Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி வாழ்வாதாரத்துக்கு போராடும் அவலம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  •  
     
இலங்கை

புதிய ஊன்றுகோல் ஒன்றினை வாங்குவதற்கு வசதியற்றிருக்கும் ஜெகன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி.

நந்திக் கடல் பகுதியில் நடந்த இறுதி யுத்தத்தில், இலங்கைப் படையினருக்கு எதிராக ஆயுதமேந்திப் போரிட்ட போது, தமது இடது காலினை அவர் இழந்தார். தன் 15ஆவது வயதில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து 7 ஆண்டுகள் ஆயுதம் ஏந்திப் போராடிய அந்த இளைஞன், இப்போது அன்றாட உணவுக்கான வருமானத்தைத் தேடிக் கொள்வதற்கே மிகவும் போராடுகிறார்.

இலங்கை அம்பாறை மாவட்டம் - விநாயகபுரத்தில் மனைவி மற்றும் இரண்டு வயது பெண் குழந்தையுடன், ஜெகன் வசிக்கிறார். அவருக்கு இப்போது 32 வயதாகிறது. கூலி வேலைக்காக, 20 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் ஒற்றைக் காலால், சைக்கிள் மிதித்து பயணிக்கிறார். "ஆனால், ஒவ்வொரு நாளும் தொழில் கிடைப்பதில்லை. கிடைக்கும் வருமானத்தில் பாதிக்கும் மேல் குழந்தைக்கான பால்மாவு உள்ளிட்ட செலவுகளுக்கே போய்விடுகிறது" என்கிறார் ஜெகன்.

"ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது, 2002ஆம் ஆண்டு எனது 15 வயதில் இயக்கத்தில் சேர்ந்தேன். கஞ்சிகுடியாறுக்கு அழைத்துச் சென்றார்கள். பின்னர் அங்கிருந்து மட்டக்களப்பு தரவைக்குச் சென்று, 8 மாதங்கள் பயிற்சி பெற்றேன்".

இலங்கை

"2009ஆம் ஆண்டு இறுதி யுத்தம் நடந்தபோது முல்லைத்தீவு மாவட்டத்தின் நந்திக் கடல் பகுதியில் ஆயுதமேந்தி சண்டையிட்டேன். அப்போது எனது இடது காலில் காயமேற்பட்டது. விஸ்வமடு பகுதியில் தற்காலிகமாக இயங்கிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றேன். அப்போது என் காலைத் துண்டிக்க வேண்டியேற்பட்டது" என சொல்லி விட்டுசிறிது நேரம் மௌனம் காத்தார் ஜெகன்.

"இறுதி யுத்தத்தின் ஒரு கட்டத்தில் படையினரிடம் சரணடையுமாறு இயக்கத்தின் மேலிடத்திலிருந்து உத்தரவு வந்தது. பெருந்தொகையானோர் படையினரிடம் சரணடைந்தனர்; நானும் சரணடைந்தேன். பின்னர், வவுனியா - பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டேன். 2010ஆம் ஆண்டு விடுதலையானேன்".

புனர்வாழ்வு முகாமுக்குச் சென்று 2 மாதத்துக்குப் பின்னர்தான் 'விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டார்' எனும் செய்தி தனக்குத் தெரிய வந்ததாக கூறுகிறார் ஜெகன்.

இலங்கை

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்த போது, சூசை மற்றும் தமிழ்ச் செல்வன் போன்ற தளபதிகளை தான் சந்தித்துள்ள போதும், பிரபாகரனை நேரில் கண்டதில்லை என்கிறார் இவர்.

2016ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட இவருக்கு, இரண்டு வயதில் பெண் குழந்தையொன்று உள்ளது.

"கச்சான் (நிலக்கடலை) தோட்டத்தில் கூலி வேலை செய்கிறேன், ஆடுகளை கூலிக்காக மேய்த்துக் கொடுக்கிறேன். இதற்காக 20 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் சைக்கிள் மிதித்துப் பயணிக்கிறேன். வருமானம் போதாது. கிடைக்கும் கூலியில் குழந்தைக்கான பால் மாவு உள்ளிட்ட பொருள்களுக்கே அதிகம் செலவாகி விடுகிறது" என்றார்.

