Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடவுள் இருக்கிறாரா? 22 members have voted

  1. 1. கடவுள் இருக்கிறாரா?

    • கடவுள் இருக்கார்
      9
    • கடவுள் இல்லை
      8
    • சொல்லத் தெரியவில்லை
      2
    • சொல்ல விரும்பவில்லை
      3

This poll is closed to new votes

Please sign in or register to vote in this poll.

Featured Replies

களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

மனிதனே கடவுளை ஏற்படுத்தினான்

மனிதன், கால்கள் இரண்டோடு கைகள் இரண்டையும் ஊன்றி விலங்குகளைப் போல் தவழ்ந்து பச்சை இறைச்சியை உண்டும். பிறந்த உடலோடு குகைகளிலும் மரங்களிலும் வாழ்ந்தும், மொழி எதுவும் தெரியாமல் தனித்து இருந்தும் வந்த காலம் ஒன்றுண்டு அந்தக் காலத்தில் அவனுக்குக் கடவுளைப் பற்றிய எண்ணம் இருந்திருக்குமா?

“அனைத்தையும் கடந்ததாய், எல்லாம் வல்லதாய், எல்லாம் நிறைந்ததாய், எங்கும் உறைவதாய், ஒரு கடவுள் இருக்கிறார். அவர், உயிர்களைப் படைத்தார். அவ்வுயிர்கள், தம் ஆணவக்கட்டினின்றும் நீங்கிக் கடவுள் அடியை அடைவதே அவற்றின் பேரின்பம்! அதற்காக ஆன்மாக்கள் கடவுட்குக் கோயில் எழுப்பவும் மலர் பால் பழம் கொண்டு வணங்கவும் வேண்டும்” என்ற கோட்பாட்டில் நூறாயிரத்தில் ஒரு பங்கையாவது நான், முற் குறிப்பிட்ட காலத்து மனிதன் எண்ணியிருப்பானா?

தனக்குப் பால் பழத்தை அறியாதவன்; தனக்கு ஆடை ஒன்றை ஏற்படுத்தாதவன்; தனக்கு ஒரு சிறு குடிசை யாவுதல் காணாதவன்; தனக்கென்று ஒருமொழி இல்லாதவன். மேற்கண்டவாறு எண்ணியிருப்பானா? ஒரு போதும் அவன், கடவுளையோ கோயிலையோ பூசையையோ ஆன்ம ஈடேற்றத்தைப் பற்றியோ எண்ணியிருக்க முடியாது! இது தான் உண்மை.

கடவுள் எண்ணம் இல்லாத ஒரு காலத்திலே மனிதன் வாழ்ந்திருக்கிறான் என்பதைத் தெரிந்து கொண்டோம். இதிலிருந்து, கடவுள் என்ற எண்ணம் மனிதன் தோன்றிய காலத்திலேயே தோன்றிய தன்று என்றும் இடைக் காலத்திலே அவன், சிறுகச் சிறுக வளர்ந்து கொண்டிருந்த காலத்திலே தான் அவ்வெண்ணம் தோன்றிய தென்றும் தெரிந்து கொள்ளலாம். இதிலிருந்து நாம், அறியக் கூடிய தொன்று உண்டு. அதாவது: கடவுளும் அதன் கோட்பாடுகளும் மனிதனால் ஆக்கப்பட்டனவே!

கடவுள், மனிதனால் ஆக்கப்பட்டது என்று கொள்ளாவிட்டால், நாட்டுக்கு நாடு இனத்துக்கு இனம் வெவ்வேறு உருவமுடைய கடவுளும் வேறு வேறான சடங்குகளும் கொள்கைகளும் உண்டாமாறு இல்லை என்க.

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=290397

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் இருக்கின்றார் என்று காட்டுவதற்கு என்ன செய்ய வேண்டும்??

கடவுளை வரவைச்சுக் காட்டு, மாம்பழம் பிடிச்சுத் தா என்று கேட்டால் என்னால் முடியாது.

ஏனென்றால் சொல்லப்பட்ட முறைகளுக்கு அமைவாகப் பக்தியில் தேர்ந்தவன் நான் கிடையாது. என் கட்டளைக்கு அடிபணிந்து வருகின்ற அளவுக்கு என் அடிமையும் அவரல்ல.

கடவுள் இருக்காரா இல்லையா? எல்லாம் அவர் அவர் மனத்தை பொறுத்தது.

