Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரா அணியாமல் இருப்பதை இயக்கமாக முன்னெடுக்கும் பெண்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 
#NoBraபடத்தின் காப்புரிமை SULLI / Facebook Image caption தென்கொரியாவில் பிரா அணியாத இயக்கத்தின் ஓர் அடையாளமாக நடிகையும், பாடகியுமான சுல்லி மாறியுள்ளார்.

தென்கொரியாவில் பெண்கள் மேலாடைக்கு உள்ளே பிரா அணியாமல் இருக்கும் புகைப்படங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து வருகிறார்கள்.

#NoBra என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி இது சமூக ஊடகத்தில் பெண்கள் இயக்கமாக மாறி வருகிறது.

தென்கொரிய நடிகையும், பாடகியுமான சுல்லி என்பவர், லட்சக் கணக்கானோர் பின்தொடரும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தாம் பிரா அணியாதிருக்கும் புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்ததை அடுத்து இந்த நடவடிக்கை பரவி வருகிறது.

தென்கொரியாவில் பிரா அணியாத இயக்கத்தின் ஓர் அடையாளமாக அவர் மாறியுள்ளார். பிரா அணிவதோ அல்லது அணியாமல் இருப்பதோ ''தனிப்பட்ட சுதந்திரம்'' என்ற செய்தியை வெளிப்படுத்துவதாக இந்த இயக்கம் அமைந்துள்ளது.

பிரா அணியாத இயக்கம்

ஆதரவு தெரிவித்து நிறைய பதிவுகள் பதிவிடப்பட்டுள்ள போதிலும், அவர், ''தன் மீது கவனத்தை ஈர்க்க'' முயற்சிக்கிறார் என்றும், வேண்டுமென்றே மக்களின் உணர்வுகளைத் தூண்டும் செயலில் ஈடுபடுகிறார் என்றும் சமூக ஊடக பயனாளர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தன் சொந்த விளம்பரத்துக்காக பெண்ணிய பிரசாரத்தை அவர் பயன்படுத்துகிறார் என்றும் சிலர் கருதுகின்றனர்.

கடந்து செல்க இன்ஸ்டாகிராம் பதிவு இவரது jelly_jilli

முடிவு இன்ஸ்டாகிராம் பதிவின் இவரது jelly_jilli

<div class="embed-image-wrap" style="max-width: 599px"> <a href="https://www.instagram.com/p/BwUQRVLh0jH/?utm_source=ig_embed"> <figure class="media-landscape full-width embed-screenshot-nonejs"> <span class="image-and-copyright-container"> <img class="js-image-replace" alt="இன்ஸ்டாகிராம் இவரது பதிவு jelly_jilli: " src="https://ichef.bbci.co.uk/news/1024/socialembed/https://www.instagram.com/p/BwUQRVLh0jH/?utm_source=ig_embed~/tamil/global-49567473" width="599" height="965"> <span class="off-screen">புகைப்பட காப்புரிமை jelly_jilli</span> <span class="story-image-copyright" aria-hidden="true">jelly_jilli</span> </span> </figure> </a> </div>

''பிரா அணிவது உங்களுடைய விருப்பம் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் எப்போதும் இறுக்கமான ஆடைகளை அணிந்து மார்பகங்களை வெளிக்காட்டும் வகையில் அவர் புகைப்படங்கள் எடுத்து வருகிறார். அதுபோல அவர் செய்யத் தேவையில்லை,'' என்று ஒருவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

''பிரா அணியாததற்காக உங்களை நாங்கள் குற்றம் சொல்லவில்லை. உங்கள் மார்புக் காம்புகளை மறைக்க வேண்டும் என்றுதான் நாங்கள் கூறுகிறோம்,'' என்கிறது இன்னொரு பதிவு.

''உங்களை நினைத்து வெட்கப்படுகிறேன். இதேபோல பிரா அணியாமல் சர்ச்சுக்கு நீங்கள் செல்ல முடியுமா? உங்கள் சகோதரியின் கணவரை அல்லது உங்கள் கணவருடைய பெற்றோரை இதுபோல சென்று சந்திக்க முடியுமா,'' போன்ற கேள்விகள் எழுவது மட்டுமல்லாது ''ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் இதை அசௌகரியமாக உணர்கிறார்கள்,'' என்றும் கருத்துகள் பதிவிடப் பட்டுள்ளன.