தனக்கு இதுவரை எந்தவொரு தமிழ் அரசியல்வாதியும் உதவவில்லை என்கிறார் ஜெகன்.

இலங்கை

இவர் குடியிருக்கும் வீடு கூட, அரசு வழங்கிய நிதி உதவியில் கட்டப்பட்டதாகும். 8 லட்சம் ரூபாயினை இதற்காக அரசு வழங்கியுள்ளது.

"ஓடும் சைக்கிளும் மிகவும் பழையதாகிவிட்டது. புதிதாக வாங்கவும் பணமில்லை. புதிதாக ஊன்றுகோல் ஒன்றும் வாங்க வேண்டும். அதற்கும் வசதியில்லை" என்கிறார், அந்த முன்னாள் போராளி.

விநாயகபுரத்தில் தன்னைப் போலவே, வாழ்வாதாரத்துக்காகப் போராடும் இன்னும் பல முன்னாள் போராளிகள் உள்ளனர் என்கிற தகவலையும் அவர் தெரியப்படுத்தினார்.

தனக்கு அரசு வேலை கிடைத்தால், நிம்மதியாக வாழ முடியும் என்று கூறும் ஜெகன், குறைந்தது, ஒரு மூன்று சக்கர வண்டி (ஆட்டோ) இருந்தாலும், அதனை ஓட்டி பிழைப்பு நடத்த முடியும் என்கிறார்.

இலங்கையில், அரச தொழில்கள் வழங்கும் போது, அவற்றில் 3 சத வீதத்தினை, அந்தந்த தொழில்களுக்கான தகைமைகளைக் கொண்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கவேண்டும் என்கிற சட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சமூகத்தின் விடுதலைக்காக தான் போராடிய போதும், தன்னுடைய சமூகத்திடமிருந்து, எந்தவித ஆதரவும் தனக்குக் கிடைக்கவில்லை என்கிற வருத்தமும் ஏமாற்றமும் தனக்கு இருப்பதாக ஜெகன் கூறுகிறார்.

https://www.bbc.com/tamil/sri-lanka-47555936

எவராலும் கவனிக்கபடாமல் அல்லது கவனிக்க விருப்பமில்லாமல் அல்லது கவனித்தும் கவனிக்கப்படாமல் ஆனால் கவனிக்க பட வேண்டிய திரி.

அங்குள்ள எவராவது இவரது நேரடி தொடர்புகளை எடுத்து தர முடிந்தாலோ அல்லது உதவ முற்பட்டாலோ அறியத் தரவும்.

இதுக்கு எனது பங்களிப்பு நிச்சயம் உண்டு.

அதற்கு தனியாக ஒரு திரி திறவுங்கள் நிழலி 

On 3/15/2019 at 9:04 PM, நிழலி said:

எவராலும் கவனிக்கபடாமல் அல்லது கவனிக்க விருப்பமில்லாமல் அல்லது கவனித்தும் கவனிக்கப்படாமல் ஆனால் கவனிக்க பட வேண்டிய திரி.

2 replies

322 views

இன்னுமா இவர்களை நம்புகின்றீர்கள்?

Edited by ஜீவன் சிவா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 3/15/2019 at 5:00 PM, ஜீவன் சிவா said:

இதுக்கு எனது பங்களிப்பு நிச்சயம் உண்டு.

அதற்கு தனியாக ஒரு திரி திறவுங்கள் நிழலி 

ஊரில்தானே இருக்கின்றீர்கள். நேரே சென்று நிலவரத்தை பார்த்து உதவி செய்ய வேண்டியது தானே. இதற்கு ஏன் தனித்திரி?

1 minute ago, குமாரசாமி said:

ஊரில்தானே இருக்கின்றீர்கள். நேரே சென்று நிலவரத்தை பார்த்து உதவி செய்ய வேண்டியது தானே. இதற்கு ஏன் தனித்திரி?

ஊரில் இருப்பவனுக்கு வேறு தொழிலே இல்லையா?