  • தொடங்கியவர்

மனிதனை மனிதனாக்க மனிதனால் உருவாக்கப் பட்டதுதான் சமயமும் கடவுளும், அதை நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்தார்களே தவிர கடவுள் என்று ஒருவர் நியத்தில் இல்லை, சமயங்கள் மனிதனை நல் வழி படுத்த ஆரம்பிக்கப் பட்டவையே தவிர மதத்தை வைது அரசியல் செய்யவும், வன்முறைகளில் இறங்கவும், மதத்தை வைத்து சாமியார் வேடம் போட்டு மக்களை ஏமாற்றவுமில்லை. மனிதனை மனிதானக்க ஆரம்பிக்கப் பட்ட மதங்கள் இன்று வெறி கொண்டு மதத்தை ஆரம்பித்தவர்களால் சொல்ல படாதா அல்லது மறுக்கப் அப்ட்ட வன்முறைகள் வெறியாட்டங்களில் இறங்கியுள்ளன. அப்படி ஒரு மதமும் இறைவனும் வேண்டுமா............? அப்படி வேண்டுமாயின் மதத்தில் சொல்ல பட்ட வற்றை முறையாக கடைப் பிடிக்கின்றீர்களா.............? பொதுவாக இந்து மதத்தில் மாமிசம் உண்பது பாவம் என்று சொல்லி இருக்கின்றது உயிர்களை கொல்ல கூடாது என்று சொல்லி இருக்கிறது அபப்டி யாராவது இருக்கிறார்களா............?

  • தொடங்கியவர்

கடவுள் இருக்கின்றார் என்று காட்டுவதற்கு என்ன செய்ய வேண்டும்??

கடவுளை வரவைச்சுக் காட்டு, மாம்பழம் பிடிச்சுத் தா என்று கேட்டால் என்னால் முடியாது.

ஏனென்றால் சொல்லப்பட்ட முறைகளுக்கு அமைவாகப் பக்தியில் தேர்ந்தவன் நான் கிடையாது. என் கட்டளைக்கு அடிபணிந்து வருகின்ற அளவுக்கு என் அடிமையும் அவரல்ல.

அதெல்லாம் இல்லாமலா களத்தில் எல்லோரிடமும் கருத்துக்களாம் வாதம் புரிந்து திரிகிறீர்கள் தலைவா............? :lol:

கடவுள் என்றால் என்ன? அது எப்படிப்பட்டது என்று சொல்லுங்கள்

நான் அப்படி ஒன்று இருக்கிறதா இல்லையா என்று சொல்கிறேன்

கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் பெரிய பம்மாத்துப் பேர்வழிகள். அவர்கள் ஒரு கடவுளைப் பற்றி சொல்வார்கள். அதற்கு குணம், உருவம், மனைவி, பிள்ளை குட்டி எல்லாம் இருக்கிறது என்று சொல்வார்கள்.

அவைகளை தர்க்கரீதியாக உடைக்கின்ற பொழுது, கடைசில் "ஏதோ ஒரு சக்தி" இருக்கிறது என்று சொல்வார்கள். அதற்கு உருவம் இல்லை. உணரத்தான் முடியும் என்பார்கள்.

ஆகவே இந்த விளையாட்டு வேண்டாம்.

நீங்கள் எப்படிப்பட்ட கடவுளைப் பற்றி கேட்கிறீhகள் என்று சொல்லுங்கள். நான் உண்டா, இல்லையா என்ற கருத்தை சொல்கிறேன்.

மனிதனை மனிதனாக்க கடவுள் உருவாக்கப்படவில்லை.

ஆளும் வர்க்கம் ஆளப்படுவர்களை அச்சுறுத்தவும், தொடர்ந்து அடிமையாக வைத்திருக்கவும்தான் கடவுள் உருவாக்கப்பட்டது. ஆரம்ப கால வரலாற்றைப் பார்த்தீர்கள் என்றால் கடவுள் பற்றிய பயம்தான் வளர்க்கப்பட்டிருக்கும்

கடவுளையும் சித்தாந்தங்களையும் இணைத்து பிற்காலத்தில்தான் கருத்துக்கள் உருவாக்கப்பட்டன. அதற்கும் கடவுள் மறுப்புக் கொள்கைகள்தான் காரணமாக இருந்தன.

தனக்குப் பால் பழத்தை அறியாதவன்; தனக்கு ஆடை ஒன்றை ஏற்படுத்தாதவன்; தனக்கு ஒரு சிறு குடிசை யாவுதல் காணாதவன்; தனக்கென்று ஒருமொழி இல்லாதவன். கடவுளை எண்ணியிருப்பானா? ஒரு போதும் அவன், கடவுளையோ கோயிலையோ பூசையையோ ஆன்ம ஈடேற்றத்தைப் பற்றியோ எண்ணியிருக்க முடியாது! இது தான் உண்மை.

மொழி இல்லாதவன், அச்சியந்திரம் இல்லாத காலத்தில் என்னத்தை உணர்ந்தான் அல்லது உணரவில்லை என எவராலும்

திட்டவட்டமாகக் கூறமுடியாது. அவனது உணர்வு எவ்வாறு இருந்தது என்றே தெளிவாக எமக்குத் தெரியாத போது அந்த உணர்வுகளின்

அடிப்படையில் அவனது எண்ணங்கள் எவ்வாறு இருந்தன என்று எவராலும் கூறமுடியாது. ஒரு மனிதனின எலும்புகளில் அல்லது fossilலில் இருந்து அந்த மனிதன் வாழ்ந்த காலத்தில் அவன் எவ்வாறான உணர்வுகளைக் கொண்டிருந்தான் என நிறுவும் ஆற்றலை விஞ்ஞானம் பெறும் வரை கட்டுரையாளர் குறிப்பிடும் காலத்து மனிதனின் உணர்வுகள்

பற்றி நாம் எவரும் திட்டவட்டமாக எதையும் கூற முடியாது.