மிக சமீபத்தில் ஹிவாசா என்ற மற்றொரு பிரபலமான பாடகியும் #NoBra இயக்கத்தை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருந்தார்.

பிரா அணியாத பெண்கள் இயக்கும்

தேர்வு செய்வதற்கு சுதந்திரம்

ஹாங்காங்கில் இசை நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு சோலுக்கு திரும்பியபோது உள்ளே பிரா போடாமல் டி-சர்ட் அணிந்து கொண்டு அவர் இறங்கி வந்த புகைப்படங்களும், காணொளிகளும் வைரலாகப் பரவின.

ஆனால், அதன் பிறகு சாமானியப் பெண்கள் மத்தியில் #NoBra இயக்கம் தீவிரமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தென் கொரியாவில் பெண்கள் சுதந்திரத்தில் நாட்டம் காட்டுவது இது தனிப்பட்ட நிகழ்வு அல்ல. 2018ல் ''மார்பில் இறுக்கமான உடைகளில் இருந்து விடுதலை,'' என்ற இயக்கம் தீவிரமடைந்தது.

பல பெண்கள் நீண்ட தலைமுடியை மொட்டை அடித்துக் கொண்டு, மேக்-அப் இல்லாமல் வெளியில் சென்றனர். அந்தப் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

தென்கொரியாவில் உண்மைக்கு மாறான அழகு நிலைகளை உருவாக்கிக் கொள்வதற்கு மேக்-அப் மற்றும் தோல் பராமரிப்பில் பெண்கள் அதிக நேரம் செலவிடுதலுக்கு எதிராக இந்த முழக்கம் உருவானது.

தென் கொரிய யு டியூப் நட்சத்திரம் லினா பேயே Image caption பெண்களுக்கு ஆதரவாக ஒப்பனை செய்து கொள்ளாமல் தென்கொரிய யூ டியூப் நட்சத்திரம் லினா பேயே காணொளி வெளியிட்டதால், கொலை மிரட்டல்களை எதிர்கொண்டார்.

பிபிசியிடம் பேசிய பெண்களில் பலர், இந்த இரு இயக்கங்களுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறினர். சமூக ஊடகங்களில் இது பரவுவதைப் பார்த்தால், புதிய வகையிலான போராளித்துவம் உருவாகிறது என்பதன் அறிகுறி என்று தெரியும்.

'பார்வையால் வல்லுறவு'

தென் கொரியாவில் சமீபத்திய ஆண்டுகளில் ஆணாதிக்க கலாசாரத்துக்கு எதிராகவும், பாலியல் வன்முறைக்கு எதிராகவும், கழிவறை மற்றும் பொது இடங்களில் ஆண்கள் 'ரகசிய கேமரா' பொருத்துவதற்கு எதிராகவும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

2018ல் நாட்டில் பெண்கள் மட்டுமே பங்கேற்ற மிகப் பெரிய போராட்டம் நடைபெற்றது. ரகசிய கேமராவில் எடுக்கப்பட்ட ஆபாசப் படங்களை ஒழிக்க வலியுறுத்தி சியோல் நகர தெருக்களில் பத்தாயிரக்கணக்கான பெண்கள் ஊர்வலமாகச் சென்றனர்.

பிபிசியிடம் பேசிய தென்கொரிய பெண்களில் சிலர் இருவேறு கருத்துகளில் இருக்கின்றனர். பிரா அணியாமல் செல்வதை அவர்கள் ஆதரிக்கிறார்கள். ஆனால் பொது இடத்தில் தங்களால் அப்படி செல்ல முடியுமா என்ற நம்பிக்கை அவர்களிடம் இல்லை.

'பார்வையால் பாலியல் வல்லுறவு செய்தல்' என்ற போக்குதான் அவர்களுக்கு மிகப் பெரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆண்கள் அளவுக்கு அதிகமாக உற்றுப் பார்ப்பது, அத்துமீறிய செயலாக உள்ளது என்று அவர்கள் கருதுகின்றனர்.

பிரா அணியாமல் செல்வதில் பெண்களின் அனுபவங்கள் குறித்து 'No Brablem' என்ற ஆவணப்படத்தை 2014ல் தயாரித்த குழுவில் இருந்தவர் 28 வயதான ஜியாங் சியாங்-இயுன்.

