Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எண்ட சைக்கிளை ஆட்டையை போட்டு விட்டார்கள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Image result for carrera parva mountain bike

ஆசையாசையை ஒரு சைக்கிள் வாங்கினேன். ஸ்டேஷன் கார் பார்க் கொள்ளை அடிக்கிறார்கள். பிரீ பார்க்கிங் எண்டால் வீட்டில் இருந்து அரைவாசித் தூரத்தில். மிச்ச அரைவாசிக்கு நடக்க வேண்டும். நடப்பதில் பிரச்னை இல்லை ஆனால் காலையில் நேரம் முக்கியம்.

ஆகவே சைக்கிள் வாங்கி ஓடி போய் ஸ்டேஷன் முன்னாள் விட்டு விட்டு போவதும் வருவது இலகுவாயிருந்தது.

இரண்டு மாதம் நல்லா தானே போய் கிட்டு இருந்தது.

நமக்கு முதல் சைக்கிள் எண்ட படியால், விபரம் புரியாமல் சும்மா கேபிள் லாக் வாங்கி போட்டிருந்தேன். 

Image result for cycle lock

களவாணிகள் அந்தப் பக்கம் வந்து இருப்பினம்... 'அட இங்க பாரடா லட்டு மாதிரி என்று'.. யாரோ புதுசா... வந்திருக்கிறான் போல கிடக்குதே...' நினைத்திருப்பார்கள் போல இருக்கிறது. 

கேபிள் வெட்டினைப் பார்த்தால் , ஒரு 4 செகண்ட் கூட மினக்கெட்டிருப்பார்கள் போல தெரியவில்லை. அப்படி ஒரு நேர்த்தி!!

ஆகவே சைக்கிளை ஆட்டையை போட்ட தெய்வங்களே... சந்தோசமா இருங்கோ... £280 தர்மக் கணக்கில் போட்டாச்சு.

இருந்தாலும் இண்டைக்கு போய் இன்னோரு சைக்கிள் ஓடர் பண்ணி இருக்கு. ஆனால் இந்த முறை கொஞ்சம் ஸ்ட்ரோங் ஆன பூட்டு வாங்கி இருக்கிறன்...

Image result for cycle lock

பாப்போம்... புண்ணிய வான்கள் என்ன விளையாட்டு காட்டுகினம் எண்டு.

Image result for police

என்ன போலீசோ...??

‘சோனமுத்தா போச்சா'... 'அதுதான் சைக்கிள் வாங்கினா.... சைக்கிள் விலைக்கு சமனா பூட்டும் வாங்கி இருக்க வேணும்... 'கிளம்புங்கோ... கிடைச்சா சொல்லி அனுப்புறம் எண்டு சொல்லி அனுப்பிடினம்'.

'அந்த CCTV எண்ட ஒரு விசயம் இல்லையோ.... அதை.... பார்க்க மாட்டியளே'...

'10 மணித்தியாலம் ஒக்காந்து பார்க்க உங்க ஆக்கள் இல்லை...'...

'எனக்கு நேரம் இருக்கு.... நான் பார்க்கிறேன்.... ஒழுங்கு செய்யுங்களன்....'

'இது.. சரி வராது.... பிறகு data protection act எண்டு பிரச்சனை வரும்'... 

'அப்ப.... நீங்கள் ஒண்டும் செய்ய மாட்டியல்... எண்டு தெரிந்து தான்... களவு நடக்குது'

'உண்மைதான்... உங்கட எம்பிக்கு எழுதி... போலீசுக்கு கூட காசை ஒதுக்க சொல்லுங்கள்'...

.... 'நான் முறைப்பாடு சொல்ல வர... நீர் எனக்கு முறைப்பாடு சொல்லுறீர் காணும்'...

'பின்ன... என்ன போட்டு வாறன்...'

எண்டு சொல்லி கிளிம்பி விட்டேன்.

ஆகவே சைக்கிள் வாங்க நினைப்பவர்கள் பூட்டையும் ... களவாணிகளையும் பத்தியும் நினையுங்கோ.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா வடை போச்சா?