இந்நிலையில்,

"அன்றைய காலத்து எமது மூதாதையர்கள் என்னத்தை அன்று உணர்ந்தார்கள் எனத் திட்டவட்டமாகக் கூற எம்மிடம் ஆதாரங்கள் எதுவும் இல்லை என்பதாலும், இன்று நாங்கள் கடவுளை உணர்வது போல் அன்று எங்கள் மூதாதையர் அவர்களும் உணர்ந்திருக்கலாம் என்று இன்றைய எமது சுய உணர்வின் அடிப்படையில் எமக்குப் படுவதாலும், எமது மூதாதையர்கள் கடவுளை உணரவில்லை என்று நிறுவும் ஆதாரங்கள் எதுவும் எம்முன்னே இல்லாததாலும் எமது முன்னோர்களும் கடவுளை உணர்ந்திருக்கலாம் என நாம் கருத இடமிருக்கின்றது" என்ற வாதமானது

"எமது அன்றைய கால முன்னோர்கள் கடவுளை உணரவில்லை என்று திட்டவட்டமாகக் கூறவதற்கு எந்த ஆதாரமும் எம்மிடம் இல்லை என்ற போதிலும், இன்று நாங்கள் கடவுளை உணரவில்லை என்பதாலும் இன்று கடவுளை உணருபவர்கள் அனைவரையும் சுத்த முட்டாள்களாக நாங்கள் கருதுவதாலும் எமது மூதாதையர்கள் கடவுளை உணர்ந்திருக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறுகின்றோம்" என்ற வாதத்தைக் காட்டிலும் ஏற்புடையது.

எமது முன்னோர்களும் கடவுளை உணரவில்லை என்று கூற எம்மிடம் ஆதாரம் இல்லை என்பதால் அவர்களும் எம்மைப்போல் கடவுளை உணர்ந்திருக்கலாம் என்ற கருத்தானது, "அடித்துச் சொல்கின்றோம் அவன் உணர்ந்திருக்க மாட்டான்" என்ற கருத்தை விட ஏற்றுக் கொள்ளக் கூடியது. நிட்சயமாக அவன் கடவுள் பற்றி உணரவில்லை எனக் கூறுபவர்களிற்குத் தான் அதை நிறுவ வேண்டிய தேவை தோற்றுவிக்கப்படுகின்றது. ஆனால் எமக்குத் தெரியாது ஆனால் அவன் உணர்ந்திருக்கலாம் என்ற கூற்று மேலதிகமாக எந்த வித நிறுவலும் தேவை அற்று லொஜிக்கலாக ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய நிலையில் உள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்

கடவுள் இருக்கிறாரா என்பதை நிரூபிக்கக் கேட்கும் நீங்கள் கடவுள் இல்லை என்பதை நிறுவுங்கள் பார்க்கலாம்..! :mellow::(

கடவுள் என்பது மனிதப் புலனுக்குள்ளும் இருக்கிறது அப்பாலும் இருக்கிறது..! கடவுள் என்பது இந்தப் பிரபஞ்சத்தின் ஆரம்பத்துக்கும் விரிவுக்கும் இயக்கத்துக்கும் உரித்தான சக்தி..! சக்தியின் மூலம் என்ன.. அதன் மூலம் என்ன விளக்க முடியுங்களாங்க..! முடியாது.. மனித அறிவினால்..! :P

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது பிரச்சனை அல்ல.இன்னமும் இந்த சொல்லை பாவிக்க வேண்டிய தேவை மனிதர்களுக்கு இருக்கிறது.இக்களத்தில் உறவுகளுக்கு சொல்லவதென்னவென்றால் கடவுள் இல்லை என்று நீங்கள் முடிவு எடுத்தால் நல்லது.அதை நீங்கள் முதலில் உங்கள் வீடுகளில் இதை நடை முறைப்படுத்துங்கள்.பின்பு படலைக்கு வெளியில் வாருங்கள்.தனியெருவனாக இருக்கும் வரை தான் உங்கள் கூத்து.ஆடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் இருக்கிறார். தீமைகள், அழிவுகள் தோன்றும் போது மக்களைக் காப்பாற்றுவதற்காக கடவுள் தீமைகள், அழிவுகளை அழிப்பதற்காக பிறந்துள்ள தமிழீழ விடுதலைப்புலிகளே இப்பொழுது ஈழத்தமிழர்களுக்காக கடவுளாக இருக்கிறார்கள். இவர்களை விட சிறந்த கடவுள்கள் யார்?.

