Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் மரணம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் பொலிசாரின் துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் மரணம்!

June 17, 2018
 

யாழ்ப்பாணத்தில் இன்று இரவு பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மல்லாகம் சந்தியில் சற்று முன்னர் இந்த சம்பவம் நடந்துள்ளது.

மல்லாகம் சகாய மாதா தேவாலாய திருவிழாவில் இரு கும்பல்களுக்கு இடையே இடம்பெற்ற மோதலைத் தடுக்க முற்பட்ட போது, பொலிஸார் மீது வாள்வெட்டு நடத்த முன்ற இளைஞனே சுட்டுக்கொல்லப்பட்டார் என்று பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

 

இளைஞர் உயிரிழக்கவில்லை, துப்பாக்கிச்சூட்டில் சூட்டில் படுகாயமடைந்த இளைஞன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவிக்கின்ற போதும்,  அவர் உயிரிழந்து விட்டார் என்பதை வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிசெய்துள்ளன.

ஏழாலையைச் சேர்ந்த பாக்கியராசா சுதர்சன் (வயது 27) என்ற இளைஞனே நெஞ்சில் குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார்.

தற்போது வரை மக்களை தேவாலயத்திற்குள்ளேயே பொலிசார் முடக்கி வைத்துள்ளனர். கொல்லப்பட்டவர் ஆவா குழு உறுப்பினர் என முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன.

http://www.pagetamil.com/8708/

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப குழு சண்டை மட்டும் தான் மிஞ்சி நிற்கிறது அண்மையில் கல்லாறு என்ற இடத்தில் குழு சண்டையில் கத்து குத்துக்கிலக்காகி ஒரு இளைஞ்சன் உயிரிழந்தான் மட்டக்களப்பு வைத்திய சாலையில் பணி புரியும் ஒருத்தன் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆலய வழிபாட்டுக்கு வந்த இளைஞரே காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டுள்ளார்

June 17, 2018

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

mallkam-6134.jpg?resize=720%2C540யாழில் காவல்துறையினரின் ;துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த இளைஞன் தேவாலயத்தில் இடம்பெற்ற வழிபட்டு நிகழ்வில் கலந்து கொண்டிருந்தவர் என தேவாலயத்தில் நின்ற மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் தெரிவிக்கையில் ,

மல்லாகம் சகாயமாத ஆலயத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. அதன் போது தேவாலயத்திற்கு வெளியே நின்ற இளைஞர் ஒருவரை வீதியால் வந்த இளைஞர் குழு ஒன்று தாக்க முற்பட்டு உள்ளது. அதனால் குறித்த இளைஞர் தேவாலய வளாகத்தினுள் ஓட முற்பட்ட போது அவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அவ்வேளை அவ்விடத்திற்கு மோட்டார் சைக்கிளில் காவல்துறையினர் வந்துள்ளனர்.

காவல்துறையினரை கண்ணுற்ற தாக்குதல் மேற்கொண்ட இளைஞர்கள் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றனர். அவ்வேளை தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் மீது துப்பாக்கியை காவல்துறையினர் நீட்டிய போது , அதனை கண்ணுற்ற தாக்குதலுக்கு இலக்கான இளைஞனின் சித்தப்பா (உயிரிழந்த இளைஞர்) குறித்த இளைஞரை கட்டி பிடிக்க முற்பட்ட போது காவல்துறையினர் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார்.

நான்கு தடவைகள் துப்பாக்கியால் சுடப்பட்டார். துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞரை தேவாலயத்தில் நின்றவர்கள் மீட்டு தெல்லிப்பளை வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போது வழியில் அவர் உயிரிழந்தார்.இளைஞர் உயிரிழந்த செய்தியினை தேவாலயத்தில் நின்றவர்கள் கேள்வியுற்றதும் , காவல்துறையினர் வந்த மோட்டார் சைக்கிளை அடித்து நொறுக்கினார்கள். என தெரிவித்தார்.

அதேவேளை மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கி சூடு நடாத்திய காவல்துறை உத்தியோகஸ்தர் மது போதையில் நின்றதாகவும் அவ்விடத்தில் நின்றவர்கள் தெரிவித்தனர்.அதேவேளை காவல்துறையினர் , வாள் வெட்டுக்குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தினை அடுத்தே அவ்விடத்திற்கு வந்ததாகவும் , அதன் போது தம் மீதும் தமது மோட்டார் சைக்கிளில் மீதும் தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த தாகவும் அதனால் தாம் தமது தற்பாதுகாப்புகாகவே துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதகாவும் தெரிவித்தனர்.