எவ்வளவு பணத்தை செலவு செய்தாலும் மனம் தளராது.ஆனால் 5 சதத்தையேனும் யாரும் ஆட்டையைப் போட்டா அதன் வலியே வேறை.எனக்கென்றால் வெளியே சொல்ல வெட்கமாக இருக்கும்.

சரி அடுத்ததை வாங்கி முன் சில்லு பின் சில்லு சீற் என்று எங்கெங்கு பூட்டுகள் போட இயலுமோ அங்கெல்லாம் போடுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆகா வடை போச்சா?

எவ்வளவு பணத்தை செலவு செய்தாலும் மனம் தளராது.ஆனால் 5 சதத்தையேனும் யாரும் ஆட்டையைப் போட்டா அதன் வலியே வேறை.எனக்கென்றால் வெளியே சொல்ல வெட்கமாக இருக்கும்.

சரி அடுத்ததை வாங்கி முன் சில்லு பின் சில்லு சீற் என்று எங்கெங்கு பூட்டுகள் போட இயலுமோ அங்கெல்லாம் போடுங்கள்.

இதில என்ன வெட்கம்...

யாரோ டெஸ்பேரேட் ஆனா ஒருத்தன் ரிஸ்க் எடுத்திருக்கிறான் என்று நினைத்தேன்... ஒகே ஆகி விட்டது...

முறையான பூட்டு வாங்கிப் போடாதது என் தவறு.... இரண்டு மாதம் ஒன்று நடக்காமல் இருந்தது ஆச்சரியம்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கடை வயித்தெரிச்சல் சயிக்கிள் களவெடுத்தவனை சும்மா விடாது பாருங்கோ. கடவுள் கள்ளனை  எப்பிடியும்
  உங்கடை கண்ணிலை காட்டியே தீருவான்.....ஒண்டுக்கும் கவலைப்படாதேங்கோ.. :cool:

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

அந்த CCTV எண்ட ஒரு விசயம் இல்லையோ.... அதை.... பார்க்க மாட்டியளே'...

'10 மணித்தியாலம் ஒக்காந்து பார்க்க உங்க ஆக்கள் இல்லை...'...

சைக்கிள் களவு போன கவலையிலும், குசும்பு வேறை.... ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

சைக்கிள் களவு போன கவலையிலும், குசும்பு வேறை.... ?

 

குசும்பல்ல, எரிச்சல்..

CCTV  பதிவு இருக்கும். போலீசுக்குப் போனால் போதும்.... கள்ளரையும் உள்ள போட்டு, சைக்கிள்ள வீட்ட வரலாம் எண்டு கண பேருக்கு ஜடியா இருக்குது.

உங்க அப்படி ஒரு கோதாரியும் நடவாது எண்டு சொல்ல வந்தேன்.

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கும் ‘மை’ போட்டுப் பாருங்கோ!

வெளிச்சாலும் வெளிக்கும்!?

  • கருத்துக்கள உறவுகள்

எப்பொழுதும் முதல்முறை சயிக்கிளை திருட்டுக்கு கொடுப்பது முதல் காதலியை இழந்ததுபோல் மிகவும் வேதனையான விடயம். பின்பு அடுத்து அடுத்து இரண்டு சயிக்கிள்கள் களவு போகும்போது இது பழகிப் போவது மட்டுமல்ல நினைக்க சிரிப்புகூட வரும். நான் அந்த படிநிலையில் இருப்பதால் உங்களின் வேதனையில் கவலையுடன் பங்கு கொள்கிறேன்......!

உங்களின் ஆறுதலுக்காக சில:

--- ஒரு புது சைக்கிள் 6 கியாருடன் கிபீர் போல பறக்கும். ஒரு கடையில் முன் சக்கரத்தை செருகி நிறுத்த ஸ்ராண்ட் வைத்திருந்தார்கள். நானும் காண்டாமிருகத்துக்கு காலில போடுறமாதிரி ஒரு கனமான வயர் பூட்டை பூட்டிவிட்டு போய் சாமான்கள் வாங்கி வந்து பார்த்தால் பூட்டும் முன் சில்லும் சிறு சேதமும் இல்லாமல் இருக்குது.அது குபீர் என்று பறந்துட்டுது.....!

