Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் நண்பர்களுக்கு முதல் வணக்கம்

Featured Replies

யாழ் தளத்தில் தங்களுடன் சேர்ந்து பயணிப்பதில் மிக்க மகிழ்ச்சி.

எனது  எண்ணவோட்டங்களை இங்கே பகிர்ந்துகொள்ளவுள்ளேன், நண்பர்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன.

அன்புடன்,

அருள்மொழிவர்மன்

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für welcome gif

வணக்கம்  அருள்மொழிவர்மன், 
உங்களை... அன்புடன், வருக வருக என  வரவேற்கின்றோம். 
:)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாங்கோ. உங்கள் படைப்புகளைத் தாங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் ! வாங்கோ !! வாழ்த்துக்கள் !!!

  • கருத்துக்கள உறவுகள்

 வணக்கம் வருக 

  • கருத்துக்கள உறவுகள்

  நல் வரவு 

Edited by நிலாமதி

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்...அருள்மொழிவர்மன்!

எவ்வளவு ஒரு அழகான பெயர்! கொஞ்சம் சமஸ்கிரிதம் கலந்திருந்தாலும்...நன்றாக உள்ளது!

எங்களுடன் தொடர்ந்தும் பயணியுங்கள்!

  • தொடங்கியவர்

வரவேற்ற நண்பர்களனைவருக்கும்  நன்றி.

  • தொடங்கியவர்
7 hours ago, புங்கையூரன் said:

வணக்கம்...அருள்மொழிவர்மன்!

எவ்வளவு ஒரு அழகான பெயர்! கொஞ்சம் சமஸ்கிரிதம் கலந்திருந்தாலும்...நன்றாக உள்ளது!

எங்களுடன் தொடர்ந்தும் பயணியுங்கள்!

@புங்கையூரன் அவர்களுக்கு வணக்கம்.

அருள்மொழிவர்மன் என்பது சமஸ்கிருதப் பெயரா? இதுவரைக் கேள்விப்பட்டதில்லையே ! நல்ல தமிழ்ப் பெயரென்றே நினைத்திருந்தேன். நண்பரே எனது இவ்வையத்தைப் போக்குவீராக?

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, புங்கையூரன் said:

வணக்கம்...அருள்மொழிவர்மன்!

எவ்வளவு ஒரு அழகான பெயர்! கொஞ்சம் சமஸ்கிரிதம் கலந்திருந்தாலும்...நன்றாக உள்ளது!

புங்கை, 'வர்மன்' என்ற பெயரின் பகுதியை பார்த்து சொல்லியிருப்பார் என எண்ணுகிறேன்.

இது பழந்தமிழ் சொல்லிலிருந்து மருவி வந்த பெயராக இருக்குமென்றே தோன்றுகிறது.

  • தொடங்கியவர்
4 hours ago, ராசவன்னியன் said:

புங்கை, 'வர்மன்' என்ற பெயரின் பகுதியை பார்த்து சொல்லியிருப்பார் என எண்ணுகிறேன்.

இது பழந்தமிழ் சொல்லிலிருந்து மருவி வந்த பெயராக இருக்குமென்றே தோன்றுகிறது.

சரிதான் ராசவன்னியன் அவர்களே, எனக்கும் அதுவே தோன்றியது. 'வர்மன்' என்னும் பெயர் பொதுவாக பல்லவ மன்னர்களால் அதிகம் பயன்படுத்தபட்டுள்ளது (மன்னர்களின் பெயருக்குப் பின் ஒட்டாக வருகிறது).

Edited by அருள்மொழிவர்மன்

நல் வரவு.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, அருள்மொழிவர்மன் said:

@புங்கையூரன் அவர்களுக்கு வணக்கம்.

அருள்மொழிவர்மன் என்பது சமஸ்கிருதப் பெயரா? இதுவரைக் கேள்விப்பட்டதில்லையே ! நல்ல தமிழ்ப் பெயரென்றே நினைத்திருந்தேன். நண்பரே எனது இவ்வையத்தைப் போக்குவீராக?

நன்றி......அருள்மொழி வர்மன்!

ஏனது தமிழறிவு வெறும் கேள்வி ஞானத்தினாலும்,,,,வாசிப்புப் பழக்கத்தினாலும் மட்டுமே பெற்றுக் கொள்ளப் பட்டது!

உங்கள் பெயர் சக்கரவர்த்தி.......ராஜ ராஜ சோழனின் இயற்பெயர்!

ஒரு வித்தியாசம் அவரது பெயர்....அருழ்மொழித் தேவர் என்று இருந்தது!!