அதேவேளை அவ்விடத்திற்கு நேரில் சென்று மல்லாகம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் அந்தோனிப்பிள்ளை ஜூட்சன் விசாரணைகளை மேற்கொண்டார்.குறித்த பகுதியில் பொதுமக்கள் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள நிலையில் தற்போது அவ்விடத்தில் காவல்துறையினர் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

IMG_6137.jpg?resize=720%2C540IMG_6138.jpg?resize=720%2C540mallkam-_6136.jpg?resize=720%2C540mallkam-6135.jpg?resize=800%2C600

 

http://globaltamilnews.net/2018/84060/

அதானே அப்பாவிகள் மீதுதான் வீரம் காட்டுவினம் ஆவா குழுவுக்கு போலிசே பயமாம் .

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இப்ப குழு சண்டை மட்டும் தான் மிஞ்சி நிற்கிறது அண்மையில் கல்லாறு என்ற இடத்தில் குழு சண்டையில் கத்து குத்துக்கிலக்காகி ஒரு இளைஞ்சன் உயிரிழந்தான் மட்டக்களப்பு வைத்திய சாலையில் பணி புரியும் ஒருத்தன் 

ஏதோ ஒரு ச‌ண்டை தேவைப்படுகிறது......ஜனநாய்கத்தில் இதெல்லாம் சகஜம் அப்பா 

  • கருத்துக்கள உறவுகள்

உடற்கூற்றுப் பரிசோதனைகள் ஆரம்பம்- சடலத்துக்காக காத்திருக்கும் உறவுகள்- மல்லாகம் துப்பாக்கிச் சூடு!!

மல்லாகம் சகாய மாதா ஆலயத்துக்கு அருகில் நேற்றிரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கொல்லப்பட்ட இளைஞனது சடலத்தின் உடற்கூற்றுப் பரிசோதனைகள் சற்றுமுன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மல்லாகம் குளமங்கலம் பகுதியைச் சேர்ந்த பா.சுதர்சன் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார். குறித்த இளைஞனது சடலத்தைப் பெறுவதற்கு உறவினர்கள் இன்று காலையில் இருந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் சடல அறை முன்பாகக் காத்திருந்தனர்.

நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னரே பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என்று மருத்துவமனையினர் தெரிவித்தனர். தற்போது நீதிமற்ன உத்தரவு கிடைக்கப் பெற்றுள்ளதால் பரிசோதனைகள் சட்ட மருத்துவ அதிகாரிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று எமது செய்தியாளர் தெரிவித்தார்.

http://newuthayan.com/story/16/உடற்கூற்றுப்-பரிசோனைகள்-ஆரம்பம்-சடலத்துக்காக-காத்திருக்கும்-உறவுகள்-மல்லாகம்-துப்பாக்கிச்-சூடு.html

  • கருத்துக்கள உறவுகள்

நீதிபதியுடன் பொதுமக்கள் தர்க்கம். வன்முறைகளை இலங்கைப் பொலிஸார் துாண்டி விடுவதாகவும் குற்றச்சாட்டு

தமது பிள்ளைகளுக்குப் பாதுகாப்பு வேண்டுமென பெற்றோர் கோரிக்கை
 
பதிப்பு: 2018 ஜூன் 18 11:09
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 18 19:38
main photomain photomain photo
  •  
யாழ்ப்பாணம், மல்லாகம் பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை சுட்டுக்கொன்ற சுன்னாகம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸார் இருவர் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ தெரிவித்தார். மல்லாகம் நீதிபதி அந்தோணிப்பிள்ளை ஜூட்சன் உத்தரவுக்கு அமைவாகவே கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அதேவேளை, தெல்லிப்பழை வைத்தியசாலையில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது சம்பவ இடத்திற்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் கிளை அதிகாரிகள் சென்றுள்ளனர். 
 
அதேவேளை, துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளைஞனின் சடலத்தை தெல்லிப்பழை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற மூன்று இளைஞர்கள், பதிவுப் புத்தகத்தில் கையொப்பமிட மறுத்துள்ளனர். பொலிஸார் விசாரணையை நீதியாக நடத்தமாட்டார்கள் என்று கூறி வைத்தியசாலை வளகத்தில் நின்று அவர்கள் சத்தமிட்டனர். வேறு குழப்பங்களிலும் ஈடுபட்டனர்.

 

இதனால் வைத்தியசாலை நிவர்வாகம் வழங்கிய முறைப்பபட்டின் அடிப்படையில் மூன்று இளைஞர்களையும் கைது செய்ததாக தெல்லிப்பழை பொலிஸார் தெரிவித்தனர்.