பல்கலைக்கழக்தில் இருந்தபோது, பிரா அணிவது இயல்பானது என்று நாம் ஏன் நினைக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பத் தொடங்கியபோது, நண்பர்களுடன் சேர்ந்து இந்த முயற்சியில் ஈடுபட்டதாக சியோங் இயுன் தெரிவித்தார்.

தேர்வு செய்யும் உரிமை

இந்த விஷயத்தை பொதுவெளியில் நிறைய பெண்கள் விவாதிக்கிறார்கள் என்பது நல்லது தான் என்று அவர் நினைத்தாலும், டி-சர்ட்களில் மார்புக் காம்புகளை வெளிக் காட்டிக் கொள்வதை பெரும்பாலான பெண்கள் இன்னும் அவமானத்துக்குரிய செயலாகவே கருதுகிறார்கள் என்று நம்புகிறார்.

''தென்கொரியாவில் பிரா அணிவது இயல்பானதாகவே இன்னும் கருதப்படுகிறது என்பதை அவர்கள் அறிவார்கள். அதனால் பிரா அணிவதை அவர்கள் தேர்வு செய்திருக்கிறார்கள்,'' என்று அவர் கூறுகிறார்.

பார்க் ஐ-செயுல் என்ற 24 வயதான தென்கொரிய மாடல், பாடி பாசிடிவிட்டி இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். கடந்த ஆண்டு பிரா அணியாமல் தலைநகர் சியோலில் மூன்று நாட்கள் சென்று அதை காணொளியாகப் பதிவு செய்ய முடிவு செய்தார்.

அந்த காணொளியை பல்லாயிரம் பேர் பார்த்ததால் அது பிரபலம் ஆனது.

தன்னைப் பின்தொடர்பவர்களில் சிலர் தோள்பட்டையில் பிடிமானம் இல்லா மென்மையான கப் உள்ள பிராலெட்களை தேர்வு செய்வதாக அவர் கூறுகிறார்.

சித்தரிப்பு படம் Image caption # நோபிரா இயக்கம் சமூக ஊடகங்கள் மூலம் பரவியது.

``தோள்பட்டையில் பிடிமானம் இல்லாத பிரா அணிந்தால் மார்பகங்கள் தொங்கி, அசிங்கமாகத் தோன்றும் என்ற தவறான எண்ணம் எனக்கு இருந்தது. ஆனால், அந்த காணொளி எடுத்த பிறகு நான் பிரா அணிவது இல்லை. இப்போது பெரும்பாலான நாட்களில் நான் கோடையில் பிராலெட் அணிகிறேன், குளிர்காலங்களில் பிரா இல்லாமலே செல்கிறேன்,'' என்கிறார் அவர்.

டேயெகு நகரைச் சேர்ந்த 22 வயதான காட்சி வடிவமைப்பு மாணவி நாஹ்யெயுன் லீ -யும் இதனால் ஈர்க்கப் பட்டுள்ளார். கெயிம்யுங் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப் படிப்புக்கு யிப்பீ என்ற முன்னணி பிராண்ட் உடன் தனது பயணத்தை தொடங்கினார். கடந்த மே மாதத்தில் இருந்து "Brassiere, it's okay, if you don't!" என்ற வாசகத்துடன் இந்த பிராண்ட்டில் காம்புகளை மறைக்கும் பட்டைகளை அவர் விற்பனை செய்து வருகிறார்.

பாடகி மற்றும் நடிகை சுல்லியின் புகைப்படங்களைப் பார்த்து தமக்கு உத்வேகம் கிடைத்திருப்பதாக ஜியோல்லனம்-டோ மாகாணத்தைச் சேர்ந்த டா-கியுங் என்ற 28 வயதுப் பெண் கூறுகிறார். அலுவலகத்தில் மேலதிகாரி அருகில் இருக்கும் போது பிரா அணிவதாகவும், ஆண் நண்பருடன் வெளியில் செல்லும் போது அணிவதில்லை என்றும் அவர் கூறுகிறார்.

தோள்பட்டையில் பிடிமானம் இல்லாத பிரா அணிந்தால் மார்பகங்கள் தொங்கி, அசிங்கமாகத் தோன்றும் என்ற தவறான எண்ணம் எனக்கு இருந்தது.படத்தின் காப்புரிமை NAHYEUN LEE Image caption தோள்பட்டையில் பிடிமானம் இல்லாத பிரா அணிந்தால் மார்பகங்கள் தொங்கி, அசிங்கமாகத் தோன்றும் என்ற தவறான எண்ணம் இருந்தது.