சிவமயம்

திருச்சிற்றம்பலம்

கடவுள் உண்டா, இல்லையா?

swamiambal2.jpg

உலகத்திற்குக் கர்த்தாவாகிய கடவுள் ஒருவர் உண்டா, இல்லையா என்னும் இக்கேள்விக்கு ஆத்திகர் பலர் உண்டு என்கிறார்கள். நாத்திகர் இல்லை யென்கிறார்கள். ஆத்திகரும் நாத்திகருமல்லாத சந்தேகவாதிகள் உண்டு என்பாரை நோக்கி "கடவுள் இருந்தால் காட்டுங்கள்" என்கிறார்கள். ஆத்திகர் பலர் மற்ற இருதிறத்தார்க்கும் கடவுளைக் காட்டவேண்டி மிகவும் பிரயாசைப்படுகிறார்கள். ஆனால், ஆத்திகர்களுள் சைவர்களாகிய நாம் அக்கேள்விக்கு உண்டு என்றேயாவது இல்லையென்றேயாவது சொல்வதில்லை. பின் என் செய்வோமென்றால் மெளனமாயிருந்து விடுவோம். அல்லது, "உண்டு என்பவர்களுக்கு உண்டு, இல்லை யென்பவர்களுக்கு இல்லை" என்று சொல்வோம். நாம் மெளனமாயிருப்பதே அவர்கள் கேட்கும் கேள்விக்கு முதலில் அளிக்கும் விடையாகும். அவ்விடையின் கருத்தையறியாமலே அவர்கள் தாம் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லமாட்டாமல் சும்மாவிருப்பதாக எண்ணிக்கொள்ளக்கூடும். நாம் "கடவுள் உண்டு என்பவர்க்கு உண்டு, இல்லை யென்பவர்க்கு இல்லை" என்று சொன்னால், அவர்கள் கைகொட்டி நகைத்து, "இது கோமுட்டி சாஷி சொன்னதுபோலாம். ஏக காலத்தில் உள்ளதாகவும் இல்லாததாகவும் இருக்கும் ஒருபொருளை நாம் எங்கும் கண்டதில்லை. அவ்வாறான பொருள் ஒன்றிருக்கும் என்பது மலடி மக்களைப் பெற்றாள், குருடன் கண்ணாரக்கண்டான், செவிடன் காதாரக்கேட்டான், முயலின் கொம்பு மூன்று முழ நீள மிருக்கும், என்பன போல் பொருளில்லாதனவாகிய வெறுஞ் சொற்களாம்" என்பார்கள். ஆதலால் நாம் அவர்களுக்களிக்கும் விடைகள் இரண்டனுள் முன்னே முதலில் அளிக்கும் மெளன விடையின் கருத்தை விளக்குவோம்.

நாம் எதையும் மனம் வாக்குக் காயங்களாகிய திரிகரணங்களைக் கொண்டு அறிகிறோம். திரிகரணங்கள் சடப்பொருள்கள். சடப்பொருள்களைக் கொண்டு சடப்பொருள்களை யறியக்கூடுமேயன்றி சித்துப்பொருளாகிய கடவுளை யறிய முடியாது. திரிகரணங்களால் கடவுளை அறியக்கூடுமாயின் கடவுள் என்பது சடப்பொருள்களுள் ஒன்றாய்விடும். அன்றியும், கடவுள் என்னுஞ் சொல்லுக்குக் "கடந்துநிற்றலையுடையது" என்பது பொருள். எதைக் கடந்து நிற்றலையுடையதெனில் தத்துவங்களைக் கடந்து நிற்றலையுடைய தென்போம். எனவே, தத்துவாதீதமாயிருக்கும் பொருள் எதுவோ அது கடவுள் என்பது பெறப்பட்டது. மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றும் திரிகரணங்கள் என்ப்படும் தத்துவங்களாம். ஆதலினால் மனத்தாலும் வாக்காலும் காயத்தாலும் அறியப்படாத பொருள் எதுவோ அது கடவுள் என்பது பெறப்பட்டது. அத்தகைய பொருளை நாத்திகர் காட்டச் சொல்வது அவர்கள் "மனம் வாக்குக் காயங்களால் அறியக் கூடாத பொருளை நாங்கள் எங்கள் மனம் வாக்குக் காயங்களால் அறியுமாறு, நீங்கள் உங்கள் மனம் வாக்குக் காயங்களால் அறியுமாறு, நீங்கள் உங்கள் மனம் வாக்குக் காயங்களால் அறியுமாறு, நீங்கள் உங்கள் மனம்வாக்குக் காயங்களைக் கொண்டு காட்டுங்கள்" :mellow: என்று கேட்பது போலாம். இக்கேள்வி மூடக்கேள்வியாகையால், அவ்வாறு கேட்கும் மூடர்களைத் தெருட்டுவது எவ்வாற்றானும் கூடாதென்பதை யுன்னியே நாம் முதலில் அவர்களுடன் உரையாடாமல் மெளனமாயிருப்பது.