--- ஒரு நண்பனின் சைக்கிள் காணாமல் போய் விட்டது. (இடைக்கிடை நானும் பாவிக்கிறானான்). சில நாடாக்கள் சென்று விட்டன. ஒரு இடத்தில அந்த சயிக்கிள் பூட்டு கூட இல்லாமல் நிக்குது. நண்பரையும் கூப்பிட்டு அவரும் வந்து விட்டார்.யார் அந்த சாயிக்கிளை எடுக்க வருகினம் என்று பார்க்க சற்று எட்டத்தில் இருவரும் நிக்கிறம். அத்தான் வந்து அதை எடுக்க ஓடிப்போய் நிப்பாட்டிட்டம். 

இது எங்கட சயிக்கிள் ....! (எல்லாம் பிரெஞ்சில்)

இல்லை இது என்னுடையது.

வா போலீசுக்கு. நான் (போர்த்து பிளான்) களவு போனதை சொல்லி இருக்கிறன்.

அவர்: நான் என் நண்பனிடம் இரவலாய் வாங்கி வந்தனான்.கொண்டுபோய் குடுக்க வேணும்.

வா நாங்கள் முதல் போலீசுக்கு போவோம். உன் நண்பனை அங்கு ரிசிற்றுடன் வந்து கதைக்க சொல்லு. இப்ப நீயும் வா.

இப்படியே இழுபட சனமும் கூடுது.

அவரும் சரி உங்கட சயிக்கிள் எண்டால் கொண்டு போங்கோ, நான் அவனிட்ட சொல்லுறன் என்று சொல்லிட்டு நழுவிக் கொண்டு போயிட்டார். 

--- மகனை யூனிவசிட்டில கூட்டிக்கொண்டு போய் விடுகிறன்.வீட்டில் இருந்து 100 கி.மீ  தூரம். முதல் நாள். அவர் அங்கு தங்கி படிக்கவேணும். சாமான்கள் வாங்க கொள்ள ஒரு சயிக்கிள் இருந்தால் நல்லது என்று தோணுது. போய் கடை ஒன்றை தேடித் பிடிச்சி பார்த்தால் எல்லாம் 200 ஈரோ க்கு மேலதான் இருக்கு.சரி வாங்குவம் என்று முடிவெடுக்க கடைக்காரர் வந்து இங்க ஒரு சைக்கிள் இருக்கு பிடிச்சால் எடுங்கோ என்கிறார்.(முழுதாக திருத்திய சயிக்கிள்.அந்தாளுக்கு என்னுடைய டிசைன் எப்படி விளங்கிச்சோ தெரியவில்லை). மகனும் அதை எடுத்து ஓடிப்பார்த்து விட்டு இது நல்லா இருக்கு அப்பா, இது போதும் என்கிறார். 30 ஈரோக்கு  அதை வாங்கிக் குடுத்திட்டு வந்திட்டன். ஒரு மாதத்தில அது அங்கேயே களவு போயிட்டுது. மகன் போனில் அப்பா 170 ஈரோ உங்களுக்கு லாபம் என்கிறான்.....!  tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

உங்கடை வயித்தெரிச்சல் சயிக்கிள் களவெடுத்தவனை சும்மா விடாது பாருங்கோ. கடவுள் கள்ளனை  எப்பிடியும்
  உங்கடை கண்ணிலை காட்டியே தீருவான்.....ஒண்டுக்கும் கவலைப்படாதேங்கோ.. :cool:

உங்கட கண் முன்னாலேயயே அதை களவு எடுத்தவன் ஓடிக் கொண்டு போவான் 

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, suvy said:

எப்பொழுதும் முதல்முறை சயிக்கிளை திருட்டுக்கு கொடுப்பது முதல் காதலியை இழந்ததுபோல் மிகவும் வேதனையான விடயம். பின்பு அடுத்து அடுத்து இரண்டு சயிக்கிள்கள் களவு போகும்போது இது பழகிப் போவது மட்டுமல்ல நினைக்க சிரிப்புகூட வரும்

நாதமுனி நினைத்துப் சிரிப்பதற்கு, இன்னும் இரண்டு சைக்கிள்களை இழக்க வேண்டும். பார்ககலாம்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
19 hours ago, Nathamuni said:

இருந்தாலும் இண்டைக்கு போய் இன்னோரு சைக்கிள் ஓடர் பண்ணி இருக்கு. ஆனால் இந்த முறை கொஞ்சம் ஸ்ட்ரோங் ஆன பூட்டு வாங்கி இருக்கிறன்...