அதேவேளை, நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு ஏழு மணியளவில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதும் சம்பவ இடத்திற்குச் சென்ற மல்லாகம் நீதிபதி அந்தோணிப்பிள்ளை ஜூட்சன் மக்களிடம் விசாரணை நடத்தினார்.

இதன்போது நீதிபதிக்கும் மக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பொலிஸாரின் செயற்பாட்டை நீதிபதி நியாயப்படுத்தியதாக குறித்த இடத்தில் நின்ற ஒருவர் கூர்மை செய்தித் தளத்திற்குத் தெரிவித்தனர்.

இரு குழுக்கள் வாள்கள் பொல்லுகளுடன் சகாயமாத கோவிலுக்கு அருகில் உள்ள ஒழங்கையில் நின்று மோதியதாகவும் நீதிபதி கூறினார். அந்த மோதலில் ஒருவர் காயமடைந்ததாகவும் நீதிபதி கூறினார்.

ஆனால், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனுக்கும் வாள்வெட்டுக் குழுவுக்கும் தொடர்புகள் இல்லை என்றும் மக்கள் குறிப்பிட்டனர். உயிரிழந்த இளைஞன் கோவில் திருவிழாவுக்கு வந்ததாகவும் மக்கள் கூறினார்.

அவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தால் காலுக்கு கீழே சுட்டிருக்கலாமே என்றும் பொதுமகன் ஒருவர் நிதிபதியிடம் கேள்வி எழுப்பினார். ஆனால், நீதிபதி அதற்கு பதில் கூறவில்லை.

தமது பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும் என்றும், தமிழர் தாயகப் பிரதேசங்களில் இலங்கைப் பொலிஸாரே கஞ்சா போன்ற போதைப் பொருட்களை சில இளைஞர்களுக்குக்கு கொடுத்து, பின்னர் அவர்களிடையே வன்முறைகளைத் தூண்டி விடுவதாகவும் மக்கள் ஆவேசமாகக் கூறினார்.

அதேவேளை, துப்பாக்கிச் சூட்டை நடத்திய இரு பொலிஸாரும் மதுபோதையில் இருக்கவில்லை என்றும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு முன்னர். வேறு மரணம் தொடர்பான விசாரணைக்காக குறித்த இரு பொலிஸாரும் தன்னுடைய வீட்டுக்கு வந்ததாகவும், அவ்வாறு வந்து விட்டுச் சென்றபோதுதான், இளைஞர்கள் வாள்களுடன் மோதுப்படுவதைக் கண்டு துப்பாகிப் பிரயோகம் செய்தார்கள் எனவும் நீதிபதி விளக்கமளித்தார்.

இதனால், பொதுமக்களுக்கும் நீதிபதிக்கும் இடையே மேலும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இது முன்னுக்குப் பின் முரணான தகவல் எனவும் துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார், நீதிபதிக்குப் பொய்யான வாக்குமூலம் வழங்கியுள்ளதாகவும் கூறிய மக்கள், கோவில் திருவிழாவுக்கு வாள்களுடன் எவரும் வரவில்லை எனவும் குறிப்பிட்டனர்.

இந்த நிலையில், துர்ப்பாக்கிப் பிரயோகம் நடத்திய பொலிஸார் இருவரும் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மல்லாகம் குழமங்கால் பிரதேசத்தைச் சேர்ந்த பாக்கியராச சுதர்ஸன் என்ற 32 வயதுடைய இளைஞர் ஒருவரே கொல்லப்பட்டுள்ளார். மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

https://www.koormai.com/pathivu.html?vakai=1&therivu=101

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் குடாநாட்டின் இளையோர் வினையை விதைத்து வினையயே அறுக்கிறார்கள்.

வன்முறையில் ஈடுபடுவோர் அனைவரும் களையெடுக்கப்படல்வேண்டும். இதில் வேடிக்கை என்னவென்றால் யாழ் மாநகர சபையின் அங்கத்தவர் ரெமீடியஸ் ஒரு வழ்க்குரைஞர் அவர்தான் குடாநாட்டுப்பொறுக்கிகளை கூடிதலாகப் பிணையில் எடுப்பவர்.

  • கருத்துக்கள உறவுகள்

போர் ஓய்ந்த பின்னும் தமிழர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தும்.. சொறீலங்கா சிங்கள பெளத்த இனவெறியின் அரச பயங்கரவாதம் திமிர் கொண்டு திரிவது.. உலக அரச பயங்கரவாதிகளின் கண்ணுக்கு ஏன் தெரிவதில்லை.

குற்றவாளிகள் என்றாலும் சரி... சாதாரண பொதுமக்கள் என்றாலும் சரி.. ஒரு சிவில் நிர்வாகம் நடத்தும் அரசு.. மனிதர்களின் உயிர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அது அரசியல் சாசன அடிப்படை அம்சம்... ஒரு அரசு கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை விடயம்.

