Jump to content

தன்னைப் படுகொலைச் செய்ய சதிசெய்வதாக.. "றோ" புலனாய்வு அமைப்பு மீது, ஜனாதிபதி சிறிசேன குற்றச்சாட்டு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

49vUUcEj?format=jpg&name=600x314

தன்னைப் படுகொலைச் செய்ய சதிசெய்வதாக இந்தியப்புலனாய்வு அமைப்பு மீது ஜனாதிபதி சிறிசேன குற்றச்சாட்டு.

நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி சிறிசேன தன்னை இந்தியாவின் புலனாய்வு அமைப்பான றோ படுகொலைசெய்ய முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார். ஆனாலும் பிரதமர் நரேந்திர மோடி இந்தத் திட்டம் தொடர்பாக ஒருவேளை அறிந்திருக்க வாய்ப்பில்லை எனவும் தெரிவித்துள்ளதாக அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற வட்டாரங்களை மேற்கோள் காட்டி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி இந்த விடயத்தைக் கூறியபோது தாம் அதிர்ச்சியடைந்ததாக தம்மை இனங்காட்டிக் கொள்ள விரும்பாத அந்த வட்டாரத்தினர் கூறியுள்ளனர்.

இந்த விடயத்தினை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலகத்தின் ஊடகப் பிரிவின் சிரேஸ்ட அதிகாரியொருவரைத் தொடர்புகொண்டபோது தாம் இதனை உறுதிப்படுத்தியபின்னர் தொடர்புகொள்வதாக கூறியபோதும் இந்தத்தகவல் அச்சுக்குப் போகும்வரையில் அவர் மீண்டும் தொடர்புகொள்ளவில்லை என ஹிந்து பத்திரிகை மேலும் தெரிவித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு செல்வதற்கு சில தினங்களுக்கு முன்னர் இந்த விடயம் ஜனாதிபதியினால் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்திய விஜயத்தின் போது பிரதமர் ரணில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்திக்கவுள்ளதுடன் இந்திய உதவியுடன் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் உட்பட இருதரப்பு உறவுகள் தொடர்பாகவும் கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/தன்னைப்-படுகொலைச்-செய்ய/

Link to comment
Share on other sites

என்னைக் கொல்ல றோ சதித்திட்டம் – சிறிலங்கா அதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு

 

maithri-press-1-300x200.jpgஇந்தியப் புலனாய்வுப் பிரிவான றோ தன்னைக் கொல்லச் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று அமைச்சரவைக் கூட்டத்தில் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் ஒருவரை ஆதாரம் காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இந்தப் படுகொலைச் சதிக்குப் பின்னால், இந்தியாவின் றோ புலனாய்வுப் பிரிவே இருந்தது என்று, நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் தெரிவித்தார் என்று தனது பெயரை வெளியிட விரும்பாத அமைச்சர் ஒருவர், ECONOMY NEXT ஊடகத்துக்குத் தெரிவித்துள்ளார்.

இந்த சதித் திட்டம் தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவு நடத்தும் விசாரணையையிட்டு தாம் மகிழ்ச்சியடையவில்லை என்றும், விசாரணைகள் மெதுவாகவே முன்னெடுக்கப்படுவதாகவும், சட்டம் ஒழுங்கு அமைச்சரைப் பார்த்து சிறிலங்கா அதிபர் கூறியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் சிறிலங்கா பிரதமர் அசாதாரணமான உறுதியுடன் இருந்தார் என்றும்,  தனது அரசாங்கம் மீது சிறிலங்கா அதிபர் கூறிய குற்றச்சாட்டுகளையிட்டு அவர் அதிருப்தியுடன் காணப்பட்டார் என்றும் அமைச்சரவை வட்டாரம் தெரிவித்தது.

இந்தியப் புலனாய்வுப் பிரிவு மீது குற்றம்சாட்டிய சிறிலங்கா அதிபர், மேலதிக விபரங்கள் எதையும் வெளியிடவில்லை. என்று தெரிவித்த அமைச்சரவை வட்டாரம், சிறிலங்கா அதிபரின் இந்தக் குற்றச்சாட்டினால் அமைச்சர்கள் அதிர்ச்சியுடன் காணப்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளது.

அவர் தனது குற்றச்சாட்டுக்கு ஆதாரம் எதையும் வழங்காததால்,அதன் மீது அக்கறை கொள்ள வேண்டியதில்லை என்று நான் நினைக்கிறேன் என அமைச்சர் ஒருவர் கூறியுள்ளார்.