உங்கை இருந்து கூவினது காணும் 

முடிந்தால் உதவி செய்யுங்கோ இல்லை கம்முன்னு இருங்கோ 

6 நாட்களாக கவனிப்பாரற்றிருந்த இந்த திரி உங்கள் விதண்டா வாதத்தினால் உயிர் பெறுகின்றது மறுபடியும்.

முடிந்தால் அந்த முன்னாள் போராளிக்கு உதவி செய்யுங்கள் இல்லை கப் சிப் 

இது எனது இறுதிப்பதிவு இந்த திரியில் - ஆனால் உதவி செய்தால் எனது பங்களிப்பு நிச்சயம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 minutes ago, ஜீவன் சிவா said:

எனது மனச்சாட்சிக்கு ஜேர்மனிக்கு வந்த நாள்முதல் ஏதோ ஒருவகையில் உதவி செய்து கொண்டுதான் இருக்கின்றேன். அது ஒவ்வொன்றையும் உங்களைப்போன்றவர்களுக்கு பகிரங்கப்படுத்த வேண்டிய அவசியம் இங்கில்லை. அது போக யாழ்களத்தில் ஈழமக்களுக்கான  உதவிபற்றிய பல பழைய திரிகள் இங்குள்ளன. அவற்றையேல்லாம் வாசித்துவிட்டு திரும்ப இங்கே....இந்த திரிக்கு வாருங்கள். அதுவரைக்கும்..........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்மையில் யாழ் உறவு ஜஸ்ரின் அவர்கள்  உதவி  சம்பந்தமாக எனக்கு தந்த பதில் கருத்தையும் வாசித்திருப்பீர்கள் என நினைக்கின்றேன்.

  நிழலி! அண்மையில் யாழ் உறவு ஜஸ்ரின் அவர்கள்  உதவி  சம்பந்தமாக எனக்கு தந்த பதில் கருத்தையும் வாசித்திருப்பீர்கள் என நினைக்கின்றேன்.

1 minute ago, ஜீவன் சிவா said:

நான் எப்போதும் செய்து கொண்டுதான் இருக்கின்றேன். முதலில் நீங்கள் கப் சிப்.அதுக்கு பிறகு மற்றவைக்கு சொல்லும்.

Edited by குமாரசாமி

யாழ் இணைய உறவுகள் நேசக்கரத்தின் ஊடாகவும், யாழ் இணையத்தின் ஊடாகவும், பாதிக்கப்பட்ட உறவுகள் பலருக்கு  நிறைய உதவிகள் செய்து இருக்கின்றனர் / இருக்கின்றோம். அதில் உடனடி உதவிகளில் இருந்து பிள்ளைகளை பொறுப்பெடுத்து மாதாமாதம் பணம் அனுப்புவது வரை தொடர்கின்றது.

உதவி என்று ஒரு திரி திறந்து காத்திரமான முறையில் கேட்டால், கருத்துக்களத்தில் அதிகளவு பங்கு கொள்ளாது 'உறங்கு நிலையில்' இருக்கும் உறவுகள் கூட ஓடி வந்து உதவிகள் செய்து இருக்கின்றனர்.

செய்தவர்கள் எவர் எவர் என்று பட்டியலிடுவதனூடாக அவர்கள் செய்த பேருதவிகளை மதிப்பிழக்க வைக்க விரும்பவில்லை என்பதால் பெயர்களை குறிப்பிடுவதை தவிர்க்கின்றேன்.

இந்த திரி கவனிப்பாரற்று கிடப்பதால் இதை மீண்டும் மேலே கொண்டு வருவதற்காகவே 'கவனிக்காமல் இருக்கு' என்று பதில் இட்டு இருந்தேன். ஆனால் அதை பார்த்த பின் மற்றவர்களை மட்டம் தட்டி, நக்கலடித்து, எப்பவும் தன்னை முன்னிலைப்படுத்தி மற்றவர்களை கேவலப்படுத்தும் விதமாக தொடர்ந்து பதில் இடுவதன் மூலமாக எந்த நோக்கத்திற்காக நான் எழுதினேனோ அந்த நோக்கத்தை மழுங்கடித்ததை தான் காண முடிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
On 3/15/2019 at 4:34 PM, நிழலி said:

அங்குள்ள எவராவது இவரது நேரடி தொடர்புகளை எடுத்து தர முடிந்தாலோ அல்லது உதவ முற்பட்டாலோ அறியத் தரவும்.

