappalakai.net/2018/02/07/news/28904

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, MEERA said:

இது தான் நடக்கும், இதற்குமேல் நடப்பதற்கு ஒன்றுமே இல்லை இந்த விடயத்தில்.

இனி ஆள் அடுத்த சொறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் நின்றாலும் நிப்பார் டமிலரசு கட்சி அவருக்கு ஆதராவாக நின்றாலும் ஆச்சரியபடுவதுக்கு இல்லை எல்லாம் ராஜதந்திரம் என்று சொல்லுவினம் அப்போது (சரத் ,ராஜூவுக்கு முதுகில் அடித்தவையலை விட இவர் லண்டனில் தமிழருக்கு எதிராகா இனத்துவேசத்தை கக்கியவர் இது ஒன்றே காணும் சிங்களவர்கள் கண்ணை மூடிக்கொண்டு குத்தி ஜனாதிபதியாக ஆக்கி விடுவார்கள் )

லண்டனில் தமிழர்களை மிரட்டிய பிரிகேடியரின் வைரலாகும் மற்றுமொரு காணொளி

 

லண்டனில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த இலங்கை உயர்ஸ்தானிராலயத்தைச் சேர்ந்த இராணுவ அதிகாரியின் மீது சகலரினதும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் சுதந்திர தினத்தன்று, லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்துக்கு முன்னால் புலம்பெயர்ந்த தமிழர்களினால் குறித்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இதன்போது உயர்ஸ்தானிகராலயத்தைச் சேர்ந்த ப்ரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ என்ற இராணுவ அதிகாரி இந்த அச்சறுத்தலை விடுத்துள்ளார்.

 

 

அவர் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் சைகை செய்யும், காணொளி காட்சிகள் பல சமூக இணையதளங்களில் வெளியாகி வருகின்றன.

இது குறித்து பிரித்தானிய நாடாளுமன்றத்தைச் சேர்ந்த தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக்குழு உறுப்பினர்களான ஜோன் ரயன் மற்றும் சிஹோப்ஹெய்ன் மெக்டொனாஹ் ஆகியோர் பிரித்தானிய வெளிவிவகார செயலாளரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இராஜதந்திரி ஒருவர் பிரிதொரு நாட்டில் இந்த வகையில் செயற்படுவது ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய விடயம் அல்ல எனவும் அவர்கள் கண்டித்துள்ளனர்.

இந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடையவர் என குற்றம் சுமத்தப்படும் பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ உடனடியாக நாடுகடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் முன்வைத்துள்ளனர்.

அத்துடன், அவருக்கு வழங்கப்பட்டுள்ள இராஜதந்திர சலுகைகள் அனைத்தையும் மீளப்பெற உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.

இதேவேளை குறித்த அதிகாரியின் சேவையை உடனடியாக இரத்து செய்யுமாறு லண்டனுக்கான இலங்கை உயர்ஸ்தானிகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இராணுவ அதிகாரி செயல் தொடர்பில் இலங்கை இராணுவம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை வெளிவிகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் பின்னர் ஊடகவியலாளர்கள் சிலர் அவரிடம் வினவிய பல சுவாரஸ்யமான கேள்விகளுக்கு பதிலளிக்கும் காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

 

http://www.tamilwin.com/srilanka/01/173491?ref=home-imp-flag

  • கருத்துக்கள உறவுகள்

பிரிகேடியர் பிரியங்க மீது எழுந்த புதிய சிக்கல்!! 2009இன் ஆதாரங்கள் வெளியாகின...

Report us Dias 1 hour ago

வன்னிப் பகுதியில் நடைபெற்ற போரில் போர்க்குற்றங்கள் மீறப்பட்ட பகுதிகளில் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ பணியாற்றியமை கண்டறியப்பட்டுள்ளது.

லண்டனில் கொலை அச்சுறுத்தல் விடுத்த பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவும் இறுதிப் போரின் போர்க் குற்றவாளி என்ற தகவல் வெளியாகியுள்ளது.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

இவர் 2009 இல் பொது கட்டளை அதிகாரியாகவும், 2010– 2013 வரையான காலப்பகுதியில் கெமுனு வாட்ச் முகாம் கட்டளை அதிகாரியாகவும், 2014- இல் கிளிநொச்சி மாவட்ட கட்டளை அதிகாரியாகவும், 2016 இல் இந்தியாவுடன் கூட்டு இராணுவ பயிற்சி பயிற்சிகளை இயக்கும் அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.

