Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருக்கோணேச்சர சிவலிங்கம், தாக்கப்பட்டு உடைக்கப்பட்டார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருக்கோணேச்சர சிவலிங்கம், தாக்கப்பட்டு உடைக்கப்பட்டார்…

March 1, 2019
 
Sivalingam1.png?zoom=1.1024999499320984&

ஈழத்தின் பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான திருகோணமலை திருக்கோணேச்சரர் ஆலயத்தில் சிவலிங்கம் ஒன்று இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆலயத்தின் அன்னதானமடத்திற்கு அருகிலுள்ள சிவலிங்கமே இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட் கிழமை சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதற்கு ஏதுவாக குறித்த இடத்தில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்த நிலையில் நேற்றைய தினம் இரவு, ஆலயத்திற்கு வருகை தந்த இனந்தெரியாத விசமிகள் குறித்த சிவலிங்கத்தை உடைத்துள்ளனர். குறித்த செயற்பாடு திருகோணமலை வைச மக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம் இடம்பெற்ற திருகோணமலை ஆலய சூழல் இராணுவம் மற்றும் காவல்துறையின் கடுமையான பாதுகாப்புக்கு கீழ் வைக்கப்பட்டிருக்கும் பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்த விடயம் தொடர்பில் காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Sivalingam2.png?zoom=1.1024999499320984&

Sivalingam3.png?zoom=1.1024999499320984&

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சிவலிங்கத்தின் அழிவு சிறீலங்காவுக்கு ஏற்படப்போகும் அழிவைக் குறிக்கிறதா....?? 

53 minutes ago, பிழம்பு said:

இச் சம்பவம் இடம்பெற்ற திருகோணமலை ஆலய சூழல் இராணுவம் மற்றும் காவல்துறையின் கடுமையான பாதுகாப்புக்கு கீழ் வைக்கப்பட்டிருக்கும் பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்த விடயம் தொடர்பில் காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறீலங்காவின் இந்த இராணுவமும், காவற்துறையும் தமிழர் பகுதியில் எங்குள்ளதோ, அங்கு பாதுகாப்புக்கு பங்கம் ஏற்படுவதை தவிர்க்க இயலாது என்பது நிதர்சனமாகியுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

நாசமாய் போவார்கள்... வெள்ளிக்கிழமை, திருக்கோணேச்சர சிவலிங்கத்தை.. உடைத்திருக்கிறார்கள்.
சம்பந்தன்.... திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் தானே.... 
ஏன் இன்னும்... இதனை  கண்டிக்கவில்லை.

ரணில் விக்கிரமசிங்கவின் பிரதமர் பதவியும்,  
தனது...  எதிர்க் கட்சி தலைவர் பதவியும் பறி போனால் தான்... வாய் திறப்பாரோ....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தமிழ் சிறி said:

எங்கடை எம்பிமார் தாங்களும் தங்கடை குடும்பங்களும் நல்லாய் இருக்கோணுமெண்டு தானே பதவிக்கு வந்தவங்கள். எவர் எக்கேடு பட்டுப்போனாலும் அவங்களுக்கு அக்கறையில்லை. 
 
இது என் 50வருட  கோபம்.

  • கருத்துக்கள உறவுகள்

இதனை சிங்களவர்கள் தான் செய்தார்கள் என்று கூற முடியாது தமிழர்களில் இருக்கும் மதம் பிடிச்சவர்களும் லேசு பட்ட ஆட்கள் இல்லை 

இதன் பின்னணியில் கோவில் செல்லும் பாதையில் சட்டவிரோத கடைகளை அமைத்திருந்த சில காடையர்களும் அவர்களின் பின்னணியில் சிங்கள-பௌத்த இராணுவ பயங்கரவாதிகளும் இருப்பதாக அறிய முடிகிறது!

அண்மையில் கோவில் நிர்வாகம் அவர்களை அகற்ற நடவடிக்கைகளை எடுத்திருந்தது!

8 hours ago, தமிழ் சிறி said:

சம்பந்தன்.... திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் தானே.... 
ஏன் இன்னும்... இதனை  கண்டிக்கவில்லை.

சம்மந்தனுக்கு வீரகேசரி மூலம் செய்தி போய் சேரவில்லை என்று நினைக்கிறேன்!