அதையே காப்பாற்றிக்க முடியாதது எல்லாம் ஒரு அரசா... இது தான் பயங்கரவாதம். எடுத்ததுக்கும் துப்பாக்கியால் சுடுவது.

2009 க்குப் பின்.. தமிழர் தாயகத்தில் இப்படி எத்தனை படுகொலைகள் நடந்திட்டுது. துப்பாக்கிகள் இளைய சமூகத்தை நோக்கி தான் அதிகம் சுடுகுது.

இப்படியான நிகழ்வுகள் கண்டிக்கப்படுவதும்.. பின் ஒரு நடவடிக்கையும் இன்றி குற்றங்கள் கைவிடப்படுவதும்.. குற்றவாளிகள் அரசால் காப்பாற்றப்படுவதும்.. பின் இன்னொரு படுகொலை நடப்பதும்...  தொடர்வதுமாக இது உள்ளது.

இதனை தடுக்க வேண்டிய பொறுப்பு.. தமிழர்களின் பாதுகாப்புக் கவசமாக விளங்கிய விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என்று உச்சரித்து கொன்றொழிக்க உதவிய சர்வதேச நாடுகள் தான். அவர்கள் இந்தப் பொறுப்பில் இருந்து விலகி இருக்க முடியாது. அவர்களை நோக்கி தான் இந்த விடயம் உரத்துச் சொல்லப்பட வேண்டும்.

தமிழர்கள் இலங்கைத் தீவில் இன்று பாதுகாப்பு உத்தரவாதம்..  அரசியல் உரிமை இன்றி வாழ நேர்ந்தமைக்கு முழுப் பொறுப்பும் சர்வதேச சமூகம் ஆகும். ?

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள மொழியில் பதிவு செய்யப்பட்ட வாக்கு மூலங்களில் முரண்பாடுகள்- மனித உரிமைகள் ஆணைக்குழு பணிப்பாளர்

நேரில் கண்டவர்களிடமும் உறவினர்களிடமும் சாட்சியங்களை இலங்கைப் பொலிஸார் பதிவு செய்யவில்லை
 
பதிப்பு: 2018 ஜூன் 19 09:45
புலம்: யாழ்ப்பாணம், ஈழம்
புதுப்பிப்பு: ஜூன் 19 10:37
main photomain photomain photo
  •  
தமிழர் தாயகமான யாழ்ப்பாணம் மல்லாகம் பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தையடுத்து, கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களிடம் இலங்கைப் பொலிஸார் வாக்கு மூலங்களை சிங்கள மொழியில் பெற்றுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழவின் யாழ் மாவட்ட கிளை பணிப்பாளர் கனகராஜ் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். இளைஞர்கள் தமிழ்மொழியில் கூறிய வாக்குமூலங்களுக்கும் சிங்கள மொழியில் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்களுக்கும் இடையே முரண்பாடுகள் இருப்பதாகவும் அவர் கூறினார். அதேவேளை கைதான மூன்று இளைஞர்களும் குற்றவாளிகள் அல்ல என்றும், அவர்கள் கொல்லப்பட்ட இளைஞனின் சடலத்தை தெல்லிப்பழை வைத்தியசாலையில் கையளிப்பதற்காகக் கொண்டு சென்றவர்கள் எனவும் உறவினர்கள் தமது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளனர். 
 
இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக கொல்லப்பட்ட இளைஞனின் உறவினர்கள், பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரிடம் தகவல்களை மனித உரிமைகள் ஆணைக்குழு பதிவு செய்துள்ளது.

 

மல்லாகத்திற்கு நேரில் சென்று அவதானித்து தேவையான தகவல்களை பெற்றுள்ளதாக கனகராஜ் கூறினார்.

கைதான இளைஞர்களிடம் சிங்கள மொழியில் மாத்திரம் இலங்கைப் இலங்கைப் பொலிஸார் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதால் அந்த வாக்கு மூலங்களில் பாரிய முரண்பாடுகள் உள்ளன.

இதனால், மனித உரிமைகள் ஆணைக்குழு தமிழ் மொழியில் வாக்குலங்களை பதிவு செய்ய நேரிட்டதாகவும் கூறிய அவர், சம்பவத்தை நேரில் கண்டவர்களிடமும் உறவினர்களிடமும் பொலிஸார் வாக்குமூலங்களை பதிவு செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.

ஆகவே. சம்பவத்தை நேரில் கண்டவர்களிடமும் மற்றும் உறவினர்களிடமும் வாக்கு மூலங்களை பதிவு செய்யுமாறு பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் கனகராஜ் கூறினார்.

