Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்புக்குத் தடை ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்புக்குத் தடை ?

யாழ்ப்பாணம், கரவெட்டிப் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் மாணவர்களின் கற்றலைக் கருத்தில் கொண்டு இரவு வேளைகளில் இரு மணித்தியாலங்களுக்கு கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்புக்குத் தடை விதிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

tv.jpg

கரவெட்டிப் பிரதேச சபையின் சிறப்பு அமர்வு நேற்றுத் தவிசாளர் தலைமையில் நடைபெற்றபோதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அமர்வில் கேபிள் தொலைக்காட்சி இணைப்புக் கம்பங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான விவாதம் நடைபெற்றது.

கேபிள் தொலைக்காட்சிக் கம்பங்கள் நடுதல், அது தொடர்பான அனுமதி பெறுதல் என்பவற்றில் இணைப்பை வழங்கும் நிறுவனங்கள் கவனம் செலுத்த வேண்டும். நினைத்த இடத்தில் கம்பங்களை நட்டு இடையூறு ஏற்படுத்தக் கூடாது. முறையான அனுமதியைப் பெற்றுச் சபையின் தொழில்நுட்ப ஆலோசனைகளைப் பெற்று அவற்றை நட வேண்டும் என்று விவாதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கம்பங்கள் நடுவதில் உள்ள சிக்கல் நிலமைபோன்று மாணவர்களின் கல்வியையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இரவு நேரங்களில் குறிப்பாக 7 மணி முதல் 9 மணிவரை வரிசையாகத் தொலைக்காட்சி நாடகங்கள் ஒளிபரப்பப்படுகின்றன. இந்தக் குறிப்பிட்ட நேரம் மாணவர்கள் கற்கும் நேரம். 9 மணிக்கு நாடங்கள் நிறைவடைய மாணவர்கள் உறக்கத்துக்குச் செல்லும் நிலையே இப்போது உள்ளது. இது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.

கரவெட்டிப் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் மாணவர்களின் கற்றலைக் கருத்தில் கொண்டு இரவு 7 மணி முதல் 9 மணி வரை கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்புக்குத் தடை விதிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. 

கேபிள் இணைப்புக் கம்பங்கள் நடுவதற்கு சபையின் அனுமதியைப் பெற வேண்டியிருப்பதால் அதற்கான அனுமதி மற்றும் வருடாந்த அனுமதியை வழங்கும்போது இந்த அறிவுறுத்தலை வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

http://www.virakesari.lk/article/53231

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல தீர்மானம், அப்பிடியே கோவில்களில் ஒலிபெருக்கியை குறைவான ஒலியில் போடச்சொன்னால் நன்றாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

லூசுப் பயலுகள், வீட்டில் படிக்கும் வயதினர் இல்லாதோர் என்ன செய்வது?

பெற்றோரும் மாணவர்களும் வீட்டிற்குள் செய்யவேண்டியதை நடு வீதிக்கு கொண்டு வந்திருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

படிக்க மனமுள்ளவன் எப்படியும் படிப்பான். நான் மண்ணெண்னெய் விளக்கு படித்தேன். தென்னிந்திய நாடகங்கள் ஒளிபரப்புவதனால் மாணவர்களினது படிப்பு கெடும் என்பது தவறானது. 

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் கரவெட்டி பிரதேசசபைக்கு . தென்னிந்திய நாடகங்கள் நாடகங்கள் போலவா இருக்கு கள்ளகாதல் மூன்றாவது பெண்டாட்டி போன்ற மனவிகாரங்களின் சிதைவுக்கு  வழிஉண்டாக்குபவன .

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் அங்கும் இப்படித்தான் போல கிடக்கு.. 100 % தரமான சம்பவம் .. அப்படியே மாணவர்களின் அந்த கைபேசியையும் .. ??? முன்னேற்றத்திற்கு வழி .. 😇