சிவலிங்கதை உடைத்தவுடன் சைவ மக்கள் எல்லோரும் மிக மிக  கவலையுடன. இருப்பார்கள். ஆனால் அந்த சைவ மக்களை   கொத்துக்குண்டுகளை வீசி இனக்கொலை செய்தால் அந்த மிஸ்ரர் சிவலங்கம் கொஞ்சமும் கவலைப்படமாட்டார். ஏன்? யாருக்காவது தெரியுமா இங்கே? 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, tulpen said:

இயற்கையின் (கடவுளின்) படைப்பிலே மிகவும் கொடூரமான உயிரினமாகப் படைக்கப்பட்டது மனித இனம்தான். அந்தக் கொடூரங்களைத் தானும் அனுபவித்துத் துன்பப்பட்ட மனிதன், அதனின்றும் விடுபட்டு துன்பமின்றி மனிதத்துடன் வாழ்வதற்கு உருவாக்கிக் கொண்டதே கடவுள் என்ற நம்பிக்கை. இன்றைக்கும் மனித இனத்தை, மனிதத்தன்மையுடன் வாழ்வதற்கு, முடிந்தவரையில் வழிசெய்து வருவது கடவுள் என்ற நம்பிக்கையே தவிரக் கடவுளல்ல. 

55 minutes ago, Paanch said:

மன்னிக்கவேண்டும் பாஞ்ச் உங்கள் கருத்துடன் உடனபட முடியவில்லை. பொதுவாக ஒப்பீட்டு ரீதியில் கடவுள் நம்பிக்கை அற்றவர்களை விட அதிக கடவுள் நம்பிக்கை கொண்டவர்களில் தான் மனித தன்மை அற்றவர்கள் மிக அதிகம். ஆகவே உங்கள் கருத்து ஜதார்த்தத்தில் இருந்து வேறுபடுகிறது. அதள வேளை கடவுள் நம்பிக்கை அற்ற மனிதத தன்மை அதிகம் கொண்ட பல மனிதர்களை பார்க க முடியும்.

இயற்கையின் பரிணாம வளர்ச்சியில் உருவான மனிதினத்தினால் படைக்கப்பட்டவனே கடவுள். நீங்கள் கூறியது சரிதான் மனிதன் கொடூரமானவனாக இருப்பதால்  தான் கடவுளைப் படைத்து வியாபாரம் செய்கிறான்.

Edited by tulpen

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
16 hours ago, tulpen said:

சிவலிங்கதை உடைத்தவுடன் சைவ மக்கள் எல்லோரும் மிக மிக  கவலையுடன. இருப்பார்கள். ஆனால் அந்த சைவ மக்களை   கொத்துக்குண்டுகளை வீசி இனக்கொலை செய்தால் அந்த மிஸ்ரர் சிவலங்கம் கொஞ்சமும் கவலைப்படமாட்டார். ஏன்? யாருக்காவது தெரியுமா இங்கே? 

சிங்களம்  தன் இனவாத கொள்கைகளை சிவலிங்கத்தை உடைப்பதிலும் புத்தர் சிலைகளை நிறுவதிலும்  நிறைவேற்றிக்கொண்டு வருகின்றது. மறு பக்கம் முஸ்லீம்கள் அடாத்தாக தமிழர் குடியிருப்புகளை அபகரித்துக்கொண்டு வருகின்றார்கள். இதெல்லாம் தங்கள் கண்களுக்கு தெரிவதில்லை. ஆனால் சிவலிங்கமும் உருத்திராட்சமும் தங்கள் மனதை உறுத்துகின்றதோ?

 இவ்வுலகில் மதங்களே இல்லாமல் உச்சத்தில் இருக்கும் ஒரு நாட்டை தங்களால் கூற முடியுமா?

  • கருத்துக்கள உறவுகள்
On 3/1/2019 at 1:11 PM, தமிழ் சிறி said:

நாசமாய் போவார்கள்... வெள்ளிக்கிழமை, திருக்கோணேச்சர சிவலிங்கத்தை.. உடைத்திருக்கிறார்கள்.
சம்பந்தன்.... திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் தானே.... 
ஏன் இன்னும்... இதனை  கண்டிக்கவில்லை.