தனிக்காட்டு ராசா 

ஒரு  முறை அவரை  சந்தித்து

நிலைமையை  அறியத்தர முடியுமா?

(அம்பாறை  என்பதால் தங்களிடம்)

Edited by விசுகு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
6 minutes ago, விசுகு said:

தனிக்காட்டு ராசா 

ஒரு  முறை அவரை  சந்தித்து

நிலைமையை  அறியத்தர முடியுமா?

(அம்மாறை  என்பதால் தங்களிடம்)

தொடர்புகள் சரி வந்தால் எனக்கும் அறியதாருங்கள் விசுகு.

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்புகள் சரிவந்தால் என்னுடைய பங்களிப்பும் இருக்கு விசுகர் .

அல்லது அவரின் வங்கி இலக்கம் இருந்தால் அறியத்தாருங்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, குமாரசாமி said:

தொடர்புகள் சரி வந்தால் எனக்கும் அறியதாருங்கள் விசுகு.

தனிக்காட்டு ராசா  வரட்டும்  அண்ணா

6 minutes ago, பெருமாள் said:

தொடர்புகள் சரிவந்தால் என்னுடைய பங்களிப்பும் இருக்கு விசுகர் .

அல்லது அவரின் வங்கி இலக்கம் இருந்தால் அறியத்தாருங்கள் .

பொறுங்கள்  சகோ

எம்மைப்போல்  பலரும்   உதவ  இருக்கக்கூடும்

உதவிகள்  சென்று விட்டால்....??

தனிக்காட்டு ராசா  வரட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

உதவி செய்யும் பொறிமுறையை அறியத்தரவும். 

ஜீவன்,

நீங்கள் இன்னும் இவர்களோடு மல்லுக் கட்டுவதை அடிக்கடி காண்பேன்.

ஏனப்பா இந்த விசர் வேலை 😂

I thought you were an enlightened soul 🙏

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

யாழ் இணைய உறவுகள் நேசக்கரத்தின் ஊடாகவும், யாழ் இணையத்தின் ஊடாகவும், பாதிக்கப்பட்ட உறவுகள் பலருக்கு  நிறைய உதவிகள் செய்து இருக்கின்றனர் / இருக்கின்றோம். அதில் உடனடி உதவிகளில் இருந்து பிள்ளைகளை பொறுப்பெடுத்து மாதாமாதம் பணம் அனுப்புவது வரை தொடர்கின்றது.

உதவி என்று ஒரு திரி திறந்து காத்திரமான முறையில் கேட்டால், கருத்துக்களத்தில் அதிகளவு பங்கு கொள்ளாது 'உறங்கு நிலையில்' இருக்கும் உறவுகள் கூட ஓடி வந்து உதவிகள் செய்து இருக்கின்றனர்.

செய்தவர்கள் எவர் எவர் என்று பட்டியலிடுவதனூடாக அவர்கள் செய்த பேருதவிகளை மதிப்பிழக்க வைக்க விரும்பவில்லை என்பதால் பெயர்களை குறிப்பிடுவதை தவிர்க்கின்றேன்.

இந்த திரி கவனிப்பாரற்று கிடப்பதால் இதை மீண்டும் மேலே கொண்டு வருவதற்காகவே 'கவனிக்காமல் இருக்கு' என்று பதில் இட்டு இருந்தேன். ஆனால் அதை பார்த்த பின் மற்றவர்களை மட்டம் தட்டி, நக்கலடித்து, எப்பவும் தன்னை முன்னிலைப்படுத்தி மற்றவர்களை கேவலப்படுத்தும் விதமாக தொடர்ந்து பதில் இடுவதன் மூலமாக எந்த நோக்கத்திற்காக நான் எழுதினேனோ அந்த நோக்கத்தை மழுங்கடித்ததை தான் காண முடிகின்றது.

நிழலி,

இவருடன் நேரடியாகத் தொடர்புகொள்ளும் வழி உங்களுக்கு இருக்கிறதா?

முடிந்தால்ச் சொல்லுங்கள்.