உரையுணர்விறந்த ஒருபெரும்பொருளே கடவுள் ஆதலால் அப்பொருளை உரையும் உணர்வும் அற்ற நிலையினரே அறிதற்பாலார். ( இவ்விடத்தில் உணர்வு என்பது சடப்பொருளாகிய கரணங்களாற் சுட்டியறியும் அறிவை). உரையுணர்வற்ற நிலையே மனமும் வாக்கும் இறந்த நிலையெனவும், பரமஞான நிலையெனவும் மோன நிலையெனவும் சொல்லப்படும். இது மோனமென்பது " ஞான வரம்பு" என்பதனால் உணரப்படும். அந்நிலை கடவுளோடு அது வதுவாய் (அத்துவிதமாய்) இருந்து இன்பம் நுகர்வதாகிய அநுபவ மாத்திரமா யிருப்பதன்றி, வாயினாலெடுத்துரைக்கப்படுவத

  • தொடங்கியவர்

கடவுள் இருக்கிறாரா என்பதை நிரூபிக்கக் கேட்கும் நீங்கள் கடவுள் இல்லை என்பதை நிறுவுங்கள் பார்க்கலாம்..! :mellow::(

கடவுள் என்பது மனிதப் புலனுக்குள்ளும் இருக்கிறது அப்பாலும் இருக்கிறது..! கடவுள் என்பது இந்தப் பிரபஞ்சத்தின் ஆரம்பத்துக்கும் விரிவுக்கும் இயக்கத்துக்கும் உரித்தான சக்தி..! சக்தியின் மூலம் என்ன.. அதன் மூலம் என்ன விளக்க முடியுங்களாங்க..! முடியாது.. மனித அறிவினால்..! :P

கடவுள் இருக்கிறார் சாந்த சொரூபி எங்கிறீர்கள்

அவர் இருக்கும் போத உலகத்தில் இவளவு அட்டூழியம் அக்கிரமம் அழிவு ஏற்படுகிறது, இறைவன் இருந்தால் அதை தடுக்க வேண்டியதுதானே

காற்றின் உருவம் யாருக்கும் தெரியுமா? :mellow:

இனி "கடவுள் உண்டு என்பவர்க்கு உண்டு, இல்லை யென்பவர்க்கு இல்லை" என்பதை விளக்குவாம். ஒருவன் தன் குழந்தையின் மீது வைத்த (பற்று எனப்படும்) அன்பினால் அக்குழந்தையைக் காணும்போதும், அதின் சொற்களைக் கேட்கும்போதும், அதைத் தீண்டும்போதும் இன்பம் அடைகின்றான். அவ்வாறே மனைவி மாடு வீடு முதலியவற்றினிடத்தும் வைத்த அன்பினால் இன்பம் அடைகின்றான். இதனால் பிரபஞ்சத்தில் உயிர்களுக்கு உண்டாகும் இன்பத்திற்குக் காரணம் பிரபஞ்சப்பொருள்களிடத்தில் வைத்த அன்பே என்பதும், அன்பு எங்கு உண்டோ அங்கு இன்பம் உண்டு என்பதும் விளங்கும். சிறியபொருளாகிய பிரபஞ்சத்தில் வைத்த அன்பினால் சிற்றின்பம் உண்டாவதுபோல் பெரிய பொருளாகிய கடவுளிடத்தில் வைத்த அன்பினால் பேரின்பம் தோன்றும். இதனை "அன்பினில் விளைந்தவாரமுதே" என்னுந் திருவாசகத்தாலுணர்க. இன்பம் கடவுளின் உருவமாதலாலும் அவ்வின்பம் அன்பினால் உண்டாவதனாலும், அன்பிலார்க்கு இன்ப முமில்லையாகையாலும், கடவுளை விசுவசித்து அன்புசெய்வார்க்கு அவர் உளராகவும், அன்பு செய்யாதவர்க்கு இலராகவுமிருக்கிறார்.

அன்றியும் "குழந்தையுந் தெய்வமுங் கொண்டாடுமிடத்தில்" என்னும் பழமொழியின்படி குழந்தையானது தன்னை ஆசையோடு செல்வமே கண்ணே கண்மணியே யெனப் பலகூறி கையிலேந்தியும் மார்போடணைத்தும் முத்தமிட்டும், பாலூட்டியும், தாலாட்டியும், வளர்ப்பவர்களிடம் தானும் ஆசையோடு சென்று அவர்கள் மடிமீதிருந்து விளையாடுவது போல், கடவுளும் தம்மைநேசித்து அபிஷேகித்தும், அலங்கரித்தும், அருச்சித்தும், தோத்திரங்கள் பாடியும் திருவிழாக்கொண்டாடியும், வணங்குவார்க்கு எளியராய் அவர் சிந்தையைக் கோயிலாகக் கொண்டு வெளிப்பட்டருளுவர். மற்றவர்களுக்கு அவ்வாறு வெளிப்பட்டருளுவதில்லை.

தமிழ்வேதம்

எந்தை யீசனெம்பெருமா னேறமர் கடவுளென்றேத்திச்

சிந்தை செய்பவர்க்கல்லால் சென்று கைகூடுவதன்றால்

கந்தமாமலருந்திக்கடும் புன னின்வாமல்குகரைமே

லந்தண்சோலை நெல்வாயி லரத்துறையடிகடம்மருளே.

வைத்தநிதியேமணியே யென்றுவருந்தித்தஞ்

சிந்தைநைந்துசிவனே யென்பார்சிந்தையார்

கொத்தார்சந்துங்குரவும் வாரிக்கொணர்ந்துந்தி

முத்தாறுடையமுதல்வர்கோயின்ம

Edited by ArumugaNavalar

  • தொடங்கியவர்

காற்றின் உருவம் யாருக்கும் தெரியுமா? :icon_idea:

காற்றினால் உயிர் வாழ்கின்றோம், கடவுளால்..........................?