அதேவேளை, படுகொலைச் சதி தொடர்பான விபரங்களை வெளியிட நேற்று பிற்பகல் சிறிலங்கா அதிபர் செயலகத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்புக்கு ஒழுங்கு செய்யப்பட்டது. எனினும் கடைசி நேரத்தில் அது நிறுத்தப்பட்டது. அந்த செய்தியாளர் சந்திப்பை சிறிலங்கா அதிபரின் முன்னாள் இணைப்பு அதிகாரியும், தற்போதைய மூத்த ஆலோசகருமான சிறிலால் லக்திலக நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இந்தியப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த வாரம் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், இந்தியப் புலனாய்வுப் பிரிவான றோ மீது சிறிலங்கா அதிபர் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

http://www.puthinappalakai.net/2018/10/17/news/33518

‘றோ’ வின் படுகொலைச் சதி மோடிக்கு தெரியாமல் இருக்கலாம் – சிறிலங்கா அதிபர்

 

maithri-modi-300x199.jpgதன்னைக் கொல்ல இந்தியப் புலனாய்வுப் பிரிவான றோ, சதித் திட்டம் தீட்டியுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ள குற்றச்சாட்டு, இந்திய – சிறிலங்கா உறவுகளை தீவிரமாக பாதிக்கக் கூடிய ஒரு நடவடிக்கையாக இருக்கும் என்று இந்தியாவில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழான ‘தி ஹிந்து’ தெரிவித்துள்ளது.

சிறிலங்கா அதிபர் சிறிசேன நேற்று நடந்த வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் உரையாற்றிய போது, இந்தியப் புலனாய்வுப் பிரிவு தன்னைக் கொல்ல முயற்சிப்பதாக, தனது அமைச்சர்களிடம் கூறியுள்ளார்.

ஆனால், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இது தெரியாமல் இருக்கக் கூடும் என்றும் அவர் கூறினார் என, அந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற வட்டாரங்களில் இருந்து அறியப்படுகிறது.

“கைது செய்யப்பட்ட இந்தியர், என்னைக் கொல்ல முயற்சிக்கும் றோவின் முகவராக இருக்க வேண்டும். இதனை இந்தியப் பிரதமர் அறியாமல் இருக்கலாம். இது பெரும்பாலும் வழக்கம் தான். சிஐஏயின் இதுபோன்ற நடவடிக்கைகள் ட்ரம்ப்புக்கும் தெரியாமல் இருக்கலாம்” என்று சிறிலங்கா அதிபர் உரையாற்றியிருந்தார்.

அவர் அப்படிக் கூறியது எமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்று, தமது பெயரை வெளிப்படுத்த விரும்பாத ஒரு வட்டாரம் தெரிவித்தது.

இதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, அதிபர் செயலக ஊடகப் பிரிவின் மூத்த அதிகாரி ஒருவருடன் தொடர்பு கொண்ட போது, இதுபற்றி ஆராய்ந்து பதிலளிப்பதாக கூறினார். எனினும், இதுவரை அவரிடம் இருந்து  எந்தப் பதிலும் வரவில்லை.

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்வதற்கு-, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து இருதரப்பு விவகாரங்கள் குறித்துப் பேசுவதற்கு சில நாட்கள் முன்னதாக, சிறிலங்கா அதிபர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார்.

எனினும் இந்தியப் புலனாய்வுப் பிரிவு மீது சிறிலங்கா தலைவர் ஒருவர் குற்றச்சாட்டை முன்வைப்பது இது தான் முதல்முறையல்ல. 2015 அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர், மகிந்த ராஜபக்சவும், தனது தோல்விக்கு இந்தியப் புலனாய்வுப் பிரிவான றோ தான் காரணம் என்று குற்றம்சாட்டியிருந்தார்.

இதேவேளை சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நேற்று பிற்பகல் ஏற்பாடு செய்யப்பட்ட செய்தியாளர் சந்திப்பு நிறுத்தப்பட்டதற்கான காரணத்தை சிறிலங்கா அதிபரின் ஆலோசகர் சிறிலால் லக்திலகவிடம், வினவிய போது, மேலதிக தகவல்களுக்காக காத்திருப்பதால் செய்தியாளர் சந்திப்பு நிறுத்தப்பட்டதாக கூறினார்.

http://www.puthinappalakai.net/2018/10/17/news/33520

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூத்து, கூத்தூ, தையங்கூத்தூ. 

சிலி சேனா நடிப்பதை விடுங்கள். சீனவை வடக்கில், கிழக்கில் இருத்துங்கள். உங்கள் கூத்தை ராஜாவூடு பக்காவாக ஆடுங்கள்.  

நாங்கள் உங்களுக்கு கைதட்டி, ஆரவாரிக்கிறோம். 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா  ஆளம்  தெரியாமல்  வாயை  விடுகிறார்

பாவம்

இப்பவே  அஞ்சலி  போட்டு  வைப்பம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி ‘றோ’ மீது குற்றம் சாட்டவில்லை – ராஜித சேனாரத்ன!!

 

தன்னைக் கொலை செய்யும் சதித் திட்டத்துக்குப் பின்னால், இந்தியாவின் றோ புலனாய்வுப் பிரிவு இருந்தது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒருபோதும் கூறவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடந்த அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர் ராஜித சேனாரத்ன, இதனைத் தெரிவித்தார்.

தன்னைக் கொலை செய்யும் சதித் திட்டத்தில் றோவுக்குத் தொடர்பு உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதாக ஊடகங்களில் வெளியான செய்திகளையும் அமைச்சர் ராஜித சேனாரத்ன நிராகரித்தார்.