புது சைக்கிள் வீட்டு வந்ததும் ஒரு படம் எடுத்து இங்கே இணைத்து விடவும். :cool:

பேசாமல் இலங்கையிலேயெ வாழ்ந்திருக்கலாம் என்று தான் சொல்லத்தோணுது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருக்கா அப்பாவித்தனமா பிழைவிட்டாத்தான், அட எனக்கோடா விளையாட்டுக்காட்டிறியள் எணடு கொதி வரும். திருப்பியும் புது சைக்கிள் ஒன்றை, வைத்து கள்ளனைப் மடக்கிப்பிடிக்கலாம் தான்.

இருந்தாலும் Halfords சைக்கிள் கடையில நிண்ட வெள்ளப் பெடியக் கொஞ்சம் முன்னம் வெளியால வேலை முடிஞ்சு வரேக்க மடக்கிப் பிடித்துக் கேட்டேன்.

இதுக்கென்னப்பா வழி, இப்படியே வந்து வாங்கிக் கொண்டு இருக்க வேண்டியது தானோ என்றேன்.

சிரித்து விட்டு, பேசாமல் சோதில கலக்க வேண்டியது தானே எண்டான்.

அப்படி எண்டால்...?

காசை உங்க செலவழியாம, கள்ளர்களிடமே, eBay யில (buyers buying legally, in a public marketplace) வாங்கி ஓடவேண்டியது தானே.  உன்ற சைக்கிள் இப்ப £40 க்கு அங்க விப்பாங்கள்.

களவு போனாலும், டென்சன் ஆகத்தேவை இல்லை. ஓடிப்போய் வாங்கலாம். 

இன்னோரு விசயம்... தொழில் தர்மம் இருக்குது பாருங்க... தாங்கள் வித்தது எவை, எவை எண்டு அவையளக்கு தெரியும். அவை எடாகினம். 

என்ன செய்யிறது?

சுமே அக்கா ஸ்ரைலில பிரச்சணை சொல்லியாச்சு. மினக்கடாம தீர்வை சொல்லுங்க. 

36 minutes ago, பகலவன் said:

பேசாமல் இலங்கையிலேயெ வாழ்ந்திருக்கலாம் என்று தான் சொல்லத்தோணுது.

உந்தக் களவுக்காகவோ??

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Nathamuni said:

Image result for carrera parva mountain bike

 

 

 

ஆகவே சைக்கிள் வாங்க நினைப்பவர்கள் பூட்டையும் ... களவாணிகளையும் பத்தியும் நினையுங்கோ.

அதோட வியைய் படமும் பாருங்கோ.?

2 hours ago, Nathamuni said:

உந்தக் களவுக்காகவோ??

இது இலங்கையில் அதுவும் தமிழர் பகுதியில் நடந்திருந்தால் இந்த திரி மட்டும் இல்லை யாழே பத்தி எரிந்திருக்கும்.?

  • கருத்துக்கள உறவுகள்

நாமு,

உங்களய நினைச்சா மனசிற்கு சரீ... கஸ்டமா ஈக்குதுவா.

உங்கட ராஹ்மாணயம் பாலய் கத செல்ல பெயிட்டுதான் இப்பிடி ஆவி ஈக்கி.

இனி அல்லாஹ் குடுக்கியெண்டாலும் முறையா குடுக்கிய, புடுங்கிரண்டாலும் முறையா புடுங்கிர தான்வா.

சும்மா தொது மாரி ஊரு பலாய் செல்லாம, 

இனி சரி இஸ்லாம் ஆக்கள் கூட ஜூக் வுடுறத ஸ்டொப் பண்ண பாருங்க சைய்யா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருத்தரும், சரி தான் அப்படியே வாங்குங்கள் என்று சொல்லவில்லை.... 

யாழ் தளம் அல்லவா...