பின்னர் அவரது பெயர் அருண்மொழிவர்மன் என அழைக்கப் பட்டது! காரணம் பின்னர் கூறுகிறேன்!

சுத்தத் தமிழ்மகன் சேக்கிழார் நாயனார் அவர்களின் இயற்பெயரும்,,,,அருண்மொழித்தேவர் என்பதாகும்!

தேவர் என்பது அவரது குலப்பெயர்!

Varman (surname)

From Wikipedia, the free encyclopedia
 
40px-Example.of.complex.text.rendering.s This article contains Indic text.Without proper rendering support, you may see question marks or boxes, misplaced vowels or missing conjuncts instead of Indic text.
Barman / Varman Surname
Origin
Region of origin India
Word/Name Indo-Tibet Region
Meaning Shield

Varman or its variants Tamil: வர்மன்),(Hindi: वर्मा), Verma (Hindi: वर्मा), Kannada: ವರ್ಮ, Malayalam: വര്‍മ,Telugu: వర్మ), Varman (Hindi: बर्मन), Sanskrit: वर्मन्, Burman or Barman (Bengali: বর্মন) are surnames that are used by Kshatriya castes in India & South-East Asia.[1]

In Sanskrit language, Varma (Sanskrit: वर्मा) is the masculine form of the word for "Shield, Defensive armour".[2]

The word Varman derives from Varamban as in the Chera king title Vana-varamban, meaning one whose kingdom is bounded by the sky. Its usage can be traced back to the Sangam period.[3]

மேலுள்ள் குறிப்பின் படி....வர்மா என்பது காவலன், அரசன் என்ற கருத்திலும்...சத்திரியரைக் குறிக்கவும் பயன் படுத்தப் பட்டது!

அதுவே வர்மன் என்பது ஒரு வீரனைக் குறிக்கும் பெயராக மாறியது!'அதனாலேயே அருள்மொழித் தேவராக இருந்த ராஜ ராஜன் சர்க்கரவர்த்தியான போது அருல்ல்மொழி வர்மனாக மாறினான்!

எனினும் சேர நாட்டில் வரம்பன் என்னும் ஒரு மழைத் தெய்வம் ஒன்று இருந்ததாகக் கூறுகிறார்கள்! இந்தத் தெய்வம் ஆணா அல்லது பெண்ணா என்பதே விவாதப் பொருளாக உள்ளது! கேரளா...மாநிலமாக மாற முன்பு...மலபார் பிரதேசமாக இருந்தது! நம்பூதிரிப் பிராமணர்களே நிலச் சுவாந்தர்களாகவும் ,,,மிசுந்த செல்வாக்குள்ளவர்களாகவும் இருந்தனர்! இவர்களது செல்வாக்கானது....புதிதாகப் பூப்படைந்த பெண்களிடம் முதலாவதாக விஜயம் செய்யும் உரிமையிலிருந்து...பெண்கள் மேலாடை அணிந்து இவர்கள் முன்னர் செல்லக்கூடாது என்னும் அளவுக்கு...இருந்தது! இதனை முதலில் தடை செய்து சட்டம் கொண்டு வந்தவர் ஒரு நவாப்! தமிழர் திருமணங்களில் சொல்லப்படும் மந்திரங்களில்...முதலில் சோமன்...என்று வருவதையும் கவனிக்கவும்! இது போன்ற மந்திரங்கள் இந்த நம்பூதிரிகளின் செயல்களை அப்போது நியாயப் படுத்தின!

சங்க காலத்திலிருந்து வரம்பன் என்ற பெயர் உபயோகத்திலிருந்து வந்தது என்று கூறுவதன் காரணம் இது தான்!

உங்களுக்கும்...எனக்கும் தெரியும்...சமஸ்கிரித மழைத தெய்வம்...வர்ணன்!

அவனே நம்ப்பூதிரிகளால் ....வரம்பன் ஆக்கப் பட்டான்! 

வர்ணனில் இருந்து ..வரம்பன் வந்தது என்று ஏற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளது!

ஆனால் வரம்பனில் இருந்து வர்மன் வந்தது அவ்வளவு நம்பும் படியாக இல்லை! 

அத்துடன் மழைத் தெய்வத்தின் பெயரை....ஏன் மன்னர்களுக்கும், வீரர்களுக்கும் வைக்க வேண்டும்?

காவலன் அல்லது சத்திரியன் ஈன்பது.....அதிகம் பொருந்துவது போல உள்ளது!