  • கருத்துக்கள உறவுகள்

தொலைக்காட்சியை வீட்டில் இருக்கும் மாணவனின் படிப்பிற்காக நிற்பாட்டி நேரம் கொடுக்கும் சுய கட்டுப்பாடில்லாத பெற்றோருக்கு தான் எதையாவது கட் பண்ண வேண்டும். "தீதும் நன்றும் பிறர் தர வாரா" எனும் முது மொழியை எங்கள் ஆட்கள் இப்ப நம்புவதேயில்லை! வீதி விபத்தில் தொடங்கி, ஆவா குழு அட்டகாசம் வரை வேறு யாரோ தான் எங்கள் மீது திணித்திருக்கிறார்கள் என்று நம்பும் சுய மதிப்புக் குறைந்த மந்தைக் கூட்டமாக நாங்கள் மாறுகிறோம் என நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Justin said:

எங்களை சுய மதிப்புக் குறைந்த மந்தைக் கூட்டமாக மாற்றியது ஸ்ரீ லங்கா அரசினதும் இராணுவத்தினதும் இன அழிப்பு திட்டத்தின் படியே. வீதி விபத்தில் தொடங்கி, ஆவா குழு அட்டகாசம் வரை ஸ்ரீ லங்கா அரசும் இராணுவமுமே பின்னிருந்து செய்கின்றன. தந்தை செல்வநாயகம் தமிழ் ஈழம் என்று ஆரம்பித்ததே தமிழரை திட்டமிட்டு அழிப்பதற்காக ஸ்ரீ லங்கா அரசினதும் இராணுவத்தினதும் இன அழிப்பு திட்டத்தின் படி தான். விடுதலை புலிகளை பின்னிருந்து ஆரம்பித்ததும் ஸ்ரீ லங்கா அரசூம் இராணுவமும் தான். இதன் நோக்கம் இலங்கை தமிழரை பூண்டோடு அழிப்பது. எப்படி செய்து முடித்து இருக்கிறார்கள் பாருங்கள். 

இங்க அதுதான் நடந்து கொண்டிருக்கு, அதை மறைமுகமாக அரசும் அதன் அமைப்புகளும் ஊக்குவிக்கின்றன.
சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் நடைமுறை இறுக்கமாக கடைப்பிடித்தல், மது பாவனையை கட்டுப்படுத்தல், மது அருந்திய பின் வீதியில் வாகனம் செலுத்த எண்ணமே வராத வகையில் தண்டனைகள் இறுக்கமாக்க வேண்டும்.

ஆவா குழு அல்லது வாள் வெட்டு குழுக்கள் சில துறைகளுடன் நெருக்கமான தொடர்பிருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஏராளன் said:

ஏராளன், மேலே சொன்ன போக்குவரத்து சீர்கேடு, வடக்கு மாகாணத்திலோ அல்லது யாழிலோ மட்டும் நடப்பதா? இலங்கையில் நான் வடக்கிலும் தெற்கிலும் கணிசமான ஆண்டுகள் வாழ்ந்தவன். இலங்கையின் எல்லாத் துறைகளிலும் எல்லாக் காலங்களிலும் ஊழல், கையூட்டு, சீர்கேடு இருந்தது, இப்போதும் இருக்கிறது. இதை தமிழர்களை அழிக்க என்று சிங்களவரோ இராணுவமோ பொலிசோ புதிதாகக் கொண்டு வரவில்லை!

ஆவா குழுவினர் இராணுவத்தினரால் உருவாக்கப் பட்டதாக தேசிக்காய் ஊடகங்கள் என்று நான் அழைக்கும் சில ஊடகங்கள் மட்டுமே செய்தி வெளியிட்டன. இலங்கையில் இருந்து வெளிவரும் ஒரு பொறுப்பான ஊடகம் எதுவும் இதைச் சொல்லவில்லை! ஆனால், ஆவா குழுவினரில் சிலரை பொலிஸ் கைது செய்த போது அவர்களில் சிலர் இந்துக் கல்லூரியின் மாணவர்கள் என்பது தெரியவந்தது. இவர்களின் தலையில் துவக்கு வைத்து வாள் வெட்டுச் செய்ய வைத்தது சிங்கள இராணுவமா என அறியேன்! அப்படி துவக்கு வைக்காமல் காசுக்கோ செல்வாக்கிற்கோ ஆசைப்பட்டு தமிழர்கள் செய்தால், அவர்கள் மந்தைகள் தானே? பெரும்பகுதி குற்றம் அவர்கள் மேல் தானே? இந்த எளிமையான தகவலை ஏற்றுக் கொள்ளாமல் எப்படி ஆவா குழு போன்ற குற்றக் குழுக்களை ஒழிப்பது என்று ஒரு தடவை எனக்கு விளக்குங்கள்.  