படுகொலைச் சதித் திட்ட குற்றச்சாட்டுடன், றோ தொடர்பு படுத்தப்பட்டுள்ளதாகத் தான், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

https://newuthayan.com/story/15/ஜனாதிபதி-றோ-மீது-குற்றம்-சாட்டவில்லை-ராஜித-சேனாரத்ன.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையர்கள் ராஜிவ்வை போட்டார்கள் என்று அவர்கள் சொல்லலாம், இந்தியர்கள் நம்மாள போட ட்ரை பண்ணுகிறார்கள் என்று சொல்வதில் பிழை இல்லை தானே.  :grin:

வந்துட்டாரையா, வந்துட்டார்...

விமல் வீரவன்ச விபரத்தோட வந்திட்டார்... 

Suspect a RAW member bearing ID number RB317217/VJ: JO

சீனாக்காரன் நல்ல ஸ்பீடா போறான்யா .... இந்தியா காரன்... தடுமாறுறான் போல இருக்குதே..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இலங்கையர்கள் ராஜிவ்வை போட்டார்கள் என்று அவர்கள் சொல்லலாம், இந்தியர்கள் நம்மாள போட ட்ரை பண்ணுகிறார்கள் என்று சொல்வதில் பிழை இல்லை தானே.  :grin:

அதுதானே....! 'றோ' என்றால் இந்தியலங்கா போற்றும் ஆங்கில மொழியில் சமன் என்றுதானே அர்த்தம்.!! ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Paanch said:

அதுதானே....! 'றோ' என்றால் இந்தியலங்கா போற்றும் ஆங்கில மொழியில் சமன் என்றுதானே அர்த்தம்.!! ? 

http://www.dailymirror.lk/article/President-Sirisena-alleges-that-RAW-is-plotting-his-assassination-156981.html

http://www.dailymirror.lk/article/Suspect-a-RAW-member-bearing-ID-number-RB-VJ-JO-157013.html

http://www.dailymirror.lk/article/Rajitha-downplays-assassination-plot-on-Prez--157015.html

http://www.dailymirror.lk/article/President-phones-PM-Modi-157014.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய உளவுத்துறை எதிர்காலக் காய் நகர்த்தல்களில் இவரைப் போட்டுத்தள்ளுவதாகவுமிருக்கலாம் என்பதற்கான ஊகத்தின் அடிப்படையிலான பாதுகாப்பு நடவடிக்கை இதுவாகும் இனிமேல் யார் இவரைப் போட்டுத்தள்ள நினைத்தாலும் மிகவும் சிரமமான விடையமாக இது இருக்கும்.

மிகவும் புத்திசாலித்தனமாக எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கை, அதே வேளை ஒரே கல்லில் இரண்டு மாங்காய் சிங்களம் தனது அரசியல் தலைமைகளைப் பாதுகாப்பதோடு சீனாவைத் தனக்கு மிக அருகில் கொண்டுவருவதற்கான காய் நகர்த்தல் 

தமிழர் விரோததேசம் இந்தியா இப்போது ஆப்பிழுத்த குரங்காக நிற்கிறது. இதைத் தமிழர்கள் வரவேற்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிடிக்கு அப்பால், இலங்கை அரசு இந்த விஷயத்தினை தீவிரமாக எடுத்துள்ளதாகவே தெரிகிறது.

புது டெல்லி செல்லும் ரணில், இது விடயமாக ஆலோசிக்க, தனது நிகழ்ச்சி நிரலுக்கு மேலதிகமாக, இந்திய பாதுகாப்பு அதிகாரிகளுடன் சந்திதிப்பினை ஒழுங்கு செய்ய கோரியுள்ளதாக டெய்லி மிரர் பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது.

http://www.dailymirror.lk/article/PM-to-discuss-with-Indians-157019.html

இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள இந்திய பிரஜை, ஒரு மனநலம் குன்றியவர், என இந்திய தூதரகம் தானாய் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

எனினும் கைதானவரிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இலங்கை அரசு நேற்று பல விடயங்களை பகிரங்கப் படுத்தி இருந்தது.

இடையே, நேற்று மைத்திரி, மோடியுடன் தொலைபேசியில் பேசியிருந்தார் என்பது கவனிக்க தக்கது. 

http://www.dailymirror.lk/article/President-phones-PM-Modi-157014.html

இது விடயமாக பயங்கரவாத தடுப்பு பிரிவி DIG நலிந்த டீ சில்வா கட்டாய விடுப்பில் உள்ளதையும், IGP புண்ணிய டீ சில்வா ராஜினாமா செய்யும் அழுத்தத்துக்கு உள்ளாகி உள்ளதையும் கவனிக்க வேண்டும்.

*********

இன்று இந்திய தூதர் சித்து அவசரமாக ஜனாதிபதியை சந்தித்தார்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரியை கொலை செய்து போட்டு மகிந்தவை பதவியில் அமர்த்தும் பிளானாக   இருக்கும் ...பழியை புலியில் போட்டால் புலியும் உயிர்த்து விடும் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதியை கொலை செய்ய முயற்சி – விசாரணை அவசியம் என்கின்றார் ஆலோசகர்!