நந்தி வர்மன்....அருள் மொழி வர்மன், போன்றவற்றில் வர்மன் என்ற கருத்து வீரன் அல்லது மகா வீரன் என்னும் கருத்துடன் பொருந்துகின்றதே!

எது எப்படியாயினும் உங்கள் பெயர் தமிழ் எனின் முதல் மகிழ்ச்சி என்னதே!

தமிழில் ஒர்மம் என்று ஒரு வார்த்தை உள்ளது. அது எந்த மொழியில் இருந்து வந்ததோ தெரியவில்லை!

கர்மம் என்று ஒரு வாத்தை உள்ளது! அது கர்மா என்னும் சமஸ்கிரித வார்த்தையில் இருந்து வந்தது!

வர்மன் தமிழ் வார்த்தையாக இருந்திருந்தால்......வருமன் என்று தான் எழுதப்பட்டிருக்கும்!

கர்மா....கறுமம், 

  • தொடங்கியவர்
4 hours ago, புங்கையூரன் said:

@புங்கையூரன், பெயர் விளக்கத்தைத் தெளிவுபடுத்தியமைக்கு நன்றி ! 

ம்ம்ம்.. புனைப்பெயரில் சிறிது திருத்தம் செய்யலாமா என்ற எண்ணம் தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ரவீந்திரநாத் தாகூர் கீதாஞ்சசாலி என நினைக்கிறேன் எழுதி ஒரு ஆசிரியரிடம் காட்டியிருக்கிறார்.அவர் அதை படித்துப்பார்த்து விட்டு இதில் நிறைய இலக்கணப்பிழை இருக்கிறது என்று சொல்லி அதை திருத்திக் கொடுத்தார்.இப்பொழுது கவிதை இலக்கண சுத்தமாய் இருந்ததது, ஆனால் அதன் ஆன்மா தொலைந்து விட்டது. தாகூருக்கு மிகவு வேதனையாகி விட்டது. இதை அவரது ஆசிரியர் என நினைக்கின்றேன் (வர வர எனக்கு மறதி அதிகமாகுது, இதிலும் ஒரு சௌகரியம் உண்டு வீட்டில் நான் சொன்னதை சொல்லேல்லை என்றும் சொல்லலாம். இங்கு அது முடியாது.கோட் பண்ணி சாயம் பூசி எடுத்துவந்து காட்டுவார்கள்).). அவர் இரு கவிதைகளையும் வாங்கி பார்த்துவிட்டு சொன்னார் இலக்கணம் சுத்தமாய் இருக்கும் கவிதையில் ஜீவன் இல்லை.ஒரிஜினல் கவிதை காட்டாறு மாதிரி எந்த எல்லைக்குள்ளும் அடங்காமல் உயிரோடு ஓடிக்கொண்டிருக்கு. அதுதான் அழகாய் இருக்குதென்று. பின் அதுவே பிரசுரமாயிற்று.

அருள்மொழிவர்மனும் அப்படித்தான். சாண்டில்யன், கல்கி போன்ற ஜாம்பவான்களின் வர்ணனைகளில் கம்பீரமாய் வலம்வரும் அந்த பெயர் தமிழ்ப்படுத்தலில் படுத்து நோஞ்சானாய் விடும். வெத்திலையையே காணாத வெள்ளைக்காரன் அதுக்கு பேட்டல் என்று பேர் வைத்த மாதிரி.

புங்கையின் தேடுதல் சிலாக்கியமானதுபல தகவல்களை தெரிந்து கொள்ள உதவியது.

வரு னன்  : வருவது அண்மையில், இங்கு எட்டத்தில் இருந்து மழையாக வருதலால்.

வர்ணம் : பலவிதமான--- நிறங்களாகவும் இருக்கலாம், சாதிகளாகவும் இருக்கலாம்.

பண்டிதர்கள் எவராயினும் இவற்றின் வேர்ச்சொற்களைக் கூறி விளங்கப் படுத்தினால் நன்று....!  tw_blush:

என்னப்பா இது ஒரு பேருக்கு இவ்வளவு அக்கப்போராய்க் கிடக்கு....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, suvy said:

சுவியர்...எனக்கு எந்த மொழி மீதும் வெறுப்பு இல்லை! சமஸ்கிரிதம் தமிழிடமும்...தமிழ் சமஸ்கிரிதத்திடமும் கடன் வான்கியுள்ளன! ஒரு மொழியின் வளர்ச்சிக்கு இது நிச்சயம் தேவை! ஆனால் தேவ பாஷா ... நீஷ பாஷா என்னும் போது தான் ...பத்திக் கொண்டு வருகின்றது!