ரணில் விக்கிரமசிங்கவின் பிரதமர் பதவியும்,  
தனது...  எதிர்க் கட்சி தலைவர் பதவியும் பறி போனால் தான்... வாய் திறப்பாரோ....

அவர் கண்டித்தால் ..எம்பி பதவியையும் பறித்திடுவினம்.....

11 hours ago, குமாரசாமி said:

சிங்களம்  தன் இனவாத கொள்கைகளை சிவலிங்கத்தை உடைப்பதிலும் புத்தர் சிலைகளை நிறுவதிலும்  நிறைவேற்றிக்கொண்டு வருகின்றது. மறு பக்கம் முஸ்லீம்கள் அடாத்தாக தமிழர் குடியிருப்புகளை அபகரித்துக்கொண்டு வருகின்றார்கள். இதெல்லாம் தங்கள் கண்களுக்கு தெரிவதில்லை. ஆனால் சிவலிங்கமும் உருத்திராட்சமும் தங்கள் மனதை உறுத்துகின்றதோ?

 இவ்வுலகில் மதங்களே இல்லாமல் உச்சத்தில் இருக்கும் ஒரு நாட்டை தங்களால் கூற முடியுமா?

மதங்கள் மனிததன்மையை  வளர்ப்பதாக நீங்களும் முன்பு கூறினீர்கள். இப்போது மதங்கள் மக்களடையே பிரிவினைகளை வளர்த்து அநீதிகளைச் செய்வதாக நீங்களே கூறுகின்றீர்கள்.மதங்கள் அடாததாக தமிழரை அழிக்கின்றன.சரியானது தான். மதங்கள. இல்லதநாடுகள் இல்லை என்றாலும் வளரச்சி  அடைந்த நாடுகளின் உச்சம் மதங்களால் வந்தது அல்ல. மதங்களை அதன் போதனைகளை மீறி அறிவை பயன் படுத்தியதால் வந்தததே அவர்களின் வளர்ச்சி. நமது தமிழர்களும் வளர்சசி அடைந்த சமுதாயமாக மாற வேண்டும் என்றால் மதத்தைப் பற்றி அதன் முட்டாள் போதனைகளைப் பற்றிய கவலை இல்லாதவர்களாக மாறி  அறிவில் நம்பிக்கை வைக்கவேண்டும். 

( நான் கேட்டகேள்விக்கு நீங்கள் பதில் சொல்லவில்லை.தமிழ் மக்கள் லட்சக் கணக்கில் தொடர்சியாக சிங்கள அரசுகளால் திட்டமிட்டு இனக்கொலை செய்யப்பட்ட போது மிஸ்ரர் சிவலிங்கம் ஏன் வேடிக்கை பார்ததுக் கொண்டிருந்தார்?  நடந்ததுஅக்கிரமமாக அவருக்கு படவில்லையா? ) 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

சிங்களம்  தன் இனவாத கொள்கைகளை சிவலிங்கத்தை உடைப்பதிலும் புத்தர் சிலைகளை நிறுவதிலும்  நிறைவேற்றிக்கொண்டு வருகின்றது. மறு பக்கம் முஸ்லீம்கள் அடாத்தாக தமிழர் குடியிருப்புகளை அபகரித்துக்கொண்டு வருகின்றார்கள். இதெல்லாம் தங்கள் கண்களுக்கு தெரிவதில்லை. ஆனால் சிவலிங்கமும் உருத்திராட்சமும் தங்கள் மனதை உறுத்துகின்றதோ?

 இவ்வுலகில் மதங்களே இல்லாமல் உச்சத்தில் இருக்கும் ஒரு நாட்டை தங்களால் கூற முடியுமா?

மன்னாரில் வளைகிற ஒவ்வொரு சந்தியிலும் மாதா சிலையோ, அந்தோணியார் சிலையோ இருக்கும். போதாக்குறைக்கு , அரசே கொடுக்கமறுத்தபோதும், நம் சகோதரரென்று பந்தங்கொண்டு கனவான் ஒப்பந்தத்தில் வழங்கிய காணியில் சிறியதாய் கட்ட அனுமதித்த
தேவாலயத்தை, யுத்தத்தின் பின்னர் திருக்கேதீச்சர நிலத்தையே அபகரித்து சிங்களக் கிருஷ்தவரின் உதவியோடு திருக்கேதீச்சர வளவுக்குள் அடாத்தாக பெரும் தேவாலயமாக எழுப்பியுள்ளனர் !