8 hours ago, Jude said:

எங்களை சுய மதிப்புக் குறைந்த மந்தைக் கூட்டமாக மாற்றியது ஸ்ரீ லங்கா அரசினதும் இராணுவத்தினதும் இன அழிப்பு திட்டத்தின் படியே. வீதி விபத்தில் தொடங்கி, ஆவா குழு அட்டகாசம் வரை ஸ்ரீ லங்கா அரசும் இராணுவமுமே பின்னிருந்து செய்கின்றன. தந்தை செல்வநாயகம் தமிழ் ஈழம் என்று ஆரம்பித்ததே தமிழரை திட்டமிட்டு அழிப்பதற்காக ஸ்ரீ லங்கா அரசினதும் இராணுவத்தினதும் இன அழிப்பு திட்டத்தின் படி தான். விடுதலை புலிகளை பின்னிருந்து ஆரம்பித்ததும் ஸ்ரீ லங்கா அரசூம் இராணுவமும் தான். இதன் நோக்கம் இலங்கை தமிழரை பூண்டோடு அழிப்பது. எப்படி செய்து முடித்து இருக்கிறார்கள் பாருங்கள். 

இந்தியாவை மறந்து விட்டீர்கள் பிறதர்! இந்தியாவின் வழிகாட்டலில் தான் எல்லாம் வழி மாறிப் போனதாகவும் ஒரு கருத்து இருக்குதே?

  • கருத்துக்கள உறவுகள்

ஆவா குழு போன்றவற்றை அடக்குவதில் ஏன் காவல்துறை பின்னடிக்கிறது?

எங்களை அறிவற்ற மந்தைகளாக சமூகத்தையோ நாட்டையோ பற்றி கொஞ்சமும் சிந்திக்காத சுயநலவாத கூட்டமாக வெளிப்படுத்துவதற்கு எமது மக்கள் மீது தான் முதன்மை குற்றச்சாட்டு வைக்கவேண்டியுள்ளது.

ஆனால் நீங்கள் குறிப்பிடும் தரப்புகள் தமிழர்களை வளமோடு வாழ வைக்கவே முழுவீச்சில் செயலாற்றுவதை கண்கூடாக கண்டுவருகிறோம்!

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, ஏராளன் said:

ஏராளன், காவல் துறை கோஷ்டிகளைக் கைது செய்யப் பின்னடிப்பதும் இலங்கை முழுவதுக்கும் பொதுவான ஊழலின் விளைவு! இது தமிழர்களுக்கு மட்டுமான சாபக்கேடென நாம் கூக்குரலிடலாம். நான் கேட்டது இந்த சந்தேகம், ஆதாரம் அற்ற கூக்குரல் எப்படி ஆவா குழு போன்றவற்றை ஒழிக்க உதவும் என்று தான்! உங்கள் பதில் என்ன?
பிரச்சினையின் மூலத்தை புரிந்து கொள்ளாமல் வெளியே தேடிக் கொண்டு நாம் எப்படி வளவாழ்வை சிங்களவன் பெரும்பான்மையான பொலுசும் ராணுவமும் தரும் என்று கனவு காண முடியும்?

என்னுடைய கருத்து, விசேட அதிரடிப் படைக்கு அதிகாரம் கொடுத்து இந்தக் காவாலிகளை பிணையின்றி பிடித்து உள்ளே போடச் செய்தால், ஆவா காரர் பலர் அடங்குவார்கள், சிலர் வெளிநாட்டுக்கு ஓடுவர் (பிறகு நாங்கள் அவர்கள் வெளிநாட்டுத் தமிழ் சமூகங்களை சீரளிக்க சிங்களவரால் அனுப்பப் பட்ட ஏஜென்டுகள் என்று புதுக் கதை திரிப்போம்!)

  • கருத்துக்கள உறவுகள்

இதே போன்றதொரு வேலையை அரசுக்கெதிராக செய்ய முயல்பவர்களை உடனடியாக கைது செய்து நீண்டகாலம் தடுத்து வைக்கமுடியும்! எ.கா:- சுமந்திரனுக்கு கிளைமோர் வைக்கப் போகினம் என்று கைது செய்தார்களே?!
ஆனால் மக்கள் மீதான வன்முறையை தடுப்பதற்கு அவர்களால் முடியாது, நல்ல நகைச்சுவை தான்.