  • கருத்துக்கள உறவுகள்

சுனாமியின் போது பச்சைக்குழந்தைகள், வயோதிபர்களைக் காப்பாற்றாத கடவுள் அப்பொழுது என்ன செய்தார்?. ஜோசப் பராராஜ சிங்கம், நத்தாட் தினத்துக்கு தேவாலயத்துக்கு செல்லாமல் இருந்தால் ஒருவேளை உயிருடன் இருந்திருப்பார். நவாலி தேவாலயத்தில் மக்கள் கொல்லப்பட்ட போது கடவுள் என்ன செய்தார்?. கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்களில் இருக்கும் போதும் மக்கள் கொல்லப்படுகிறார்களே, அப்பொழுது கடவுள் என்ன செய்தார்?. புத்தர் என்ற கடவுள் வாராது இருந்தால் இன்று பெளத்தர்கள் தோன்றி இருக்கமாட்டார்கள். பெளத்தர்கள் வராது இருந்தால் தமிழர்கள் உயிரோடு இருந்திருப்பார்கள்.

உண்மையில் கஸ்டப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் போது தான் கடவுளைக் காணலாம்.

கடவுளை எங்கே காணமுடியும்?

தி.க., தி.மு.க. க் கூட்டத்தினருக்குக் கடவுளிடத்து நம்பிக்கை வந்தது குறித்துத் தமக்கு மகிழ்ச்சி ஏற்பட்டதாக நவீனர் சொல்கிறார். ஆனால் நவீனருக்குக் கடவுள் நம்பிக்கை எவ்வளவிலிருக்கிறது? முதலில் அதைப் பார்க்கலாம். ஈசுரபக்தி யென்பதொன்று; மோக்ஷ மென்ப தொன்று. அவற்றுள் தெள்ளறிஞர் ஈசுர பக்தியையே விரும்புவர்; மோக்ஷத்தை விரும்பார். ஏன்? ஈசுரபக்தியே மோக்ஷத்துக்கு வித்து. ஆனால் அம்மோக்ஷத்தை யருள்பவன் ஈசுரன். அ·தவனது கடன். ஆகலின் அப்பக்தியே எல்லாவுயிர்களுக்கும் அவசியம். அதனை யுடைத்தாதலை அத்தெள்ளறிஞராவார் தமக்குக் கடனாகக் கொள்ள வேண்டும். அக்கடனை வற்புறுத்தவே,

'கேடு மாக்கமுங் கெட்ட திருவினார்

ஓடுஞ் செம்பொனு மொக்கவே நோக்குவார்

கூடு மன்பினிற் கும்பிட லேயன்றி

வீடும் வேண்டா விறலின் விளங்கினார்.'

[பெரியபுராணம் - திருக்கூட்டச் சிறப்பு 8]

எனத் திருமுறை அவ்விரண்டையும் ஒப்பு நோக்கிப் பக்தியை விசேடித்து. அது மோக்ஷத்தைத் தாழ்த்திக் கூறியதாகாது. ஆனால் ஈசுரன், பக்தி, மோக்ஷம் என்பன ஒன்று; சமூக சேவை யென்பது ஒன்று. அப்படி வைத்துக்கொண்டு அவ்விரண்டையும் ஒப்பு நோக்கினர் நவீனர். அவரும் நானும் போன்றார் கடவுளைக் காணாதவர். கடவுளொருவ ருளரென்பதை அவர் எப்படி ஏற்பர்? அவருள் மற்றவர் ஏற்பது எப்படியோ? கடவுள் ஒருவருளர், அவர் சிவபெருமானே என்ற உண்மையை உத்தேச லக்ஷண பரிக்ஷை என்ற முறையால் நிச்சயம் பண்ணின சைவ சமய நூல்கள். சைவர் அம் முறை பற்றி அவ்வுண்மையை ஏற்று வருகின்றனர். ஈசுரனை நேரிற் காண்பதற்குத் முதன் முதல் வேண்டப்படுவது அந்நிச்சய புத்தியே. நவீனருக்கு அம் முறையும், அம்முறையில் உளனென நிச்சயிக்கப்பட்ட ஈசுரணும் வேண்டாம்: அவர்,

'வேத சாத்திரங்களை - புராணங்களைப் படிப்பதனால் கடவுளைக் காண முடியாது. இயற்கையிலேதான் கடவுளைக் காண முடியும் என்று கூறுகிறார் வால்டேர்'

(2-6-1955 தமிழ்நாடு) - என்கிறார்.