மன்னாரில் புத்தர்சிலை வந்தாலும் பொங்கியெழும் ஆயரோ, திருக்கேதீச்சரத்தில் நிலம் அபகரித்து தேவாலயம் கட்ட உதவிய சிங்களப் பேரினவாதத்துக்கு கைமாறாக, திருக்கேதீச்சர ஆலய வீதியிலேயே பௌத்தவிகாரை கட்ட கடைக்கண் அனுசரணையும் வழங்கினார். திருக்கேதீச்சரத்தில் அடாத்தாக வந்த மாதாவையும் புத்தரையும் எவரும் எதுவும் கேட்டிலர்!!!

மன்னாரில் இரண்டு வீதிகள் ஒன்றாய் சந்தித்தால் ஒரு மாதாவை நிற்கவிடும் அளவுக்கு கூத்துகள் இருக்க, எவரும் இது பற்றி வாய்திறந்திலர்.

தெருவுக்குத்தெரு புத்தரையும் தமிழர் மாகாணத்தில் புகுத்தும் சூத்திரத்தை பேரினவாதம் விரைவுபடுத்தியுள்ளது. எவரும் வாய் திறந்திலர்.

ஆனால், சைவாலயம் இடித்தழிக்கப்பட்டதாக கருதப்படும் தரிசுநிலத்தில் வைக்கப்பட்ட சிவலிங்கம் பலரது வயிற்றுக்கு எரிச்சலை உண்டுபண்ணுகின்றதென்றால்??

படித்ததில் பிடித்தது 

13 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

அதாவது இலங்கையில் உள்ள எல்லா மதங்களும் ஆளுக்காள்  போட்டி போட்டுக்கொண்டு அடுத்தவர் மதங்களை அழித்து தமது மத்ததை முன் நிறுத்த முயற்சிக்கும் இந்தப் போட்டி நாட்டு மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு துணை புரியுமா? மதங்கள் மனிதரை நல்வழிப் படுத்துவதில்லை என்பதற்கு இதைவிட ஆதாரம் வேண்டுமா?

Edited by tulpen

2 hours ago, tulpen said:

அதாவது இலங்கையில் உள்ள எல்லா மதங்களும் ஆளுக்காள்  போட்டி போட்டுக்கொண்டு அடுத்தவர் மதங்களை அழித்து தமது மத்ததை முன் நிறுத்த முயற்சிக்கும் இந்தப் போட்டி நாட்டு மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு துணை புரியுமா? மதங்கள் மனிதரை நல்வழிப் படுத்துவதில்லை என்பதற்கு இதைவிட ஆதாரம் வேண்டுமா?

இலங்கையில் உள்ள எந்த மதத்தினரும் பிற மதங்களை அழிக்க நாடுவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

இந்தாங்கோ முகநூலில் பார்த்தது சாதரண பேனர்களை கூட வைக்க தமிழ் கத்தோலிக்கர்கள் எப்படி அடித்து உடைக்கிறார்கள் என்றால் இவர்களிடமா மனிதம் வளரப்போகிறது 

53167562-502096716863245-381506760046804

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

இந்தாங்கோ முகநூலில் பார்த்தது சாதரண பேனர்களை கூட வைக்க தமிழ் கத்தோலிக்கர்கள் எப்படி அடித்து உடைக்கிறார்கள் என்றால் இவர்களிடமா மனிதம் வளரப்போகிறது 

அப்படி அந்த பேனர்களில் என்ன தான் இருந்தது?கடைசி வரை காட்டவே இல்லையே!

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஈழப்பிரியன் said:

அப்படி அந்த பேனர்களில் என்ன தான் இருந்தது?கடைசி வரை காட்டவே இல்லையே!

சைவர்கள் வணங்கும் கடவுள்களையே சைத்தான்கள் என்பவர்களிடம் என்னத்தை எதிர்பார்க்க முடியும் இதில்  ஆயர்களுக்கு முன்னுரிமை கொடுப்பதெல்லாம் ??