ஜனாதிபதிக்கு எதிரான கொலை முயற்சி தொடர்பில் முழுமையான விசாரணைத் அவசியம் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகர் ஷிரால் லக்திலக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒரு நாட்டின் அரச தலைவரைக் கொலை செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதான தகவலை உடனடியாக நிராரிக்கப்பது முட்டாள் தனமானது, என்றும் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர், இவ்வாறு தெரிவித்தனர்.

அவர் மேலும் கூறுகையில், “தெற்காசியாவில் இந்தியாவும் இலங்கையும் ஜனநாயக நாடுகள். இந்தியாவில் மூன்று காந்திகள் கொலைச் செய்யப்பட்டுள்ளனர்.

ஆரம்பத்தில் மகாத்மா காந்தி, பின் இந்திராகாந்தி, அதன் பின்னர் ராஜிவ்காந்தி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். இலங்கையிலும் அவ்வாறு படுகொலைகள் இடம்பெற்றன. அது விடுதலைப் புலிகளினால் நடத்தப்பட்டது.

ஆனாலும் அரசியல் கொலைகளை நாம் இங்கு காணவில்லை. ஆனால் தற்போது, அரச தலைவர் ஒருவரைக் கொலைச் செய்யவுள்ளதாக தகவல் வெளியான போதிலும், அது குறித்து ஆராயாமல் அது பொய், உண்மையில்லை என்று கூறுகிறார்கள்.

ஒரு நாட்டில் அரச தலைவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட போகின்றது என்றால் அது உண்மையோ பொய்யோ, அது குறித்து நீதி ஒழுங்காக செயற்படுத்தப்பட வேண்டும்.

ஜனாதிபதி கொலை சதி தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வு முன்னெடுத்து வருகின்ற நிலையில், இதற்கிடையில் பொய்யான பிரசாரங்கள் எமது சமூகத்தினரிடையே பரப்பப்ட்டு வருகின்றன.

இந்த கொலை சதி விவகாரம் உண்மையா அல்லது பொய்யா என்று எமக்கு தெரியாது. ஆனால் இந்த விவகாரம் தொடர்பில் சுயாதீன விசாரணை அவசியமாகும்.

கொலை சதி தொடர்பில் தெரியப்படுத்திய நபரின் பின்புலம் தொடர்பில் ஆராயவோ அல்லது அவர் தொடர்பில் விமர்சனங்களையோ முன்வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் கூறிய விடயம் என்ன? அந்த விடயத்தின் தீவிரத்தன்மை தொடர்பிலே ஆராய வேண்டும்.

நீதியின்படி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு நீதிமன்றமே அதன் உண்மை தன்மை தீர்மானிக்க வேண்டும். அரசாங்கத்தில் உள்ளவர்களும் எதிர் தரப்பில் உள்ள அரசியல்வாதிகளும் மாற்றுக் கருத்துக்களை கூறி இந்த விடயத்தை மூடிமறைக்க முயற்சி செய்கின்றார்களா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.” என கூறினார்.

http://athavannews.com/ஜனாதிபதியை-கொள்ள-முயற்சி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

dfgbn-1-720x450.jpg

திரிபுபடுத்தி தகவல் வழங்கியமை குறித்து ஆராய வேண்டும் – மஹிந்த 

அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்ட விடயங்களைத் திரிபுபடுத்தி ஊடகங்களுக்கு தகவல் வழங்கியமை தொடர்பில் உடனடியாக ஆராய வேண்டும் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஶ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்ட விடயங்களை திரிபுபடுத்தி ஊடகங்களுக்கு தெரிவித்தவர்கள் தொடர்பில் தேடிப்பார்ப்பது அரசாங்கத்தின் கடமையாகும்.

இந்த செயலானது வெட்கப்படவேண்டிய விடயம் என்பதுடன் மிகவும் பயங்கரமான விடயமாகும். அத்துடன் இந்திய – இலங்கை அரசாங்கங்களுக்கிடையில் இருந்துவரும் நல்லுறவில் விரிசலை ஏற்படுத்தும் நோக்கத்தில் மிகவும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது

இந்திய புலனாய்வு அமைப்பு தன்னை கொலைசெய்வதற்கு சதி செய்வதாக ஜனாதிபதி அமைச்சரவை கூட்டத்தின்போது தெரிவித்ததாக இந்து பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

குறித்த பத்திரிகையின் ஊடகவியலாளர் இந்த தகவல்களை அமைச்சரவையில் இருக்கும் நான்கு அமைச்சர்கள் குறிப்பிட்டதாகவே தெரிவித்திருக்கின்றார்.

ஆனால் இவ்வாறு தெரிவித்தவர்கள் தைரியம் இருந்தால் அவர்களின் பெயர்களை குறிப்பிட்டு தெரிவித்திருக்கவேண்டும். இதுதொடர்பாக அடுத்த அமைச்சரவை கூட்டத்தின்போது ஆராயவும் எதிர்பார்க்கின்றோம்“ என தெரிவித்துள்ளார்.

http://athavannews.com/திரிபுபடுத்தி-தகவல்-வழங்/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Nalaka-1-720x450.jpg

ஜனாதிபதி கொலைச் சதி விவகாரம்: பிரதிப் பொலிஸ்மா அதிபரிடம் 9 மணி நேரம் வாக்குமூலப்பதிவு!

பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவில் 9 மணிநேரம் வாக்குமூலம் பதிவு செய்த நிலையில் அங்கிருந்து சென்றுள்ளார்.

ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, முன்னாள் பாது­காப்பு செயலர் கோத்­தா­பய ராஜ­பக்ஷ, உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் பிர­சன்ன அல்விஸ் ஆகி­யோரை கொலை செய்ய சதி செய்யும் வித­மாக தொலை­பே­சியில் கலந்­து­ரை­யா­டப்­பட்­ட­தாக கூறப்­படும் விவ­காரம் தொடர்பில் விசா­ர­ணை­க­ளுக்­காக பிரதிப் பொலிஸ் மா அதிபர் நால­க சில்வா இன்று (வியாழக்கிழமை) குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜரானார்.

கொலை­ சதி விவ­காரம் குறித்த விசா­ர­ணை­க­ளுக்­காக கட்­டாய விடு­மு­றையில் அனுப்­பப்­பட்­டுள்ள பயங்கரவாத புல­னாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்­வா­வுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை இர­க­சிய பொலிஸார் முன் ஆஜ­ராக அறி­வித்தல் விடுக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் அவர் ஆஜ­ரா­க­வில்லை.

இந் நிலையிலேயே இன்று பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா, சி.ஐ.டி.யின் மனிதப் படு கொலைகள் குறித்த விசா­ரணை அறையின் பொறுப்­ப­தி­காரி பிரதான பொலிஸ் பரி­சோ­தகர் ரஞ்ஜித் முன­சிங்க முன்னிலையில் ஆஜ­ரா­கு­மாறு உத்தரவிட்டது.

அந்தவகையில் நாலக சில்வாவிடம் 9 மணிநேரம் வாக்குமூலம் பெறப்பட்டது. அத்துடன் அவரை நாளை மீண்டும் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜ­ரா­கு­மாறு உத்தரவிட்டதாக அவர் தெரிவித்தார்.

http://athavannews.com/ஜனாதிபதியை-கொலைச்-சதி-வி/

Link to comment
Share on other sites

On 10/17/2018 at 11:08 AM, nunavilan said:

‘றோ’ வின் படுகொலைச் சதி மோடிக்கு தெரியாமல் இருக்கலாம் – சிறிலங்கா அதிபர்

"றோ" என்டால் என்ன?
ஒரு இந்திய பாதாளலோக குழுவோ?
ஒரு இந்திய மாபியா குழுவோ?
ஒரு இந்திய போதைவஸ்து கடத்தல் குழுவோ?
         அல்லது
ஒரு இந்திய பயங்கரவாதக் குழுவோ?
இவர்கள் எதுக்கு மைத்திரியை கொலை செய்யோணும்?

யாராவது விடைகள்  தெரிஞ்சால் சொல்லவும்.

Link to comment
Share on other sites

20 hours ago, Rajesh said:

"றோ" என்டால் என்ன?
ஒரு இந்திய பாதாளலோக குழுவோ?
ஒரு இந்திய மாபியா குழுவோ?
ஒரு இந்திய போதைவஸ்து கடத்தல் குழுவோ?
         அல்லது
ஒரு இந்திய பயங்கரவாதக் குழுவோ?
இவர்கள் எதுக்கு மைத்திரியை கொலை செய்யோணும்?

யாராவது விடைகள்  தெரிஞ்சால் சொல்லவும்.

"றோ" என்பது தெற்காசியாவின் மிக மோசமான பயங்கரவாதக் கும்பல். 
ஹிந்திய அரச பயங்கரவாதிகளினால் உருவாக்கப்பட்டு,  ஹிந்திய அரச பயங்கரவாதிகளின் நிதியளிப்பு, ஊக்கம், ஆதரவுடன் நீண்ட காலமாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபட்டு வருகிறது. 
இலங்கையில் நடைபெற்ற பிரேமதாச, கதிர்காமர், சந்திரிகா படுகொலை முயற்சி, சிவராம் படுகொலை, நிமால் சிறிபால படுகொலை முயற்சி, அமிர்தலிங்கம் - யோகேஸ்வரன் படுகொலை, உமாமகேஸ்வரன் படுகொலை, மகேஸ்வரன் படுகொலை, பாகிஸ்தான் தூதுவர் படுகொலை முயற்சி போன்ற பலரது படுகொலைகளில் "றோ" நேரடியாகவும் பின்னணியிலும்  ஈடுபட்டது மறுக்க முடியாத உண்மைகள்!  
 