கொஞ்சம் காசுக்காக... களவு சைக்கிள் வாங்குவது தேவையில்லாத பிரச்சனை..... இன்று லண்டன் மேஜர் கானுக்கு கடதாசி போட்டிருக்கிறேன்.

சைக்கிள் ஓடு... என்று காது கிழிய கத்துறியள்.... என்ன பாதுகாப்பது இருக்கிறது... குறைந்த பட்சம் ebay , gumtree போன்ற second hand சைக்கிள் விற்கும் தளங்கள் ஏன்.. சைக்கிள் பிரேம் நம்பர் கட்டாயம் விளம்பரத்தில் போட வேண்டும் என வலியுறுத்தக் கூடாது?

சைக்கிள் தொலைத்தவர்கள் தமது பிரேம் இலக்கத்தினை அந்த தளங்களில் பதிந்து வைத்தால்... களவினை குறைக்க முடியுமே என்று சொல்லி உள்ளேன்.

கொப்பி, எம்பிக்கு அனுப்பி உள்ளேன். பார்க்கலாம்.

புது சைக்கிள், நாளை கிடைக்கிறது... இன்சூரன்ஸ் பணம் வருவதால் செலவு இல்லை...

உறவுகளுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

raeder1.jpg

10314677.jpg

4282366_web.jpg?1522298573

இஞ்சை ஜேர்மனியிலை ஒவ்வொரு ரயில் ஸ்ரேசனுக்கு பக்கத்திலை சையிக்கிளெல்லாம் குப்பை மாதிரி பார்க் பண்ணியிருப்பாங்கள். ஒரு காக்கா குருவி கூட திரும்பிப்பாக்காது....வருசக்கணக்காய் நிக்கும்....அடியிலை புல்லுக்கூட முளைச்சு நிக்கும்.  ஒருத்தரும் களவெடுக்கிற சிந்தனையோடை பாக்கிறதேயில்லை.
என்ன செய்ய.....சனம் நாட்டுக்கு நாடு வித்தியாசம்.:grin:

இரவு பகலாய் எந்தவொரு பாதுகாப்பில்லாமலும் சைக்கிள் விட்ட இடத்திலையே அப்பிடியே நிக்கும் எண்டதை இந்த இடத்திலை சொல்லியே ஆகணும்.   :cool:

  • கருத்துக்கள உறவுகள்

நானும் luton னில இருக்கேக்க இதை அனுபவிச்சனான். ரெண்டு மாசமா luton ரெயில்வே ஸ்ரேசனில சைக்கில விட்டிட்டு சந்தோசமா வேலைக்கு போய் வந்தனான். ஒரு களவானி பயல்   கடும் முயற்சி செய்து கடைசில கைவிட்டான். நானும். அதோட சைக்கிள் ஓடுறத விட்டிட்டன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

நந்தன் சொன்னது போல... ஸ்டேஷனுக்கு போக சைக்கிள் வேண்டாம்.... கொஞ்சம் வெள்ளனவா வெளிக்கிட்டு  நடப்பம்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

நாமு,

உங்களய நினைச்சா மனசிற்கு சரீ... கஸ்டமா ஈக்குதுவா.

உங்கட ராஹ்மாணயம் பாலய் கத செல்ல பெயிட்டுதான் இப்பிடி ஆவி ஈக்கி.

இனி அல்லாஹ் குடுக்கியெண்டாலும் முறையா குடுக்கிய, புடுங்கிரண்டாலும் முறையா புடுங்கிர தான்வா.

சும்மா தொது மாரி ஊரு பலாய் செல்லாம, 

இனி சரி இஸ்லாம் ஆக்கள் கூட ஜூக் வுடுறத ஸ்டொப் பண்ண பாருங்க சைய்யா?

உங்களுக்கு விருப்பமானால் ஒரு தனித்திரியை ஆரம்பித்து எதையும் எழுதுங்கள். வேறு விடயமாக தொடங்கிய திரியில்  வந்து அலப்பறை... அதுவும் அரைகுறை மொழி...

அட... அந்த திரியிலாவது பதிவு போட்டிருக்கலாம்... அதுவும் இல்லை. 