''பிரா அணிவது உனக்கு சவுகரியமாக இல்லாவிட்டால், அதை அணிய வேண்டாம் என்று என் ஆண் நண்பர் கூறுகிறார்,'' என்று அவர் தெரிவித்தார்.

இதற்கான விருப்பத்தைத் தேர்வு செய்யும் உரிமை தங்களுக்கு இருப்பதாகப் பெண்கள் கூறுகின்றனர். ஆனால் பிரா அணியாமல் இருப்பது பற்றி ஆராய்ச்சிகள் என்ன கூறுகின்றன?

போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகத்தில் பயோமெக்கானிக்ஸ் துறையில் மூத்த விரிவுரையாளராக இருப்பவர் டாக்டர் ஜென்னி புர்பேஜ். பிரா அணிவதால் அசவுகரியம் அல்லது வலியாக உணர்வது என்பது ''சரியாகப் பொருந்தாத பிரா அணிவதுடன் தொடர்புடைய'' பிரச்சனை என்று அவர் கூறுகிறார்.

''எங்களுடைய ஆராய்ச்சிக் குழு அறிந்த வரையில், மார்பகப் புற்றுநோய்க்கும், பிரா அணியும் பழக்கத்திற்கும் தொடர்பு இருப்பதாக, நம்பகமான எந்த அறிவியல் ஆய்வு முடிவுகளும் வெளியிடப்படவில்லை,'' என்று அவர் தெரிவிக்கிறார்.

ஆனால் பிராவுக்கு எதிராக பெண்கள் இயக்கம் நடத்துவது இது முதல் முறை அல்ல.

1968ல் மிஸ் அமெரிக்கா அழகிப் போட்டி நடந்த இடத்துக்கு வெளியே நடந்த போராட்டத்துக்குப் பிறகு, ''பிரா எரிக்கும் பெண்ணியவாதிகள்'' என்ற வாசகம் உருவானது.

அப்போது பெண்கள் - பிரா உள்ளிட்ட பொருட்களை குப்பைத் தொட்டியில் வீசினர். அது பெண்களின் அடக்குமுறைக்கான அடையாளமாக இருப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர். இருந்தாலும் ஒருபோதும் உண்மையில் அதை அவர்கள் எரிக்கவில்லை.

ஆனால் அப்போதிருந்து பிரா எரிப்பு என்பது பெண்களின் விடுதலை இயக்கத்துடன் தொடர்புடையதாக இருந்து வருகிறது.

நோ பிரா இயக்கம்படத்தின் காப்புரிமை Getty Images Image caption "பெண்ணியவாதிகள் எரியும் பிராக்கள்" என்ற சொற்றொடர் 1960 களின் பிற்பகுதியில் தோன்றியது

இந்த ஆண்டு ஜூன் மாதம், சுவிட்சர்லாந்தில் ஆயிரக்கணக்கான பெண்கள், பணியில் இருந்து வெளியேறி பிராக்களை எரித்து போக்குவரத்தை நிறுத்தினர். நியாயமான சம்பளம், அதிக சமத்துவம் கோரியும், பாலியல் துன்புறுத்தல் மற்றும் வன்முறைகளுக்கு முடிவு கட்டக் கோரியும் போராட்டம் நடத்தியபோது அவர்கள் இந்தச் செயல்களில் இறங்கினர்.

அக்டோபர் 13 ஆம் தேதி கடைபிடிக்கப்பட்ட பிரா இல்லாத நாள் என்பது, உலகெங்கும் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக இருந்தது. ஆனால், கடந்த ஆண்டு பிலிப்பைன்ஸில் அதிக பாலின சமத்துவம் கோரி இதற்காக ஒரு நாளை கடைபிடித்தனர்.

பிரா இல்லாத நாள் என்பது ''எங்களுடைய பெண்ணியத்தை உறுதிப்படுத்துவதாக உள்ளது. ஒருபெண்ணாக யார் என்பதைக் காட்டுவதாக உள்ளது,'' என்று பத்திரிகையாளர் வனெஸ்ஸா அல்மெடா கூறியுள்ளார்.

''பெண்கள் எப்படி அடிமைத்தனத்தில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதன் அடையாளமாக பிரா இருக்கிறது,'' என்கிறார் அவர்.