Link to comment
Share on other sites

On 10/21/2018 at 11:11 AM, போல் said:

"றோ" என்பது தெற்காசியாவின் மிக மோசமான பயங்கரவாதக் கும்பல். 
ஹிந்திய அரச பயங்கரவாதிகளினால் உருவாக்கப்பட்டு,  ஹிந்திய அரச பயங்கரவாதிகளின் நிதியளிப்பு, ஊக்கம், ஆதரவுடன் நீண்ட காலமாக எல்லை தாண்டிய பயங்கரவாதத்தில் ஈடுபட்டு வருகிறது. 
இலங்கையில் நடைபெற்ற பிரேமதாச, கதிர்காமர், சந்திரிகா படுகொலை முயற்சி, சிவராம் படுகொலை, நிமால் சிறிபால படுகொலை முயற்சி, அமிர்தலிங்கம் - யோகேஸ்வரன் படுகொலை, உமாமகேஸ்வரன் படுகொலை, மகேஸ்வரன் படுகொலை, பாகிஸ்தான் தூதுவர் படுகொலை முயற்சி போன்ற பலரது படுகொலைகளில் "றோ" நேரடியாகவும் பின்னணியிலும்  ஈடுபட்டது மறுக்க முடியாத உண்மைகள்!  
 

நன்றி!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 7 26 MAY, 2024 | 02:59 PM   ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுமக்களுக்கு காணிகளை கையளித்து அதன் முழு உரித்தையும் அவர்களுக்கு வழங்குவது வரவேற்கப்பட வேண்டிய விடயமாக இருந்தாலும் அவர் அரசியலமைப்பை மீறி காணி அதிகாரத்தினைப் பயன்படுத்தியுள்ளார் என்று இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். கிளிநொச்சியில் நேற்று சனிக்கிழமை   ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நீண்டகாலமாக காணி உரிமை இல்லாமல் இருந்த மக்களுக்கு அந்த காணி உரிமைகளை மக்களுக்கே வழங்கப்படுகிறது. இந்தப் பணிகளை முன்னெடுத்த ஜனாதிபதிக்கும் ஏனைய அதிகாரிகளுக்கும் எமது மக்கள் சார்பாக எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த காணி உரிமை உங்களுக்கு கொடுக்கும்போது. எவ்வித கட்டுப்பாடுகள் இன்றி, உங்களுக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்படுகிறது. இதுவரை இவ்வாறு நிகழவில்லை. இதில் ஒரு ஆபத்தும் இருக்கிறது. இந்தக் காணிக்கான முழு அதிகாரம் உங்களுக்கு கிடைக்கும்போது, அதனை இழக்க நேரிடலாம். அதனை நீங்கள் விற்கக்கூடும். பல்தேசிய கம்பனிகள் வந்து இந்தக் காணிகளை வாங்கக் கூடும். நாட்டுப் பற்றுள்ள, மண் பற்றுள்ள நீங்கள், உங்கள் காணிகளைப் பாதுகாத்துக் கொள்வதில் அவதானமாக இருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்தக் காணி உரிமையைப் போன்று அதிகாரப் பகிர்வு குறித்தும் குறிப்பிட வேண்டும். அதிகாரப் பகிர்வு என்று கோரிக்கை நீண்டகாலமாக மக்களின் அரசியல் அபிலாசையாக இருக்கிறது. 1987ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்புத் திருத்தத்தில் காணி, பொலிஸ் அதிகாரம் மாகாண சபைக்கு கொடுக்கப்பட்டது. அரசியலமைப்பில் இருந்தும் அமுல்படுத்தப்படவில்லை. காணி அதிகாரம் முழுமையாக மாகாண சபைகளின் ஊடாக அமுல்படுத்தப்பட வேண்டும். அரச காணிகளைக் கொடுக்கப் போதும் மாகாண சபைகளில் இருந்து வரும் கோரிக்கைகளுக்கு அமையே வழங்கப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்றத் தீர்ப்பொன்றில் குறிப்பிடப்பட்டிருந்தது. எனினும், பின்னர் நீதிமன்றத்தின் மற்றுமொரு தீர்ப்பில், கொடுக்கப்பட்ட அதிகாரம் பறித்தெடுக்கப்பட்டு மத்திய அரசாங்கத்திடம் கொடுக்கப்பட்டது. இன்று ஜனாதிபதி கிளிநொச்சி மாவட்டத்திற்கு வந்துள்ளார். அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு வழங்க வேண்டும் என்று ஜனாதிபதி தொடர்ந்து கூறி வருகிறார். அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு காண முன்னெடுக்கும் முயற்சிகளுக்கும் காணி அதிகாரம் கொடுக்கும் இந்த உறுதி வழங்கும் இந்த முயற்சிக்கும் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கிறோம். அதேவேளை மாகாணத்திற்கு உள்ள காணி அதிகாரத்தையும் முழுமையாக வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கின்றேன் என்றார். இதேவேளை, கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட சிறந்த மகளிர் சுகாதார நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்றிருந்த சுமந்திரன் எம்.பி அங்கு கருத்து வெளியிடும்போது மாகாண சபைகளின் அதிகாரங்களை மீளப் பெறும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். யாழ்.போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக பிரகடனப்படுத்தப்போவதாக ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். அதேநேரம், மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளை, பாடசாலைகளை தேசிய கருத்திட்டத்துடன் இணைப்பதாக கூறி நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது மாகாண சபைகளின் கீழேயே சுகாதாரம், கல்வி ஆகியவற்றுக்கான அதிகாரங்கள் காணப்படுகின்றன. அவ்வாறிருக்கையில் ஒருகையால் வழங்குவது போன்று செயற்பட்டுவிட்டு மறுபக்கத்தில் அவற்றை மீளப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை எடுக்க் கூடாது” என்றார். https://www.virakesari.lk/article/184505
    • ரி20 உலகக் கிண்ணத்துக்கான பாகிஸ்தான் குழாம் 25 MAY, 2024 | 03:26 PM   (நெவில் அன்தனி) அவுஸ்திரேலியாவில் கடைசியாக 2022இல் நடைபெற்ற ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்ற பாகிஸ்தான், இந்த வருட ரி20 உலகக் கிண்ணத்துக்கான குழாத்தை அறிவித்துள்ளது. இந்த வருட முற்பகுதியில் இருவகை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் அணிகளின் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்ட பாபர் அஸாம் உலகக் கிண்ண அணிக்கு தலைவராக தொடர்ந்து செயற்படுவார். சில காலம் காயம் காரணமாக ஓய்வுபெற்றுவந்த 30 வயதான ஹரிஸ் ரவூப் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். 'இது ஒரு மிகத் திறமையான, சம பலம் கொண்ட அணியாகும். அனுபவசாலிகளும் இளையவர்களும் அணியில் இடம்பெறுகின்றனர். சில காலமாக அவர்கள் அனைவரும் ஒன்றாக விளையாடி வருகின்றர். அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ரி20 உலகக் கிண்ணப் போட்டியை எதிர்கொள்ள தயாராக இருக்கின்றனர்' என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்ரார் அஹ்மத், அஸாம் கான், மொஹமத் அபாஸ் அப்றிடி, சய்ம் அயுப், உஸ்மான் கான் ஆகியோர் ரி20 உலகக் கிண்ணத்தில் முதல் தடவையாக விளையாடவுள்ளனர். பாகிஸ்தான் கிரிக்கெட் குழாத்தில் இடம்பெறும் பெரும்பாலானவர்கள் தற்போது இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்றுவரும்   சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் விளையாடிவருகின்றனர். ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் ஏ குழுவில் இந்தியா, அயர்லாந்து, கனடா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய அணிகளுடன் பாகிஸ்தான் இடம்பெறுகிறது. பாகிஸ்தான் தனது முதலாவது போட்டியில் ஐக்கிய அமெரிக்காவை டலாஸ் விளையாட்டரங்கில் எதிர்வரும் ஜூன் 6ஆம் திகதி எதிர்த்தாடும். பாகிஸ்தான் குழாம் துடுப்பாட்ட வீரர்கள்: பாபர் அஸாம் (தலைவர்), அஸாம் கான், பக்கார் ஸமான், இப்திகார் அஹ்மத், மொஹமத் ரிஸ்வான், சய்ம் அயுப், உஸ்மான் கான். சகலதுறை வீரர்கள்: இமாத் வசிம், ஷதாப் கான். பந்துவீச்சாளர்கள்: அபாஸ் அப்றிடி, அப்ரார் அஹ்மத், ஹரிஸ் ரவூப், மொஹமத் அமிர், நசீம் ஷா, ஷஹீன் ஷா அப்றிடி. https://www.virakesari.lk/article/184462
    • 20ஓவ‌ர் போட்டியில் இல‌ங்கை அணிய‌ ந‌ம்ப‌லாம் ஏன் என்றால் அவைக்கு மைதான‌த்துக்கை கூட‌ நேர‌ம் நிப்ப‌து பிடிக்காது ஆன‌ ப‌டியால் அடிச்சு ஆட‌ பாப்பின‌ம்   அதோட‌ இல‌ங்கை அணியின் இப்போது உள்ள‌ ப‌ந்து வீச்சு ப‌ல‌ம் மிக்க‌து சுழ‌ல் ப‌ந்தும் ச‌ரி வேக‌ ப‌ந்தும் ச‌ரி🫡................................................
    • 26 MAY, 2024 | 01:12 PM   காசாவின் வடபகுதியில் இடம்பெற்ற மோதலின் போது இஸ்ரேலிய இராணுவ வீரர்களை  கைது செய்துள்ளதாக  ஹமாஸ் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய படையினர் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறித்த தகவல்களை வெளியிடாத ஹமாஸ் சுரங்கப்பாதைக்குள் இரத்தக்காயங்களுடன் நபர் ஒருவர் இழுத்துச்செல்லப்படும் வீடியோவை வெளியிட்டுள்ளது. சுரங்கப்பாதையொன்றிற்குள் இஸ்ரேலிய படையினர் நுழைந்து தாக்குதலை மேற்கொள்ளும் விதத்தில் ஹமாஸ் உறுப்பினர்கள் செயற்பட்டனர் அல் ஹசாம் பிரிகேட்டின் பேச்சாளர் தங்கள் குழுவினர் தாக்குதலை மேற்கொண்டு இஸ்ரேலிய படையினரை கொலை செய்த பின்னர் கைதுசெய்துள்ளனர் என தெரிவித்துள்ளார். இஸ்ரேல் இராணுவம் இதனை நிராகரித்துள்ளது.படையினர் எவரும் எந்த சம்பவத்தின் போதும் கடத்தப்படவில்லை என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/184504