அது கொழும்பில் பேசப்படும் பேச்சு மொழி... சென்னைத் தமிழ் போன்ற அழகிய மொழி... நான்,
இங்கும் பலர் அழகாக பேசிக் கூடிய மொழி. உங்களுக்கு என்ன பிரச்னை....?

ஒரு நகைச்சுவைக்காக சொன்ன விசயத்தில்.... மத விசத்தினை தயவு செய்து நுழைக்கவேண்டாம்.....

இவ்வளவு பேர் ரசிக்க.... இவருக்கு மட்டும்.... புடுங்குது... போங்க...  போய்... புள்ளை குட்டியை படிக்க வையுங்க...

உங்கள் பதில் எதுவானாலும் இங்கே உடுக்கடிக்க வேண்டாம்... தனித்திரி தொடங்கி அடியுங்கோ..

நாதமுனி, உங்கள் வலி புரிகின்றது. எனது சைக்கிள் 14 வருடங்களின் முன் திருட்டு போனது. பல்கலைக்கழகத்து நூல்நிலையம் முன்னால் விட்டு சென்றபோது உங்களுக்கு நடந்தது மாதிரியே கேபிளை வெட்டிவிட்டு கொண்டு சென்றுவிட்டார்கள். அப்போது அதன் பெறுமதி ஆயிரம் டொலர் சொச்சம். வயிறு பத்தி எரிஞ்சது. நான் கனடா வந்து கார் வாங்க முன் சைக்கிள்தான் வாங்கினேன். அந்த சைக்கிளில் தான் வேலைக்கு, கடைக்கு எல்லா இடமும் சென்று வருவது. பின்னர் கார் வாங்கிய பின் குறுந்தூர பிரயாணங்களுக்கு சைக்கிளை பாவித்தேன். கள்ளப்பயலுகள். எல்லாம் போதை அடிக்கும் திருட்டு கோஸ்டி.

நீங்கள் சைக்கிளுக்கு பூட்டு போடும்போது வெட்டப்படமுடியாது பெரிய இரும்பு பூட்டு போடவேண்டும். கேபிளை வெட்டி எடுத்துக்கொண்டு தப்பி ஓட சில செக்கன்களே போதும். 

எமது தனபாலன் மாஸ்டர் (சென். ஜோன்ஸ்) 1987ம் ஆண்டிலேயே யூகேயில் சைக்கிள் திருட்டு போவது பற்றி எங்களுக்கு வகுப்பில் சொல்லி இருக்கிறார். ஆட்கள் சைக்கிளை பூட்டிவிட்டு ஒரு சில்லையும் கழற்றிக்கொண்டு போவார்களாம் திருடப்படாமல் இருப்பதற்கு.

களவு எந்த நாட்டில் இல்லை. இங்கு ஜெர்மனிலும் தாராளமாக சைக்கிள் திருட்டு நடக்கிறது.

வீட்டுக்கு முன்பு விடும் சைக்கிளையே வெட்டி எடுத்து போவார்கள்.

 

 

Deutschlandkarte-Fahrraddiebstahl-2017-GDV

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

நாமு நானா அதி சும்மா ஜாய்க்கு எழுதினதுவா. 
ஒங்களுக்கு நடந்த ஷுட் டி எங்களுக்கும் சரீ ஆத்திரம் தான் நானா.
உங்க பைக் கிடைக்கணும் நாங்களும் துவா கேட்டேதானே?
கேந்தி ஆக வாணாம்.
 
நான் நினக்கேன், உங்கட ஸ்டோரியப் பார்துட்ட்டு நம்மடவன் எவனோ ஒங்களிக்கு குனூத் ஓதி ஈக்கான்.
அய் தான் பைக் இல்லாம ஆவின.

3 hours ago, நவீனன் said:

களவு எந்த நாட்டில் இல்லை. இங்கு ஜெர்மனிலும் தாராளமாக சைக்கிள் திருட்டு நடக்கிறது.

வீட்டுக்கு முன்பு விடும் சைக்கிளையே வெட்டி எடுத்து போவார்கள்.

 

 

Deutschlandkarte-Fahrraddiebstahl-2017-GDV

கு.சா அண்ணை இருக்கிற ஜேர்மனிய இந்த மேப்பில காணேல்ல?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.