Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘கஜா’ சூறாவளி முல்லையைத் தாக்கும்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘கஜா’ சூறாவளி முல்லையைத் தாக்கும்?

Editorial / 2018 நவம்பர் 15 வியாழக்கிழமை, மு.ப. 07:01 Comments - 0

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டத்தில், ‘கஜா’ சூறாவளியின் தாக்கம் ஏற்படக்கூடிய வாய்ப்பு இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவித்த முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன், அதற்கான முன்னாயத்த ஏற்படுகளை மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில், நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இது குறித்து தொடர்ந்து கருத்துரைத்த அவர், முல்லைத்தீவு மாவட்டத்தில், கடந்த சில நாள்களாகப் பெய்த மழை காரணமாக, 427 குடும்பங்களைச் சேர்ந்த 1,155 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்   மாவட்டத்தில் முழுமை -யாக 90 வீடுகளும் பகுதியளவில் 18 வீடுகளும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். 

இதற்கமைய, பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களுக்கு, சமைத்த உணவு வழங்கப்பட்டு வரும் அதேவேளையில், அவர்களுக்கான உலர் உணவு வழங்குவதற்கு, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, 5 குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாகத் தெரிவித்த அவர், 10 குளங்களில் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். 

இதற்கமைய, பாதிக்கப்பட்ட குளக் கட்டுக்களைப் புனரமைக்கும் பணிகளில் படையினர், கமக்கார அமைப்புகள், கமநல அபிவிருத்தித் திணைக்களம் என்பன இணைந்து ஈடுபட்டதாகத் தெரிவித்ததுடன், நித்தகை குளக்கட்டின் புனரமைப்புப் பணிகளை மாத்திரம் முழுமையாக மேற்கொள்ள முடியாத நிலை காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். 

இதனால், நீரைத் தேக்கி வைத்திருக்கின்ற செயற்பாட்டை நீர்பாசனத் திணைக்களமும் படையினருடன் இணைந்து முன்னெடுத்ததாகத் தெரிவித்த அவர், ஏனைய குளங்களையும் பாதுகாக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். 

இதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தின் அனர்த்த நிலை இயல்பு நிலைமையில் காணப்படுகின்ற இத்தருணத்தில், ‘கஜா’ சூறாவளியின் தாக்கம் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு ஏற்படக்கூடுமென, அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் அந்த எச்சரிக்கைக்கமைய, அதற்கான முன்னாயத்த ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.   

 

http://www.tamilmirror.lk/வன்னி/கஜா-சூறாவளி-முல்லையைத்-தாக்கும்/72-225252

 

4 hours ago, கிருபன் said:

‘கஜா’ சூறாவளி முல்லையைத் தாக்கும்?

வதந்தி .... தயவு செய்து பரப்பாதீர்கள்.

 

WEATHER FORECAST FOR 16th NOVEMBER 2018

(Issued at 1200 noon on 15th November 2018)

The Severe Cyclonic storm ‘GAJA’ over the Central Bay of Bengal is now located approximately 325km away from Kankasanturai to the northeast of Sri Lanka, near latitude-11.3N, Longitude-82.6E at 08.30a.m. on 15 November. It is very likely to move west-southwestwards.

The system is expected to cross South Tamil Nadu coast and the center of the system is very likely to move approximately 120km away from the northern coast of Sri Lanka during today (15) evening. The system is likely to move away from the country by tomorrow (16th). Hence windy and showery condition in the Northern part of the island and Northern sea area is expected to reduce gradually from tomorrow evening.

 

Sea water inundation may occur in the low lying areas in the near coast from Mannar to Kankasanturai.

 

Showers or thundershowers will occur at times over the Northern province. Heavy falls above 100mm can be expected in the Jaffna peninsula.

Several spells of showers will occur in Anuradhapura and Puttalam districts.

Showers or thundershowers will occur at several places in Central, Sabaragamuwa and Uva provinces after 2.00.p.m.

High winds (70-80) kmph, gusting up to 100kmph can be expected over Northern province, particularly over the Jaffna peninsula.

Strong winds (50-60) kmph, gusting up to 70kmph can be expected over Puttalam and Anuradhapura districts.

Misty conditions may occur at some places in the Central, Sabaragamuwa and Western provinces during the morning.

http://meteo.gov.lk/index.php?lang=en

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, ஜீவன் சிவா said:

வதந்தி .... தயவு செய்து பரப்பாதீர்கள்.

அப்படியே தமிழ் மிரருக்கும் ஒரு முறைப்பாட்டைக் கொடுத்துவிடுங்கள்.