நன்றி

21 minutes ago, ragunathan said:

நிழலி,

இவருடன் நேரடியாகத் தொடர்புகொள்ளும் வழி உங்களுக்கு இருக்கிறதா?

முடிந்தால்ச் சொல்லுங்கள்.

நன்றி

இல்லை ரகு. எனக்கு கிழக்கில் தெரிந்தவர்கள் என்று இப்ப எவரும் இல்லை.

இந்த போராளி பற்றி, பிபிசி தமிழிலும்  globaltamilnews இலும் தகவல் வந்திருப்பதால் பலர் இவர் பற்றிய விபரங்களை பெற முயன்று இருப்பர். எனவே அவரை நேரடியாக சந்தித்து விபரம் பெற்ற பின் அடுத்த கட்டத்தை பற்றி சிந்திப்பது நல்லது

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, நிழலி said:

நன்றி நிழலி,

  • கருத்துக்கள உறவுகள்

சனி கிழமை அல்லது    ஞாயிற்றுக்கிழமை இவருடை தகவல்களை தருகிறேன் முகநூலிலும் (பேக்) இவருக்கான உதவிக்கரங்களை கோரியும் இருந்தோம்  உதவிகள் கிடைத்ததா அல்லது கிடைக்கவில்லையா என்பது தெரியாது  இருந்தாலும் அந்த கிராம சேவகர் / பிரதேச செயலாளரிடம் கேட்டும் அறியத்தருகிறேன். நேரில் சென்று பார்க்கலாம் ஆனால் சமூகம் பல கண்களுடன் தான் உற்றுப்பார்த்துக்கொண்டிருக்கிறது . (***) விடுதலை செய்யப்பட்டவர்கள் எல்லோரும் ஓர் வட்டத்துக்குள் தான்.  என்பதையும் கூற முனைகிறேன் 

அல்லது வங்கி விபரங்களை தரவேண்டுமா என நீங்களே சொல்லுங்கள்
 
On 3/15/2019 at 9:04 PM, நிழலி said:

எவராலும் கவனிக்கபடாமல் அல்லது கவனிக்க விருப்பமில்லாமல் அல்லது கவனித்தும் கவனிக்கப்படாமல் ஆனால் கவனிக்க பட வேண்டிய திரி.

அங்குள்ள எவராவது இவரது நேரடி தொடர்புகளை எடுத்து தர முடிந்தாலோ அல்லது உதவ முற்பட்டாலோ அறியத் தரவும்.

14 hours ago, விசுகு said:

தனிக்காட்டு ராசா 

ஒரு  முறை அவரை  சந்தித்து

நிலைமையை  அறியத்தர முடியுமா?

(அம்பாறை  என்பதால் தங்களிடம்)

11 hours ago, ragunathan said:

நிழலி,

இவருடன் நேரடியாகத் தொடர்புகொள்ளும் வழி உங்களுக்கு இருக்கிறதா?

முடிந்தால்ச் சொல்லுங்கள்.

நன்றி

11 hours ago, goshan_che said:

உதவி செய்யும் பொறிமுறையை அறியத்தரவும். 

ஜீவன்,

நீங்கள் இன்னும் இவர்களோடு மல்லுக் கட்டுவதை அடிக்கடி காண்பேன்.

ஏனப்பா இந்த விசர் வேலை 😂

I thought you were an enlightened soul 🙏

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி த.கா. ராஜா.

எல்லாரும் தனித்தனியே போடாமல் நீங்கள் ஒருங்கிணைத்தால் நல்லம். முடியாவிட்டால் பரவாயில்லை. இது என் கருத்து மட்டுமே.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிறிய உதவி மிகப்பெரிய மாற்றங்களை கொண்டுவரலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கான ஓரளவு உதவிகள் கிடைக்க்பெற்றுள்ளதோடு ஆடு வளர்புக்கு ஆடும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது , அவரும் சுயதொழிலில் ஈடுபட உதவிகள் செய்யப்பட்டுள்ளன. அதனை வைத்து வெற்றிக்கொள்வாரானால் வெற்றி 