ஊழலில் வேறெதை எதிர்பார்க்கிறீர்கள்? மேலும் சுமந்திரனுக்கு கிளைமோர் வைக்கத் திட்டமிட்டவர்களைக் கைது செய்தது தவறு என்கிறீர்களா? நீங்கள் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப் படுவதை விரும்புதாகத் தெரிகிறது, ஆனால், ஆவாவை ஒடுக்காமல் சில பொலிசார் இருந்தால் அரசியல் பிரதிநிதியொருவரை கொலை செய்ய முனைந்தவர்களையும் கைது செய்யாமல் விட வேண்டும் என்பதா உங்கள் எதிர்பார்ப்பு? ஊழல் என்பது ஒரு ஒழுங்கமைப்ப பட்ட uniform ஆன சிஸ்ரம் அல்ல! அது system failure மட்டுமே! வித்தியா கொலை வழக்கு எப்படி ஒரு தனியான நேர்மையான பொலிஸ் அதிகாரியால் நீதித் தீர்ப்பு வரை கொண்டு செல்லப் பட்டது என்று பார்த்தீர்கள் அல்லவா? 

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை நீங்கள் மிகசுலபமாக நடப்பவற்றை புறந்தள்ளி வாதாடுகிறீர்கள், சுமந்திரன் ஐயாவுக்கு குண்டு வைக்க வெளிக்கிட்டது பாரதூரமான குற்றம். (அது உண்மையா என்பது ஆராயப்படவேண்டியது) அதை பிடிக்க முடியும் என்றால் ஆவா குழுவை ஏன் பிடிக்க முடியவில்லை?
வித்யா கொலை வழக்கு மக்களால் பெரியளவான ஆர்ப்பாட்டங்கள் அழுத்தங்கள் வழங்கப்பட்டே விசாரிக்கப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

குளத்துடன் கோபிச்சு கு...... கழுவாமல் போனது போல் இருக்கு அடேய்களா பிள்ளைகளை வளர்க்க தெரியாத பெற்றோர் என்று மட்டும் தெரிகிறது வடகிழக்கில் கா. பொ.த சாதரண பெறுபேறு சாட்சிகள்.

பிள்ளைகளின் விருப்பத்துக்கு எல்லாவற்றையும் விட்டு விட்டு நொந்து நூலாவது  ஆனால் இதுவும் ஓர் பெண்களை கட்டிப்ப்போடும் ஓர் போதைதான்  

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, ஏராளன் said:

இல்லை நீங்கள் மிகசுலபமாக நடப்பவற்றை புறந்தள்ளி வாதாடுகிறீர்கள், சுமந்திரன் ஐயாவுக்கு குண்டு வைக்க வெளிக்கிட்டது பாரதூரமான குற்றம். (அது உண்மையா என்பது ஆராயப்படவேண்டியது) அதை பிடிக்க முடியும் என்றால் ஆவா குழுவை ஏன் பிடிக்க முடியவில்லை?
வித்யா கொலை வழக்கு மக்களால் பெரியளவான ஆர்ப்பாட்டங்கள் அழுத்தங்கள் வழங்கப்பட்டே விசாரிக்கப்பட்டது.

ஏராளன், இந்தப் பிரச்சினையில் எதைப் புறந்தள்ளுவதால் அதிக பாதிப்பு மக்களுக்கு என்று ஆறுதலாக யோசியுங்கள்! பெற்றோராலும் ஒரு சக்தி மிக்க கல்லூரியின் ஆசிரியர்களாலும் கட்டாக்காலிகளாக விடப் பட்ட காவாலிகளின் பங்கைப் புறந்தள்ளினால் நல்லதா? அல்லது உங்கள் சிங்களவர் மீதான நியாயம் இருக்கக் கூடிய சந்தேகங்களின் அடிப்படையிலான காரணத்தைப் புறந்தள்ளினால் நல்லதா?