அதேவேளை, துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு காரணமான, சுன்னாகம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரு பொலிஸாரும் வெளியே சென்றபோது, துப்பாக்கிகளை எடுத்து சென்றமை குறித்து பொலிஸ் நிலைய பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்துள்ளனரா என்பது தொடர்பாகவும் தகவல்களை பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்து பொலிஸார் மேற்கொண்டு வரும் செயற்பாடுகள். விசாரணைகள் பற்றிய நடவடிக்கைகளை மனித உரிமைகள் ஆணைக்குழு அவதானித்து வருவதாகவும் கனகராஜ் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, துப்பாக்கிச் சூடு நடத்திய இரு பொலிஸாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்று சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்கள், மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கூறியுள்ளனர்.

சம்பவம் நடைபெற்றபோது வாள்களுடன் நின்ற இளைஞர்களை பொலிஸார் கைது செய்ய்வில்லை என்றும், வாள்களுடன் நின்ற இளைஞர்கள் பொலிஸாருடன் சேர்ந்து குற்றச் செல்களில் ஈடுபடுபவர்கள் எனவும் தமது முறைப்பபட்டில் கூறியுள்ளதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் ஊடகங்களுக்கு கூறியுள்ளனர்.

நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏழு மணிக்கு மல்லாகம் பிரதேசத்தில் இலங்கைப் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில். மல்லாகம் குழமங்கால் பகுதியைச் சேர்ந்த பாக்கியராசா சுதர்ஸன் என்ற இளைஞன் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.koormai.com/pathivu.html?vakai=1&therivu=103

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Elugnajiru said:

யாழ் குடாநாட்டின் இளையோர் வினையை விதைத்து வினையயே அறுக்கிறார்கள்.

வன்முறையில் ஈடுபடுவோர் அனைவரும் களையெடுக்கப்படல்வேண்டும். இதில் வேடிக்கை என்னவென்றால் யாழ் மாநகர சபையின் அங்கத்தவர் ரெமீடியஸ் ஒரு வழ்க்குரைஞர் அவர்தான் குடாநாட்டுப்பொறுக்கிகளை கூடிதலாகப் பிணையில் எடுப்பவர்.

முன்னாள் அரச ஒட்டுக்குழு கூலிகள் தான் அதிகம்.. சொறீலங்கா பொலிஸ் ரவுடிகளின் கையாட்களாக அலைகிறார்கள்.  

எப்படி இந்திய இராணுவம்.. மண்டையன் குழுக்களை வளர்த்ததோ.. அதையே சொறீலங்கா அரசும் செய்கிறது.

இதன் மூலம் போரற்ற.. ஆனால் அச்ச சூழலுக்குள் தமிழ் மக்களை வைத்திருப்பதே சொறீலங்கா சிங்கள இனவெறி ஆட்சியாளர்களின் நோக்கம்.. தேவை.

இது தமிழர்கள் மீதான அடக்குமுறை..  இனப்படுகொலையின் இன்னொரு வடிவமே அன்றி வேறில்லை.

இந்த நிலை தமிழர்களுக்கு நேர முழுக்காரணம்.. இணைத்தலைமை நாடுகளும்.. சர்வதேசமும் ஆகும்.

ஆனால் அவர்கள் இன்று மெளனமாக இருந்து வேடிக்கை மட்டுமே பார்க்கின்றனர். இவற்றை தடுக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பதில்லை. 

இவர்கள் தான் தமிழ் மக்களுக்கு பொய் வாக்குறுதிகளை அளித்தார்கள்.. புலிப் பயங்கரவாதம் அழிக்கப்பட்டதும்.. தமிழ் மக்களுக்கு எல்லா  உரிமைகளையும் பாதுகாப்பையும் பெற்றுத் தந்துவிடுவோம் என்று.

அந்த வாக்குறுதிகளுக்கு என்னவாயிற்று..??????!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் குடாநாட்டில் இப்போது நடக்கும் வன்முறைகளுக்குக்காரணம் சுமார் இருபத்து ஐந்து வயதுக்குட்பட்ட அல்லது அதைவிட ஓரிரு வயது கூடிய தமிழ் இலைஞர்களே, இவர்கள் அனைவுரும் பாரிய இடம்பெயர்வுக்கு பின்பு குடாநாட்டுக்கு நாம் திரும்பவும் போகும்போது சிறுவர்களாகவிருந்தவர்கள் போர்பற்றியோ அதன் வரலாறுபற்றியோ எந்தவித புரிதலும் இல்லாதவர்கள்.