கேள்விக்குறியோடு தலைப்பு இருப்பதால் கண்டுகொள்ளமாட்டார்கள்?

1 minute ago, கிருபன் said:

அப்படியே தமிழ் மிரருக்கும் ஒரு முறைப்பாட்டைக் கொடுத்துவிடுங்கள்.

அதனால்தான் சொல்கின்றேன் செய்திகளில் ஒரு பன்முகத்தன்மை வேண்டும். பல்வேறு ஊடகங்களில் வரும் செய்திகளை முன்பு நவீனன் இணைத்தபோது - உண்மையை வாசகர்களே வாசித்து ஊகிக்கக் கூடியதா இருந்தது. இப்போது குளோபல் தமிழ் + தமிழ் மிரர் செய்திகள் மட்டுமே இணைக்கப்படுவதால் வரும் பிரச்சனை இது. நவீனனுக்கு என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது / விடுமுறையாக்கும் என்று நினைத்தேன். ஆனால் இது வேறு விடயம் போல் இருக்குது. 

ஆனாலும் நான் இப்போதெல்லாம் செய்திகளை பார்க்க யாழ் பக்கம் வருவதே இல்லை. 

உண்மையைச் சொன்னா - நவீனன் இல்லாமல் யாழ் சப்பென்றுபோய் விட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

46462329_2167506193293629_84942729658048

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஜீவன் சிவா said:

உண்மையைச் சொன்னா - நவீனன் இல்லாமல் யாழ் சப்பென்றுபோய் விட்டது.

நீங்கள் மனது வைத்தால் எல்லாம் நடக்கும். ஆனால் புயல் வருமோ வராதோ என்பதில் தெளிவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஜீவன் சிவா said:

அதனால்தான் சொல்கின்றேன் செய்திகளில் ஒரு பன்முகத்தன்மை வேண்டும். பல்வேறு ஊடகங்களில் வரும் செய்திகளை முன்பு நவீனன் இணைத்தபோது - உண்மையை வாசகர்களே வாசித்து ஊகிக்கக் கூடியதா இருந்தது. இப்போது குளோபல் தமிழ் + தமிழ் மிரர் செய்திகள் மட்டுமே இணைக்கப்படுவதால் வரும் பிரச்சனை இது. நவீனனுக்கு என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது / விடுமுறையாக்கும் என்று நினைத்தேன். ஆனால் இது வேறு விடயம் போல் இருக்குது. 

ஆனாலும் நான் இப்போதெல்லாம் செய்திகளை பார்க்க யாழ் பக்கம் வருவதே இல்லை. 

உண்மையைச் சொன்னா - நவீனன் இல்லாமல் யாழ் சப்பென்றுபோய் விட்டது.

அப்ப நீங்க இணைப்பது தானே அந்த பல்வேறு இலங்கை சார்பான ஊடகங்களின் செய்தியை ?

இங்கு யாரும் யாரையும் நம்பி யாழ் இருப்பதில்லை என்பதில் மோகன் காரர்ஆக  இருப்பதால் யாழ் இந்த சுனாமியிலும் சுயமாய் இருக்கிறது .

10 hours ago, ஜீவன் சிவா said:

வதந்தி .... தயவு செய்து பரப்பாதீர்கள்.

நீங்கள் அங்கு இருப்பதால் இறைதூதன் அல்ல வதந்தி என்பதை தீர்மானிக்க நீங்கள் யார் ? உங்கள் தகுதி என்ன ?

ஒருவேளை முல்லை தாக்க பட்டால் அந்த மக்களுக்கு நிவாரணம் கொடுப்பதுக்கு உரிய செல்வாக்கு உங்களிடம் இருக்குதா ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, ஜீவன் சிவா said:

அதனால்தான் சொல்கின்றேன் செய்திகளில் ஒரு பன்முகத்தன்மை வேண்டும். பல்வேறு ஊடகங்களில் வரும் செய்திகளை முன்பு நவீனன் இணைத்தபோது - உண்மையை வாசகர்களே வாசித்து ஊகிக்கக் கூடியதா இருந்தது. இப்போது குளோபல் தமிழ் + தமிழ் மிரர் செய்திகள் மட்டுமே இணைக்கப்படுவதால் வரும் பிரச்சனை இது. நவீனனுக்கு என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது / விடுமுறையாக்கும் என்று நினைத்தேன். ஆனால் இது வேறு விடயம் போல் இருக்குது. 

ஆனாலும் நான் இப்போதெல்லாம் செய்திகளை பார்க்க யாழ் பக்கம் வருவதே இல்லை. 