ஆண்களும், பெண்களும் தங்கள் மார்புக் காம்புகளை வெளிக்காட்டும்போது சென்சார் செய்வதில் இரட்டை நிலைப்பாடு இருப்பதைக் குறிப்பிட்டு சமீபத்திய ஆண்டுகளில் பிரசாரங்கள் நடைபெறுகின்றன.

"ஃபிரி த நிப்பிள்" நடவடிக்கை பெண்களின் மார்பகங்களை தணிக்கை செய்வதை எதிர்க்கிறது.படத்தின் காப்புரிமை Getty Images

2014 டிசம்பரில் நெட்பிலிக்ஸ் நிறுவனம் Free the Nipple என்ற தலைப்பில் ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டது. அதன் தொடர்ச்சியாக பெண்களின் மார்பகங்களை மையமாகக் கொண்ட கிரிமினல் செயல்பாடுகள் மற்றும் சென்சார் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நியூயார் நகரில் இளம்பெண்கள் குழுவினர் போராட்டத்துக்கு ஆதரவு திரட்டினர்.

இதனால் ''Free the Nipple'' பிரசாரம் உலகளாவிய செயல்பாடாக உருவெடுத்தது.

தென்கொரியாவில் சமீபத்தில் ஏற்பட்ட ''No Bra'' இயக்கம், பெண்களின் உடல்களை மையமாகக் கொண்டு உலகெங்கும் உள்ள கட்டுப்பாடுகள் மீது கூடுதல் கவனம் செலுத்தும் வகையில் அமைந்துள்ளது.

தென்கொரியாவில் இதில் பங்கேற்ற பெண்கள், கலாசார எதிர்பார்ப்புகள் காரணமாக இதற்கு தயக்கம் காட்டுவதாகக் கூறுகின்றனர். இருந்தாலும், ''தனிப்பட்ட சுதந்திரம்'' என்ற அளவில் இது அடிப்படை குறித்தது என்று பல பெண்கள் கூறியுள்ளனர்.

இந்த இயக்கம் தீவிரமடைந்து வரும் வேகத்தைப் பார்த்தால், பிரா அணியாமல் இருப்பது பிரச்சனையில்லை என்ற நிலை வரும் வரையில் இந்த ஹேஷ்டேக் வேகம் குறையாது என்று தெரிகிறது.

https://www.bbc.com/tamil/global-49567473

  • கருத்துக்கள உறவுகள்

நமக்கும்... "பிரா"  வாங்குற  செலவு மிச்சம். :grin:
இந்த இயக்கத்தின்... போராட்டம், விரைவில்... முழு வெற்றி பெற வாழ்த்துக்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

நமக்கும்... "பிரா"  வாங்குற  செலவு மிச்சம். :grin:
இந்த இயக்கத்தின்... போராட்டம், விரைவில்... முழு வெற்றி பெற வாழ்த்துக்கள். :)

வெள்ளிக்கிழமை தொடரலாம்😋

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

நமக்கும்... "பிரா"  வாங்குற  செலவு மிச்சம். :grin:
இந்த இயக்கத்தின்... போராட்டம், விரைவில்... முழு வெற்றி பெற வாழ்த்துக்கள். :)

 

1 hour ago, விசுகு said:

வெள்ளிக்கிழமை தொடரலாம்😋

tmpk1-thumb-3.jpg

எட்டிப்பார்த்துட்டு போவோம்  ஆடை சுதந்திரம் என்று சொல்லிட்டு போயிடுவம்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

நமக்கும்... "பிரா"  வாங்குற  செலவு மிச்சம். :grin:
இந்த இயக்கத்தின்... போராட்டம், விரைவில்... முழு வெற்றி பெற வாழ்த்துக்கள். :)

நீங்களும் இப்ப இதெல்லாம் போட வெளிகிட்டியளே அண்ணை? 😂.

இந்த இயக்கம் வெற்றி பெற்று, அடுத்து மேலாடை இல்லாமல் போகும் போராட்டத்தை ஆரம்பிக்கும் அளவுக்கு இவர்கள் போராட்டம் வெற்றி பெற என் முழு ஆதரவு எப்போதும் உண்டு.

ஆனால் இது ஒண்டும் புதிசில்லையே? 1970 களிலேயே, வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய யாழ் பல்கலைகழக புத்தி சீவிகள் இதை முன்னெடுத்துள்ளாதாக கேள்வி.