சிறுவயதிலிருந்தே இராணுவச்சூழலில் வளர்ந்த இவர்களுக்கு இப்படித்தான் நீண்டகாலமாகக் குடாநாட்டுத்தமிழர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் எனும் பிம்பம் படிந்துள்ளது இவர்களை வளைப்பது இலகு தவிர இல்லாதுபோன சாதி அடையாளங்கள் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும் திடீர்ப் பணப்புழக்கம் தவிர கல்வியறிவு இல்லாமலே பணம் இருந்தால் எப்படியும் வாழலாம் தவிர வெளிநாட்டுப்பணவரவு இவை அனைத்தும் வன்முறையைத் தூண்டுகிறது. இதைவிட யாழ்குடாநாட்டின் மேல்சாதி இனத்தவர்கள் மீதான காலம்காலமாக மனதில் படிந்த வன்மம், மேலும் பத்துவீட்டுக்குள் புகிந்து கொள்ளையடித்தால் ஒருவீட்டில் கொள்ளையடித்த வருமானத்தை சிறீலங்காப்ப் போலீசுக்கும் இன்னுமொரு வீட்டில் கொள்ளையடித்த வருமானத்தை வக்கீலுக்கும் கொடுத்தால் சிறையில் சுகசீவியம் நடாத்திவிட்டு வெளியே வந்திடலாம் இதைவிட சிறைகளில் ஏற்படும் வன்முறையாளர்களது மேலதிக தொடர்பு வன்முறையை விரிவாக்கம்செய்ய உதவுகிறது. 

இதற்குமேல் வெளியாலை வீதியில் நடந்தால் மரியாதையானவன் ஒதுங்கிப்போவதை அவர்கள் தங்களுக்குக்கிடைக்கும் கெத்து என மதிப்பிடுகிறார்கள்.  பருமனுக்கு மேலதிகமான மோட்டார் சைக்கிள் ஊரெங்கும் நிறைந்துகிடக்கும் நிதி நிறுவனங்கள் கடன் நிறுவனங்கள் வருமானமில்லாதுவிட்டாலும் இருவரது பிணைக்கையெளுத்துடன் இவைகளை எளிதில் வாங்கிவிடலாம் இவைகளே வன்முறைக்கு முதல் விதை.
 
வாங்கிய வாகனத்துக்கு மாதப்பணம் கட்டமுடியாதுவிடின் ஏனைய மாதத்தவணப்பணம் கட்டாதவர்களது வாகனங்களைப் பிடுங்கி கடன் கொடுத்தவனுக்கு ஒப்படைப்பதால் ஈடுகட்டிவிடலாம் ஒரு ஏரியாவிலிருந்து இன்னுமொரு ஏரியாவுக்குப் போகும்போது இவர்களால் உருவாக்கப்பட்ட வலைப்பின்னல் இவர்களில் யார் கை ஓங்குகிறதோ அவர்களுக்கிடையிலான மோதல் மீண்டும் தொடங்கிய இடத்திலிருந்து ஆரம்பிப்பது, நிதி நிறுவனங்களுக்கு இவர்களது தேவை அதிகம் ஆகவே நிதிநிறுவனங்கள் இவர்களது வன்முறையைக்கண்டுகொள்ளாதிருக்க நீத்தித்துறையை வளைத்துபோட்டு வைத்திருக்கு. 

இவைகளே குடாநாட்டின் வன்முறையாளர்களது வரலாறு.

இதைவிட மோசம் பத்திலிருந்து பதின்நாலு வயதுக்குள்ளேயே அங்குள்ள சிறுமிகள் காதல் வயப்படுகிறார்கள் பெற்றோரால் நெருக்கடி வந்ததும் அவர்களது தொடர்பிலிருக்கும் பெடியன் உள்ளூர் வெளியூர் சண்டியஙள் துணையுடன் பெட்டையைத் தூக்குறான் இதில் சாதிப்பிரச்சனை இருந்தால் இரு பகுதியில் ஒருவர் சப்போட்டும் நிதி உகவியும் தாராளமாக இருக்கும். 

இதுக்குமேல் என்ன வேண்டும் கூறுவதற்கு. சண்டித்தனம் என்பதும் குற்றப்பின்ணணி என்பதும் இப்போது குடாநாட்டில் சமூகக் கெளரவம்

எப்படியான பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதற்கு மற்றைய இனங்களையும் அரசாங்கத்தையும் காரணமாக காட்டிவிட்டு எங்களை ஒரு புனிதர்களாக படம்பிடித்து காட்டி குற்றவாளிக்கூண்டில் இருந்து தப்பித்துவிடுவது எமது திறமை.

சாதி பாகுபாடுகள், வேறுபாடுகள் களையப்படாதவரை தமிழர்கள் ஒருபோதும் ஒருமித்து வாழப்போவது இல்லை. 