உண்மையைச் சொன்னா - நவீனன் இல்லாமல் யாழ் சப்பென்றுபோய் விட்டது.

 என்னது!!!!!!!

தாங்கள் ஊரில் இருந்துகொண்டு ஊர்ச்செய்திகளை வாசிக்க யாழ்களம் வருகின்றீர்களா?

சபாஷ்...... :91_thumbsup:

யாழ்களம் செய்திக்களம் என்பதை விட கருத்துக்களம் என்பதிலேயே முன்னணி வகிக்கின்றது என நான் நினைக்கின்றேன்.

யாழ்களம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது என்பது தெரியுமா?

  நவீனன் எப்போதிலிருந்து யாழ்களத்தில் செய்திகளை இணைக்க ஆரம்பித்தார் என்பது உங்களுக்கு நினைவிருக்கின்றதா?  

நவீனன் எனும் பெயர் யாழ்களத்திற்கு வருமுன் யார் யாரெல்லாம் செய்திகளை இணைத்தார்கள் என்பதும் உங்களுக்கு தெரியுமா?  

அவர்கள் இன்றும் யாழ்களத்திற்கு வந்து போகின்றார்கள் என்பதாவது உங்களுக்கு தெரியுமா?

என்னைப்பொறுத்தவரைக்கும் குளத்தோடை கோவிச்சுக்கொண்டு பின்பக்கம் கழுவாமல் இருக்கிறவனுக்கும் நவீனனுக்கும் உங்களுக்கும் வித்தியாசமில்லை கண்டியளோ.....:grin:....:grin:

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஜீவன் சிவா said:

வதந்தி .... தயவு செய்து பரப்பாதீர்கள்.

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஜீவன் சிவா said:

வதந்தி .... தயவு செய்து பரப்பாதீர்கள்.

 

18 minutes ago, Maruthankerny said:

 

வசந்தியை..... பரப்பாதீர்கள் என்று சொன்னவரை,  உடனே... மேடைக்கு வரும்படி  அழைக்கின்றோம்.  :grin:

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, தமிழ் சிறி said:

 

வசந்தியை..... பரப்பாதீர்கள் என்று சொன்னவரை,  உடனே... மேடைக்கு வரும்படி  அழைக்கின்றோம்.  :grin:

அவர் வசந்தியுடன் ஓடிப் போயிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

 

 

“கஜா“ புயல்: வடமாகாண பாடசாலைகளுக்கு விடுமுறை.

“கஜா“ புயல் காரணமாக வடமாகாண பாடசாலைகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட்  குரே-இன் அலுவலகத்தினால் இந்த திடீர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மாணவர்கள் இன்றும் வழமைப்போன்று பாடசாலைக்கு சென்றிருந்த நிலையில், இத்திடீர் அறிவிப்பை தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் மீண்டும் வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

வங்காள  விரிகுடாவில்  நிலைக்கொண்டுள்ள  கஜா புயல்  நேற்று  பிற்பகல்  2.30  மணியளவில்  கரையை  கடக்கும்  என எதிர்வுகூறப்பட்ட  நிலையில்  வடக்கின்  பல பகுதிகளில்  தாக்கம்  செலுத்தும்  என  எதிர்வுகூறப்பட்டிருந்தது.

அதற்கமைய,  யாழின்  பல்வேறு  பகுதிகளில்  தற்பொழுது  அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகி வருகின்ற நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை  தமிழகத்தின்  பல பகுதிகளில்  கஜாபுயல்  தாக்கம்  செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/கஜா-புயல்-வடமாகாண-பாடச/

  • கருத்துக்கள உறவுகள்

Gaja-1-720x450.png

தமிழகத்தை தாக்கிய கஜா புயல் இலங்கையில் நிலைகொண்டது!

தமிழகத்தில் அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ள கஜா புயல் தற்போது இலங்கையில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கையின் வடக்கு, வடமேற்கு திசையில் காங்கேசன் துறையிலிருந்து சுமார் 75 கிலோ மீற்றருக்கு அப்பால் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த கஜா புயல் அடுத்த 6 மணித்தியாலங்களுள் மேற்கு நோக்கி நகர்வதுடன் படிப்படியாக குறைவடையுமெனவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை யாழ்ப்பாணம்,  கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் 150 மில்லிமீற்றருக்கு அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் வாய்ப்புள்ளதாகவும் அந்நிலையம் குறிப்பிட்டுள்ளது.