மக்களால் ஆர்ப்பாட்டம் நடத்தப் படும் முன்னரே சி.ஐ.டிகளத்தில் இறங்கி விட்டதே அய்யா! பிறகு நிசாந்தவை சரிக்கட்ட எவ்வளவோ முயன்றும் அவரின் உறுதியால் தானே கேஸ் ஒழுங்காக நீதி மன்றம் சென்றது? தகவல்களை சிங்கள எத்ரிப்பு அரச எதிர்ப்பு உணர்ச்சிகளோடு போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது! இப்ப பாருங்கள் சுமந்திரன் மேலான தாக்குதல் திட்டம் உண்மையா என்று நம்பக் கூட உங்கள் சுமந்திரன் எதிர்ப்பு உணர்ச்சி இடம் தரவில்லை, அதிலும் சந்தேகம்! நீங்கள் நாளைக்கு ஆவாவுக்கு எதிராக ஒரு விசேட பொலிஸ் படை உருவாகி, அது நாலு காவாலிகளை என்கவுன்டரில் தெற்கில் குடுக்காரரைப் போட்டது போல போட்டாலும், "ஐயோ சிங்களவன் விசாரணையில்லாமல் அப்பாவித் தமிழரைக் கொல்லுறான்" என்பீர்கள்! அரசியல் உணர்ச்சிகளை ஒரு பக்கம் வைத்து விட்டு, சட்டம் ஒழுங்கை நிலை நாட்டும் அமைப்புகளை ஊக்குவிப்பது எப்படி என்று கருத்தாடுங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

நன்றியண்ணா உங்கள் அறிவுரைக்கு.

மேலும் சந்தேகங்கள் வந்தால் உணர்ச்சிகளை ஒதுக்கிவிட்டு அறிவால் சிந்திக்க முயற்சிக்கிறேன்.
அதையும் மீறி சந்தேகம் வந்தால் தனிமடலில் தொடர்புகொள்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொலைக்காட்சி பெட்டிகள்,கைத்தொலைபேசிகள் எல்லாம் மனித சுகாதாரத்திற்கு கேடு விளைவிப்பவை. கால மாற்றம் எனும் போர்வையில் வீட்டுக்கு வீடு மக்கள் காஞ்சர் நோயால் அவதிப்படுகின்றனர்.
விஞ்ஞான வளர்ச்சி விவேகமாக தெரியவில்லை.  அகோரமாகவே தெரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

தொலைக்காட்சி பெட்டிகள்,கைத்தொலைபேசிகள் எல்லாம் மனித சுகாதாரத்திற்கு கேடு விளைவிப்பவை. கால மாற்றம் எனும் போர்வையில் வீட்டுக்கு வீடு மக்கள் காஞ்சர் நோயால் அவதிப்படுகின்றனர்.
விஞ்ஞான வளர்ச்சி விவேகமாக தெரியவில்லை.  அகோரமாகவே தெரிகின்றது.

எப்படி அவை கேடு விளைவிப்பவை? எப்படி புற்று நோய் ஏற்படுத்துகின்றன?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
4 minutes ago, Justin said:

எப்படி அவை கேடு விளைவிப்பவை? எப்படி புற்று நோய் ஏற்படுத்துகின்றன?

அன்று பரவலாக இல்லாத புற்றுநோய் இன்று எல்லா வீட்டுக்கு வீடுவாழ்கின்றதே அது எப்படி சார்?

கண்ட கண்ட களிசறைகளை கண்டு பிடிக்கிறது.....அதுக்கு  நாதாரி விளக்கங்கள் வேறை.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

அன்று பரவலாக இல்லாத புற்றுநோய் இன்று எல்லா வீட்டுக்கு வீடுவாழ்கின்றதே அது எப்படி சார்?

இதைப் பற்றி பல தடவை உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்! அன்றும் புற்று நோய்கள் இருந்தன! ஆனால் அதைக் கண்டு பிடிக்கும் மருத்துவ நுட்பங்கள் 70 களில் தான் உருவாகின. அது வரை எதற்கு வயிறு வீங்கியது என்று தெரியாமலே எம் முன்னோர் செத்தார்கள் (அவர்கள் நூறு வயது வரை வாழ்ந்தார்கள் என்பதும் புலுடாக் கதை தான்!). இன்று உலகில் அதிகம் புற்று நோய் ஏற்படக் காரணமாக புகை பிடித்தலும், வாட்டிய இறைச்சி போன்ற உணவுப் பழக்கங்களுமே  இருக்கின்றன!