எமக்குள்ளேயே சமூக அஸ்தஸ்து, கெளரவம், பதவிகள்,  செல்வம், செல்வாக்கு, பிரதேசவாதம் என்று பல விடயங்களில் ஒருவருக்குள் ஒருவர் கடும்போட்டி, புடுங்குப்பாடு உள்ளது.

பல விடயங்கள் வெளிப்படையாக பேசப்படுவது இல்லை. ஆனால், பல்வேறு பிரச்சனைகளின் மூலாதாரமாய் அவைதான் விளங்கும்.

எமது தவறுகளை கண்டுகொள்ளாமல் இப்படியே தொடர்ந்து சொறி லங்கா போலிஸ், ஒட்டுக்குழு, இத்தியாதி என்று கத்திக்கொண்டு இருப்போம். நிச்சயம் விடிவு பிறக்கும்.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, கலைஞன் said:

சாதி பாகுபாடுகள், வேறுபாடுகள் களையப்படாதவரை தமிழர்கள் ஒருபோதும் ஒருமித்து வாழப்போவது இல்லை. 

இதை யார் முன் நின்று செய்யலாம் / செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?

3 hours ago, குமாரசாமி said:

இதை யார் முன் நின்று செய்யலாம் / செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள்?

சுத்திகரிப்பை எங்களில் இருந்து ஆரம்பிக்கலாம்? ?

  • கருத்துக்கள உறவுகள்

பழைய குருடி கதவைத் திறவடி கணக்கா.. மீண்டும் சாதியம்.. பிரதேசம் மீது பழியைப் போட்டுவிட்டு.. ஆக்கிரமிப்புக் கொடுமைகளுக்கு அடிமைப்படும் இழி புத்தி தான் தமிழர்களின் இன்றைய அவலத்துக்கு முக்கிய காரணம்.

இதே சாதியம்.. பிரதேசம்.. 1990 களிலும் இருந்தது. ஆனால்.. அப்போ சமூக வன்முறைகள் மிக அரிதாக இருந்தன. காரணம்.. சிவில் நிர்வாகம்.. புலிகளின் கையில் இருந்தது.

இன்று.. சிங்கள ஆக்கிரமிப்பாளர்களின் கையில். அவர்கள்.. கஞ்சாவில் இருந்து.. கத்தி பொல்லு.. சாதி.. பிரதேசம்...ஒட்டுக்குழுக்கள்.. பாலியல்.. என்று... எல்லாத்தையுமே தமிழர்களைப் பலவீனப்படுத்த பாவிக்கிறார்கள். அத்தோடு இனப்படுகொலையையும் அரங்கேற்றுகிறார்கள்.

வன்முறைகள்.. உலகம் பூராவும் தான் நிகழ்கின்றன. ஆனால்.. எடுத்ததற்கும் துப்பாக்கியால் சுடுவது சொறீலங்காவில் வடக்குக் கிழக்கில் தான் அதிகம். அதுவும் முஸ்லீம்கள் மீதோ.. சிங்களவர்கள் மீதோ துப்பாக்கி சுடுவது அரிது. ஆனால்.. தமிழர்கள் மீது அடிக்கடி சுடுகுது. இப்ப மாதத்திற்கு ஒன்றிரண்டாவது நடக்குது. எனி கிழமைக்கு என்றாகும். பின் நாளுக்கு என்றாகும். 

இப்படித்தான்.. 1980 களிலும் சிங்கள அரச பயங்கரவாதம்.. தமிழினப் படுகொலையை ஆக்கிரமிப்பு இராணுவம்.. பொலிஸை வைத்து நடத்தியது. அதன் விளைவு..பொலிஸ் நிலையங்கள் மீதான தாக்குதல்கள்..  இராணுவ முகாம்களுக்குள் இராணுவத்தை முடக்க இளையர்கள் முயன்றனர். மண் விடுவிப்பு போர் உக்கிரமடைய ஆரம்பித்தது.

பழைய வரலாற்று நீட்சிகளை சரியாக உணராமல்.. எடுத்ததற்கும் சொந்த இனத்தில் மட்டும் குறைகண்டு கொண்டிருப்பதும்.. தமிழர்களுக்குள் இருக்கும் ஒரு வகை தாழ்வுமனப்பாண்மையுடன் கூடிய அடிமைப் புத்தி. இதுவே இந்த இனம் காட்டுக்கொடுப்புகளின் ஊடாக இன்றைய இழி நிலையை அடைய முக்கிய காரணமும் ஆகும். ?

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சில இடங்களில் சான்டமருதன் எழுதும் கருத்துக்களை எத்தனை பேர் வாசித்து 
புரிந்து கொள்கிறார்களோ தெரியவில்லை.