    • 26 MAY, 2024 | 10:50 AM ஆர்.ராம்  ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் பொதுவெளியில் பகிரங்கமாக கலந்துரையாடுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி பொதுக்கட்டமைப்பை உருவாக்குவதற்கான சிவில் சமூகப் பிரதிநிதிகள் குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.  இந்த குழுவானது இலங்கைத் தமிழ் அரசு கட்சிக்கு 14 நாட்கள் கால அவகாசத்தினை வழங்கியிருந்த நிலையில் கடந்த 19ஆம் திகதி கூடிய தமிழ் அரசுக் கட்சி பொதுவேட்பாளர் தொடர்பில் உறுதியான தீர்மானத்தினை எடுத்திருக்கவில்லை. அத்துடன் அக்கட்சிக்குள் பெரும்பான்மையானவர்கள் எதிர்மறையான நிலைப்பாட்டையே வெளிப்படுத்தியிருந்தனர். அதனையடுத்து. சிவில் சமூகப் பிரதிநிதிகள் குழுவானது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணி ஆகியவற்றுடன் ஏற்கனவே சந்திப்புக்களை நடத்தியிருந்தது. இந்நிலையில், தமிழ் பொது வேட்பாளர் விடயத்தினை பகிரங்கமாக நிரகரிப்பதாக அறிவித்துள்ள இலங்கை  தமிழ் அரசுக் கட்சியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனுடனும் அக்குழுவினர் சந்திப்பொன்றை நேற்று முன்தினம் இரவு உரும்பிராய் சிவகுமாரன் உருவச்சிலைக்கு அருகில் உள்ள கூட்டுறவு மண்டபத்தில் நடத்தியிருந்தனர். இந்த சந்திப்பின்போது சிவில் சமூகப் பிரதிநிதிகள் குழுவின் சார்பில் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம், அரசியல் ஆய்வாளர்களான நிலாந்தன், யோதிலிங்கம், ரவீந்திரன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். இதன்போது, பொதுவேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட வேண்டியதன் அவசியம் பற்றி சுமந்திரன் கேள்விகளைத் தொடுத்திருந்தார். வழமையாக பொதுவேட்பாளர் என்ற விடயத்தினை பின்பற்றுவதில்லை. சம்பிரதாய ரீதியாக தென்னிலங்கை தலைமைகளுடன் பேரம்பேசியே தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன.  தற்போதைய தருணத்தில் பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டு பின்னடைவுகள் ஏற்பட்டால் அது பாரதூரமான பாதிப்புக்களை ஏற்படுத்தும். அவ்வாறிருக்கையில் எதற்காக தற்போது பொதுவேட்பாளரை இந்த தருணத்தில் நிறுத்தவேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்குப் பதிலளித்த சிவில் பிரதிநிதிகள் குழுவினர், தமிழ் மக்களின் வாக்குகள் இந்த முறை தேர்தலில் சிதறப்போகின்றன. இதனால் தமிழ் மக்களின் கூட்டுப்பலம் மலினப்படுத்தப்படும் என்ற தொனிப்பட கருத்துக்களை முன்வைத்துள்ளனர். அதேநேரம், பொது வேட்பாளர் விடயம் தோல்வி கண்டால் ஏற்படும் ஆபத்துக்களை மீண்டும் பட்டியலிட்ட சுமந்திரன் தற்போதைய நிலையில் எதற்காக ஆபத்தான பரீட்சிப்புக்களைச் செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார். அதன்போது, பொது வேட்பாளர் விடயம் என்பது ஆபத்தான பரீட்சிப்பாகவே இருக்கப்போகின்றது என்பதை ஏற்றுக்கொண்ட சிவில் பிரதிநிதிகள் குழுவினர் தென்னிலங்கை வேட்பாளர்களாக வர இருப்பவர்கள் தமிழர்கள் விடயங்களை கவனத்தில்கொள்ளவில்லை. ஆகவே தமிழர்களை ஒருங்கிணைப்பதன் ஊடாக அவர்களை தமிழர்கள் நோக்க வரவழைக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளனர். அத்தோடு இதனையொரு பொது வாக்கெடுப்பாக கருத வேண்டும் என்ற விடயமும் சுட்டிக்காட்டப்பட்டது. எனினும், சுமந்திரன் பொது வாக்கெடுப்பாக ஜனாதிபதி தேர்தலை கொள்ள முடியாது என்று குறிப்பிட்டதோடு 1977இல் காணப்பட்ட நிலைமைகளுடன் ஒப்பிடுகையில் தற்போதைய நிலைமைகள் கணிசமாக மாறியுள்ளன என்பதையும் புள்ளிவிபரகங்களுடன் கூறியுள்ளார். இதனையடுத்து பொது வேட்பாளர் விடயம் சம்பந்தமாக பொதுவெளியில் பகிரங்கமான கலந்துரையாடல்களைச் செய்வது பொருத்தமானதாக இருக்கும் என்ற யோசனையை சுமந்திரன் முன்வைக்கவும் அதனை சிவில் பிரதிநிதிகள் குழுவினர் ஏற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/184490
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 0 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.