வேத சாத்திர புராணங்களைப் படிப்பதனால் கடவுளைக் காண முடியாதென்றும் வால்டேர் சொன்னதை ஏற்றுக் கொண்டதனால் திருக்குறள், திருவாசக முதலியவற்றைப் படிப்பதனால்: கடவுளைக் காணமுடியாதென்று அவர் சொன்னவரானார். அவர்,

'தமிழக வாழ்க்கையில் அறத்துறையில் திருக்குறளும், அருளியல் துறையில் திருவாசகமும் தலையாய நிலையில் இருக்கிறது' (26-8-1955 தினமணி) என்று பிரசங்கிப்பதெல்லாம் அலங்காரப் பேச்சே. ஈசுரன் கற்றவர் விழுங்குங் கற்பகக் கனி; கல்லா நெஞ்சில் நில்லான். திருக்குறளுக்கு உரைகண்ட பரிமேலழகர் வேத சாத்திர புராணப் பயிற்சியால் வளர்ந்த அறிவை "ஆகம அறிவு" என்றும் அதற்குப் பயன் 'அவன்றாளைத் தொழுது பிறவியறுத்தல்' என்றுங் கூறினார்.

'தத்த மாற்றங்க ணிறுவிய சமயிகள் பலருங்

கத்து புன்சொலை வினவின ரவன்செயல் காணார்

சுத்த வாதுள முதலிய தந்திரத் தொகுதி

யுய்த்து ணர்ந்திடு நீரரே யொருசிறி துணர்வார்'

என்றது கந்தபுராணமும். வால்டேர் கருத்து அதற்கு மாறா? ஆயின் அது கண்டனத்துக்கேயுரியது. ஆனால் நவீனர் அதைத் தமக்குச் சாதகமாக எடுத்துக் காட்டினர். இவ்வுலகையே துன்பஞ் சிறிதுங் கலவாத இன்ப நிலய மாக்க வேண்டும்; மக்கள் அதனை ஆரத் துய்க்க வேண்டும்; அந்நாள் விரைவில் வருமாறு உழைப்பதே மக்களின் முன்னேற்றத்துக்கு உழைப்பதாகும். என்பது அவருக்கு ஆசையான பேச்சு.

பக்தியின் மூலம் - அன்பின் மூலம் - தொண்டின் மூலம் ஏற்றத் தாழ்வற்ற ஏழ்மை இல்லாத - துன்பமே அணுகாத ஒரு சமுதாயத்தைக் காண்பது நமது கடமையாகும். அந்த லட்சிய உலகைக் காண்கின்றவரை ஓயாது - அயராது உழைத்தல் வேண்டும். துன்பம் இருக்கும்வரை - வறுமை சூழ்ந்துள்ள போது பட்டினி பாதிக்கும் பொழுது கடவுளை மறுத்துப் பேசுகின்ற சூழ்நிலைதான் வரும். ஆகையால் நாம் அருள் நெறியைப் பரப்பும் முன் அவர்களின் அவதியைப் போக்குதல் வேண்டும். நம்மைச் சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல் வேண்டும். உண்ண உணவும் உடுத்த உடையும் அனைவருக்கும் கிடைக்கும்படி செய்தல் வேண்டும். அது தான் நிர்மணப் பணியாகும்;

(30-8-1955 தினமணி)

என்ற அவரது பேச்சு காண்க. வேதோக்தமான ஈசுர நிச்சயம் அந்த லக்ஷ¢ய வுலகைக் கனவென்று சொல்லும். ஆகலின் அவ்வீசுரனை ஒதுக்கிவிட்டு, இயற்கையிலேயேதான் காண முடியுமென வால்டேராற் கூறப்பட்ட கடவுளைக் கொண்டாரவர் அக்கடவுளை வால்டேராவது கண்டாரா? பிறர் கண்டனராயின் அவருள் இரண்டொருவர் பெயரையாவது சொன்னாரா? நவீனரும் எடுத்து காட்டினாரிலர். அப்படியொரு கடவுளிருந்தாலன்றோ அவரைக்கண்டவரு மிருப்பர், அவர் பெயரும் வெளிவரும். நவீனர் அக்கடவுளையே கடவுளெனக் கொண்டிருப்பதால் உண்மையான ஈசுரனுக்கு அவருள்ளத்தில் இடமில்லாமற் போயிற்று.

  • தொடங்கியவர்

சுனாமியின் போது பச்சைக்குழந்தைகள், வயோதிபர்களைக் காப்பாற்றாத கடவுள் அப்பொழுது என்ன செய்தார்?. ஜோசப் பராராஜ சிங்கம், நத்தாட் தினத்துக்கு தேவாலயத்துக்கு செல்லாமல் இருந்தால் ஒருவேளை உயிருடன் இருந்திருப்பார். நவாலி தேவாலயத்தில் மக்கள் கொல்லப்பட்ட போது கடவுள் என்ன செய்தார்?. கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்களில் இருக்கும் போதும் மக்கள் கொல்லப்படுகிறார்களே, அப்பொழுது கடவுள் என்ன செய்தார்?. புத்தர் என்ற கடவுள் வாராது இருந்தால் இன்று பெளத்தர்கள் தோன்றி இருக்கமாட்டார்கள். பெளத்தர்கள் வராது இருந்தால் தமிழர்கள் உயிரோடு இருந்திருப்பார்கள்.

உண்மையில் கஸ்டப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் போது தான் கடவுளைக் காணலாம்.