எமது இனம் திருந்த இன்னும் ஆயிரம் வருஷம் இருக்கு 
காரணம் மற்ற இனங்கள் இப்போ திருந்தி கொண்டு இருக்கின்றன 
தமிழர்கள் பல ஆயிரம் வருடம் முன்பு சிறப்புடன் நல்ல மதம் மனிதர்கள் 
என்று வாழ்ந்து ....... இப்போ கெட்டு குறுகி கொண்டு இருக்கிறார்கள் 
இனி இந்த சுற்று முடிய ஒரு ஆயிரம் வருஷம் எடுக்கும் பின்பு திருந் தொடக 
ஒரு 500 வருஷம் செல்லும்.  
 

19 hours ago, nedukkalapoovan said:

பழைய குருடி கதவைத் திறவடி கணக்கா.. மீண்டும் சாதியம்.. பிரதேசம் மீது பழியைப் போட்டுவிட்டு.. ஆக்கிரமிப்புக் கொடுமைகளுக்கு அடிமைப்படும் இழி புத்தி தான் தமிழர்களின் இன்றைய அவலத்துக்கு முக்கிய காரணம்.

இதே சாதியம்.. பிரதேசம்.. 1990 களிலும் இருந்தது. ஆனால்.. அப்போ சமூக வன்முறைகள் மிக அரிதாக இருந்தன. காரணம்.. சிவில் நிர்வாகம்.. புலிகளின் கையில் இருந்தது.

இன்று.. சிங்கள ஆக்கிரமிப்பாளர்களின் கையில். அவர்கள்.. கஞ்சாவில் இருந்து.. கத்தி பொல்லு.. சாதி.. பிரதேசம்...ஒட்டுக்குழுக்கள்.. பாலியல்.. என்று... எல்லாத்தையுமே தமிழர்களைப் பலவீனப்படுத்த பாவிக்கிறார்கள். அத்தோடு இனப்படுகொலையையும் அரங்கேற்றுகிறார்கள்.

வன்முறைகள்.. உலகம் பூராவும் தான் நிகழ்கின்றன. ஆனால்.. எடுத்ததற்கும் துப்பாக்கியால் சுடுவது சொறீலங்காவில் வடக்குக் கிழக்கில் தான் அதிகம். அதுவும் முஸ்லீம்கள் மீதோ.. சிங்களவர்கள் மீதோ துப்பாக்கி சுடுவது அரிது. ஆனால்.. தமிழர்கள் மீது அடிக்கடி சுடுகுது. இப்ப மாதத்திற்கு ஒன்றிரண்டாவது நடக்குது. எனி கிழமைக்கு என்றாகும். பின் நாளுக்கு என்றாகும். 

இப்படித்தான்.. 1980 களிலும் சிங்கள அரச பயங்கரவாதம்.. தமிழினப் படுகொலையை ஆக்கிரமிப்பு இராணுவம்.. பொலிஸை வைத்து நடத்தியது. அதன் விளைவு..பொலிஸ் நிலையங்கள் மீதான தாக்குதல்கள்..  இராணுவ முகாம்களுக்குள் இராணுவத்தை முடக்க இளையர்கள் முயன்றனர். மண் விடுவிப்பு போர் உக்கிரமடைய ஆரம்பித்தது.

பழைய வரலாற்று நீட்சிகளை சரியாக உணராமல்.. எடுத்ததற்கும் சொந்த இனத்தில் மட்டும் குறைகண்டு கொண்டிருப்பதும்.. தமிழர்களுக்குள் இருக்கும் ஒரு வகை தாழ்வுமனப்பாண்மையுடன் கூடிய அடிமைப் புத்தி. இதுவே இந்த இனம் காட்டுக்கொடுப்புகளின் ஊடாக இன்றைய இழி நிலையை அடைய முக்கிய காரணமும் ஆகும். ?

 

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞன்.. உலகம் தெரியாததுகளுக்கு சிலர் எழுதும் வெட்டிக்கதையை நம்புவதுதான் முடிந்த முடிவாம். ?

உங்களையோ.. கிருபண்ணாவையோ சொல்லவில்லை. நாட்டில் வெட்டிக்கதைகள் எழுதுபவர்களையும் அவர்களின் கதைகளை நம்புவர்களையும் சொன்னம்.

இப்ப எல்லாம் புலிகளை வைச்சு ஜோசியம் சொல்பவர்கள் அதிகமாகிவிட்டார்கள்.

நாங்கள் ஜோசியம் சொல்லவில்லை.. கடந்த கால உண்மையின் தரிசனத்தைச் சொல்கிறம். அதுதான் வேறுபாடு. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.