உலகில் எங்கெங்கு மக்கள் போராட்டங்கள் இடம்பெறுகின்றதோ அவற்றுக்கெல்லாம் இந்த நிழலி ஆதரவு கொடுப்பான். கொரிய பெண்களின் போராட்டத்துக்கும் தன் இரு கண்களையும் அகலத் திறந்து ஆதரவு கொடுக்கின்றான்.

இந்த மக்கள் போராட்டம் ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு நகரங்களிலும், ஒவ்வொரு குக்கிராமங்களிலும் கூட வெடிக்கட்டும். பிரா என்ற ஒரு ஆடையே உலகில் இருந்து ஒழியட்டும்.

வெற்றி நமதே!

  • கருத்துக்கள உறவுகள்
Quote

பிரா அணியாமல் இருப்பதை இயக்கமாக முன்னெடுக்கும் பெண்கள்

ஹா ஹா

30 minutes ago, நிழலி said:

உலகில் எங்கெங்கு மக்கள் போராட்டங்கள் இடம்பெறுகின்றதோ அவற்றுக்கெல்லாம் இந்த நிழலி ஆதரவு கொடுப்பான். கொரிய பெண்களின் போராட்டத்துக்கும் தன் இரு கண்களையும் அகலத் திறந்து ஆதரவு கொடுக்கின்றான்.

இந்த மக்கள் போராட்டம் ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு நகரங்களிலும், ஒவ்வொரு குக்கிராமங்களிலும் கூட வெடிக்கட்டும். பிரா என்ற ஒரு ஆடையே உலகில் இருந்து ஒழியட்டும்.

வெற்றி நமதே!

உங்களது இந்த வீர உரையை யாழ் கள உறுப்பினர்கள. அனைவரும் விண்அதிர கரகோசம் செய்து வரவேற்கிறார்கள். பொது எதிரிக்கு (பிரா) எதிராக யாழகளமே திரண்டிருப்பது மகிழ்ச்சி. 

  • கருத்துக்கள உறவுகள்

கொரிய பெண்கள் .... நமது தமிழ் பெண்களுக்கு ஓகே ...
நம்ம மலையாள மாந்திரீகள் எப்படி திரிவது?
வண்டியில் கட்டியது உங்கள் சொந்த மாடு என்றாலும் .... நாணயகயிறு போட்டு 
ஒரு கட்டுபாட்டுக்குள் வைத்திருந்தால்தானே பயணம் சீராக அமைந்து ஊர்போய் சேரலாம். 
ஒரு மாடு ஒரு பக்கம் இழுத்தால் .... வண்டி எங்கு போவது? 

Varsha-Pandey-White-Saree-Stills-Spicy-Photos-1.jpg

 

sathya_sai_movie_actress_hot_stills_010.jpg

Japanese companies turn bras into fuel

burn_bras_flickr_anemoneprojectors

The whole "feminists burn their bras" thing is kind of a canard, but now you can do it for real and for an equally good cause. Japanese lingerie manufacturers are collecting bras and recycling them into solid fuel.

It's been pretty successful, too:

Triumph has collected more than 200,000 bras since it began the program in 2009 and turned them into 14 tons of [refuse paper and plastic] fuel. Wacoal has collected more than 179,200 bras and produced 17.9 tons of the fuel.

Apparently Japanese women are powerfully bashful about the task of disposing of worn-out underclothes — which makes more sense when you know that many municipalities in Japan require you to put trash in a transparent bag and leave it at a public pick-up point. Women apparently feel weird about being all "HERE'S MY OLD BRA, WORLD," and who can blame them. 

The bra-recycling program spares them the embarrassment of throwing bras away, plus it recycles them into fuel to make more bras. It's the circle of bras. Ourobraros

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு என்டால் இது பிடிக்கல்லே. என்னடப்பா இது.

இங்கு இலங்கையில நம்மட குடும்பப்பெண்கள் எங்கும் வெளியில் புறப்ப‌டும்போது, ட்ரெஸிங் ரூம்பில் கண்ணாடி முன் நின்று, சமையல் அறையில் வேலை செய்து கொண்டிருக்கும் தன் கணவனை,  "அப்பா இங்க‌ ஒருக்க வாங்க, இந்த பிரா கொக்கியை கொஞ்சம் சரிய போட்டு விடுங்கள், என்று கேட்கும் போது, ஓடி சென்று தொட்டு தடவி, பிரா கொக்கியை சரியாக பூட்டி விட்டு ஒரு அணைப்பு கொடுத்து விட்டு போகும் போது கிடைக்கும் சந்தோசம் / அன்பு எல்லாம் இல்லாமல் போகின்றதே. 