அதேதான் எனது கூற்று அதை விட்டு விட்டு புரியாத மொழிகளில் எதோ எல்லாம் சொல்கிறார்கள் சிலர்

மனிதனைக் காப்பற்ர முடியாதென்றால் கடவுள் என்று ஒருத்தர் இருக்காரா? அபப்டி இருந்தால் இத்தனை அவலங்களையும் பார்த்து கொண்டு என்ன செய்கிறர்?

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதைவிட, அவரால் நமக்கு என்ன பயன் ? எம்மால் அவருக்கு என்ன பயன்?

நோய் வந்தால் கடவுள் காப்பாற்றியவர்களை விட மருந்து சாப்பிட்டு குணமடைந்தவர்கள் ஏராளம். (மருந்து மூலம் கடவுள்தான் காப்பாற்றினார் என்ற வாதம் வேண்டாம்).

கவனமாகப் படித்த மாணவன் அதிக பக்தியுடைய மாணவனைவிட பரீட்சையில் சித்தியடைவது ஆச்சரியமல்ல.

சிறு வயதிலிருந்தே கடுமையாக உழைத்தவர்கள்தான் இன்று உலகின் உலகில் உயர்ந்த நிலையில் உள்ளனர்.

விரதங்கள் பிடித்து, தியானங்கள் செய்து வாழ்பவர்களை விட, மது அருந்தி புலால் உண்டு ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளினுடனும் வாழ்பவர்கள் ஏராளம்.

அதிகமான கடவுள் நம்பிக்கையுடைவர்களைக் கொண்ட நாடுகளைவிட, கடவுள் நம்பிக்கையைக் கைவிட்ட நாடுகளே இன்று எல்லாத் துறைகளிலும் முன்னேறியுள்ளது.

கடவுள் நம்பிக்கை அதிகமாகவுள்ள இலங்கை இந்தியாவில், பல நூற்றாண்டு காலமாக மக்கள் விடுதலை இன்றியும் அடிமைகளாகவும், வாழ்க்கைத் தர வளர்ச்சியின்றி துன்பங்களை அனுபவித்து வருவது ஏன் ?

கர்ம வினைதான் ஒரு மனிதனின் துன்பத்துக்குக் காரணமென்றால், இவை பாவப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்ட நாடுகளா ?

18 ஆயிரம் மாவீரர்களின் இரத்தத்தினால்தான் ஈழத்தின் விடுதலைப் பாதை திறக்கப்படுகிறது. இங்கு கடவுளின் பங்கு என்ன ?

ஏற்கனவே போரினால் பாதிக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான கிழக்கு மக்கள் கதறியழ ஆழிப்பேரலை அடித்துச் சென்றபோது எனக்குள் எழுந்த கேள்வி, கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது.

இக்கேள்விக்கு எனக்கு நானே கூறிக்கொள்ளும் பதில் - கடவுள் இருக்கிறாரோ இல்லையோ, அப்படி ஒன்று எனக்குத் தேவையில்லை என்பதாகும்.

  • தொடங்கியவர்

லீசுஉங்கள் கேள்வி நியாயமானது இதுக்கெல்லாம் பதில் சொல்ல மாட்டாங்க யாரும் :blink:

கடவுள் இருக்கிறாரோ இல்லயா என்று எனக்கு தெறியாது ஆனால் நான் இருக்கிறன் என்று மட்டும் எனக்கு தெறியும்

:P

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் இருக்கிறாரோ இல்லையா இதைப்பத்தி எல்லாம் எனக்கு தெரியாது.

என்னைப்ப்பத்தியே எனக்கு தெரியாது அதில இது வேறயா.

ஆளை விடுங்க சாமி.

கடவுள் இருக்கிறார் எண்டு தான் நினைக்கிறன். :D:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வானவில்,

உண்மையில் மிகுந்த ஆர்வத்துடன் இதை உங்களுள் வினாவுகிறீர்களா அல்லது சும்மா பொழுதுபோக்கிற்கான பதிவா என்று தெரியவில்லை...ஒன்று மட்டும் நிச்சயம்: இங்கு நானோ அல்லது நெடுஸோ அல்லது வேறுயாருமோ விளக்கம் கூறி நீங்கள் உங்களுக்கான விளக்கத்தை பெற்றுக்கொள்ளப்போவதில்லை. உண்மையில் அறியவேண்டும் என்று ஆர்வம் இருந்தால் என் ஆர்வத்திற்கு எட்டிவை இங்குள்ளன.

அதிலுள்ள ஒர் சிறுபகுதி:

Questioner: What am I?

KRISHNAMURTI: Let us find out. I have told you what you are: your country,

your furniture, your images, your ambitions, your respectability, your race, your

idiosyncrasies and prejudices, your obsessions. You know what you are!

Through all that you want to find truth, God, reality. And because the mind

does not know how to be free of all this you invent something, an outside

agency, or give significance to life.

So when you understand the nature of thought not verbally, but are

actually aware of it then when you have a prejudice, look at it and you will see

that your religions are a prejudice.... We have so many opinions, so many prejudices; just observe one

completely, with your heart, with your mind, with love; care for it, look at it. Do

not say ‘I must not’ or `I must’; just look at it. And then you will see how to live

without any prejudice. It is only a mind that is free from prejudice, from

conflict, that can see what truth is.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.