இறுதிப் போரில் சரண் அடைந்தவர்களைப் பொறுப்பேற்று வெலிஒயாவுக்குக் கொண்டு சென்றமை உள்ளிட்ட பல இன அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட அவர், தந்திரோபாய அடிப்படையில் லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

அத்துடன் யுத்த காலப் பகுதியில் பிரிகேடியர் பிரியங்க நேரடியாக பங்கு பற்றிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத் தக்கது.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

http://www.tamilwin.com/srilanka/01/173499?ref=imp-news

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கழுத்தை அறுப்பன் எண்டு சைகை காட்டின ஆமி நல்லவரெண்டு எங்கடை பேஸ்புக்கு ஆக்கள் கதைக்கினம்..:27_sunglasses:

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, குமாரசாமி said:

கழுத்தை அறுப்பன் எண்டு சைகை காட்டின ஆமி நல்லவரெண்டு எங்கடை பேஸ்புக்கு ஆக்கள் கதைக்கினம்..:27_sunglasses:

அப்ப ஆள் ஜனாதிபதி தேர்தலில் நின்றால் கட்டாயம் வெல்லுவார் என்கிறீர்கள் :14_relaxed:

  • பிரி­கே­டி­ய­ரின் அச்­சு­றுத்­தல் பிரிட்­டன் சட்­டத்­தில் குற்­றம்!
callum-macrae-400-seithy.jpg

பிரி­கே­டி­ய­ரின் அச்­சு­றுத்­தல் பிரிட்­டன் சட்­டத்­தில் குற்­றம்!

கெலும் மக்ரே

பிரிட்­ட­னி­லுள்ள புலம்­பெ­யர் தமி­ழர்­களை அச்­சு­றுத்­தும் வகை­யில் பிரி­கே­டி­யர் பிரி­யங்க பெர்­னாண்டோ செயற்­பட்­டமை, பிரிட்­டன் சட்­டத்­தின் கீழ் குரோ­தத்­த­ன­மான குற்­ற­மென சனல் 4 தொலைக்­காட்­சி­யின் மூத்த ஊட­க­வி­ய­லா­ள­ரும் பிர­பல ஆவ­ணப்­பட தயா­ரிப்­பா­ள­ரு­மான கெலும் மக்ரே தெரி­வித்­துள்­ளார்.

இது தொடர்­பில் அவர் தனது கீச்­ச­கத்­தில் பதி­விட்­டுள்­ளார். பிரிட்­டன் சட்­டத்­தின் கீழ் இது குரோ­தத்­த­ன­மான குற்­றம். பிரிட்­டன் அதி­கா­ரி­க­ளால் அவர் கைது­செய்­யப்­பட வேண்­டும்.

மேலும், நிலை­மா­று­கால நீதிப்­பொறி முறையை நிறை­வேற்­று­வ­தற்கு இலங்கை அரசு செயற்­பட்டு வரும் நிலை­யில், பிரி­கே­டி­ய­ரின் இந்­தச்­செ­யல் அதனை பாதிக்­கும் வகை­யில் அமைந்­துள்­ள­தென கெலும் மக்ரே சுட்­டிக்­காட்­டி­யுள்­ளார்.

இலங்கை இரா­ணுவ நீதி­மன்­றில் பிரி­கே­டி­யர் பிரி­யங்க பெர்­ணான்டோ நிறுத்­தப்­பட வேண்­டு­மெ­ன­வும் அவர் மேலும் குறிப்­பிட்­டுள்­ளார்.

http://newuthayan.com/story/67418.html

1 hour ago, குமாரசாமி said:

கழுத்தை அறுப்பன் எண்டு சைகை காட்டின ஆமி நல்லவரெண்டு எங்கடை பேஸ்புக்கு ஆக்கள் கதைக்கினம்..:27_sunglasses:

இப்படி ஒரு ----- கூட்டம் சமூக வலைத்தளங்களில் சீவிக்குது. தமிழ் மக்கள் மீது வன்முறையை அதிகாரத்தை பிரயோகிக்கும் அத்தனை பேரையும் நல்லவர்களாக காட்டி தமிழ் மக்களின் கோபத்தையும் காத்திரமான எதிர்வினைகளையும் நீர்த்து போக செய்வது தான் இவர்களின் நோக்கம். அதே நேரத்தில் தமிழர்களில் எவராவது ஒருவர் நல்லது செய்தாலும் முட்டையில் மயிர் புடுங்குவது மாதிரி அதில் ஒரு பிழையை கண்டு பிடிச்சு அதை குறி வைத்து தாக்கி அவரை செயலிழக்க செய்வினம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.