மேலும் புற்று நோய் என்பது சில நூறு வகைகள் உண்டு. ஈரல் புற்று நோயும் தோல் புற்று நோயும் வெவ்வேறு வகையான நோய்கள். தொலைக்காட்சியால், தொலைபேசியால் என்ன வகைப் புற்று நோய் உருவாகிறது என்று நீங்கள் சொன்னால் மேலதிக தகவல்களைத் தர முடியும்!

  • கருத்துக்கள உறவுகள்

  • கருத்துக்கள உறவுகள்

செல் பேசிகளால் மூளைப் புற்று நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கும் என்பது இன்னும் நிரூபிக்கப் படாத எடுகோள். மூளைப் புற்றுநோய் வகைகள் சில 70 களில் அதிகரித்த போக்கு இருந்தது, ஆனால் 70 களில் செல் பேசிகள் இருக்கவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். ஆனால், மின்காந்தக் கதிர் வீச்சு (electromagnetic radiation) இருப்பது உண்மை! இதைக் கருத்தில் கொண்டு உலக சுகாதார ஸ்தாபனத்தின் புற்று நோய் ஆய்வு மையம் (IARC)  "புற்று நோயை மனிதனில் ஏற்படுத்தக் கூடும் (possible carcinogen)" என்ற Group 2B வகையில் மின்காந்தக் கதிர்வீச்சை வைத்திருக்கிறது. இது எவ்வளவு சீரியசான ஆபத்து என்று விளங்கிக் கொள்ள, Group 2B இல் அடக்கப் பட்டிருக்கும் ஏனைய சில பொருட்களைப் பார்க்க வேண்டும்: எங்கள் ஊர் கறுவாப்பட்டை,  வாசனைக்காக சேர்க்கப்படும் thyme இலைகள், சிவப்பு வைன், கோப்பி என்பவற்றில் இருக்கும் caffeic acid உம் group 2B இல் வகைப் படுத்தப் பட்ட ஒரு புற்று நோய் ஏற்படுத்தக் கூடிய பதார்த்தம்! இதன் அர்த்தம் என்ன? மனிதனில் நேரடியாக புற்று நோய் ஏற்படுத்தும் என்று ஆய்வுகளால் நிரூபிக்கப் படாத ஆனால் வேறு சிஸ்ரத்தில் அல்லது மாதிரிகளில் புற்று நோயை உருவாக்கும் என்று நிரூபிக்கப் பட்டால் group 2B இல் சேர்த்து விடுவர்!

NB: மேலே மருதர் இணைத்திருக்கும் வீடியோ பற்றியும் குறிப்பிட வேண்டும். Devra L Davis என்ற  ஆய்வாளருக்கு மின்காந்தக் கதிர் வீச்சு, செல் பேசிகள் தொடர்பாக நல்ல அபிப்பிராயம் இல்லை! அவர் ஆரம்பித்து நடாத்தி வரும் அமைப்புத் தான் இந்த EHT. இவரது கருத்துகளுக்கு ஆதாரமாகக் கொடுக்கப்பட்டிருக்கும் விஞ்ஞான ஆய்வுகள்  துருக்கி போன்ற வெளிநாடுகளில் செய்யப் பட்டு, தரகட்டுப் பாடுகள் அற்ற சஞ்சிகைகளில் வெளியிடப் பட்ட ஆய்வுகள். இதனால் இந்த ஆய்வுகளை வைத்துக் கொண்டு மேற்கு நாடுகளில் கொள்கை வகுப்பதில்லை! ஒரு ஆபத்தை சரியாக அடையாளம் கண்டு நுகர்வோருக்குத் தெரிவிப்பது தான் ஆய்வாளரின்/விஞ்ஞானியின் வேலையாக இருக்க வேண்டும் எனக் கருதுகிறேன். இவர் செல் பேசிகளுக்கு எதிராக fear mongering செய்யும் ஒரு செயற்பாட்டாளர் மட்டுமே என்பது என் கருத்து!

Edited by Justin
கீழ் பாகம் சேர்க்கப் பட்டது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.