சிவராத்திரி தினத்தில் பூர்வீக மக்களான சைவர்களை நிம்மதியாக இருக்கவிடுவது நல்லது. இல்லையென்றால் இடைக்காலங்களில் மதம்மாறி காடையர்களாக வாழும் கிறித்தவர்கள் இலங்கையில் இருக்கும் தகுதியை இழக்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, thulasie said:

இலங்கையில் உள்ள எந்த மதத்தினரும் பிற மதங்களை அழிக்க நாடுவதில்லை.

இது ஒருசில காடையர்களின் செயல்பாடு அன்று வேறெதுமில்லை 

இதற்கு சுமந்திரன்மூலம் தீர்வு காணலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, colomban said:

இது ஒருசில காடையர்களின் செயல்பாடு அன்று வேறெதுமில்லை 

"அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி."

அரசு எவ்வழி காடைகள் அவ்வழி. அன்றி வேறொன்றில்லை. 🤔

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 3/3/2019 at 11:07 AM, tulpen said:

( நான் கேட்டகேள்விக்கு நீங்கள் பதில் சொல்லவில்லை.தமிழ் மக்கள் லட்சக் கணக்கில் தொடர்சியாக சிங்கள அரசுகளால் திட்டமிட்டு இனக்கொலை செய்யப்பட்ட போது மிஸ்ரர் சிவலிங்கம் ஏன் வேடிக்கை பார்ததுக் கொண்டிருந்தார்?  நடந்ததுஅக்கிரமமாக அவருக்கு படவில்லையா? ) 

உங்களைப்போன்ற மதிகெட்ட மாந்தர்களின் வார்த்தைகளை தாங்கமுடியாமல்  சிவலிங்கத்தார் கல்லாகி விட்டார்.😎

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சிவலிங்கத்தை மட்டும் குறை கூறுகிறீர்கள்? யேசுநாதர் எங்கே போனார்? இடத்துக்கிடம் மாதா, யேசு, அந்தோணியார், சூசையப்பர் என்று கட்டி வைத்திருக்கிறோமே? இவர்கள் எல்லோருமே எங்கு போனார்கள்? 

பச்சிளம் பாலகர்களும், கைக்குழந்தைகளும், வயோதிபர்களும், கர்ப்பிணிகளும் லட்சக்கணக்கில் கொல்லப்பட்டபோது இவர்கள் எல்லோரும் எங்கே போனார்கள்? எந்த மதத்தைக்கொண்டு இதை நியாயப்படுத்தப் போகிறோம்? இவர்கள் கொல்லப்பட்டதற்கும் காரணம் வைத்திருப்பார்கள். இறைவன் செயல், இறைவனின் பாடம் என்று ஏதாவதொன்று சொல்வார்கள். 

2009 உடன் எனது மதம் பற்றிய நம்பிக்கை அழிந்துபோனது. 

  • கருத்துக்கள உறவுகள்

மதங்கள்  மனிதர்களைக் காப்பாற்றுவதில்லை. மனிதன் தான் மதங்களைத் தோற்றுவித்து வளர்த்து வருகிறான். 

மனிதனால் ஆக்கப்பட்ட எந்த மதமும் அவனுக்கு நாகரீகத்தைக் கற்றுக்கொடுப்பதில்லை. ஏனெறால், மதச் சட்டங்களும், அறிவுரைகளும் கடவுளின் பெயரால் மனிதன் உருவாக்கியது. 

எல்லா மதங்களிலும் சொல்லப்படும் கடவுள்களின் பிரசன்னங்களும், பிறப்புகளும், காட்சிகளும் இப்போது ஏன் இடம்பெறுவதில்லை என்று எப்போதாவது சிந்தித்திருக்கிறோமா?? முன்னைய காலத்திற்கும், இப்போதைக்கும் உள்ள ஒரே வித்தியாசம் விஞ்ஞான வளர்ச்சியும், எதையுமே தீர ஆராய்ந்து அறிந்துகொள்வதும்தான். ஒருவரோ அல்லது ஒரு மதமோ எதைச் சொன்னாலும் அப்படியே நம்பும் காலம் மெல்ல மலையேறுகிறது என்றுதான் நினைக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.