அந்தவகையில் தற்போது யாழின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதனால் வடக்கு மாகாண பாடசாலைகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/தமிழகத்தை-தாக்கிய-கஜா-பு/

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாணத்தின் சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை

 

கஜ சூறாவளி வடபகுதியில் நிலைகொண்டுள்ளதால், வடமாகாணத்தின் சகல பாடசாலைகளுக்கும் இன்று (16), விடுமுறை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, வடமாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

http://www.tamilmirror.lk/செய்திகள்/வடமாகாணத்தின்-சகல-பாடசாலைகளுக்கும்-விடுமுறை/175-225345

 

 

  • கருத்துக்கள உறவுகள்

mannar-2-720x450.jpg

கஜா புயலின் எதிரொலி: மன்னார் மக்களுக்கு எச்சரிக்கை!

கஜா புயல் வடக்கினைத் தாக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் அவதானத்துடன் செயற்படுமாறு மன்னார் மக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மன்னார் மாவட்ட அரசங்க அதிபர் தலைமையில் பிரதேச செயலாளர்களின் கண்காணிப்பில் ஒவ்வொறு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் அவசர நிலை தொடர்பான விசேட குழு தயார்படுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ள கஜா புயல் தற்போது இலங்கையில் நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

mannar-1-720x478.jpg

இலங்கையின் வடக்கு, வடமேற்கு திசையில் காங்கேசன் துறையிலிருந்து சுமார் 75 கிலோ மீற்றருக்கு அப்பால் இந்த நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த கஜா புயல் அடுத்த 6 மணித்தியாலங்களுள் மேற்கு நோக்கி நகர்வதுடன் படிப்படியாக குறைவடையுமெனவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மன்னார் மாவட்டத்தில் நேற்று இரவு 11 மணி முதல் காலை வரை தொடர்ச்சியாக ஓரளவாக காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. இதனால் அனேகமான இடங்கள் நீரில் முழ்கியுள்ளன.

மேலும் தொடர்ச்சியாக மந்தமான இருள் சூழ்ந்த வானிலை நிலவிவருவதுடன், கடல் மட்டம் அதிகரித்துள்ளதால் மீனவர்கள் தொழிலுக்குச் செல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/கஜா-புயலின்-எதிரொலி-மன்ன/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கஜா புயலினால்  முல்லைத்தீவுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை

கஜா புயலின் தாக்கம் நேற்று இரவு வடக்கின் பல பிரதேசங்களிலும் உணரப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவில் பெரியளவிலான சேதங்களை கஜா புயல் ஏற்படுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.mullaitivu.jpgமுல்லைத்தீவு கடற்கரை பிரதேசம் தற்பொழுது அமைதியான சூழலாக காணப்படுகின்றது.

இதேவேளை, இன்று அதிகாலை முல்லைத்தீவு கடற்கரை பிரதேசம் எங்கும் செந்நிறமான தோற்றத்துடன் காட்சியளித்துள்ளதுடன் கடலின் சீற்றம் குறைவடைந்திருந்தது.mullaitiu02.jpgமேலும், கஜா புயலால் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என அனர்த்த முகாமைத்துவ அலுவலக அதிகாரி தெரிவித்துள்ளார்.

 

http://www.virakesari.lk/article/44608

 

  • கருத்துக்கள உறவுகள்

கஜாவை விடுங்க.. வங்கக்கடலில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்! ?

https://tamil.oneindia.com/news/chennai/new-wind-pressure-will-be-form-on-november-18th-bay-bengal-334342.html

டிஸ்கி :

புயலுக்கு பெயர் வைக்கும் பெருமக்கள் "ரசுனி" என்று பெயர் வைத்து விடுங்கப்பா .. வராமலே போகும் .. ?

 

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

புயலுக்கு பெயர் வைக்கும் பெருமக்கள் "ரசுனி" என்று பெயர் வைத்து விடுங்கப்பா .. வராமலே போகும் .. ?

புயலுக்கு கஜான்னு ஆம்பிளை பெயர் வைத்தாலே இப்படித்தான் ... குடிகாரன் மாதிரி ... வர்ரதும் லேட்டு ... கடைசிவரை எப்படி போறதுன்னு தெரியாம ... தட்டு தடுமாறி ... தண்ணிலயே மிதந்துட்டு ... வீடு பக்கத்துல வந்தவுடன் வேகமா வந்து... எல்லாத்தையும் தூக்கியடிக்கிறது ...

சுஜான்னு பேர் வச்சிருந்தா ... ஸ்ட்ரெயிட்டா இத்தனை நேரம் எல்லோருக்கும் சங்கு ஊதியிருக்கும்.
?