  • கருத்துக்கள உறவுகள்

நானும் அந்தப்பெயரே அழகாய் இருக்கு என்பதற்காத்தான் எழுதினேன் புங்கை.வாசிப்பு ஒன்றுதான் எண்ணங்களை வளப்படுத்தும்.அது உங்களிடம் அபரிதமாய் இருக்கு நண்பரே.....!  tw_blush:

தேவார திருவாசகம் ஈறாக நாலாயிரத் திவ்ய பிரபந்தம் கம்பராமாயணம் திருக்குறள் அவ்வையார் பாடல்கள் சித்தர் பாடல்கள் போன்ற அளவிடற்கரிய செல்வங்கள் எல்லாம் சுத்தமான தமிழில்தான் இருக்கின்றன. அவ்வளவு சமஸ்கிருதத்தில் இருப்பது சந்தேகமே. அவை 90% வேதங்களும் செவி வழியாக சப்தம் மூலமாக வரும் மந்திரங்களுமே. அவற்றை அந்தந்த ஏற்ற இறக்கங்களுடன் ஒலிக் குறியீடுகளோடு கற்பகிரகத்துக்குள் நின்று சொல்வதால் அவற்றின் அதிர்வுகள் சூழ இருப்பவர்களின் உடலில் பரவி மன அமைதியையும்,சில வருத்தங்களையும் குணமாக்குகின்றன. அதிலும் இந்த அதர்வண வேத மந்திரங்களுக்கு பவர் அதிகமுண்டு.அதனால்தான் அவை மாந்திரிக தாந்திரீகங்களில் அதிகம் பயன்படுத்தப் படுகின்றன.நல்லதோ கெட்டதோ பலன் துரிதமாய் குடுக்கிறது. அதாவது ஒரு ஆஸ்மா நோயாளி இழுக்கும்போது பம்மை உள்ளிழுத்து புத்துணர்ச்சி அடைவது போல.ஆனால் அதுவே நிரந்தரமான தீர்வு ஆகாது.

இப்பவெல்லாம் பிராமணர்களே சமஸ்கிருதம் கதைப்பது கிடையாது.எல்லோரும் இங்கிலீஸில்தான் பொளந்து கட்டுகின்றார்கள். சடங்குகளையும் இருபது ஓவர் கிரிக்கட் மாதிரி குறுக்கி விட்டார்கள்.அவர்களில் பலரது விரத நியமங்கள் கூட சுத்தமில்லை. அதனால் இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்ளக் கூடாது.  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்

பெயரை வைத்து அக்கப் போர் புரிந்து அருள்மொழிவர்மரை அரண்டு போக விட்டோமோ ? 

வியாழக்கிழமை வந்தவர். இன்று ஞாயிறு.... ஒரு எண்ண ஓட்டத்தையும் பகிரவில்லை இன்னும்.

அருள்... வாருங்க... களத்தில் பெரிசுகள் இப்படித்தான் இலக்கிய விளையாட்டுகள் நடத்துவர்.

தயங்காமல் பங்கு பெறுங்கள்.... நல்வரவு.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்

அலுவலகத்தில் உள்ளேன் ஐயா (இங்கு ஐக்கிய அரபு நாட்டில் வார விடுமுறை வெள்ளி மற்றும் சனி !!).

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, அருள்மொழிவர்மன் said:

அலுவலகத்தில் உள்ளேன் ஐயா (இங்கு ஐக்கிய அரபு நாட்டில் வார விடுமுறை வெள்ளி மற்றும் சனி !!).

அப்படியே சத்தமாக ஒரு விசில் கொடுத்தால், நம்ம வன்னியர் பதில் கொடுப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, Nathamuni said:

அப்படியே சத்தமாக ஒரு விசில் கொடுத்தால், நம்ம வன்னியர் பதில் கொடுப்பார்.

paydort.gif   யாருங்க அது வீட்டில் 'அக்கடா'ன்னு தூங்குற ஆளை விசிலடிச்சு எழுப்புறது..? tape-poing.gif

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ராசவன்னியன் said:

paydort.gif   யாருங்க அது வீட்டில் 'அக்கடா'ன்னு தூங்குற ஆளை விசிலடிச்சு எழுப்புறது..? tape-poing.gif

ஒருத்தரும் இல்லீங்கோ... நீங்க தூங்குங்க, தலீவா :grin: 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாருங்கள் .......... 

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாருங்கள் அருள்மொழிவர்மன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.