  • கருத்துக்கள உறவுகள்

அடிப்படையை ஆட்டம் காண வைக்கும் முயற்சி …..
எதுவுமே தெரிந்தும் தெரியாமலும் , ஊகங்களிற்கு இடம் கொடுத்தும் நிற்கும் பொது அதிலிருக்கும் இழுப்பும்ம்ம் கவர்ச்சியும்ம்ம்ம் சொல்லி மாளாது ।। இது ஏவாள் ஓடிப் போய் இலை பறித்து மறைத்ததிலேயே தொடங்கி விட்டது
இப்ப என்ன தம்பி தங்கை மார் புதிதாக …..

 

 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, goshan_che said:

நீங்களும் இப்ப இதெல்லாம் போட வெளிகிட்டியளே அண்ணை? 😂.

இந்த இயக்கம் வெற்றி பெற்று, அடுத்து மேலாடை இல்லாமல் போகும் போராட்டத்தை ஆரம்பிக்கும் அளவுக்கு இவர்கள் போராட்டம் வெற்றி பெற என் முழு ஆதரவு எப்போதும் உண்டு.

ஆனால் இது ஒண்டும் புதிசில்லையே? 1970 களிலேயே, வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய யாழ் பல்கலைகழக புத்தி சீவிகள் இதை முன்னெடுத்துள்ளாதாக கேள்வி.

அட கடவுளே... கோசான், இதென்ன கோதாரியாய் கிடக்கு.  😮
நான்... என்னத்தையோ... நினைத்து, எழுத...
நீங்கள், அதற்கு... வேறு அர்த்தம் கற்பித்து விட்டீர்களே....  :grin:

டிஸ்கி:  என்ரை மனிசிக்கு, பிரா வேண்டுற செலவு இல்லை எனத் தான் சொல்ல வந்தேன் ஐயா.

டிஸ்கிக்கு டிஸ்கி: ஆண்களும்... கோவணம் கட்டக் கூடாது,  போன்ற போராட்டங்களை  நடத்தினால்....  எமக்கும், ஒரு விடிவு கிடைக்கும். 

இதற்காக... கோவணம் விற்கும் கடைகளின் முன்..  உண்ணாவிரதம் இருந்து,
மறியல் போராட்டம்  செய்யவும், தயாராக உள்ளேன். 

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Tribal Beauties (Reprint on Paper - Unframed)

எங்கடை ஆச்சிமார் பிரா ஒண்டுமில்லாமல் சும்மா குறுக்குக்கட்டோடை தானே திரிஞ்சவை.அதையெல்லாம் பட்டிக்காடு எண்டு சொல்லிப்போட்டு இப்ப பிரா இல்லாட்டி நல்லதாம்...
அப்பு கோமணத்தோடை காட்சி தர....
ஆச்சி குறுக்குக்கட்டோடை குறுக்காலை மறுக்காலை திரிய....
குடும்பத்துக்கு ஒரு டசின் பிள்ளைச்செல்வங்கள்
அதெல்லாம் ஒரு காலம்

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

Tribal Beauties (Reprint on Paper - Unframed)

எங்கடை ஆச்சிமார் பிரா ஒண்டுமில்லாமல் சும்மா குறுக்குக்கட்டோடை தானே திரிஞ்சவை.அதையெல்லாம் பட்டிக்காடு எண்டு சொல்லிப்போட்டு இப்ப பிரா இல்லாட்டி நல்லதாம்...
அப்பு கோமணத்தோடை காட்சி தர....
ஆச்சி குறுக்குக்கட்டோடை குறுக்காலை மறுக்காலை திரிய....
குடும்பத்துக்கு ஒரு டசின் பிள்ளைச்செல்வங்கள்
அதெல்லாம் ஒரு காலம்

அந்தக்கால அப்பச்சிமார் சொல்லுவார்கள் எட்டிக்கடந்தால் ஏழு பிள்ளை பெறுவோம் என இப்பெல்லாம்

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, குமாரசாமி said:

Tribal Beauties (Reprint on Paper - Unframed)

எங்கடை ஆச்சிமார் பிரா ஒண்டுமில்லாமல் சும்மா குறுக்குக்கட்டோடை தானே திரிஞ்சவை.அதையெல்லாம் பட்டிக்காடு எண்டு சொல்லிப்போட்டு இப்ப பிரா இல்லாட்டி நல்லதாம்...
அப்பு கோமணத்தோடை காட்சி தர....
ஆச்சி குறுக்குக்கட்டோடை குறுக்காலை மறுக்காலை திரிய....
குடும்பத்துக்கு ஒரு டசின் பிள்ளைச்செல்வங்கள்
அதெல்லாம் ஒரு காலம்

இதிலும் ஒரு மோசமான பின்கதை இருக்கிறது.

முன்பு பிரா போடும் வழக்கம் இருக்கவில்லை எனிலும் ரவிக்கை போடும் வழக்கம் இருந்திருக்கிறது.

ஆனால் ரவிக்கை போடும் உரிமை வெள்ளாளச் சாதி பெண்களுக்கு மட்டுமே.

ஏனைய சாதிப் பெண்கள் ஒன்றில் வெறுமனே முந்தானையால் கொசுவம் போல மேலுடம்பை மறைக்க வேண்டுமாம்.

சில ஊர்களில் வெள்ளாச் சாதியினர் வரும் போது, ஏனைய சாதி ஆண்கள் தலையில் துண்டையும், பெண்கள் முந்தானையையும் தளர்த்த வேண்டியதும் இருந்ததாம்.

மானிப்பாய் பொதுச்சந்தையிற்கு “ரவிக்கைச் சந்தை” என்பதும் ஒரு பெயர். முதலில் வியாபாரத்துக்கு வரும் பெண்களும் ரவிக்கை அணியத் தடை இல்லாமல் இருந்த ஒரே சந்தை என்பதால் வந்த காரணப் பெயர்.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, goshan_che said:

சில ஊர்களில் வெள்ளாச் சாதியினர் வரும் போது, ஏனைய சாதி ஆண்கள் தலையில் துண்டையும், பெண்கள் முந்தானையையும் தளர்த்த வேண்டியதும் இருந்ததாம்.

நான் ஊரில் இருக்கும் போது இந்த வழக்கம் இருந்தது. வெள்ளாளரை நைனார் என்றும் அழைப்பார்கள். ஆனால் பிரா இல்லாமல் சேலை கட்டும் பழக்கம் பரவலாக எல்லா சாதியினரிடமும் இருந்தது.
எனக்கு தெரிந்த ஆச்சிமார் எல்லாரும் ஒன்லி குறுக்குக்கட்டு ஸ்டைல் :cool:

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

 

மானிப்பாய் பொதுச்சந்தையிற்கு “ரவிக்கைச் சந்தை” என்பதும் ஒரு பெயர். முதலில் வியாபாரத்துக்கு வரும் பெண்களும் ரவிக்கை அணியத் தடை இல்லாமல் இருந்த ஒரே சந்தை என்பதால் வந்த காரணப் பெயர்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, putthan said:

 

நல்ல பதிவு புத்தர். ஒருகணம் சங்கானை கோட்டையில் இருந்து டச்சுத் துருப்புகள் மானிப்பாய் சந்தைக்கு ரோந்து வாற மாரி கற்பனை செய்து பார்த்தேன் 😂. ஒரே கிளுகிளுப்புத்தான்.

13 hours ago, குமாரசாமி said:

நான் ஊரில் இருக்கும் போது இந்த வழக்கம் இருந்தது. வெள்ளாளரை நைனார் என்றும் அழைப்பார்கள். ஆனால் பிரா இல்லாமல் சேலை கட்டும் பழக்கம் பரவலாக எல்லா சாதியினரிடமும் இருந்தது.
எனக்கு தெரிந்த ஆச்சிமார் எல்லாரும் ஒன்லி குறுக்குக்கட்டு ஸ்டைல் :cool:

நீங்கள் இளந்தாரியெல்லே அண்ணை. நான் சொல்லுறது இப்ப 100 வருடத்துக்கு முன். அப்பெல்லாம் மேலாடை  ( நீங்கள் சொல்லும் குறுக்கு) அணியும் உரிமை குறித்த சாதியினருக்கு மட்டுமே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.