அவரின்ற மகளின்ற வங்கி கணக்கு இலக்கம் கிடைக்கவில்லை கிடைத்தால் தருகிறேன் அந்த பிள்ளைக்கு நீங்கள் விரும்பிய உதவிகளை செய்யலாம்  படித்த பிறகு அவருக்கு அந்த உதவிகளை எடுத்து ஏதாவது செய்யலாம் 

4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

மிக்க நன்றி தனி

இதுவரை எவரும் / எந்த அமைப்பும் அவர் மகளின் வளர்ச்சிக்கு உதவாவிடின், மகளின் கணக்கில் இலங்கை ரூபா 150,000 இனை வைப்புச் செய்தால் அவர் 18 வயதை அடையும் போது அதை எடுத்து பயன்படுத்துவது போன்று செய்யலாம்.

15 hours ago, தனிக்காட்டு ராஜா said:

அவரின்ற மகளின்ற வங்கி கணக்கு இலக்கம் கிடைக்கவில்லை கிடைத்தால் தருகிறேன் அந்த பிள்ளைக்கு நீங்கள் விரும்பிய உதவிகளை செய்யலாம்

11 hours ago, நிழலி said:

இதுவரை எவரும் / எந்த அமைப்பும் அவர் மகளின் வளர்ச்சிக்கு உதவாவிடின்,

தனிக்காட்டு ராஜா, அவரது முகவரியையும் கையடக்க தொலைபேசி இலக்கத்தையும் தனிமடலில் தந்தால், அவர்களுக்கு இதுவரை வேறு நீண்டகால உதவிகள் கிடைக்கவில்லை என்றால், அவரது ஒரு பிள்ளையின் கல்விக்கு / படிப்புக்கு நீண்டகால உதவிக்கான ஏற்பாடுகளை எங்களால் செய்ய முடியும்.

அவர்களுக்கு உண்மையில் உதவி தேவைப்பட்டால் (இதுவரை வேறு நீண்டகால உதவிகள் கிடைக்கவில்லை என்றால்) இது போன்ற நீண்டகால உதவிகளை எமது நண்பர்கள் நேரடி சந்திப்புக்களுக்கு பிறகே செய்வதால், உதவிகளை ஆரம்பிக்க சில மாதங்கள் செல்லும்! 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உதவித் திட்டத்தில் என்னையும் இணைத்துக் கொள்ளுங்கள் (  முன்னர்நேசக்கரத்திலும் சில பங்களிப்பு செய்திருந்தேன் ) , ஆனால் பிள்ளைக்காக உதவி செய்யாமல் பெற்றோருக்கு உதவி செய்தல் தான் பொருத்தம் எனநினைக்கிறேன் , அவர்களின் பொருளாதார மேம்பாடு தான் முதலில் முக்கியம். இப்படியான ஒரு மனிதர் தன் பிள்ளையையும்  நிச்சயம் நன்றாக கவனிப்பார் . வரப்புயர ............ உயரும்....... இது என் தனிப்பட்ட கருத்து

  • கருத்துக்கள உறவுகள்
On 3/28/2019 at 5:03 AM, போல் said:

தனிக்காட்டு ராஜா, அவரது முகவரியையும் கையடக்க தொலைபேசி இலக்கத்தையும் தனிமடலில் தந்தால், அவர்களுக்கு இதுவரை வேறு நீண்டகால உதவிகள் கிடைக்கவில்லை என்றால், அவரது ஒரு பிள்ளையின் கல்விக்கு / படிப்புக்கு நீண்டகால உதவிக்கான ஏற்பாடுகளை எங்களால் செய்ய முடியும்.

அவர்களுக்கு உண்மையில் உதவி தேவைப்பட்டால் (இதுவரை வேறு நீண்டகால உதவிகள் கிடைக்கவில்லை என்றால்) இது போன்ற நீண்டகால உதவிகளை எமது நண்பர்கள் நேரடி சந்திப்புக்களுக்கு பிறகே செய்வதால், உதவிகளை ஆரம்பிக்க சில மாதங்கள் செல்லும்! 

அவர் சுயதொழிலில் ஈடுபடுவதால் தூர ஊர் சென்றாக அறிய முடிகிறது கிடைத்தால் தருகிறேன் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.