முகநூல் உபயம் பெண்ணியவாதிகள் மன்னிக்க .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 hours ago, பெருமாள் said:

புயலுக்கு கஜான்னு ஆம்பிளை பெயர் வைத்தாலே இப்படித்தான் ... குடிகாரன் மாதிரி ... வர்ரதும் லேட்டு ... கடைசிவரை எப்படி போறதுன்னு தெரியாம ... தட்டு தடுமாறி ... தண்ணிலயே மிதந்துட்டு ... வீடு பக்கத்துல வந்தவுடன் வேகமா வந்து... எல்லாத்தையும் தூக்கியடிக்கிறது ...

சுஜான்னு பேர் வச்சிருந்தா ... ஸ்ட்ரெயிட்டா இத்தனை நேரம் எல்லோருக்கும் சங்கு ஊதியிருக்கும்.
?

முகநூல் உபயம் பெண்ணியவாதிகள் மன்னிக்க .

உங்களுக்கு சுயாவை தெரிஞ்சிருந்தால் எனக்கு உங்களை நல்லாய் தெரிஞ்சிருக்கும். :grin:

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

உங்களுக்கு சுயாவை தெரிஞ்சிருந்தால் எனக்கு உங்களை நல்லாய் தெரிஞ்சிருக்கும். :grin:

ஹ்ம்ம்...  முடியல... :grin:

புயலின் மையம் கொஞ்சம் கீழே இறங்கி இருந்தால் யாழ்ப்பாணத்தை புரட்டி போட்டிருக்கும், தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் அழிவுகள் பார்க்க பயத்தை ஏற்படுத்துகிறது

  • கருத்துக்கள உறவுகள்

கஜா புயல் – யாழில் 700 இற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிப்பு

 

Screen Shot 2018-11-17 at 11.13.07 AM

கஜா புயல் காரணமாக யாழ்.மாவட்டத்தில் சுமார் 700 இற்கும் அதிகமான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் நிலை கொண்டிருந்த கஜா புயல் நேற்று முன்தினம் மாலை 6.10 மணி முதல் நேற்று அதிகாலை வரை கடுமையாக வீசியதில் யாழ். மாவட்டத்தில் ஊர்காவற்துறை, வேலணை, தெல்லிப்பளை, காங்கேசன்துறை, உள்ளிட்ட பல பிரதேசங்களில் 700 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆத்துடன் 52 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 500 வீடுகள் பகுதியாக சேதமடைந்துள்ளன. சிறுதொழில் முயற்சியாளர்களின் கடைகள் மற்றும் கரையோரப் பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்ட படகுகள் 20 சேதமடைந்துள்ளன. 

http://www.dailyceylon.com/172292

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பெருமாள் said:

சுஜான்னு பேர் வச்சிருந்தா ... ஸ்ட்ரெயிட்டா இத்தனை நேரம் எல்லோருக்கும் சங்கு ஊதியிருக்கும்.

 

பெயரை பாஞ் என்று வச்சிருந்தால் பாஞ் பனைமரத்தில் பாஞ்சு ஏறியிருக்கும் எல்லோரும் நுங்கை உறுஞ்சி மகிந்திருப்பார்கள். ? 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, அபராஜிதன் said:

புயலின் மையம் கொஞ்சம் கீழே இறங்கி இருந்தால் யாழ்ப்பாணத்தை புரட்டி போட்டிருக்கும், தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் அழிவுகள் பார்க்க பயத்தை ஏற்படுத்துகிறது

"புயல்"  எச்சரிக்கை, விடுக்கப் படும் போது....  
அதனை... எப்போதும்  கவனத்தில் கொள்ள வேண்டும். 

ஒருவர் மட்டும்... இங்கிலீஷ்  பேப்பரை... விளக்கம் தெரியாமல் படித்து விட்டு,
இங்கு  வந்து... வாந்தி எடுப்பதை, அவதானித்துக் கொண்டு உள்ளோம்.

ஒவ்வொரு... தமிழ் மகனின், உயிரும்... பெறுமதியானது.
வசந்தி  வராது  என்று சொன்ன...  ஆளை, மூன்று நாளாக தேடுகின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, Paanch said:

பெயரை பாஞ் என்று வச்சிருந்தால் பாஞ் பனைமரத்தில் பாஞ்சு ஏறியிருக்கும் எல்லோரும் நுங்கை உறுஞ்சி மகிந்திருப்பார்கள். ? 

சூறாவளிக்கு "புசல் குமாரசாமி" எண்டு வைச்சிருந்தால்..... சிவனே எண்டு ஒரு சோலியும் இல்லாமல்........ ஒரு ஒதுக்குப்புறமாய் சேதாரம் இல்லாமல் ஒதுங்கிப்போயிருக்கும். :cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.